Related Posts with Thumbnails






-01-
சோகமாக இருப்பவர்களை மகிழ்ச்சியாகப் பார்ப்பதை விட மகிழ்ச்சியாக இருப்பவர்களை சோகமாகப்பார்ப்பதே பிறருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது

-02-
"உனக்கு என்ன வரலாறு? உண்மை சொன்னாத் தகராறு"
யாருக்கோ! :P

-03-
வாழ்க்கையில் தனக்குக் கவலை or பிரச்சினை வரும் போது அதை சமூகவலைத்தளங்களில் எவன் உளறாமல் இருக்கிறானோ அவன் பாதிபக்குவப்பட்ட மனிதன் ஆகிறான்

-04-
"கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே" Wake up with niz song ;-)) || Maybe situation song 4 this month :P

-05-
அதிகாலை 5 மணிக்கு எழும்பும்போதுதான் தெரியுது, உலகத்தை விட நாம எவ்வளவு பின்னால இருந்திருக்கிறோம் என்று.. #ஞானோதயம் :P

-06-
"இது போல் வரும் லிங்கை கிளிக் பண்ண வேண்டாம்" எண்டு போட்டு தெரிஞ்சே Timelineஐ spam பண்றாய்ங்களே.. அவ்வ்வ். #கடுப்பேத்திறார்மைலாட்

-07-
அறிவுகெட்ட Computer! D Driveல space இல்லைன்னா E,F எதுலயாச்சும் போடவேண்டியதுதானே.. இரவு போட்டுட்டு தூங்கப் போன download எல்லாம் :@

-08-
வரப்போகும் 2012ம் ஆண்டு 2006ம் ஆண்டு மாதிரி அமைய வேண்டும் :-)) #எதிர்பார்ப்பு 

-09-
மழை கொஞ்சம் அதிகமாப் பெய்தால் சுனாமி எண்டு வதந்தியக் கிளப்பிறாங்களே.. #திருகோணமலை(எ)வதந்திஊர் :P

-10-
நான் இப்பிடித்தான் என்று 100% தெரியாது. ஆனால் ஓரளவு தெரியும் சி(ப)ல விடயங்களில் விரும்பியது நடக்காவிட்டாலும் இசைவாகிப்போகத் தெரியும்,ஆனால் ஒரு சில விடயங்களை நான் எதற்காகவும் விட்டுக்கொடுப்பதில்ல
உன்னைப் பற்றி நீ எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறாய் என்று வெற்றிFMமில் கேட்கப்பட்ட கேள்விக்கு கூறிய பதில்.

-11-
"Life இது உன்னோட காரு இஷ்டப்படி நீ ஓட்டிப்பாரு.." 

-12-
மச்சி + மாமு + சித்தப்பு + தலைவா=நண்பேன்டா :D

-13-
Self Confidence கொஞ்சம் (நிறையவே) அதிகரிச்சிருக்கு, எவ்வளவு அடிச்சாலும் தாங்குற ஒரு சக்தி வந்திருக்கு :P
2011ம் ஆண்டு பற்றி கேட்டதுக்கு எனது பதில்

-14-
"மழை கேட்கிறேன், எனை எரிக்கிறாய் ஒளி கேட்கிறேன், விழிகளை பறிக்கிறாய்"|| யின் பாடல் வரிகள் மிகவும் பிடிச்சுப்போச்சு:-))
-15-
பகையைக் கண்டு பைய நகர்ந்தேன்,பயந்து விட்டான் பாவம் என்றது;மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்,விளங்கி விட்டதா மிருகம் என்றது by

2011ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் விடைபெறப் போகிறது. இந்த வருடம் பலருக்கும் பல வித்தியாசமான அனுபவங்களையும் கவலைகள், மகிழ்ச்சிகளையும் தந்திருக்கும். இந்த வருடம் எனக்குப் பல புதிய விடயங்களை, நண்பர்களை, அனுபவங்களை தந்திருக்கிறது. முக்கியமாக 2009ல் பாடசாலைக் காலத்துக்குப் பிறகு வேலைவெட்டியில்லாம் எதிர்காலம் பற்றி சிந்தித்து சிந்தித்து சோர்ந்து போன 2010ஐ ஊதித்தள்ளிவிட்டு புதிய பாதையைக் காட்டிய ஆண்டு 2011.

இந்த ஆண்டு எனக்கு தன்னம்பிக்கையை அதிகம் தந்திருக்கிறது. சில பிடிக்காத விடயங்களுக்கு இசைவாகிப் போகவும், கிடைக்கும் என நினைத்து கிடைக்காமல் போன விடயங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கையும் தந்த ஒரு ஆண்டு.


கூடுதலாக இதுதான் எனது இந்த ஆண்டின் கடைசிப் பதிவாக இருக்கும், எனவே எனவே அடுத்த மலரப் போகும் 2012 இதை விட சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்ற நம்பிக்கையை மனதில் நிறுத்தி அனைவருக்கும் முற்கூட்டிய சிசுபாலனின் பிறந்த தின மற்றும் புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி மீண்டும் அடுத்த ஆண்டு சந்திப்போம்!








கிறிக்கட் அனலிஸ்ட், குட்டி கிறிக்கின்ஃபோ, பீப்பீ, தொழிநுட்பப்புலி என்றெல்லாம் பல பெயர்களுக்கு சொந்தக்காரர் தான் இந்த கோபிகிருஷ்ணா. ஆனால் அண்மைக்காலமாக இவரின் பீப்பீ என்ற பெயர் இவரின் நட்பு வட்டாரத்திற்கு பரலாக அனைவருக்கும் பிடித்துப்போனதுக்கு ஏதோ ஒரு சம்பவம் தான் காரணமாம். அதை நாமறியோம்.

இவருக்கும் உருவத்திற்கும் சம்பந்தமே இல்லாதவாறு நேற்றுவரை சொனி எரிக்ஷன் கையடக்கத் தொலைபேசி ஒன்றைப் பாவித்து வந்தவர். இன்றிலிருந்து சம்சாங் கலக்சி வை க்கு மாறியிருப்பதோடு மட்டுமல்லாது சந்திரனையும் இனித்தெளிவாகத் தூரத்திலிருந்தே ஜீம் பண்ணிப் படமெடுப்பேன்டா என்று மயக்கமென்ன கார்த்திக் சுவாமிநாதன் ரேஞ்சுக்கு பில்டப் குடுக்கிறாராம் எங்கள் பீப்பீ.

நகரத்து வாழ்க்கை பிடிக்காமல் போனதால் இவர் விரைவில் கரவெட்டியில் குடியேறப்போவதாகவும் லண்டனிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக ராமராஜன் படங்கள் அதிகம் பார்த்து அந்த ஸ்டைலிலேயே அதிகம் டி-சர்ட்டுகள் அணிந்து திரிகிறாராம். என்ன மாயமோ யார் செய்த காயமோ...

கிறிக்கட் இவரின் இரத்தத்திலேயே ஊறிப்போனது அனைவரும் அறிந்ததே. எனவே இவரின் பிறந்தநாளுக்காக இன்று நடைபெற விருக்கும் கிறிக்கட் போட்டியில் தனது 100வது சதத்தை பெற்றுக்கொள்வார் என்று இவரின் ரசிகர் சங்கத்தின் ஜெயமான நண்பர் கல்லில் கற்பூரம் ஏற்றி வேண்டிக் கொண்டாராம்.

முன்பெல்லாம் மிகவும் கூலாக அம்பி போல் இருந்தவர் இப்போது அந்நியனாக, ரெமோவாக எல்லாம் பல்வேறுபட்ட அவதாரங்கள் எடுக்கிறாராம். திரைப்படம் பார்ப்பதில் நாட்டமே இல்லாத பீப்பீ தற்போது அந்நியன் படத்தை மட்டும் அறுபது தடவைகளுக்கு மேல் பார்த்திருப்பது மட்டுமன்றி சதாசர்வ காலமும் அதைப்பற்றியே பேசித்திரிகிறாராம் என்று இவருடன் அடிக்கடி ருவிட்டரில் ஆங்கிலத்தில் பீட்டர் விடும் விக்கி நண்பர் தெரிவிக்கிறார்.

இத்தனை பெருமைகளும் புகழ்களும் நிறைந்த எங்கள் அருமைப் பீப்பீ, கறுப்புத்தங்கம் கன்கொன் (எ) கோபிகிருஷ்ணா என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறோம்.




12ம் மாசம்

12மணிக்கு

தன்னோட வூட்டுல பல்பு எரியலைன்னு

ஆவுடையப்பன் ஏற(சாக் அடிச்சு கீழ விழ)

அப்ப ஒரு நாய் அண்ணன் சொன்னாரு,

அவ இனி ஆவுடையப்பன் இல்ல ஆவியடிச்ச அப்பன்

அதே மாசம், அதே நாளு கரக்டா 6.33க்கு

Bavan தன் பேர சுருக்க(call me Mr.B)

7.34க்கு மிஸ்டர் Bயும் மிஸ்டர் ஆவியடிச்சப்பனும் கையகுலுக்க

8.15க்கு எக்ஸாமே இல்லாத cow கஸ்தூரி பாவம் பிட்டுப் பேப்பரை பொசுக்க

8.16க்கு எக்ஸாம் பேப்பர் சுடச்சுட ஹாலுக்கு வந்து சேர


8.17க்கு சுர்ர்ன்னு ஏறி MR.B டவுட்டு கேக்க

8.18க்கு புல்லாப் படிச்சிட்டு வந்த பில்லா காண்டாகி கடுப்புல கத்த ஆரம்பிக்க

8.19க்கு பில்லாக்குப் பயந்து MR.B எஸ்கேப்பாகி ஓட

8.20க்கு எக்ஸாம் ஹால் வாசல்ல வச்சு சூப்பர்வைசர் MR.B யப் புடிக்க

8.30க்கு எக்ஸாம் ஸ்டார்ட் ஆக

8.31க்கு MR.B க்கு தூக்கம் ஸ்டார்ட் ஆக..



8.33க்கு மூணு தபா பெயிலான சரோ அவங்க அம்மாகிட்ட உதை வாங்கி எக்ஸாமுக்கு ரெடியாகி அவசரமா ஓடி வர..

இப்போ இதைப் படிக்கிற நீங்க என்னடா நடந்திச்சு இவனுக்குன்னு என்னை கேவலமா நோக்க.. 

வேற ஒண்ணுமில்லைங்கோ எக்ஸாம். பீவர்தான்னு நான் சமாளிச்சிட்டு, ஏண்டா இந்தப் போஸ்டப் போட்டமுன்னு நான் யோசிக்க ஆரம்பிக்க....

ருவீட்ஸ் || Tweets #009

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:45 PM | 2 பின்னூட்டங்கள்

-01-
நம்பிக்கைதுரோகம் மறக்கமுடியாததாம், SO பாடங்களையும் ஏதும் நம்பிக்கை துரோகம் பண்ணிவிட்டா கஷ்டப்பட்டு படிக்கவேண்டியதில்லை :P

-02-
7ம் அறிவு பார்த்ததிலிருந்து ரோட்டில் எந்த நாயைப்பார்த்தாலும் பயமாயிருக்கு :P  

-03-
Exam முதல்நாள் படிக்க புத்தகத்தை திறப்பது, பிறந்தநாளுக்கு அடுத்தநாள் facebookஐ பார்ப்பது மாதிரி :P

-04-
மலை போல நம்பியிருக்கேன் நம்பியிருக்கேன்கிறாங்களே.. மண்சரிவு வந்தா என்ன பண்ணுவாங்க.. #டவுட்டு

-05-
ஒரு விடயத்தை ஞாபகம் வைத்திருப்பதற்கு சிறந்த வழி ஒரு தடவை அதை மறப்பதுதான் #என்னாஅடி #அனுபவம்

-06-
WMPக்கு கூட நக்கல்ஸ் கூடிட்டு, நாளைய Assignment JAVA Codingகுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் போது "மயக்கமா கலக்கமா" பாட்ட போடுது :'(

-07-
"ஒரு முட்டையை வெளியில் இருந்து உடைத்தால், அது மரணம். அது உள்ளிருந்து உடைக்கப்பட்டால், ஜனனம்" #படித்ததில்_பிடித்தது

-08-
The hardest thing ever in this world is answering to the childern's questions. How fast they asking questions.

-09-
"உன் வாழ்க்கை உன் கையில்" - "கையில்லாதவர்களுக்கும் வாழ்க்கை உண்டு" #முரண்பாடு

-10-
வாழ்க்கையின் தத்துவத்தை ஒளிந்து பிடித்து விளையாடும் போது அதிகம் அறிந்துகொள்ளலாம். #அனுபவம்

-11-
இன்செப்சன் படம் பாத்ததிலயிருந்து நடக்கிறதெல்லாம் கனவா நனவான்னே டவுட்டாக்கீதுபா..:-O #இன்செப்சனோபோஃபியா

-12-
என்னதான் ஜப்பான்காரன் கமராவைக் கண்டுபிடிச்சாலும், ZOOM button வேலை செய்யாட்டி அதுக்கு டிப்பெக்ஸ வச்சு வேலை செய்யவைக்கலாம்னு கண்டுபிடிச்சவன் தமிழன்டா

-13-
காலைக்கடன் முடிக்கப் போனாலும் பேஸ்புக்ல status போடுறாய்ங்கடா.. விட்டா சாவுறதுக்கு முதல் "I'm leaving this world" எண்டு போட்டாலும் போடுவாய்ங்க, வழக்கம்போல நாமளும் like பண்ணி ":P"ன்னுதான் comment அடிப்போம்


-RT-

:எல்லாத் துறைகளிலும் நின்று நிலைக்க முடியாதவர்கள் தான் அறிவுரை என்ற பெயரில் விமர்சனம் செய்து மற்றவரை மட்டம் தட்ட எண்ணுகிறார்கள். #அவதானிப்பு
நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவேழுத வாய்ப்பளித்த மூடநம்பிக்கை கொண்டவர்களை வைத்துப் பிழைக்கும் போலிகளுக்கு நன்றி :P

திருகோணமலையில் ஒரு 4 அல்லது 5 வயதுக் குழந்தை தெய்வத்தின் அவதாரம், சூனியம் எடுக்கிறது, மக்களின் குறை தீர்க்கிறது என்றெல்லாம் ஒரு விடயம் பரவலாகப் பரவியது அனைவரும் அறிந்த விடயம். இதைத் தொடர்ந்து மக்கள் பலர் அதிகாலையிலிருந்து வரிசையில் நின்று இக்குழந்தையிடம் குறைகளைச் சொல்வதும் அக்குழந்தை அவர்களின் வீட்டுக்குப்போய் குறிப்பிட்ட இடத்தில் குழிகிண்டச் சொல்லி அதில் ஏதோ மந்திரத் தகடு இருக்கிறது என்று சொல்லி அதை எடுத்துவிட்டால் அவர்களின் சூனியம் எடுக்கப்பட்டுவிடும் எனச் சொல்லி பணம் கறப்பதும் சில காலமாக நடந்துவருகிற விடயம்.

எனக்கு சில தினங்களுக்கு முன்னர் இதை நேரடியாகப் பார்க்கும் ஓர் வாய்ப்புக் கிடைத்தது. நண்பன் ஒருவனின் வீட்டில் அக்குழந்தை வருகிறது என்று கேள்விப்பட்டு அவன் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

அங்கே அந்தக்குழந்தை, குழந்தையில் தாய், தந்தை ஆகிய மூன்று பேர் வந்திருந்தனர். முதலில் குழந்தை வீட்டுக்கு வந்ததும் வீட்டு வாசலில் உள்ள படிக்கட்டுக்கு கொஞ்சம் முன்னால் ஒரு வட்டம் போட்டுக் காட்டி இங்கேதான் இருக்கு என்று கூறியது.

உடனே அவ்விடத்தில் ஒரு 3 அடிக்கு குழி கிண்டி அதில் கிடைத்த மண்ணை அரித்து, கழுவி, எஞ்சிய கற்களை கொட்டி அதில் ஏதும் தகடு இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்தனர். இதைக் குழந்தை, குழந்தையின் பெற்றோர் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர். நான் அவர்களையே அவதானித்தபடி அமர்ந்திருந்தேன். குழந்தை தன்பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் தாயின் முகத்தில் ஒரு பதற்றத்தை உணரமுடிந்தது.

கொஞ்சநேரம் கழித்து "ஆக்கள நோட்டம் விடாம வேலையப் பாருங்க" என்றார் அந்தக் குழந்தையின் தாய். நான் அவரை அவதானித்துக் கொண்டிருப்பதை உணர்திருப்பார்போலும்.

அன்று சுமார் 5 மணிநேரமாகத் தேடியும் ஒரு ஆணி கூடக் கிடைக்கவில்லை. பிறகு நாளை வருகிறோம் என்று கிளம்பிச் சென்று விட்டனர்.

பின்னர் மீண்டும் மறுநாள் வந்து அதே இடத்தில் இன்னும் கொஞ்சம் தோண்டச் சொன்னது அக்குழந்தை. மீண்டும் தோண்டி மண்ணை எடுத்து கழுவி, அரித்துப் பார்த்ததில் ஒரு தகடு அகப்பட்டது. அதை படக்கென்று தனது கையில் வாங்கிய குழந்தையின் தாய் "அந்தத் தகடு கிடந்த இடத்தைச் சுற்றியுள்ள மண்ணை எடுத்து கடலில் போடுங்க" என்றுவிட்டு தகட்டை நைசாக மடித்து உடைத்துவிட்டார்.

உடனே நண்பனின் வீட்டிலிருந்த ஒருவர் வந்து தகட்டை கையில் வாங்கிப் பார்த்துவிட்டு "இது நாங்கள் வீடு கட்டும் போடு வைத்த காவல்த் தகடு எனக்கு நல்ல ஞாபகமிருக்கிறது" என்று சொல்ல, உடனே குழந்தையின் தாய் "இல்லை இது சூனியத்தகடுதான்" என்று சமாளிக்க ஆரம்பிக்க, அவர்களுக்குள் வாக்குவாதம் கொஞ்சம் முற்றிய நிலையில். "சொந்த வீட்டுக்கே சூனியம் வைத்த உங்களுக்குத் தெரியாதா?" என்று கோபமாக கதையை மாற்றி அவர் மீதே பழியைப் போட முயன்று, நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டு மூக்குடைபட்டு அவ்விடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர் போலிச் சூனியக் குழுவினர்.



இந்தக் குழந்தையை வைத்து இதுவரை திருகோணமலையில் அரைவாசி வீடுகளில் இதுமாதிரி சூனியம் எடுக்கிறேன் என்ற போர்வையில்  குழி கிண்டி தகடு எடுத்திருக்கிறார்கள்.

இல்லைத் தெரியாமத்தான் கேக்கிறன், இந்தக் குழந்தை வந்த பிறகு மட்டும் எப்பிடி எல்லா வீடுகளிலேயும் சூனியம், தகடு, மண்ணாங்கட்டி எல்லாம் மாட்டுப்படுகிறது?

ஒரு மனிதனுக்கு எப்போதெல்லாம் கஷ்டம் வருகிறதோ அப்போதெல்லாம் இந்தமாதிரிப் போலிகளுக்குக் கொண்டாட்டம்தான்.கஷ்டம் வரும் போது யார் எவர் என்று பார்க்காமல் எல்லோரையும் கண்மூடித்தனமாக நம்பிவிடுகிறார்கள்.

பி்கு - ஒரு வீட்டில் சூனியம் எடுக்கிறதுக்கு ஆரம்பத்ததில் 10000 ருபாய்கள் வாங்கியவர்கள் தற்போது கிட்டத்தட்ட 20000 ருபாய்கள் வாங்குகிறார்களாம் இந்தப் போலிச் சூனியக்குழுவினர்.
பதிவுலக மாமா, சிரட்டை சிங்கம், சொந்த செலிவில் சூனியத்துக்கு சொந்தக்ககாரர், பச்சிளம் பாலகர் சங்கத்தின் நீண்டகால உறுப்பினர் மற்றும் வந்தியானந்தா குருபீடத்தின் தலைமை குரு என்று பல்வேறுபட்ட விடயங்களில் சகலகலா வல்லவனாகத் திகளும் லண்டன் வந்தி அண்ணன் அண்மையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டுள்ளார். இவரின்றி அனுவும் அசையாது, அவரின் பிறந்தநாள் பரிசாக இந்தப்பதிவை இடாவிட்டால் எம் மனமும் சாந்தி அடையாது.

லண்டனில் இருந்து வந்திறங்கியவுடனேயே இட்ஸ் வெர்றி ஹாட்.. சூர்யன் இஸ் கொள்திங்.. என்று அதிகாலை 3 மணிக்கே பீட்டர் விட ஆரம்பித்து. அவரின் பீட்டரில் எங்கள் நடமாடும் கூகிளையே திக்குமுக்காடச் செய்தவர் எங்கள் மாமா. 

 வெளிநாட சென்று வந்தவர்களில் சிரட்டை மாலை போட்டு வரவேற்கப்பட்ட முதலாவது நபர் என்ற பெருமையைப் பெற்றவர் எங்கள் வந்தி(லண்டன் :P).
 

 லண்டன் ரோட்டுகளுக்கும் எம்நாட்டு ரோட்டுகளுக்கும் இடையிலான வேறுபாட்டை தன் சிஷ்யனுக்கு மிகவும் அழகாக விளக்கி வரலாற்றுப்புத்தகத்திலும், கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்தவர் எங்கள் பச்சிளம் பாலகன்.


எவ்வளவுதான் அடிச்சாலும் தாங்கும் திறன் படைத்த எங்கள் சிங்கத்துக்கு இனிய 16வது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இன்று போல் என்றும் 16வயதுடன் இளமையாக, பச்சிளம் பாலகனாக, சொந்த செலவில் சூனியங்கள் பல வைத்து பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம். :-))


சமீபகாலமாக விஜய் டீவியில் அடிக்கடி வரும் மனதைக் கவர்ந்த Airtel விளம்பரம். வரிகளை ஓரளவு சரியாகத் தந்திருக்கிறேன் :-))


CHAI KE LIYE JAISE TOASTE HOTA HAI...
 
அப்பிடி ஒவ்வொரு FRIENDம் தேவை மச்சான்
தூக்கத்தை கெடுப்பான் சில பேரு
நடு இரவில உயிர் காப்பான் சிலபேரு,
ஒருத்தன் காசு இல்லாத நேரத்துல HELP செய்வான்,
இன்னொருத்தன் BUDGET ல SNEAKING செய்வான்,
சிலர் NATURE GUESTல HOST ஆவாங்க


ஆனா ஒவ்வொரு FRIENDம் தேவை மச்சான்

"ஒருத்தன் அடிக்கடி help பண்ணுவான்
என்னைக்கோ call பண்ணுவான்,
ஒருத்தன் என்னைக்கோ help பண்ணுவான்
அடிக்கடி call பண்ணுவான்"

GOSSIPகு ஒருத்தன் சுத்திற SATELLITE ,
ஒருத்தன் கூட இருந்து சேதி சொல்வான்
எல்லாம் ALL RIGHT
ஒருத்தன் EFFORTLESS,
ஒருத்தன் FORCEDஆ இருப்பான்

ஆனா ஒவ்வொரு FRIENDம் தேவை மச்சான்

CHATROOM FRIEND
ஒருத்தன் CLASSROOM FRIEND
ஒருத்தன் BIKEல RACE பண்ற BROOM BROOM FRIEND
SHOPPING MALL போகும் SHOPPING FRIEND
EXAMல எப்பவும் BITஅடிக்கும் FRIEND
Movie buddy
Groovie buddy
Hi buddy
Bye buddy
Joke buddy
Poke buddy
Song buddy
Smart buddy
பழைய buddy
புது buddy

"டேய் நாயு
டேய் பேயு"

EVERYBODY
ANYBODY


A to Z

எண்ணி எண்ணிப் பார்க்கையில் மண்டை roast ஆகுது...

ஒவ்வொரு FRIENDம் தேவை மச்சான்...










ருவீட்ஸ் || Tweets #008

பதிவிட்டவர் Bavan | நேரம் 8:11 AM | 11 பின்னூட்டங்கள்
-01-
காதலிக்கிறவன், காதில ஹெட்செட் மாட்டினவன், தண்ணியடிச்சவன் இந்த மூன்று பேருடனும் அவதானமாகத்தான் இருக்கணும் #அனுபவம்

-02-
இலங்கை நாடே கிறீஸ் டெவில் பீதியால் பற்றி எரிவதை கூட பொருட்படுத்தாது அவுஸ்ரேலியாவை இன்றைய போட்டியில் வென்றதானது இலங்கை அணியின் சுயநலப்போக்கை காட்டுகின்றது. -அவுஸ்ரேலிய ரசிகர்கள் (படித்துப் பிடித்துப் போய் உல்டா பண்ணியது) :P

-03-
சோகமாக இருப்பவர்களை பார்த்து சந்தோஷமாக இருக்க கற்றுக்கொள்ளலாம்,ஆனால் சந்தோஷமாக இருப்பவர்களை பார்த்து சோகமாயிருக்க கற்றுக்கொள்ளமுடியாது

-04-
"நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் அன்பு உள்ளவர்களாக இருப்பார்கள்." சில்_பிடித்தது

-05-
யாராவது எனக்கு கடிச்ச அப்பிள் ஒன்று வாங்கித்த்தாருங்கள், நான் கடிக்காத அப்பிள் வாங்கித்தர்றேன்..:P #டீலிங்கு

-06-
"தவறு செய்தவர்களுக்கே EGO இருக்கும் போது தவறே செய்யாதவர்களுக்கு EGO இருப்பதில் தவறே இல்லை"

-07-
யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே! ஒரு வேளை நீ மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்காகவும் நீ மாற வேண்டி இருக்கும் #படித்ததில்பிடித்தது

-08-
கோபத்தைக் குறைப்பதற்கு இலகுவான வழி, "எனக்கு கோபம் வராது" என்று அடிக்கடி சொல்லிச் கொள்வதுதான்.

-09-
எலிகளும் காதலிக்குமாம், அதனாலதானோ என்னமோ அதையும் வீடுகளில் எலிமருந்து வைத்துக் கொல்கிறார்கள்..:p

-10-
அட போங்கையா.. தத்துவங்கள் படிக்க/கேட்க வேணும்னா நல்லாயிருக்கும் ஆனால் நடைமுறைப்படத்துவது கடினம்

 -11-
மற்றவர்கள் மனதை புண்படுத்தாமல் இருக்கிறது நல்ல விடயம்தானே, SO சில விடயங்கள் வெளிப்படையாக பேசாமலிருப்பதே நல்லது

-12-
நடக்கும் போது straight fowardடாகத்தான் இருக்கணும், இல்லைன்னா accident ஆகிடும் #பிடரியில் கண் இல்லைத்தானே..:P

-13-
புரொஜெக்டரை தொடர்ந்து சிலமணிநேரம் பார்த்துக் கொண்டிருந்தால் கண்ணீர் வருவதுண்டு,ஆனால் உடல்சிலிர்த்து அழுதது இன்றுதான்

-14-
உங்கள்மீது பொய்யாக சுமத்தப்படும் குற்றம், 4toshopல் உங்க படத்தை Edit பண்ணி உங்ககிட்டயேகாட்டுவதுபோல,பார்த்து சிரிச்சிட்டு போய்ட்டே இருக்கணும்

-15-
ஞாபகங்கள் முரண்பாடானவை. நீங்கள் மகிழ்வாயிருந்த தருணங்களை நினைக்கும் போது கண்ணீரையும், அழுத நேரங்களை நினைக்கும் போது மகிழ்வையும் தருகின்றன

-16-
பாம்பின் கால் பாம்பறியும். #ங்கொய்யால பாம்புக்கு எங்கடா கால் இருக்கு..:P

நட்பு!

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:58 PM | 13 பின்னூட்டங்கள்


ஊரின் விளிம்பில்
அதோ நானும் என் நண்பனும்
அழுதுகொண்டே சந்தித்த முதல்
பள்ளி

பள்ளிக்குப் போகமாட்டேன்
என்று கட்டிப்பிடித்துக் கொண்ட
மரம்

ஒன்றாய் உட்கார்ந்து
அரட்டை போட்ட மரத்தடி
பாறை

அடிவாங்கி
முழங்காலின் நின்ற
வகுப்பறை வாசல்

கரஇடி வாங்கி
மகிழ்ச்சியாய் நின்ற
மேடை

பாடசாலை கீதம்
தினமொலிக்கும்
ஸ்பீக்கர்

கரண்ட் இல்லாத நேரத்தில்
பாவிக்கப்படும்
மணி

நண்பனுக்காக
சண்டை போட்ட
ரகசிய இடம்

சமயத்தில்
தப்பியோட உதவிய
கழிவுக் கால்வாய்

மாணவத்தலைவனால்
பெப்சி கிறிக்கெட் கார்ட்
பறிக்கப்பட்ட
இடம்

முடிவெட்டாமல்
வந்து அடி வாங்கிய
இடம்


நீயும் பெயிலா
நானும் பெயில்டா
என்று அகமகிழ்ந்த
இடம்

வாசல் கேற்
பஸ் தரிப்பு நோக்கி
நீளும் நெடும் பாதை
பிரதான வீதி

பஸ் தரிப்பிடம்
பெண்கள் பாடசாலை
மாங்காய்க் கடை
ஐஸ் விக்கும் சைக்கிள்

ஐஸ் பால் கடை
கொய்யாப் பழக்கடை
தினம் செல்லும்
சாப்பாட்டுக் கடை

அங்கும் நட்பு
இங்கும் நட்பு
அதிலும் நட்பு
இதிலும் நட்பு

அவற்றில் நட்பு
இவற்றில் நட்பு


பக்கத்தில் நட்பு
தற்போது என் எதிரிலும்
புன்னகைத்தபடி
நட்பு!

-பப்புமுத்து

கிருஷ்ணா..
அவலாஞ்சி..
அங்க.. சாக்லட் ஃபாக்டரி இல்ல.. அங்க
கே(G)ற்று பக்கத்துல மாடு மாடுல்ல.....


ஒரு படத்தை விமர்சனங்கள் வர ஆரம்பிக்கும் முன்னமே பார்த்து விட வேண்டும், இல்லையேல் படத்தைப் பற்றிய விமர்சனங்கள் எம் காதுகளுக்கு வந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிடும். வழக்கமாக எந்தத்திரைப்படமாக இருந்தாலும் முதல் வாரத்துக்குள் பார்த்துவிடுவேன். ஆனால் வர முதலே பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகளை மனதில் கிளறிவிட்டபடி வெளிவந்த படம்தான் தெய்வத்திருமகள். இதைப் பார்ப்பதற்கு இத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளக் காரணமாக இருந்து எனக்கு வகுப்பு வைத்தவர்களுக்குக் கண்டனங்கள்.

எனது ஞாபகசக்திக்குத் தெரிந்து 10 வயதில் கரண்டில் விளையாடி வீட்டில் அடிவாங்கி அழுததுக்குப் பிறகு அழுததாக ஞாபமில்லை எனக்கு. எந்த விதமான கவலையாக இருந்தாலும் மனம் விட்டு அழுது பழக்கமில்லை. ஏன் மரண வீட்டில் மற்றவர்கள் அழுவதைப் பார்த்தால் கண்கலங்கும் என்பார்கள் எனக்கு அப்படிக்கூடு நடந்ததில்லை. கிட்டத்தட்ட ஒரு சிட்டி ரோபோ மாதிரி இருப்பவன் நான். "நீ இந்தப் படத்தைப் பார்த்தால் கட்டாயம் அழுவாடா" என்று நண்பர்கள் முதல் பலர் சொல்லியிருந்தார்கள். நானும் சவாலாகப் " அதையும் பார்க்கலாம்டா" என்று சொல்லியிருந்தேன்.


ஊட்டியில் சொக்லெட் ஃபக்டரியில் வேலை செய்யும் மன வளர்ச்சி குறைந்த தந்தையும், அவரின் 5 வயது சுட்டிப் பொண்ணு நிலாவையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதைதான் தெய்வ்திருமகள். படத்தில் ஆரம்பம் முதலே மனதை உறைய வைத்து கண்களில் நீர்கட்டவும் வைத்து அடுத்த கணமே கண்ணீருடன் சிரிக்கவும் வைத்து படம் கடைசிவரை கண்ணீர், சிரிப்பு, புன்னகை,மெளனம், சோகம், தவிப்பு என அனைத்து உணர்ச்சிகளையும் மாறிமாறி காட்டியிருப்பது அருமை.

குறிப்பாக குழந்தை அழுதுகொண்டிருக்கும் போது அதைப் பார்த்தபடி விக்ரம் பேசாமல் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருப்பார். அப்போது ஒரு பெண், "குழந்தை அழுதுகிட்டிருக்கு ஒண்ணும் பண்ணாம சும்மா இருக்க" என்றதுக்கு அப்பாவியாக "என்ன பண்ணணும்" என்று கேட்ட காட்சியில் மனதில் சம்மட்டியால் ஓங்கி அடித்தது போல கனம்.

அது தவிர மேலே பார்த்து சொல்லு என்று அவ்வப்போது வரும் சிரிப்பை உண்டாக்கும் காட்சிகள், சந்தானத்தின் இயல்பான கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரம் ஆகியன எனது மனதைக் கவர்ந்தன.

அனைவருக்கும் போல அந்தக் கடைசி கோர்ட்டில் இடம் பெறும் பாசப்போராட்டம் என் மனதையும் உடைத்து கண்களில் கண்ணீரை வரவைத்த காட்சி.
"சிட்டி ரோபோ கெட்டப் பையன் நானே அழுதிட்டேன்னா பாருங்களேன்."


I AM SAM படத்தின் தழுவல் அது இது என சொல்லுபவர்களின் கவனத்திற்கு, என்னதான் தழுவலாக இருந்தால் என்ன? இப்படிப்பட்ட அருமையாக படத்தை தமிழில் தந்தமைக்கு கோடான கோடி நன்றிகளைச் சொல்லிக் கொள்வோம்.

கடை சியாக ஒரு முக்கியமான கேள்வி,

.

.

.

.

.

.


.

"நிலா எப்ப வரும்?"

ருவீட்ஸ் || Tweets #007

பதிவிட்டவர் Bavan | நேரம் 8:23 PM | 9 பின்னூட்டங்கள்
 
 -1-
காலம் கடந்த ஞானத்தை maturity என்று சொல்லலாமா? #டவுட்டு
-2-
ஆங்கிலப்பரீட்சையில் நாம் எழுதும் பதில்கள் புதுக்கவிதை மாதிரி, இலக்கணப் பிழைகளை கருத்தில் கொள்ளாதீங்க #பின்குறிப்புINஎக்ஸாம்PAPER
-3-
கண்ணை முடு, மூக்கைப்பார், இப்போ கண்ணைத்திற... எழுந்து நில் கைகளைத்தூக்கு, இப்போ 2கால்களையும் தூக்கு..:P #நித்தியிசம்:P
-4-
ஒருவரை கோபப்படுத்த 2வழிகள்,1-அவரின் சுயகௌரவத்தை சீண்டிப்பார்க்கலாம் 2-அவர் ஆழ்ந்தஉறக்கத்திலிருக்கும் போது தட்டிஎழுப்பி gdn8சொல்லலாம்
-5-
காதலிக்குறவங்க எல்லாரும் அரசியல்வாதிகள் மாதிரி, எந்த நேரத்தில என்ன செய்வாங்க,அதை எதுக்கு செய்யுறாங்கன்னே யாருக்குமே தெரியாது...:P
-6-
அபிராமி,கண்ணம்மா,சந்தியா,ரோஜா,அஞ்சலை,மல்லிகா,சிந்து,மாலினி,ரசிகா,நகுமா,ஊர்வசி,நிலா,செண்பகம்,தாமரை ஆகிய பெயர்களிளைக்காதலியின் பெயராகக் கொண்டவர்களுக்கு RINGTONE போடுவதில் எந்தச் சிக்கலும் இருந்திருக்காது..:P #ஆராய்ச்சி_முடிவு
-7-
ஒரே பாட்டில் பணக்காரனாகவும், ஒரே பாட்டில் அனைத்துப் பணத்தையும் செலவழிக்கவும் ரஜனியால் மட்டுமே முடியும். #சூப்பர்ஸ்டார்டா..!
-8-
தவறு செய்தவர்களே அது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்காக கவலைப்படும் போது எந்தத்தவறுமே செய்யாத நான் என் மீது போலியாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை எண்ணி கவலைப்படுவதிலோ, கோபப்படுவதிலோ எந்தத்தவறும் இல்லை
-9-
ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் 7 காதல் வருமாம், அது இதுதானா?1-அம்மா 2-அப்பா 3-சகோதரம் 4-நட்பு 5-காதலி 6-மனைவி 7-பிள்ளை #டவுட்டு

-10-
5நிமிடம்தான் என்று ஆரம்பிக்கும் விளையாட்டுக்கள் 5மணிநேரமானாலும் முடிவதில்லை.அட்லீஸ்ட் 1/2 மணிநேரமாவது என்று ஆரம்பிக்கும் படிக்கும் முயற்சிகள் 5 நிமிடம் கூட தொடர்வதில்லை.

-11-
இணையம்,மொபைல்,உறவினர்கள்,வீடு,வாகனம்,தூசு,பஸ்,கவலை, எதுவுமில்லாமல் ஒருநாளாவது எங்காவது ஒரு அமைதியான இடத்தில் போய் இருக்கவேண்டும் #பேராசை

-12-
சோகமான தருணங்களை உணரவைக்க பல வார்த்தைகள் உண்டு, இன்பமான தருணங்களைச் உணரவைக்க ஒரே வழி அதை அனுபவித்து அறிவதுதான் #அனுபவம்

-13-
சொன்னதை செய்யணுமாம், சொல்லாததையும் செய்யணுமாம், bt சொன்ன சிலதைசெய்யவும் கூடாதாம், சொல்லாத சிலதையும் செய்யக்கூடாதாம் #போங்கடாஇந்தஅரசியல்புரியவேஇல்ல

-14-
யாரிலாவது கோபமிருப்பின்அவர்களை நினைத்து வெறுமனே பல்லை கடிப்பதை விட,வாயில் ஏதாவது உணவைப் போட்டுவிட்டுக் கடிக்கலாம். உடம்புக்கும் நல்லது :P

-15-
'முதன்முதலாக' என்ற வார்த்தைக்குள் தான் அதிக மகிழ்ச்சிகளும், சோகங்களும குடியிருக்கின்றன.

-16-
மானம் என்பதன் எதிர்ச்சொல் அவமானம் என்றால் டேய் என்பதன் எதிர்ச்சொல் ஏன் அடேய் என்று இருக்கக்கூடாது. #டவுட்டு..:P

-17-
பழையபாடல்களின்BGMகுதிரைவண்டியில் போவதுபோலவும், புதியபாடல்கள் விமானத்தில் போவதுபோலவும் எண்ணத்தையும்கொடுக்கிறது#அவதானிப்பு

-18-
தூக்கமில்லா இரவுகளில்தான் தத்துவங்கள் பிறக்கின்றன, உடனே அதை பக்கத்திலிருப்பவனுக்கு சொல்ல முற்படும்போது உதைகளும் பிறக்கின்றன..:P

-19-
தத்துவம் என்பதில் தத்=சிங்களத்தில் பல் என்று பொருள். து=துப்பு என்பதை குறிக்கிறது. வ(அ)ம்=மழலை மொழியில் சாப்பாடு என்று பொருள். ஆகவே 'பல்லு விளக்கிட்டு சாப்பிடு என்று பொருள் #தத்துவம்பற்றியதத்துவம் :P

-20-
"புதியது" என்ற ஆண்டாண்டு காலமாய் பயன்படுத்தப்படும் பழைய சொல் மட்டும் பழையதாக இருந்தாலும் புதியவற்றைக் குறிப்பிடப் பயன்படுகிறது.

-21-
உயர் அதிகாரி குடிகாரனாக இருந்தால்,அவனிடம் திட்டு வாங்குவதை விட அவனை அறைந்து விட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறிவிடுங்கள் குடிகாரர்களுக்கு நீங்கள் அறைந்தது ஞாபகமிருக்கப்போவதில்லை..:P

-22-
மழை+ குளிர்+ பஸ்+ ஜன்னலோரசீட்+ இதமானகாற்று=சொர்க்கம் #அனுபவம்

-23-
தேவையானவற்றுடன் பிடிக்காத ஒன்றுசேரும்போது அதுநமக்கு தேவைப்படுவதில்லை,தேவையில்லாத ஒன்றுடன் தேவையான ஒன்றுசேரும்போது அதுநமக்கு தேவைப்படுகிறது
-RT-
:Facebook - வில்லங்கம் தானா தேடி வாற இடம் Twitter - நாங்களே வில்லங்கத்திட்ட போய் மாட்டுற இடம் :P
அண்மையில் பிரபல கமரா+டான்ஸ் புகழ் சாமியார் நித்தியானந்தா அவர்கள் குண்டலினி சக்தியைக் கண்டுபிடித்து, புவியீர்ப்பு விசைக்கு எதிராக எங்கள் எல்லாரையும் அந்தரத்தில் பறக்க விட்டிருக்கிறார். இவரின் இந்த திறமையான விடயத்தை எப்படி இவரால் மட்டும் செய்ய முடிந்தது என்று நாம் நேரடியாகச் சென்று கேட்டிருந்தோம், அதற்கு அவர் திருவிளையாடல் தனுஷ் ரேஞ்சுக்கு லெந்தா ஒரு டயலாக் பேசினார். அதை எடிட்டிங் பண்ணாம அப்பிடியே போட்டிருக்கிறோம்..:P



"காலைல மூணு, நாலு மணிக்கு அலாரம் வச்சு அலாரம் அடிக்கிறதுக்கு முன்னாடி எந்திரிச்சு, அடிக்கிற அலாரம் பக்தகோடிகளுக்கு கேக்காம நிறுத்திட்டு, அமுதம்னு சொல்லி கமண்டலத்துல ஊத்தி வச்சு நேத்து நான் குடுத்த பியரை அடிச்சிட்டு குப்புறப்படுத்துக்கிடக்கிறவன் பாக்கட்ல அஞ்சு பத்துன்னு ஆட்டையப் போட்டுகிட்டு, பிளைட் புடிச்சுகிட்டு போனா பிளைட்டு டிலேன்று வரும்...

சரி ரெஸ்ட் எடுக்கலாமேன்னு பக்கத்துல உள்ள லாட்ஜீக்குப் போயி அரை மணிநேரத்துக்கு ரூம் வேணும் சார்னா அவன் நம்மளை ஏலியன் மாதிரிப்பாப்பான், அந்த அசிங்கத்தையெல்லாம் தாங்கிட்டு ரூமைப்போட்டு உள்ளபோயி உக்காந்தா, நாம அங்க போனதைத் தெரிஞ்சுகிட்டு நமக்கு முன்னாடியே எவனாச்சும் ரூம் வாசல்ல வந்து நிப்பான்.

அப்பிடியே பக்குன்னு இருக்கும் நெஞ்சுக்குள்ள...

அவனையெல்லாம் சமாளிச்சு ஆசிங்கிற பேர்ல ஏதோ நாலு புரியாத பிட்டப்போட்டு அனுப்பி வச்சா, அப்பறம் ஒரு பொண்ணு டான்ஸ் கத்துக்க வாறேன்னு அடம்புடிக்கும். சரி வாம்மான்னு சொல்லிட்டு கதவைத்திற காற்று வரட்டும், காலைப்புடி, கையப்புடி, கட்டிப்புடி, பல்ட்டி அடின்னு டீ.ஆர் ரேஞ்சுக்கு வசனம் பேசினா பின்னாடியிருந்து ஒருத்தன் கமரா வைச்சிருப்பான், அதுகூடத் தெரியாம டான்ஸ் கத்துக்குடுத்திட்டு, திரும்பிப்பாத்தா போலீசு கேட்டா போலிச்சாமி டீசிங்கும்பான்...

அந்த கேஸ் எல்லாம் பேஸ் பண்ணி அதுக்கப்பறமும் கதவே இல்லாத ரூமாப் பாத்து, ஏணிலயெல்லாம் ஏறி இறங்கி பறக்குற டான்ஸ் கத்துக் குடுக்கறேன்னு நாலு ஃபிகரைக் கரக்ட் பண்ண ட்ரை பண்ணினா,


அங்க ஒரு ரிப்போர்ட்டர்,
"சீ பொறுக்கி ராஸ்கல், நாயே நீயேல்லாம் திருந்தே மாட்டியா,சோறு திங்கிறியா வேற ஏதும் திங்கிறியா, உனக்கு வெக்கமே கிடையாதா...!#$@%^$^&**(()&(_&%, "

அப்பிடீன்னு கெட்ட கெட்ட வார்த்தைல என்னை மட்டுமில்லாம என் போலிச்சாமியார் கும்பலயே சேத்துத்திட்டுவான். அதெல்லாம் கொஞ்சங்கூட காதுல வாங்கிக்காம கொஞ்சங்கோஞ்சமா அடுத்த கட்டமா நாலு ஃபிகரைக் கரக்ட் பண்ணி, காசு காசாக் கொள்ளையடிச்சு, நாம எத்தனை தடவை மாட்டிகிட்டாலும் நம்மளையே நம்புற மடைப்பயலுகளை வச்சு தப்பிச்சு...

சாமி நீதான் என் உயிரு, மத்தவங்கெல்லாம் _____ன்னு சொல்ல வைக்கிறதுக்குள்ள நாங்க படுறபாடு இருக்கே கேட்டா சேத்துப் பன்னி கூட குரவளையக் கடிச்சுத்துப்பும்.

வல்லமை தாராயோ!

பதிவிட்டவர் Bavan | நேரம் 10:41 AM | 10 பின்னூட்டங்கள்
கடந்த 16ம் திகதி யாழ்ப்பாணம் புற்றளை விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற "மறுபடியும் பாரதி" என்ற தலைப்பில் இடம்பெற்ற கவியரங்கில் பங்குபற்றும் ஓர் வாய்ப்புக் கிடைத்தது. எனது கன்னிக் கவியரங்கை யாழில் அரங்கேற்ற வாய்ப்பளித்த தனஞ்சயன்(பதிவர் பால்குடி), ஆதிரை அண்ணா மற்றும் சக பதிவர்கள் லோஷன் அண்ணா, மாலவன் அண்ணா, சுபாங்கன் அண்ணா அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.




அன்றைய தினம் நான் படித்த கவிதையை பகிரலாமென இருக்கிறேன்.


கவியரங்கத் தலைவர் லோஷன் அண்ணாவின் ஆரம்பத்தையும், அறிமுகத்தையும் தொடர்ந்து எனது கவிதை அரங்கேறியது.


லோஷன் அண்ணாவின் ஆரம்பக் கவிதையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.



வல்லமை தாராயோ!

(வல்லமை தாராயோ ஒலிவடிவம்)























தாழ் திறந்து தாளெத்து
தோள் சுமந்த பாழ் கழைந்து
கவியெனும் வாள் எடுத்து
வீழ்த்த வழி கொடுத்த
புற்றளை நாயகன் விநாயகனுக்கு
என் சிரந்தாள் வணக்கம்

மிடுக்கு மீசைக்கு
பயங்கலந்த சிறு வணக்கம்
துடுக்கு நடைக்கு
துவளாத பெரு வணக்கம்
தலை காக்கும் பாகைக்கு
தலைதாழ் குரு வணக்கம்
கறுப்பு ஆடைக்கு
கரங்குவிந்த தமிழ் வணக்கம்
பாத்தலைவன் பாரதிக்கு
பண்புடன் ஓர் பா வணக்கம்

முத்தமிழ் மன்னனே - என்
மூத்த அண்ணனே
கவிதையின் கண்ணனே
வெற்றியின் விண்ணனே
விக்கலுக்கும் உனக்கும் நெருங்கிய தொடர்புண்டு
விக்கல் நிற்பதில்லை தண்ணீர் குடிக்கும்வரை
உன் முயற்சி தளர்வதில்லை வெற்றி கிடைக்கும்வரை
முயற்சியில் தளரா விக்கிரமாதித்தா
தளரா மனதுடன் உனக்கும் தமிழ் வணக்கம்

மேடையில் வீற்றிருக்கும் முதுபெரும் கவிகளுக்கும்
இளவலின் தனி வணக்கம்.
கவிமழையில் நனைய வந்து சபையில் இங்கு
உள்ளவர்க்கும் பொது வணக்கம்


என் மனமெங்கும் நிறைந்த
கனங்களைக் கழைய
மடல் ஒன்று வரைய
மை தீட்டிக் கொண்டேன்
எப்படித் தொடங்க?

அன்பே இல்லா மரத்த மனதால்
எப்படிச் சொல்வேன்
"அன்புள்ள பாரதி"

பாசமே இல்லா பயந்த நெஞ்சுடன்
எப்படிச் சொல்வேன்
"பாசமிகு பாரதி"

பண்பே இல்லா பாழ்பட்ட மனதுடன்
எப்படிச் சொல்வேன்
"பண்புள்ள பாரதி"

உணர்ச்சியே இல்லா உறைந்த மனதால்
எப்படிச் சொல்வேன்
"பாரதி பாரதி

மழையில் நனைந்த தீப்பெட்டி போல
சுடர்விட மறந்து ஈரமாய்க் கிடக்கும்
மனதை கந்தக பூமியில் வைத்து
உலர்த்தி உலர்த்தி உயிர் பெறவைத்து
சுடர் பெறவேண்டி தொடர்கிறேன் சும்மா

பிறக்கும் வரைக்கும்
மகிழ்வாய் இருக்கும்
பிறந்த பின்னே மகி்ழ்வே போகும்

வளரும் வரைக்கும்
வரையரை இருக்கும்
வளர்ந்த பின்னே வாழ்வே போகும்

இறக்கும் வரைக்கும்
ஆசைகளிருக்கும்
இறந்த பின்னே மக்கிக்போகும்

இப்பெரு உடலில்
எங்கோ எதிலோ
ஒட்டி வாழும் சிறுமனதோரம்
பெருகிய குமிறல்கள்
கொட்டி தீர்த்திட கொதிக்கும்
ஒரு மடல் வரைகிறேன்

சுரண்டல்களின்றி பதுக்கல்களின்றி
தணிக்கைகளின்றி தாமதமின்றி
தயக்கங்களின்றி தடைகளுமின்றி
மடலொன்று வரைய - அது
மாற்றங்களின்றி உனை வந்தடைய
மரித்த மனத்தான் எனக்கு வல்லமை தாராயோ

நினைவுக் கொசுக்கள் கனவைக் கலைக்க
கண்திறந்து இருளைப் பருகும் வேளை
காண முனைந்து தோற்றுப்போன முந்தைய இரவின்
இறுதிக் கனவை ரசித்து ருசித்து உருக்கி எடுத்து
உணர்வை அளித்து உணர்ந்து முடிக்க
உருகிக் கேட்கிறேன் எனக்கு வல்லமை தாராயோ

புணர்ச்சி கறுமங்கள் கண்ணைக் கருக்க
உணர்ச்சி உறுமல்கள் மனதைத் துளைக்க
அவனும் அவளும், அவளும் அவனும்
காலையும் மாலையும், மாலையும் காலையும்
அடங்கி மடங்கி ஒடுங்கி கிடக்கும்
அமைதியான கடற்கரையோரம்
மதுவைக் கண்டால் குருடாய்ப் போகும்
காட்சிப்பெட்டித் திரைகள் போல
காட்சியைக் காணா கண்கள் கொள்ள
கதறிக்கேட்கிறேன் கடிதினில் எனக்கொரு
வல்லமை தாராயோ

கோபம் கொண்டு கோபம் கொண்டு
கொதித்துக் கொதித்து குமுறிய வரியை
காதல் கொண்டு காதல் கொண்டு
கனிந்து உருகிப் பருகிய வரியை
சோகம் கொண்டு சோகம் கொண்டு
கண்ணீர்த்துளியால் கோர்த்த வரியை
காமம் கொண்டு காமம் கொண்டு
கலவி முடித்து குலவிய வரியை
நட்புக் கொண்டு நட்புக் கொண்டு
நன்றிக் கடனாய் செதுக்கிய வரியை
ரசித்து ரசித்து ருசித்து ருசித்து
சிகப்புக் கோடால் அடிக்கோடிட்டு
அழுத்திப் படித்த அழகிய வரியை
கத்தி முனையில் நிறுத்தி்க் கேட்டும்
கரவொலி மறுத்த கரசேவையரின்
மனதைக் கவரும் மாயம் அறியும்
கலைந்து குறையாத கூட்டங்கட்டும்
மந்திரந்தெரிந்தெனக்கு வல்லமை தாராயோ

நானிலத்தவரின் நன்மையை நினைத்து
நாளும் பொழுதும் நன்மையே செய்து
பாரதியவனின் பாக்கள் புரிந்து
பாரதியவனின் பாங்கினில் வாழ்ந்து
நாவடக்கி நான் அடக்கி
நாங்கள் என்ற ஒற்றைச்சொல்லில்
சிலராய்ப் பலராய்ச் சேர்ந்தே இருந்து
நங்கூரப் பிடியாய் நகராமல் வாழ
வல்லமை தாராயோ

மற்றைய கவியரங்கக் கவிரங்கக்கவிகளையும் தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்குங்கள்.

ருவீட்ஸ் || Tweets #006

பதிவிட்டவர் Bavan | நேரம் 10:40 PM | 3 பின்னூட்டங்கள்
 
 
 -1-
பஸ்கண்டக்டர் 2நாள்பழகிய பின் 3வது நாளிலிருந்து 12RSக்கு பதில்10RSதான் எடுக்கிறான் bt TICKETபோடுவதில்லைங்கிறது கூடுதல்தகவல் #கணக்குலவராதகாசு
-2-
எனக்கு மட்டும் ஏன் எதுவுமே நடக்கல? & எனக்கு மட்டும் ஏன் இப்பிடியெல்லாம் நடக்குது?, இரண்டுமே விரக்தியின் உச்சத்தில் கேட்கப்படும் கேள்விகள் 
-3-
காதல் எங்கிறது call மாதிரி answer பண்ணாட்டி missedcall ஆகிடும். BT நட்பு எங்கிறது SMS மாதிரி நாமளா அழிக்குற வரைக்கும் நம்மை விட்டு போகாது
-4-
காதல் என்பது சிகரட் புகை மாதிரி புகை பிடிக்கிறவனோட சேர்த்து பக்கத்துல இருக்கிறவனையும் பாதிக்கும்..:P
-5-
நேற்றுமுன்தினம் தாத்தா ரசித்தார்,நேற்று அப்பாரசித்தார்,இன்று நான்ரசிக்கிறேன்,நாளை மகன்ரசிப்பான்,நாளைமறுதினம் பேரனும் ரசிப்பான்
-6-
தனிமையில் இருக்கும் போது எறும்பைக்கூட இரசிக்க முடிகிறது #அனுபவம்
-7-
காதல் எங்கிறது குத்து song மாதிரி வந்த உடனே சூப்பரா இருக்கும் but மனசுல நிலைக்காது, ஆனால் நட்புங்கிறது இளையராஜாட melody மாதிரி என்றும் கூடுவே இருக்கும் #Evergreen 
-8-
தமது சுயத்தை சுத்தமானதாகக் காட்டிக்கொள்ள சொல்லப்படும் "எனக்கு சுயநலமில்லை" என்றவார்த்தையில்தான் சுயநலம் அதிகம்பொதிந்திருக்கிறது. #சுயநலம்
-9-
இளையராஜாவின் பாடல்களின் பின்னணிஇசையை மட்டும்கூட கேட்டுக்கொண்டே இருக்கலாம்.பாடலின் ரசனை குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கவே செய்கிறது

-10-
தத்துவம்=செமபஞ்ச், ஆங்கிலம்=பீட்டரு, சீரியஸ்=செமகாமடி, ஃபீலிங்ஸ்=பிலிம்காட்டுதல் காதல்=டைம்பாஸ், நண்பர்கள்=உலகம் #பெயர்மாற்றம்

-11-
வாழும்போது நமக்கு சாவுண்டு ஆனால் சாகும்போது நமக்கு வாழ்வில்லை. #என்னங்கடா_நியாயம்_இது

-12-
தேவையானவை தேவையானபோது தேவைக்கதிகமாகக் கிடைக்கும் போது தேவைப்பட்ட தேவையானவை கூட தேவையில்லாமல் போகின்றன. #தேவையா :P

-13-
ஒருவிடயத்தை எந்தவித எதிர்பார்ப்புமின்றிஇழப்புக்களை பற்றி கவலைப்படாமல் செய்கிறோமோ அதான் நம்ம Passionனாம்,அப்ப எனது passion என்ன நித்திரையா?

-14-
தனக்குப்பிடித்ததை மட்டுமே செய்யும், வெளிப்படையாக இருப்பவர்களுக்கு பெயர் சுயநலவாதி என்றால், நானும் சுயநலவாதிதான்.

-15-
யாராவது என்னைக்கோபப்படுத்திவிட்டோமென்று மன்னிப்புக்கேட்டால்,நம்மளையும் கோபமெல்லாம வரும் ஆள் என்று நினைச்சிட்டாங்களே என்ற கவலைமேலிடுகிறது

-16-
ஒண்ணுமே இல்லாத விடயத்தை ஒண்ணுமே இல்லை என்று 100 Comment+150Likes போட்டபிறகு, சொல்லும் இடம் =FACEBOOK

-17-
யாருக்காகவும் தன்னிலை மாறாதிருத்தல் நல்லகொள்கைதான் ஆனால் எனது நடவடிக்கைகளால் ஒரு ஊரே பாதிக்கப்படும்போது மாறுவதில் தவறில்லை.

-18-
நான் நானாகத்தான் இருப்பேன் என்பதன் கருத்து நான் அனைத்திற்கும் முரண்பாடானவனென்பதல்ல

-19-
குற்றம் குற்றமெனஉணரப்படும்வரை குற்றம்குற்றமாகத் தெரிவதில்லைஆனால் குற்றத்தைகுற்றமெனஉணர்ந்தபின் குற்றத்தை குற்றமெனஉணராததுபோல்நடிப்பது குற்றமே

-20-
மேசையில் இருக்கும் பென்ட்ரைவை எடுத்து USBபோர்ட்டில் அடிக்க அரைமணிநேரத்துக்கு மேல் எடுத்துக் கொள்பவனே உண்மையான சோம்பேறி. (உ+ம் - நான்:P)

-21-
உயிர் மீது ஆசை இருப்பவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை 'என்னை நம்பி எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா?'

-22-
முட்டாள்களின் முதல் ஆயுதமாகவும், அறிவாளிகளின் கடைசி ஆயுதமாகவும் இருக்கிறது கோபம் #படித்ததில்பிடித்தது

-23-
அறுகம்புல் போல நாம் வளர்த்த காதலை, எடுமைமாடு போல் உங்கப்பன் மேய்ந்துவிட்டுப் போனானே..:P #கேட்டதில்_பிடித்தது

-24-
தலையிலிருந்து அடிக்கடி முடி கொட்டிறத்துக்கு காரணம் என்னனு தெரியுமா? தலையிலே முடி இருக்கிறதுதான் #தத்துவம்

-25-
நண்பன் ஒருவனின் வீட்டு வாசலில் பெரிய சைசில் சாய்பாபா படம் மாட்டியிருக்கிறார்கள், திருஷ்டிக்காகவா? #சந்தேகம்

-26-
எதிர்காலத்தை எண்ணி அஞ்சாதவனே நிகழ்காலத்தை நுகரலாம். இறப்பிற்கு அஞ்சுபவன் வாழ்வதில்லை.- சைரஸ்

-27-
சில முக்கியமான விடயங்கள் நடந்தேறிய பின்னர் நாம் சொல்லும் டயலொக் -WHATEVER HAPPENS LIFE HAVE TO MOVE ON-

-28-
“இருள் இருள்” என்று சொல்லிக் கொண்டு சும்மாயிருப்பதைவிட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்ற முயற்சிசெய் - கன்பூஷியஸ்-

-29-
நாங்கெல்லாம் கவனமாப்பாத்தா காதல் வரும் கடுப்பாப்பாத்தா கவிதை வரும் எப்புடி பஞ்ச்?..:p


-30-
கோபம் வந்தால் கண்ணாடியப்பாருங்க காமடியா இருக்கும்#அட்வைஸ்

ருவீட்ஸ் || Tweets #005

பதிவிட்டவர் Bavan | நேரம் 8:17 PM | 5 பின்னூட்டங்கள்
-01-
கொட்டாவி விடும் போது நாக்கை தொட்டால் கொட்டாவி நின்றுவிடுமாம்..:P #மாணவர்கள்_கவனத்திற்கு
-02-
நல்லவனைக் கெட்டவனும் நல்லவன் என்று சொல்லலாம், ஆனால் கெட்டவனை நல்லவன் தான் கெட்டவன் என்று சொல்லலாம் #முரண்பாடு #சமுகம்
-03-
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல.. எனக்கு பிடித்துப்போகும் பாடல்களை தேடிப் பார்த்தால் கூடுதலாக வைரமுத்துதான் அதை எழுதியிருக்கிறார் :-))
-04-
மனிதன் கண்டுபிடித்த அற்புதமான போதை மருந்து = இசை
-05-
முடிவுதெரியாமல் முடிந்துபோகும் கனவுகளை மீட்டு முடிவை அறிவதற்கு ஓர் கருவி வேண்டும்.
-06-
5வருடங்களுக்குமுன் labல் நாம் படிப்பதற்காக உயிர்நீத்த தவளை இன்றும் அவ்வப்போது என்னால் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது
-07-
குடை இல்லாமல் மழையில் நனைந்ததால் தான் பிறந்தது குடை, விடை தெரியாமல் EXAMHALLல் இருந்தால்தான் பிறக்கும் விடை#படிக்காமல்EXAMசெய்வோர்சங்கம்
-08-
ஆண்டவரில் "ஆண்" இருப்பதாலேயோ என்னமோ, அவர் பக்தர்களிடம் அதிகம் திட்டு வாங்குகிறார்..:P
-09-
நினைவாற்றலை கட்டுப்படுத்தும் மூளையை வைத்துக்கொண்டு இதயம்நினைக்கிறது என்று பொய்சொல்வதாலேயோ என்னமோ பலரது காதல் பஞ்சராகிப்போகிறது :P
-10-
Sklபடிக்கும்நேரம் FBயில் இதயம்பற்றிstatusபோடுவோர் இருந்திருந்தால் குருதிச்சுற்றோட்டத்தொகுதி பாடத்தில் சிறப்புத்தேர்ச்சியடைந்திருப்பேன்:P
-11-
முடிவெடுக்காமல் நேரத்தைக் கடத்திறதும், தப்பான முடிவெடுக்கிறதும் இரண்டும் ஒன்றுதான். Via film.
-12-
 சகிப்புத்தன்மையை வளர்த்துக்கிறதால தான் வாழ்க்கையோட உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்..:-)) via பசங்கFilm
-13-
 "சோதனை மேல் சோதனை & "இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இரண்டு பாடல்களையும் அடுத்தடுத்துக் கேட்பதிலுள்ள சுகமே தனி..:P
 -14-
 நாம் கீழே விழும் போது சந்தோஷப்பட்டா அது காதலி. சந்தோஷப்படுவதோடு TREATம் கேட்டா அவன் #நண்பேன்டா..
-15-
 தினமும் நித்திரைக்குப் போகிறோம்butஎப்ப தூங்கினோம்னு சரியான timeஐ எப்பிடி நம்மாளால கூறமுடியாதோ,அதே போல தினமும் classகு பேறோம் but எப்ப படிப்போம்னும் சொல்லமுடியாது
-RT-
  :வாழ்க்கையில் விதிகளை பின்பற்றும்போது வாழ்க்கை ஒழுங்காய்த்தான் இருக்கிறது. ஆனால் சந்தோசம் தொலைந்து போகிறது.!
 
 

ருவீட்ஸ் || Tweets #004

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:23 PM | 11 பின்னூட்டங்கள்


-01-
வெள்ளை மணிக்கூடு+மஞ்சள் செருப்பு+ரோஸ் டீ-சர்ட்+பச்சை டவுசர்+சீப்பு பாவிக்காத பரட்டைத் தலை +Headsetல் English பாட்டு= ஃபாசன் :P

-02-
Q:examஐக் கண்டுபிடிச்சவன் யாரு? A:இப்போ படித்துக்கொண்டிருப்பவர்கள் அனைவரினதும் எதிரிதான் VIA By  

-03-
உன் வரவை எண்ணி எண்ணி தூக்கமின்றியே கழிகின்றன என் இரவுகள்- பரீட்சை #பப்புமுத்து

-04-
மரணத்தைக் காதலியுங்கள், கடைசிவரை உயிருடன் வாழ்வதற்கு..:P #உல்டா #பப்புமுத்து

-05-
புதுசாக Tweet அடிப்பதை விட, Retweet அடிப்பது இலகு. ரெண்டே கிளிக்தான்..:P #பேசிக்கலிஐஆம்எசோம்பேறி

-06-
சில வேளைகளில் எமது நல்ல குணங்கள் எம்மைக் கெட்டவர்களாகவும், கெட்டகுணங்கள் எம்மை நல்லவர்களாகவும் ஆக்கிவிடுகிறது. #முரண்பாடு

-07-
அளவுக்கதிகமா EXAMகு படிக்கிற STUDENTம்,அளவுக்கதிகமா கஷ்டமா EXAMவைக்கிற டீச்சரும் பைத்தியம் புடிக்காம மண்டயபோட்டதா சரித்திரமேஇல்ல

-08-
காதலில் தோல்வியடைந்தவர்கள் அதை FBகில் எழுதி அலப்பறையைக் கொடுக்கிறார்கள் என்றால்,அவர்கள் உண்மையில் FBஐதான் காதலிக்கிறார்கள் #ஆய்வுமுடிவு :P

-09-
உண்மையைச் சொல்லும்போது சற்றுப் பொய்யாகிவிடுமோ என்ற பயமும், பொய் சொல்லும்போது சற்று உண்மையாகிவிடுமொ என்ற பயமும் இருக்கத்தான்செய்கிறது

-10-
உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மதிப்பெண் வருகையிலும் மறக்காது கண்மணியே #எக்ஸாம் #உல்டா #பப்புமுத்து

-11-
அடுத்த நாள் எக்ஸாமுக்கு முதல் நாள் இரவு படிக்கிறவன்தான்டா உண்மையான ஸ்டூடண்டு..:P #உண்மையான_ஸ்டூடண்டு

-12-
கம்பிமத்தாப்பு கண்ணு வண்ண மத்தாப்பு பொண்ணு #அப்ப பத்தவச்சா வெடிச்சிருமாம்,வைரமுத்து எங்கயோ போய்ட்டாருய்யா:P

-13-
எக்ஸாமை மட்டும் ருவிட்டரில் வைத்திருந்தால் சிம்பிளா ரீருவிட் பண்ணிட்டுப் போயிருக்கலாம்.

-14-
எக்ஸாம் supervisor நமதுமொழி தெரியாதவராக இருந்துவிட்டால்,பக்கத்தில் உள்ளவனிடம் விடைகேட்டாலும்,timeகேட்டேன் என்று சமாளித்துவிடலாம்


-RT-
Naveen Kumar :காதலையும் இதயத்தையும் இணைக்கும் அலப்பறைக்கு அளவில்லையா ? உங்க காதலி இதயத்த வேற ஒருத்திக்கு பொருத்திவிட்டா அவள காதலிப்பீங்களா?

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்