Related Posts with Thumbnails

உலகத்தில எவ்வளவு கோடு இருந்தும் நானேன் அந்தக்கோட்டைத் தாண்டினேன்??..

3525522756_dae8834d6d
இதுதான் கோடு
அவ்ளோ அழகு
WHITE 
நேரானது
RUN OUTABLE
அதுகிட்ட ஒரு STRAIGHT இருக்கு......
AND LIMIT TOO..
அதை யாருக்கும் தெரியாம தாண்டி BALL போட ட்ரை பண்ணி அதை அம்பயர் பார்த்தா அது NOBALL ஆகிரும்
ஆனா நான் ஏன் கிறீசைத்தாண்ட ட்ரை பண்ணினன்?
என்ன பிரச்சினை?
எனக்கு சம்பளமே தர்றாங்க இல்ல.. அதுதான் பிரச்சினை..

ஆனா நாம கிறீசைத்தாண்டப் போறோம்னு முன்னாடியே டிசைட் பண்ண முடியாதா என்ன?




கிறீசைத் தேடிக்கிட்டு போக முடியாது…

விக்கட்டுக்கு முன்னாடி இருக்கணும்… அதுவா தன்னை மிதிக்காதன்னு கேக்கணும்…
அம்பயர் பாக்காத நேரத்தில தாண்டணும்… கண்டு பிடிச்சுட்டா கால் வழுக்கின மாதிரி பிலிம் காட்டணும்…

எப்பவுமே இயல்பா தாண்டின மாதிரியே இருக்கணும்…


அதான் ட்ரூ நோபால்…


அது எனக்கு கிடைச்சுது!




SO அட்சுவலா நான் அந்த கிறீசை சூஸ் பண்ணினன்,



என்ன தாண்ட வச்சது அந்த கிறீஸ்..
6

இதான் நான்


என்னோட பேரு ஆமீர், எதோ சின்ன இடத்திலயெல்லாம் காசு வாங்கி பணமே கிடைக்காம பக்கத்து ஹோட்டல்ல பந்தயம் போட ட்ரை பண்ணிக்கிட்டிருந்த  நேரம்,

சூதாட்டம்தான் சம்பாத்தியமே எனக்கு..
MY AMBITION IS TO BE A GAMBLER
SO கவலையா சூதாட்டமே இல்லாம சூதாட்டத்துக்கு ட்ரை பண்ணிகிட்டிருந்த டைம்
அப்பதான் அந்தப் கிறீசை முதன்முதல்ல பாத்தேன்.
no-ball
கிறீசைத்தாண்ட எவ்வளவோ ட்ரை பண்ணினன், BUT BUTTஅண்ணன் மூணாவது ஓவர்லதான் தாண்டலாம்னு சொல்லிட்டாரு , அவனவன் நோபோல் போட்டு செஞ்சுரியையே தடுக்கிறான் நாம ஜெஸ்ட் காசுக்குத்தானே
மூணாவது ஓவர் வந்திடிச்சு ஆனா அதைக் கமராவும் அம்பயரும் பாக்கக்கூடாது, I JUST CAN'T BELIEVE THIS, அத அம்பயர் & கமரா ரெண்டுபேரும் பாத்திட்டாங்க,

அப்பவே அம்மா சொன்னாங்க வேணாம்டா மாட்டிக்குவ, பிரச்சனையாகிடும்னு,

BUT ஓப்பினிங் பட்ஸ்மன் BUTTஅண்ணன் சொன்னாரு
5


உலகத்தில எவ்வளவு கிறீஸ் இருந்தும் நான் ஏன் இந்த கிறீசைத்தாண்ட ட்ரை பண்ணினன்?

அவன் அன்னைக்கு CALL பண்ணியிருந்தான், நான் பணம் தாறேன்  சீக்கிரம் வந்து வாங்கிட்டு போன்னு சொன்னான், நானும் உடனே கிளம்பி போனேன், ஆனா அதை எவனோ படம் புடிச்சுட்டான்..
66
உண்மைலயே நான் அவன்கிட்ட பணம் வாங்கிருக்கக்கூடாது, பணத்தோட சொந்தக்காரன் அவன், ஆனா அவன் சொன்ன வார்த்தை (தர்மபிரபு) அப்பிடி ஒரு நிமிசம் யோசிச்சன் நான் பணத்தை FREEயா வாங்க வரலயே போட்ட NOBALLக்குத்தானே வாங்க வந்தேன் SO பணத்தை எண்ணி வாங்கிகிட்டேன்.


நான் பணம் வாங்கினதில ஒரு GAMBLERட ஸ்டைல் இருக்கும், ஆமா நான்தான் எங்க ஸ்கூல்ல GAMBLING சாம்பியன், BOWLING, BATTINGகோட சேத்து GAMBLINGகையும் கத்துகிட்டேன்.
chi


ஆனா அந்தப்பணம் இன்னைக்கு எங்கூட இல்ல, போலீஸ்காரங்க அதை அள்ளிக்கிட்டு போய்டாங்க , இன்னையோட 2 நாளாகுது, ஆனா என்னால பணத்தை மறக்கவே முடியல, 1st MILLIONங்க எப்பிடி மறக்க முடியும்.


BUT... THANK YOU கிறீஸ் உன்னாலதான் இந்த வீடியோவே...


V


V


V


V


V


V


V


V


V


V


V

V


V


V

அன்புள்ள சந்தியா இப்போது அனைவரையும் போட்டுத்தாக்கிக்கொண்டிரக்கிறாள். சுபாங்கன் அண்ணா ஆரம்பித்த சந்தியா லோஷன் அண்ணாவிடம் போய் ஜனா அண்ணா வழியாக தற்போது என்னிடம்.
முன் பகுதிகளைப் படிக்காதவர்கள் அவற்றைப் படித்துவிட்டு தொடருங்கள்.
கதையின் முதற்பாகத்திற்கு இங்கே
இரண்டாம் பாகத்திற்கு இங்கே
மூன்றாம் பாகத்திற்கு இங்கே
TS PHOTO Love Story wip sss crop 9-1208 rha090_2843

நித்திரையில் கட்டிலிலிருந்து கீழே விழுந்தவன். கண்விழித்த போது வெளியே ஹாலில் பெரியம்மாவின் குடும்பத்தினரின் கலகலப்புக்குரல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது. எதிரிலே தம்பி இவன் விழுந்ததைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். பாத்ரூமுக்குள் புகுந்து கதைவை அடைத்துக்கொண்டான்.
***
கதவை அடைத்தார் கண்டக்டர், பஸ் புறப்படத்தொடங்கியது. அதே ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தான். கை விரல்கள் நெற்றியை வருடிக்கொண்டிருந்தன, காதில் “அன்புள்ள சந்தியா.. என்று கார்த்திக் இவனுக்காக உருகிக்கொண்டிருந்தார்.

“அடடே தம்பி,
எங்கேயோ கேட்ட குரல், திரும்பினால் இவனுடன் பயணித்த 7க்கு 2 நியூமராலிஜி சொன்ன அதே மனிதர்.
“ஹலோ சேர், என்றான்
“கடவுள் இருக்கிறாரா? இல்லையா? கண்டுபிடிச்சீங்களா?
"கஷ்டப்பட்டு ஒரு புன்னகையை பரிசளித்தான்.
மீண்டும் சந்தியா அவனை அணைத்துக்கொண்டாள் கார்த்திக்கின் குரலில்..

கொழும்பின் வாகன இரைச்சல் அவனை எழுப்பிவிட்டிருந்தது. கார்த்திக் பட்டரி தீர்ந்து ஓய்வடுத்துக்கொண்டிருந்தார். கால்கள் அவனது ரூமை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. முதன்முறையாக வீதியைக் கவனிப்பதை மறந்திருந்தான். பழக்கப்பட்ட வழியில் கால்கள் ரூமுக்கு கொண்டு சேர்த்தன. சந்தியாவுடன் மீண்டும் நினைவுகளைப் பகிர அலைபேசியை சார்ஜில் போட்டு ஒன் பண்ணியவனின் அலைபேசி விடாமல் கீச்சிட்டது
you have 5 missed calls from 077xxxxxxx

உடனே அவளுக்கு அழைப்பெடுத்தவனுக்கு “சுதா. என்ற அந்த மெல்லிய குரல் புத்துணர்ச்சியை அளித்தது.
“அழகுக்குக் காரணம் நான்தான் சண்டைபோடுகிறது உன் குரலும், கண்களும்” என்று ஏதேதோ கவிதைகள் மனதில் தோன்றி மறைந்துகொண்டிருந்தன. அனைத்தையும் மீறி “இயஸ் சந்தியா.. என்றான்.
“என்ன சுதா நீங்க நாளைக்கு கல்யாணம் நீங்க இன்னிக்கே வந்திருக்க வேணாமா? கொஞ்சலாகக் கேட்டாள்.
வீட்டு அட்ரசை வாங்கிக்கொண்டவன் உடனடியாக குளித்து, பைக்கை உதைத்துக்கொண்டு கிளம்பியவனுக்கு சந்தியாவின் வீட்டை வாயில் வாழைமரங்கள் அடையாளம் காட்டிக்கொணடடிருந்தன. உள்ளே நுழைந்தவனின் கண்கள் அவளைத் தேடி அலை பாய்ந்துகொண்டிருந்தன. அதோ பிங்க் கலரில் ஆரஞ்சு போர்டரில் பட்டுச்சாரி, கையில் அதற்கு மட்சிங்காக வளையல்,மெல்லிய நெற்றிச்சுட்டி கையில் மெஹந்தி தேவதை போல் இல்லை இல்லை அதைவிட உயர்ந்த வார்த்தைகள் வேண்டும் அதை வர்ணிக்க… அப்பப்பா.. என்று கண்வெட்டாமல் பார்த்துக் வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவனை கூல்ரிங்ஸ் என்ற குரல் நினைவுக்குக் கொண்டு வந்தது.
கூல்ரிங்சை பெற்றுக்கொண்டு நிமிர எதிரில் சந்தியா வந்து நிற்க சரியாக இருந்தது.
“ஹாய் சுதா.. அம்மா வரலயா?, இல்லை என்பது போல் தலையசைத்தான்.
“ஐ வோன்ட் டு இன்டடியூஸ் சம்ஒன் டு யு சுதா.. என்றவள், அவனது கையைப்பற்றி இழுத்துக்கொண்டு போனாள். பூக்களுக்கு இவ்வளவு பலமா என் முரட்டுக்கையையே இழுக்கிறதே? அதிசயித்தான். அவளது கையின் குளிர்ச்சி இவன் உடலை சூடாக்கிக்கொண்டிருந்தது. “என் உடல் எரிந்தாலும் பரவாயில்லை உன் கையை விட்டுவிடாதே” மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.

முதுகுப்புறத்தை காட்டி அரட்டையில் ஈடுபட்டிருந்த அந்த மனிதரைத் அழைத்தாள் திரும்பியவர் சுதாவைக் கண்டதும்…

“ஹலோ தம்பி வட் எ சப்ரைஸ்..” என்ன ஆச்சர்யம் அதே பேரூந்து மனிதர்.
“ஹலோ சேர், கண்டுபிடித்துவிட்டேன் கடவுள் இருக்கிறார்” என்றான்
அவருக்குப் பின்னால் இருந்த சிவா weds மஹதி என்ற போர்ட் சுதாவின் கண்களை அலங்கரித்துக்கொண்டிருந்தன.

ஹைகூ…

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:56 PM | 13 பின்னூட்டங்கள்

baby-feet-buried-in-the-beach-sand

 

முத்தமிட்ட கடல்

ருசித்த மணல்

நனைந்த கால்

 P6106355e

 

விருந்துக்கு வந்த பூனை

கதவடைத்த நான்

வாயில் எலி

 

CallumBeachRain

 

அறைந்த காற்று

அதிர்ந்த பல்

கடற்கரையில் மழை

 

 

Moon_Cloud_1_Blog

உண்ணாவிரதமிருக்கும் 

குழந்தை

மேகம் மறைத்த நிலா

 

 

cake-birthday

 

பிறந்தநாள் விழா

ஊட்டிய விஷம்

டயபட்டிக்ஸ் நோயாளி

 

 

 

 

joe-mosquito

சாகடிக்க போகிறேன் 

சங்கு ஊதுகிறது

காதோரம் நுளம்பு

 

 

Call-Centre

 

அழைப்பு அவனுக்கு

ஆங்கிலத்தில் அவள்

கிடைக்காத அழைப்பு

 

 

 

stock-photo-beautiful-girl-with-adhesive-on-her-mouth-and-closed-eyes-isolated-over-white-22056610

ஊமையா நீ?

மேலும் கீழும் ஆடிய தலை

ஊமையான நான்

நிலாக்காதல் - 2

பதிவிட்டவர் Bavan | நேரம் 4:44 PM | 14 பின்னூட்டங்கள்
வந்தியண்ணாவின் கதையைத் தொடர்ந்து அக்கதையை எழுத என்னை அழைத்திருந்தார். வந்தியண்ணாக்கு நன்றிகள்.
பகுதி –1 ஐப்படிக்க இங்கே சொடுக்குங்கள்
 
ஹரீசுக்கு மாவட்ட மட்ட கிறிக்கட் அணியில் இடம் கிடைத்தது. முதல் நாள் பயிற்சி. மைதானத்தில் வோர்ம் அப்புக்காக மற்ற அண்ணன்களுடன் சேர்ந்து ஓடிக்கொண்டிருந்தான். அப்போது ஒரு விசில் சத்தம்,
“கமோன் காய்ஸ்…”  தேவா மாஸ்டர்.

ஒரு குற்ற உணர்ச்சியுடனேயே அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான். அவள் அந்த சம்பவத்துக்குப்பிறகு இவனுடன் பேசியதே இல்லை. ஒரு வேளை இவரிடம் சொல்லியிருப்பாளோ? இவர் ஏன் என்னிடம் ஒன்றுமே கேட்கவில்லை? மனதுக்குள் பல ஊகிப்பு முட்கள் குத்திக் குடைந்துகொண்டிருந்தன. புல்டொஸ் பந்துக்கே மூன்று முறை விக்கெட்டைப் பறிகொடுத்தான்.

பயிற்சி முடிந்தது. தேவா மாஸ்டர் “தம்பி ஹரீஸ்…
நான்கு காலடிகளை வைப்பதற்குள் நாற்பது ஊகிப்பு முட்கள் மீண்டும் குடையத் தொடங்கின. “சேர்?”
“நாளைக்கு காலம வரேக்க வீட்டை வந்து பந்தை எடுத்துக்கொண்டு போக முடியுமோ”
“ஓம் சேர்”

மறுநாள் காலை, பழக்கப்படாத முகத்தைக்கண்ட லைக்கா குரைத்துத்தள்ளிக்கொண்டிருந்தது. ஹேய்..ஸ்ஸ்சு.. “தம்பி ஒரு நிமிசம் நிக்கட்டாம் வாறாராம்” தேவா மாஸ்டரின் மனைவி.
“சரி அன்ரி”
அவள் உள்ளே சென்றாள், இப்போது லைக்கா குரைப்பதை நிறுத்தியிருந்தது. லைக்காவைப்பார்த்து முறைத்தான், வவ் வவ் என்று குரைத்தான்.. அப்படிப்பல பகீரதப்பிரயத்தனங்களை மேற்கொண்டான் அவள் வீட்டில் இருக்கிறாளா என்று அறிய. லைக்கா எஜமானுக்குக் கட்டுப்பட்டு வாலை ஆட்டிக்விட்டு வீட்டுக்குள் பாய்ந்து ஓடியது.

பீட்டர்சன் லேனால் திரும்பிய போது குறுக்கே பாய்ந்த நாயைக் காப்பாற்ற போட்ட சடுன் பிரேக்கில் நிகழ்காலத்துக்குத்திரும்பியவனின் பைக் என்ஜின் நின்று போயிருந்தது. இரண்டு உதையில் மீண்டும் பைக் மைதானத்துக்கு பறந்தது.
“மச்சான் நீ பட்டிங்”  என்றான் சந்தோஷ்.
சந்தோஷ் இவன்தான் பாடசாலைக்காலத்தில் இவனது எதிரணியில் விளையாடியவன். நல்ல பெளலர், பல்கலைக்கழக அணியில் ஒரே அணியில் விளையாடியவர்கள். இன்னும் சொல்லப்போனால் லாவண்யாவின் எதிர் வீட்டுக்காரன். லாவண்யாவின் வகுப்பு நேரங்கள் தொடக்கம் அவள் வீட்டுக்கு வெளியே வரும் நேரம் உள்ளே போகும் நேரம் என அனைத்தையும் அறிந்து சொல்லும் ஸ்பை இவன்தான். இப்போது தேவா மாஸ்டரின் மகள் யாழில் மெடிசின் முடிச்சு ஏதோ வெளிநாட்டுக்கு ட்ரெயினிங் போயிருக்கிறாளாம் என்று சந்தோஷின் அம்மா சொன்னதாக சந்தோஷ் அவனிடம் சொல்லியிருந்தான்.

கருமுகில்கள் சூழ்ந்து மைதானத்தில் மழையாக குதித்து விளையாட ஆரம்பித்திருந்தன. மைதானத்தில் கிடந்த அனைவரின் செல்பேசிகளை எடுத்துக்கொண்டு ஹரீஸ் பவிலியனுக்கு ஓடினான்.
“அடடா மழைடா அடை மழைடா..” ஹரீசின் கையிலிருந்த சந்தோஷின் அலைபேசி அடிக்கத் தொடங்கியது…
தொலைபேசி ஸ்கிரீனில்…
Lavanya calling..
+44 020 7xxx xxxx


சுபாங்கன் அண்ணாவின் நிலாக்காதல் பகுதி-3
கன்கொனின் நிலாக்காதல் பகுதி- 4
ஆதிரை அண்ணாவின் நிலாக்காதல் பகுதி-5 
லோஷன் அண்ணாவின் நிலாக்காதல் பகுதி-6 
 1 2 3 4 5 no

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்