Related Posts with Thumbnails

தேடல்...!

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:58 PM | 1 பின்னூட்டங்கள்


கேட்கலாமா வேண்டாமா?
கேட்டால் தருவாரா?
தருவதாய் சொன்னாரே?
சொன்னது போல் தருவாரா?

பக்கத்தில் வந்தால்
படக்கென்று கேட்டிடலாம்
இதோ வந்து விட்டார்
இப்போதே கேட்டிடலாம்

எல்லாம் இருக்கட்டும்
எப்படித்தான் கேக்கிறது?
கேட்டால் விளங்குமா?
எப்படி விளக்கிறது?

போனால் போகட்டும்
பேசாமல் விட்டுடலாம்
ஐஞ்சு ரூபாய் மிச்சத்துக்கு
எதுக்கு இந்த திண்டாட்டம்

சேர்த்து வைத்திருந்தால்
பல நூறாய் சேர்ந்திருக்கும்
எத்தனை ஐந்து ரூபாய்
ஆவியாய் போயிருக்கும்!


செய்தேனா இல்லையா?
என்னவென்று தெரியவில்லை
செய்து விட்டாய் என்றார்
விளங்கவில்லை என்றேன்
அவருக்கது விளங்கவில்லை

என்னென்னவோ சொன்னார்
திட்டுறாரா கதைக்கிறாரா?
கோவமாக இருக்கிறாரா?
குரலே அப்படித்தானா?

பக்கத்திலே இன்னொரு
நாயும் குரைக்கிறது
யாருக்கு நான் என்ன செய்தேன்?
எதைத்தான் நான் மொழிபெயர்ப்பேன்!

திரும்பத் திரும்பக் கேட்டால்
கோட்சுக்கு போட்டிருவார்
கப்டன் விஜயகாந்த்
கடுப்பானாலும் பரவாயில்லை

மாத்தையாவையும் மன்னிப்பையும்
மாறி மாறிப் போட்டு வைப்பம்
போனால் போகுது
ஐநூறு ரூபாய் தானே

ஐநூறு ஐநூறாய் எத்தனை ஆயிரங்கள்
இப்பிடியே போனால் சில லட்சம் ஆகிடுமோ?
கணக்குப் போட்டுப் பார்த்தால்
கண்ணெல்லாம் இருட்டுதப்பா!

தண்டப்பணச் சீட்டில்
குற்றத்தின் பேரென்ன?
வாசிச்சுச் சொல்லி விட்டால்
கின்னஸில் பெயர் வருமோ?

வாயிருந்தும் ஊமைகளாய்
காதிருந்தும் செவிடுகளாய்
கண்ணிருந்தும் குருடுகளாய்
வட்டங்களுள் வாழ்ந்து கொண்டு

பேஸ்புக், ருவிட்டருக்குள்
வாள் வாளென்று கத்திவிட்டு
வாள் எடுத்து வீசியதாய் - அதை
வீரமென எண்ணி விட்டு
தேடிக் கொண்டிருக்கிறோம்
தேசிய ஒருமைப்பாட்டை!

கிடைத்தால் சொல்லுங்கள்
இல்லையேல் நில்லுங்கள்
இன்னுமொரு சமூக வலைக்குள்
தலை புதைப்போம் வாருங்கள்!
-Bavananthan



எதிரும் புதிருமாய்
அமரவும் இல்லை
ஏனோ தானோ என்ற
எண்ணமும் இல்லை
உள்ளுணர்வு எனை இழுத்து
சொல்லவும் இல்லை
பேரதிர்வில் மோதித்
தள்ளாடவும் இல்லை

மலை மோதி
நிலை மாறி
வீழவும் இல்லை

சிலை போல
அசைவின்றி
உறையவும் இல்லை

ஆனால்...

எல்லை தாண்டிய
பயங்கரவாதத்தை - உன்
கண் வில்லைகளை கொண்டு மட்டுமே
செய்து விடுகிறாய் நீ...! 
-Bavananthan

காதல் சுழல்

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:08 PM | 0 பின்னூட்டங்கள்


பார்வைச் சுழலுக்குள்ளே
பகீரென்று ஈர்த்து விட்டு
ஈர்க்கின்ற கண் கொண்டு
கோர்த்து எனைக் கொன்று விட்டாய்!

கன்னத்தில் குழி வீழ
புதைகுழிக்குள் தள்ளி விட்டு
புன்னகை செய்து என்னை
புது உலகில் புரள விட்டாய்!

குவியங்கள் மாற்றாமல்
நிலைகுலையச் செய்து விடு!
கண்கொண்ட வதை போதும்
காதலைச் சொல்லி விடு! 
Bavananthan

விட்டால்...!

பதிவிட்டவர் Bavan | நேரம் 12:03 AM | 0 பின்னூட்டங்கள்

மர்மங்கள் சூழ்ந்து விட்டால்
மடைத்தனங்கள் சேர்ந்து விட்டால்
கர்வத்தில் ஆழ்ந்து  விட்டால்
கடைசிவரை மூழ்கி விட்டால்

சல்லடைகள் தோன்றி விட்டால்
சகதியிலே வீழ்ந்து விட்டால்
சொல்லடிகள் தாங்கி விட்டால்
சோகம் வந்து தங்கி விட்டால்

பிறவியினை துஞ்சி விட்டால் துறவியினை மிஞ்சி விட்டால்
தலைக்கனமும் கழன்று விட்டால் 
தடுமாறி நின்று விட்டால்

எல்லைகளை நீக்கி விட்டால்
தொல்லைகளை நீங்கி விட்டால்
களை பெருகிக் கனத்தாலும்
துரோகங்களை எரித்து விட்டால்

ஆத்திரங்கள் அழித்து விட்டால்
காத்திரமாய் பழகி விட்டால்
முதுகுத்தோல் கிழிந்தாலும்
சிரித்துவிடப் பழகிவிட்டால்

தனிமையினை விரும்பி விட்டால்
சுயத்தை நம்பத் தொடங்கி விட்டால்
வட்டங்களை தூசு தட்டி
உடைத்தெறிந்து வந்து விட்டால்

அச்சங்களே இல்லாமல்
வாழ்ந்து விடப் பழகி விட்டால்
துச்சமென எதுவரினும்
துணிந்து மோதி வென்று விட்டால்

சிரித்தவன் முன் ஏறி வந்து
சிரம் உயற்றி நின்றி விட்டால்
சாதனையால் அவன் முகத்தில்
காறி உமிழ்ந்து விட்டால்

சரித்திரத்தில் உன் பெயரை 

செதுக்கி நீ வென்றுவிட்டால்

மாஸ்லோவின் கூம்பகத்தில் 

உச்சத்தை நீ தொட்டு விட்டால்

இன்னும் கொஞ்சம் கற்றுவிட
எண்ணம் கொண்டு எழுந்து விட்டால்
புதிதாக ஒன்றைத் தேடி
கற்றுவிட தொடங்கி விட்டால்

வாழ்க்கையில் மீண்டும் ஒரு
அத்தியாயம் தொடங்கி விட்டால்
அனுபவங்கள் அறைந்தாலும் அதை மறந்து தொலைத்து விட்டால்

மீண்டும் துரோகத்தில் இதயம் கிழிந்து விட்டால்
தோல்விகளில் கால் வழுக்கி கொடூரமாய் வீழ்ந்து விட்டால்

புதிய உலகத்துள் புரிந்து கொண்டு
நுழைந்து விட்டால்
மறுபடியும் இக்கவிதை
முதல் வரியில் தொடங்கி விட்டால்...!
-Bavananthan

காதல் உயிர்!

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:46 PM | 0 பின்னூட்டங்கள்



தறிகெட்டுத் திரிகின்ற
தலை கோதும் காற்றாக
உனைத்தேடி எங்கும்
நினைவோடுதே!
வெறி கொண்டு துடிக்கின்ற
முளை கொண்ட நாற்றாக
உனைச்சேர முடியாமல்
உயிர் வாடுதே!" 💔
-Bavananthan

மீண்டு-ம்...!

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:44 PM | 0 பின்னூட்டங்கள்


மீண்டும் ஒரு காற்று
என்னுள் நுழைகிறதே!
பார்வைத்துளி பட்டு - என்
தேகம் சிலிர்க்கிறதே!
காதல் கதை கொண்டு
விழி ஊடே துளைக்கிறதே
நீங்கும் நொடி பார்த்து
என் நெஞ்சம் வலிக்கிறதே! 
-Bavananthan


"கவனத்தை ஈர்க்க
செயற்கையாய் கொட்டும்
உன் சிணுங்கலில்
கள் ஊறுதே!
வலம் இடமாக
வளைகின்ற பார்வை
ஒரு நொடி எனை
தாக்குதே!
விழித்திரை மோதி
வழிகின்ற விம்பம்
என் நினைவெங்கும்
உனை தோய்க்குதே!
ஊழியாய் வந்து
மோதிடும் கண்ணில்
என் சிந்தையும்
தள்ளாடுதே!"
Bavananthan 

#PersonalDiary - 01

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:36 PM | 0 பின்னூட்டங்கள்

02-06-2016 
தண்ணீர்க்காகம் அரை மணிநேரமாக இறகை விரித்துப் பிடித்து வெயிலில் உலர்த்தி விட்டு மீண்டும் தண்ணீருக்குள்ளே குதிக்கிறது! நானும் தான்!

01-06-2016

வாழ்க்கையில ஒரு நாளில் அளவுக்கதிகமான பிரச்சனைகளை சந்தித்துக் களைக்கும் போது ஒரு இடைவிடாத சிரிப்பு ஒன்று முகத்தில் தோன்றி இருக்கும். அதுதான் ஜென் நிலை! 


30-05-2016
வழக்கமாகப் போகும் பாதைக்கு குறுக்கே திடீரென வெட்டப்பட்ட ஒரு பள்ளத்தில் முதல் நாள் சமநிலை குழம்பி விழுந்து எழுந்து சென்றிருப்போம்.அடுத்தநாள் அந்த இடத்தில் சற்றே மெதுவாகப் போய் அவதானமாகச் சென்றிருப்போம்.
அதற்குப் பின்னர் குழியில் விழாமல் விலகிச்செல்ல ஒரு வழியையோ அல்லது மாற்று வழியையோ கண்டுபிடித்து அதனூடாக சென்று இருப்போம்.
வெட்டப்படும் பல குழிகள், வழிகளைக் கற்றுக் கொடுக்கவே தவிர, வலிகளைக் கொடுக்க அல்ல!!!


11-05-2016
ஒரு structureக்குள் வட்டமடித்து வாழ்க்கையை தொலைத்துவிட்டு, தொலைத்தது கூடத்தெரியாமல் தங்கள் வட்டம் சிறந்த வட்டம் என்று நினைப்பவர்களுக்கு, வட்டமே கீறாமல் வாழ்க்கையை வாழுகின்றவர்களின் நிலையை உணர்வது கடினம்தான்! என்ன தமது வரையறைகளைத் தாண்டி யோசிக்காத அவர்களின் நிலையை நினைத்து பரிதாபப்படுவதை விட எங்களால் வேறொன்றும் செய்ய முடியாது! 

உள்ளது! அல்லது!

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:15 PM | 0 பின்னூட்டங்கள்

உள்ளது வேண்டின்
அல்லது தந்து
உள்ளதை மறைக்கும்
உலகமிது!
அல்லதை நாடி
உள்ளதை விட்டால்
அல்லதையும் மறுக்கும்
நரகமிது!
நாம்
உள்ளதும் இன்றி
அல்லதும் இன்றி
வெற்றிடம் தாங்கி
திரிகின்றோம்!
அவை
அல்லதும் வாங்கி
உள்ளதும் வாங்கி
முற்றிலும் தேக்க
தொலைகின்றோம்!
Bavananthan
(20-05-2016)

திரண்டு வந்த அலை ஒன்று
திசை மாறித் திரும்பியதோ!
முகில் வழிந்த துளி ஒன்று
வரும் வழியில் சிதறியதோ!

இரு விழிகள் வெறித்த திசை
குவியமின்றி கரைகிறதே!
கனங்கள் தாங்கும் மனம்
கதறி அழத்துடிக்கிறதே!

மீள்வதெல்லாம் கஷ்டமில்லை
துளி கூட அதற்கு இஷ்டமில்லை
வறண்ட அந்த வாழ்க்கையிலே
நினைவுகள் கூட பசுமையில்லை

பாதைகளில் விழுந்து உருண்டு
மேடு பள்ளங்களில் புரண்டு
பல இடம் தடம் மாறி
பைத்தியங்கள் சில தேறி

வெட்டி வீழ்ந்த இதயத்தின் 
துண்டுகளைப் பொறுக்கி
அனுபவ ஊசி கொண்டு
அதைத் கோர்த்து ஒன்றாக்கி

விரைந்தெழுந்து ஓடி வந்து
திரும்பி பார்க்கையிலே
ஒரே ஒரு கேள்வி மட்டும்
ஒற்றையாய் நிற்கிறது

நீ மட்டும் ஒரு நிமிடம்
திரும்பிப் பார்த்திருந்தால்
அத்தனை வாழ்க்கையுமே
அழகாகிப் போயிருக்கும்!
-Bavananthan

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்