Related Posts with Thumbnails
Showing posts with label கதை. Show all posts
எனக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு சந்தேகம் உழுந்து வடையில் ஓட்டை இருக்கு ஆனால் பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் என்று? அதுக்குக் காரணம் என்ன என்று மல்லாக்கப்படுத்துகிட்டு விட்டத்தைப் பார்த்தபடி யோசிக்க ஆரம்பிச்சு அப்பிடியே தூங்கிப்போனேன். அப்போ கனவிலே விருந்தூர் மன்னர் சோத்துச்சக்கரவர்த்தியின்அமைச்சர் பருப்பு தோன்றி அதன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.

"முன்னொரு காலத்தில விருந்தூர் என்ற நாட்டை சோத்துச்சக்கரவர்த்தி என்ற ராஜா ஆட்சி செய்து வந்தார். அவரின் ஆட்சியின் கீழ் உழுந்தூர், பருப்பூர் என்று இரண்டு ஊர்கள் இருந்திச்சாம். அந்த ரெண்டு ஊர்க்காரர்களும் பாயாசூர், கடலையூர்க்காரர்கள் எல்லாரும் மூக்குமேல விரலை வைக்கிற அளவுக்கு ஒற்றுமையா, ரொம்ப சந்தோஷமா மற்ற இருந்து வந்தாங்களாம். தங்களுக்குள்ள போட்டி பொறாமையே வரக்கூடாது எண்டதுக்காக எந்தப்போட்டியா இருந்தாலும் இரண்டு ஊரும் சமமாவே மார்க் வாங்கிறதெண்டு முடிவெடுத்து, அதையே கடைப்பிடிச்சு வந்தாங்களாம்.

ஒருநாள் விருந்தூர் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு போட்டி ஒன்று வைக்கப்பொவதாக அறிவிச்சாங்களாம். அதாவது மன்னரின் பிறந்தநாளுக்குயார் சிறந்த தின்பண்டம் செய்து கொண்டு வந்து தாறாங்களோ, அவங்களுக்கு "ஆண்டின் சிறந்த தின்பண்டி" என்ற பட்டம் குடுப்பதாக சொன்னாங்களாம்.

போட்டிதினத்தன்று அனைவரும் மைதானத்தில் கூடியிருந்தாங்களாம். அப்ப போட்டி ஆரம்பிச்சது. உழுந்தூர்க்காரர்களும், பருப்பூர்க்காரர்களும் மும்முரமாப் போட்டியில் கலந்து தங்கள் தின்பண்டங்களைச் தயாரிக்க ஆரம்பிச்சாங்களாம். முதலில் செய்து முடிக்கிறவங்களுக்கு போனஸ் பொயின்ஸ் கிடைக்கும் என்று தீடீரென மன்னர் அறிவிக்க, உடனடியா உழுந்தூர்க்காரர்கள், "எனக்குத்தான்.. எனக்குத்தான்.. இந்தாங்க உழுந்து வடை" என்று சத்தமாச் சொல்லிட்டு உழுந்துவடையை எடுத்திட்டு மன்னரிடம் போனாங்களாம்.

உடனே சாக்கான பருப்பூர்க்காரனுகள், என்னடா இது என்று பார்க்க, வழக்கம்போல ஒரே மாதிரி வடை சுட்டு இரண்டு பேரும் பரிசைப் பகிர்ந்துக்கலாம் என்ற கொள்ளையை மீறி உழுந்தார்க்காரனுகள் கிரியேட்டிவிட்டியாக யோசிச்சு உழுந்து வடையில் ஓட்டை போட்டு அதன் தொடு மேற்பரப்பைக் கூட்டி சீக்கிரமா வடையைப் பொரிய வச்சு ஜெயித்து தூரோகம் செய்ததால், அன்றிலிருந்து உழுந்தூர்க்காரனுகளை எதிர்க்கும் நோக்கில் பருப்புவடையில் ஓட்டை போடுவதில்லையாம்"

என்று அமைச்சர் பருப்பு சொல்லிமுடிக்க, எங்கேயோ கருகிற வாசனை வர திடுக்கிட்டு எழுந்து பார்த்தா அடுப்பில் ஆசைஆசையாய் உழுந்து வடை சுட்டுச் சாப்பிடலாம் என்ற எனது நினைப்பில் பாழாய்ப்போன அடுப்பு அதிகமாய் எரிந்து வடையை கருக்கி எனது வயிற்றில் மண்ணைப் போட்டிருந்தது.

"ஐயோ வடபோச்சே...."

குடி

பதிவிட்டவர் Bavan | நேரம் 4:31 PM | 16 பின்னூட்டங்கள்
“போடா போய் எடுத்துக்கொண்டு வா, இல்லாட்டி உனக்கு அட்மிசன் தரமுடியாது, டிரக்டரின் குரல் ஓங்கிஒலித்து கட்டிடம் முழுவதும் அதிர்ந்துகொண்டிருந்தது. நூற்றுக்கணக்காணவர்கள் கட்டடத்திற்குள் இருந்தாலும் அவரின் குணமறிந்து யாரும் சத்தமாக பேசவில்லை. அவர் கண்ணாடி அறைக்குள் வைத்துத் திட்டியபோது யாரோ கதவைத் லேசாகத்திறந்திருக்க வேண்டும். நான் திட்டுவாங்கியதை அனைவரும் கேட்டுவிட்டிருந்தார்கள்.
puppy-box
ச்சா.. முதல்நாளே இப்பிடியா, அவமானம் அனைவரின் முன்னிலையிலும், அதுசரி அட்மிசன் வழங்கும் தினத்தன்று ரிசல்ட் சீட்டை கொண்டுவராமல் வந்தால் யாருக்குத்தான் கோபம் வராது.
கல்லூரி, பிரதான வீதியிலிருந்து 4 கிலோமீட்டர் உள்ளே காட்டுப்பகுதியில் இருக்கிறது, வழியில் ஆங்காங்கே ஓரிரு வீடுகள், தண்ணீர் வழிந்தோடும் கான், இரண்டு ஏற்ற இறங்கங்களுடன் கூடிய குண்டுகுழியான பாதை, பாதையோரங்களில் ஓங்கி வளர்ந்த மரங்கள், பஸ் எப்பவாவது வரும் வராவிட்டால் நடந்துதான் செல்லவேண்டும்; நடக்கத் தொடங்கினேன். மழை தூற ஆரம்பித்திருந்தது. ஓடிப்போய் பஸ்தரிப்பிடத்துக்குள் நிற்பதற்குள் மழை எனது நீல சேர்ட்டில் புள்ளிகள் வைத்து விளையாடியிருந்தது.

முழங்கையை தரிப்பிடமதிலில் ஊன்றியபடி அந்த இடத்தை சற்று உற்று நோக்கிக்கொண்டிருந்தேன், எதிரில் ஒரு சிறு சாப்பாட்டுக்கடை, அதற்கு அருகில் போகும் மண்தரையுடன் கூடிய வீதி, “கள்ளுத்தவறணை” என்று பெயர் பொறித்து வீதியின் உள்ளே என அம்புக்குறியிடப்பட்டிருந்த விளம்பரப்பலகை, அதற்கு அருகில் குறுகிய எழுத்தில் என் பார்வைப் பரப்புக்குள் உட்படாமல் வீதியின் பெயர்ப்பலகை, தூரத்தில் மடக்கிய கறுப்புக் குடையுடன் மழையில் நனைந்து தள்ளாடியபடி இருவர்.

எனது கையிலிருந்த ஆவணங்கள் நிறைந்த  பைலை மதில் சுவரில் வைத்து விட்டு கைகளால் தலையைத் துவட்டிவிட்டு, கண்களை இறுக்கி மூடி தலையை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு இமைகளைத் திறக்க, பஸ் தரிப்பிடத்துக்குள் இருப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த சீமெந்துக் கட்டுக்குக்கீழே இரண்டு நாய்க்குட்டிகள் ஒன்றன்மேல் ஒன்று ஏறி குளிரில் நடுங்கியபடி படுத்திருந்தன. பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அந்த தரிப்பிடத்துக்குள் யாரோ கடதாசிப் பெட்டியை பாயாகப் பாவித்து நித்திரை கொண்டிருப்பார்கள் போலும் நன்றாக அழுத்தத்துக்கு உட்பட்டு அயன் பண்ணிய சட்டைபோல் கடதாசிப்பெட்டி ஒன்று தரிப்பிடத்துக்குள் கிடந்தது. அதை எடுத்து விரித்து பெட்டி போல ஆக்கி ஒரு பக்க வாயிலை மூடி மறுபக்க வாயிலை நாய்க்குட்டிகளுக்குக் காட்ட நன்றியுடன் உள்ளே ஏறி வாலாட்டின. எனக்குள் சிரித்துக் கொண்டு பெட்டியை மூடி மழைச்சாறல் படாமல் சீமெந்துக் கட்டுக்குக் கீழே வைத்துவிட்டு நிமிர அந்த இருவரும் உள்ளே வந்துவிட்டிருந்தனர்.

“டேய் நாயே நான் அவ்வளவு சொல்லியும் அவள் எப்படியடா அப்பிடிச் சொல்லலாம்?, முதலாமவர்.
“அவள் செய்தது பிழையே இல்லையடா, நீ குடிகாரப் பயல்தானே பரதேசி, இரண்டாமவர்.
“டேய் உன்னைக் கொல்லாம விடமாட்டன்டா, என்றபடி முதலாமவன் மற்றவன் மேல் பாய அவன் போதையில் தடுமாறு என்மீது விழமுயல இலாவகமாக நழுவி என் பைலை எடுத்துக் கொண்டு வெளியே வர பஸ் என் முன்னாலேயே வந்து நிற்க, ஓடிப்போய் பஸ்சில் பின்பக்கக் கதவின் கம்பியை ஓடிப்பிடித்து ஏறிக்கொண்டேன்,

“சலாக்சுளிங்டொங்…” பின்னால் போத்தல் உடையும் சத்தம் பலமாக் கேட்டது.

****
மறுநாள் கல்லூரியின் முதல்நாள் பாடங்கள் முடிய வழக்கபோல பஸ்சைக் காணவில்லை, நடக்கத் தொடங்கினேன். மீண்டும் மழை, ஓட்டம், ஆனால் இம்முறை பஸ்த்தரிப்பிடவாயில் வரை மட்டுமே சென்ற கால்களுக்கு தடாலடியாக மூளை அனுப்பிய கட்டளையை நடைமுறைப்படுத்த முயன்று இரண்டு துள்ளல்களுடன் கட்டளை நிறைவேற்றிக் கால்கள் நிற்க. உள்ளே கண்ணாடிப்போத்தல் உடைக்கப்பட்ட துகள்கள், பிரவுண் கலரில் சாக்கைப் பிய்த்துப் போட்டாற்போல தும்புதும்பாக ஏதோ ஊகிக்க முடியாத ஒன்று, அத்துடன் வெள்ளை நிறக்கற்கள் மாதிரியும் ஏதோ, கிழித்தெறியப்பட்ட கடதாசிப் பெட்டி, என்ன இது என்று ஊகிப்பதற்குள் மறுபுறம் பற்றைக்குள் நனைந்தபடி தலையிலிருந்து இரத்தம், வடிந்து தசைகள் பிய்ந்து உள்ளே மண்டையோடு தெரிய செத்துக் கிடந்தன நாய்க்குட்டிகள்.
பதிவுலக நண்பர்கள் சிலர் இணைந்து அஞ்சலோட்டமாக எழுதப்படும் கதை. பதிவர் சுபாங்கன் அண்ணாவின் முதல் பகுதிணைப் படிக்காதவர்கள் படித்துவிட்டுத் தொடரவும் – கொலைக்காற்று  பகுதி– 1


கெளதம் ஓடிக்கொண்டிருந்த FORD கார் மாவனெல்லவை அண்மித்துக் கொண்டிருந்தது. கருமுகில்களில் கதிரவனைக் கடூளியச்சிறைவைத்து குளிர்மையை பரப்பிக்கொண்டிருந்த இதமான குளிர் காலநிலைக்கு மயங்கி முன்சீட்டைச் சரித்துவிட்டபடி இரண்டுகைகளாலும் வயிற்றைக் கட்டிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தாள் வர்ஷா. பாதி திறந்திருந்த கார்க்கண்ணாடிக்குள்ளிலிருந்து வந்து கொண்டிருந்த மெல்லிய காற்று அவளின் தலைமுடியை தொட்டு குளிர்காய்ந்துகொண்டிருந்தது. அப்போதுதான் தூற ஆரம்பித்திருந்த மழையும் காற்றோடு போட்டி போட்டு அவள் கன்னத்தில் முத்தமிட ஆரம்பிக்க, சிணுங்கிக்கொண்டே எழும்பியவளின் பார்வையைப் புரிந்து கொண்ட கெளதம் கார்க்கண்ணாடியை முழுவதுமாக மூடிவிட்டு, மழைகுளிரின் பிடியில் அகப்பட்டுத் தூங்கிவிடாமல் இருக்க வீதியில் கவனத்தைச் செலுத்திய படி இடது கையால் ரேடியோவைப் போட்டான் கெளதம்,
 Ford_Fusion_10FusionHybrid_01
“சன்சைன் அப்பார்ட்மண்டில் ஒரு பெண் கொடுரமாகக் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார், கொட்டாஞ்சேனைப் போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டிருப்பதாகவும், கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் ஜெனி, வயது 26 எனவும் அறியவந்துள்ளது……..”
என இரைந்துகொண்டிருந்த வானொலிச் செய்தியைக் கேட்டதும் கீரீச்ச்ச்… என்ற சத்தத்துடன் அண்மையிலேயே சர்வீஸ் செய்யப்பட்டிருந்த காரை நிறுத்தியவனுக்கு வியர்க்கத் தொடங்கியிருந்தது. திடீரென அடிக்கப்பட்ட பிரேக்கில் தூங்கிக்கொண்டிருந்த வர்ஷா முன்னாலிருந்த டாஸ்போர்டில் முட்டிய தலையை தடவிக்கொண்டு உடனடியாக எழுந்தாள். தூங்கிச்சோர்ந்த கண்களுக்குள் ஒரு பதற்றம் குடிகொண்டிருந்தது. கெளதமின் இவ்வாறான கலவரக்கண்களைக் இதுவரை அவள் பார்த்ததில்லை.
“என்னங்க ஆச்சு?
கேள்விக்கு பதிலின்றி வாகனத்தை மீண்டும் ஓட்டத்தொடங்கினான். வீடுவரும்வரை fordடின் என்ஜின் மட்டுமே உறுமிக்கொண்டிருந்தது.

காலிவீதியின் Seaவியூவில் அமைந்திருந்த அழகிய கல்யாணப்பரிசாகக் கிடைத்த மாடி வீட்டின் பிரம்மாண்டமான கறுப்புக் கதவு திறக்க, Ford கொஞ்சம் அதிகரித்த உறுமலுடன் உள்ளே சென்று ஓய்வடைந்தது. வர்ஷா களைப்பு மிகுதியில் வீட்டுக்குச் சென்றதும் போய்ப் படுத்துக்கொண்டாள். கொஞ்சம் பரபரப்பாகவே காணப்பட்ட கெளதம் கைப்பேசி பட்டன்களை விரல்புதைத்துக்கொண்டிருந்தான்.
*************
பச்சைக்கம்பளம் விரிக்கப்பட்ட மேசையில் பேனாமூடி, ஹெயார்கிளிப், தலைமுடி, கைப்பேசி, ஜெனியின் போட்டோ, சம்பவ இடத்திலிருந்த இரத்தத்துளிகளின் போட்டோக்கள், சிகரட் துண்டு, G என்று பென்டன் இடப்பட்ட செயின். அனைத்தையும் வைத்து யோசித்துக் கொண்டிருந்தார் இன்பெக்டர்.
“மே ஐ கம் இன் சேர், கான்ஸ்டபிளின் சத்தம் கேட்டு சுய நினைவுக்கு வந்தவர், வாய்யா  போன் நம்பர் விசியம் என்னாச்சு?
“நேத்து ஈவினிங் 5 மணிக்குப் பிறகு அந்த போன்லயிருந்து ஒரே நம்பருக்கு 3 அவுட்கோயிங் மட்டும் போயிருக்கு சார், அது ஒரு தடவை ஆன்சர் ஆகியிருக்கு கடைசி ரெண்டு தடவையும் நோ ஆன்சர்னு வந்திருக்கு. கோல் ஆன்சரான நம்பர் சேகர் எங்கிற பேர்ல ரெஜிஸ்டர் ஆகியிருக்கு சார். என்று சொல்லிமுடிக்க தொலைபேசி அலறியது.
“ஹலோ Kotahena Polic station,
“சார் நான் கான்டபிள் கதிர்வேலு பேசிறன், பீச்ல ஒரு மேடர் சார்.
“ஓகே நீ அங்கயே இரு உடனே வாறன்.

பீச்சில் இறந்து கிடந்தவனின் கழுத்தில் K.Segar, Software developer. என்று எழுதப்பட்ட அடையாள அட்டை குருதிக்கறையுடன் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது.

எனக்குப்பிறகு இக்கதையை பதிவர் சதீஷ் தொடருவார்

சூதாட்டம்

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:15 PM | 14 பின்னூட்டங்கள்

ஆரவாரங்கள் கூக்குரல்களுக்கு மத்தியிலும் ஹெஸ்மெட்டின் கட்டுப்பாட்டை மீறி காதுக்குப்பின்னால் வளைந்து எட்டிப்பார்க்கும் முடியில் பட்டு வீசிய மெல்லிய காற்றின் ஓசை சலனத்தையும் பயத்தையும் ஏற்படத்திக்கொண்டிருந்தது. ரொஜர் மீண்டும் ஒரு முறை ஸ்கோர் போர்ட்டைக் கவனித்துக் கொண்டான். பிக்பைட்டர்ஸ் கிளப் 9 பந்துகளில் 14 ஓட்டங்கள் பெற வேண்டும். மீண்டும் லெக்ஸ்டம்ப் கேட்டான், கிறீசை விட்டு இரண்டு ஸ்டெப் முன்னால் நின்று கொண்டான்.

 hook

பந்துவீச்சாளர் ரன்அப்பைத் தொடங்கியிருந்தார். கமோன் ரொஜார் கமோன்.. என்ற ஆரவாரங்கள், அடிக்கமாட்டான் ஈசி ஈசிபாட்ஸ்மன் என்ற கீப்பரின் வார்த்தைகள் என எதுவுமே அவனுக்கு கேட்கவில்லை பந்து சோர்ட் பிச்சில் குத்தி அப்படியே இடது காதைப் பதம்பார்ப்பது போல வந்து கொண்டிருந்தது. உடனே பக்புட் போய் பந்தை ஹீக் சொட்டை அடிக்க முயல பந்து அப்படியே எட்ஜ் ஆகி கீப்பரின் தலைக்கு மேலாகச் சென்று ஹீரோஹொண்டா விளம்பரப்பலகையை முத்தமிட்டு நின்றது.

எட்ஜாகிப்போன பந்தை பார்த்துவிட்டுத் திரும்ப மழைபொழிய ஆரம்பிக்க அம்பயர் ஹவர் கவரை உள்ளே அழைத்து பிட்சை மூடச் சொல்லவும் சரியாக இருந்தது. 8 பந்துகளில் 8 ஓட்டங்கள் அடிக்க வேண்டும். அணி 9 விக்கட்டுகளை இழந்திருந்தது. Batஐ மழைநீர் படாமல் கக்கத்துக்குள் பதுக்கியபடி பிளேயர்ஸ் ரூமுக்கு ஓடினான் ரொஜர்.

 

அங்கு மாடியிலிருந்த washroomக்குப் போய் முகம் கழுவிக்கொண்டிருந்தான்,

“ரொஜர்..

குரல் கேட்டுத் திரும்பியவனுக்கு முன்னால் கறுப்பு கோர்ட், கூலிங் கிளாஸ், பாலிஸ் போடப்பட்ட shoes, ரெட் கலர் டை மற்றும் கையில் i phoneன் சகிதம் ஒரு ஆசாமி நின்று கொண்டிருந்தான்.

“நீங்க??

“ஐம் ஜிம்ரோனி, இனோவேட்டிவ் ரொபாட்டிக்ஸ் கம்பனி ஓனர்.

“சொல்லுங்க என்ன விசயம்?

i phoneஐ தட்டி என்னமோ காட்டினான், ரொஜர் பேச முயற்சித்தபோதெல்லாம் பேசவிடவில்லை. கடைசியாகக்கேட்டான்.

“2லாக்ஸ் US டாலர்ஸ் வேர்த் டீலா? நோ டீலா?

“புன்னகையுடன் ஓகே என்று சொல்லிவிட்டு கீழே வர மழை விட்டிருந்தது.

8 பந்துகளுக்கு 8 ஓட்டம். முதலாவது பந்தை dot பண்ணி அடுத்த பந்தில் ஸ்ரைக்கை கீப் பண்ணவேண்டும். பிறகு ஆறு பந்துகளையும் எப்படியாவது மிஸ் பண்ணுவது போல் நடித்துவிட்டால் போதும். மனது பல கணிப்புகளை இட்டுக்கொண்டிருந்தது.

நினைத்ததைப்போலவே குட்லெந்தில் விழுந்து அவுட்சுவிங் ஆன பந்தை லீவ் பண்ணினான். கடைசிப் பந்துக்கு சிங்கிள் எடுத்தும்விட்டான். இப்போது 6 பந்துகளுக்கு 7 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று மாறியிருந்தது.

சமீர் பந்து வீச தயாராகிக்கொண்டிருந்தான், இடதுகை வேகப்பந்து வீச்சாளன், ரிச்சர்ட்ஸ் கிளப்பின் பிரதான பந்துவீச்சாளன். முதலாவது பந்து ஓஃபில் Full லெந்தில் விழுந்தது சிங்கிள் கூட எடுக்காமல் தடுத்தாடினான் ரொஜர்.

இப்போது ஸ்கோர்போர்ட் 5 பந்துகளுக்கு7 ஓட்டம் என்று காட்டிக்கொண்டிருந்தது. இப்போது இரண்டு ஸ்லிப் பீல்டர்ஸ் போடப்பட்டனர், பைஃன் லெக் சேக்கிளுக்குள் வரவழைக்கப்பட்டது. குட்லெந்தில் விழுந்த பந்தை தடுத்தாட முயன்ற ரொஜருக்கு போக்குக்காட்டி பந்து இன்சையிட் எட்ஜில் 4 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தது.

 

4 பந்துகளுக்கு 3 ஓட்டம் பெறவேண்டும், மைதானம் ஆரவாரத்தில் முழ்கியிருந்தது. போட்டியில் பிக்பைட்டர்ஸ் ரசிகர்கள் வெற்றியை உறுதி செய்து கரகோசத்தில் மூழ்கியிருந்தனர். அடுத்த பந்தை dotball ஆக்கிவிட்டான் ரொஜர். இப்போது ரிச்சர்ட்ஸ் கிளப்பின் ஆரவாரம் சற்று அதிகரித்துக்கொண்டிருந்தது.

 

கடைசிப் 3 பந்துகளுக்கு 3 ஓட்டம் எடுத்தால் வெற்றி, அனைத்து பீல்டர்சும் சேக்கிளுக்குள் காணப்பட்டனர். கீப்பர் ஹெல்மெட்டை அணிந்துகொண்டு விக்கட்டுக்கு அருகில் வந்து நின்று கொண்டிருந்தார். சமீர் களத்தடுப்பை சரி செய்ய சற்று நேரம் எடுத்துக்கொண்டான், அனைவரின் முகத்திலும் ஒரு இனம்புரியா கலவரம் தொற்றிக்கொண்டிருந்தது. ரொஜரின் மனது இந்தப்பந்தை மூவ்  பண்ணி அடிப்பது ச்சா அடிப்பது போல நடிப்பது என்று தீர்மானித்துக்கொண்டிருந்தது. சமீர் ரன்அப்பை ஆரம்பிக்க இரண்டு ஸ்டெப் முன்னால் வைத்து கிறீசை விட்டு வெளியே வந்தான், சமீரின் கையிலிருந்து பந்து வெளியேறிய மறுகணம் இன்னும் இரண்டு ஸ்டெப் முன்னால் பாய்ந்தவனைத் தாண்டிய பந்தை அடிப்பது போல் சைகை காட்ட பந்து பவுன்சாகி கீப்பரின் தலைக்கு மேலாக எல்லைக்கோட்டைத் தாண்டிக்கொண்டிருந்தது. அம்பயர் bye+4 என்று சைகைகாட்டிக்கொண்டிருந்தார். ஆதரவாளர்களின் கூச்சலுக்கு மத்தியில் சக அணியினரின் தழுவலில் சிக்கிய ரொஜரின் முகம் போலிப்புன்னகையை உதிர்ந்துகொண்டிருந்தது.

 

அம்பயரிடமிருந்து தொப்பியை வாங்கிய சமீர் கீப்பரைப்பார்த்து அர்த்தத்துடன் தலையை ஆட்டி புன்னகைத்தான்.

கூல்போய் கிருத்திகன் அண்ணா ஆரம்பித்து வைத்த குறும்படவைபோகமே ஏற்படுத்திய தாக்கத்தால்(அல்லது மொக்கையால்) இந்தப்பதிவு.

குறும்பட வைபோகமே-1

***

run-finalist-rialto-channe

Yamaha SZ பைக் ஒன்று சீறிப்பாய்ந்து வந்து பதிவர்கள் அனைவரும் கூடியிருந்த இடத்துக்கு பத்தடி தள்ளி நின்றது. தனது தொலைபேசியில் பில்லா தீம் மியூசிக்கைப் போட்டபடி கையில் கமரா பாக்குடன் ஒரு கறுப்பு ஆடையணிந்த உருவம் பைக்குக்கு பின்னாலிருந்து இறங்கி நடக்கத் தொடங்கியது. திடீரென..

 

“குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்….” பில்லா மியூசிக் நின்று அவரின் அலைபேசி அடிக்கத் தொடங்கியது, “கட் கட் கட்…. அடேய் சுபாங்கன் போஃனை ஓஃப் பண்ணிவைக்கச்சொன்னா ஏன்டா இப்பிடிப்பண்ணுறீங்க.. ஜனா அண்ணாவின் குரல் பலமாக ஒலித்துக்கொண்டிருந்தது.

 

உங்களுக்கு இந்த சீன் பத்தாதுடா.. வேற.. வேற… சதீஸ் அண்ணா பக்கத்திலிருந்த மரத்தில் ஏறி வீஜய் ஸ்டைலில் ஏஏஏஏஏய்ய்ய்ய்… என்று குதித்துக்கொண்டிருந்தார்..:P

 

சரி இப்பிடிச் செய்யலாம் ஆளுக்கு ஒரு சீன் சொல்லுங்க எல்லாத்தையும் சேர்த்து ஒரு படமாக்கலாம். முதல்ல கன்கொன் நீ சொல்லப்பா.. –ஜனா அண்ணா

 

ஹிஹிஹிஹி… 5 நிமிட சிரிப்புக்குப்பிறகு ஹீரோ வந்து ஒரு கிறிக்கட் வீரன் பின்தங்கிய கிராமத்தில இருந்து வசதி குறைந்த குடும்பத்தில பிறந்து நசனல் டீம் செல்க்ட் ஆகிறான். ஆனா கொழும்பில வந்து தங்கியிருக்க இடமில்ல, அப்ப…

 

லோஷன் அண்ணா – டேய் டேய் நிப்பாட்டு இது சனத்ஜயசூர்யவின்ட கதை மாதிரிக்கிடக்கு.. சரி இனி நான் சொல்லுறன். அவனுக்கு இரவு தங்க இடமில்ல அவன் வீதியால் நடந்து போய்க்கொண்டே இருக்கிறான். இதையே ஒரு 5 நிமிசம் காட்டலாம்தானே..

 

சரி அடுத்தது புல்லட் சொல்லுங்கோ என்றார் ஜனா அண்ணா,

வெல்.. அவன் போகிறான் போற வழியில ஒரு போஸ்டரைப்பாக்கிறான் அப்பிடியே வாயப்பிளந்து பாத்துக்கொண்டு நிக்கிறான்.. எதிரிலிருக்கிற போஸ்டரில ககூனமடாட்டா எண்டு எழுதிக்கிடக்கு, உடனே பிளாஸ்பக்கிக்கு போறான் அதில இவனுக்கு 7 வயசு, அருள்பிரகாசத்திண்ட அஞ்சு வயசு மகள் அஞ்சலிய மடக்க அவை வீட்டுக்கு லயன்கிங் பாக்கப்போன ஞாபகங்கள் தாலாட்டுது.

 

ஓகே இன்டர்ஸ்டிங், நெக்ஸ்ட் அனுதினன்,

ஆங்.. அப்பிடியே இன்னும் ரெண்டு வருசம் பின்னால போறான், அப்ப அஞ்சலிக்கு 3 வயசு இவனுக்கு 5 வயசு ரெயினில கண்டிக்கு போறான் ரெண்டு பேரின்ட அம்மா அப்பா எல்லாரும் நித்திரை கொண்டுட்டாங்கள், அப்ப ஒரு பாட்டு பக்கிரவுண்டில போகுது.. ம்ம்.. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையப் போடலாம்..

 

அடேய் ஐயா சாமி ஆள விடுபோதும் அடுத்து…. ஆதிரை அண்ணா கையை உயர்த்தி நான் நான் எண்டார், சரி சொல்லுங்கோ அண்ணே..

அவன் போஸ்டரைப்பாத்து ஆ எண்டு வாயப்பிளந்து கொண்டிருக்க பக்கத்துக்குக்கானுக்குள் பாய்த்தோடிய எலி சிறு கிலியை ஏற்படுத்தி மறைந்தது. தற்போது மீ்ண்டும் நடக்கத் தொடங்கிறான் கோல்ரோட்டால் போகிறான் போகிறான் போய்க்கொண்டே இருக்கிறான்.

 

அட.. போய்க்கொண்டே இருந்தா கதையில ஒரு டேர்னிங் பொயின்டே இல்லையே.. என பவன் சொல்ல..

இப்ப உனக்கென்ன டேர்னிங் பொயின்ட்தானே வேணும் போற வழியில பிளீஸ் டேக் டைவர்சன் எண்டு ஒரு போர்ட் வச்சிடுவோம் எப்பிடி – கிருத்திகன்

 

ம.தி.சுதா – அப்ப அண்ணே இவன் போர்ட்டைப்பார்த்து திரும்பிப் போக முயல அடித்த காற்றில் ஒரு பேப்பர் கையில் வந்து மாட்டுப்படுகிறது. அதில் குற்றப்புலனாய்வுப் பிரிவின் இலட்சினையுடன் கூடிய ஒரு ரிப்போட், சூதாட்டம் விளையாடிய கிறிக்கட் விரர்களின் பட்டியல் காணப்படுகிறது. உடனே கிறிக்கட் விளையாடுறதை விட இதை வச்சு காசு சம்பாதிக்கலாம் சம்பாதிச்சு அஞ்சலியையும் கைப்பிடிக்கலாம் என்று கனவுக்கோட்டையைக் கட்டுறான். அப்ப இந்தக் கவிதையப்போடிறம்.

 

நீயும் நானும்

தண்டவாளம் போல் தான்

அன்று சந்தித்துக்கொண்டோம்

விபத்து என்று சொன்னார்கள்

எமக்கா எம் எதிர்காலத்துக்கா

தெரியவில்லை

 

சதீஸ் அண்ணா - உடனே அவன் தன்ட மொபைல எடுத்து பேஸ்புக்கில ஸ்டட்டஸ் போடுறான், “I’m going to be rich soon, அமேரிக்கா சிட்டிசனாகப்போறேன், நியூயோர்க்கில் வீடு கட்டப்போறேன்” இதையும் சேர்த்துக்கொள்ளுங்க அண்ணே…

 

பவன் - பிறகு அணியில் இடம்கிடைத்து விளையாடி வருகிறான், பெரிதாகப் பிரகாசிக்காவிட்டாலும் அவனை அணியிலிருந்து தூக்க முடியாமல் மூத்தவீரர்களை புலனாய்வு அறிக்கையைக் குடுத்து செட்டாக்கி வைத்திருந்தான். போட்டியில் நோபோல் போட்டு அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி ஸ்கொட்லான்ட் யார்ட் போலீஸ் இவனுக்கு வலைவிரித்து அறிக்கை சமர்ப்பிக்கிறது. அதில் முக்கிய ஆதாரம் பேஸ்புக்கில் இவன் போட்ட இந்த ஸ்டேட்டஸ்…

ஓவருக்கு பணம் தருகிறது SLC உதிரிகளுக்கு பணக்கொடுக்கிறாய் நீ

 P

 

வந்தியண்ணா – பிறகென்ன தான் ஊரிலிருந்து வரும் போது கொண்டு வந்த அன்புக்காதலி ஆசையாய் பரிசளித்த சிரட்டையில் செய்த வயலினில் எங்கே செல்லும் இந்தப்பாதை யாரோ யாரோ அறிவாரோ… என்று வாசித்துக்கொண்டு மீண்டும் நடையைக்கட்டினான் ஊருக்கு.

 

ஜனா அண்ணா - வாவ் கலக்கல் கதை பிரன்ட்ஸ்.. கடைசியில் நான் சொல்லிறதையும் போடோணும் அது ரைரக்டர் டச்சு ஓகே..

 

பந்தும் போடாது விக்கட்னினுள்ளும் படாது
நல் ஆன் தீம் பால்(BALL) வைட்கோட் உக்கா

செல்வதுவோ

என்ற இலக்கியப்பாடலுக்கு மதுயிசவிளக்கத்துடன் கதை முடிவடைகிறது.

 

அப்பாடா ஒரு மாதிரிக் கதையெழுதியாச்சு தயாரிப்பாளர் யாரு? என்றமாதிரி அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க கையில் கூலிங் கிளாசை சுத்தியபடி வந்து சேர்ந்தார் வதீஸ் அண்ணா…:P

 

பி.கு – முற்றிலும் மொக்கை, நகைச்சுவையாக மட்டுமே கருதுங்கள்…:D

சிலரை இணைக்க (கும்ம) முடியவில்லை என்பதால் அடுத்த குறும்படத்தில் அவர்களுக்கு ஸ்பெசஸ் பாத்திரம் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்..:P

கவிதை
சில நேரங்களில் அவள்
உள்ளங்கையில்உயிர் வாழ்கிறாய்.
சில நேரம் அவள் கன்னத்தை வருடுகிறாய்.
அப்புறம்அவள் உதட்டையே ஒத்திப் பார்க்கிறாய்.
கடைசியில்அவள்
இடையில் ஊஞ்சலாடிஓய்வெடுக்கிறாய்
கைகுட்டையே...
நீ குட்டியூண்டு துணி என்றாலும்
கொடுத்து வைத்த துணி.
-தபு சங்கர்

***

GOOGLE BUZZசில் கண்ட ஒரு கதை(:P)
நீதிக்கதை:
நேற்று மாலை
நான் ரோட்டில்
நடந்து கொண்டிருந்த நேரம்.
சாலையில் யாரும்
இல்லை.
திடீரென மழை
சோ என்று பெய்ய ஆரம்பித்தது.
அப்போது,
ஒரு இளம்பெண்
என்னருகில் வந்து சொன்னாள்.
"வா...
என் குடைக்குள் வா
என்னுடன்...!".
நான் மிகுந்த கனிவுடன்
அவளைப் பார்த்துச் சொன்னேன்.
"பரவாயில்லை சகோதரி...
நான் நனைந்து கொண்டே செல்கிறேன்...!".

நீதி:  'நீதியெல்லாம் ஒண்ணுமில்லை... அது ஒரு சப்ப ஃபிகரு...!

***

வீடியோ
http://www.youtube.com/tippexperience
இந்த வீடியோவில் குறிப்பிடப்படுவது போல செய்து பாருங்கள்.
அதில் அழிக்கப்பட்ட இடத்தில் எமக்கு விரும்பிய வார்த்தையை டைப் செய்ய அதே செயலைச்செய்யும் வீடியோ ஒளிபரப்பாகும். செய்துதான் பாருங்களேன்.

***
போட்டோ மண்ட்டு
4 1 இந்தப்படத்துக்கு உங்க எது சரியா வருது, OPTIONகளிலிருந்து தெரிவு செய்யுங்க பார்க்கலாம்?
2
0
அன்புள்ள சந்தியா இப்போது அனைவரையும் போட்டுத்தாக்கிக்கொண்டிரக்கிறாள். சுபாங்கன் அண்ணா ஆரம்பித்த சந்தியா லோஷன் அண்ணாவிடம் போய் ஜனா அண்ணா வழியாக தற்போது என்னிடம்.
முன் பகுதிகளைப் படிக்காதவர்கள் அவற்றைப் படித்துவிட்டு தொடருங்கள்.
கதையின் முதற்பாகத்திற்கு இங்கே
இரண்டாம் பாகத்திற்கு இங்கே
மூன்றாம் பாகத்திற்கு இங்கே
TS PHOTO Love Story wip sss crop 9-1208 rha090_2843

நித்திரையில் கட்டிலிலிருந்து கீழே விழுந்தவன். கண்விழித்த போது வெளியே ஹாலில் பெரியம்மாவின் குடும்பத்தினரின் கலகலப்புக்குரல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது. எதிரிலே தம்பி இவன் விழுந்ததைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். பாத்ரூமுக்குள் புகுந்து கதைவை அடைத்துக்கொண்டான்.
***
கதவை அடைத்தார் கண்டக்டர், பஸ் புறப்படத்தொடங்கியது. அதே ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தான். கை விரல்கள் நெற்றியை வருடிக்கொண்டிருந்தன, காதில் “அன்புள்ள சந்தியா.. என்று கார்த்திக் இவனுக்காக உருகிக்கொண்டிருந்தார்.

“அடடே தம்பி,
எங்கேயோ கேட்ட குரல், திரும்பினால் இவனுடன் பயணித்த 7க்கு 2 நியூமராலிஜி சொன்ன அதே மனிதர்.
“ஹலோ சேர், என்றான்
“கடவுள் இருக்கிறாரா? இல்லையா? கண்டுபிடிச்சீங்களா?
"கஷ்டப்பட்டு ஒரு புன்னகையை பரிசளித்தான்.
மீண்டும் சந்தியா அவனை அணைத்துக்கொண்டாள் கார்த்திக்கின் குரலில்..

கொழும்பின் வாகன இரைச்சல் அவனை எழுப்பிவிட்டிருந்தது. கார்த்திக் பட்டரி தீர்ந்து ஓய்வடுத்துக்கொண்டிருந்தார். கால்கள் அவனது ரூமை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. முதன்முறையாக வீதியைக் கவனிப்பதை மறந்திருந்தான். பழக்கப்பட்ட வழியில் கால்கள் ரூமுக்கு கொண்டு சேர்த்தன. சந்தியாவுடன் மீண்டும் நினைவுகளைப் பகிர அலைபேசியை சார்ஜில் போட்டு ஒன் பண்ணியவனின் அலைபேசி விடாமல் கீச்சிட்டது
you have 5 missed calls from 077xxxxxxx

உடனே அவளுக்கு அழைப்பெடுத்தவனுக்கு “சுதா. என்ற அந்த மெல்லிய குரல் புத்துணர்ச்சியை அளித்தது.
“அழகுக்குக் காரணம் நான்தான் சண்டைபோடுகிறது உன் குரலும், கண்களும்” என்று ஏதேதோ கவிதைகள் மனதில் தோன்றி மறைந்துகொண்டிருந்தன. அனைத்தையும் மீறி “இயஸ் சந்தியா.. என்றான்.
“என்ன சுதா நீங்க நாளைக்கு கல்யாணம் நீங்க இன்னிக்கே வந்திருக்க வேணாமா? கொஞ்சலாகக் கேட்டாள்.
வீட்டு அட்ரசை வாங்கிக்கொண்டவன் உடனடியாக குளித்து, பைக்கை உதைத்துக்கொண்டு கிளம்பியவனுக்கு சந்தியாவின் வீட்டை வாயில் வாழைமரங்கள் அடையாளம் காட்டிக்கொணடடிருந்தன. உள்ளே நுழைந்தவனின் கண்கள் அவளைத் தேடி அலை பாய்ந்துகொண்டிருந்தன. அதோ பிங்க் கலரில் ஆரஞ்சு போர்டரில் பட்டுச்சாரி, கையில் அதற்கு மட்சிங்காக வளையல்,மெல்லிய நெற்றிச்சுட்டி கையில் மெஹந்தி தேவதை போல் இல்லை இல்லை அதைவிட உயர்ந்த வார்த்தைகள் வேண்டும் அதை வர்ணிக்க… அப்பப்பா.. என்று கண்வெட்டாமல் பார்த்துக் வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவனை கூல்ரிங்ஸ் என்ற குரல் நினைவுக்குக் கொண்டு வந்தது.
கூல்ரிங்சை பெற்றுக்கொண்டு நிமிர எதிரில் சந்தியா வந்து நிற்க சரியாக இருந்தது.
“ஹாய் சுதா.. அம்மா வரலயா?, இல்லை என்பது போல் தலையசைத்தான்.
“ஐ வோன்ட் டு இன்டடியூஸ் சம்ஒன் டு யு சுதா.. என்றவள், அவனது கையைப்பற்றி இழுத்துக்கொண்டு போனாள். பூக்களுக்கு இவ்வளவு பலமா என் முரட்டுக்கையையே இழுக்கிறதே? அதிசயித்தான். அவளது கையின் குளிர்ச்சி இவன் உடலை சூடாக்கிக்கொண்டிருந்தது. “என் உடல் எரிந்தாலும் பரவாயில்லை உன் கையை விட்டுவிடாதே” மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.

முதுகுப்புறத்தை காட்டி அரட்டையில் ஈடுபட்டிருந்த அந்த மனிதரைத் அழைத்தாள் திரும்பியவர் சுதாவைக் கண்டதும்…

“ஹலோ தம்பி வட் எ சப்ரைஸ்..” என்ன ஆச்சர்யம் அதே பேரூந்து மனிதர்.
“ஹலோ சேர், கண்டுபிடித்துவிட்டேன் கடவுள் இருக்கிறார்” என்றான்
அவருக்குப் பின்னால் இருந்த சிவா weds மஹதி என்ற போர்ட் சுதாவின் கண்களை அலங்கரித்துக்கொண்டிருந்தன.

நிலாக்காதல் - 2

பதிவிட்டவர் Bavan | நேரம் 4:44 PM | 14 பின்னூட்டங்கள்
வந்தியண்ணாவின் கதையைத் தொடர்ந்து அக்கதையை எழுத என்னை அழைத்திருந்தார். வந்தியண்ணாக்கு நன்றிகள்.
பகுதி –1 ஐப்படிக்க இங்கே சொடுக்குங்கள்
 
ஹரீசுக்கு மாவட்ட மட்ட கிறிக்கட் அணியில் இடம் கிடைத்தது. முதல் நாள் பயிற்சி. மைதானத்தில் வோர்ம் அப்புக்காக மற்ற அண்ணன்களுடன் சேர்ந்து ஓடிக்கொண்டிருந்தான். அப்போது ஒரு விசில் சத்தம்,
“கமோன் காய்ஸ்…”  தேவா மாஸ்டர்.

ஒரு குற்ற உணர்ச்சியுடனேயே அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான். அவள் அந்த சம்பவத்துக்குப்பிறகு இவனுடன் பேசியதே இல்லை. ஒரு வேளை இவரிடம் சொல்லியிருப்பாளோ? இவர் ஏன் என்னிடம் ஒன்றுமே கேட்கவில்லை? மனதுக்குள் பல ஊகிப்பு முட்கள் குத்திக் குடைந்துகொண்டிருந்தன. புல்டொஸ் பந்துக்கே மூன்று முறை விக்கெட்டைப் பறிகொடுத்தான்.

பயிற்சி முடிந்தது. தேவா மாஸ்டர் “தம்பி ஹரீஸ்…
நான்கு காலடிகளை வைப்பதற்குள் நாற்பது ஊகிப்பு முட்கள் மீண்டும் குடையத் தொடங்கின. “சேர்?”
“நாளைக்கு காலம வரேக்க வீட்டை வந்து பந்தை எடுத்துக்கொண்டு போக முடியுமோ”
“ஓம் சேர்”

மறுநாள் காலை, பழக்கப்படாத முகத்தைக்கண்ட லைக்கா குரைத்துத்தள்ளிக்கொண்டிருந்தது. ஹேய்..ஸ்ஸ்சு.. “தம்பி ஒரு நிமிசம் நிக்கட்டாம் வாறாராம்” தேவா மாஸ்டரின் மனைவி.
“சரி அன்ரி”
அவள் உள்ளே சென்றாள், இப்போது லைக்கா குரைப்பதை நிறுத்தியிருந்தது. லைக்காவைப்பார்த்து முறைத்தான், வவ் வவ் என்று குரைத்தான்.. அப்படிப்பல பகீரதப்பிரயத்தனங்களை மேற்கொண்டான் அவள் வீட்டில் இருக்கிறாளா என்று அறிய. லைக்கா எஜமானுக்குக் கட்டுப்பட்டு வாலை ஆட்டிக்விட்டு வீட்டுக்குள் பாய்ந்து ஓடியது.

பீட்டர்சன் லேனால் திரும்பிய போது குறுக்கே பாய்ந்த நாயைக் காப்பாற்ற போட்ட சடுன் பிரேக்கில் நிகழ்காலத்துக்குத்திரும்பியவனின் பைக் என்ஜின் நின்று போயிருந்தது. இரண்டு உதையில் மீண்டும் பைக் மைதானத்துக்கு பறந்தது.
“மச்சான் நீ பட்டிங்”  என்றான் சந்தோஷ்.
சந்தோஷ் இவன்தான் பாடசாலைக்காலத்தில் இவனது எதிரணியில் விளையாடியவன். நல்ல பெளலர், பல்கலைக்கழக அணியில் ஒரே அணியில் விளையாடியவர்கள். இன்னும் சொல்லப்போனால் லாவண்யாவின் எதிர் வீட்டுக்காரன். லாவண்யாவின் வகுப்பு நேரங்கள் தொடக்கம் அவள் வீட்டுக்கு வெளியே வரும் நேரம் உள்ளே போகும் நேரம் என அனைத்தையும் அறிந்து சொல்லும் ஸ்பை இவன்தான். இப்போது தேவா மாஸ்டரின் மகள் யாழில் மெடிசின் முடிச்சு ஏதோ வெளிநாட்டுக்கு ட்ரெயினிங் போயிருக்கிறாளாம் என்று சந்தோஷின் அம்மா சொன்னதாக சந்தோஷ் அவனிடம் சொல்லியிருந்தான்.

கருமுகில்கள் சூழ்ந்து மைதானத்தில் மழையாக குதித்து விளையாட ஆரம்பித்திருந்தன. மைதானத்தில் கிடந்த அனைவரின் செல்பேசிகளை எடுத்துக்கொண்டு ஹரீஸ் பவிலியனுக்கு ஓடினான்.
“அடடா மழைடா அடை மழைடா..” ஹரீசின் கையிலிருந்த சந்தோஷின் அலைபேசி அடிக்கத் தொடங்கியது…
தொலைபேசி ஸ்கிரீனில்…
Lavanya calling..
+44 020 7xxx xxxx


சுபாங்கன் அண்ணாவின் நிலாக்காதல் பகுதி-3
கன்கொனின் நிலாக்காதல் பகுதி- 4
ஆதிரை அண்ணாவின் நிலாக்காதல் பகுதி-5 
லோஷன் அண்ணாவின் நிலாக்காதல் பகுதி-6 

பயம்

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:19 AM | 19 பின்னூட்டங்கள்
இரவு நேரப்பூச்சிகளின் கதறல் சற்றுப்பயத்தை உண்டாக்கினாலும் ஏதோ ஒரு தைரியத்துடன் சீட்டில் அமர்ந்துவிட்டேன். ரயில் புறப்பட்டு கொஞ்சத்தூரம் போயிருக்கும். வெளியே ஜன்னலைத்திறக்கிறேன் கும்மிருட்டு. தொலைவில் வீதியிருப்பதைக்காட்டும் வகையில் ஒரு வீதிவிளக்கு ஒளிர்ந்துகொண்டிருந்தது. திடீரென அந்த விளக்கும் அணைந்துவிட்டது. அட மின்வெட்டாக இருக்கும். தற்போது வெளிச்சமாகச் செல்வது எமது புகைவண்டி மட்டும்தான். வெள்ளைக்காரன் போட்டுத்தந்த பாதையில் தடையின்றிப்போய்க்கொண்டிருந்தது புகையிரதம்.


ஆர்முடுகலுடன் வேகத்தை அதிகரித்துக்கொண்டு சென்றுகொண்டிருந்த புகையிரதம். திடீரென சடுதியான அமர்முடுகலுடன் செல்ல ஆரம்பித்தது. ஏதாவது STATION வருகிறதா என்று தலையை வெளியே எட்டிப்பார்க்கிறேன். கண்ணுக்கெட்டிய தூரத்தில் ராட்சத உருவம் போல நட்சத்திர ஒளியில் மரங்கள் கறுப்பாய்த்தெரிந்தன. வண்டி நிறுத்தப்படுகிறது. எழுந்து பார்க்கிறேன். அடுத்தகணம் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது, என்ன கொடுமை நானிருந்த பெட்டியில் யாரையும் காணவில்லை, அடக்கடவுளே என்ன நடக்கிறது இங்கே? ஒன்றுமே புரியவில்லை கீழே இறங்கிப்பார்க்கலாம். பயமாகத்தான் இருக்கிறது. ஆம் இறங்கிப்பார்ப்பதுதான் சரி. இப்போது இறங்கி விட்டேன். வலதுகை ரயிலின் இறங்குமிடத்திலிருக்கும் கம்பியிலிருந்து விடுபட்டதும் ஏதோ ஒரு வெறுமையான உணர்வு பக்கத்தில் பயத்தைத்தவிர துணைக்கு யாருமின்றி தனியேநிற்பதுபோல, படக்கெனத்திரும்புகிறேன் ரயிலைக்காணவில்லை.


என்னகொடுமை இது திடீரென ஒரு சத்தம் "நகிர்தனா நகிர்தனா", அட எனது தொலைபேசிக்கு பேஸ்புக்கிலிருந்து பிரைவேட் மசேச் அனுப்பிருக்கிறார்கள். கும்மிருட்டு, கண்ணுக்கெட்டிய தூரத்தில் யாருமில்லை. அந்த இடத்திலிருந்து விரைவாக ஓடிப்போகவேண்டும் போல இருக்கிறது, ஆனால் மெதுவாக நடக்கும் போது கேட்கும் எனது காலடித்தடமே எனக்கு பயத்தை விளைவிக்கிறது. எத்தனையோ படங்களில் பார்த்த காட்சிகள், கேட்ட சத்தங்கள் போல இருக்கிறது. நீ தைரியசாலிடா பவன் எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் போது அந்தப்பயத்திலும் சிரித்துக்கொள்கிறேன் மனதுக்குள். தூரத்தில் ஒரு ஒளி இருட்டுக்குள் கிடக்கும் கைத்தொலைபேசி போல தென்படுகிறது. அதைப்பார்த்து மனதுக்குள் ஒரு தைரியம் வந்தது போல ஒரு உணர்வு பயமும்தான். ஆம் நெருங்க நெருங்க வெளிச்சம் அதிகரிப்பது போல ஒரு உணர்வு. பக்கத்தில் வந்துவிட்டேன், நீலநிறகல் போல இருக்கிறது. ஆமாம் கல்லேதான் ஆனால் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. எப்படி?


முன்பொருமுறை எங்கோ படித்திருக்கிறேன், ராஜநாகங்கள் இப்படி விஷத்தைத்திரட்டி கல்லைக்கக்குமாம். அது நீலநிறத்தில் ஒளிருமாம் என்றெல்லாம். அப்போது அது கதைதான் உண்மையல்ல என்று நினைத்திருந்தேன். அப்போது அது உண்மையா? இங்கே பாம்புகள் இருக்குமோ? கும்மிருட்டு தற்போது எனக்கு நண்பனாகியிருந்தது. நான் வந்த ரயிலைக்காணவில்லை, ரயிலிருந்த ஆட்களைக்காவில்லை. என்ன நடந்திருக்கும் அமானுஸ்யம் என்ற ஒன்று இல்லை என்ற எனது எண்ணத்தில் மண்வாரி இறைக்கப்பட்டுவிடுமோ?


ஓங்கி வளர்ந்திருந்த பற்றைப்புற்களில் உரசிச்செல்லும் மெல்லிய காற்று இதயத்துடிப்பை அதிகரித்துக்கொண்டிருந்தது. தூரத்தில் ஒரு குரல் என்னை அழைப்பது போல இருந்தது. திரும்பலாமா? பயமாக இருந்தது, மீண்டும் அக்குரல் இப்போது சற்று அழுத்தமான "தம்பி..."..


இப்போது திரும்பலாம் என்று நினைத்தபோது தோளில் யாரோ கைவைத்தார்கள். அதிரினலின் அதிவேகமாகச்சுரந்து கைகாலெல்லாம் நடுக்கம் ஏற்பட்டு மூளையிலிருந்து வாய்க்கு கத்து என்று கட்டளை கணப்பொழுதில் போய்ச்சேர....


ஆஆஆஆஆஆ......................கத்திவிட்டேன். எதிரில் நின்றிருந்த டிக்கெட் செக்கர் பயந்து வெலவெலத்துப்போய் நின்றுகொண்டிருந்தார். அடச்சா கனவா என்றபடி டிக்கெட்டைக்கொடுத்துவிட்டு கத்தும்போது தவறிவிழுந்த சுஜாதாவின் கொலையுதிர்காலத்தை எடுத்து மீண்டும் வாசிக்கத்தொடங்கினேன்.
காதுக்கும் காற்சட்டைப் பொக்கற்றுக்கும் கனக்சன் கொடுத்து உடலுக்கும் டீ-சேட்க்கும் நடுவால் ஊடுருவி காதுக்குள் ஸ்டீரியோ ஹெட்செட்டில் "ஒரு தேவதை பார்க்கும் நேரமிது" என்ற பாட்டு ஆரம்பிக்க அதற்கு ஏற்றாற்போல எதிரே அவள் வெள்ளைச்சுடிதாரில் வந்துகொண்டிருந்தாள்.
இதயமே....... ஓ…..
இவளிடம்...... ஓ…..
உருகுதே....... ஓ…..
யுவனின் இசையில் ரூப்குமாரின் உச்சஸ்தாயி என் மனதை புரட்டிப்போட அப்படியே அவளது உருவம் கண்களினுடாக உள்ளேவந்து அப்படியே ஓடிக்கொண்டிருக்கும் குருதி மயிர்த்துழைக்குளாயிடம் லிப்ட் கேட்டு கணப்பொழுதில் ஓடிப்போய் இதயத்துக்குள் ஒளிந்துகொள்கிறது.
பார்க்காதே.... ஓ…..
என்றாலும்.... ஓ…..
கேட்காதே..... ஓ…..
சிட்டுவேசனுக்கு ஏற்றாற் போல் இந்த வரிகளும் ஒலிக்க அவளும் என்னைப்பார்க்க சரியாக இருந்தது. என்னை நோக்கியே வந்துகொண்டிருக்கிறாள். என் கைகளில் உள்ள விரல்கள் கூட என்னசெய்வதென்று தெரியாமல் அடிக்கடி முட்டிமோதிக் குசுகுசுத்துக்கொண்டது.
காதல் என்றால்..... ஓ…..
பொல்லாதது.....
புரிகின்றது....... ஓ...
 ரூப்குமார் வடமொழி கலந்த தமிழில் எனக்கு காதல் பொல்லாதது என்று அறிவுறுத்திக்கொண்டிருந்தார். அவள் இன்னும் 10 விநாடிகளில் என்னை அண்மித்துவிடுவாள். என்னசெய்யப்போகிறேன். நான் உட்கார்ந்திருந்த பைக்கிலிருந்து எழுந்து இரண்டு அடி முன்னே வைக்க அவள் என்னைக்கடந்து சென்று முன்னர் நான் உட்கார்ந்திருந்த பைக்கில் பைக் சொந்தக்காரனுன் ஏறிப்போக சரியாக இருந்தது.
வட போச்சே...
அலைபேசியில் தற்போது வடிவேலு சிணுங்கினார், எடுத்துப்பார்த்தால் நண்பனின் SMS.
My lover said smoking is bad,
I stopped smoking!

My lover said drinking is bad,
I stopped drinking!

My lover said frinship is bad,
I stopped my....

LOVE!
Namakku 1000 figure madiyum machi ,
Aana unna matri oru friend? mhmm
Machi oru tea sollen?..:P

SMSஐப் படித்து சிரித்துவிட்டு SMSஐப் பார்த்துக்கொண்டிருந்த போது காதிலிருந்து கழன்று விழுந்த ஹெட்செட்டை மீள எடுத்துக் காதில் மாட்ட சங்கர் மகாதேவன் 

காட்டுச்சிறுக்கி 
காட்டுச்சிறுக்கி 
யார் காட்டுச்சிறுக்கி இவ 
மழை கொடுப்பாளோ 
இடி இடிப்பாளோ 
மாயமாய் போவாளோ
என்று பாட எதிரே இன்னொரு மஞ்சள் சுடிதார் வர மீண்டும் தயாரானேன் பின்னால் பைக் ஒன்றும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு...

குரங்கு குல்லா தூக்கிய கதை, வைரமுத்து ஸ்டைலில் உடலை முறுக்கி நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு படியுங்கள். வைரமுத்து ஐயா மன்னிக்கவேண்டும்..;)


கானல் வெக்கையாய் கடுப்புடன் மக்களை 
கருவாடாக்கிக் கொண்டிருக்கும் 
கார்மேகம் எட்டியும் பார்க்காத 
கடுங்கோடை விளையும் செந்தணல் பூமி அது

கடுங்கோடை பரிசளித்த கார்மேக மேனி
கார்மேக மேனியிலே வியர்வைத்தண்ணி
தன் குலம் விளங்க குல்லாய்களை கூடையிலே விற்றுவந்தான்
கருவாச்சி பெற்றெடத்த குமரேசப்பாண்டி

குமரேசன் விற்றுவிட்டான் குல்லாய்கள் கோடி
களைப்புடன் கடந்து வந்தான் ஊரின் தெருக்கோடி
ஆயாசம் அதிகரிக்க வந்தான் ஆலடிக்கு
அசதியிலே கருவிழியை அடைத்தான் விழிமூடி

கட்டாந்தரையில் கிடந்த இவன் 
கனவுலகில் சஞ்சரிக்க
சிட்டாய்க் கவிகள் வந்து குலம் விளக்கும் குல்லாவை
குபீரெனக் கவர்ந்து சென்று ஆலூரில் சிறை வைத்தது 

கனவுலகில் நமீதா மச்சாள் டாட்டா காட்டி ஓடிவிட
சுந்தரமாய் உடல்முறித்து களைப்பெடுத்து கட்டியெறிந்து
காத்திரமாய் விட்டான் ஒரு 
கடுமையான கொட்டாவி

பூவுக்குள் புகம்பம் போல் 
காட்டுக்குள் கலவரம் போல்
கரிசல் காட்டில் விழுந்த விரிசல் போல்
கண்ணைக்கட்டியது குமரேசன் கூடை
 
போதிமரத்து புத்தன் சொன்ன நீதியறியாக்குரங்கு
போட்டிருந்த தொப்பியின் காசோ பல மடங்கு
கருமேனிக்குமரேசனின் கந்தக முளை 
தீட்டியது பலதிட்டம் குரல் அடங்கும் வேளை

கருவாச்சி பெற்ற கட்டிளம் காளை 
தீட்டிய திட்டம் நிறைவேற்றும் வேளை
குலம் காத்தான் குமரேசன் தன்தொப்பி இழந்து
பலம்பெற்றான் குமரேசன் பலதொப்பி பெற்று

கவிகள்தாம் இவன் கூடை கவர்ச்சியுடன் நோக்க
செவிகள் கேளாதவன் போல் எடுத்தான் வெறிஓட்டம்
ஓட்டத்தை நிறுத்தாமல் கூட்டத்தை அடைந்தான்
குல்லாவை விற்றுவிட்டு வீட்டைப் போய்ச்சேர்ந்தான்.

மு.கு - இணையத்தில் படித்த கதை ஒன்றின் தமிழ் வடிவம், நல்ல கருத்துள்ள கதை என்பதால் பகிர்கிறேன். கதையின் சுட்டியைப்பகிர்ந்த கன்கொனுக்கு நன்றிகள்

ஒருநாள் புத்தர் தனது சீடர்களுடன் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பயணித்துக்கொண்டிருந்தார். வழியில் ஒரு ஆற்றைக்கடக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. நீண்ட தூரம் நடந்து களைத்துப் போயிருந்த புத்தரும் சீடர்களும் ஆற்றங்கரையில் அமர்ந்தனர். புத்தர் தனக்கு தாகமாக இருப்பதாகவும் ஆற்றில் தண்ணீர் எடுத்துவரும்படியும் ஒரு சீடரைப்பணித்தார்.

உடனே ஆற்றைநோக்கிவிரைந்த சீடர் தண்ணீர் எடுக்க முயற்சித்த தருணத்தில்தான் கவனித்தார், ஒரு எருமை மாட்டு வண்டி ஆற்றைக்கடந்துகொண்டிருந்தது. அதன் விளைவாக ஆற்று நீர் கலங்கி அழுக்காகிப்போயிருந்தது. அந்த அழுக்கு நீரை எப்படி குருவுக்கு எடுத்துச்செல்வது என்று யோசித்த சீடர் மீண்டும் புத்தரிடம் வந்து அந்த நீர் குடிப்பதற்கு உகந்தல்ல அழுக்காக இருக்கிறது என்றார்.

மீண்டும் அரைமணிநேரத்தில் அதே சீடரை தண்ணீர் எடுத்துவரும்படி பணித்தார் புத்தர். மீண்டும் ஆற்றைநோக்கி விரைந்தார் சீடர் ஆனால் ஆறு அப்போதும் அழுக்காகத்தான் இருந்தது. மீண்டும் புத்தரிடம் திரும்பிவந்த சீடர் ஆறு இன்னும் கலங்கலாகத்தான் இருக்கிறது என்றார்.

இன்னும் அரை மணிநேரம் கழித்துச் மீண்டும் அதே சீடனை அனுப்பினார் புத்தர். இந்தத்தடவை தண்ணீர் தெளிவாக இருந்தது. சீடன் தண்ணீரை எடுத்துக்கொண்டு புத்தரிடம் திரும்பினார்.

புத்தர் சொன்னார் இது போலதான் உங்கள் மனமும். உங்கள் மனமானது குழப்பத்திலிருக்கும் போது அதை அதன் போக்கிலேயே விடுங்கள், சிறிது நேரம் பொறுமையாக இருங்கள், மனதை அமைதிப்படுத்த எந்த ஒரு விடயத்தையும் கஷ்டப்பட்டு செய்ய வேண்டியதில்லை. அதுதானாக அமைதியடையும்.
நடுச்சாமம் 6 மணி (அதிகாலை 9 மணிக்கு எழும்பும் எங்களுக்கு அது நடுச்சாமம் தானே..:p) நண்பனிடமிருந்து தொலைபேசி அழைப்பு..


அந்தநேரம் அந்திநேரம் கண்பார்த்து........(ஹிஹி நம்ம ரிங்டோன்)


ஹலோ என்னடா சொல்லு....(தூக்கக்கலக்கத்துடன்)
டேய் வெளிக்கிட்டியா?
என்ன? எங்க??
டேய் காளிகோயில் தேர் வரலயா நீ?... ஓ... இதோ வெளிக்கிட்டன் நீ டக்கெண்டு வா..
சரிசரி... 6.30க்கு வருவன் ரெடியா இரு..
ok bye..


ஒருவாறு 7.15க்கு வந்தவன் என்னையும் ஏற்றிக்கொண்டு காளிகோயிலுக்குச்சென்றான். அங்கே கோயிலில் போய் பாக்கிங்கில் வண்டியை விட்டுவிட்டு செருப்பையும் ஒளித்துவைத்துவிட்டு கோயிலுக்குப் போகலாம் என்று கோயில் வீதியில் காலடி வைத்தால் கமகம என ஒரு வாசனை, என்னடான்னு பார்த்தா யாரோ மப்பும் மந்தாரமுமாக அடித்த வெயிலும் பட்டுத்தெறித்துக் கண்ணைக்குத்தும் அளவுக்கு மினுமினுப்பான சாறியுடன் ஒரு அம்மணி வந்து இறங்குகிறார். 
ஹச்சும்....
வாயைப்பிளந்து பார்த்துக்கொண்டிருந்த என் கவனத்தை அந்த சென்ட் வாசனை முக்கில் ஏறி, தாங்கமுடியாமல் தும்மிய நண்பனின் தும்மல் கலைத்தது.


அங்கு ஒரு சிங்கள இளைஞர் தண்ணீர்ப்பந்தலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்து அழகூரில் பூத்தவளே.... என்று கர்ணகொடூரமாகப்பாடி பெண்களுக்கு நக்கலடித்துக்கொண்டிருந்தார்


அங்கே மூன்று தேர்கள் நிறுத்தப்பட்டிருந்தன, இன்னும் சாமி வெளியே வரவில்லை. சரி இருக்கிற கூட்டத்தைப்பார்த்தால் இப்போதைக்கு உள்ளே போக முடியாது. அன்னதான மண்டபப்பக்கம் சற்று காத்தோட்டமாக இருக்கவே அங்கே போய் உட்கார்ந்தோம்.(தேர் சுத்தின பிறகுதான் சாப்பாடு போடுவாங்க...:p)
என்னா கூட்டம் என்னா கூட்டம்...அவ்வ்


அங்கு இளம்வயதினர், என்போன்ற பச்சிளம்பாலகர்கள், நடுத்தர வயதினர் என பலரும் சென்றுகொண்டிருந்தனர். ஆனால் அனைவரிடமும் ஒரு ஒற்றுமை இருந்தது. நகைக்கடை விளம்பரத்தில் வரும் சினேகா கூடப்போட்டிராத அளவுக்கு நகைகள் போட்டிருந்தனர், பளபளக்கும் ஆடைகள், அட இதுகூடப்பரவாயில்லை அவர்கள் யாரென்றுகூட கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு கலர்கலராகப் பல பெளடர்களை கொண்டு முகத்தை மூன்று இஞ்ச் பெரிதாக்கக்காட்டியிருந்தனர்.(ஹீஹீ மேக்கப்புங்க..) மனதுக்குள் பாடிக்கொண்டேன் ஒரு கூடை சன்லைட் ஒருகூடை மூன்லைட்..


அன்று முதன்முறையாக கடவுளிடம் பொதுநல நோக்கில் வேண்டுகோள் விடுத்தேன் கடவுளே மழைபெய்யணும் என்று, அப்பதானே மேக்கப் கலைஞ்சு யார்யார் வந்திருக்காங்கன்னு கண்டுபிடிக்கலாம்.ஆனால் கடவுளுக்கு என்மீது கோபமோ, அல்லது மழைபெய்தால் மேக்கப் போட்டவர்கள் எல்லாரும் மழையில் நனைந்து கலைந்த மேக்கப்புடன் கோயிலுக்குள் ஓடிவந்துவிட்டால் கடவுள் தன்நிலை என்னவாகும் என்று பயந்தாரோ தெரியல கடைசிவரை மழைபெய்யவில்லை.


ஆனால் சூரியன் மழைபெய்து மேக்கப் கலையும் கொடுமையை சற்று தாமதமாக வேறுவிதமாகச் செய்தாலும் கச்சிதமாக செய்தார். நான் கோயிலுக்கு போகும் போது பார்த்த யாரையும் திரும்பி வரும்போது காணவில்லை, அடித்த வெயிலில் மூன்று இஞ்ச் மெலிந்த முகத்துடன் பலர் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர் ஹீஹீ மேக்கப் கலைஞ்சிடிச்சுப்பா.


திரும்பிவரும்போது அதே சிங்கள இளைஞர் பாடிக்கொண்டிருந்தார் அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
உலகத்தில எவ்வளவு பழம் இருந்தும் நானேன் வாழைப்பழத்தை சாப்பிட ட்ரை பண்ணினன்??..

இதுதான் வாழைப்பழம்
அவ்ளோ அழகு
yellow 
இனிப்பானது 
EATABLE
அவகிட்ட ஒரு SMELL இருக்கு...... 
AND SWEET TOO.. 
அவள யாருக்கும் தெரியாம பறிச்சிட்டுப் போய் வாயில வச்சுக் கடிச்சாப் போதும் உடனே ஜீரணமாகிரும். 
ஆனா நான் ஏன் வாழைப்பழத்தை ட்ரை பண்ணினன்?
என்ன பிரச்சினை 

இன்னைக்கு வாழைக்குலையை பறிச்சிட்டுப் போய்ட்டாங்க அதுதான் பிரச்சினை 
ஆனா நாம யார சாப்பிடப்போறோம்னு போறோம்னு முன்னாடியே டிசைட் பண்ண முடியுமா என்ன?
வாழைப்பழத்தை தேடிக்கிட்டு போக முடியாது…

அது வளரணும்… அதுவா பழுக்கணும்…
மத்தவங்க நடமாடுற இடத்தில போடணும்… தலைகீழ வழுக்கி விழுத்தணும்…
எப்பவுமே இனிப்பாவே இருக்கணும்…

அதான் ட்ரூ வாழைப்பழம்…

அது எனக்கு கிடைச்சுது! 

SO அட்சுவலா நான் வாழைப்பழத்தை சூஸ் பண்ணினன்,

என்ன கடிக்க வச்சது இந்தப்பழம்

இதான் நான்

என்னோட பேரு குரங்கு, எதோ சின்ன மரத்திலயெல்லாம் தேடி அப்பறம் பழமே கிடைக்காம பக்கத்து வீட்டில ஆட்டயப்போட ட்ரைபண்ணிக்கிட்டிருந்த பண்ணிக்கிட்டிருந்த நேரம்,

பழம்தான் சாப்பாடே எனக்கு.. 
MY AMBITION IS TO BE A BANANA EATER  
SO காய்ஞ்சு போய் பசுமையே இல்லாம மரத்தில வாழைப்பழம்
தொங்கிட்டிருந்த டைம் 
அப்பதான் அந்தப்பழத்தை முதன்முதல்ல பாத்தேன். 


பழத்தைப்பறிக்க எவ்வளவோ ட்ரை பண்ணினன், ஆனா அதைப்பறிச்சு வீட்டுக்காரன் வீட்டுக்குள்ள கொண்டு போய்ட்டான், அவனவன் வாழைப்பழம் சாப்பிட கல்யாணவீட்டுக்கே போறான் நாம பக்கத்து வீட்டுக்குத்தானே

ஆனா பக்கத்து வீட்டுக்காரன் பழத்தை எங்கவச்சான்னு தெரியல, I JUST CAN'T BELIEVE THIS, அதத் தேடணும் சட்டி பெட்டி எல்லாத்திலயும் தேடிட்டன் கிடைக்கவே இல்ல,

அப்பவே அம்மா சொன்னாங்க வேணாம்டா மாட்டிக்குவ, பிரச்சனையாகிடும்னு,
ஆனா கிங்கோங் பட காமராமேன் கிங்கோன் சொன்னாரு


உலகத்தில எவ்வளவு பழம் இருந்தும் நான் ஏன் வாழைப்பழத்த ட்ரை பண்ணினன்..
அவ (வாழை) அன்னைக்க CALL பண்ணியிருந்தா, நான் அழுகிப்போகப்போறேன் மங்கி சீக்கிரம் வந்து சாப்பிடுட்டு போன்னு சொன்னா, நானும் உடனே கிளம்பி போனேன், அவங்க வீட்டுக்காரன் பாத்திட்டான்..



உண்மைலயே நான் அவனக் கடிச்சிருக்ககூடாது, வாழைப்ழத்தோட சொந்தக்காரன் அவன், ஆனா அவன் சொன்ன வார்த்தை அப்பிடி(கொறங்கு) ஒரு நிமிசம் யோசிச்சன் நான் அவன தின்ன வரலயே வாழைப்பழத்தைதானே, பாய்ஞ்சு கடிச்சிட்டன்.

நான் கடிச்சதில ஒரு கடிக்கரோட ஸ்டைல் இருக்கும், ஆமா நான்தான் எங்க ஸ்கூல்ல கடிக்கிங் சாம்பியன், JUMPING,RUNNINGகோட சேத்து கடிக்கிங்கையும் கத்துகிட்டேன்.

ஆனா அவ இன்னைக்கு எங்கூட இல்ல, வேற அந்த வீட்டு சொந்தக்காரன் ஒருத்தனுக்க BANANAவ கடிக்க கொடுத்தட்டாங்க, இன்னையோட 2 வருசமாகுது, ஆனா என்னால BANANAவ மறக்க முடியல, 1st BANANAங்க எப்பிடி மறக்க முடியும்.

BUT... THANK YOU BANANA உன்னாலதான் இந்தப்படமே...

V

V

V

V

V

V

V

V

V

V

V


V

V

V





Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்