Related Posts with Thumbnails
Showing posts with label வந்தியண்ணா. Show all posts
படத்தைக் கிளிக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்.







பதிவுலக மாமா, சிரட்டை சிங்கம், சொந்த செலிவில் சூனியத்துக்கு சொந்தக்ககாரர், பச்சிளம் பாலகர் சங்கத்தின் நீண்டகால உறுப்பினர் மற்றும் வந்தியானந்தா குருபீடத்தின் தலைமை குரு என்று பல்வேறுபட்ட விடயங்களில் சகலகலா வல்லவனாகத் திகளும் லண்டன் வந்தி அண்ணன் அண்மையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டுள்ளார். இவரின்றி அனுவும் அசையாது, அவரின் பிறந்தநாள் பரிசாக இந்தப்பதிவை இடாவிட்டால் எம் மனமும் சாந்தி அடையாது.

லண்டனில் இருந்து வந்திறங்கியவுடனேயே இட்ஸ் வெர்றி ஹாட்.. சூர்யன் இஸ் கொள்திங்.. என்று அதிகாலை 3 மணிக்கே பீட்டர் விட ஆரம்பித்து. அவரின் பீட்டரில் எங்கள் நடமாடும் கூகிளையே திக்குமுக்காடச் செய்தவர் எங்கள் மாமா. 

 வெளிநாட சென்று வந்தவர்களில் சிரட்டை மாலை போட்டு வரவேற்கப்பட்ட முதலாவது நபர் என்ற பெருமையைப் பெற்றவர் எங்கள் வந்தி(லண்டன் :P).
 

 லண்டன் ரோட்டுகளுக்கும் எம்நாட்டு ரோட்டுகளுக்கும் இடையிலான வேறுபாட்டை தன் சிஷ்யனுக்கு மிகவும் அழகாக விளக்கி வரலாற்றுப்புத்தகத்திலும், கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்தவர் எங்கள் பச்சிளம் பாலகன்.


எவ்வளவுதான் அடிச்சாலும் தாங்கும் திறன் படைத்த எங்கள் சிங்கத்துக்கு இனிய 16வது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இன்று போல் என்றும் 16வயதுடன் இளமையாக, பச்சிளம் பாலகனாக, சொந்த செலவில் சூனியங்கள் பல வைத்து பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம். :-))


சீப்பீ பீப்பீ

பதிவிட்டவர் Bavan | நேரம் 5:55 PM | 24 பின்னூட்டங்கள்
அனைவருக்கும் வணக்கம் நீண்டநாட்களின் பின்னர் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றும் வழக்கம் போல ஒரு மொக்கைப்பதிவுதான். அதாவது பதிவர்கள் பதிவெழுத வந்திருக்காவிட்டால் என்ன செய்திருப்பார்கள் என்று சின்னக் கற்பனை. இது யார் மனதையும் புண்படுத்த அல்ல, சிரிக்க மட்டும்..:)

பதிவுலக இளைய தளபதி சதீஷ் – பேஸ்புக் ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ்சைப் பார்த்து பேஸ்புக் நிறுவன பேஸ்புக் ஸ்டேட்டஸ் மனேஜராக நியமனம் பெற்றிருப்பார்..:P
Sathish 
பச்சிளம் பாலகன் பதிவுலக மாமா வந்தியண்ணா தேங்காய்ச் சிரட்டையாலான சூப் குடிக்கத்தக்க கப் விற்கும் வியாபாரி ஆகியிருப்பார்.Vanthi

யோ அண்ணா என்றால் எல்லாருக்கும் ஞாபகம் வருவது நூடுல்ஸ்தான் எனவே அவர் Maggie நூடுல்ஸ் விநியோகஸ்தர் ஆகியிருப்பார்.Yo 
அனுதினமும் ட்ரெயினில் பயணிக்கும் ஆடுகளம் அனு ட்ரெயினில் வடவடவடவடேய் வியாபாரி ஆகியிருப்பார்…:PAnu
 
ஜனா அண்ணா அண்மையில் கூட ஏலியன்கள் பற்றிப் பதிவு போட்டவர் வானிலை ஆராய்ச்சியாளராகியிருப்பார்..:P
Jana

தரங்கம் சுபா அண்ணா, மற்றவர்களை சாவ கச்சேரி செய்யக்கூடிய இசைக்கலைஞர் ஆகியிருப்பார்..:P, (ஆங்.. அதாவது உயிரைக் கரைக்கும் இசை என்று சொல்ல வந்தேன்..:P)
Suba
பதிவர் பிரபல கிற்க்கட் அனலிஸ்ட் கன்கொன், Cricket போட்டிகளில் எல்லைக் கோட்டுக்கு வெளியே பந்து பொறுக்கும் பையன்(Ball boy) அல்லது பீப்பீ வித்வான் ஆகியிருப்பார்..:P
Kangon

OR

Kangon 2
எலி பிடிக்கும் எக்பெர்ட் இப்போது பாஸ்வேர்ட் தொல்லையால் பதறிக்கொண்டிருக்கும் பதிவர் ஆதிரை அண்ணா எலிப் பண்ணை வைத்து மியாவ் மியாவ் என்று செட்டிலாகியிருப்பார்..:P
Athirai

தனக்குப் போட்டியாக இருந்த போல் ஒக்டோபர்சை தனது ஆருடத்தால் போட்டுத்தள்ளிய லோஷன் அண்ணா… ஜக்கம்மா சொல்றா.. ஜக்கம்மா சொல்றா ஆகியிருப்பார்..:P
Loshan

"நா" பதிவர் மது அண்ணா பல இசங்கள் இருந்த போதும் தனக்கென மதுயிசம் என்று ஒன்றை உருவாக்கியவர். டாக்டர் ஆகியிருப்பார்..:P

Mathu

 உள்நாட்டுச் செய்திகள்
ஆடுகளத்தில் அனுதினமும் விளையாடிவந்த இவர் தற்போது விளையாடவே மறந்துவிட்டார். படிக்கும் இடத்தில் ஏதோ வரலாற்றுச்சிறப்பு மிக்க கட்டுரை ஒன்றை, அதுவும் எதிர்கால வாழ்க்கைக்கு துணையான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அது அங்குள்ள புரோபசர்கள் முதல் புள்ளப்பூச்சிவரை அனைவரின் கபாலத்தில் உள்ள முடியையும் கம்பிபோல் எழுந்து நிற்க வைத்திருப்பதால். அதை புத்தகமாக வெளியிட அவரின் பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது. எனவே இந்த எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கைக்கு துணையாக அமையவிருக்கும் இந்த மாபெரும் காப்பிய நூலை நாங்களும் எதிர்பார்த்திருக்கிறோம்.
 
அண்மையில் இலக்கியப் பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கும் இவர் தனது வலைப்பூவின் பெயரையும் அண்மையில் அழகு தமிழில் மாற்றியதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் இவர் நண்பர்களுக்காக எழுதிய கவிதையைப் பாராட்டி வைரமுத்து முதல் பப்புமுத்து வரை பலர் பாராட்டியதாகவும், அதன் பின்னர் யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இவருக்கு பாராட்டு விழா நடைபெற்றதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது. மேலும் இவர் எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் பஸ்சில் பயணிகளோடு பயணிகளாக மாறுவேடத்தில் பயணித்தபோது இவரின் புலமை அறியாத ஒரு பித்தன் இவரின் இலக்கிய கவிதை நூல்கள் அடங்கிய பையை காலால் உதைந்ததாகவும், ஆனால் இரக்க குணம் படைத்த இவர் தனது இருக்கையைவிட்டு எழுந்து தனது இலக்கியச்சுமையை தோளில் சுமந்தபடி அரிசி மூட்டைன் வந்த மனிதனுக்கு இடம் கொடுத்ததாகவும், அந்த மனிதன் கொண்டுவந்த நாய்க்குட்டிக்கு தனது 350 ருபா புக்கிங் இருக்கையை தானம் செய்ததாகவும், அதனால் ஏற்பட்ட உடல்வலி காரணமாக பதிவுலகில் சஞ்சரிக்க முடியாமல் இருப்பதாகவும் ஸ்கொட்லான்ட் யார்ட் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
 
வெளிநாட்டுச் செய்திகள்
இலங்கையில் இருக்கும் போது அடிக்கடி சூப் வாங்கித்தந்த இவர் இப்பொது சின்ன டொபி கூடத்தருவதில்லை, அதற்குக் காரணம் இவரது முகத்தை மூடி வளர்ந்திருக்கும் அந்நியன் முடிதான் என்று சொல்லி சமாளித்து வந்த இவர் கடந்தவாரம் இலங்கை ருபா 3000க்கு முகத்தை மூடிய முடியை குணா கமல் ஸ்டைலில் வெட்டியதாகவும் அதை தனது சமூக வலைத்தளங்களில் புரொபைஃல் படமாகப் போட்ட மறுநோடி பலர் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

விளையாட்டுச் செய்திகள்
கிறிக்கட் அனலைசுக்கு கோனாக, அரசனாக, பிதாமகனாக, குட்டி கிறிக் இன்போவாக, கிறிக்கட்டின் தேயாத நிலாவாக விளங்குகின்ற இவர் இந்திய அவுஸ் தொடரில் இந்தியா வெல்லக் காரணமான விக்கிரமாதித்தனை பழி தீர்க்கும் நோக்கில், அவரின் அணியை வெற்றிபெறச் செய்யாமல் இருக்கும் நோக்கில் தற்போது அவரின் அணியில் விளையாடி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் இது பற்றிச் செய்தி கேள்விப்பட்ட விக்கிரமாதித்தன் களத்தில் வைத்து இவரிடம் விளக்கம் கோரியதாகவும் அதற்கு தனது அனலைஸ் ரிப்போர்ட்டை சமர்ப்பித்து இதன்படி நீங்கள் போட்டி ஆரம்பிக்க முன்னர் நீங்கள் சொன்ன “We will win” என்ற வாக்கியமே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
வானிலை அறிக்கை
அண்மையில் தான் படித்த பல்கலைக் கழகத்தில் யாரும் எதிர்பாராத வகையில்நீல வானத்திலேயே கருமுகில்களில்லாமல் கவி மழையை அடித்து ஊற்றிய கடவுச் சொல் காவலனுக்கு யாழ்ப்பாணத்தில் விளைந்த ”கறுப்புத்தங்கம்” என்று பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டதாக பதிவர்கள் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
 
 

சூரியன் மறைந்து சில நிமிடங்கள் தாண்டியிருந்தது. அமாவாசை தினம் வானில் நட்சத்திரங்கள் மட்டும் இராஜாங்கம் செய்து கொண்டிருந்தது. கிறிக்கட் விளையாடிவிட்டு களைப்புடன் வீட்டுக்கு வந்த கன்கொனை தனது மெல்லிசையால் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் சத்தமாகக் குளிர்விக்கத் தொடங்கினர். கதவை பூட்டிவிட்டு வரவேண்டும் என்று நினைத்தவர் கடைசியின் இளையராஜாவின் இசைமயக்கத்துக்கு அடிமையாகி அதை மறந்தே போனார்.

kick

அதே நேரம் பப்பரப்பா எனத் திறந்திருந்த இவரது வீட்டுக்குள் ஒரு 3அடி கூட வளராத குள்ள உருவம் நுழைந்துகொண்டிருந்தது. முதலில் வீட்டு சோபாவில் இடது பக்க ஓரத்தால் ஏறி மற்றப்பக்கமாகக் குதித்து இறங்கியது. அப்படியே கன்கொனின் கணனிஅறையைத் தாண்டிச்சென்றது. மீண்டும் ஹாலுக்கு வந்தது. இப்போது எதையோ பார்த்து பிறீசாகி நின்றது. வீட்டு ஹாலில் வைக்கப்பட்டிருந்த மேசை மீது வைக்கப்பட்டிருந்த டென்னில் பந்துகள் அடங்கிய டின் கண்முன்னே தெரிய கன்கொனின் கணனியில் பாடிக்கொண்டிருந்த “தெய்வமே.. தெய்வம…” என்ற பாட்டின் “கண்டுகொண்டேன் அன்னையை… கண்டுகொண்டேன் அன்னையை” என்ற வரியும் ஒலிக்க சரியாக இருந்தது..:P

 

மேசைமீது தட்டுத்தடுமாறி ஏறிய உருவம், பந்துடின்னைப்பற்றி அதை ஏறி நின்ற நிலையிலேயே திறக்கமுயல நிலைதடுமாறி கிழே விழ தொபுக்கடீர் என்ற சத்தமும் கேட்க கன்கொன் ஓடி வந்து பார்க்க ஒரு பச்சிளம் பாலகன் பந்தைப் பற்றியபடி சோபாவுக்குள் தலைகுப்புறக் கிடந்துகொண்டிருந்தான். கன்கொனின் பாட்டும் நிறைவடைந்து அடித்த பாட்டு ஒலிக்க ஆரம்பிக்கும் அந்த காப்பில் இவ்வளவும் நடந்துமுடிந்திருந்தது.

 

“தம்பி, நீ யார்? எங்கயிருந்து வாறாய்? என்று கன்கொன் கேவிக்கணைகளை அடுக்கத் தொடங்கினார்.

“அங்கிள்,(கன்கொனின் கண்கள் விஜகாந்தின் கண்போல சிவத்து, விஜயின் கண்போல கைகள் முறுக்கேளிக்கொண்டிருந்தது..) நான் மந்தி என்றான் சிறுவன்.

 

“ங்கொய்யால சரியாத்தாண்டா பெயர் வச்சிருக்கிறாங்க உனக்கு? சரி எங்க இருந்து வாற?

“அங்கிள் நான் நான் மேல் மாடியைக் காட்டினான், ஓ.. சிறீ அங்கிள் வீட்டுக்கு வந்த பொடியனா?

“ஆமாங்க, அவர் என் சித்தப்பா என்றவன் தாமதிக்காது விடயத்துக்கு வந்தான்,

“அண்ணே உங்களிட்ட 3 பந்து இருக்கு எனக்கு ஒரு பந்து தாங்களேன்? என்றான்.

“முடியாது, இது டீம் போல் தம்பி, பந்தைத்தா..-கன்கொன்

“பிளீஸ் அங்கிள் பிளீஸ்… பிளீஸ்.. என்று கெஞ்சிக் கெஞ்சி.. இப்பொது அழ ஆரம்பித்துவிட்டான்.

 

விஜய், விஜயகாந்த் ரேஞ்சில் கோபத்தின் உச்சியில் இருந்த கன்கொன் இப்பொது “அழகு குட்டிச்செல்லம்” பாட்டில் வரும் பிருத்விராஜின் அழவுக்கு மனமிரங்கி.

“சரி தாறன் பட் வன் கண்டிசன், நாளைக்கு காலம திருப்பித்தருவதாக உறுதிமொழி கொடு என்றார்.

“ஓகே.. அங்கிள் நாளைக்கு காலமயே தந்திடுவன் டோன்ட் வொர்றி.. என்று பந்துடன் எஸ்கேப் ஆனான்.

மறுநாள் மாலைவரை பொறுத்திருந்த கன்கொன் விளையாட நேரமானதால் சிறீ அங்கிள் வீட்டுக்குப் போய்

“ அங்கிள் மந்தி இல்லையா?

“இல்லைத்தம்பி அவங்க நேற்றே இங்கிலண்டுக்கு போய்ட்டாங்களே…

பாக்ரவுண்டில் சீறும் பாம்பை நம்பு… சிரிக்கும் பொடியனை நம்பாதே என்று பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது.


இலங்கையின் மூத்த பதிவர் வந்தியத்தேவன் என்ற மாமனிதரைப்பற்றி அறியாதவர்கள் யாருமில்லை. அந்தவகையில் அவரை நான் இதுவரை சந்தித்ததில்லை. ஆனால் இன்று காலை அவருடன் மெயிலில் அரட்டை அடிக்கும் பொன்னான வாய்ப்புக்கிடைத்தது. மிகவும் நகைச்சுவையுணர்வுடைய மனிதர் அவர். ஆனால் மிகுந்த அறிவாளி, சந்தேகங்களை தேங்காய் உடைப்பதுபோல் சல்லிசல்லியாக உடைத்துக் கூறக்கூடியவர்.

முதலில் பின்நவீனம் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது என்று எப்படி அறிந்தாரோ தெரியவில்லை. அதைப்பற்றி சிறப்பான ஒரு விளக்கத்தை அளித்தார். அவரின் விளக்கத்தில் இருந்த தெளிவு என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. அதன் பின்னர் ஐந்தாம் வகுப்பில் தனக்கு ஏற்பட்ட சில இளநீர் குடித்த அனுபவங்களை சற்று பின்நவீன முறையில் குறிப்பிட்டு நான் அறிந்தும் அறியாத வகையில் பின்நவீனம் எனக்கு விளங்கியிருக்கிறதா என பரீட்சித்த முறையில் அவருக்கு நிகர் அவரே.

ஆனால் வந்தியண்ணாவுக்கு சின்ன வயதில் தான் தென்னக்குருத்தை வைத்து கிறிக்கற் ஆடியதாகக்குறிப்பிட்டவருக்கு இளநீரில் காணப்படும் மருத்துவ குணாம்சங்கள் மற்றும் சின்னச்சின்ன விடயங்களை வைத்து எப்படிப்பதிவெழுதுவது என்று வந்தியண்ணா கூறிய விடயங்கள் இன்னும் என்ன மனதில் பசுமரத்தாணிபோல பதிந்து கிடக்கின்றது.

அதன் பின்னர் கிறிக்கற் பற்றிய கதை அப்படியே சர்வதேச மட்டத்துக்கு திசை திரும்பியது. தற்போது கிறிக்கற் போட்டிகளுக்கு தயாரிக்கப்படும் தட்டையான ஆடுகளங்கள் டெஸ்ட் போட்டி மற்றும் பந்துவீச்சாளர்களைப் பாதிப்பது பற்றி கவலை வெளியிட்டவர். ஆனால் அடித்தாடுவதற்கும் ஏற்ற ஆடுகளங்கள் அவைதான் தற்போதைய இளம் சந்ததியினர் வேகமான அடித்தாடும் ஆட்டத்தையே விரும்புகின்றனர் என்ற கருத்தை இறுதியாகக் கூறி படங்களுடன் விளக்கிய முறையில் கிறிக்கறிலும் இவர் ஒரு மேதாவி என்பதை அறிந்து வியந்தேன்.

இவ்வாறான ஒரு சகலகலவல்லவனுடன் அரட்ரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்து விட்டு நேரத்தைப்பார்த்தேன் பகல் 1.30 அடக்கடவுளே 5 மணிநேரம் அரட்டையில் ஈடுபட்டிருக்கிறேனா? இப்படி ஒரு பதிவரை, சகலகலாவல்லவரை, விளையாட்டு, அனுபவம், சினிமா, போன்ற எல்லா விடயங்களையும் அதைவிட பதிவுலக விடயங்களை தனது விரல் நுனியில் வைத்திருந்த வந்தி அண்ணாவை என்ன சொல்லிப்பாராட்டினாலும் தகும்.இப்படியான ஒரு மனிதரின் நட்புக்கிடைக்க நான் கொடுத்து வைத்திரக்க வேண்டும். ஆனால் இன்னும் இவரை நேரில் சந்திக்காதது பெரும் குறையே...
 
எல்லாத்துக்கும் நன்றி வந்தியண்ணா...

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்