Related Posts with Thumbnails
Showing posts with label காதல். Show all posts

காதல் ரோஜா

பதிவிட்டவர் Bavan | நேரம் 8:40 AM | 0 பின்னூட்டங்கள்
Photo Courtesy: Kabilan Vairamuthu

" காற்தடம் கூட பதியாமல்
நீ நடந்து சென்றதால்..
கடற்கரை மணலிலும்
ரோஜாக்கள் பூத்திருக்கின்றன.. "
- Bavananthan (2016)

காதல் உண்டோ?

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:09 PM | 2 பின்னூட்டங்கள்


கறுப்பு வெள்ளைப்
பூவும் உண்டோ?
அவள் கண்கள் போல
காந்தம் உண்டோ?

சிலிர்க்க வைக்கும்
முல்லை உண்டோ?
அவள் சிரித்து விட்டால்
உயிரும் உண்டோ?

காதல் வழியும்
மொழியும் உண்டோ?
அவள் அசையும் இதழில்
அமிர்தம் உண்டோ?

காற்றைக் காணும்
கண்கள் உண்டோ?
அவள் காணும் விழியில்
காதல் உண்டோ?
-Bavananthan <3



எதிரும் புதிருமாய்
அமரவும் இல்லை
ஏனோ தானோ என்ற
எண்ணமும் இல்லை
உள்ளுணர்வு எனை இழுத்து
சொல்லவும் இல்லை
பேரதிர்வில் மோதித்
தள்ளாடவும் இல்லை

மலை மோதி
நிலை மாறி
வீழவும் இல்லை

சிலை போல
அசைவின்றி
உறையவும் இல்லை

ஆனால்...

எல்லை தாண்டிய
பயங்கரவாதத்தை - உன்
கண் வில்லைகளை கொண்டு மட்டுமே
செய்து விடுகிறாய் நீ...! 
-Bavananthan

காதல் சுழல்

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:08 PM | 0 பின்னூட்டங்கள்


பார்வைச் சுழலுக்குள்ளே
பகீரென்று ஈர்த்து விட்டு
ஈர்க்கின்ற கண் கொண்டு
கோர்த்து எனைக் கொன்று விட்டாய்!

கன்னத்தில் குழி வீழ
புதைகுழிக்குள் தள்ளி விட்டு
புன்னகை செய்து என்னை
புது உலகில் புரள விட்டாய்!

குவியங்கள் மாற்றாமல்
நிலைகுலையச் செய்து விடு!
கண்கொண்ட வதை போதும்
காதலைச் சொல்லி விடு! 
Bavananthan

காதல் உயிர்!

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:46 PM | 0 பின்னூட்டங்கள்



தறிகெட்டுத் திரிகின்ற
தலை கோதும் காற்றாக
உனைத்தேடி எங்கும்
நினைவோடுதே!
வெறி கொண்டு துடிக்கின்ற
முளை கொண்ட நாற்றாக
உனைச்சேர முடியாமல்
உயிர் வாடுதே!" 💔
-Bavananthan

மீண்டு-ம்...!

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:44 PM | 0 பின்னூட்டங்கள்


மீண்டும் ஒரு காற்று
என்னுள் நுழைகிறதே!
பார்வைத்துளி பட்டு - என்
தேகம் சிலிர்க்கிறதே!
காதல் கதை கொண்டு
விழி ஊடே துளைக்கிறதே
நீங்கும் நொடி பார்த்து
என் நெஞ்சம் வலிக்கிறதே! 
-Bavananthan

கவனத்தை ஈர்க்க
செயற்கையாய் கொட்டும்
உன் சிணுங்கலில்
கள் ஊறுதே!

வலம் இடமாக
வளைகின்ற பார்வை
ஒரு நொடி எனை
தாக்குதே!

விழித்திரை மோதி
வழிகின்ற விம்பம்
என் நினைவெங்கும்
உனை தோய்க்குதே!

ஊழியாய் வந்து
மோதிடும் கண்ணில்
என் சிந்தையும்
தள்ளாடுதே!
-Bavananthan


வளைந்த பாதைக்கெல்லாம்
வாய்க்கரிசி போட்டு விட்டு
நுழைந்து நுழைந்து நான்
உன்னருகில் வந்து விட்டேன்

முட்டிய மூச்சு சென்று
ஒட்சிசனை எட்டும் முன்னர்
காதலை சொல்லி விட
காற்றிலே கவி படித்தேன்

உன்
கண்கள் எங்கோ உருள
விரல்கள் ஏனோ மிரள
கோபமா சாந்தமா என
தெரியாமல் நான் தவிக்க

உன் கண்கள்
நான் கண்டேன்
என்னை நீ
காணவில்லை

ஆத்திரமோ விரக்தியோ
வெட்கமோ பயமோ
மகிழ்ச்சியோ கவலையோ
அனைத்தும் சேர்ந்த
ஒரு அழகியலின் உச்சமோ!

கடுகளவும் சிதறாமல்
என் காதல் சேர்ந்திருக்கும்
கட்டாயம் பதில் தேடி
உனக்குள்ளே அலைந்திருக்கும்

எங்கேயோ பார்த்தபடி
காரணங்கள் தேடாதே!
காது கேட்காது என்று
எனை தள்ளி ஓடாதே!

இல்லை என்று
சொல்வதென்றால்
இப்போதே சொல்லிவிடு!

அதற்கு முன்னர்
மூச்சு முட்ட முத்தமிட்டு
கொன்றுவிடு!
-Bavananthan 


யாருமே இல்லாத
நட்ட நடு இரவு
விழி மூடிய எனக்குள்ளே
விழித்துக்கொண்ட கனவு

பாழடைந்த வீட்டுக்குள்
பாதி நிலா தெரியும்
இருட்டுக்குள்ளே விழிகளெல்லாம்
விரைந்து கொண்டு விரியும்
மின் அணுக்களின் ஓட்டத்தின்
காற்தடங்கள் புரியும்
காதுகள் தன் கூர்மையிலே
வைரம் கூட அரியும்

இல்லாத உனைத் தேடி - அவள்
கண்கள் அலை பாயும்
கடலோர நுரைகளிலே என்
காதல் மனம் ஊறும்

இதழோர வியர்வையும்
அவள் நாவினிலே சாகும்
அதரத்தில் வாய் மோதி அதன்
உயிர் மீட்பேன் நானும்

அன்புள்ள பேயே - நீ
உயிரோடு உள்ளாயா
ஐயையோ மறந்து விட்டேன்
செத்தால் தான் பேயாமே

ஆவியென்ன பேயென்ன
கொள்ளிவாய்ப் பிசாசென்ன
காதலி என் இடக்கரத்தை
இழுத்து அணைக்கையிலே

வழிதவறிக் கூட நீ
என் வலது பக்கம் வந்திடாதே
உன்னை விடக் கொடுரமாம்
என் வலதுகையின் வயிற்றெரிச்சல்

இலை குளித்த பனி நீரும்
என் மீது வீழ்ந்தாலே
தலை தெறிக்க ஓடுவது
நானாகத் தான் இருக்கும்
அவளுக்கு பேய் பயமாம் - எனை
இறுக்கிக் கட்டிக்கொண்டாள்
எனக்கு நாய் பயம் தான் என்று
நானும் ஒட்டிக் கொண்டேன்

கட்டிப்பிடி வைத்தியத்தை
கண்டு பிடித்த கமல் ஐயா
சாமியே இல்லா உமக்கு எத்தனை
கோவில் கட்டினாலும் தகும் ஐயா

அன்புள்ள பேயே நீ
அவளை மட்டும் பயமுறுத்து
காதலி முன்னிலையில் 
வீரனாய் எனை நிலைநிறுத்து

அவள் முத்ததின் மோட்சத்தில்
மூச்சு முட்டி போவேனா - இல்லை
உன் சத்ததிலே கோரத்தில்
செத்துக் கித்து வீழ்வேனா

-Bavan


#001
நண்பன் ஒருத்தன் லவ் செட் ஆகிட்டு மாப்புள எண்டான், நானும் Treat கேட்டன், அவன்ட வீட்டில இருந்து கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் Busல கூட்டிட்டு போய், ஏதோ ஒரு மூலையில் இருந்த முனியாண்டி கடையில ஒரு glass பால் வாங்கித்தந்து Treatடா Enjoy எண்டான்.
இன்னிக்கு "லவ் எல்லாம் எப்பிடி மச்சி" எண்டு கேட்டா நான் உனக்கு பால் ஊத்தினன், அவள் எனக்கு சங்கு ஊதிட்டாள்டா எண்டுறான் =P
#WhattaCoincident #LoveMatter #LMAO

#002
இப்பிடித்தான் இன்னொரு நாள் இன்னொரு நண்பனோட படம் பாக்கப்போயிருந்தன். அவனுக்கு அடிக்கடி Call வந்திட்டே இருந்திச்சு,
"எடுத்துக் கதையன்டா" எண்டன்,
"இல்லடா, நேற்று முழுக்க நான் Call பண்ணினன் அவள் Answer பண்ணல, So இண்டைக்கு நான் Answer பண்ணமாட்டன்" எண்டான்.
என்ன கறுமமோ எண்டு பேசாம விட்டுட்டன்.
அப்பறம் கொஞ்ச நேரத்தால அவனுக்கு Call வரல போல, சீரியசா படம் பாத்திட்டு இருந்த என்னை சுரண்டி, "டேய் என்னடா Call பண்ணுறதை நிறுத்திட்டாள்" எண்டு கேக்கிறான்.
#அவ்வ்வ்

#003
நண்பனோட ஒருநாள் Roadல நடந்து போய்க்கொண்டிருந்தன், அப்ப அவனுக்கு அவன்ட Loverட இருந்து call வந்திச்சு, அப்ப என்னை 2அடி முன்னால போக சொல்லிட்டு கதைச்சிட்டு வந்து கொண்டிருந்தான். அது ஒரு கும்மிருட்டான பாதை, paymentல ஒரு கல்லு உடைஞ்சு இருந்தது, கீழ நல்ல ஆழமான கான். அப்ப அவன் கிட்ட வரும் வரை wait பண்ணி "டேய் கீழ பள்ளம் பாத்துவாடா" எண்டன். அவன் அதைக் கணக்கெடுக்காம கடலை போட்டுக்கொண்டே வந்தான், நான் திரும்பத் திரும்பக் கத்தினன், அப்ப அவனுடைய Loverக்கே அது கேட்டிருக்கும் போல என்ன சந்தம் எண்டு கேட்டிருக்கிறா, அதுக்கு அவன் சொன்ன பதில்.
"அது ரோட்டில யாரோ ஒரு பிச்சைக்காரன், நீ சொல்லு செல்லம்"
டேய் உன்னைய அந்தக் குழியில போட்டு புதைக்காம விட்டது என் தப்புத்தான்.

டிஸ்கி 1: யாவும் கற்பனையே, யார் மனதையும் புண்படுத்த அல்ல.
டிஸ்கி 2: டிஸ்கி 1ஐ நம்பிட்டீங்கதானே எல்லாரும் =P
Image Courtesy: Waterbaby

"மழை பெய்கிறது என்று
ஓடி வந்து ஒதுங்குகிறாய் நீ
உன்னை தொட முனைந்து
தோற்றுப்போன மழைத்துளிகள்
நிலத்தில் குதித்து தற்கொலை
செய்துகொண்டிருக்கின்றன"

----------------------------------------------

"வானம் தீக்குச்சி கிழிக்க
மேகம் நீரூற்றி அணைக்க
சுத்தமாகக் கழுவப்பட்ட பாதைகளில்
கால்களைக் கிழித்து தண்டனை
வழங்கிக்கொண்டிருக்கிறது
தீட்டப்பட்ட கற்கள்
முத்தமிட வந்த
மழைத்துளிகளிடமிருந்து - உன்னைக்
குடைபிடித்துக் காப்பாற்றினேனாம்"


----------------------------------------------

"துளிகளின் இடையினில்
இடைவெளி நெடுகினில்
நிறைகிற மழை அது நீயா
நிலை குலைகிற பொழுதினில்
வழிகிற மழைத்துளி - விழிக்
குவியத்தை மாற்றுவதேனோ"


-Bavan

பாலைவனப் புயல்!

பதிவிட்டவர் Bavan | நேரம் 10:40 PM | 9 பின்னூட்டங்கள்




திடீரெனத் தரித்து நிற்கிறேன்
காலச்சக்கரம் வேகமாக ஓடிவருகிறது
பாலைவனங்களுக்குள் பழரசத்தைக் கண்டது மாதிரி
மனதுக்குள் ஒரு பூகம்பம்

திடீரெனப் பெய்த மழையால்
மனது குளிர்ந்து
பிரவாகம் கண்களை முட்டி
வெளியேறத் துடிக்கிறது

அதே நான்கு கண்கள்
அதே பழைய இடம்
ஏக்கமும் தவிப்பும்
பதற்றமும் கொஞ்சம் புதுமையாய்

பள்ளத்தில் வழிந்தோடிய
வருடங்களை துரத்திக் கொண்டு - நாம்
வேகமாக ஓடிச் சேர்ந்த இடத்தில்
மௌனங்கள் மட்டும் துளிர்விட்ட
அழகிய வரலாறு
இன்னும் பசுமையாகவே இருக்கிறது

மௌனங்கள் மட்டும் பேசிக்கொள்ளட்டும்
நீ நினைப்பதைக் காற்று மொழிபெயர்க்கட்டும்
தென்றலோ புயலோ எதுவாயிருப்பினும்
என்னை நேரடியாகத் தாக்கட்டும்

என் மீசைக்கும்
உன் முகப்பரு வந்த வடுவிற்கும்
நாங்கள் பேசிக்கொள்ளும்
மௌன வரலாற்றுக்கும் ஒரே வயது
என்பது உனக்குத் தெரியுமா?

தென்றலால் மேகங்களை திசைமாற்ற முடியாது
திடீரென அடித்த புயல்தான் சூத்திரதாரி
பிரிந்த பிறகு ஊமையாகிப் போனவர்கள்
புன்னகையை மட்டும் முகமூடியாக்கக்
கற்றுக் கொண்ட பின்னர் சந்திக்கிறோம்

ஒவ்வொரு புன்னகையின் பின்னரும்
ஒரு நீண்ட பெரூமூச்சு
ஒவ்வொரு பெருமூச்சின் பின்னரும்
ஆழ் மனதை அடைக்கும் ஒரு கனம்

இன்னும் 
உலகப்போரையும் நிறுத்திவிடக்கூடிய
அதே புன்னகையுடன்தான் இருக்கிறாய்  - ஆனால்
அழகியிலிருந்து தேவதையாகப்
பதவி உயர்த்தப்பட்டிருக்கிறாய்

வ‌லமொன்றும் இடமொன்றுமாய்
முந்தானை பிடித்த‍படி - உன்னைப்
பற்றி நிற்கும் பட்டாம் பூச்சிகள்
முன் முடியில் எட்டிப்பார்க்கும்
வெள்ளைக் கிரீடம் 
ஆம், தேவதைகளின் தேவதை நீ

புதிதாய்ப் பூசிக்கொண்ட புன்னகையுடன்
கண்கள் நான்கும் சந்தித்த‍தில்
என் கண்ணீரை திரைபோட விட்டுக்
கடந்து போகிறாய் நீ

தொட்டுப் பார்க்கும் கனதியில்
ந‌மக்குள் இருக்கும் அதே மௌனம்
என் இதயத் துடிப்பின் ஓசையில்
முதன்முறையாகக் கரைந்து போகின்றது
தென்றலை விடவும் புயல் வேகமானது
புயல்களை நம்பியபடி
புரிந்து கொண்டு பிரிகிறேன்
பாலைவனப் பூகம்பங்கள் 
பசுமையை ஏற்படுத்திவிடுவதில்லை
அங்கேயும்
வலிகளும் வடுக்க‍ளும்தான்!

கனவே கனவே ♥

பதிவிட்டவர் Bavan | நேரம் 12:32 PM | 0 பின்னூட்டங்கள்
சில பாடல்கள் முதல் தடவை கேட்ட உடனேயே தொண்டைக்குள் ஏதோ ஒரு அடைப்பு ஏற்பட்டு, இதயத்தில் ஏதோ பாரம் ஒன்று உருவாகி, கண்கள் எம்மை அறியாமலேயே மூடி, தலை இசைக்கேற்றபடி தலையாட்டி மனதுக்குள் அப்படியே ஒட்டிக் கொண்டு விடும்.


அதற்குப் பிறகு அப்பாடலை எத்தனை தடவை கேட்டாலும் ஏதோ ஒரு புதுமை இருப்பது போலவே இருக்கும். கூடுதலாக இன்றைய இளைஞர்கள் கூட்டத்தில் அப்படி ஒட்டிக் கொண்ட பாடல்களில் பல யுவனின் பாடல்களாகவே இருந்திருக்கின்றன.

முதன்முறையாக யுவனிற்குப் பிறகு அனிருத்தின் சில பாடல்கள் அப்படியான ரகங்களாக உருவாகிக் கொண்டிருக்கின்றன.
டேவிட் படத்தில் "கனவே கனவே" என்ற பாட்டு எத்தனை தடவை கேட்டிருப்பேனோ தெரியவில்லை, ஆனால் கட்டாயம் 1000 தடவைகளைக் கடந்திருப்பேன். எம்மை அப்படியே ஏதோ ஒரு கனவு உலகத்திற்கே அழைத்துப் போய்விடுகிறது இந்தப்பாடல்.


கோரமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதே
உயரமான கனவு இன்று அலையில் வீழ்ந்து போனதே
இசையும் போனது திமிரும் போனது
தனிமை தீயிலே வாடினேன்
நிழலும் போனது நிஜமும் போனது
எனக்குள் எனையே தேடினேன்

கனவே கனவே கலைவதேனோ
கரங்கள் ரணமாய் கரைவதேனோ
 அனிருத்தின் இசையமைப்பில் வெளிவந்த "போ நீ போ"க்குப் பிறகு கிட்டத்தட்ட எனது உயிரைக்கொண்டு/கொன்று போன பாடல் இது. புல்லாங்குழலும் வயலினும் இணைந்து வரும் இடங்களில் அப்படி ஒரு கவலை, சோகம், கோபம், வேகம் திடீரென்று அமைதி அந்தப் பிண்ணனி இசை ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.

கண்கள் ரெண்டும் நீரிலே
மீனை போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா
சில பாடல்கள் வரிகள் நன்றாக இருந்தால் இசையும் பிடித்துப் போகும். ஆனால் இந்தப் பாடலின் இசையால் வரிகளும் பிடித்துப் போகிறது. வரிகளில் உள்ள வலியை மேலும் மேலும் அதிகமாக உணரவைக்கிறார் அனிருத்.

நானும் இங்கே வலியிலே
நீயும் அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசி போன வார்த்தையை

இது நியாயமா மனம் தாங்குமா
என் ஆசைகள் அது பாவமா

கனவே கனவே...
கரங்கள் ரணமாய்...
நினைவே நினைவே கலைவதேனோ
எனது உலகம் உரைவதேனோ
 படத்தில் பாடல் படமாக்கப்பட்ட விதமும் பாடல் படத்தில் வந்த இடமும் இரண்டு காலகட்டங்களில் நடக்கும் போராட்டமும், இழப்பும், வலியும், கோபமும், சோகமும், ரணமும் வயலின், புல்லாங்குழல், சித்தாருடன், அனிருத்தின் குரலும் இதமாக வருடுவதுமாதிரி இருந்தாலும் இதயத்தில் ஆழமான முள்ளினால் குத்தப்பட்ட ஒரு வலியை உணர்த்திப் போகின்றது.

காதல்!

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:45 PM | 2 பின்னூட்டங்கள்




அது ஒரு பிரபஞ்சம்
அண்டப் பெருவெளியில் - மனம்
அலைக்களிப்படும் உணர்வு

எங்கோ அடைக்கலமின்றி
அடைபட்ட பயம்

கவலைகள் ஏதுமற்ற
குழந்தையின் மகிழ்ச்சி

கந்தகபூமியில் நெருப்பு மூட்டி
இதயத்தைக் கொழுத்திய கோபம்

சிறுகதை படித்த பின்னர்
சிலாகித்து வரும் ஆச்சர்யம்


அது ஒரு தியானம்
கண்களும் உள்ளுணர்வும் சங்கமமாகி
 நரம்புகளுக்கு நாணேற்றி

நொடிப் பொழுதில்
திண்ம திரவ வாயு நிலைகளை
மாற்றி மாற்றி உருவாக்கும்

வார்த்தைகளில் அடக்க முடியாத
ஒரு வசீகரமான உணர்வு
படங்களைக் கிளிக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும்.










ALT+3

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:34 PM | 0 பின்னூட்டங்கள்
பரீட்சைக்குப் படிக்க ஆரம்பிக்கும் நாட்களில் புத்தகத்தைத் திறந்து 10வது நிமிடத்தில் தோன்றிய கவிதை(அப்படியும் சொல்லலாம் =P) இவை.இவற்றை உங்கள் காதலன்/காதலிக்குக் கொடுத்து உங்கள் காதல் FAIL ஆனால் அதுக்கு சங்கம் பொறுப்பாகாது.


பரீட்சைக்குப் படிக்கும் போது
எங்கிருந்தோ ஓடி வந்து
கண்ணுக்குகள் புகுந்துகொள்ளும்
அதிவேக தூக்கத்தின்
வேகத்தையும் முறையடித்து
கண்களுக்குள் புகுந்து
கனவாக வந்துவிடுகிறாய் நீ

உன்னிடம் காதலை சொல்ல -
நான் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும்
இறுதிப் போட்டியில் தோற்கும்
இலங்கை அணி போல் ஆகிறதே
என்ன காரணம்?

தூக்கமும் பேஸ்புக்கும் போல
இருக்கும் நம் காதல்
எக்‌ஸாமும் தூக்கமும் போல்
சேர்வது எப்போது?

Crack file கிடைக்காத Software ஆக
தினம் தினம் தேய்ந்துகொண்டிருக்கிறேன்
Crack ஆக வருவாயா? இல்லை
Uninstall செய்துவிட்டுப் போவாயா?




சில பாடல்களைக் கேட்ட உடனேயே அடடா என்ன ஒரு அருமையான தத்துவப்பாடல் என்று மெய்சிலிர்த்துப் போய் அப்பிடியே மீண்டும் மீண்டும் வரிகளைக் கேட்கத் தூண்டும். அந்த வகையில் "ஓ மகசீயா.." பாடலுக்குப் பிறகு எனக்கு பிடித்துப் போன(கிட்டத்தட்ட பக்கத்தில் இருப்பவர்களெல்லாம் எனக்குப் பைத்தியம் பிடித்துப் போச்சோ என்று நினைக்க வைத்த) பாடல் கலியுகம் படத்தில் இடம்பெற்ற "அஜல உஜல மசாலா கம்பனி" என்ற பாடல். என்ன ஒரு தத்துவமான வரிகள், அதுவும் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் வித்தியாசமான கோணங்களில் அர்த்தங்களை அள்ளித் தெளித்து அப்படியே வயிறு வெடித்து பல்லு எல்லாம் கொட்டி, தாடைகளில் எல்லாம் வலியெடுக்கும் அளவுக்கு சிரிப்பை ச்சா சிந்தனையை தரும் பாடல்.

"வாழ்வு என்ன மாயமான வாழ்வுதானடா - உன்
ஆட்டமெல்லாம் முடிந்த பின்னே ஓட்டம் தானடா"

என்று வாழ்க்கை திருக்குறள் போல இரண்டு வரிகளில் தெளிவாகச் சொல்லிவிடுகிறது இந்த வரிகள். அதற்குப் பிறகு வரும் வரிகளின் அர்த்தம் தான் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய வரிகள்.

"அஜல உஜல மசாலா கம்பனி
பல்பலா ரஸ்கோலா பிஸ்கோத்துக் கம்பனி"

அதாவது அஜல உஜல என்ற மசாலா தயாரிக்கும் கம்பனியில் வேலை செய்யும் பற்பல ஊழியர்களுக்கு கோலாவும் பிஸ்கோத்தும் கொடுக்க வேண்டும். அதாவது இந்த வரிகளில் ஏழைகளுக்கு வேலை நேரத்தில் சாப்பாடு வழங்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் மரண கானா விஜி.

வானத்தில தேவதை போல மனசில வச்சேன்
உள்ள ஓடும் உசிர நானும் கையில புடிச்சேன்
உன் மூக்கிலக்கீர முன்முத்து மூக்குத்தி மூளையைப் பிரட்டுது
டப்பா சோறு போல மனசு டான்சு ஆடுது

மரண கானா விஜியின் அற்புதமான குரலில், சலனமில்லாமல் ஆரம்பித்து மெதுவாக அழகாக நகர்ந்து வரும் பாடலின் அடுத்து வரும் இந்த வரிகள் இன்னும் சில காலங்களில் காதல் காவியங்களில் இடம்பிடித்து தமிழ் இலக்கிய உலகை உலுக்கி ஆட்டிப்படைக்கப் போகிறது என்பதில் ஐயமில்லை.

தேவதைகள் பூமிக்கு வருவதில்லை எனவே தேவதையை கவிஞர் மனதிலே வைத்துக் காதலிப்பதாகவும், நாடித்துடிப்பை அறிய வைத்தியர்கள் கையில் நாடி பிடித்துப் பார்ப்பதை கருத்தில் கொண்டு உள்ள ஓடும் உசிரை கையில புடிச்சேன் என்று சொல்லும் கற்பனை அபாரம்.

பெண்களின் மூக்குக்கும் மூக்குத்திக்கும் மூளைக்கும் ஆரம்ப எழுத்து மட்டுமல்ல ஆண்களின் மூளையைப் பிரட்டி யோசிக்க வைக்கக் கூடிய அற்புத ஆற்றல் இருக்கிறது என்பதை எதுகை மோனையுடன் சொல்லியிருப்பதும், சோற்று டப்பாவை கொண்டு செல்லும் போது டப்பாவுக்குள் இருக்கும் சோறு எப்படியெல்லாம் பாடுபடுமோ அப்படிப் பாடுபடுவதாகக் குறிப்பிடுவது வரை பிரமாதம்.

ஓட்ட மைதானத்தில வெளையுதடா நெல்லு
நீ சண்டை வந்தா எடுக்காதடா கல்லு
பீல் பண்ணாதடா லச்சை நான் காறி உமிழ்வேன் எச்சை
நீ சாராயத்தைக் குடிச்சா நான் சண்டையில புலி
சென்ரல் ஜெயில்ல அண்ணன் தம்பிக்கு குடுக்கிறான்டா கழி
கழியின்னா கெவரு இது கவர்மன்டு பவரு
அட என்னா தம்பி நிக்குற இடத்த விட்டு நவரு
கஞ்சித்தண்ணி புல்லாவுக்கு
பழக்கத்திலுள்ள பாப்பாவுக்கு ஊத்தினான்டா தேரு
மச்சான் அவ போறா அவ எனக்கு மொற
கையால விட்டேன் பாரு அறை
வாயில மூக்கில தள்ளப் போவுது நொரை
அது வரை மிகவும் அமைதியாகச் சென்று கொண்டிருந்த பாடல் திடீரென்று வேகம் பிடித்து பள்ளத்தில் இறங்கிய பிரேக் இல்லாத சைக்கிள் போல வேகமாகச் செல்கிறது.

ஒவ்வொரு வரியும் ஆச்சரியங்களையும், வியப்பையும், மரண கானா என்ற பெயர் ஏன் தனக்கு வைக்கப்பட்டது என்பதையும் பாடலாசிரியர் காட்டுவதாகவும் அமைகிறது. இந்தப்பாடல் சரித்திரத்தில் முக்கிய இடம் பிடித்து அனைவது தலையையும் பிய்த்துக் கொண்டு கட்டாயம் தெருத்தெருவாகஅலைய வைக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. =P



என் முந்நாள் என்னவளே!


காதல் தீவிரவாதம்
அதில் இடைநழுவல்களுக்கு இடமில்லை
உன் மூச்சுத்தான் என் சுவாசம் 
அதில் இளந்தென்றலுக்கு இடமில்லை
உன் பேச்சுத்தான் என் கீதம்
அதில் வேறு இசைகளுக்கு இடமில்லை
உன் நிழல்தான் என் நிஜம் 
அதில் என் உருவத்துக்கு இடமில்லை
உன் தடம் தான் என் பாதை
அதில் வேறு பாதைகளுக்கு இடமில்லை


என் மனதுக்குள் எனக்கே 
கல்லறை எழுப்பி
இதயத்தை துண்டு துண்டாய் 
வெட்டி வீழ்த்தி
இரத்தம் சொட்டச் சொட்ட 
ஓடிப்போகச் சொல்கிறாயே


கரைகடந்து போன பின்னர் 
வெந்நுரையைத் எடுத்துவரச் சொல்லி
கடலில் தள்ளிவிடுகிறாயே
குளிர் பனித்துளியாய் இருந்த உன்னை
கடுஞ்சூரியனாய் மாற்றியது யார்?

முதலாவது என்பதிலுள்ள
சுகங்களை நீ அறிவாயா?
முதலாவது என்பதிலுள்ள
வலிகளை நீ அறிவாயா?


காட்டு யானையின் கால் பட்டு 
உடைந்தகண்ணாடித் துகள்களாய்- காதலை
சில்லுசில்லாய் நொறுக்கிவிட்டாய்
வாரணம் கனக்கும் மனதுடன் நான்
ஓடிய பாதையெங்கும் - உன்
பெயரை உச்சரித்து இரத்தம் 
உறைந்து போவதை நீ அறிவாயா


யதார்த்தம் என்ற பெயரில் சில
நிஜங்கள் பேசி - என்
உயிர் ஊசி பிடுங்கிவிட்டாய்
பதிலுக்கு நிஜம் பேசி உன்
உயிரைப் புசிக்கமாட்டேன்
தயவு செய்து போய்விடு!


ருவீட்ஸ் || Tweets #007

பதிவிட்டவர் Bavan | நேரம் 8:23 PM | 9 பின்னூட்டங்கள்
 
 -1-
காலம் கடந்த ஞானத்தை maturity என்று சொல்லலாமா? #டவுட்டு
-2-
ஆங்கிலப்பரீட்சையில் நாம் எழுதும் பதில்கள் புதுக்கவிதை மாதிரி, இலக்கணப் பிழைகளை கருத்தில் கொள்ளாதீங்க #பின்குறிப்புINஎக்ஸாம்PAPER
-3-
கண்ணை முடு, மூக்கைப்பார், இப்போ கண்ணைத்திற... எழுந்து நில் கைகளைத்தூக்கு, இப்போ 2கால்களையும் தூக்கு..:P #நித்தியிசம்:P
-4-
ஒருவரை கோபப்படுத்த 2வழிகள்,1-அவரின் சுயகௌரவத்தை சீண்டிப்பார்க்கலாம் 2-அவர் ஆழ்ந்தஉறக்கத்திலிருக்கும் போது தட்டிஎழுப்பி gdn8சொல்லலாம்
-5-
காதலிக்குறவங்க எல்லாரும் அரசியல்வாதிகள் மாதிரி, எந்த நேரத்தில என்ன செய்வாங்க,அதை எதுக்கு செய்யுறாங்கன்னே யாருக்குமே தெரியாது...:P
-6-
அபிராமி,கண்ணம்மா,சந்தியா,ரோஜா,அஞ்சலை,மல்லிகா,சிந்து,மாலினி,ரசிகா,நகுமா,ஊர்வசி,நிலா,செண்பகம்,தாமரை ஆகிய பெயர்களிளைக்காதலியின் பெயராகக் கொண்டவர்களுக்கு RINGTONE போடுவதில் எந்தச் சிக்கலும் இருந்திருக்காது..:P #ஆராய்ச்சி_முடிவு
-7-
ஒரே பாட்டில் பணக்காரனாகவும், ஒரே பாட்டில் அனைத்துப் பணத்தையும் செலவழிக்கவும் ரஜனியால் மட்டுமே முடியும். #சூப்பர்ஸ்டார்டா..!
-8-
தவறு செய்தவர்களே அது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்காக கவலைப்படும் போது எந்தத்தவறுமே செய்யாத நான் என் மீது போலியாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை எண்ணி கவலைப்படுவதிலோ, கோபப்படுவதிலோ எந்தத்தவறும் இல்லை
-9-
ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் 7 காதல் வருமாம், அது இதுதானா?1-அம்மா 2-அப்பா 3-சகோதரம் 4-நட்பு 5-காதலி 6-மனைவி 7-பிள்ளை #டவுட்டு

-10-
5நிமிடம்தான் என்று ஆரம்பிக்கும் விளையாட்டுக்கள் 5மணிநேரமானாலும் முடிவதில்லை.அட்லீஸ்ட் 1/2 மணிநேரமாவது என்று ஆரம்பிக்கும் படிக்கும் முயற்சிகள் 5 நிமிடம் கூட தொடர்வதில்லை.

-11-
இணையம்,மொபைல்,உறவினர்கள்,வீடு,வாகனம்,தூசு,பஸ்,கவலை, எதுவுமில்லாமல் ஒருநாளாவது எங்காவது ஒரு அமைதியான இடத்தில் போய் இருக்கவேண்டும் #பேராசை

-12-
சோகமான தருணங்களை உணரவைக்க பல வார்த்தைகள் உண்டு, இன்பமான தருணங்களைச் உணரவைக்க ஒரே வழி அதை அனுபவித்து அறிவதுதான் #அனுபவம்

-13-
சொன்னதை செய்யணுமாம், சொல்லாததையும் செய்யணுமாம், bt சொன்ன சிலதைசெய்யவும் கூடாதாம், சொல்லாத சிலதையும் செய்யக்கூடாதாம் #போங்கடாஇந்தஅரசியல்புரியவேஇல்ல

-14-
யாரிலாவது கோபமிருப்பின்அவர்களை நினைத்து வெறுமனே பல்லை கடிப்பதை விட,வாயில் ஏதாவது உணவைப் போட்டுவிட்டுக் கடிக்கலாம். உடம்புக்கும் நல்லது :P

-15-
'முதன்முதலாக' என்ற வார்த்தைக்குள் தான் அதிக மகிழ்ச்சிகளும், சோகங்களும குடியிருக்கின்றன.

-16-
மானம் என்பதன் எதிர்ச்சொல் அவமானம் என்றால் டேய் என்பதன் எதிர்ச்சொல் ஏன் அடேய் என்று இருக்கக்கூடாது. #டவுட்டு..:P

-17-
பழையபாடல்களின்BGMகுதிரைவண்டியில் போவதுபோலவும், புதியபாடல்கள் விமானத்தில் போவதுபோலவும் எண்ணத்தையும்கொடுக்கிறது#அவதானிப்பு

-18-
தூக்கமில்லா இரவுகளில்தான் தத்துவங்கள் பிறக்கின்றன, உடனே அதை பக்கத்திலிருப்பவனுக்கு சொல்ல முற்படும்போது உதைகளும் பிறக்கின்றன..:P

-19-
தத்துவம் என்பதில் தத்=சிங்களத்தில் பல் என்று பொருள். து=துப்பு என்பதை குறிக்கிறது. வ(அ)ம்=மழலை மொழியில் சாப்பாடு என்று பொருள். ஆகவே 'பல்லு விளக்கிட்டு சாப்பிடு என்று பொருள் #தத்துவம்பற்றியதத்துவம் :P

-20-
"புதியது" என்ற ஆண்டாண்டு காலமாய் பயன்படுத்தப்படும் பழைய சொல் மட்டும் பழையதாக இருந்தாலும் புதியவற்றைக் குறிப்பிடப் பயன்படுகிறது.

-21-
உயர் அதிகாரி குடிகாரனாக இருந்தால்,அவனிடம் திட்டு வாங்குவதை விட அவனை அறைந்து விட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறிவிடுங்கள் குடிகாரர்களுக்கு நீங்கள் அறைந்தது ஞாபகமிருக்கப்போவதில்லை..:P

-22-
மழை+ குளிர்+ பஸ்+ ஜன்னலோரசீட்+ இதமானகாற்று=சொர்க்கம் #அனுபவம்

-23-
தேவையானவற்றுடன் பிடிக்காத ஒன்றுசேரும்போது அதுநமக்கு தேவைப்படுவதில்லை,தேவையில்லாத ஒன்றுடன் தேவையான ஒன்றுசேரும்போது அதுநமக்கு தேவைப்படுகிறது
-RT-
:Facebook - வில்லங்கம் தானா தேடி வாற இடம் Twitter - நாங்களே வில்லங்கத்திட்ட போய் மாட்டுற இடம் :P

ருவீட்ஸ் || Tweets #006

பதிவிட்டவர் Bavan | நேரம் 10:40 PM | 3 பின்னூட்டங்கள்
 
 
 -1-
பஸ்கண்டக்டர் 2நாள்பழகிய பின் 3வது நாளிலிருந்து 12RSக்கு பதில்10RSதான் எடுக்கிறான் bt TICKETபோடுவதில்லைங்கிறது கூடுதல்தகவல் #கணக்குலவராதகாசு
-2-
எனக்கு மட்டும் ஏன் எதுவுமே நடக்கல? & எனக்கு மட்டும் ஏன் இப்பிடியெல்லாம் நடக்குது?, இரண்டுமே விரக்தியின் உச்சத்தில் கேட்கப்படும் கேள்விகள் 
-3-
காதல் எங்கிறது call மாதிரி answer பண்ணாட்டி missedcall ஆகிடும். BT நட்பு எங்கிறது SMS மாதிரி நாமளா அழிக்குற வரைக்கும் நம்மை விட்டு போகாது
-4-
காதல் என்பது சிகரட் புகை மாதிரி புகை பிடிக்கிறவனோட சேர்த்து பக்கத்துல இருக்கிறவனையும் பாதிக்கும்..:P
-5-
நேற்றுமுன்தினம் தாத்தா ரசித்தார்,நேற்று அப்பாரசித்தார்,இன்று நான்ரசிக்கிறேன்,நாளை மகன்ரசிப்பான்,நாளைமறுதினம் பேரனும் ரசிப்பான்
-6-
தனிமையில் இருக்கும் போது எறும்பைக்கூட இரசிக்க முடிகிறது #அனுபவம்
-7-
காதல் எங்கிறது குத்து song மாதிரி வந்த உடனே சூப்பரா இருக்கும் but மனசுல நிலைக்காது, ஆனால் நட்புங்கிறது இளையராஜாட melody மாதிரி என்றும் கூடுவே இருக்கும் #Evergreen 
-8-
தமது சுயத்தை சுத்தமானதாகக் காட்டிக்கொள்ள சொல்லப்படும் "எனக்கு சுயநலமில்லை" என்றவார்த்தையில்தான் சுயநலம் அதிகம்பொதிந்திருக்கிறது. #சுயநலம்
-9-
இளையராஜாவின் பாடல்களின் பின்னணிஇசையை மட்டும்கூட கேட்டுக்கொண்டே இருக்கலாம்.பாடலின் ரசனை குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கவே செய்கிறது

-10-
தத்துவம்=செமபஞ்ச், ஆங்கிலம்=பீட்டரு, சீரியஸ்=செமகாமடி, ஃபீலிங்ஸ்=பிலிம்காட்டுதல் காதல்=டைம்பாஸ், நண்பர்கள்=உலகம் #பெயர்மாற்றம்

-11-
வாழும்போது நமக்கு சாவுண்டு ஆனால் சாகும்போது நமக்கு வாழ்வில்லை. #என்னங்கடா_நியாயம்_இது

-12-
தேவையானவை தேவையானபோது தேவைக்கதிகமாகக் கிடைக்கும் போது தேவைப்பட்ட தேவையானவை கூட தேவையில்லாமல் போகின்றன. #தேவையா :P

-13-
ஒருவிடயத்தை எந்தவித எதிர்பார்ப்புமின்றிஇழப்புக்களை பற்றி கவலைப்படாமல் செய்கிறோமோ அதான் நம்ம Passionனாம்,அப்ப எனது passion என்ன நித்திரையா?

-14-
தனக்குப்பிடித்ததை மட்டுமே செய்யும், வெளிப்படையாக இருப்பவர்களுக்கு பெயர் சுயநலவாதி என்றால், நானும் சுயநலவாதிதான்.

-15-
யாராவது என்னைக்கோபப்படுத்திவிட்டோமென்று மன்னிப்புக்கேட்டால்,நம்மளையும் கோபமெல்லாம வரும் ஆள் என்று நினைச்சிட்டாங்களே என்ற கவலைமேலிடுகிறது

-16-
ஒண்ணுமே இல்லாத விடயத்தை ஒண்ணுமே இல்லை என்று 100 Comment+150Likes போட்டபிறகு, சொல்லும் இடம் =FACEBOOK

-17-
யாருக்காகவும் தன்னிலை மாறாதிருத்தல் நல்லகொள்கைதான் ஆனால் எனது நடவடிக்கைகளால் ஒரு ஊரே பாதிக்கப்படும்போது மாறுவதில் தவறில்லை.

-18-
நான் நானாகத்தான் இருப்பேன் என்பதன் கருத்து நான் அனைத்திற்கும் முரண்பாடானவனென்பதல்ல

-19-
குற்றம் குற்றமெனஉணரப்படும்வரை குற்றம்குற்றமாகத் தெரிவதில்லைஆனால் குற்றத்தைகுற்றமெனஉணர்ந்தபின் குற்றத்தை குற்றமெனஉணராததுபோல்நடிப்பது குற்றமே

-20-
மேசையில் இருக்கும் பென்ட்ரைவை எடுத்து USBபோர்ட்டில் அடிக்க அரைமணிநேரத்துக்கு மேல் எடுத்துக் கொள்பவனே உண்மையான சோம்பேறி. (உ+ம் - நான்:P)

-21-
உயிர் மீது ஆசை இருப்பவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை 'என்னை நம்பி எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா?'

-22-
முட்டாள்களின் முதல் ஆயுதமாகவும், அறிவாளிகளின் கடைசி ஆயுதமாகவும் இருக்கிறது கோபம் #படித்ததில்பிடித்தது

-23-
அறுகம்புல் போல நாம் வளர்த்த காதலை, எடுமைமாடு போல் உங்கப்பன் மேய்ந்துவிட்டுப் போனானே..:P #கேட்டதில்_பிடித்தது

-24-
தலையிலிருந்து அடிக்கடி முடி கொட்டிறத்துக்கு காரணம் என்னனு தெரியுமா? தலையிலே முடி இருக்கிறதுதான் #தத்துவம்

-25-
நண்பன் ஒருவனின் வீட்டு வாசலில் பெரிய சைசில் சாய்பாபா படம் மாட்டியிருக்கிறார்கள், திருஷ்டிக்காகவா? #சந்தேகம்

-26-
எதிர்காலத்தை எண்ணி அஞ்சாதவனே நிகழ்காலத்தை நுகரலாம். இறப்பிற்கு அஞ்சுபவன் வாழ்வதில்லை.- சைரஸ்

-27-
சில முக்கியமான விடயங்கள் நடந்தேறிய பின்னர் நாம் சொல்லும் டயலொக் -WHATEVER HAPPENS LIFE HAVE TO MOVE ON-

-28-
“இருள் இருள்” என்று சொல்லிக் கொண்டு சும்மாயிருப்பதைவிட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்ற முயற்சிசெய் - கன்பூஷியஸ்-

-29-
நாங்கெல்லாம் கவனமாப்பாத்தா காதல் வரும் கடுப்பாப்பாத்தா கவிதை வரும் எப்புடி பஞ்ச்?..:p


-30-
கோபம் வந்தால் கண்ணாடியப்பாருங்க காமடியா இருக்கும்#அட்வைஸ்

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்