Related Posts with Thumbnails

ருவிட்ஸ் || Tweets #002

பதிவிட்டவர் Bavan | நேரம் 3:37 PM | 6 பின்னூட்டங்கள்

-01-
சிலரின் உண்மை முகத்தை அறிந்ததும், நேரடியாகவே சொல்லிவிட்டு விலகிவிடுவது சிறந்தது. தேவையற்ற மனஅழுத்தங்களைத் தவிர்க்கலாம்.
 -02-
"எங்கேயும் காதல்..விழிகளில்" பாடலை headsetல் கேட்டபடி பார்க்கும் போது உலகம் ரொம்ப அழகாகத் தெரிகிறது. Real lifeலயும் BGM இருந்திருக்கலாம்


-03-
நண்பர்களை நக்கலடிக்கும் போது அது அவரைக் காயப்படுத்துவதாகவோ, கவலையடையச் செய்வதாகவோ உணர்ந்தால் உடனே மன்னிப்புக் கேட்டுவிடுவது நலம் #அனுபவம்

-04-
வெளிப்படையாக இருப்பது வெளிப்படையாக தெரியும்படி வெளிப்படையாக இருப்பவர்கள்தான் உண்மையில் வெளிப்படையாக இருக்கிறார்கள் #வெளிப்படை

-05-
நண்பர்களின் மரணம் ஜீரணித்துக் கொள்ளமுடியாதது.சிலவேளைகளில் சிலர் எதிரியாக,பிடிக்காதவர்களாக இருந்திருக்கலாமென்று தோன்றகிறது

-06-
அழகு, திறமை,கல்வி, விளையாட்டு, நல்ல பண்பு,தலைக்கனம் இல்லாமை எல்லாம் இருப்பவர்களுக்கு ஆயுள் மட்டும் குறைவாக இருக்கிறது #உண்மை
-07-

"மதிப்பெண்" என்பதில் "பெண்" இருப்பதாலோ என்னமோ அது பெண்களுக்கு மட்டும் அதிகமாக வருகிறது..:P

-08-
வகுப்பறைகளில் குழப்படிகாரப் பொடியங்கள் குழப்படி செய்யாமல் இருக்க ருவிட்டர் உதவுகிறது #கடைசி_பெஞ்சிலிருந்து_ருவிட்டடிப்போர்_சங்கம்

-09-
பச்சைக்குழந்தை, பச்சைப்பொய், பச்சைத்தண்ணி இதுவெல்லாம் பச்சையாவே இருக்கிறதில்லையே பிறகு ஏன் அந்தப் பச்சை #டவுட்டு

-10-
வெட்டியாய் இருக்கிறோம் என்று சொல்லி சொல்லியே வெட்டியாய் இருப்பவர்கள் வெட்டியாய் இல்லாமல் போய் விடுகிறார்கள் #வெட்டி


எனக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு சந்தேகம் உழுந்து வடையில் ஓட்டை இருக்கு ஆனால் பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் என்று? அதுக்குக் காரணம் என்ன என்று மல்லாக்கப்படுத்துகிட்டு விட்டத்தைப் பார்த்தபடி யோசிக்க ஆரம்பிச்சு அப்பிடியே தூங்கிப்போனேன். அப்போ கனவிலே விருந்தூர் மன்னர் சோத்துச்சக்கரவர்த்தியின்அமைச்சர் பருப்பு தோன்றி அதன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.

"முன்னொரு காலத்தில விருந்தூர் என்ற நாட்டை சோத்துச்சக்கரவர்த்தி என்ற ராஜா ஆட்சி செய்து வந்தார். அவரின் ஆட்சியின் கீழ் உழுந்தூர், பருப்பூர் என்று இரண்டு ஊர்கள் இருந்திச்சாம். அந்த ரெண்டு ஊர்க்காரர்களும் பாயாசூர், கடலையூர்க்காரர்கள் எல்லாரும் மூக்குமேல விரலை வைக்கிற அளவுக்கு ஒற்றுமையா, ரொம்ப சந்தோஷமா மற்ற இருந்து வந்தாங்களாம். தங்களுக்குள்ள போட்டி பொறாமையே வரக்கூடாது எண்டதுக்காக எந்தப்போட்டியா இருந்தாலும் இரண்டு ஊரும் சமமாவே மார்க் வாங்கிறதெண்டு முடிவெடுத்து, அதையே கடைப்பிடிச்சு வந்தாங்களாம்.

ஒருநாள் விருந்தூர் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு போட்டி ஒன்று வைக்கப்பொவதாக அறிவிச்சாங்களாம். அதாவது மன்னரின் பிறந்தநாளுக்குயார் சிறந்த தின்பண்டம் செய்து கொண்டு வந்து தாறாங்களோ, அவங்களுக்கு "ஆண்டின் சிறந்த தின்பண்டி" என்ற பட்டம் குடுப்பதாக சொன்னாங்களாம்.

போட்டிதினத்தன்று அனைவரும் மைதானத்தில் கூடியிருந்தாங்களாம். அப்ப போட்டி ஆரம்பிச்சது. உழுந்தூர்க்காரர்களும், பருப்பூர்க்காரர்களும் மும்முரமாப் போட்டியில் கலந்து தங்கள் தின்பண்டங்களைச் தயாரிக்க ஆரம்பிச்சாங்களாம். முதலில் செய்து முடிக்கிறவங்களுக்கு போனஸ் பொயின்ஸ் கிடைக்கும் என்று தீடீரென மன்னர் அறிவிக்க, உடனடியா உழுந்தூர்க்காரர்கள், "எனக்குத்தான்.. எனக்குத்தான்.. இந்தாங்க உழுந்து வடை" என்று சத்தமாச் சொல்லிட்டு உழுந்துவடையை எடுத்திட்டு மன்னரிடம் போனாங்களாம்.

உடனே சாக்கான பருப்பூர்க்காரனுகள், என்னடா இது என்று பார்க்க, வழக்கம்போல ஒரே மாதிரி வடை சுட்டு இரண்டு பேரும் பரிசைப் பகிர்ந்துக்கலாம் என்ற கொள்ளையை மீறி உழுந்தார்க்காரனுகள் கிரியேட்டிவிட்டியாக யோசிச்சு உழுந்து வடையில் ஓட்டை போட்டு அதன் தொடு மேற்பரப்பைக் கூட்டி சீக்கிரமா வடையைப் பொரிய வச்சு ஜெயித்து தூரோகம் செய்ததால், அன்றிலிருந்து உழுந்தூர்க்காரனுகளை எதிர்க்கும் நோக்கில் பருப்புவடையில் ஓட்டை போடுவதில்லையாம்"

என்று அமைச்சர் பருப்பு சொல்லிமுடிக்க, எங்கேயோ கருகிற வாசனை வர திடுக்கிட்டு எழுந்து பார்த்தா அடுப்பில் ஆசைஆசையாய் உழுந்து வடை சுட்டுச் சாப்பிடலாம் என்ற எனது நினைப்பில் பாழாய்ப்போன அடுப்பு அதிகமாய் எரிந்து வடையை கருக்கி எனது வயிற்றில் மண்ணைப் போட்டிருந்தது.

"ஐயோ வடபோச்சே...."


கூடித்திரிந்த காலங்கள்
ஆடித்திரிந்த நேரங்கள்
பாடித்திருந்த கானங்கள்
வாடி இருந்த நிமிடங்கள்

கோடிகோடியாய்க் கொடுத்தாலும்
மீட்க முடியாத தருணங்கள்
அன்டோ அவனிற்காய்
வார்த்தைளைத் தேடித் தெரிந்தெடுத்து
கண்களில் நீரோடு
கவி எழுதத் தொடங்குகிறேன்

ஒன்பதாம் ஆண்டில்
ஒருவனாய் உள்நுழைந்தாய்
இனிமையான பேச்சால் - எம்
இதயங்களில் குடிகொண்டாய்

கணனியைக் கரம்பிடித்தாய்
கிறிக்கெட்டைக் காதலித்தாய்
நட்பினால் எம்மனதில்
நங்கூரமாய் இடம்பிடித்தாய்

நட்புக்காக அன்டோவா
அன்டோவுக்காக நட்பா
நட்பே ஒரு நிமிடம்
நடுங்கித் தலைசொறியும்

கடுஞ்சொல் பேசி உன்னைக்
கண்டதில்லை யாரும்
எம்மனதில் இனிமையாய் - உன்
நினைவுகள் என்றும் வாழும்

காலயந்திரம் கண்டுபிடித்து
உன்னை மீட்போம் என்ற நம்பிக்கையில்
கவிதையை முடிக்கிறேன்
கண்ணீரை இன்னும் வடிக்கிறேன்


இந்தப்பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் யாரும் கற்பனையே, யார் மனதையும் புண்படுத்தும் நோக்குடன் எழுதப்பட்டதல்ல. வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே...
 ஸ்ஸ்ஸ்சப்பா... 
இப்பிடியே போய்க்கிட்டிருந்தா இதுக்கொடு முடிவே கிடையாதா? எனவே இலங்கைப்பதிவர் சங்கத்துக்கு ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன் வழங்கப்பட்டிருக்கு.

இனிமேல் எல்லாரும் சங்கத்து ரூல்ஸ் அன்ட் ரெகுலேசன் படிதான் நடக்கோணும். ங்கொய்யால இல்லாட்டி கும்பீபாகத்தில கம்பி எண்ணவேண்டியிருக்கும் சொல்லிட்டன்.


  • முதலாவது ரூல்ஸ், சங்கத்து ரூல்ஸ் எல்லாத்தையும் கட்டாயம் கடைப்பிடிக்கணும். இதுதான் முதலாவது முக்கிய ரூல்ஸ்.

  • அடுத்து எல்லாருக்கும் பதிவர்களின் லிஸ்ட் கொடுக்கப்படும், நீங்க அண்டைக்கு சாப்பிட்டீங்களோ, வேலைக்குப் போனீங்களோ, பல்லுவிளக்கினீங்களோ எண்டெல்லாம் எங்களுக்கு கவலையில்ல, வாக்குப் போட்டே ஆகணும். போடத்தவறினால் 3 நாள் போட்டித்தடை மாதிரி ஏதாவது 3 நாள் பதிவுத்தடை வழங்கப்படும்..:P

  • மூன்றாவது, எல்லாரும் கட்டாயம் பின்னூ(ஊ)ட்டம் ஊட்டியே ஆகணும். டெய்லி மில்க் சொக்கலேட்டில இருந்து, வடை வாழைப்பழம், முறுக்கு, வடை, அதிரசம், ஆப்பம், புட்டு, இடியப்பம், பிட்சா, பர்கர் சமோசா, ரோல்ஸ் எண்டு எதையாவது ஊட்டி ஊட்டச்சத்தை வழங்காமப் போகவே கூடாது..:P

  • நான்காவது, யாராவது ஈகோ, இலையான்கோ, கரப்பான்பூச்சிகோ, சிலந்திகோ, பாம்புகோ, பல்லிகோ எண்டு எதையாவது வச்சிருந்தீங்க உங்களை GO எண்டு சொல்ல வேண்டி வரும்..:P

  • ஐந்தாவது, உங்களுக்குப் பிடிக்குதோ பிடிக்கேலயோ அது உங்கட பிரச்சினை ஆனால் எல்லாப் பதிவையும் வரிக்கு வரி வாசிச்சே ஆகணும். ஒவ்வொரு மாதக் கடைசியிலும் பரீட்டை நடாத்தப்படும். அதற்கான கேள்விகள் அதிலிருந்தே போடப்படும். ஒசாமா செத்ததில இருந்து தமன்னாட நாய்க்குட்டி செத்தது வரைக்கும் பிங்கர் டிப்சில வச்சுப் பதில் சொல்லத்தயாரா இருக்கோணும்.

  • கொடுந்தமிழ்ல பதிவெழுதுவது தடைசெய்யப்பட்டள்ளது. உதாரணத்துக்கு "ஓமகசீயா ஓ.. மகசியா நாக்குமுக்குநாக்கா ஓ சக்கலாக்கா ஓ ரண்டக்கா" போன்ற இலகுவான மொழி நடையில் மட்டுமே பதிவெழுதவேண்டும்.

  • கடைசியா முக்கிய ரூல்ஸ் கிரியேட்டிவிட்டி இல்லாம யாராவது பதிவெழுதினீங்க, தொலைச்சுப்புடுவன் தொலைச்சு.எல்லாருக்கும் கிரியேட்டிவிட்டி கிலோ 75 ருபாக்கு விற்கப்படும், தேவையான அளவு வாங்கிக்கலாம்.

ருவிட்ஸ் || Tweets #001

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:45 AM | 21 பின்னூட்டங்கள்

-01-

ஒரு விடயம் தெரியாமலிருப்பதற்கும், தெரியாதது போல் நடிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கு
 -02-
அழகு ஆபத்து இரண்டுக்கும் நூலளவுதான் வித்தியாசம் இல்லை இல்லை"அ"வைத்தவிர அனைத்துமே வித்தியாசம் அழகு screen server ஆபத்து wallpaper#பப்புமுத்து
-03-
படைப்பில் வந்தது ஒன்று பெளடரால் வந்தது ஒன்று கேசரை ஆட்டினா கலைந்து விடும் ஸ்கிறீன் சேவர் தண்ணிபட்டால் கலைந்து விடும் மேக்கப் #பப்புமுத்து
-04-
குவியமில்லாக் காட்சிபேழையாகளாகப்பிறக்கின்ற காதல்கள் மேக்கப்பில்லாக் காட்சிப்பேழைகளால் இறந்துவிடுகிறது #பப்புமுத்து
-05-
"வாழ்வே மாயம்" பாட்டுக்கேட்டால் எல்லாரும் முதலில் கேட்கும் கேள்வி - "இப்ப என்ன பிரச்சனை உனக்கு?" #அனுபவம்
-06-
ராசிகளைக் கண்டுபிடித்தவர் காடும்கடலும் சார்ந்த இடத்தில் பெட்டிக்கடைவச்சிருந்திருப்பாரோ? #கடகம் #துலாம் #சிம்ம்ம் #விருச்சிகம் #மேஷம் #மீனம்
 -07-
எதையும் எதிர்பார்க்காமல் செய்யும் உதவி நம்ம குடும்பத்தையே காப்பாத்துமாம், சில வேளைகளில் எம்மை CLASSஐ விட்டு வெளியிலேயும் நிக்கவைக்கும்:P
-08-
சாவுறியா? ஒரு நாள் பாட்டுக்கேக்காம இருக்கிறியா என்று கேட்டால் சாவலாம்..:-)
 -09-
விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் விண்வெளி வீரர்களால் அழ முடியாது #செத்தா_விண்வெளியில_போய்ச்சாகணும் :P
-10-
தேவையற்ற சூழ்நிலைகளை உருவாக்கிக்கொண்டும் தேவையில்லாத விடயங்களை உள்வாங்கிக்கொண்டும் உங்களைக்குழப்பிக்கொள்ளாதீர்கள் வாழ்க்கை சூனியமாகிவிடும
-11-
தவறை ஒருவர் சுட்டிக்காட்டும் போது மனம் அதை ஏற்பதுமில்லை, செய்த தவறை உணரும் போது தவறைத் திருத்திக்கொள்ள அவகாசம் இருப்பதுமில்லை.
-12-
தமிழ்ல கதைச்சா இவருதான் தமிழ வளர்க்கப்போறாராங்கிறாய்ங்க ENGல கதைச்சா 4ENG PAPERமேஞ்சிட்டுவந்து பிலிம் காட்டுறாங்கிறாய்ங்க#என்னவாழ்க்கடாஇது
-13-
எங்கள் வீட்டில் இருக்கும் வெள்ளைப்பூனை எலி பிடிப்பதற்காகக்கூட தன் நித்திரையை தியாகம் செய்வதில்லை #வெள்ளையா_இருக்கிறவன்_வேலை_செய்யமாட்டான்டா
-14-
ஏன் யாராவது LOVE பண்ணுகிறார்கள் என்றால் "காதலி"க்கிறான்/ள் என்கிறார்கள், "காதலன்"கிறான்/ள் என்று சொல்வதில்லை?? #பெண்ணாதிக்கம்?..:P #டவுட்டு
-15-
 இரு மொழிகளை மாற்றி மாற்றிப் பேசுவதால் மூளை REFRESH அடைகிறதாம் #தங்கிலீஸ்_பேசுவோர்_சங்கம்..:P





நாம் வாழ்க்கையை எப்படி எதிர்நோக்குகிறோமோ, அப்படித்தான் வாழ்க்கை இருக்கும் என்று சொல்லுவார்கள். என்னதான் ஒரு மனிதன் வெளியே சிரித்துக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள்ளே ஏதாவது ஒரு குறை அல்லது கவலை குடிகொண்டுஇருக்கும். அண்மையில் வாசித்த ஒரு உளவியல் பதிவில் ஒரு கேள்வி கேட்டிருந்தார்கள்.

"நீங்கள் தனியாக கடற்கரையில், அலைகள் வந்து வந்து போவதைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறீர்கள். உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?"

இக்கேள்விக்கு விடையை சொல்லிவிட்டு மேலே படியுங்கள். அதாவது நீங்கள் இந்தக்கேள்விக்கு என்ன விடை சொல்லியிருந்தீர்களோ, அப்படித்தான் நீங்கள் வாழ்க்கையை எதிர் நோக்குகிறீர்கள் என்று அர்த்தம். இதே கேள்வியை நான் நண்பர்கள் சிலரிடமும் கேட்டுப் பார்த்தேன், சோகம், மகிழ்ச்சி, விடாமுயற்சி போன்று பல்வேறு விடைகள் சொன்னார்கள்.உண்மையில் பலருக்கு இது சரியாகவே அமைந்தது.

கிறிக்கட் போட்டி ஒன்றில் விளையாட முதல் கிறிக்கற் வீரர்கள் உஷ்ணப்படுத்தும் அப்பியாசங்களை செய்துகொள்வார்கள். அதற்குக்காரணம், திடீரென உடல் ஒரு செயலில் ஈடுபடும் போது தசைப்பிடிப்போ அல்லது வேறு உபாதைகளோ ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். எனவே அதற்கு உடலை இசைவாக்கிக் கொள்ள அவர்கள் உடற்பயிற்சிகளை செய்வர்கள்.


அது போலதான் இதுவரை மந்தமாக அல்லது ஒரு சுவாரஸ்யமற்று சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென ஏற்பட்ட மகிழ்ச்சிகரமான சூழல், நட்புவட்டம் அல்லது ஒரு குறிப்பிட்ட நட்பினால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் திளைத்தவர்களுக்கு ஒரு பிரச்சினை வரும் போது அதை ஏற்றுக் கொள்ளமுடிவதில்லை, அதன் காரணமாக நண்பர்களாகி ஒரு மாதங்கூடக் கடக்காத நிலையில் பலர் இன்று நட்பை முறித்துக் கொண்டு முகங்கொடுத்தும் பேசமுடியாமல் திரிவதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

அதற்குக் காரணம் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பலருக்கு இருப்பதில்லை. இவர்கள் சூழலில் எது நடந்தாலும் அது தமக்கு நடப்பதாக தம்மை அதற்குள் உள்வாங்கி யோசிப்பார்கள், விட்டுக் கொடுக்க மாட்டார்கள், நடக்கும் சம்பவங்களை தமக்காகவே நடப்பதாக உணர்த்த முற்படுவார்கள், எனவே தேவையற்ற சூழ்நிலைகளை உருவாக்கிக்கொண்டும் தேவையில்லாத விடயங்களை தமக்கே நடைபெறுவது போல உள்வாங்கிக்கொண்டும் உங்களைக்குழப்பிக்கொள்ளாதீர்கள் வாழ்க்கை சூனியமாகிவிடும்.

நண்பர்களிடையே பிரச்சினைகள் வரும் போது முடிந்தளவு அதிகம் கோபமாக பேசாதீர்கள் அல்லது பேசாமலே இருங்கள். பேச்சுக்களில் ஆரம்பித்து முறிந்த கைகள் ஏராளம். இரண்டு நாட்களின் பின்னர் பேசும் போது கோபங்கள் ஆறிப்போயிருக்கும். நியாயம் யார்பக்கம் இருந்தாலும் தவறைச் சுட்டிக்காட்டுங்கள்.முக்கியமாக எதையுமே ஊகித்து முடிவெடுக்காதீர்கள். எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேரே சொல்லிவிடுவது நலம்.

முகத்துக்கு நேரே சில விடயங்களை சொல்லிவிடுவது இரு விடயங்களுக்கு நல்லது. 
-1-மனதில் எந்தப் பாரமும் இல்லை.
-2-நாம் முட்டாள்கள் இல்லை என்பது மற்றவருக்கு உணர்த்தப்படும்
-லோஷன்

கட்டாயம் சிலரை நண்பர்களாக வைத்திருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதற்காக அவர்களுடன் கதைக்காமல் விடவேண்டும் என்றும் கட்டாயம் இல்லை. ஒரே விருப்பு வெறுப்புக்கள், ஒரே மாதிரியாக ஆர்வங்கள் உள்ளவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். எனவே ஒரே அலைவரிசையில் உள்ளவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். முக்கியமாக உங்களை சூழலுக்கேற்றவாறு இசைவாக்கப் பழகுங்கள்.


டிஸ்கி: கண்ணுக்கு முன்னால் நடக்கும் சில விடயங்களுக்கு பார்வையாளனாக இருந்து பார்த்ததால் எழுதப்பட்ட பதிவு இது. வேற எதுவுமில்லைங்கோ..:-)


பரீட்சை நாடகத்துக்கு
ஒத்திகை பார்க்கும்
கடைசி நாள்
விடிய விடிய விழித்திருப்பேன்


தன்னைப் படிக்க ஆளில்லையென்று
ஃபான் காற்றில் மோதித்தினமும்
அழுகிறது புத்தகம்


தூரத்தில் அலறும் நாய்
காற்றில் அசையும் ஆடையைப் பார்த்து
மனம் உருவகித்துக் கொண்ட பேய்
எங்கேயோ பசித்து அழும் ஒரு சேய்
நானூறு பக்கங்களை நடுநிசிக்குள்
முடிக்க முயன்று
தோற்றுக்கொண்டிருக்கும் நான்


கோடி நட்சத்திரங்களின் குவியல் வானம்
கோடி எழுத்துக்களின் குவியல் புத்தகம்
உடுக்களை எண்ணமுயன்று
தினமும் தோற்கிறது முகில்
பாடங்களைப் படிக்க முயன்று
இன்றும் தோற்கிறேன் நான்


காற்றின் கொட்டாவியையும்
மரக்கிளைகளின் இரைச்சலையும்
நாயின் காலடி அரவத்தையும்
சருகுகளின் சலசலப்பையும்

காதோரம் கதறும்
நுளம்பின் கானத்தையும்
சந்தத்தைப்பேணும்
கடிகாரத்தின் டிக்டிக்கையும்

எழுதும் போது ஏற்படும்
உராய்வின் ஓசையையும்
அவ்வப்போது செத்துவிழும்
நீர்க்குமிழியின் சிதறலையும்

இன்றுதான் கேட்கிறேன்
முதன்முதலாக

எத்தனை நிசப்தம் இந்த இரவு?
எத்தனை சப்தம் இந்த இரவு?
எத்தனை குரூரம் இந்த இரவு?
எத்தனை அழகு இந்த இரவு?
எத்தனை பயங்கரம் இந்த இரவு?
எத்தனை வசீகரம் இந்த இரவு?

வியந்து முடிப்பதற்குள்
தீர்ந்து போகிறது இரவு,
படித்து முடிப்பதற்குள்
சோர்ந்து போகிறது மனது

படிப்பதற்காக இரவா?
இரவுக்காக படிப்பா?

ஏ ஆசிரியனே!
என் ஒவ்வொரு இரவும்
பரீட்சைக்கு முதல்நாளாய்
மாற்றியமைக்கமாட்டாயா?

-பப்புமுத்து


சின்னமாமா..!

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:43 PM | 9 பின்னூட்டங்கள்

அன்புள்ள சுபாங்கா,
இதுவரை உனக்கு நான்
எந்தCALLலும் எடுத்ததில்லை.
MISSED CALL மட்டுந்தான்


MISSED CALL என்பது

செல்லில் காசில்லாதவனின்
தன்னை அழைக்கச்சொல்லிக்
கொடுக்கும் சிக்னல்

உன் காதுகள் என்
செல்பேசி தொடும்
தூரத்தில்தான் இருக்கிறது.

என்ன செய்வது.
போன்பில் கட்ட முடியவில்லை
அதனால்தான்



பொதுவாக வாழ்த்துக்கள்
அதிகாலையில்தான்
சொல்லப்பட்டிருக்குமே தவிர
இப்படி காரிரவில் இல்லை


பரிசு மழைகளால்
களித்துக் களைத்த உனக்கு
நிம்மதியான காரிருள் சூள்

நள்ளிரவில் இவ் வாழ்த்து மடல்

உணர்ச்சியின் உறுமல்களும்
கீழே கொஞ்சம் காதலும் நிறைந்த
உன் சிறுகதைகள் எங்கே?

உன் கவிதைகள்
அழகானாவை! ஆழமானவை!
அதனால் ஆபத்தானவை!

உன் ஆபத்துக்கள் எங்கே?

வடிவேலுவுடன் சேர்ந்த

பார்த்தீபன் போல்
கவுண்டருடன் சேர்ந்த
செந்தில் போல் 
மரணச்சிரிப்புக்குரிய 
உன் மொக்கைகள் எங்கே?

காதலின் எடை என்ன
என்பதை மில்லிகிராம் சுத்தமாய்ச்
சொல்லிவிடும் காதல் மன்னன் நீயாம்

சாவகச்சேரி சாட்சி சொல்கிறது

பரீட்சைக்குப் படித்திருப்பாயோ 

தெரியாது ஆனால் 
சுஜாதாவின் கதைகளை பாடமாக்கி 
வைத்திருக்கும் நடமாடும் லைபிரரி நீ

பயன்படுத்தாத வானம்
பயன்படுத்தாத சூரியன்
பயன்படுத்தாத நட்சத்திரம்
பயன்படுத்தாத பூமி 

போல்உன் பயன்படுத்தான மணிப்பர்சு
மனிதகுலத்துக்குப் பாக்கியிருக்கிறது

ஆமர்வீதி சந்தியை
விட்டுவெளியே வா.
உன் ATM கார்ட்டை
வெளியேற்று
உன் பார்ட்டிக்காக காத்துக்கிடக்கும்

எமக்கு பிட்சாவை ஓடர் செய்

வழக்கம் போல் இதுக்கும்

சிமைலி போட்டு ஏமாற்றி விடாதே
பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 
சின்னமாமா..!


-பப்புமுத்து



Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்