Related Posts with Thumbnails

ருவீட்ஸ் || Tweets #005

பதிவிட்டவர் Bavan | நேரம் 8:17 PM | 5 பின்னூட்டங்கள்
-01-
கொட்டாவி விடும் போது நாக்கை தொட்டால் கொட்டாவி நின்றுவிடுமாம்..:P #மாணவர்கள்_கவனத்திற்கு
-02-
நல்லவனைக் கெட்டவனும் நல்லவன் என்று சொல்லலாம், ஆனால் கெட்டவனை நல்லவன் தான் கெட்டவன் என்று சொல்லலாம் #முரண்பாடு #சமுகம்
-03-
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல.. எனக்கு பிடித்துப்போகும் பாடல்களை தேடிப் பார்த்தால் கூடுதலாக வைரமுத்துதான் அதை எழுதியிருக்கிறார் :-))
-04-
மனிதன் கண்டுபிடித்த அற்புதமான போதை மருந்து = இசை
-05-
முடிவுதெரியாமல் முடிந்துபோகும் கனவுகளை மீட்டு முடிவை அறிவதற்கு ஓர் கருவி வேண்டும்.
-06-
5வருடங்களுக்குமுன் labல் நாம் படிப்பதற்காக உயிர்நீத்த தவளை இன்றும் அவ்வப்போது என்னால் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது
-07-
குடை இல்லாமல் மழையில் நனைந்ததால் தான் பிறந்தது குடை, விடை தெரியாமல் EXAMHALLல் இருந்தால்தான் பிறக்கும் விடை#படிக்காமல்EXAMசெய்வோர்சங்கம்
-08-
ஆண்டவரில் "ஆண்" இருப்பதாலேயோ என்னமோ, அவர் பக்தர்களிடம் அதிகம் திட்டு வாங்குகிறார்..:P
-09-
நினைவாற்றலை கட்டுப்படுத்தும் மூளையை வைத்துக்கொண்டு இதயம்நினைக்கிறது என்று பொய்சொல்வதாலேயோ என்னமோ பலரது காதல் பஞ்சராகிப்போகிறது :P
-10-
Sklபடிக்கும்நேரம் FBயில் இதயம்பற்றிstatusபோடுவோர் இருந்திருந்தால் குருதிச்சுற்றோட்டத்தொகுதி பாடத்தில் சிறப்புத்தேர்ச்சியடைந்திருப்பேன்:P
-11-
முடிவெடுக்காமல் நேரத்தைக் கடத்திறதும், தப்பான முடிவெடுக்கிறதும் இரண்டும் ஒன்றுதான். Via film.
-12-
 சகிப்புத்தன்மையை வளர்த்துக்கிறதால தான் வாழ்க்கையோட உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்..:-)) via பசங்கFilm
-13-
 "சோதனை மேல் சோதனை & "இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இரண்டு பாடல்களையும் அடுத்தடுத்துக் கேட்பதிலுள்ள சுகமே தனி..:P
 -14-
 நாம் கீழே விழும் போது சந்தோஷப்பட்டா அது காதலி. சந்தோஷப்படுவதோடு TREATம் கேட்டா அவன் #நண்பேன்டா..
-15-
 தினமும் நித்திரைக்குப் போகிறோம்butஎப்ப தூங்கினோம்னு சரியான timeஐ எப்பிடி நம்மாளால கூறமுடியாதோ,அதே போல தினமும் classகு பேறோம் but எப்ப படிப்போம்னும் சொல்லமுடியாது
-RT-
  :வாழ்க்கையில் விதிகளை பின்பற்றும்போது வாழ்க்கை ஒழுங்காய்த்தான் இருக்கிறது. ஆனால் சந்தோசம் தொலைந்து போகிறது.!
 
 

ருவீட்ஸ் || Tweets #004

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:23 PM | 11 பின்னூட்டங்கள்


-01-
வெள்ளை மணிக்கூடு+மஞ்சள் செருப்பு+ரோஸ் டீ-சர்ட்+பச்சை டவுசர்+சீப்பு பாவிக்காத பரட்டைத் தலை +Headsetல் English பாட்டு= ஃபாசன் :P

-02-
Q:examஐக் கண்டுபிடிச்சவன் யாரு? A:இப்போ படித்துக்கொண்டிருப்பவர்கள் அனைவரினதும் எதிரிதான் VIA By  

-03-
உன் வரவை எண்ணி எண்ணி தூக்கமின்றியே கழிகின்றன என் இரவுகள்- பரீட்சை #பப்புமுத்து

-04-
மரணத்தைக் காதலியுங்கள், கடைசிவரை உயிருடன் வாழ்வதற்கு..:P #உல்டா #பப்புமுத்து

-05-
புதுசாக Tweet அடிப்பதை விட, Retweet அடிப்பது இலகு. ரெண்டே கிளிக்தான்..:P #பேசிக்கலிஐஆம்எசோம்பேறி

-06-
சில வேளைகளில் எமது நல்ல குணங்கள் எம்மைக் கெட்டவர்களாகவும், கெட்டகுணங்கள் எம்மை நல்லவர்களாகவும் ஆக்கிவிடுகிறது. #முரண்பாடு

-07-
அளவுக்கதிகமா EXAMகு படிக்கிற STUDENTம்,அளவுக்கதிகமா கஷ்டமா EXAMவைக்கிற டீச்சரும் பைத்தியம் புடிக்காம மண்டயபோட்டதா சரித்திரமேஇல்ல

-08-
காதலில் தோல்வியடைந்தவர்கள் அதை FBகில் எழுதி அலப்பறையைக் கொடுக்கிறார்கள் என்றால்,அவர்கள் உண்மையில் FBஐதான் காதலிக்கிறார்கள் #ஆய்வுமுடிவு :P

-09-
உண்மையைச் சொல்லும்போது சற்றுப் பொய்யாகிவிடுமோ என்ற பயமும், பொய் சொல்லும்போது சற்று உண்மையாகிவிடுமொ என்ற பயமும் இருக்கத்தான்செய்கிறது

-10-
உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மதிப்பெண் வருகையிலும் மறக்காது கண்மணியே #எக்ஸாம் #உல்டா #பப்புமுத்து

-11-
அடுத்த நாள் எக்ஸாமுக்கு முதல் நாள் இரவு படிக்கிறவன்தான்டா உண்மையான ஸ்டூடண்டு..:P #உண்மையான_ஸ்டூடண்டு

-12-
கம்பிமத்தாப்பு கண்ணு வண்ண மத்தாப்பு பொண்ணு #அப்ப பத்தவச்சா வெடிச்சிருமாம்,வைரமுத்து எங்கயோ போய்ட்டாருய்யா:P

-13-
எக்ஸாமை மட்டும் ருவிட்டரில் வைத்திருந்தால் சிம்பிளா ரீருவிட் பண்ணிட்டுப் போயிருக்கலாம்.

-14-
எக்ஸாம் supervisor நமதுமொழி தெரியாதவராக இருந்துவிட்டால்,பக்கத்தில் உள்ளவனிடம் விடைகேட்டாலும்,timeகேட்டேன் என்று சமாளித்துவிடலாம்


-RT-
Naveen Kumar :காதலையும் இதயத்தையும் இணைக்கும் அலப்பறைக்கு அளவில்லையா ? உங்க காதலி இதயத்த வேற ஒருத்திக்கு பொருத்திவிட்டா அவள காதலிப்பீங்களா?



Google பெரும்பாலும் ஒவ்வொரு நாளையும் யாராவது ஒரு பிரபலத்தை நினைவுபடுத்தும் நோக்கில் தனது பக்கத்தை அவர்களின் ஞாபகச்சின்னங்களால் வித்தியாசமாக சுவரஸ்யமாக அலங்கரிக்கும்.

அந்த வகையில் கடந்த ஜுன் 9ம் திகதி இசையமைப்பாளர், கண்டுபிடிப்பாளர், பாடலாசிரியர் ஆகிய பல திறமைகளைத் தன்னகத்தே வைத்திருந்த LES PAULஐ நினைவு படுத்தும் நோக்கில் ஒரு எலக்ரிக் கிட்டாரை தனது http://www.google.lk என்ற பக்கத்தில் வழங்கியிருந்தது.

அன்றைய தினம் முழுவதும் நான் அந்த கூகிள் பக்கத்துடனேயே அதிக நேரத்தைச் செலவிட்டிருந்தேன். ஆனாலும் சிறு ஏக்கம் அதை Google எங்களுக்கு ஒரு நாள் மட்டும்தான் வழங்கும் என்று. அந்த ஏக்கத்தை நிவர்த்தி செய்யும் நோக்கில் கூகிள் நிறுவனம் அதை எங்களுக்கு நிரந்தரமாக வழங்கியுள்ளது.

இந்த அற்புதமான கிட்டாரை கூகிள் வழங்கக்காரணமாக இருந்த LES PAULக்கும், இதை எங்களுக்கு வழங்கிய GOOGLEக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இந்தச்சுட்டியைக் கிளிக்கி கிட்டார் வாசிக்கலாம் வாங்க.

http://www.google.com/logos/2011/lespaul.html



 
 
நமது பதிவர்கள் அதிகாரமையத்தலைவர் பதவிக்கு தேர்தல் ஒன்று இடம் பெறுகிறது. அவர்கள் போட்டியிட்டிருந்தால் எப்படி பிரசாரம் செய்திருப்பார்கள் ஒரு சின்னக்கற்பனை..:P

முதலாவதாக மிஸ்டர் பூமி

தினந்தோறும் லட்சங்களில் புரளும் அன்புப்பிச்சைக்காரலட்சாதிபதிகளே, என்னில் ஏறிவிளையாடி என்னை உருட்டியெடுக்கும் எனதருமைப் பாசப்பசுங்கிளிகளே, எனக்குப் பெரிய பெரிய கான்களில் தண்ணீர் தந்து எனது தாகத்தை அடக்கும் தண்ணிலாறிகளே! பிள்ளைகளே, குட்டிகளே, கீரைப்புட்டுச் சட்டிகளே! அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

இதுவரை காலமும் எனது ஆட்சியில் பசுமையாக இருந்த அனைவரையும் எதிர்க்கட்சித்தலைமை தன்பக்கம் ஈர்க்க முற்படுவது கேவலமான செயலாகும். எனது ஆட்சிக்காலத்தில்தான் பதிவர்கள் காத்திரமான , தொக்கையான ச்சா.. மொக்கையான, அழகான பதிவுகளை எழுதிவந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே உங்கள் பொன்னான வாக்குகளை பூமிச்சின்னத்தில் குத்தி எதிர்க்கட்சியின் கனவுக் கோட்டையை தகர்த்தெறியுங்கள்.

"எங்க தல பூமி, வேற ஆளிருந்தாக் காமி" என்ற கோசத்துடன் பூமி உருண்டோடுகிறது.

வந்தி மாமா

ஆ... இஆ... ஆ... பேசணும்னு நினைக்கும்போது வார்த்தை அருவியா கொட்டுது.. ஆனா.. இந்த மைக்கு முன்னாடி வந்து நின்னதும் அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல தொண்டைவரைக்கும் வந்த வார்த்தை எல்லாம் அப்பிடியே காணாமப்போயிருது..ஆ...இஆ...

யோவ் அந்த மைக்கை எடுங்கையா பேசிட்டு போகட்டும்(கீழிருந்து ஒரு குரல்) மைக் அகற்றப்பட்டதும்.

அலைகடலென திரண்டிருக்கும் வாக்காளப்பெருமக்களே, எதிர்கட்சிக்காரர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள்?
முன்னபின்ன சொந்த செலவில சூனியம் வைத்திருக்கிறார்களா?
எவ்வளவு அடித்தாலும் தனியா நின்று வாங்கிக் கொள்ளும் தாங்குதிறன் அவர்களுக்கு இருக்கிறதா?
அல்லது ஹாட் அண்ட் சவர் சூப்பில் படம்தான் போட்டிருக்கிறார்களா? எனவே உங்கள் வாக்குகளைக் வேறு யாருக்கும் போடமுதல் ஒன்றைச் சொல்லி விடைபெறுகிறேன்

"சாம தான பேத தண்டம் நாலும் தோத்துப் போகும் போது, தகிடதத்தோம், செய் தகிடதத்தோம்"

அதாவது சாமத்தில் என்றால் இரவில கூட தானம் செய்ய பேதம் பார்க்கும் தண்டங்களுக்கு வாக்குப் போடாம இரவில் தகிடதத்தோம் எண்டு இளையராஜா பாட்டுக் கேட்கும் என் போன்ற நல்லுள்ளங்களுக்கு வாக்குகளைப் போடவும். நன்றி..

உலகநாயகனே.. கண்டங்கள் கண்டு வியக்கும், இனி ஐ.நாவே உன்னை அழைக்கும் என்று பாடல் ஒலிக்க மாமா கோயிங்கு.


அடுத்து நம்ம லோசன் அண்ணே

அனைத்து நெஞ்சங்களுக்கும் இனிய காலை வணக்கங்கள், மலர்ந்திருக்கும் இந்த நாள் சிறப்பான நாளாக அமையட்டும். சரி நாங்கள் விடயத்துக்க வருவோம். இதுவரை நடந்த தேர்தல்களில் நாம் 3181 தடவைகள் வாக்களித்திருக்கிறோம், ஆனால் அதில் 698 நல்லவோட்டு, 1291 செல்லாத வோட்டு, மிகுதி வாக்குகளுக்க என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இதெல்லாம் எதிர்கட்சியின் சதி, அவர்கள் தேர்தல் ஆணையாளருக்கு சூப் வைத்துக் குடுத்து அவர்கள் சாக் கான நேரத்தில் வாக்குகளை சோக்காக அள்ளிவிட்டார்கள். எனவே உங்கள் வாக்குகளை எஸ்.எம்.எஸ் ஊடாகவோ, தொலைபேசியூடாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அளிக்கலாம் என்பதை தெரிவித்துக் கொண்டு, விடைபெறும் முன்னர் தேர்தலுக்கு அனுசரணை வழங்கும் அனுசரணையாளர்களையும் ஒரு தடவை ஞாகப்படுத்திக் கொள்கிறேன். என்று எஸ்கேப்பாகிறார்.


அடுத்து எங்கள் தன்மானச்சிங்கம், கறுப்பு நமீதா, பிரச்சார சூறாவளி, கன்கோன் கோபி அவர்கள் மேடை ஏறுகிறார்,

எனதருமை வாக்காள ருவிட்டர்களே...ச்சீ... பெருமக்களே.. உங்கள் வாக்குகளை எனக்கு அளிப்பது மட்டுமல்லாது மற்றவர்கள் போடும் வாக்குகளையும் எனக்கு ரீ-ருவிட் செய்யுங்கள். நான் உங்களுக்க இலவசமாக ருவிட்டர் காலனியில் குடியிருக்கும் வசதியை அளிக்கிறேன். இதுவரை 21121 ருவிட்டுகளை கடந்திருக்கும் என்னைத்தவிர வேறு யாரையும் நீங்கள் தெரிவு செய்யவோ, ஏன் அப்படி நினைக்கக்கூட முடியாது, இறுதியாக ஒன்று கூறி விடை பெறுகிறேன், அனைவரும் கூட்டம் முடிந்ததும் கட்சி அலுவலகத்தில் வந்து லெமன்பப்பை வாங்கிக்கொள்ளவும். #விடைபெறல்#நன்றி#வணக்கம்#பிரச்சாரம்#அதிகாரமையம்


அடுத்து புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...... என்று ஒரு சத்தம் கேட்க எல்லோரும் அலேர்ட் ஆகிறார்கள். கார்க்கண்ணாடி அளவு கூலிங் கிளாசுடன் (PAYMENTல் வாங்கியது) கையில் கமராவோடு ஒருத்தர் வருகிறார். சனக்கூட்டமே இல்லாத மேடையில் பின்வரிசையில் உட்கார்ந்திருந்த சில சல்வார் போட்ட பாட்டிகளுக்கு ஸ்டைல் காட்டப்போய் கால் தடக்கிவிழுந்தவர், படக்கென எழும்பி ஒன்றுமே நடக்காதது போல கோட்டுப்போட்ட ஓட்டாண்டிகளுக்கும், பாட்டுப்போட்ட பரதேசிகளுக்கும், வேட்டு வைக்க வந்துட்டாண்டா இந்த சுப்பு...இஹாஹாஹாஹா... தரங்கம் சுப்பு என்று பஞ்ச் டயலாகைப் பேசி கண்ணா, வீ மீட்டு, யு வோட்டு, ஐ நோட்டு, நவ் அப்பீட்டு என்று விடைபெறுகிறார்.

அடுத்து மிஸ்டர்.ஹாட்

அடேய் அடேய் என்னடா நடக்குதிங்க என்னடா நடக்குதிங்க.. டேய் டேய் டேய்.. உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள் அதிகாரமையத்தலைமை மாற்றத்தை நீங்கள் எல்லோரும் எதிர்பார்ப்பது மிகவும் ஆனந்தமாகக இருக்கின்றது ஆனால் இங்கு வாக்குக் கேட்டவர்கள் தங்களின் வாக்குறுதிகளை நடாத்த முன்வரவில்லை, எனவே எனக்கு வோட்டுப்போட்டு என்னுடன் இணைந்து சூடாட பதிவுலகைப் பேணுவதற்கு யாரும் முன்வராத பட்சத்தில் என்னால் மட்டும்  தனியே வோட்டுப் போட்டு தல ஆகமுடியாது எனவே யாரெல்லாம் என்னோடு இணைந்து எனக்கு வோட்டுப்போட்டு என்னைத் தலயாக்க முன்வருகிறீர்கள் என்று சொன்னால் அவர்களுடன் இணைந்து அடுத்த கட்டத்திற்கு நாங்கள் நகரலாம் என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

"ஐ ஆம் ஆல்வேய்ஸ் ஒன்லைன், Using 24 hours mobile internet But எவனாச்சும் Disturb பண்ணினிங்க பிச்சுப்புடுவன்... நான் பிஸி with Cricket"  என்று சொல்லிச் சூடு பறக்கிறது.


(தொடரும்)

ருவீட்ஸ் || Tweets #003

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:21 PM | 12 பின்னூட்டங்கள்

-01-
சுத்திவளைச்சுப் பேசுபவர்கள்,சுத்திவளைச்சுப்பேச வரலயென்று சொல்லிச்சொல்லி சுத்திவளைச்சுப்பேசவராத விடயத்தையும் சுத்திவளைச்சுப்பேசிவிடுவார்கள்

-02-
முன்பெல்லாம் கடுப்பாகினா காத்திரமான பதிவு வரும், இப்ப கடுப்பாகினா மொக்கைப் பதிவுதான் வருது..:P #அனுபவம்

-03-
பொறுத்தார் பூமி ஆழ்வார், பொங்கினார் காடு ஆழ்வார். || பூமி=Batting || காடு = Fielding :P

-04-
இரவு தூங்கி காலையில் விழிப்பதெல்லாம் ஒரு வாழ்க்கையா? அதிகாலையில் தூங்கி பகலில் எழும்பணும் அவன்தான்டா யூத்து..:P
-05-
பரீட்சை நெருங்கும் நாட்களில் மட்டும் 24 மணிநேரமும் நித்திரை செய்யக்கூடிய சக்தி வந்துவிடுகிறது.
-06-
பொதுநலமாக இருந்து கெட்டபெயர் எடுப்பதைவிட, சில விடயங்களில் சுயநலவாதிகளாக இருந்துவிடுவது நல்லது.

-07-
தோல்வியை காதலிக்க கற்றுகொள், இறுதிவரை வெற்றியுடன் வாழ்வதற்கு #படித்ததில்_பிடித்தது

-08-
தமிழ் விளக்க கஷ்டப்படும் பல விடயங்களை ஆங்கிலம் இலகுவாக விளக்கிவிடுகிறது. #அனுபவம்

-09-
காதல் கவிதை எழுதிறவங்கெல்லாம் இதயத்தைக் காணல காணல என்று எழுதுறாங்களே, அது என்ன Item? ஜோதிகா இட்லிக்கு ஊத்தி சாப்பிடுறதா? #டவுட்டு
-RT-
ஒரு அழகான பெண்ணை சந்தித்ததிலிருந்து அவள் ஒரு பேய் என்று கண்டுணரும் தருணம் வரையிலான சுவாரசிய இடைவெளியே காதல்! -


Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்