நானும் பத்திரிகையில்
ஐந்தாம் ஆண்டோ நான்காம் ஆண்டோ படிக்கும்போது பேப்பரில் சிறுவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் ஒருதடவை என் படம்வந்தது. அதற்குப்பிறகு வரவேயில்லை. பதிவெழுதத்தொடங்கிய பிறகுதான் இன்று யாழ்தேவி நட்சத்திரமாக தெரிவுசெய்து தினக்குரலில் என் தளத்தைப்பற்றியும் எனது இந்தப்பதிவையும் வெளியிட்டுள்ளார்கள்.
இதுவரை எனக்கு ஊக்கமளித்த, ஊக்கமளிக்கின்ற அனைத்து பதிவுலக சகாக்களுக்கும், யாழ்தேவி திரட்டிக்கும் பதிவர்களுக்கும் களம் அமைத்துக்கொடுக்கும் தினக்குரல் பத்திரிகைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். பதிவெழுதத்தொடங்கியபோது பல ஊக்குவிக்கப்பட்டதைத்தவிர பலரால் கேலிசெய்யப்பட்டேன். கூடுதலாக மூஞ்சிப்புத்தகம் மற்றும் சில நண்பர்களால். மூஞ்சிப்புத்தகத்தில் எனது பதிவுகளைப்பகிரும்போது உனக்கு வேற வேலை இல்லையா என்றெல்லாம் பின்னூட்டங்கள் வந்திருக்கிறது. ஆனால் இன்று எனது தளம் பத்திரிகையில் வந்தது பற்றி அவர்கள் அறிந்தால் அவர்கள் எனக்கு வேலை இருக்கிறதா இல்லையா என்று விளங்கிக்கொள்வார்கள் என்று சம்புகிறேன். தவிர ஊக்கமளித்த மூஞ்சிப்புத்தக நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்.
************************************************************************************************
தமிழில் கிறிக்கற்
ஆங்ககிலத்தில் இதுவரை கிரிக்கெட் செய்திகளைப்படித்து வந்த எமக்கு தமிழில் அச்செய்திகளைப்படிக்க வசதியாக தமிழில் கிறிக்கெற் ஒரு புதிய தளத்தின் வருகை மிகவும் பயனுள்ளதாக மைந்துள்ளது. உங்களுக்கும் பயன்படும் என நம்புகிறேன்.
தளச்சுட்டி -http://tamilcricket.blogspot.com/
அஜித்+விஜய்+விக்ரம்

இவர்கள் மூவரும் இணைந்து நடிக்க..இல்லை.. இல்லை.. ஆடப்போகிறார்களாம். கலைஞருக்கு நடக்கவிருக்கும் பாராட்டுவிழாவில்தான் இந்த ஆட்டம் நடக்கப்போகிறதாம். பார்க்கலாம் ஆட்டத்தை.
************************************************************************************************