Related Posts with Thumbnails
Showing posts with label சுயபுலம்பல். Show all posts

JUST...

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:08 PM | 1 பின்னூட்டங்கள்
ஒரு மனிதனின் வாழ்க்கையில் பாடசாலை அல்லது கல்லூரி என்ற காலகட்டத்துக்குப் பிறகு வாழ்க்கை கிட்டத்தட்ட இயந்திரமயமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாகவோ என்னமோ எத்தனையோ சின்னச்சின்ன சந்தோஷங்களை அல்லது எம்மை அறியாமலேயே பிறருக்குச் செய்த உதவிகளை அதனால் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை என்று எவையுமே ஞாபகத்தில் நிற்பதில்லை.

அதே நேரத்தில் படிக்கும் போது ஆசிரியர்கள் எம்மை திட்டியும் அதிக பட்சமாக அடித்தும் யார் எம்மை எவ்வளவு கேவலமாகப் பேசினாலும் அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு சிரித்துவிட்டு மறந்துபோகும் மனநிலையும் கொஞ்சம் கொஞ்சமாக மாறத்தொடங்குகிறது.

ஏன் திடீரென்று இப்படி ஒரு மாற்றம் ஏற்படுகிறது? இதைத்தான் முதிர்ச்சி என்று சொல்லுகின்றோமா? என்று இரவு நேரத்தில் நித்திரை வருவதற்கு முன் சில மணித்துளிகளில் பின்னோக்கி கட்டம் கட்டடமாக யோசித்துப் பார்த்ததில் சில விடயங்கள் தோன்றியது.

நட்பு வட்டம்
முதல் கட்டமாக ஒரு மனிதனின் வாழ்க்கையை பாடசாலையில் சேர்ந்த ஆரம்பத்திலிருந்து ஒரு 10 வயதுவரை பார்த்தோம்என்றால் பெற்றோரின் கட்டுப்பாடுதான் அதிகமாகக் காணப்படும். உதாரணமாக நண்பன் தொடக்கம் ஆசிரியர் வரை யாரும் ஏதாவது கேட்டால் அம்மாவிடம் கேட்டு வந்து சொல்கிறேன் என்று சொல்லும் மனநிலையில்தான் இருப்போம். ஆக இந்த வயதில் நிறைய பாடசாலையில் நண்பர்கள் இருப்பார்கள் ஆனால் அம்மா அப்பாதான் Best Friends என்று சொல்லும் அளவுக்கு இருப்பார்கள்.

இரண்டாவது கட்டமாக ஒரு மனிதனின் வாழ்க்கை 13வது வயதிலிருந்து அதற்குப் பிறகு வரும் ஒவ்வொரு படிகளும் மிகவும் முக்கியமானவை. நட்பு என்ற ஒரு விடயத்துக்கு மிகவும் அதிஉயர் முக்கியத்துவம் வழங்கும் ஒரு காலகட்டம் இங்கு ஆரம்பிக்கிறது. அதாவது இதுவரை வீட்டில் பெற்றோரிடம் Request பண்ணிக்கொண்டிருந்தவர்கள் Informationஐ மட்டும் வழங்கிவிட்டுப் போகும் மனநிலைக்கு மாறிவிடுகிறோம்.

நண்பனுக்காக எந்தவொரு நடவடிக்கையையும் பயமின்றிச் செய்யும் ஒரு மனநிலையும் யாராவது உங்கள் மீது வீண்பழிகளைச் சுமத்தினால் உடனே எதிர்த்துப் பேசும் அல்லது மறுக்கும் மனநிலையும் அதையும் மீறி உங்கள் மீது தண்டனைகளைப் வழங்கும் போது அதை எதிர்க்கும் மனநிலையும் அதிகமாக இருப்பது இக்காலகட்டத்தில்தான். அதாவது கிட்டத்தட்ட ஒரு தன்மானமுள்ள மனிதனாக நாம் உணரும் காலகட்டமாக இதைச் சொல்லலாம். காதலில் தொடங்கி பலவிடயங்களை முதல்முதலாக முயற்சித்துப் பார்க்கும் ஒரு கட்டம் இது. இக்காலகட்டத்தில் இருக்கும் நண்பர்கள் கூட்டத்தின் எண்ணிக்கையைப் போல் இருக்கும் ஒற்றுமையைப் போல் வேறெங்கும் இருப்பதில்லை.

தன்மானமுள்ள தைரியமுள்ள ஒற்றுமையான ஒரு மனநிலையுடன் பாடசாலையை விட்டு வெளியேறிய பின்னர் ஒரு மனிதன் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் அவனது வாழ்க்கையில் முக்கியமானவர்களாகிப் போகிறார்கள். இந்த இடத்தில்தான் ஒற்றுமையில் பிளவு ஏற்படுகிறது. கிட்டத்தட்ட மனிதன் தனது அடுத்தகட்ட வாழ்க்கையை தீர்மானிக்கும் கல்வி அல்லது வேலை என்ற பிரிவுக்குள் செல்கிறான்.

உயர்அதிகாரி கட்டளையிடுகிறார், இவர் அது சரியாக வராது என்கிறான், இல்லை அப்படிச் செய் என்கிறார், அவர் அப்படியே செய்கிறார், அது பிழையாகிறது. அதே அதிகாரியால் இவன் தண்டிக்கப்படுகிறார். ஆனால் எதிர்த்துப் பேசினால் வேலை போய்விடும் என்ற பயத்தால் எதிர்த்துப் பேசவில்லை. இங்கு தன்மானம் என்பது கருவறுக்கப்பட்டு சகிப்புத்தன்னை பூட்டப்படுகிறது. ஆனால் அந்த சகிப்புத்தன்மை கோபமாக மாறி திருமணமானவர்களுக்கு மனைவியிடமும் ஆகாதவர்களுக்கு பேஸ்புக்கிடமும் வந்து வெடிக்கிறது.

இப்போது நான் சகிப்புத்தன்மைக் காலகட்டத்தின் ஆரம்பத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். இந்த இடத்திலிருந்து யோசித்துப் பார்த்த போது எனக்கு இருக்கும் நண்பர்களின் எண்ணிக்கையை விட தெரிந்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் தன்மானக் கட்டத்திலிருந்து சகிப்புத்தன்மைக்குப் பயணிக்க இப்போதுதான் ஆரம்பித்திருப்பதால் அவ்வப்போது கொஞ்சம் தன்மானம் எட்டிப்பார்க்கவும் செய்கிறது.

இதைத்தான் முதிர்ச்சி என்று அழைக்கிறோமா? என்ற விடையில்லாக் கேள்வியுடன் நண்பர்கள், எதிரிகள், தெரிந்தவர்கள் என்று என்னைச்சுற்றிப் இருக்கும் பாரிய வட்டத்தில் மையத்தை அண்மித்திருப்பவர்களை இழக்கத் தயாராக இல்லை. இருந்தபோதிலும் வாழ்க்கை இன்னும் எப்படியெல்லாம் மாற்றும் என்ற மாற்றங்களுக்காக காத்திருக்கத்தான் வேண்டும். ஆனால் எத்தனை கட்டங்கள் வந்து முதிர்ச்சி என்ற பெயரில் எப்படியெல்லாம் மாற்றினாலும் கடைசியில் பெற்றதும் இழந்ததும் மனிதர்களைத்தான்..

Everything Happens For A Reason!

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:53 AM | 4 பின்னூட்டங்கள்
 ரொம்பவே போரடிக்கும் பதிவு, சில நேரங்களில் சில மனிதர்களை சில அரசியல்களைப் பயன்படுத்தின்தான் டீல் பண்ண வேண்டும். அந்த சிலருக்கு மட்டும் =))

சில நேரங்களில் நாம் தினமும் காணுகின்ற சின்னச்சின்னப் பொருட்கள் கூட சில நேரத்தில் பெரிய தத்துவங்களை விளக்கிவிட்டுப் போய்விடும். அது நிறைய நாட்களாகவே அப்படித்தான் இருந்திருக்கும் ஆனால் சில அனுபவங்கள் கிடைக்கும் போது அது நமக்கு போதி மரமாகக்கூட மாறிவிடும்.

எங்கள் வகுப்பிலே சுவிட்ச் பெட்டி இருக்கிறது. எல்லா வகுப்பிலும் இருக்கிறதுதானே? அதுக்கென்ன இப்ப என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அதில் இருக்கிற முக்கிய விடயம் என்னவென்றால் அதில் இரண்டு சுவிட்ச்சுகளைப் போடக்கூடாது மீறிப் போட்டால் அந்தக் கட்டடத்துக்கே மின்சாரம் போய் விடும். இது நாங்கள் படிக்கப் ஆரம்பித்த காலத்திலிருந்து இப்படித்தான் இருக்கிறது. இடையில் திருத்துவதற்கு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு திருத்தப்பட்டாலும் சில நாட்களிலேயே பழைய நிலைமைக்குத் திரும்பிவிடுகிறது. இது புதிதாக இருக்கும் போது இப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை, ஏதோ இடையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத்தான் இப்படி மாறியிருக்க வேண்டும்.

இது அப்படி என்ன விடயத்தை விளக்கப் போகிறது?
இந்த சுவிட்சுகளை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.

ஒன்று: நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கும் காலத்தில் சிலரை நண்பர்களாக ஏற்றுக் கொண்டிருப்பிர்கள், அல்லது மிகவும் கவலையாக இருந்த காலத்தில் சிலரை நண்பர்களாக ஏற்றுக் கொண்டிருப்பீர்கள். ஆனால் இதில் கவலையான நேரத்தில் நண்பர்களாக ஏற்றுக் கொண்டவர்கள் கடைசிவரை எந்த விதமான திருத்தம் வந்தாலும் தங்கள் நிலையிலிருந்து மாறாமல் அப்படியேதான் இருப்பார்கள். அதாவது அந்த பழுதாய்ப் போன சுவிட்டகளைப் போல.

இதையே இன்னொரு விதமாகப் பார்த்தால்,
உங்களுக்கு சிலர் சந்தோஷமான கால கட்டத்தில் நல்ல நண்பர்களாகியிருப்பார்கள். ஆனால் நில காலங்களின் பின்னர் அவரின் செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும், வேண்டுமென்றே நடிப்பார்கள், என்ன பிரச்சினை என்று கேட்டாலும் சொல்லமாட்டார்கள், பின்னாலே போய் ஒரு சிலரிடம் அல்லது அவர்களின் மாற்றத்துக்குக் காரணமானவர்களிடம் எம்மைப்பற்றியே அவதூறாகப் பேசுவார்கள்.

உங்கள் அபரிமிதமான நட்பின் புனிதம் கெட்டுவிடக் கூடாது என்பதற்கான நீங்களும் ஏன்? எதற்கு? என்று எல்லாம் கேட்க மாட்டீர்கள். ஆனால் அவர்களை விட்டு விலகிவிட அல்லது அவர்களுடன் சற்று முன்னெச்சரிக்கையாக இருக்க முடிவெடுப்பீர்கள். இதுதான் நாங்கள் எங்கள் வகுப்பில் இருக்கும் அந்த பழுதாய்ப் போன சுவிட்சுகளுக்கும் செய்தது. அந்த சுவிட்சுகளில் X அடையாளமிட்டு அதை இனி உபயோகிக்கக் கூடாது என்று முடிவெடுத்தோம். அவர் கவலைப்படுவார் அல்லது அவர் என்ன நினைப்பார் அபரிமிதமான நட்புக் கெட்டுவிடுமே என்றெல்லாம் யோசிக்கத்தேவையில்லை.
ஒரு சுவிட்சு ஒரு கட்டடத்தின் நடவடிக்கைகளையே சீர்குலைக்கின்றது என்றால் அதை பாவிப்பதை நிறுத்திவிடுங்கள், அல்லது அதை நீங்கிவிட்டு புதிய சுவிட்ச் ஒன்றைப் பொருத்தி விடுங்கள்.
அந்த பாவிக்காமல் விட்ட சுவிட்ச் நினைக்கலாம் நீங்கள் தன்னை ஏமாற்றிவிட்டீர்கள் என்று, ஆனால் தன்னைத்தானே சுயமதிப்பீடு செய்துகொண்டால் அந்த சுவிட்சுக்குத் தெரியும் தனது மாற்றங்களும் தான் செய்த அரசியலால்தான் இப்போது உபயோகிக்கப்படாமல் இருக்கிறோம் என்பதும்.

WHATEVER HAPPENS LIFE GOES ON...

பதிவிட்டவர் Bavan | நேரம் 12:26 PM | 0 பின்னூட்டங்கள்
பஸ்ஸில் தனிமையில் பயணிக்கும் போது, இரவு நேரத்தில் Laptop, Mobile எல்லாத்தையும் தூக்கி துரப் போட்டுவிட்டு கண்ணை மூடாமல் கண்ணை மூடியது போல உணரும் போது மனதில் தோன்றிய விடயங்கள் அடங்கிய பதிவு. சுவாரஸ்யமாக எதுவும் இருக்காது. சுய புலம்பல் மட்டுமே!

***

திடீரென ஒருநாள் விழித்துப் பார்க்கும் போது கண்டது எல்லாம் கனவாகிப் போய் நாம் இன்னும் சின்னப்பிள்ளையாகவே இருந்தால் எப்படி இருக்கும்?

வாழ்க்கையில் நாம் கடந்து வந்த பாதைகள் அத்தனையுமே மீள நினைத்துப் பார்க்கும் போது அப்படித்தான் இருக்கும். வாழ்க்கை என்பது ஒரு நேரான பாதையில் ஓடுவதைப் போன்றது. பலர் கூட ஓடி வருவார்கள் சிலர் இடையிடையே வரும் திருப்பங்களில் திரும்பிவிடுவார்கள். சிலர் இன்னுமொரு திருப்பத்தில் மீண்டும் வந்து சேர்ந்து கொள்வார்கள். சிலர் இடையில் புதிதாக இணைந்து கொள்வார்கள். ஒரு சிலர் கடைசி வரை எம்முடனேயே ஓடி வருவார்கள். கடைசி வரை வருவார்கள் என்று நினைத்தவர்கள் கடைசிவரை வருவதுமில்லை. இடையிலேயே திரும்பிவிடுவார்கள் என்று நினைத்தவர்கள் எல்லாரும் இடையிலே விலகிவிடுவதுமில்லை.

இங்கு வாழ்க்கைப் பாதை பிரியும் இடங்கள் அவரவர் நிலைகளைப் பொறுத்து வேறுபடும். பாடசாலைக் காலம், கல்லூரிக் காலம், வேலைக்குச் செல்லும் காலம், திருமணம் நடக்கும் காலம் என்று பொதுவாக வரையறுக்கலாம். பாடசாலை அல்லது கல்லூரியில் படிக்கும் காலங்களில் வரும் பிரிவுகள்தான் மிகுந்த கவலையை தருகிறது. ஏன் என்று அதை உற்று நோக்கிப் பார்த்தால் பாடசாலை அல்லது கல்லூரிக் காலங்களில் எமக்குக் கிடைத்தது அதிகம் அதனால் அந்தக் காலத்தை இழக்கும் போது இழப்பதும் அதிகம். அதற்குப் பிறகு கொஞ்சம் இயல்பிலிருந்து விலகி நடிக்கவேண்டியிருக்கிறது. கொஞ்சம் வயதானவர்கள் போல் உணருகிறோம்.

என்னைப் பொறுத்தவரையில் 11 வருடங்கள் படித்த பாடசாலையிலிருந்து திடீரென விலகிய போது நண்பர்கள், எமது பாடசாலை இசைக்குழுவில் இருந்த எனக்கான இடம், இன்றும் மெதுவாகச் செல்லும் 155 பஸ், பிறந்து வளர்ந்த இடம் இன்னும் சில விடயங்கள் என்று அனைத்தையும் இழக்கவேண்டியிருந்தது. அதன் பிறகு மீண்டும் ஒரு புதிய பாடசாலை, புதிய நண்பர்கள் புதிய இடம் என்று இன்னுமொரு பாதையில் ஓடவேண்டியிருந்தது. அதாவது கஷ்டப்பட்டு ஒரு மலையில் ஏறி வந்து உச்சியை எட்டும் போது யாரோ கீழே பிடித்துத் தள்ளிவிட்டு திரும்ப ஏறி வா என்று சொன்னது மாதிரியான ஒரு உணர்வு. ஆனால் தள்ளிவிட்டது நல்லதுக்குத்தான் என்று அன்றுதான் அறிந்து கொண்டேன். இரண்டாவது முறை ஏறும் போதுதான் எத்தனை விடயங்களை பார்க்க, அனுபவிக்கத் தவறிவிட்டோம் என்று அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

ஒவ்வொரு முறையும் பாதையை தேர்ந்தெடுக்கும் போதும் "அடுத்தது என்ன?" என்ற ஒரு கேள்வி மனதில் மிகப்பெரிய கேள்விக்குறிடன் விடைக்காகக் காத்திருக்கும். ஒவ்வொரு முறை எதையாவது எதிர்பார்த்து ஏதாவது முடிவுகளை எடுக்கும் போதும் அது "நீ யார்டா முடிவெடுக்க என்று" கைகொட்டிச் சிரிக்கும்.

ஆனால் இதுவரை கிடைத்த அனுபவங்கள் சகிப்புத்தன்னையை வளர்த்துக் கொள்வது எப்படி?, எதிர்பார்ப்புக்களை குறைப்பது எப்படி?, விமர்சனங்களுக்கு முகம் கொடுப்பது எப்படி? என்று கற்றுக் கொடுத்திருக்கிறது. தவிர பல நண்பர்களையும், எதிரிகளையும், சில மனிதர்களையும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.

இன்னும் சம்பாதித்துக் கொடுக்கப் போகும் மனிதர்கள், நண்பர்கள், எதிரிகளுக்காகவும், அனுபவங்களுக்காகவும், அடுத்தது என்ன என்ற கேள்வியுடனும் காத்திருக்கிறேன்.
WHATEVER HAPPENS LIFE GOES ON... =)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்