Related Posts with Thumbnails
Showing posts with label எதிர்காலம். Show all posts
சின்ன வயதில் நாம் அனைவரும் SEESAW, ஊஞ்சல், சறுக்கு(SLIDE)ஆகிய மூன்று விளையாட்டுக்களை கட்டாயம் விளையாடியிரும்போம். ஆனால் காலாகாலமாக இந்த விளையாட்டுக்களை விளையாடி வந்தாலும் இதற்குள் ஒளிந்து கிடக்கும் உலகமகா வரலாற்றுத் தத்துவங்களை அறிந்துகொள்ள மறந்தவிட்டோம். அதை நேற்று இரவு தூக்கம் வராமல் சீலிங் ஃபான் கழன்று மண்டையில் விழுமா விழாதா என்று பயந்துகொண்டிருந்த வேளையில் என் சிந்தையில் உதயமானது இது.

  • ஊஞ்சல்



முதலாவதாக ஊஞ்சலுக்கு வருவோம். ஊஞ்சலில் ஆடும் போது காலால் நிலத்தில் விசையைப் பிரயோகித்து எவ்வளவு தூரம் பின்னால் போகிறோமோ அதே அளவு மேலே போக முடியும். விசையை தொடர்ந்து பிரயோகித்துக் கொண்டிருந்தாதல்தான் மேலே போக முடியும் அல்லது கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் குறைந்து ஊஞ்சல் ஓய்ந்து விடும், ஆட்டம் நின்றுவிடும்.

இதிலிருந்து விளையாட்டைக் கண்டுபிடித்தவர்கள் சொல்லவருவது என்ன என்றால் வாழ்க்கையில் எதையும் முயற்சித்தால் தான் கிடைக்கும். ஒரு விடயத்தை தொடந்து முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும் அதாவது உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். களைப்பாய் இருக்கிறது என்று விட்டால் ஆட்டம் நின்று ஓய்வெடுக்கவேண்டியதுதான் என்ற உலகமகா தத்துவத்தை சொல்லவருகிறார்கள்.

  • சறுக்கு/சறுக்குமரம்

அடுத்ததாக சறுக்குமரம் (SLIDE) பார்த்தோமென்றால் அதில் ஒரு பக்கம் ஏணி இருக்கும், அதில் ஏறி சறுக்கிக் கொண்டு வந்து கீழே விழவேண்டும். அதாவது இதிலிருந்து அந்த விளையாட்டைக் கண்டுபிடித்தவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் வாழ்க்கையில் உயரத்துக்கு வருவது, சாதிப்பது, நல்லபெயர் எடுப்பது மிகவும் கஷ்டமான காரியம். இது அந்த ஏணியில் ஏறுவதைப் போன்றது. ஆனால் கெட்டபெயர் எடுப்பது, வாழ்க்கையில் அடிமட்டத்துக்க வருவது மிகவும் இலகுவானது. அது சறுக்கிக் கீழே வருவதைக் குறிக்கிறது.

எனவே இங்கு அவர்கள் சொல்ல வருவது என்னவென்றால் வாழ்க்கையில் உயரத்துக்குச் செல்வது பெரிய விடையமல்ல, ஆனால் வாழ்க்கையில் உயரத்துக்குப் போன பின்னர் சந்திக்கும் சரிவுகளை சறுக்குமரம் விளையாடும் போது சறுக்கிவிழுந்தவுடன் மறுபடியும் சளைக்காமல் ஏணியால் ஏறுவதைப் போல் மீண்டும் மீண்டும் மேலெ செல்ல முயற்சிக்க வேண்டும்.

  • SEESAW
கடைசியாக SEESAWவைப் பார்த்தோமென்றால் இது வாழ்க்கையின் சமநிலை, எமது பலம் என்ன என்பவற்றைச் கருத்தில் கொண்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அதாவது எம் பலத்தை விட அதிகமாக எதையாவது செய்ய முயற்சித்தால் மேலேயே போய் இருக்க வேண்டியதுதான் கீழே வரமுடியாமல் சிக்கிக்கொண்டு தவிக்க வேண்டியிருக்கும். அதுவே எமது பலத்துக்கு குறைவாக எந்த முடிவுகளை எடுத்தாலும் கீழேயே இருக்க வேண்டியதுதான். வாழ்க்கையை சமநிலையாகப் பேணவேண்டுமாயின் நமது பலம் பலவீனத்தை அறிந்து எம்மால் செய்ய முடிந்தவற்றை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.
அப்போதுதான் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள் சந்தத்திற்கேற்ப அழகாக இருக்கும்.


அந்தக்காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கும் குரு அதை தனது முதன்மைச்சீடனுக்கு மட்டும் சில புதிர்கள் அல்லது குறிப்புகளாக விட்டுவிட்டுப் போவார்களாம். அதை எதிர்கால சந்ததியினர் கண்டுபிடித்தால் பயனுள்ளதாக இருக்குமாம். இதுவும் அதுபோலதானோ என்னமோ! =P


பி.கு - சறுக்கீஸ் என்று நாமெல்லாம் குத்து மதிப்பா ஒரு பெயர் வைத்து விளையாடிய Sliding விளையாட்டுக்கு சறுக்கு மரம் என்று தமிழாக்கம் வழங்கிய கா.சேது ஐயாவுக்கு நன்றிகள் =))

-01-
சோகமாக இருப்பவர்களை மகிழ்ச்சியாகப் பார்ப்பதை விட மகிழ்ச்சியாக இருப்பவர்களை சோகமாகப்பார்ப்பதே பிறருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது

-02-
"உனக்கு என்ன வரலாறு? உண்மை சொன்னாத் தகராறு"
யாருக்கோ! :P

-03-
வாழ்க்கையில் தனக்குக் கவலை or பிரச்சினை வரும் போது அதை சமூகவலைத்தளங்களில் எவன் உளறாமல் இருக்கிறானோ அவன் பாதிபக்குவப்பட்ட மனிதன் ஆகிறான்

-04-
"கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே" Wake up with niz song ;-)) || Maybe situation song 4 this month :P

-05-
அதிகாலை 5 மணிக்கு எழும்பும்போதுதான் தெரியுது, உலகத்தை விட நாம எவ்வளவு பின்னால இருந்திருக்கிறோம் என்று.. #ஞானோதயம் :P

-06-
"இது போல் வரும் லிங்கை கிளிக் பண்ண வேண்டாம்" எண்டு போட்டு தெரிஞ்சே Timelineஐ spam பண்றாய்ங்களே.. அவ்வ்வ். #கடுப்பேத்திறார்மைலாட்

-07-
அறிவுகெட்ட Computer! D Driveல space இல்லைன்னா E,F எதுலயாச்சும் போடவேண்டியதுதானே.. இரவு போட்டுட்டு தூங்கப் போன download எல்லாம் :@

-08-
வரப்போகும் 2012ம் ஆண்டு 2006ம் ஆண்டு மாதிரி அமைய வேண்டும் :-)) #எதிர்பார்ப்பு 

-09-
மழை கொஞ்சம் அதிகமாப் பெய்தால் சுனாமி எண்டு வதந்தியக் கிளப்பிறாங்களே.. #திருகோணமலை(எ)வதந்திஊர் :P

-10-
நான் இப்பிடித்தான் என்று 100% தெரியாது. ஆனால் ஓரளவு தெரியும் சி(ப)ல விடயங்களில் விரும்பியது நடக்காவிட்டாலும் இசைவாகிப்போகத் தெரியும்,ஆனால் ஒரு சில விடயங்களை நான் எதற்காகவும் விட்டுக்கொடுப்பதில்ல
உன்னைப் பற்றி நீ எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறாய் என்று வெற்றிFMமில் கேட்கப்பட்ட கேள்விக்கு கூறிய பதில்.

-11-
"Life இது உன்னோட காரு இஷ்டப்படி நீ ஓட்டிப்பாரு.." 

-12-
மச்சி + மாமு + சித்தப்பு + தலைவா=நண்பேன்டா :D

-13-
Self Confidence கொஞ்சம் (நிறையவே) அதிகரிச்சிருக்கு, எவ்வளவு அடிச்சாலும் தாங்குற ஒரு சக்தி வந்திருக்கு :P
2011ம் ஆண்டு பற்றி கேட்டதுக்கு எனது பதில்

-14-
"மழை கேட்கிறேன், எனை எரிக்கிறாய் ஒளி கேட்கிறேன், விழிகளை பறிக்கிறாய்"|| யின் பாடல் வரிகள் மிகவும் பிடிச்சுப்போச்சு:-))
-15-
பகையைக் கண்டு பைய நகர்ந்தேன்,பயந்து விட்டான் பாவம் என்றது;மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்,விளங்கி விட்டதா மிருகம் என்றது by

2011ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் விடைபெறப் போகிறது. இந்த வருடம் பலருக்கும் பல வித்தியாசமான அனுபவங்களையும் கவலைகள், மகிழ்ச்சிகளையும் தந்திருக்கும். இந்த வருடம் எனக்குப் பல புதிய விடயங்களை, நண்பர்களை, அனுபவங்களை தந்திருக்கிறது. முக்கியமாக 2009ல் பாடசாலைக் காலத்துக்குப் பிறகு வேலைவெட்டியில்லாம் எதிர்காலம் பற்றி சிந்தித்து சிந்தித்து சோர்ந்து போன 2010ஐ ஊதித்தள்ளிவிட்டு புதிய பாதையைக் காட்டிய ஆண்டு 2011.

இந்த ஆண்டு எனக்கு தன்னம்பிக்கையை அதிகம் தந்திருக்கிறது. சில பிடிக்காத விடயங்களுக்கு இசைவாகிப் போகவும், கிடைக்கும் என நினைத்து கிடைக்காமல் போன விடயங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கையும் தந்த ஒரு ஆண்டு.


கூடுதலாக இதுதான் எனது இந்த ஆண்டின் கடைசிப் பதிவாக இருக்கும், எனவே எனவே அடுத்த மலரப் போகும் 2012 இதை விட சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்ற நம்பிக்கையை மனதில் நிறுத்தி அனைவருக்கும் முற்கூட்டிய சிசுபாலனின் பிறந்த தின மற்றும் புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி மீண்டும் அடுத்த ஆண்டு சந்திப்போம்!

தமிழுக்காக போராடுகிறோம் என்ற பெயரில் பாடசாலையில் சிறுபிள்ளைகள் ஆசிரியரிடம் முறையிடுவது போல குற்றச்சாட்டுகளைச் சுமத்திவரும் புத்திசாலிகளின்(:P) எதிர்காலத்திட்டங்கள்

1

 2

 3

 4

 5

 6

10

 7

 8

 9

மு.கு - முழுக்க முழுக்க கற்பனையே யார்மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.
நேற்றுப்பிரகாசித்த கிறிக்கற் வீரர்கள் இன்று அடித்துரத்தப்படும் அளவுக்கு விமர்சிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒருகாலத்தில் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக இருந்திருக்கலாம். ஆனால் வயதும் உடலும் ஒத்தழைக்கவில்லையென்றால் ஒதுங்கிவிடவேண்டும். அப்படி ஒதுங்காவிட்டால் 2021இலும் இப்படித்தான் பதிவுகள் வரும்

2021 உலகம் மிக வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் காலம். தற்போது T20போல T10 அறிமுகப்படுத்தப்படுகிறது. அப்போது சனத் ஜெயசூரியவை 2013ல் உலகக்கிண்ணத்தில் விளையாட அனுமதித்த நன்றிக்கடனை தீர்ப்பதற்காக சங்கக்காரவை அமைச்சர் சனத் தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி அணியில் விளையாட அனுமதிக்கிறார்.
தற்போதைய(2021) அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ். இப்போது இலங்கை அணி சங்கக்கார என்ற கிழட்டு சிங்கத்தை அணியில் அனுமதித்ததால் போட்டிகளில் தோல்வியடைந்து வருகிறது. அப்போது வழக்கம்போல பதிவர்கள் சிலரின் பதிவுகள் எப்படி வரும் என்று ஒரு சின்னக்கற்பனை.

கன்கொன்
சங்கக்கார இப்போதெல்லாம் எதற்குமே பிரயோசனமில்லாமல் வெத்து வேட்டாக அணியிலிருப்பதால் பலருக்கு சங்கா மீது எரிச்சல்.
சங்காவை வைத்து நகைச்சுவை மொக்கை போட முயற்சிக்கிறார்கள்....

இப்படித்தான் அண்மையில் பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்ட போது தெரியாத்தனமாக சங்காவுக்கு இற்கு ஓய்வு (rested) என்று சொல்லிவிட்டார்கள்...
அதை வைத்து நான் உட்பட பலர் நக்கலடிக்கிறார்கள் சங்கா என்ன செய்து கிழித்துவிட்டார் என்று ஓய்வு என்று.

ஆனால் நாங்கள் ஒரு மிகப்பெரும் உண்மையை மறந்திருக்கிறோம்.
அதற்கு முன்னர் சிறிய விளக்கமொன்றை சொல்ல விரும்புகிறேன்.
நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நடந்து செல்கிறீர்கள். அங்கிருந்து உடனே திரும்பி உங்களால் நடந்து வந்தால் களைக்குமல்லவா?
ஆனால் அதுவே அங்கு கொஞ்சம் இளைப்பாறிவிட்டு திரும்பி நடந்து வந்தால் களைப்புத் தெரியாதல்லவா?
சரி,
அதையே இங்கு நோக்குங்கள்...
சங்கா தலைக்கவசம், கால் கவசங்கள், அது இது எண்டு எல்லாத்தயும் குனிஞ்சு நிமிர்ந்து கட்டிக்கொண்டு 2,3 கிலோகிராம் நிறையுள்ள துடுப்பையும் (bat) எடுத்துக் கொண்டு மூச்சிரைக்க மூச்சிரைக்க நடந்து போய் அங்க guard எல்லாம் எடுத்திற்று லெக்கில வாற போல ஓஃப் திசையில அடிக்கப்போய் உடனயே ஆட்டமிழந்து திரும்பி வரும் போது எவ்வளவு களைப்பா இருக்கும் தெரியுமா?
ஆகவே இலங்கை அணியில் அதிகம் களைப்படைந்த வீரர் சங்கா மட்டுமே.

என்னைப் பொறுத்தவரை இந்த ஓய்வு சங்காவிற்கு நிச்சயமாகத் தேவைப்பட்ட ஒன்று. ;)

லோசன் அண்ணா
குமார் சங்ககார
இலங்கை அணியினதும்,ரசிகர்களினதும் முன்னாள் ஹீரோ.. எதிரணிகளின் முன்னாள் வில்லன். இப்போது சொந்த அணியிலேயே வேண்டாத நபராக,வில்லனாக மாறி நிற்கிறார்.

இவர் நேற்றும் விளையாடியதால் கிட்டத்தட்ட இலங்கை அணி 10 வீரர்களுடனேயே விளையாடி இருந்தது.


நேற்று நான்கு பந்துகளில் ஒரு ஓட்டம் பெற்ற அவர், கீப்பிங் செய்து 70 உதிரிகளை வழங்கியிருந்தார்.


இத் தொடரில் ஒரு முறை தானும் சங்ககார 7 ஓட்டங்களுக்கு மேல் பெறவில்லை.

6 இன்னிங்க்சில் 15 ஓட்டங்கள். சராசரி 3.75.


சங்ககார வக்கீல் ஐயா பெற்ற ஓட்டங்களைப் பாருங்களேன்..

0 not out, 2 not out, 7, 4, 0 & 0.


Strike rate 31.66.


எப்படி இருந்தவர்.. எப்படி ஆகிவிட்டார்..

இயலாவிட்டால் இளைய வீரர்களுக்கு இடம் விட்டு ஒதுங்க வேண்டியது தானே.. ஒதுக்கவும் விடாமல் அமைச்சர் சனத் ஜெயசூர்யாவை வைத்து அராஜகம் செய்கிறார்.

மத்தியூஸ் பாவம்.. அவரின் தலைமையில் சங்ககார விளையாடியுள்ள 18 போட்டிகளில் பெற்றுள்ள ஓட்டங்கள் 280.சராசரி 17.50.


இதற்குள் நேற்றும் நம்ம சங்கா ஐய்யா அவர்கள் ஒரு பேட்டியில் "2023 உலகக் கிண்ணம் வரை நான் விளையாட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்" என்று அரிய கருத்து உதிர்த்துள்ளார்..

இரண்டு மூன்று வீரர்கள் மட்டும் திறமை காட்டும் ஒரு அணி இறுதிப் போட்டிக்கு செல்வதென்பது நியாயமாகாது..
இலங்கை அணியில் கப்புகெதர, என்ஜெலோ மத்தியூஸ்(அணித்தலைவர்),லசித் மாலிங்க, திஸர பெரேரா மட்டுமே தொடர்ச்சியாக சிறப்பாக செயற்பட்டு வந்தவர்கள்..

ஆதிரை அண்ணா

இலங்கை கிரிக்கட் அணியிலும் தேசியப்பட்டியல் நியமனம் உள்ளதா என்று சிந்திக்க வைக்கின்றார் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினரின் நண்பர் கௌரவ குமார் சங்ககார அவர்கள். இவர் பல சாதனைகளுக்கு உரித்தான முன்னாள் கிரிக்கட் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறகென்ன... கடந்த ஐபிஎல் T10 போட்டியில் 04 போட்டிகளில் விளையாடி இவர் மொத்தமாக பெற்றது 33 ஓட்டங்கள் மட்டுமே. நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக கிண்ண T10 போட்டிகளில் 03 போட்டிகளில் 14 ஓட்டங்களைப் பெற்றும் அணியில் அசையாத நந்தியாய் இடம்பிடித்துள்ளார்.

கோர்ட் வாசலில் மக்கள் உங்கள் சேவைக்காக காத்திருக்கின்றனர். மைதானத்தை விட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள்... இலங்கை கிரிக்கட் ரசிகர்கள் சந்தோசப்பட்டுக் கொள்ளட்டும.
வந்தியத்தேவன் குரு
கிரிக்கெட்
ஐசிசியின் பத்துக்கு பத்து உலகக்கோப்பை இறுதிக்கட்டத்திற்க்கு வந்துவிட்டது. இன்றைய முதல் அரையிறுதியில் கிரிக்கெட் விமர்சகர்கள் பலரால் கேலி செய்யப்பட்ட அல்லது குறைத்துமதிப்பிடப்பட்ட சிம்பாபே அணி இலங்கையை மண் கவ்வச் செய்துவிட்டது. இந்தியாவுடனான போட்டியில் இலங்கை வீரர்கள் ஆக்கோரசமாக போராடி வென்றதற்கான பலனை இன்று அறுவடை செய்யமுடியவில்லை. முக்கியமான இந்தப்போட்டியிலும் அண்மைக்க்காலமாக சோபிக்காத நீதிமன்ற உறுப்பினர் கெளரவ குமார் சங்கக்காரவை ஏன் இணைத்தார்கள் என்பது மிகவும் ஆச்சரியமான விடயம். பெரும்பாலும் இலங்கை அணித் தெரிவில் அரசியல் தலையீடுகள் இருப்பதில்லை ஆனால் சங்ககாரவை மீண்டும் மீண்டும் சேர்க்கும் போது ஏதோ ஒரு இரகசியம் இருப்பதுபோல் தெரிகின்றது. சாதனை வீரன் சங்கா தற்போது பலராலும் காரசாரமாக சிலாகிக்கபடுவது கவலைக்குரியது. எப்படியிருந்த சங்கா இப்படியாகிவிட்டார்.
பவன்
 
ஆடிய ஆட்டமின்னும் அரைகூட முடியவில்லை
அதற்குள்ள என்னை ஏன் வீடுபோகச்சொல்லுறாங்க
அடித்த அடிகள் எல்லாம் பவுண்டரியில் தங்கிவிட
அதை எடுக்கப்போனவனோ வீடு வந்து சேரவில்லை

இரண்டாயிரம் ஆண்டு முதல் நாலுநாலாய் அடிக்கின்றேன்.
அப்பப்ப தொட்டுக்க FOOT WORKகில் சிக்ஸர்களும்
இப்பத்தான் கொஞ்சம் இயலாமல் இருக்கிறது
ஆனாலும் வக்கீலென்னை போவென்று சொல்வானேன்

எத்தனை பந்துகளை ஓட ஓடு அடித்திருப்பேன்
அத்தனை பாவமும்தான் என்னைச்சும்மா விட்டுடுமா
மூன்றாம் இடத்திலிருந்து மாறாம இருந்தவன் நான்
அதுக்கும் பின்னாடி என்னை எட்டில் தூக்கிப் போட்டுட்டியே

இரண்டாயிரம் ஆண்டு மட்டும் T10 இருந்திருந்தால்
சொல்லிச்சொல்லி அடித்திருப்பேன் பந்தை சொர்க்கத்துக்கு அடித்திருப்பேன்
இப்பமட்டும் சங்கா என்ன சப்பை என்றா நினைக்கிறீங்க
போர்ம் மட்டும் கிடைக்கட்டும் போட்டுத்தள்ளுறன் பாருங்கள்

சதீஸ் அண்ணா

  அனைத்துப்பதிவுகளிலும் சுபாங்கன் அண்ணாவின் பின்னூட்டம்

 தகவலுக்கு நன்றி
 
பதிவின் நீதி - வாழ்க்கை ஒரு வட்டம்..:P
இருபது வருடங்களுக்குப்பிறகு எப்படி இருப்பார்கள் என்று காட்டும் ஒரு தளம்(http://www.in20years.com/) தற்போது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே, அந்தத்தளத்தின் சுட்டி நேற்றுத்தான் என்கண்ணில் பட்டது உடனே சில பிரபலங்களின் படங்களை போட்டுப்பார்த்தேன் எப்படி இருந்திச்சு தெரியுமா? அட நீங்களே பாருங்க

இருபது வருடங்களுக்குப்பிறகும் இலங்கையின் ஓப்பினிங் பாட்ஸ்மன் இவர்தானாம்

மிஸ்டர் கூல்(COOL)

மிஸ்டர் கிறிக்கற்

மிஸ்டர் டைமிங்

மிஸ்டர் ஸ்பின்

மிஸ்டர் கிளாஸ்(CLASS)

ஐயோ இது காவல்காரனின் கெட்டப் சேஞ்ச் இல்லைங்கோ...

இதுதான் கார்த்திக் சாரி சிம்பு, 

நயன்தாரா டுவென்டிநைன் தாராவாகும் போது

இருபது வருடத்துக்குப்பிறகு ஜெசி ஜெசி

இந்தப்படம் பதிவர் சுபாங்கன் அண்ணாவுக்கு சமர்ப்பணம்

NO COMMENTS

ஜோ தமது விரல்களால் லேசர் கதிர்களைப்பரப்பி ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். 5 நிமிடங்களில் ஆராய்ச்சியை முடித்து ரிப்போட் கொடுக்க வேண்டும். ஆனால் இதுவரை எந்தத்தடையத்தையும் காணவில்லை. ஆம் இப்போது இலங்கைப்பக்கம் லேசர் கதிர்கள் வருகிறது. அதோ லேசர் கதிர் கண்டுபிடித்து விட்டது. இலங்கைத்தீவு இருந்த பகுதி கடலால் முழுமையாக மூடப்பட்டு விட்டது. ஆனால் கடலுக்குள் புதையுண்டு கிடக்கும் இலங்கை என்ற தீவை தெட்டத்தெளிவாகப்படம் படித்துக்காட்டியது லேசர் இயந்திரம்.



"இன்னும் ZOOM பண்ணு" இயந்திரத்துக்கு கட்டளையிட்டான். அங்கு ஒரு குவியலே கிடந்தது. எதைப்பற்றிய ஆராய்ச்சி அது. முன்னொருகாலத்தில் செல்போன் என்று ஒன்று இருந்ததாம். அதைதேடித்தான் இவனின்ஆராய்ச்சி நடைபெறுகிறது. உடனே கையிலுள்ள ஒரு இயத்திரத்தை எடுக்கிறான், லேசர் கருவி தான் பிடித்த படங்களை அந்தக்கருவிக்கு அனுப்புகிறது. உடனடியாக அந்தக்கருவி அந்தப்படத்தில் உள்ள பொருள் பற்றி அக்குவேறு ஆணிவேறாக ரிப்போட் தயாரிக்கிறது. 


ரிப்போட் விபரங்கள்

  • மொத்த கையடக்கத்தொலைபேசிகள்- 1800547856
  • அதில் SIM அட்டை உள்ளவை- 1800547512
  • SIM அட்டை வகைகளின் எண்ணிக்கை-1300

இதில் காணப்பட்ட வசதிகள்
  1. SMS- SHORT MESSAGE SERVICE
  2. MMS-MULTIMEDIA MESSAGE SERVICE
  3. BLUETOOTH
  4. INFRA RATE
  5. GPRS-  GENERAL PACKET RADIO SERVICE.
  6. WIFI-WIRELESS FIDELITY
என்று அனைத்து கையக்கத்தொலைபேசிகளுக்குமான தகவல்களை தனித்தனியே வெளியிடுகிறது. உடனடியாக அந்த ரிப்போட்டை அனுப்பிவிட்டு அதில் ஒருதொலைபேசியை தெரிவு செய்கிறான் ஜோ. அதில் காணப்பட்ட பல விடயங்கள் அவனை வியக்க வைக்கிறது. அந்த தொலைபேசியின் INBOXல் 3000 SMS கள் காணப்படுகின்றது. அப்படியே GALLERY செல்கிறான், அங்கே வடிவேலு ஆடும் "நாக்கமுக்கா..நாக்கமுக்கா" வீடியோப்பாடல் இருக்கிறது. அதைப்பார்க்க ஆரம்பித்தவனுக்கு சிரிப்புச்சிரிப்பாக வந்தது,(அவன் சிரித்து 15ஆண்டுகளாகிறது).



அவனுக்க இதையெல்லாம் பார்த்தபிறகு பழைய காலத்துக்கு சென்று பார்க்கவேண்டும் என்ற ஆசை வருகிறது. தனக்கு 13 நிமிடங்கள் லீவு கிடைத்திருப்பதால் உடனடியாக பழைய காலத்திற்கு செல்ல ஆரம்பித்தான். 28 விநாடிகளில் 2010ஆம் ஆண்டை அடைந்தவன் முதலில் சென்று இறங்கிய இடம் ஒரு பஸ் தரிப்பிடம். அங்கு ஒரு இளைஞர் கூட்டம் ஒவ்வொருவரின் கைகளிலும் கையடக்கத்தொலைபேசி. பஸ்தரிப்பிடத்தில் நிற்கும் ஒரு நவநாகரிக பெண்ணிற்கு முன் நின்று ஏதோ ஸ்டைலாகக் கதைப்பதாக வழிந்து கொண்டிருந்தனர்.


அவனுக்கு முதலில் இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று புரியவில்லை. இவனுக்கு உடனடியாக அதைப்புரிந்து கொண்ட அவனது தலைப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கணணி, "அவர்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் கைத்தொலைபேசி எனும் கருவியை அந்தப்பெண்ணிற்கு காட்டி தங்கள் பெருமைகளை வெளிக்காட்டுகின்றனர்" என்று அவனுக்கு விளக்கியது.


அடடா இப்படியும் மனிதர்களா? என்று நினைத்துக்கொண்டு அடுத்த கட்டமாக ஒரு பாடசாலையை அடைந்தான். அங்கு ஒரு வகுப்பறையில் ஆசிரியர் இருக்கவில்லை, சில மாணவர்கள், தமது கைத்தொலைபேசியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தனர். ஆசிரியர் வந்ததும், உடனடியாக அதை மறைத்துவைத்தனர். இவனுக்கு மீண்டும் குழப்பம், அதை அறிந்து கொண்ட இயந்திரம் மீண்டும் அதைப்பற்றி அவனுக்கு விளக்கியது. "அவர்கள் தொலைபேசியில் இணையம் எனப்படும் ஒரு விடயத்தில் ஏதோ ஒரு websiteல் comment அடித்து விளையாடிக்கொண்டிருந்தனர், பாடசாலையில் கைத்தொலைபேசி பாவிப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இவர்கள் திருட்டுத்தனமாக கைத்தொலைபேசி பாவிக்கின்றனர். அதுதான் ஆசிரியர் வந்ததும் ஒளித்து வைத்தனர்" என்றது.


பாடசாலையை விட்டு வெளியே வந்தவன் கண்ட காட்சி, மூன்று சக்கர வாகனமொன்று வந்து நிற்கிறது. அந்த வாகனசாரதி வாகனத்திலிருந்து இறங்கியவர்களிடம் எனக்கு ஒரு HIRE இருக்கு நீங்க வேலை முடிஞ்சதும் எனக்க ஒரு miss call அடியுங்க நான் திரும்பவும் வந்து பிக்கப் பண்ணிக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார். "அடடா கையடக்க தொலைபேசி இவ்வளவு popularரா இருந்திருக்கே" என்று மனதுக்குள் நினைத்தவனுக்கு இயந்திரம் இன்னும் 2 நிமிடங்கள் எஞ்சியிருக்கிறது என்று ஞாபகப்படுத்தியது. உடனடியாக அடுத்த 28 விநாடிகளில் அவனின் உலகிற்கு திரும்பியவன், அவன் பார்த்த விடயங்களை தனது blogல் "2009ஆம் ஆண்டில் கையடக்கத்தொலைபேசி என்று ஒன்று இருந்ததா?" என்ற தலைப்பில் பதிவு செய்து வெளியிட்டு விட்டு அடுத்தகட்ட வேலைக்குக்கிளம்பினான்.


Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்