Related Posts with Thumbnails
மு.கு - முழுக்க முழுக்க கற்பனையே யார்மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.
நேற்றுப்பிரகாசித்த கிறிக்கற் வீரர்கள் இன்று அடித்துரத்தப்படும் அளவுக்கு விமர்சிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒருகாலத்தில் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக இருந்திருக்கலாம். ஆனால் வயதும் உடலும் ஒத்தழைக்கவில்லையென்றால் ஒதுங்கிவிடவேண்டும். அப்படி ஒதுங்காவிட்டால் 2021இலும் இப்படித்தான் பதிவுகள் வரும்

2021 உலகம் மிக வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் காலம். தற்போது T20போல T10 அறிமுகப்படுத்தப்படுகிறது. அப்போது சனத் ஜெயசூரியவை 2013ல் உலகக்கிண்ணத்தில் விளையாட அனுமதித்த நன்றிக்கடனை தீர்ப்பதற்காக சங்கக்காரவை அமைச்சர் சனத் தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி அணியில் விளையாட அனுமதிக்கிறார்.
தற்போதைய(2021) அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ். இப்போது இலங்கை அணி சங்கக்கார என்ற கிழட்டு சிங்கத்தை அணியில் அனுமதித்ததால் போட்டிகளில் தோல்வியடைந்து வருகிறது. அப்போது வழக்கம்போல பதிவர்கள் சிலரின் பதிவுகள் எப்படி வரும் என்று ஒரு சின்னக்கற்பனை.

கன்கொன்
சங்கக்கார இப்போதெல்லாம் எதற்குமே பிரயோசனமில்லாமல் வெத்து வேட்டாக அணியிலிருப்பதால் பலருக்கு சங்கா மீது எரிச்சல்.
சங்காவை வைத்து நகைச்சுவை மொக்கை போட முயற்சிக்கிறார்கள்....

இப்படித்தான் அண்மையில் பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்ட போது தெரியாத்தனமாக சங்காவுக்கு இற்கு ஓய்வு (rested) என்று சொல்லிவிட்டார்கள்...
அதை வைத்து நான் உட்பட பலர் நக்கலடிக்கிறார்கள் சங்கா என்ன செய்து கிழித்துவிட்டார் என்று ஓய்வு என்று.

ஆனால் நாங்கள் ஒரு மிகப்பெரும் உண்மையை மறந்திருக்கிறோம்.
அதற்கு முன்னர் சிறிய விளக்கமொன்றை சொல்ல விரும்புகிறேன்.
நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நடந்து செல்கிறீர்கள். அங்கிருந்து உடனே திரும்பி உங்களால் நடந்து வந்தால் களைக்குமல்லவா?
ஆனால் அதுவே அங்கு கொஞ்சம் இளைப்பாறிவிட்டு திரும்பி நடந்து வந்தால் களைப்புத் தெரியாதல்லவா?
சரி,
அதையே இங்கு நோக்குங்கள்...
சங்கா தலைக்கவசம், கால் கவசங்கள், அது இது எண்டு எல்லாத்தயும் குனிஞ்சு நிமிர்ந்து கட்டிக்கொண்டு 2,3 கிலோகிராம் நிறையுள்ள துடுப்பையும் (bat) எடுத்துக் கொண்டு மூச்சிரைக்க மூச்சிரைக்க நடந்து போய் அங்க guard எல்லாம் எடுத்திற்று லெக்கில வாற போல ஓஃப் திசையில அடிக்கப்போய் உடனயே ஆட்டமிழந்து திரும்பி வரும் போது எவ்வளவு களைப்பா இருக்கும் தெரியுமா?
ஆகவே இலங்கை அணியில் அதிகம் களைப்படைந்த வீரர் சங்கா மட்டுமே.

என்னைப் பொறுத்தவரை இந்த ஓய்வு சங்காவிற்கு நிச்சயமாகத் தேவைப்பட்ட ஒன்று. ;)

லோசன் அண்ணா
குமார் சங்ககார
இலங்கை அணியினதும்,ரசிகர்களினதும் முன்னாள் ஹீரோ.. எதிரணிகளின் முன்னாள் வில்லன். இப்போது சொந்த அணியிலேயே வேண்டாத நபராக,வில்லனாக மாறி நிற்கிறார்.

இவர் நேற்றும் விளையாடியதால் கிட்டத்தட்ட இலங்கை அணி 10 வீரர்களுடனேயே விளையாடி இருந்தது.


நேற்று நான்கு பந்துகளில் ஒரு ஓட்டம் பெற்ற அவர், கீப்பிங் செய்து 70 உதிரிகளை வழங்கியிருந்தார்.


இத் தொடரில் ஒரு முறை தானும் சங்ககார 7 ஓட்டங்களுக்கு மேல் பெறவில்லை.

6 இன்னிங்க்சில் 15 ஓட்டங்கள். சராசரி 3.75.


சங்ககார வக்கீல் ஐயா பெற்ற ஓட்டங்களைப் பாருங்களேன்..

0 not out, 2 not out, 7, 4, 0 & 0.


Strike rate 31.66.


எப்படி இருந்தவர்.. எப்படி ஆகிவிட்டார்..

இயலாவிட்டால் இளைய வீரர்களுக்கு இடம் விட்டு ஒதுங்க வேண்டியது தானே.. ஒதுக்கவும் விடாமல் அமைச்சர் சனத் ஜெயசூர்யாவை வைத்து அராஜகம் செய்கிறார்.

மத்தியூஸ் பாவம்.. அவரின் தலைமையில் சங்ககார விளையாடியுள்ள 18 போட்டிகளில் பெற்றுள்ள ஓட்டங்கள் 280.சராசரி 17.50.


இதற்குள் நேற்றும் நம்ம சங்கா ஐய்யா அவர்கள் ஒரு பேட்டியில் "2023 உலகக் கிண்ணம் வரை நான் விளையாட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்" என்று அரிய கருத்து உதிர்த்துள்ளார்..

இரண்டு மூன்று வீரர்கள் மட்டும் திறமை காட்டும் ஒரு அணி இறுதிப் போட்டிக்கு செல்வதென்பது நியாயமாகாது..
இலங்கை அணியில் கப்புகெதர, என்ஜெலோ மத்தியூஸ்(அணித்தலைவர்),லசித் மாலிங்க, திஸர பெரேரா மட்டுமே தொடர்ச்சியாக சிறப்பாக செயற்பட்டு வந்தவர்கள்..

ஆதிரை அண்ணா

இலங்கை கிரிக்கட் அணியிலும் தேசியப்பட்டியல் நியமனம் உள்ளதா என்று சிந்திக்க வைக்கின்றார் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினரின் நண்பர் கௌரவ குமார் சங்ககார அவர்கள். இவர் பல சாதனைகளுக்கு உரித்தான முன்னாள் கிரிக்கட் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறகென்ன... கடந்த ஐபிஎல் T10 போட்டியில் 04 போட்டிகளில் விளையாடி இவர் மொத்தமாக பெற்றது 33 ஓட்டங்கள் மட்டுமே. நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக கிண்ண T10 போட்டிகளில் 03 போட்டிகளில் 14 ஓட்டங்களைப் பெற்றும் அணியில் அசையாத நந்தியாய் இடம்பிடித்துள்ளார்.

கோர்ட் வாசலில் மக்கள் உங்கள் சேவைக்காக காத்திருக்கின்றனர். மைதானத்தை விட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள்... இலங்கை கிரிக்கட் ரசிகர்கள் சந்தோசப்பட்டுக் கொள்ளட்டும.
வந்தியத்தேவன் குரு
கிரிக்கெட்
ஐசிசியின் பத்துக்கு பத்து உலகக்கோப்பை இறுதிக்கட்டத்திற்க்கு வந்துவிட்டது. இன்றைய முதல் அரையிறுதியில் கிரிக்கெட் விமர்சகர்கள் பலரால் கேலி செய்யப்பட்ட அல்லது குறைத்துமதிப்பிடப்பட்ட சிம்பாபே அணி இலங்கையை மண் கவ்வச் செய்துவிட்டது. இந்தியாவுடனான போட்டியில் இலங்கை வீரர்கள் ஆக்கோரசமாக போராடி வென்றதற்கான பலனை இன்று அறுவடை செய்யமுடியவில்லை. முக்கியமான இந்தப்போட்டியிலும் அண்மைக்க்காலமாக சோபிக்காத நீதிமன்ற உறுப்பினர் கெளரவ குமார் சங்கக்காரவை ஏன் இணைத்தார்கள் என்பது மிகவும் ஆச்சரியமான விடயம். பெரும்பாலும் இலங்கை அணித் தெரிவில் அரசியல் தலையீடுகள் இருப்பதில்லை ஆனால் சங்ககாரவை மீண்டும் மீண்டும் சேர்க்கும் போது ஏதோ ஒரு இரகசியம் இருப்பதுபோல் தெரிகின்றது. சாதனை வீரன் சங்கா தற்போது பலராலும் காரசாரமாக சிலாகிக்கபடுவது கவலைக்குரியது. எப்படியிருந்த சங்கா இப்படியாகிவிட்டார்.
பவன்
 
ஆடிய ஆட்டமின்னும் அரைகூட முடியவில்லை
அதற்குள்ள என்னை ஏன் வீடுபோகச்சொல்லுறாங்க
அடித்த அடிகள் எல்லாம் பவுண்டரியில் தங்கிவிட
அதை எடுக்கப்போனவனோ வீடு வந்து சேரவில்லை

இரண்டாயிரம் ஆண்டு முதல் நாலுநாலாய் அடிக்கின்றேன்.
அப்பப்ப தொட்டுக்க FOOT WORKகில் சிக்ஸர்களும்
இப்பத்தான் கொஞ்சம் இயலாமல் இருக்கிறது
ஆனாலும் வக்கீலென்னை போவென்று சொல்வானேன்

எத்தனை பந்துகளை ஓட ஓடு அடித்திருப்பேன்
அத்தனை பாவமும்தான் என்னைச்சும்மா விட்டுடுமா
மூன்றாம் இடத்திலிருந்து மாறாம இருந்தவன் நான்
அதுக்கும் பின்னாடி என்னை எட்டில் தூக்கிப் போட்டுட்டியே

இரண்டாயிரம் ஆண்டு மட்டும் T10 இருந்திருந்தால்
சொல்லிச்சொல்லி அடித்திருப்பேன் பந்தை சொர்க்கத்துக்கு அடித்திருப்பேன்
இப்பமட்டும் சங்கா என்ன சப்பை என்றா நினைக்கிறீங்க
போர்ம் மட்டும் கிடைக்கட்டும் போட்டுத்தள்ளுறன் பாருங்கள்

சதீஸ் அண்ணா

  அனைத்துப்பதிவுகளிலும் சுபாங்கன் அண்ணாவின் பின்னூட்டம்

 தகவலுக்கு நன்றி
 
பதிவின் நீதி - வாழ்க்கை ஒரு வட்டம்..:P

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. பதிவும் சுபாங்கனின் பின்னூட்டமும் கலக்கல்.

  1. கலக்கல் பவன். நான் எப்படி எழுதுவேன் என யோசிக்கும் போது அதையும் போட்டு ரணகளம் ஆக்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள். அப்பு ராசா ஆப்பு ரெடியாகிட்டு இருக்கு......

  1. ஹா ஹா.....

    அதுவும் சுபாங்கன் அண்ணாவின் பின்னூட்டம் கலக்கலோ கலக்கல்......

  1. அய்யோ அம்மா.. கொன்றுவிட்டாயடா..
    சிரிச்சு சிரிச்சு வயிறு நோவுது..

    யோசிச்சுப் பார்த்தா இன்னும் நிறையவே புரியுது..

    கலக்கல்..

  1. என்னா ஒரு கற்பனை...வாழ்த்துக்கள்...
    வாழ்கை ஒரு வட்டம் :)

  1. Unknown Says:

    appavum ilangai aniyila thamizanukku idam irukkaathu polayae.. he he he

  1. Unknown Says:

    ரூம் போட்டு யோசிச்சதா?

  1. Subankan Says:

    அடேய்.........

  1. கலக்கல் ணா...!

  1. ஏன்? ஏன் இப்படி. அப்புறம் அழுதுடுவேன். வேண்டாம் சங்கா பாவம்..

    அவ்வ்வ்வ்வ்


    யோ வொய்ஸ் (யோகா)

  1. Jhona Says:

    "வாழ்க்கை ஒரு வட்டம்.

  1. உக்காந்து யோசிப்பாய்ங்களோ...?
    நன்றாக இருந்தது.
    குறிப்பாக லோஷன் அண்ணாவின் வசன நடையும், உள்ளடக்கமும்.......ரியல் உல்ட்டா!

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்