#001 நண்பன் ஒருத்தன் லவ் செட் ஆகிட்டு மாப்புள எண்டான், நானும் Treat கேட்டன், அவன்ட வீட்டில இருந்து கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் Busல கூட்டிட்டு போய், ஏதோ ஒரு மூலையில் இருந்த முனியாண்டி கடையில ஒரு glass பால் வாங்கித்தந்து Treatடா Enjoy எண்டான். இன்னிக்கு "லவ் எல்லாம் எப்பிடி மச்சி" எண்டு கேட்டா நான் உனக்கு பால் ஊத்தினன், அவள் எனக்கு சங்கு ஊதிட்டாள்டா எண்டுறான் =P #WhattaCoincident #LoveMatter #LMAO
#002 இப்பிடித்தான் இன்னொரு நாள் இன்னொரு நண்பனோட படம் பாக்கப்போயிருந்தன். அவனுக்கு அடிக்கடி Call வந்திட்டே இருந்திச்சு, "எடுத்துக் கதையன்டா" எண்டன், "இல்லடா, நேற்று முழுக்க நான் Call பண்ணினன் அவள் Answer பண்ணல, So இண்டைக்கு நான் Answer பண்ணமாட்டன்" எண்டான். என்ன கறுமமோ எண்டு பேசாம விட்டுட்டன். அப்பறம் கொஞ்ச நேரத்தால அவனுக்கு Call வரல போல, சீரியசா படம் பாத்திட்டு இருந்த என்னை சுரண்டி, "டேய் என்னடா Call பண்ணுறதை நிறுத்திட்டாள்" எண்டு கேக்கிறான். #அவ்வ்வ்
#003 நண்பனோட ஒருநாள் Roadல நடந்து போய்க்கொண்டிருந்தன், அப்ப அவனுக்கு அவன்ட Loverட இருந்து call வந்திச்சு, அப்ப என்னை 2அடி முன்னால போக சொல்லிட்டு கதைச்சிட்டு வந்து கொண்டிருந்தான். அது ஒரு கும்மிருட்டான பாதை, paymentல ஒரு கல்லு உடைஞ்சு இருந்தது, கீழ நல்ல ஆழமான கான். அப்ப அவன் கிட்ட வரும் வரை wait பண்ணி "டேய் கீழ பள்ளம் பாத்துவாடா" எண்டன். அவன் அதைக் கணக்கெடுக்காம கடலை போட்டுக்கொண்டே வந்தான், நான் திரும்பத் திரும்பக் கத்தினன், அப்ப அவனுடைய Loverக்கே அது கேட்டிருக்கும் போல என்ன சந்தம் எண்டு கேட்டிருக்கிறா, அதுக்கு அவன் சொன்ன பதில். "அது ரோட்டில யாரோ ஒரு பிச்சைக்காரன், நீ சொல்லு செல்லம்" டேய் உன்னைய அந்தக் குழியில போட்டு புதைக்காம விட்டது என் தப்புத்தான்.
டிஸ்கி 1: யாவும் கற்பனையே, யார் மனதையும் புண்படுத்த அல்ல. டிஸ்கி 2: டிஸ்கி 1ஐ நம்பிட்டீங்கதானே எல்லாரும் =P
அதே நான்கு கண்கள்
அதே பழைய இடம்
ஏக்கமும் தவிப்பும்
பதற்றமும் கொஞ்சம் புதுமையாய்
பள்ளத்தில் வழிந்தோடிய
வருடங்களை துரத்திக் கொண்டு - நாம்
வேகமாக ஓடிச் சேர்ந்த இடத்தில்
மௌனங்கள் மட்டும் துளிர்விட்ட
அழகிய வரலாறு
இன்னும் பசுமையாகவே இருக்கிறது
மௌனங்கள் மட்டும் பேசிக்கொள்ளட்டும்
நீ நினைப்பதைக் காற்று மொழிபெயர்க்கட்டும்
தென்றலோ புயலோ எதுவாயிருப்பினும்
என்னை நேரடியாகத் தாக்கட்டும்
என் மீசைக்கும்
உன் முகப்பரு வந்த வடுவிற்கும்
நாங்கள் பேசிக்கொள்ளும்
மௌன வரலாற்றுக்கும் ஒரே வயது
என்பது உனக்குத் தெரியுமா?
தென்றலால் மேகங்களை திசைமாற்ற முடியாது
திடீரென அடித்த புயல்தான் சூத்திரதாரி
பிரிந்த பிறகு ஊமையாகிப் போனவர்கள்
புன்னகையை மட்டும் முகமூடியாக்கக்
கற்றுக் கொண்ட பின்னர் சந்திக்கிறோம்
ஒவ்வொரு புன்னகையின் பின்னரும்
ஒரு நீண்ட பெரூமூச்சு
ஒவ்வொரு பெருமூச்சின் பின்னரும்
ஆழ் மனதை அடைக்கும் ஒரு கனம்
இன்னும்
உலகப்போரையும் நிறுத்திவிடக்கூடிய
அதே புன்னகையுடன்தான் இருக்கிறாய் - ஆனால்
அழகியிலிருந்து தேவதையாகப்
பதவி உயர்த்தப்பட்டிருக்கிறாய்
அதில் இடைநழுவல்களுக்கு இடமில்லை உன் மூச்சுத்தான் என் சுவாசம் அதில் இளந்தென்றலுக்கு இடமில்லை உன் பேச்சுத்தான் என் கீதம் அதில் வேறு இசைகளுக்கு இடமில்லை உன் நிழல்தான் என் நிஜம் அதில் என் உருவத்துக்கு இடமில்லை உன் தடம் தான் என் பாதை அதில் வேறு பாதைகளுக்கு இடமில்லை
என் மனதுக்குள் எனக்கே கல்லறை எழுப்பி
இதயத்தை துண்டு துண்டாய் வெட்டி வீழ்த்தி
இரத்தம் சொட்டச் சொட்ட ஓடிப்போகச் சொல்கிறாயே
கரைகடந்து போன பின்னர் வெந்நுரையைத் எடுத்துவரச் சொல்லி கடலில் தள்ளிவிடுகிறாயே குளிர் பனித்துளியாய் இருந்த உன்னை கடுஞ்சூரியனாய் மாற்றியது யார்?
முதலாவது என்பதிலுள்ள சுகங்களை நீ அறிவாயா? முதலாவது என்பதிலுள்ள வலிகளை நீ அறிவாயா?
காட்டு யானையின் கால் பட்டு உடைந்தகண்ணாடித் துகள்களாய்- காதலை சில்லுசில்லாய் நொறுக்கிவிட்டாய் வாரணம் கனக்கும் மனதுடன் நான் ஓடிய பாதையெங்கும் - உன் பெயரை உச்சரித்து இரத்தம் உறைந்து போவதை நீ அறிவாயா