Related Posts with Thumbnails

தயவு செய்து போய்விடு!

பதிவிட்டவர் Bavan Sunday, February 5, 2012 5 பின்னூட்டங்கள்


என் முந்நாள் என்னவளே!


காதல் தீவிரவாதம்
அதில் இடைநழுவல்களுக்கு இடமில்லை
உன் மூச்சுத்தான் என் சுவாசம் 
அதில் இளந்தென்றலுக்கு இடமில்லை
உன் பேச்சுத்தான் என் கீதம்
அதில் வேறு இசைகளுக்கு இடமில்லை
உன் நிழல்தான் என் நிஜம் 
அதில் என் உருவத்துக்கு இடமில்லை
உன் தடம் தான் என் பாதை
அதில் வேறு பாதைகளுக்கு இடமில்லை


என் மனதுக்குள் எனக்கே 
கல்லறை எழுப்பி
இதயத்தை துண்டு துண்டாய் 
வெட்டி வீழ்த்தி
இரத்தம் சொட்டச் சொட்ட 
ஓடிப்போகச் சொல்கிறாயே


கரைகடந்து போன பின்னர் 
வெந்நுரையைத் எடுத்துவரச் சொல்லி
கடலில் தள்ளிவிடுகிறாயே
குளிர் பனித்துளியாய் இருந்த உன்னை
கடுஞ்சூரியனாய் மாற்றியது யார்?

முதலாவது என்பதிலுள்ள
சுகங்களை நீ அறிவாயா?
முதலாவது என்பதிலுள்ள
வலிகளை நீ அறிவாயா?


காட்டு யானையின் கால் பட்டு 
உடைந்தகண்ணாடித் துகள்களாய்- காதலை
சில்லுசில்லாய் நொறுக்கிவிட்டாய்
வாரணம் கனக்கும் மனதுடன் நான்
ஓடிய பாதையெங்கும் - உன்
பெயரை உச்சரித்து இரத்தம் 
உறைந்து போவதை நீ அறிவாயா


யதார்த்தம் என்ற பெயரில் சில
நிஜங்கள் பேசி - என்
உயிர் ஊசி பிடுங்கிவிட்டாய்
பதிலுக்கு நிஜம் பேசி உன்
உயிரைப் புசிக்கமாட்டேன்
தயவு செய்து போய்விடு!


நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. :)

  1. அருமை நண்பா ... அனுபவம் போல் உள்ளதே ..... உன் குரலிலேயே கவிதையை கேட்டது மகிழ்ச்சி .......

    "கரைகடந்து போன பின்னர்
    வெந்நுரையைத் எடுத்துவரச் சொல்லி
    கடலில் தள்ளிவிடுகிறாயே"

    அருமை

  1. அருமை நண்பா ... அனுபவம் போல் உள்ளதே ..... உன் குரலிலேயே கவிதையை கேட்டது மகிழ்ச்சி .......

    "கரைகடந்து போன பின்னர்
    வெந்நுரையைத் எடுத்துவரச் சொல்லி
    கடலில் தள்ளிவிடுகிறாயே"

    அருமை

  1. உன் குரலில் சூப்பர் மச்சான்
    கலக்கல்

  1. வரிகளும் அழகு,
    வார்த்தைகளும் அழகு...

இதுதான் நான்

My Photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (3) 42 (1) 800 (1) Airtel (1) FOOTBALL (1) Friend (1) Google (1) GoogleDoodle (1) IPL (5) LesPaul (1) Love (1) Noball (3) SMS (1) T20 (4) tweets (11) twitter (11) WhyThisKolaiveriDi (1) ஃபிகர் (2) அக்டோபர் (1) அக்தர் (1) அஜித் (1) அஞ்சலி (1) அனுபவம் (47) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (3) அறிவித்தல் (5) அவுஸ்திரேலியா (6) ஆச்சரியம் (6) ஆதிரை (5) இசை (6) இதயம் (1) இலங்கை (19) உண்மை (14) உலகக்கிண்ணம் (5) எதிர்காலம் (5) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) கதை (26) கன்கொன் (7) கன்கொன் (3) கலைஞர் (1) கல்கி (5) கவிதை (25) கவியரங்கம் (1) காதல் (10) காமடிகள் (107) காம்பீர் (1) கிரிக்கெட் (58) குடி (1) குடும்பசாமியார் (2) கும்மி (16) கோபம் (4) கோயில் (1) சகுனம் (1) சங்கக்கார (6) சச்சின் (2) சந்திப்பு (2) சந்தியா (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (20) சுஜாதா (1) சுறா (5) சூதாட்டம் (3) சேவாக் (4) டில்ஷான் (1) தனுஸ் (2) தினக்குரல் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தெய்வத்திருமகள் (1) தொழிநுட்பம் (2) தேர் (1) தேர்தல் (4) தொடர்பதிவு (5) நட்பு (3) நன்றி (3) நித்தியானந்தா (6) நினைவு (9) நினைவுகள் (9) நிலா (1) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) பதிவுலகம் (40) பப்புமுத்து (3) பயம் (2) பயிற்சி (1) பரீ்ட்சை (4) பாகிஸ்தான் (6) பாட்டு (6) புத்தர் (1) போஃபியா (1) பொது (16) போட்டி (1) போட்டோ காமண்டு (54) போலி (8) போலிச்சாமியார் (11) மரம் (2) மழை (1) மாநாடு (2) மின்சாரசபை (1) முரளி (2) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (91) யாழ்தேவி (2) யூசுப் (1) ரஜனி (1) ரன்திவ் (1) லோஷன் (1) வடை (2) வந்தியண்ணா (6) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்த்து (18) விக்கற் (2) விஜய் (4) விமர்சனம் (8) விலங்கு (4) விளம்பரம் (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்