Related Posts with Thumbnails
Showing posts with label song. Show all posts

Malare Premam song Tamil Version Lyrics

பதிவிட்டவர் Bavan | நேரம் 7:25 PM | 0 பின்னூட்டங்கள்


வானெங்கும் ஒளி அலையில் வண்ணங்கள் ஏனோ!
அழகிய ஒரு வண்ணக்கனவு என்னுள்ளே தானோ!
ஆற்றோரம் கீற்றொன்று என்மீது மோதும்
குழலூடு பரவும் இசை புது ரத்தம் பாய்ச்சும்

குளிர்கின்ற கனவென்னில் கரை மோதிய நேரம்
இளவேனில் இதயத்தில் துளிராடிய காலம்
மயில்இணைகள் என் இமைகள் மலர்விக்கும் பொழுது
என்னுள்ளே காதல் கொடி பூப்பூக்கும் தருணம்

அழகே!
அழகில் வழிந்த சிலை அழகே!
மலரே!
என் உயிரில் மலரும் பனிமலரே!

மலரே உன்னைக் காணாதிருந்தால்
விழி காணும் நிறமெல்லாம் காணாமல் போகும்
அன்போடு நீ என்னை அணைக்காதிருந்தால்
அழகான கனவெல்லாம் கலைந்தேதான் போகும்

நான் எந்தன் ஆத்மாவின் ஆழத்தின் உள்ளே
எவரெனும் அறியாமல் வரைகின்ற என் காதல்
இசையாகி மொழியாகி கவிதைகளாகி
ஒவ்வொரு வண்ணங்களாகும்!

உடைகின்ற போதே உள் நெஞ்சின் உள்ளே
மழை போல வந்தென்னில் வழிகின்ற ஊற்றே!
தளர்கின்ற போதே துணையாக நின்றே
தாய் போல எனை என்றும் தாங்கும் மலரே!

அழகே!

குளிர்கின்ற கனவென்னில் கரை மோதிய நேரம்
இளவேனில் இதயத்தில் துளிராடிய காலம்
மயில்இணைகள் என் இமைகள் மலர்விக்கும் பொழுது
என்னுள்ளே காதல் கொடி பூப்பூக்கும் தருணம்

அழகே!
அழகில் வழிந்த சிலை அழகே!
மலரே!
என் உயிரில் மலரும் பனிமலரே!
-Bavananthan 

Music (Re-Composed) - Arunprasath
Tamil Lyrics: Bavananthan

போராடு நண்பா!
புது விதிகளை மாற்றி போராடு
வலி தாங்கு தோழா!
வரும் தடைகள் தாக்கு வேரோடு

வலி தந்த வாழ்க்கை முடியட்டும்
விழி கொண்ட நீரும் வடியட்டும்
கதை கொண்டு மோது
கரை தேடு
கலங்காதே!

திசை தோறும் உன் பேர் ஒலிக்கட்டும்
வசை ஊறும் நாக்கள் அடங்கட்டும்
கால் கொண்டு ஆடு
விடை தேடு
விதி மாற்றவே!

(போராடு நண்பா!)

விண்ணோடு மோது
புயல் காற்றைப் போல நீயாடு
தரை மோதி வீழு
கண்ணீரை உந்தன் உரமாக்கு

விழி தூக்கம் கொன்று
வலி ஏக்கம் கொண்டு
வழிகின்ற வாழ்க்கை
உன் காலில் மோதி வீழ்கிறதே!

எதிர்க்கின்ற களைகள்
தடுக்கின்ற சதிகள்
எதிர் கொண்டு மோதி
உன் எரியும் விழியில் கருகியதே!

(வலி தந்த வாழ்க்கை..)

-Bavananthan

Music: Vidushan 
Lyrics: Bavananthan

Untitled Song | பெண்

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:29 AM | 0 பின்னூட்டங்கள்
Music: Roshan
Vocal: Kay Jay
Lyrics: Bavan

இதயத்தின் ஓசையும் செவியினில் தொலையுதே
முட்களில் சிக்கியே மனமெல்லாம் கிழியுதே
சிதறியே சிதறியே மனமெல்லாம் பறக்குதே
உதறியே ஊதறியே உலகெல்லாம் வெறுக்குதே

சமூகத்தின் சாட்டையும் என்னயே அறையுதே
காமுகனின் வேட்டையில் என் உயிர்நாடி குறையுதே

மேகம் அது அழுது அழுது வான்மது வெளிக்கும் - என்
கண்ணீரின் குளத்தினிலே கனத்த மனம் மிதக்கும்

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீதென்று
எண்ணியவனும் இன்று மாய்ந்து விட்டானோ
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற
விந்தை மனிதன் தலை குனிந்தானோ!

இது நரிகளும் உலவுகின்ற காடு - நீ
நல்லவனை பொறி வைத்து தேடு
புற்களிலே பனித்துளி வீழும்- அது
சூரியப் பற்களிலே நொருங்கிச் சாகும்

கண்ணியம் கொண்டு
பெண்ணியம் கண்டு
வஞ்சகம் கொன்று
வாழ்பவன் உண்டோ

விண்ணகம் சென்ற
பாரதி மீண்டும்
மண்ணகம் வந்து
பிறப்பெடுப்பானோ

பிறந்ததும் கொன்று
பெண்களைத் தின்று
புசிக்கும் மிருகங்களை
வேரறுப்பானோ

சிறுமியின் குமரியின்
தேகத்தை உறுஞ்சி
யுவதியைக் கிழவியைக்
காமத்தில் விழுங்கி
புணர்ச்சியில் கலந்து
உணர்ச்சியில் சிதைந்து

பயிரோடு மேய்ந்து
உயிரோடு கொன்று
முட்டி முளைக்கும்
அரும்பினை அறுத்து
வெட்டித் தளைக்க முன்
வேரோடு தறித்து


விதிமுறை மாற்றி
விடைகளைத் தேடி
நெறிமுறை மாற்றி
நடைகளைக் கூட்டி
நடையிட முயலும்

மாந்தரை கண்டு
அடக்கி ஒடுக்கி
விதை விடும் முன்னே
களையெனப்பிடுங்கி

மாசினை விதைத்து
காசினைக் கொடுத்து
கனவுகள் புதைத்து
ஆறாத காயமளிப்பது முறையோ

காதலின் பெயரில்
கலவிகள் கொண்டு
மோதலின் பெயரில்
காதலைக் கொன்று
சிசுவுடன் பெண்ணின்
அழுகுரல் கண்ணின்
உவர்ப்பு நீர் உண்டு
தன்னுயிர் மென்று
ஈருயிர் கொல்லும்
அகோர சமாதி


காதல் மோதல் கலவி காமம்
வஞ்சகம் சூழ்ச்சி போட்டி பொறாமை
பேராசை மோகம் தேகம் சாபம்
கலாச்சாரம் கட்டுப்பாடு பண்பாடு  முட்டாள்
பாகுபாடு குறைபாடு அறிவிலி அடிமை
அஞ்ஞானம் மெஞ்ஞானம் மடந்தை

விழியின் சோகம் மண்ணோடு போகும்
வலியின் தாகம் நெஞ்சோடு சேரும்
இந்தக் காயம் ஆறும் முன் ஓடிவிடு
உந்தன் மாய மான்களை விரட்டிவிடு
-Bavan
Music: ArunPrasath
Lyrics: Bavananthan
Vocal:


விழியோரம் துளி நீரும்
விரல் மோதி விழுகிறதே
கலைத்தாயின் கருவறையில்
புது மொட்டு தவழ்கிறதே

கனவுகள் பல கொண்டு
பிறக்கின்ற சிறு வண்டு
கடலில் போய் கலந்திடுமே

வானிலே உயிர்கொண்டு
மலையிலே நிலை கொண்டு
திரை மோதி இறந்திடுமே

இருப்பது சில காலம்
இயற்கையின் விதி கூறும்
இறப்பில் போய் இணைந்திடுமே

இருக்கிற வரை நீளும்
இறுதியில் நிலை மாறும்
மண்ணில் போய் மடிந்திடுமே

பூக்களும் ஒரு நாளில்
பிறக்குது மறு நாளில்
மண் மேல் உரமாகிடுமே

நம்பிக்கை வேரூன்று
தெளிவுடன் காலூன்று
உன் வெற்றி நிச்சயமே

கதைகள் பல சொல்லி
விதைகள் பல கிள்ளி
கதை வந்து தாக்கிடுமே

நீராய் உரு மாறு
வேராய் தினம் ஊறு
மண் மோதி முளைத்து விடு
-Bavan
Image Courtesy: www.heavtryq.com
என் அன்பே ஒருமுறை பார்த்தாய் என் ஆயுள் பல நொடி சேர்த்தாய் உன் விழியின் அசைவிலே மீண்டும் நான் இறந்தே பிறந்திட வேண்டும்
உன் கண்களில் மின்னிடும் காதல் - அதை கண்டேன் பலமுறை நானும் நீ மீண்டும் காதலை சொன்னாய் என் இதயத்திலே உனை நெய்தாய்
புல்லின் மீது வாழும் குளிர் பனித்துளி போலே நீயும் சொல்லாமல் என் மேல் மோதும் உன் காதல் என் மேல் வீழும்
இமை கோதும் பூவும் நீதானா இதழோரம் கொஞ்சம் மலர்வாயா முகை மோதும் தேனீ நான்தானா மோட்சங்கள் இன்றே தருவாயா
அடிவானில் மேகம் போல நானும் உனைத் தேடி வருவேனே நாளும் கரை மோதும் அலை போலே நீயும் எனைத் தீண்டிப் போனாலே போதும்
துளிகளின் இடையினில் இடைவெளி நெடுகினில் நுழைகிற மழை நீயா நிலை குலைகிற பொழுதினில் விழுகிற மழை விழிக் குவியத்தை மாற்றுவதேன்
உன் விழியில் நுழைந்து கொண்டு இதயம் கடந்து வந்து அணுவில் கலந்து விடவா கடல் அலையில் குதித்துச் சென்று குமிழிகளை இணைத்து  மாலை தொடுத்து வரவா -Bavan Composer: Roshan Vocal: Rahulan Lyrics: Bavan *Yet to be released.


Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்