Related Posts with Thumbnails

ஐயோ வட போச்சே...

பதிவிட்டவர் Bavan | நேரம் 5:13 PM | 12 பின்னூட்டங்கள்


ஆயிரம் வடை சுட்டு அண்டாவிலே போட்டாலும்
அதிலொன்றைக் கருங்காகம் கவ்விக்கொண்டு போனதுமே
தன்னால் முடிந்தவரை சினத்தோடு வசைபாடி
தளர்ந்துபோய்க் கிழவி சொன்னாள் ஐயோ வட போச்சே


திருடிய வடைதனையே தின்ன முடிவெடுக்க
பாட்டுப்பாடு குயில் குரலா என்று நரி சொல்ல
பாட்டுப்பாட எத்தனித்த காக்கையின் வாய்தப்பி 
நரி வாயில் குடிகொள்ள
ஆறாத வடையிழந்த கோபம் கொதிக்கும் கருங்காகம்
கடுமையாய் கரைந்ததுவே ஐயோ வட போச்சே


பாட்டுப்பாட நரி சொல்ல பாதத்திலே வடையை வைத்து
திறமையான திருட்டுக்காக்கை கடுமையான தன்குரலில்
முகாரியில் பா கரைய காதுக்குப் பூட்டுப்போட்டு
துயரொலியில் குள்ளநரி ஐயோ வட போச்சே


நிலாவில் ஒரு பாட்டி நித்தம் வடை சுடுவா
சாப்பிடடா என்மகனே என்று ஒரு தாய் சோறூட்ட
நிலாப்பிளவை வடையென்று வாய் பிளந்து இவன் பார்க்க
சொக்கத்தங்கம் என்று சொல்லி சோறூட்டி முடித்திடுவாள் 
அமாவாசை நாளன்று பாலகன் வடைகேட்க
விடையின்றி இவள் சொன்னாள் ஐயோ வட போச்சே


ஐந்நூறு ருபாய்க்கு அழகாய் நிரலிட்டு
வடையுள்ள கடைதேடி வாஞ்சையுடன் உள்நுழைந்து
ஆளுக்கு ரெண்டு வடை மட்டும் அளவிட்டு
அப்புறம் பி்ல் பார்த்தா 400 உம் தாண்டலயே
வடையொன்று எடுப்பதற்கு இச்சையுடன் அதை நோக்க
எதிரிலே இருந்த வடைத்தட்டில் வெங்காயங்கூட இல்லை 
அதைப்பார்த்து நான் சொன்னேன் ஐயோ வடபோச்சே





கடந்த இரண்டு நாட்கள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். கதிரை நுனியிலிருந்து டெஸ்ட் மட்ச் பார்த்த இரண்டு நாட்கள். முரளி 800 எடுப்பாரா இல்லையா? இதுதான் பலரின் கேள்வியாக இருந்தது. முரளி அதற்கு இன்று எம்மை டென்சனின் உச்சத்துக்கொண்டு போய் மலிங்க தொடக்கம் சங்கக்கார வரை அனைவருக்கு திட்டிவிட்டேன். ஆனால் கடைசியாக இந்தியாவின் கடைவி விக்கற்றை வீழ்த்தி முரளி 800வது விக்கற்றை வீழ்த்திய போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. முரளி பற்றிய சில குறிப்புகள் உங்களுக்காக...



  • முரளிதரன் 1972ம் ஆண்டு இலங்கையிலே கண்டிக்கு அருகில் இருக்கும் நட்டரம் பொத்த என்ற ஊரில் பிறந்தார்.
  • தனது 9வது வயதில் கண்டி சென் அன்டனில் கல்லூரியில் சேர்ந்த இவர் தனது கிறிக்கற் வாழ்க்கையை மிதவேகப்பந்துவீச்சாளராக ஆரம்பித்தார்.
  • ஆனால் சுனில் பெர்ணான்டோ என்ற இவரது பாடசாலை கிறிக்கற் பயிற்றுனரின் வழிகாட்டலினால் தனது 14வது வயதில் சுழற்பந்து வீச்சில் தடம் பதித்தார்.
  • ஆரம்பம் முதலே பாடசாலைக் கிறிக்கற்றில் பிரகாசித்த முரளி 4 வருடங்கள் தொடர்ச்சியாக பாடசாலை அணியில் நிரந்தர இடம் பெற்றிருத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பாடசாலைப்பருவத்தில் இவர் சகலதுறை வீரராகத்தான் பாடசாலை அணியில் இடம் பெற்றிருந்தார், அணியின் இடைநிலைத்துடுப்பாட்ட வீரராக இருந்தார்.
  • அவரது பாடசாலைக் கிறிக்கற்றின் இறுதிப்பருவகாலத்தில் அதாவது 1990/91 பருவகாலத்தில் முரளி பாடசாலைப் போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கற்றுகளைக் கைப்பற்றினார். இதனால் இவர் பாடசாலையில் "Bata Schoolboy Cricketer of the Year" என்று அழைக்கப்பட்டார்.


  • பாடசாலைக் காலத்துக்குப் பின்னர் தமிழ் யூனியன் கிறிக்கற் கழகத்தில் விளையாடிவந்தார்.
  • அதன் பிறகு 1991ம் ஆண்டு இங்கிலாந்துக்கெதிராக இலங்கை A அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டார்.ஆனால் ஐந்து போட்டிகள் விளையாடி ஒரு போட்டியிலும் முரளி ஒரு விக்கற்றைக்கூட சாய்க்கவில்லை.
  • ஆனால் அதன் பின்னர் அவுஸ்திரேலியாவுடனான ஒரு பயிற்சியாட்டத்தில் பிரகாசித்ததைத் தொடர்ந்து பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஓகஸ்ட் 28ம் திகதி 1992ம் ஆண்டு தனது டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றார்.
  • முரளியின் சுழலுக்கு முதலாவதாக ஆட்டமிழந்தவர் CRAIG MCDERMOTTஆவார்.


  • இந்தத் தொடருக்கு பின் போட்டி மத்தியஸ்தரால் முரளியின் தூஸ்ரா பற்றி உத்தியோகபூர்வமாக கேள்வியெழுப்பப்பட்டது.
  • முரளி 67 தடவைகள் 5 விக்கற்றுகளையும் 22 தடவைகள் 10 விக்கற்றுகளையும் கைப்பற்றியுள்ளார்.
  • தொடர்ச்சியாக 10 விக்கற்களை 4 தடவை கைப்பற்றியிருக்கிறார்.
  • அதிக CAUGHT and BOWL விகக்கற்றுகளைச்சரித்த வீரர் (35 தடவைகள்)
  • அதிக ஸ்டம்ப் முறையிலான விக்கற்றுகளை எடுத்த வீரர். (47 தடவைகள்)
  • இவர் 72 டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கற்றுகளைக் கடந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • முரளிதரனின் பந்து வீச்சில் ஜயவர்த்தன 77 பிடிகளை எடுத்துள்ளார்.
  • முரளி பந்தை எறியவில்லை என்பதற்கான சான்று
அடுத்து முரளியின் முக்கிய விக்கற்களும் ஆட்டமிழந்தவர்களும்





  • 1வது: Craig McDermott 9 vs அவுஸ்திரேலியா
  • 50வது: Navjot Sidhu 43 vs இந்தியா
  • 100வது: Stephen Fleming 59 vs நியூசிலாந்து
  • 150வது: Guy Whittall 17 vs சிம்பாபே 
  • 200வது: Ben Hollioake 0 vs இங்கிலாந்து
  • 250வது: Naved Ashraf 27 vs பாகிஸ்தான்
  • 300வது: Shaun Pollock 11 vs தென்னாபிரிக்கா
  • 350வது: Mohammad Sharif 19 vs பங்களாதேஸ்
  • 400வது: Henry Olonga 0 vs சிம்பாபே 
  • 450வது: Daryl Tuffey 1 vs நியூசிலாந்து
  • 500வது: Michael Kasprowicz 0 vs அவுஸ்திரேலியா
  • 520வது: Mluleki Nkala 24 vs சிம்பாபே 
  • ஸ்கொட்னி வோல்சின் உலகசாதனை முரளியால் முறையடிக்கப்பட்டது.
  • 550வது: Khaled Mashud 2 vs பங்களாதேஸ்
  • 600வது: Khaled Mashud 6 vs பங்களாதேஸ்
  • 650வது: Makhaya Ntini 13 vs தென்னாபிரிக்கா
  • 700வது: Syed Rasel 4 vs பங்களாதேஸ்
  • 709வது: Paul Collingwood 45 vs இங்கிலாந்து
  • சேன் வோர்னின் உலகசாதனை முரளியால் முறையடிக்கப்பட்டது.
  • 750வது: Sourav Ganguly 16 vs இந்தியா
  • 800வது Pragyan Ojha 3 VS இந்தியா


முரளி 800 எடுத்துவிட்டார், இனி அவர் 801வது விக்கற் எடுப்பது சாத்தியமே இல்லை என்றாகிவிட்டது. "நான் முரளி" என்று சொல்லி சின்ன வயதில் விளையாடும் போது பந்து வீசாதவர்களே இருந்திருக்க முடியாது. அந்தவகையில் முரளி பிறந்த இலங்கைத்திருநாட்டில் நானும் பிறந்ததை பெருமையாக நினைக்கிறேன். ஸ்பின் பந்து வீச்சின் கடவுள் முரளிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் 800வது விக்கற் எடுத்த போது இருந்த சந்தோஷம் இப்போது மீண்டும் டெஸ்டில் பந்து வீசுவதை பார்க்க முடியாத வருத்தமாகிப்போய்விட்டது. 


இதுவரை OFF SPIN ஆகவே போய்க்கொண்டிருக்கும் முரளியின் முடிவு அவரின் தூஸ்ரா போல மறுபக்கம் திரும்பாதா???


நன்றி - விக்கிப்பீடியா, கிறிக்இன்ஃபோ &கூகிளாண்டவர்

கிறிக்மொழிகள்

பதிவிட்டவர் Bavan | நேரம் 4:41 PM | 19 பின்னூட்டங்கள்


அடியின் டைமிங் லைனில் தெரியும்


ஆறிலும் அவுட் வரும் நுர்றிலும் அவுட் வரும்


டைமிங் இல்லாத SHOT CIRCLEளையே தாண்டாது


சிங்கிளே அடிக்காதது சிக்ஸர் அடிக்குமா?


பந்தும் லெந்தும் திரண்டால் பவுண்டரி


உயர உயர அடித்தாலும் பழைய பந்து பவுண்டரி தாண்டுமா


அளவுக்கு மிஞ்சினால் பவுன்சரும் வைட் BALL.


அருமையான பீல்டிங்கை ஆபத்தில் அறி.


பட்டிங்கும் பெளலிங்கும் கிறிக்கறின் தெய்வம்.


அவசரக்காரனுக்கு அடிச்சதெல்லாம் CATCH.


ஆரியக் கூத்தாடினாலும் ரன்அவுட்டில் கண்ணாயிரு


BALLலும் FIELDINGகும் BOWLINGக்கு உறுதி, BATடும் HITடும் BATTINGக்குறுதி.


கிறீசை அறியாமல் காலை இடாதே


ஸ்பின் செய்யும் பந்து பழம்பந்து


SIXER வரும் பின்னே. SHORT BALL வரும் முன்னே


பவர்பிளேயில் சிக்ஸர் அப்புறம் சிங்கிள்


அடிக்காப்பந்து DOTடாய் போகும்.


FREE HIT பந்தில் அடிச்சது லாபம்


30யார் பவர்பிளேக்கு பீல்டிங்கே பிரதானம்


SHORT BALL வரவில்லையென்று SIXER காத்திருக்குமா


ஒரே ஒரு சிக்சுக்கு ஆறு சிங்கிள் பதம்


மங்குஸ் சிறிதானாலும் சிக்ஸர் பெரிசு

இதை ஒரு பதிவென்பதை விட ஒரு வாழ்த்துமடல் என்று சொல்லலாம். அல்லது பாராட்டுப்பதிவு என்று சொல்லலாம். அந்த பாராட்டுக்களுக்குரியவர்கள் பதிவர்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய மேலும் விடயம்.அந்தவகையில் அப்பதிவில் 3 பேரைக்கட்டாயம் வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

முதலாவதாக லோஷன் அண்ணா கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் வழங்கும் இந்த வருடத்துக்கான சிறந்த பதிவர் என்ற விருதை பெற்றுள்ளார். அனைத்து நெஞ்சங்களையும் கொள்ளைகொண்ட அறிவிப்பாளர் என்பதையும் தாண்டி பதிவுலகில் அவரின் பதிவுகளைப்பார்தது தானும் பதிவெழுத வேண்டும் என்று வந்த பதிவெழுத வந்தவர்கள் பலர். எனவே சிறந்த பதிவர் என்ற வெயருக்கு பொருத்தமாக அது லோஷன் அண்ணாவுக்கு கிடைத்தையிட்டு நானும் ஒரு சிறுபதிவர் என்ற முறையில பெருமைப்படுவதோடு அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

***

அடுத்து 
இவர் நின்னா மலை
நடந்தா எரிமலை
இவர் கதைச்சா பூகம்பம் 
சிரிச்சா சுனாமி
இவர் பதுங்கினா புலி
பாய்ஞ்சா சுனாமி
மொத்தத்தில இவரு கில்லி கில்லி மாதிரி, ஒரு தடவை முடிவு பண்ணிட்டா இவர் பேர இவரே கேட்க மாட்டாரு, எதை செய்தாலும் ஒரு தடவைக்கு 100 தடவை யோசிச்சிட்டுத்தான் பண்ணுவார்.

அட இன்னும் புரியலயா? எங்கள் தன்மானச்சிங்கம் பேஸ்புக் அழகிய தமிழ்மகன் சதீஸ் அவர்களுக்கு பேஸ்புக்கில் விசிறிப்பக்கம் (FAN PAGE) தொடங்கியிருக்கிறார்கள் அவரது ரசிக ரசிகைகள். எனவே அவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...:)

***

கடைசியா எங்க போனாலும் இவர்தான் பர்ஸ்ட்டு,
இவருக்கு நிகரு யாரு இருக்கா நெக்ஸ்ட்டு?
அண்மைக்காலமான அவுட் ஓஃப் போர்மில் திணறிக்கொண்டிருந்த கன்கொன் கிறிக்கற் அனலிஸ்ட் ஆகிய பிறகு அதாவது TEST மட்சுக்குப்பிகு சில வீரர்கள் போர்மாகுவது போல பதிவுலகில் மீண்டும் போர்முக்குத்திரும்பியுள்ளார். தனது பதிவுகளை சிங்கிளாக மட்டுமே அடித்து வந்த இவர் நேற்று ஒரு டபிள் அதாவது இரண்டு பதிவுகள் போட்டு சாதனை படைத்திருக்கிறார்..:P
எனவே அவரின் இந்த போர்ம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..:)


என்றாய்...

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:29 AM | 15 பின்னூட்டங்கள்


பிறக்கும் போது BORN என்றாய்
பெற்ற தாயை MOM என்றாய்
அப்பாவைப்பார்த்து DAD என்றாய்
விளையாட்டைப் PLAY என்றாய்


புத்தகத்தை BOOK என்றாய்
எழுதுகோலை PEN என்றாய்
பாடசாலை SCHOOL என்றாய்
பேரூந்தை பஸ் என்றாய்


ஆசானை சேர் என்றாய்
சந்தியை JUNCTION என்றாய்
பாட்டை SONG என்றாய்
வீட்டை HOME என்றாய்


படத்தை FILM என்றாய்
குடத்தை POT என்றாய்
படுக்கையை BED என்றாய்
நித்திரையை SLEEP என்றாய்


இருமலைக் COUGH என்றாய்
காய்ச்சலை FEVER என்றாய்
கதைப்பதை CHAT என்றாய்
குளிப்பதை BATH என்றாய்


மழையை RAIN என்றாய்
காற்றை WIND என்றாய்
கடிதத்தை LETTER என்றாய்
எழுத்துக்களை LETTERS என்றாய்


பெண்ணை GIRL என்றாய்
ஆணை BOY என்றாய்
காதலை LOVE என்றாய்
கல்யாணத்தை MARRIAGE என்றாய்


நண்பனை FRIEND என்றாய்
பணத்தை MONEY என்றாய்
மகிழ்ச்சியை HAPPY என்றாய்
சோகத்தை SAD என்றாய்


சொர்க்கத்தை HEAVEN என்றாய்
நரகத்தை HELL என்றாய்
சாவை DEATH என்றாய்
பெயரைக்கேட்டேன் ட(த)மிலரசு என்றாய்

கோல் கோல் கோல்...

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:52 PM | 13 பின்னூட்டங்கள்









பயம்

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:19 AM | 19 பின்னூட்டங்கள்
இரவு நேரப்பூச்சிகளின் கதறல் சற்றுப்பயத்தை உண்டாக்கினாலும் ஏதோ ஒரு தைரியத்துடன் சீட்டில் அமர்ந்துவிட்டேன். ரயில் புறப்பட்டு கொஞ்சத்தூரம் போயிருக்கும். வெளியே ஜன்னலைத்திறக்கிறேன் கும்மிருட்டு. தொலைவில் வீதியிருப்பதைக்காட்டும் வகையில் ஒரு வீதிவிளக்கு ஒளிர்ந்துகொண்டிருந்தது. திடீரென அந்த விளக்கும் அணைந்துவிட்டது. அட மின்வெட்டாக இருக்கும். தற்போது வெளிச்சமாகச் செல்வது எமது புகைவண்டி மட்டும்தான். வெள்ளைக்காரன் போட்டுத்தந்த பாதையில் தடையின்றிப்போய்க்கொண்டிருந்தது புகையிரதம்.


ஆர்முடுகலுடன் வேகத்தை அதிகரித்துக்கொண்டு சென்றுகொண்டிருந்த புகையிரதம். திடீரென சடுதியான அமர்முடுகலுடன் செல்ல ஆரம்பித்தது. ஏதாவது STATION வருகிறதா என்று தலையை வெளியே எட்டிப்பார்க்கிறேன். கண்ணுக்கெட்டிய தூரத்தில் ராட்சத உருவம் போல நட்சத்திர ஒளியில் மரங்கள் கறுப்பாய்த்தெரிந்தன. வண்டி நிறுத்தப்படுகிறது. எழுந்து பார்க்கிறேன். அடுத்தகணம் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது, என்ன கொடுமை நானிருந்த பெட்டியில் யாரையும் காணவில்லை, அடக்கடவுளே என்ன நடக்கிறது இங்கே? ஒன்றுமே புரியவில்லை கீழே இறங்கிப்பார்க்கலாம். பயமாகத்தான் இருக்கிறது. ஆம் இறங்கிப்பார்ப்பதுதான் சரி. இப்போது இறங்கி விட்டேன். வலதுகை ரயிலின் இறங்குமிடத்திலிருக்கும் கம்பியிலிருந்து விடுபட்டதும் ஏதோ ஒரு வெறுமையான உணர்வு பக்கத்தில் பயத்தைத்தவிர துணைக்கு யாருமின்றி தனியேநிற்பதுபோல, படக்கெனத்திரும்புகிறேன் ரயிலைக்காணவில்லை.


என்னகொடுமை இது திடீரென ஒரு சத்தம் "நகிர்தனா நகிர்தனா", அட எனது தொலைபேசிக்கு பேஸ்புக்கிலிருந்து பிரைவேட் மசேச் அனுப்பிருக்கிறார்கள். கும்மிருட்டு, கண்ணுக்கெட்டிய தூரத்தில் யாருமில்லை. அந்த இடத்திலிருந்து விரைவாக ஓடிப்போகவேண்டும் போல இருக்கிறது, ஆனால் மெதுவாக நடக்கும் போது கேட்கும் எனது காலடித்தடமே எனக்கு பயத்தை விளைவிக்கிறது. எத்தனையோ படங்களில் பார்த்த காட்சிகள், கேட்ட சத்தங்கள் போல இருக்கிறது. நீ தைரியசாலிடா பவன் எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் போது அந்தப்பயத்திலும் சிரித்துக்கொள்கிறேன் மனதுக்குள். தூரத்தில் ஒரு ஒளி இருட்டுக்குள் கிடக்கும் கைத்தொலைபேசி போல தென்படுகிறது. அதைப்பார்த்து மனதுக்குள் ஒரு தைரியம் வந்தது போல ஒரு உணர்வு பயமும்தான். ஆம் நெருங்க நெருங்க வெளிச்சம் அதிகரிப்பது போல ஒரு உணர்வு. பக்கத்தில் வந்துவிட்டேன், நீலநிறகல் போல இருக்கிறது. ஆமாம் கல்லேதான் ஆனால் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. எப்படி?


முன்பொருமுறை எங்கோ படித்திருக்கிறேன், ராஜநாகங்கள் இப்படி விஷத்தைத்திரட்டி கல்லைக்கக்குமாம். அது நீலநிறத்தில் ஒளிருமாம் என்றெல்லாம். அப்போது அது கதைதான் உண்மையல்ல என்று நினைத்திருந்தேன். அப்போது அது உண்மையா? இங்கே பாம்புகள் இருக்குமோ? கும்மிருட்டு தற்போது எனக்கு நண்பனாகியிருந்தது. நான் வந்த ரயிலைக்காணவில்லை, ரயிலிருந்த ஆட்களைக்காவில்லை. என்ன நடந்திருக்கும் அமானுஸ்யம் என்ற ஒன்று இல்லை என்ற எனது எண்ணத்தில் மண்வாரி இறைக்கப்பட்டுவிடுமோ?


ஓங்கி வளர்ந்திருந்த பற்றைப்புற்களில் உரசிச்செல்லும் மெல்லிய காற்று இதயத்துடிப்பை அதிகரித்துக்கொண்டிருந்தது. தூரத்தில் ஒரு குரல் என்னை அழைப்பது போல இருந்தது. திரும்பலாமா? பயமாக இருந்தது, மீண்டும் அக்குரல் இப்போது சற்று அழுத்தமான "தம்பி..."..


இப்போது திரும்பலாம் என்று நினைத்தபோது தோளில் யாரோ கைவைத்தார்கள். அதிரினலின் அதிவேகமாகச்சுரந்து கைகாலெல்லாம் நடுக்கம் ஏற்பட்டு மூளையிலிருந்து வாய்க்கு கத்து என்று கட்டளை கணப்பொழுதில் போய்ச்சேர....


ஆஆஆஆஆஆ......................கத்திவிட்டேன். எதிரில் நின்றிருந்த டிக்கெட் செக்கர் பயந்து வெலவெலத்துப்போய் நின்றுகொண்டிருந்தார். அடச்சா கனவா என்றபடி டிக்கெட்டைக்கொடுத்துவிட்டு கத்தும்போது தவறிவிழுந்த சுஜாதாவின் கொலையுதிர்காலத்தை எடுத்து மீண்டும் வாசிக்கத்தொடங்கினேன்.
we miss you murali
ஒரு மனிதனுக்குவாழ்க்கையில் சோதனை வரலாம் ஆனா சோதனையே வாழ்க்கையா அமைந்துவிட்டால்? நாம் ஒரு விடயத்தைச் செய்கிறோம், அது பிழைத்துவிடுகிறது அல்லது பிறரால் அது பிழை எனக்கருதப்படுகிறது. அதற்காக நாம் செய்வது பிழை என்று ஆகிவிடுமா? அதுதான் முரளிதரன் என்ற மாமனிதனுக்கும் நடந்தது. அவர் இன்று ஒரு சிறந்த வீரர் என்பதோடு மட்டுமல்லாது சிறந்த மனிதராக திகழ்கிறார். நேற்றைக்கு வந்த பந்துவீச்சாளர்களெல்லாம் ஒரு போட்டியில் 4 ஓவர் பந்து வீசி 2விக்கெற் எடுத்தாலே ஏதோ தாங்கள் பெரிய பந்துவீச்சாளர் என்று பெருமையில் துடுப்பாட்ட வீரருடன் வாய்த்தர்க்கங்களில் ஈடுபடுவதும், ஒழுங்கமின்றி நடந்து கொள்வதும் அனைவரும் அறிந்ததே.


அதிக விடயம் தெரிந்தவன் அமைதியாகத்தான் இருப்பான் என்பார்கள் அதற்கு சிறந்த உதாரணம் முரளிதரன். இதுவரை சர்வதேச கிறிக்கற் போட்டிகளில் மாத்திரம் 61928 பந்துகளை சுழற்றி வீசி 1320 விக்கற்டுகளையும் சாய்த்திருக்கும் சிங்கத்துக்கு ஓய்வு என்பது தேவையான ஒன்றுதான். ஆனால் இலங்கை அணி என்றால் முரளி விளையாடுகிறார் என்றால் எதிரணிக்கு பீதி போகும் எமக்கும் இலங்கை கட்டாயம் வெல்லும் என்று ஒரு நம்பிக்கை பிறக்கும். 


முரளி பந்தை எறியவில்லை என்பதற்கான ஆதாரம் காட்டும் வீடியோ - ஒரு நினைவுக்காக

we miss you murali







சின்னத் தொழிலாளி
மாலைவேளைகளில் நண்பர்களுடன் கடற்கரைக்கு காற்று வாங்கச்செல்வது எனது நாளாந்தக்கடமைகளில் ஒன்று. அன்றும் அப்படித்தான் நானும் இன்னொரு நண்பனும் மற்ற நண்பர்கள் வரமுதலே கடற்கரைக்கு சென்றுவிட்டோம். ஒரு சிறுவன் கடலை விற்றுக்கொண்டு வந்தான். ஒரு 6 அல்லது 7 வயதுதான் இருக்கும். பாடசாலைச் சீருடை அரைக்காற்சட்டை அணித்திருந்தான். பாடசாலையில் படிப்பவன்தான் என்று முடிவு பண்ணிவிட்டோம். கடற்கரையில் நமக்கும் பொழுது போகாததால் அவனிடம் விசாரித்தோம்.
நாம் - எந்த ஸ்கூல்
சிறுவன் - சென்சேவியர்
நாம் - எத்தனையாம் வகுப்பு?
சி- 3ம் வகுப்பு
நா - வீடு எங்கே? அப்பா அம்மா?
சி - அப்பாவுக்கு சுகமில்லை, அம்மா வீடடில்.
நா - சகோதரர்கள்?
சி - 2 அண்ணா
பிறகு அவனிடம் கடலை வாங்கிவி்ட்டு காசைக்கொடுக்க அவன் போய்விட்டான். அதன் பிறகுதான் கவனித்தோம் கடலை விற்றுக்கொண்டிருந்தவர்களில் பலர் பாடசாலைச்சீருடைக் (நீல)காற்சட்டைதான் அணிந்திருந்தர்கள்.

இப்படி இன்னும் எத்தனை சிறுவர்கள் குடும்பப்பிரச்சினைக்காக இப்படி பாடசாலை முடிந்ததும் அப்படி ஒரு வேளைக்கஞ்சிக்காக உழைக்கிறார்கள். இவ்வாறான சிறுவர்கள் கூடுதலாக 9வது வகுப்புடன் படிப்பை நிறுத்திவிடுவதும் நான் கண்கூடாக்கண்ட உண்மை. 


EXAM








80 நிமிடம், தனி அறை, உங்களுடன் சேர்த்து 8 தேர்வாளர்கள், ஒரு காவலாளி, உங்களுக்கு மேசை,கதிரை வழங்கப்பட்டிருக்கிறது. மேசையில் ஒரு வினாத்தாள், தாளைப்பார்க்கிறீர்கள் வெறுமையாக இருக்கிறது. கேள்வியைக்கண்டுபிடித்து விடையளிக்க வேண்டும் என்ன செய்வீர்கள்? அதுதான் இந்தப்படம் - EXAM.



லொக்கேசன் மாற்றம் இல்லை, பாட்டு இல்லை,பஞ்ச் டயலாக் இல்லை,ரொமான்டிக் சீன் இல்லை பத்தடி உயரத்தில் பறந்து அடிக்கும் அக்சன் சீன் இல்லை ஆனால் ஒன்று மட்டும் இருக்கிறது. விறுவிறுப்பு. கட்டாயம் அனைவருமே பார்க்கவேண்டிய படம். உங்கள்முளைக்குத்தீனி போடும் சிறந்த படம். படம் முடிவடையும் போது நீங்கள் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று நினைத்த அத்தனையும் தவிடுபொடியாகியிருக்கும். கட்டாயம் அனைவரும் ஒருமுறை பார்த்துத்தான் பாருங்களேன். படம் டவுன்லோடிங் லிங்கைப்பெற இங்கே சொடுக்குங்கள்.


ஆத்திரம், அன்பு
ஒரு மனிதர் தனது காரை திருத்திக்கொண்டிருந்தார். அவரது நான்கு வயது மகன் காரில் கல் ஒன்றினால் காரில் ஏதையோ வரைந்து கொண்டிருந்தான்.அதைக்கண்டு ஆத்திரமடைந்த அவர் மகனது கையைப்பிடித்து அடிஅடியென்று அடித்துவிட்டார். ஆனால் ஆத்திர மிகுதியால் கையில் திருத்தும் கருவி இருந்ததைக் கவனிக்கவில்லை.


மறுநாள் வைத்தியசாலையில் பையன் அருகில் கவலையுடன் அமர்ந்திருந்த அப்பாவிடம் "என் கைவிரல்கள் எப்ப வளரும்?" என்று கேட்டான்.


உடனே தான் செய்த செயலை எண்ணிக் கவலையும் ஆத்திரமும் அடைந்த அவர் தனது கார் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்துக்குச்சென்று காரை தன் ஆத்திர மிகுதியால் போட்டு அடிஅடியென அடித்தார். பிறகு சிறுவன் கிறுக்கிய இடத்தைப்பார்த்தார்.அங்கே



என அச்சிறுவன் எழுதியிருந்தான்.



ஆத்திரம் என்பது கொடிய அரக்கன் அதை, அன்பு என்பது இனிய அரக்கன், அன்பை வாரி வழங்கலாம், ஆனால் ஆத்திரத்தை அடியோடு அழிக்க வேண்டும்.


NO COMMENTS
பி.கு - இது தரம் 2 பயிற்சிப்புத்தகத்தில் காணப்பட்ட படம்
நள்ளிரவு சரியாகப் பன்னிரண்டு மணி, அசந்து தூங்கிக்கொண்டிருந்தேன். யாரோ தட்டி எழுப்புவது போல இருந்தது. கண்விழித்துப் பார்த்தால் எதிரே கையடக்கத்தொலைபேசியின் ஒளி. FOOT BALL தொடங்கப்போகுது வாடா என்று ஒரு குரல். உடனே சுபாங்கன் அது அண்ணாதான் என்று ஊகித்துக்கொண்டேன். 19 வருடங்களாகப் பார்க்காத ஐ இன்றாவது பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன். ஆனால் கிறிக்கெட்டுக்கும் FOOT BALLக்கும் எந்த வித்தியாசமும் எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிகிறதா? இல்லைத்தானே?













தமிழுக்காக போராடுகிறோம் என்ற பெயரில் பாடசாலையில் சிறுபிள்ளைகள் ஆசிரியரிடம் முறையிடுவது போல குற்றச்சாட்டுகளைச் சுமத்திவரும் புத்திசாலிகளின்(:P) எதிர்காலத்திட்டங்கள்

1

 2

 3

 4

 5

 6

10

 7

 8

 9

1 2 3 4 5 6

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்