ஆயிரம் வடை சுட்டு அண்டாவிலே போட்டாலும்
அதிலொன்றைக் கருங்காகம் கவ்விக்கொண்டு போனதுமே
தன்னால் முடிந்தவரை சினத்தோடு வசைபாடி
தளர்ந்துபோய்க் கிழவி சொன்னாள் ஐயோ வட போச்சே
திருடிய வடைதனையே தின்ன முடிவெடுக்க
பாட்டுப்பாடு குயில் குரலா என்று நரி சொல்ல
பாட்டுப்பாட எத்தனித்த காக்கையின் வாய்தப்பி
நரி வாயில் குடிகொள்ள
ஆறாத வடையிழந்த கோபம் கொதிக்கும் கருங்காகம்
கடுமையாய் கரைந்ததுவே ஐயோ வட போச்சே
பாட்டுப்பாட நரி சொல்ல பாதத்திலே வடையை வைத்து
திறமையான திருட்டுக்காக்கை கடுமையான தன்குரலில்
முகாரியில் பா கரைய காதுக்குப் பூட்டுப்போட்டு
துயரொலியில் குள்ளநரி ஐயோ வட போச்சே
நிலாவில் ஒரு பாட்டி நித்தம் வடை சுடுவா
சாப்பிடடா என்மகனே என்று ஒரு தாய் சோறூட்ட
நிலாப்பிளவை வடையென்று வாய் பிளந்து இவன் பார்க்க
சொக்கத்தங்கம் என்று சொல்லி சோறூட்டி முடித்திடுவாள்
அமாவாசை நாளன்று பாலகன் வடைகேட்க
விடையின்றி இவள் சொன்னாள் ஐயோ வட போச்சே
ஐந்நூறு ருபாய்க்கு அழகாய் நிரலிட்டு
வடையுள்ள கடைதேடி வாஞ்சையுடன் உள்நுழைந்து
ஆளுக்கு ரெண்டு வடை மட்டும் அளவிட்டு
அப்புறம் பி்ல் பார்த்தா 400 உம் தாண்டலயே
வடையொன்று எடுப்பதற்கு இச்சையுடன் அதை நோக்க
எதிரிலே இருந்த வடைத்தட்டில் வெங்காயங்கூட இல்லை
அதைப்பார்த்து நான் சொன்னேன் ஐயோ வடபோச்சே
Tweet
கடைசிப்பந்தி கலக்கல் பவன் :)