ஒரு மனிதனுக்குவாழ்க்கையில் சோதனை வரலாம் ஆனா சோதனையே வாழ்க்கையா அமைந்துவிட்டால்? நாம் ஒரு விடயத்தைச் செய்கிறோம், அது பிழைத்துவிடுகிறது அல்லது பிறரால் அது பிழை எனக்கருதப்படுகிறது. அதற்காக நாம் செய்வது பிழை என்று ஆகிவிடுமா? அதுதான் முரளிதரன் என்ற மாமனிதனுக்கும் நடந்தது. அவர் இன்று ஒரு சிறந்த வீரர் என்பதோடு மட்டுமல்லாது சிறந்த மனிதராக திகழ்கிறார். நேற்றைக்கு வந்த பந்துவீச்சாளர்களெல்லாம் ஒரு போட்டியில் 4 ஓவர் பந்து வீசி 2விக்கெற் எடுத்தாலே ஏதோ தாங்கள் பெரிய பந்துவீச்சாளர் என்று பெருமையில் துடுப்பாட்ட வீரருடன் வாய்த்தர்க்கங்களில் ஈடுபடுவதும், ஒழுங்கமின்றி நடந்து கொள்வதும் அனைவரும் அறிந்ததே.
அதிக விடயம் தெரிந்தவன் அமைதியாகத்தான் இருப்பான் என்பார்கள் அதற்கு சிறந்த உதாரணம் முரளிதரன். இதுவரை சர்வதேச கிறிக்கற் போட்டிகளில் மாத்திரம் 61928 பந்துகளை சுழற்றி வீசி 1320 விக்கற்டுகளையும் சாய்த்திருக்கும் சிங்கத்துக்கு ஓய்வு என்பது தேவையான ஒன்றுதான். ஆனால் இலங்கை அணி என்றால் முரளி விளையாடுகிறார் என்றால் எதிரணிக்கு பீதி போகும் எமக்கும் இலங்கை கட்டாயம் வெல்லும் என்று ஒரு நம்பிக்கை பிறக்கும்.
முரளி பந்தை எறியவில்லை என்பதற்கான ஆதாரம் காட்டும் வீடியோ - ஒரு நினைவுக்காக
we miss you murali
சின்னத் தொழிலாளி
மாலைவேளைகளில் நண்பர்களுடன் கடற்கரைக்கு காற்று வாங்கச்செல்வது எனது நாளாந்தக்கடமைகளில் ஒன்று. அன்றும் அப்படித்தான் நானும் இன்னொரு நண்பனும் மற்ற நண்பர்கள் வரமுதலே கடற்கரைக்கு சென்றுவிட்டோம். ஒரு சிறுவன் கடலை விற்றுக்கொண்டு வந்தான். ஒரு 6 அல்லது 7 வயதுதான் இருக்கும். பாடசாலைச் சீருடை அரைக்காற்சட்டை அணித்திருந்தான். பாடசாலையில் படிப்பவன்தான் என்று முடிவு பண்ணிவிட்டோம். கடற்கரையில் நமக்கும் பொழுது போகாததால் அவனிடம் விசாரித்தோம்.
நாம் - எந்த ஸ்கூல்
சிறுவன் - சென்சேவியர்
நாம் - எத்தனையாம் வகுப்பு?
சி- 3ம் வகுப்பு
நா - வீடு எங்கே? அப்பா அம்மா?
சி - அப்பாவுக்கு சுகமில்லை, அம்மா வீடடில்.
நா - சகோதரர்கள்?
சி - 2 அண்ணா
EXAM
லொக்கேசன் மாற்றம் இல்லை, பாட்டு இல்லை,பஞ்ச் டயலாக் இல்லை,ரொமான்டிக் சீன் இல்லை பத்தடி உயரத்தில் பறந்து அடிக்கும் அக்சன் சீன் இல்லை ஆனால் ஒன்று மட்டும் இருக்கிறது. விறுவிறுப்பு. கட்டாயம் அனைவருமே பார்க்கவேண்டிய படம். உங்கள்முளைக்குத்தீனி போடும் சிறந்த படம். படம் முடிவடையும் போது நீங்கள் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று நினைத்த அத்தனையும் தவிடுபொடியாகியிருக்கும். கட்டாயம் அனைவரும் ஒருமுறை பார்த்துத்தான் பாருங்களேன். படம் டவுன்லோடிங் லிங்கைப்பெற இங்கே சொடுக்குங்கள்.
ஆத்திரம், அன்பு
ஒரு மனிதர் தனது காரை திருத்திக்கொண்டிருந்தார். அவரது நான்கு வயது மகன் காரில் கல் ஒன்றினால் காரில் ஏதையோ வரைந்து கொண்டிருந்தான்.அதைக்கண்டு ஆத்திரமடைந்த அவர் மகனது கையைப்பிடித்து அடிஅடியென்று அடித்துவிட்டார். ஆனால் ஆத்திர மிகுதியால் கையில் திருத்தும் கருவி இருந்ததைக் கவனிக்கவில்லை.
மறுநாள் வைத்தியசாலையில் பையன் அருகில் கவலையுடன் அமர்ந்திருந்த அப்பாவிடம் "என் கைவிரல்கள் எப்ப வளரும்?" என்று கேட்டான்.
உடனே தான் செய்த செயலை எண்ணிக் கவலையும் ஆத்திரமும் அடைந்த அவர் தனது கார் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்துக்குச்சென்று காரை தன் ஆத்திர மிகுதியால் போட்டு அடிஅடியென அடித்தார். பிறகு சிறுவன் கிறுக்கிய இடத்தைப்பார்த்தார்.அங்கே
ஆத்திரம் என்பது கொடிய அரக்கன் அதை, அன்பு என்பது இனிய அரக்கன், அன்பை வாரி வழங்கலாம், ஆனால் ஆத்திரத்தை அடியோடு அழிக்க வேண்டும்.
NO COMMENTS
பி.கு - இது தரம் 2 பயிற்சிப்புத்தகத்தில் காணப்பட்ட படம்
முரளி - ம்... :)))
சின்னத் தொழிலாளி - என்ன செய்யவது...
பல வேளைகளில் கவலைப்படுவது மாத்திரமே எம்மால் முடிகிறது.
முற்றுமுழுதாக இல்லாமல் போக வேண்டும். :(
பீற்றர் - ங்கொய்யால...
ஆத்திரம் - அருமையான கதை...
பயிற்சிப்புத்தகம் - அடப்பாவிகளா...
புத்தகம் எழுதியது யார்?
முன்பொருமுறை சுபா அண்ணாவும் இப்படியொன்றை பதிவிட்டிருந்தார்.
நாங்கள் திருந்தோணும்.
:)))