- முரளிதரன் 1972ம் ஆண்டு இலங்கையிலே கண்டிக்கு அருகில் இருக்கும் நட்டரம் பொத்த என்ற ஊரில் பிறந்தார்.
- தனது 9வது வயதில் கண்டி சென் அன்டனில் கல்லூரியில் சேர்ந்த இவர் தனது கிறிக்கற் வாழ்க்கையை மிதவேகப்பந்துவீச்சாளராக ஆரம்பித்தார்.
- ஆனால் சுனில் பெர்ணான்டோ என்ற இவரது பாடசாலை கிறிக்கற் பயிற்றுனரின் வழிகாட்டலினால் தனது 14வது வயதில் சுழற்பந்து வீச்சில் தடம் பதித்தார்.
- ஆரம்பம் முதலே பாடசாலைக் கிறிக்கற்றில் பிரகாசித்த முரளி 4 வருடங்கள் தொடர்ச்சியாக பாடசாலை அணியில் நிரந்தர இடம் பெற்றிருத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாடசாலைப்பருவத்தில் இவர் சகலதுறை வீரராகத்தான் பாடசாலை அணியில் இடம் பெற்றிருந்தார், அணியின் இடைநிலைத்துடுப்பாட்ட வீரராக இருந்தார்.
- அவரது பாடசாலைக் கிறிக்கற்றின் இறுதிப்பருவகாலத்தில் அதாவது 1990/91 பருவகாலத்தில் முரளி பாடசாலைப் போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கற்றுகளைக் கைப்பற்றினார். இதனால் இவர் பாடசாலையில் "Bata Schoolboy Cricketer of the Year" என்று அழைக்கப்பட்டார்.
- பாடசாலைக் காலத்துக்குப் பின்னர் தமிழ் யூனியன் கிறிக்கற் கழகத்தில் விளையாடிவந்தார்.
- அதன் பிறகு 1991ம் ஆண்டு இங்கிலாந்துக்கெதிராக இலங்கை A அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டார்.ஆனால் ஐந்து போட்டிகள் விளையாடி ஒரு போட்டியிலும் முரளி ஒரு விக்கற்றைக்கூட சாய்க்கவில்லை.
- ஆனால் அதன் பின்னர் அவுஸ்திரேலியாவுடனான ஒரு பயிற்சியாட்டத்தில் பிரகாசித்ததைத் தொடர்ந்து பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஓகஸ்ட் 28ம் திகதி 1992ம் ஆண்டு தனது டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றார்.
- முரளியின் சுழலுக்கு முதலாவதாக ஆட்டமிழந்தவர் CRAIG MCDERMOTTஆவார்.
- அதன் பின்னர் ஓகஸ்ட் 12ம் திகதி 1993ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தடம் பதித்தார்.
- 1993ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தென்னாபிரிக்காவுக்கு எதிராக தனது முதலாவது தடவையாக 5 விக்கற்றுகளைக் கைப்பற்றினார்.
- 1995ம் ஆண்டு டிசஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான பொக்சிங் டே போட்டியில் டரல் ஹெயாரால் முரளி பந்தை எறிவதாகக்கூறி சர்ச்சை எழுப்பப்பட்டது.
- 1996ம் ஆண்டு ஜனவரி 5ம் திகதி பிறிஸ்பேணில் நடுவர் றொஸ் எமர்சனால் முரளியின் பந்து வீச்சு குறித்து சர்ச்சை எழுப்பப்பட்டது
- 1999ம் ஆண்டு ஜனவரி 23ம் திகதி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் றொஸ் எமர்சனால் முரளியின் பந்து வீச்சு குறித்து சர்ச்சை எழுப்பப்பட்டது.
- இந்தத் தொடருக்கு பின் போட்டி மத்தியஸ்தரால் முரளியின் தூஸ்ரா பற்றி உத்தியோகபூர்வமாக கேள்வியெழுப்பப்பட்டது.
- முரளி 67 தடவைகள் 5 விக்கற்றுகளையும் 22 தடவைகள் 10 விக்கற்றுகளையும் கைப்பற்றியுள்ளார்.
- தொடர்ச்சியாக 10 விக்கற்களை 4 தடவை கைப்பற்றியிருக்கிறார்.
- அதிக CAUGHT and BOWL விகக்கற்றுகளைச்சரித்த வீரர் (35 தடவைகள்)
- அதிக ஸ்டம்ப் முறையிலான விக்கற்றுகளை எடுத்த வீரர். (47 தடவைகள்)
- இவர் 72 டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கற்றுகளைக் கடந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முரளிதரனின் பந்து வீச்சில் ஜயவர்த்தன 77 பிடிகளை எடுத்துள்ளார்.
- முரளி பந்தை எறியவில்லை என்பதற்கான சான்று
- 1வது: Craig McDermott 9 vs அவுஸ்திரேலியா
- 50வது: Navjot Sidhu 43 vs இந்தியா
- 100வது: Stephen Fleming 59 vs நியூசிலாந்து
- 150வது: Guy Whittall 17 vs சிம்பாபே
- 200வது: Ben Hollioake 0 vs இங்கிலாந்து
- 250வது: Naved Ashraf 27 vs பாகிஸ்தான்
- 300வது: Shaun Pollock 11 vs தென்னாபிரிக்கா
- 350வது: Mohammad Sharif 19 vs பங்களாதேஸ்
- 400வது: Henry Olonga 0 vs சிம்பாபே
- 450வது: Daryl Tuffey 1 vs நியூசிலாந்து
- 500வது: Michael Kasprowicz 0 vs அவுஸ்திரேலியா
- 520வது: Mluleki Nkala 24 vs சிம்பாபே
- ஸ்கொட்னி வோல்சின் உலகசாதனை முரளியால் முறையடிக்கப்பட்டது.
- 550வது: Khaled Mashud 2 vs பங்களாதேஸ்
- 600வது: Khaled Mashud 6 vs பங்களாதேஸ்
- 650வது: Makhaya Ntini 13 vs தென்னாபிரிக்கா
- 700வது: Syed Rasel 4 vs பங்களாதேஸ்
- 709வது: Paul Collingwood 45 vs இங்கிலாந்து
- சேன் வோர்னின் உலகசாதனை முரளியால் முறையடிக்கப்பட்டது.
- 750வது: Sourav Ganguly 16 vs இந்தியா
- 800வது Pragyan Ojha 3 VS இந்தியா
முரளி 800 எடுத்துவிட்டார், இனி அவர் 801வது விக்கற் எடுப்பது சாத்தியமே இல்லை என்றாகிவிட்டது. "நான் முரளி" என்று சொல்லி சின்ன வயதில் விளையாடும் போது பந்து வீசாதவர்களே இருந்திருக்க முடியாது. அந்தவகையில் முரளி பிறந்த இலங்கைத்திருநாட்டில் நானும் பிறந்ததை பெருமையாக நினைக்கிறேன். ஸ்பின் பந்து வீச்சின் கடவுள் முரளிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் 800வது விக்கற் எடுத்த போது இருந்த சந்தோஷம் இப்போது மீண்டும் டெஸ்டில் பந்து வீசுவதை பார்க்க முடியாத வருத்தமாகிப்போய்விட்டது.
இதுவரை OFF SPIN ஆகவே போய்க்கொண்டிருக்கும் முரளியின் முடிவு அவரின் தூஸ்ரா போல மறுபக்கம் திரும்பாதா???
நன்றி - விக்கிப்பீடியா, கிறிக்இன்ஃபோ &கூகிளாண்டவர்
:)))