Related Posts with Thumbnails

2009ல் இலங்கைப்பதிவுலகம்
  • வந்தி அண்ணா, புல்லட் அண்ணா, லோசன் அண்ணா, ஆதிரை அ்ண்ணா ஆகியோரின் ஏற்பாட்டில் முதலாவது பதிவர் சந்திப்புகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
  • முதலாவது சந்திப்பின் பின்னர் இலங்கையில் பதிவு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
  • முதலாவது சந்திப்பின் பின்னர் பதிவர்களுக்கிடையில் நல்ல நட்பு உருவானது, இதற்கு சிறந்த உதாரணமாக சில நாட்களுக்கு முன்னர் பலரின் வலைகளில் வைரஸ் புகுந்தது கங்கோனின் உதவியுடன் அவற்றைப் பலர் நீக்கிவிட்டார்கள்.
  • இலங்கைப் பதிவர்களுக்காக கிடுகு திரட்டியின் வருகை
  • லோசன் அண்ணா, வந்தி அண்ணா ஆகியோரின் பதிவுகளுக்கு சில கறுப்பாடுகளால் யாழ்தேவி திரட்டியில் மைனஸ் வோட்டுக்கள் குத்தப்பட்டன.
  • அதன் பின் இடம்பெற்ற இருக்கிறம் அச்சுவலைச்சந்திப்பு பதிவர்களுக்கு பயனுள்ளதாக அமையாததால் பதிவர்களின் மனம்குமுறல் பதிவுகளாக வெடித்தது.
  • இவ்வாறு கவலையடைந்த பதிவர்களை சுபாங்கன் அண்ணா படப்பதிவு போட்டு மகிழ்ச்சியடையச் செய்தார்.
  • சுபாங்கன் அண்ணா 400க்கு அதிகமாக பின்னூட்டமிட்டுப் பந்தாடப்பட்டார்.
  • புல்லட் அண்ணா பதிவர்களை கும்மு கும்மென்று கும்மி ஒரு கும்மல் பதிவு போட்டார்.
  • கனககோபி அண்ணா, சுபாங்கன் அண்ணா ஆகியோர் போலிச்சரியார்களின் முகத்திரையைக்கிழிக்கும் பதிவுகளை வெளியிட்டனர். 
  • கூகிள் குழுமத்தில் பதிவர்கள் கலந்துரையாடவும், பதிவுகளைப்பகிரவும் இலங்கை தமிழ்ப்பதிவர் குழுமம் ஆரம்பிக்கப்பட்டது.
  • கனககோபி அண்ணாவுக்கு பின்னூட்டமிடுவது பற்றி அனானி ஒருவர் மிரட்டி விட்டுப்போனார்.
  • கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு மயூரன் ஆகியோரின் ஏற்பாட்டில் இரண்டாவது பதிவர் சந்திப்பு இனிதே நடந்தது.
கிரிக்கெட்
  • சனத்ஜெயசூர்யா மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இந்த வருடத்தில் தமது 20வது ஆண்டு கிரிக்கெட்வாழ்க்கையைக் கடந்தனர்.
  • இந்த ஆண்டு அதிக ஓட்டங்களைப்பெற்ற அணிகளின் விபரம்
டெஸ்ட்
  1. பாகிஸ்தான் அணி- 765 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(21.02.2009ல் கராச்சி மைதானத்தில்)
  2. இலங்கை அணி- 760 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணிக்கு எதிராகப்பெற்றது.(16.09.2009ல் அஹமதாபாத் மைதானத்தில்)
  3. மேற்கிந்திய தீவுகள் அணி- 749 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராகப்பெற்றது.(26.02.2009ல் ராஜ்கோட் மைதானத்தில்)
ஓருநாள்
  1. இந்தியா அணி- 414 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(15.12.2009ல் ராஜ்கோட் மைதானத்தில்)
  2. இலங்கை அணி- 411 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணிக்கு எதிராகப்பெற்றது.(15.12.2009ல் ராஜ்கோட் மைதானத்தில்)
  3. இந்தியஅணி- 392ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, நியூசிலாந்துஅணிக்கு எதிராகப்பெற்றது.(08.03.2009 கிரிஸ்ட்சேர்ச் மைதானத்தில்)
ருவென்ரி-20
  1. தென்னாபிரிக்க அணி- 241ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(15.11.2009ல் சென்சூரியன் மைதானத்தில்)
  2. இலங்கைஅணி- 215ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணிக்கு எதிராகப்பெற்றது.(09.12.2009ல் நாக்பூர் மைதானத்தில்)
  3. இந்தியா அணி- 211 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(12.12.2009ல் மொஹாலி மைதானத்தில்)
  • இந்த ஆண்டு குறைந்த ஓட்டங்களைப்பெற்ற அணிகளின் விபரம்
டெஸ்ட்
  1.  இங்கிலாந்து அணி- 51 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, மேற்கிந்தியதீவுகள் அணிக்கு எதிராகப்பெற்றது.(04.02.2009ல் கிங்ஸ்டன் மைதானத்தில்)
  2. பாகிஸ்தான்  அணி- 90 ஓட்டங்களுக்கு சகல  விக்கெட்டுகளையும் இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(12.07.2009ல் கொ/பிரேமதாச மைதானத்தில்)
  3. நியூசிலாந்து அணி- 91 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, பாகிஸ்த்தான்அணிக்கு எதிராகப்பெற்றது.(09.12.2009ல் வெலிங்டன் மைதானத்தில்)
ஓருநாள்
  1. சிம்பாபேஅணி- 44 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, பங்களாதேஸ்அணிக்கு எதிராகப்பெற்றது.(03.11.2009ல் சிட்டகாங் மைதானத்தில்)
  2. பாகிஸ்தான் அணி- 75 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(24.01.2009ல் லாகூர் மைதானத்தில்)
  3. சிம்பாபேஅணி- 80ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(12.01.2009 டாக்கா மைதானத்தில்)
ருவென்ரி-20
  1. ஸ்கொட்லாந்து அணி- 81ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, தென்னாபிரிக்க அணிக்கு எதிராகப்பெற்றது.(07.06.2009ல் ஓவல் மைதானத்தில்)
  2. நெதர்லாந்து அணி- 93ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, பாகிஸ்தான் அணிக்கு எதிராகப்பெற்றது.(09.06.2009ல் லோட்ஸ் மைதானத்தில்)
  3. நியூசிலாந்து அணி- 99ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, பாகிஸ்தான் அணிக்கு எதிராகப்பெற்றது.(13.06.2009ல் ஓவல்  மைதானத்தில்)
  • துடுப்பாட்டத்தில் சூறாவளி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டில்சானும், இலங்கையின் ஆஸ்த்தான தொடக்க வீரராக இதுவரை இருந்து வந்த சனத் தற்போது அணியில் நிலையில்லாமல் இருக்கிறார், இந்த நிலையில் இவர்களுக்கு இரவு விடுதி, களியாட்டம் இதெல்லாம் தேவையா?
  • இந்த ஆண்டின் கடைசி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மோசமான ஆடுகளம் காரணமாக கைவிட்ப்பட்டது.
  • இலங்கை அணியின் டில்சான், சனத், மெத்தியூஸ், வெலிகெதர, முரளிதரன் ஆகிய வீரர்கள் இந்தியாவில் கடைசியாக நடந்த தொடரில் காயமடைந்தனர்.
  • வட்சன், சைமன் கட்டிச் ஆகியோர் நகைச்சுவையாக ஒரு ஆட்டமிழப்பு நிகழ்ந்தது.
  • அந்தப்போட்டியில் இருவருமே சதத்தை அண்மித்து ஆட்டமிழந்தது கவலைக்குரிய விடயம்(வட்சன்-93,சைமன் கட்டிச்-98)
******************************************************************************************************************
கடைசிவரை நடக்காது
புதுவருடம் பிறக்கப்போகிறது. 2010ம் ஆண்டும் வரப்போகிறது. வழக்கமாக புதுவருடமென்றால் நாம் அனைவரும் எங்களிடமுள்ள ஏதாவது தீயகுணங்களைச் செய்வதில்லை, சில நல்ல விடயங்களைச் செய்வது என்று முடிவெடுப்பதுண்டு. அதைக்கடைப்பிடிக்கிறோமா இல்லையா என்பது வேறு விடயம்.



அந்த வகையில் இவர்கள் இப்படி முடிவெடுத்தால் எப்படியிருக்கும்.
  • டில்சான்- இனிநான் கிரிக்கெட் விளையாடுவதில்லை.
  • சேவாக்- இனி சிக்சரே அடிப்பதில்லை.
  • ரஜனி- பஞ்ச் டயலாக் சொல்வதில்லை.
  • கஞ்சாகருப்பு- ஹீரோவாக நடிக்கப்போகிறேன்.
  • நமீதா- குடும்பப்பாங்கான பாத்திரங்கிளில்மட்டுமே நடிப்பேன்.
  • கோப்பிப்பதிவர்- இனிச்சிரிப்பதில்லை, ருவிட்டுவதில்லை.
  • டுமீல் பதிவர்- இனி மொக்கைப்பதிவு எழுதுவதில்லை.
  • அனானிகள்- இனி அனானியாக பின்னூட்டமிடுவதில்லை.
  • உளறும் பதிவர்- ஹாட் அண்ட் சவர் சூப்பில் படம் போடுவதில்லை.
  • விஜய்- இனி கெட்டப் மாத்திப்படம் (நல்ல) நடிப்பேன்.
  • தொலைக்காட்சி சேவைகள்- இனி நிகழ்ச்சிகளுக்கு நடுவே விளம்பரமே போடுவதில்லை.
  • சீரியல் பார்த்து அழுவோர்- இனி சீரியலே பார்ப்பதில்லை.
  • 155 பஸ்- 15 நிமிடத்தில் வெள்ளவத்தைக்குப் போவேன்.
  • பெட்டிப்பதிவர்- இனி சிகையலஙங்காரம் செய்ய சலூனுக்கு அடிக்கடி செல்வேன்.
  • போலிச்சாமியார்கள்- இனி மக்களை ஏமாற்றுவதில்லை.
  • அரசியல்வாதிகள்நாட்டுக்க நல்லது செய்யப்போகிறேன்
முடிந்தால் 2010இலிருந்து நீங்கள் கடைப்பிடிக்கப்போகும் நல்ல பழக்கம், கைவிடப்போகும் தீயபழக்கம் என்பவற்றை சொல்லிட்டுப் போங்க.. 
****************************************************************************************************************
வாழ்த்துக்கள்-2010
இந்த ஆண்டின் கடைசிப்பதிவு இது என்பதால் அனைத்துப்பதிவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.











சரி நண்பர்களே 2010ல சந்திக்கலாம்.....




     2009ம் ஆண்டு முடிவடையப்போகிறது, இந்த வருடத்தில் தான் ரசித்த பதிவுகள் பற்றி வந்தி அண்ணா தனது பதிவில் கூறியிருந்தார். அந்தவகையில் 2009ம் ஆண்டின் மொக்கைப்பதிவுகளில் நான் ரசித்து வயிறு வெடித்துச் சிரித்த மொக்கைப்பதிவுகளிள் இங்கே


    வந்தியத்தேவன்
    மொக்கை மன்னன், சொந்த செலவில் சூனியம் வைப்பவர், பச்சிளம் பாலகனாக பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்பவர் என்ற பல பெயருக்குச்சொந்தக்காரர். அடடா சொல்ல மறந்திட்டேன் டீ-சேட்டுகளை அதிகம் விரும்புபவர்.




    புல்லட்

    பெயர் புல்லட் என்று சீரியசாக வைத்திருந்தாலும் இவரின்மொக்கைகளால் வயிற்று வலி வராதவர்களே இல்லை. சீரியசான விடயங்களையும் காமடியாக சொல்லுவதில் கில்லாடி.


    கனககோபி
    இவர ஒரு நிமிசம் குறுகுறுன்னு பாத்தீங்க என்றால் கெக்கபெக்க கெக்க பெக்க என்று விழுந்து விழுந்து சிரிப்பீங்க. தானும் சீரியஸ் பதிவர் என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் இவர் இப்போது யாழ்ப்பாணத்தில் சோப்புடப்பா கமராவில் போட்டோக்களைச் சுட்டுத்தள்ளி அடிவாங்கியதாகத் தகவல்.




    ARV.லோசன்
    வானொலியில் தனது காந்தக்குரலால் அனைவரையும் கட்டிப்போட்ட இவர். கிரிக்கெட் என்றால் போதும் விஜயகாந் ஸ்டைலில் புள்ளிவிபரங்களோடு பிச்சு உதறிவிடுவார்





    சுபாங்கன்
    சலூன் என்று சொன்னாலே தலை தெறிக்க ஓடும் இவர், தனது ஹெயார் ஸ்டைலை ரொனால்டோ கட் என்று சொல்லி சமாளித்து வருகிறார். பெட்டி பெட்டியா மொக்கைகளை போடும் இவரின் மொக்கையில் எனக்குப்பிடிச்சது இது


    கீர்த்தி
    இவரோடு சண்டை பிடித்தால் கவிதை எழுதிவிடுவேன் என மிரட்டும் இவர். உண்மையிலேயே நன்றாக கவிதை எழுதுவார். சிந்தனைச்சிறகில் சிறகடித்துப்பறக்கும் இவரின் அருமையான மொக்கை இதோ


    சிறீகரன்
    கடலேரி என்ற பெயரில் வலைத்தளத்தை வைத்திருக்கம் இவரை ஆதிரை என்றால்தான் அனைவருக்கும் தெரியும். ரொம்ப சீரியசான பதிவர் அப்பப்ப மகா மொக்கைப்பதிவுகளும் எழுதுவார்.

    பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் சமூகத்துக்கு ஏதாவது செய்யத்துடிப்பவர் இவர். சமுக அக்கறையுடைய பதிவுகள் அதிகம் எழுதினாலும் மொக்கையிலும் புகுந்து விளையாடி இருக்கிறார்.


    பாலவாசகன்
    தன்னைப்பற்றிக்கூற பெரிதாக ஒன்றுமில்லை என்று கூறிக்கொண்டாலும் எதிர்கால டாக்டர் இவர். கவிதை, கதை, கட்டுரை, அனுபவமென எல்லாத்திலும் புகுந்து விளையாடும் இவர். மொக்கையை மட்டும் விட்டு வைப்பாரா என்ன




    மதுவதனன் மௌ.

    COWBOYமது என்றால் எல்லோருக்கும் தெரியும். சந்திப்பு நடக்கும் நேரங்களில் நேரடி ஒளிபரப்பு செய்வதில் முன்னிற்பவர். தொழிநுட்பப்பங்களில் அதிக விருப்பமுள்ளவர். 




    யோ வொய்ஸ் யோகா

    யோ எனக்கத்தும் இவரின் சத்தத்தை சில நாட்களாகக்காணவி்ல்லை. அப்பப்ப ருவிட்டரிலும், பின்னூட்டங்களிலும் மின்னல் மாதிரி வந்து போவதாகத்தகவல்






















    பட்டிங்கே செய்யத்தெரியாத பட்ஸ்மன் ஒருவர் பட்டிங் செய்யவருகிறார், பெளலரைப்பார்த்தவுடனே பயந்து போன நம்ம பாட்ஸ்மன் இப்பிடி கட்டபொம்மன் டயலாக் பேசி தப்பிக்க முயல்கிறார்

    NO BALL


    YORKER



    BOUNCER


    GOOD LENGTH


    சிக்சர் பறக்கிறது


    பவுண்டரி குவிகிறது


    நீ ஏன் செய்ய வேணடும் பெளலிங்


    எங்களோடு பிராக்டிசுக்கு வந்தாயா?


    பவுலிங் செய்தாயா?


    விக்கெட் எடுத்தாயா?


    NO BALLசெய்தாயா? 


    ஒரு WIDE BALL போட்டாயா?


    அங்கு ஓடிவிளையாடும் நம்நாட்டுப் பிளேயர்களுக்குதண்ணீர்ப்போத்தல் சுமந்து பணிபுரிந்தாயா?


    அல்லது நீ


    பாட்ஸ்மனா? பெளலரா? பீல்டிங் செய்யத்தெரியாதவனே..


    எதற்கு கேட்கிறாய் பவுலிங்?


    யாரைக் கேட்கிறாய் பவுலிங்?


    சிங்கிளடித்து ரன்குவிக்கும் எங்கள்நாட்டு பட்ஸ்மன் கூட்டம்
    உன் BALLலையும் போட்டடித்து ரன்களை நெற்கதிர்ளாய்க் குவித்துவிடும் ஜாக்கிரதை.


    உடனே அந்த பெளலர்
    SHUT UP.. 
    அதிகார முத்திரையுடைய UMPIREரிடம் பெளலிங் தரச்சொல்லிக் கூறியிருந்தேனே.


    அப்படியா...
    பலே... நீ கேட்ட ஆள் மிகவும் புத்திசாலி,
    என்னிடம் பெளலிங் செய்யும் நோக்கத்துடன் எவனும் தலைகாட்டியதில்லை இந்தப்பக்கம், எங்களுடைய பெருமை தெரிந்தவன் அவன்.ஆனால் இது போன்று பெளலிங் கேட்பதற்கு இதுவரை எவனுக்கும் துணிவு பிறந்ததில்லை. பெளலிங் செய்யப்போகிறேனென்று என்னிடமே கூறிய உன்னை, இனியும் GROUNDக்குள் நிற்கவிட்டது என் குற்றம்.


    நடுங்குகிறது கால்கள், அடக்கு அடக்கு என்று எனது கால்காப்பு தடு்க்கிறது. 


    கால்க்காப்பைக் கழட்டுகிறாயா இது ஆபத்துக்கு அறிகுறி, உன்னை பட்டிங் செய்ய உத்தரவிடுகிறேன்.


    என்ன பெளலிங் செய் பார்க்கலாம்....


    (BALL படாத இடத்தில் பட்டு பாட்ஸ்மன் ஸ்பாடலயே அவுட்டாகுறார்)


    நத்தார் பண்டிகை வாழ்த்தும் பரிசுகளும்(25.12.2009)

    நத்தார் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது பதிவுலக நண்பர்களுக்கும் மனமார்ந்த நத்தார் பண்டிகை நல்வாழ்த்துக்கள். மலர்ந்திருக்கும் இந்தநத்தார் பண்டிகை அனைவருக்கும் நன்மையையும் மகிழ்ச்சியையும் வழங்கவேண்டும் என்று இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.

    எல்லாரும் சண்டைபிடிக்காம ஆளுக்கு ஒன்று எடுக்கொள்ளுங்கள்...
    **************************************************************************************************************
    சுனாமி(TSUNAMI-26.12.2009)

    சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். அன்று அதை நாம் கண்கூடாகக்கண்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒன்றா இரண்டா எத்தனை இலட்சம் உயிர்கள், ஒரு அலையில் எல்லாம் முடிந்துவிட்டது.


    அதுபற்றிய ஓர் மீள்பார்வைக்காக சில தகவல்கள் உங்களுக்காக

    • நேரம்: 00.58.53 UTC
    • காவுகொண்ட மக்கள்: 11 நாடுகளைச்சேர்ந்த 230000 மக்கள் இறந்தனர்.
    • உணரப்பட்ட நிலநடுக்கம்: 9.1-9.3க்குள்
    *****************************************************************************************************************
    27.12.2009
    அட 27ம் திகதி என்ன நடந்தது என்று யோசிக்கிறீங்களா...
    --




    --




    --




    --




    --




    --








    --




    --




    --




    --




    27.12.2009- இந்தநாள் இந்த வருடத்தின் 361வது நாள்....
    ஹிஹிஹி
    இணைப்பாவனையாளர்கள் யாருமே இந்தப் பேஸ்புக்கை பாவிக்காமல் இருந்திருக்கமுடியாது. ஒரு சமுக தளமாகக்காணப்படும் இது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை இங்கே சிறியவர்முதல் பெரியவர் கட்டுண்டு கிடக்கின்றனர். FARM VILLA, BARN BUDDY, CAFE WORLD போன்ற எக்கச்சக்க விளையாட்டுக்கள், அதுமட்டுமன்றி இலவசமாக செலவில்லாமல் பரிசு கூட வழங்கலாம். இப்படியான வசதிகள் பல காணப்படுவதாலேதான். இது அதிகமாக எல்லோராலும் விரும்பப்படுகிறதோ என்னாவொ 



    ஆனால் பேஸ்புக் இப்போது பேஃக் புக்(FAKE) ஆகிக்கொண்டு செல்கிறது என்றுகூறினால் பிழையில்லை. ஹக்கிங் செய்வதும் மிக இலகுவாக்கப்பட்டிருக்கிறது. பலர் எப்படி ஹக் பண்ணுவது என்று விளக்கம் கொடுத்து வீடியோ கூட வெளியிட்டுள்ளனர். 


    எமது STATUS UPDATEகளுக்கு இரகசியத்தன்மை(privacy) வழங்கும் பேஸ்புக் இதற்கும் ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நல்லது. அதுமட்டுமன்றி பாவனையாளர்களுக்கே APPLICATIONனளை உருவாக்கும் வசதியை இது வழங்குவதால் பேஸ்புக் வைரஸ் பரப்புவது இலகுவாகிவிட்டது. தற்போது புதிதாக பேஸ்புக்கில் காணப்படும் வீடியோ அரட்டை(VIDEO CHATTING) முலம் வைரஸ் பரப்பப்படுவதாக பாதிக்கப்பட்ட நண்பர்கள் கூறினார்கள்.



    நேரடியாகக்கண்ட பேஸ்புக் வைரஸ்
    நான் எனது நண்பர்கள் சிலரை ஒரு லிஸ்ட்டில் வைத்திருக்கிறேன். வழமையாக முஞ்சிப்புத்தக அரட்டையில் உள்ளோரின் பகுதியில் அந்த லிஸ்ட்டில் உள்ளோர் வேறாகவும் மற்ற நண்பர்கள் வேறாகவும் காட்டப்படும். ஆனால் அன்று இரண்டு இடங்களிலும் ஒரே நண்பரின் பெயரைக்காட்டியது. நான்கூட ஒருமுறை பேஸ்புக்கால் அறிவுறுத்தப்பட்டேன். 


    ஆனால் பேஸ்புக் அறிவுறுத்தல் என்ற பெயரில் சில வேளைகளில் வைரசும் தாக்கலாம். எனவே பேஸ்புக் பாவனையாளர்கள் தேவையற்ற குழுமங்களில் சேருவதையோ, தெரியாத நபர்களை நண்பர்குழுமத்தில் இணைப்பதையோ தவிர்த்துக்கொண்டால் உங்கள் பேஸ்புக்கை ஓரளவு காப்பாற்றிக்கொள்ளலாமே தவிர இதுவரை எந்தத் தீர்வையும் எடுக்காத பேஸ்புக் நிர்வாகம் இதற்கு இனியும் எந்தவித தீர்வையும் எடுக்கப்போவதில்லை.

    பேய் இருக்கிறதா

    பதிவிட்டவர் Bavan | நேரம் 1:11 PM | 9 பின்னூட்டங்கள்
    நேற்று முன்தினம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. ஒரு சாமியாரும் (பேயோட்டி என்றும் சொல்லலாம்) அவரது குழுவும், மறுபக்கம் பேய் இல்லை என்று கூறி ஒரு குழு.

    • நடந்தது என்ன?
    அந்தப்பேய் இல்லை என்று வாதிடும் குழுவில் ஒருவர் பேயோட்டி சாமியாருக்கு 30நாட்கள் கெடு கொடுத்து முடிந்தால் எனக்கு பேய்பிடிக்க வைத்துக்காட்டுங்கள் என்று கூறியிருந்தார். ஆனால் அந்த பேய் சாமியாரால் அவருக்க பேய் பிடிக்க வைக்க முடியவில்லை. 
    • அதற்கு அந்த சாமியின் பதி்ல்
    நான் எனது தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் ஆனால் பேய் இல்லை என்பதை என்னால் ஏற்க முடியாது என்கிறார்.


    என்னதான் இருந்தாலும் பேய் என்று ஒன்று இருந்தால்தானே அவர் அதை ஏவி விடுவதற்கு. இப்படியான நிகழ்ச்சிகள் வரவேற்கத்தக்கன. வீடுகளில் பல தசாப்தங்களாக நடைபெறும் தொடர் நாடகங்களைப்பார்த்து கண்ணீர் விடுவோர் இந்த நிகழச்சிகளையும் பார்த்தால் நல்லது.


    அங்கு கூறப்பட்ட இன்னொரு கருத்து காய்ச்சல் , தலைவலி என்றால் நாம் மருத்துவரிடம் சென்று எனக்க காய்ச்சல், தரைவலி என்று கூறி மருந்து கேட்கலாம் ஆனால் மனஅழுத்தம் மற்றும் மனோவியல் சம்பந்தமான நோய்களுக்கு நாம் யாருமே வைத்தியரிடம் சென்று எனக்கு மனநிலை சரியில்லை என்று கூறி வைத்தியம் பெறுவதில்லை. 



    எனவே அதை சாதகமாகப்பயன்படுத்தம் இந்த சாமியார் வேடம் பூண்ட போலிச்சாமிகள் உங்கள் பிரச்சினையை நாம் தீர்க்கிறோம் என்ற பெயரில் அந்தப்பூசை இந்தப்பூசை, செய்வினை பணியாரம் என்று ஏதேதோ பெயரையெல்லாம் பயன்படுத்தி போலிச்சாமிகள் எமது காசையும் கறந்துகொள்கிறார்கள்.


    எத்தனை நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெரிய தலைகளின் தலையீடுகள் இருப்பதால் இன்னும் ஏமாற்றி வாழும் சாமிகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். எப்போது மூடநம்பிக்கையும் ஒழிக்கப்படுகிறதோ அன்றுதான் மக்களுக்கும் அவர்களின் பணத்திற்தும் விடிவு.

    1300ம் ஆணடு காலப்பகுதி- CREAG என்ற பெயரில் ஒரு விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அதற்குரிய எழுத்துருவிலான சாட்சிகள் இல்லை.


    CRICKET என்றி வார்த்தை CRIC என்ற சொல்லில் இருந்து வந்தது. CRIC என்பதன் அர்த்தம் கொக்கி வடிவிலான குச்சி (hooked staffs carried by Shepards). ஆனால் இவ்விளையாட்டு சிறுவர்களால் மட்டுமெ விளையாடப்பட்டதாம்.



    1598ம் ஆண்டு- "CRECKETTஅல்லது "CRICKETT" என்ற பெயரில் ஒரு விளையாட்டு இருப்பதாக எழுத்து முல தடயங்கள் கிடைத்துள்ளன.


    1611ம் ஆண்டு- இளைஞர்களும் விளையாடத் தொடங்கினார்கள். இரண்டு பேர் சேர்ச்க்கு செல்லாமல் கிரிக்கெட் விளையாடியதால் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் இருக்கிறதாம்.


    1648ம் ஆண்டு- இங்கிலாந்தில் மனித உரிமைப்போர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காலகட்டம், இங்கிலாந்தின் புதிய தலைமை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கிரிக்கெட் விளையாட அனுமதித்தது.



    1977ம் ஆண்டு- மெல்போர்ன் கிரிக்கெட் கழகத்தால் கிரிக்கெட் விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.


    1844ம் ஆண்டு- முதலாவது சர்வதே கிரிக்கெட் போட்டி அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையில் விளையாடப்பட்டது.


    1864ம் ஆண்டு- மேல்ககைபந்து வீச்சு முறை(OVER ARM BOWLING) முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது.


    1877ம் ஆண்டு- இங்கிலாந்து தனது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியது.


    1882ம் ஆண்டு- இங்கிலாந்து வீரர்களின் மரணம்...




    1900ம் ஆண்டு- ஒலிம்பிக்கில் முதன்முதலாக கிரிக்கெட் விளையாடப்பட்டது.(பிரான்சும் இங்கிலாந்தும் மோதிக்கொண்டன)


    1909ம் ஆண்டு- ICC உருவாக்கப்பட்டது


    1932,1933ம் ஆண்டு காலப்பகுதி- கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் புகுத்தப்பட்டன.


    1981ம் ஆண்டு- UNDERARM பந்துவீச்சு முறை தடைசெய்யப்பட்டது.


    இப்படி பந்து வீசினா எப்பிடி அடிக்கிறது...



    குறிப்பு: ஒரு ஆங்கிலக்கட்டுரையின் மொழிபெயர்க்கப்பட்ட சுருக்கமான வடிவம் 
    இது,மொழிபெயர்ப்பில் ஏதாவது பிழைகள் இருப்பின் 
    மன்னித்தருளுங்கள்..











    பாராட்டுக்கள்

    நேற்றுமுன்தினம் 2மணிக்கு இடம்பெற்ற இரண்டாவது இலங்கை வலைப்பதிவர் சந்திப்புக்கு வரமுடியாவிட்டாலும் நேரடியாக ஒளிபரப்பில் இணைந்திருக்க செய்தமை மகிழ்ச்சியளிக்கிறது.


    ஒரு நிகழ்வு என்றால் குறிப்பிட்ட நேரத்திற்கு தொடங்காது என்ற நியதியை இம்முறை எமது பதிவர்கள் உடைத்தெறிந்து விட்டனரென்றே கூற வேண்டும், சொன்னாடி 2 மணிக்கு முதலே LIVE STREAM ஆரம்பிக்கப்பட்டது, ஆரம்பத்திலே ஒருவர் நான்கைந்து கமராவுடன் போட்டோக்களை எடுத்துத்தள்ளிக்கொண்டருந்தார். யாரடா அது என்று பார்த்தால் அட நம்ம கோப்பி..ச்சா கோபி அண்ணா.

    பிறகு அங்கே போலீஸ் ஹெயார் கட்டுடன் காணப்பட்ட சுபாங்கன் அண்ணா, புதுச் ரீ-சேட் போட்டு வந்த வந்தியண்ணா, சோப்பு வாங்கிக் கொடுத்த கோபி அண்ணா, ரிங்ஸ் கரைத்த கீர்த்தி அக்கா, லோசன் அண்ணா, புல்லட் அண்ணா, சந்ரு அண்ணா,நிலா அக்கா, யோகா அண்ணா, மதுவதனன் அண்ணா, மு.மயூரன் அண்ணா, நெதர்லாந்திலிருந்து வந்த அண்ணா, அசோக்பரன் அண்ணா,ஹிசாம் அண்ணா மற்றும் பலரையும் காணக்கிடைத்தது மிக்க மகிழ்ச்சியழிக்கிறது.

    பதிவர்சந்திப்பை வெற்றிகரமாக நடாத்தி முடித்த ஏற்பாட்டுக்குழுவுக்கும், திரட்டிகளில் சந்திப்பு பற்றி அறிவித்து உதவிய பூச்சரம், தமிழிஸ், தமிழ்மணம், உலவு,யாழ்தேவி ஆகிய அனைத்து திரட்டிகளுக்கும் கலந்து கலக்கிய அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும்..

    **********************************************************************************
    கிரிக்கெட் கொமெண்ஸ்..






    பதிவர் சந்திப்புக்கு தங்கள் பதிவுகளைத்தூக்கிக்கொண்டு வந்த பதிவர்களை போலீஸ்(பிரகாஸ்ராஜ்) இடைமறித்து பிளாக்குகளை பார்த்திட்டு பதிவர்களைப் பிடிச்சு கேள்வி மேல கேள்வி கேட்க அவங்க அந்நியன் மெதட்ல எப்படி தப்புறாங்க....

    முதல்ல கையில பெட்டியோட வந்த பதிவரிடம், கையில என்ன பெட்டிடா திறந்துகாட்டு என்று பெட்டிய பறிக்க முயல..

    உனக்கு தைரியமிருந்தா
    என்ன பெட்டிய உடைச்சிராதேள்
    பெட்டிய உடைடா
    பெருமாள் சத்தியமா அங்த 5 பெட்டியும் 
    என்னோடதில்ல
    என்னோடதுதான்டா
    என் பெட்டிய டஎங்கிட்ட குடுத்துருங்கோ
    அவன் பெட்டிய அவன்ட குடுடா

    உடனே பிரகாஸ்ராஜ் கன்பியூஸ்ஆகிவிட பெட்டிப்பதிவர் எஸ்கேப் ஆகிவிடுகிறார். அடுத்து நம்ம கோப்பிப்பதிவரப்பாத்திட்டு பாக்கெட்ல இருக்கிற படத்தையும் எடுத்துப்பாத்திட்டு, டேய்..டேய்..டேய்.. உண்மைய சொல்லு அந்த பின்னூட்டக்காரன் நீதானே? உடனே உசாரான நம்ம கோப்பிப்பதிவர்


    உனக்கு தைரியமிருந்தா
    என்ன பின்னூட்டத்த அளிச்சுராதேள்
    பின்னாட்டத்த அளிடா
    பெருமாள் சத்தியமா அங்த 5 பின்னூட்டமும் 
    நான்போ டல
    போட்டதே நான்தான்
    என்ன பின்னூட்டம் போடவிடுங்கோ
    அவன பின்னூட்டம் போட விடு

    இப்படிச்சொல்லி எஸ்கேப் ஆகிவிட டென்சனின் உச்சத்துக்குச்சென்ற பிரகாஸ்ராஜ் உடனே ஒரு BP மாத்திரையைப்போட்டுக்கொண்டு, கையில என்ன பேப்பர்மா எங்க குடு பாப்போம் என்று சிந்தனைப்பதிவரிடம் பேப்பரை வாங்கிவிட...


    உனக்கு தைரியமிருந்தா
    என் கவிதைய படிச்சுராதேள்
    கவிதையப்படிடா
    பெருமாள் சத்தியமா அங்த 5 கவிதையும் 
    நான் எழுதல
    எழுதினதே நான்தான்
    என் கவிதய என்கிட்ட குடுத்துருங்கோ
    அவவ கவிதைய அவகிட்டயே குடுத்துரு

    முதல்வரியைப்படிச்சதுமே மயங்கி விழுந்த பிரகாஸ்ராஜை அவரின் அசிஸ்ட்டண்ட் விவேக் தண்ணி தெளிச்சு எழுப்பி வீடுறார்.. அங்கே ஒருகையில் கண்ணும் புல்லட்டுமாய் நின்ற பதிவரைப்பார்த்துக் கடுப்பான பிரகாஸ், என் முன்னாடியே கன்னோட வர்ரியான்னு அவரிடமே கன்னையும் புல்லட்டையும் பறிச்சு சுட முயல..

    உனக்கு தைரியமிருந்த
    என்ன சுட்டுராதேள்
    என்ன சுடுறா
    பெருமாள் சத்தியமா அங்த 5 புல்லட்டும்
    என்னேடதில்ல
    என்னோடது தாண்டா
    என் புல்லட்ட எங்கிட்ட குடுத்துருங்கோ
    புல்லட்ட அவங்கிட்ட குடுத்திடு

    பிரகாஸ் இந்த நடிப்ப பாத்து திகைச்சுப்போய் நிக்க, புல்லட் புல்லட் வேகத்தில் எஸ்கேப், அடுத்து கையில் ஹாட் அண்ட் சவர் என்று என்னமோஎல்லாம் எழுதி கையில நடிகைகளின் பட அல்பத்தோட நின்ற உளறும் பதிவரின் அல்பத்தை பார்க்க முயல..

    உனக்கு தைரியமிருந்தா
    என் படத்த பாத்துராதேள்
    படத்த பாருடா
    பெருமாள் சத்தியமா அங்த 5 படத்தையும் 
    நான்போடல
    போட்டதே நான்தான்
    என் படத்தை எங்கிட்ட குடுத்துருங்கோ 
    அவன் படத்த அவன்ட குடுடா

    உள்ள இருந்த நயனின் படத்த பார்த்து மயங்கிய பிரகாசுக்கு நம்ம ஏரிப்பதிவரின் கடலேரித்தண்ணி பட்டு எழும்பிடுறார், ஏரிக்கு வந்தபோது ஏரில குளிக்கவிடாதவன் நீதானே, என்ன குளிக்க விடப்போறியா இல்லையா என்று பிரகாஸ் கேட்க 

    உனக்கு தைரியமிருந்தடா
    ஏரில குறிக்காதேள்
    ஏரில குளிடா
    பெருமாள் சத்தியமா அங்த 5 ஏரியும் 
    என்னேடதில்ல
    என்னோடது தாண்டா
    என் ஏரிய திறந்து விடுங்கோ
    அவன் ஏரிய திறந்து விடுடா

    இப்படி ஏரியும் பாய்ந்து ஓடிவிட, அடுத்து நம்ம ஹெயார் மாக்கெட்பதிவரைப்பாத்து, ஒரு ஸெயார் FREEயாத்தாடான்னு கேட்டதுக்கு அன்னைக்கு எவ்வளவு பில்டப் குடுத்த, இப்ப வாடி உன்னோட எல்லா ஸெயாரையும் வித்துக்காட்டுறன் என்று பிரகாஸ் கடுப்பின் உச்சத்தில் கத்த 


    உனக்கு தைரியமிருந்தடா
    என் பங்க வித்துராதேள்
    என் பங்க வித்துருடா
    பெருமாள் சத்தியமா அந்த 5 பங்கும்
    நான் விக்கல
    வித்ததே நான்தான்
    என் பங்க எங்கிட்ட குடுத்துருங்கோ
    அவன் பங்க அவன்கிட்ட குடுடா

    ஹேயார் மாக்கெட்டும் இப்படி எஸ்கேப் சற்று பயத்துடன் எப்படிடா தப்பிறது என்று முளித்துக்கொண்டிருந்த சிறகுப்பதிவர் தன் சிறகுகளை ஒளிக்க முயல, உடனே சிறகுகளை பறித்த பிரகாஸிடம்...

    உனக்கு தைரியமிருந்தடா
    என்ன சுட்டுராதேள்
    என்ன சுடுறா
    பெருமாள் சத்தியமா அங்த 5 சிறகும் 
    என்னோடதில்ல
    என்னோடது தாண்டா
    என் சிறகுகளைக் குடுத்துருங்கோ
    அவன் சிறகை அவங்கிட்ட குடுடா

    ஆச்சரியத்தில் பிரகாஸ் சிறகுகளைக்கைவிட சிறகுப்பதிவர் சிறகுகளைப்பிடித்து பறந்து எஸ்கேப்பாகிறார், கடைசில எஞ்சியிருக்கிறது நம்ம பாரம்பரியத்த கைவிடாம இன்னும் சுவடில எழுதுற பதிவர், சுவடியை வாங்கிப்பாத்த பிரகாஸ் அதிலுள்ள கிரிக்கெட் PHOTO COMMENTகளைப்பார்த்து டென்சனாகி அதை எரிக்க முயல..

    உனக்கு தைரியமிருந்தடா
    என் சுவடிய எரிச்சுராதேள்
    என் சுவடிய எரிடா
    பெருமாள் சத்தியமா அங்த 5 சுவடியும் 
    என்னோடதில்ல
    என்னோடது தாண்டா
    என் சுவடிய எங்கிட்ட குடுத்துருங்கோ
    அவன் சுவடிய அவன்ட குடுடா

    கடைசியா களத்தில விளையாடிட்டு லேட்டா வந்த ARV பதிவர் டென்சனின் உச்சத்தில் தலைகீழாக நின்று கொண்டிருந்த பிரகாஸை சமாதானப்படுத்தி பதிவர் சந்திப்புக்கு கூட்டிட்டு வாரார்.


    Bavan || Photography


    இதுதான் நான்

    My photo
    I'm a cool guy who Living the life like there is no tomorrow...

    சுவடிகள்

    துரத்திறாங்க

    சுவடி வகைகள்

    2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

    வாங்கிய பரிசு

    வாங்கிய பரிசு
    2010 blog rank 83
    Tamil Top Blogs
    Tamilmanam Tamil blogs Traffic Rank

    நண்பர்களின் பக்கம்