Related Posts with Thumbnails
Showing posts with label வடை. Show all posts

வடபோச்சே!

பதிவிட்டவர் Bavan | நேரம் 10:07 AM | 3 பின்னூட்டங்கள்
bavan.info என்று பேரை வச்சுக்கிட்டு கொஞ்சமாவது informative ஆக எழுதவில்லை என்றால் அது அம்புட்டு நல்லா இருக்காது அதனால் கொஞ்சம் informative ஆக ஒரு பதிவு.

வடபோச்சே! என்ற டயலொக்கை வடிவேலு என்ற மாபெரும் நகைச்சுவை நடிகர் நமக்கெல்லாம் அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால் அந்த டயலொக்கை நம்மில் பலர் ஏன் உபயோகப்படுத்திறோம் என்று தெரியாமலேயே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் சரியாகப் பயன்படுத்தி வருகிறோம். ங்கொய்யால, oops, Thanks, Sorry போன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு வார்த்தை ஆகிப்போனது இந்த "வட போச்சே!".



வடபோச்சே! என்பதன் வரலாறு என்ன?
பாட்டி வடை சுட்ட கதை எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அதில் ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டு இருப்பார் அப்போது ஒரு காக்கை வடையைக் களவெடுத்துக் கொண்டு போய்விட்டது. உடனே அந்தப் பாட்டி "ஐயோ வடபோச்சே!" என்றார். அதுதான் இன்று மருகி "வட போச்சே" என்று கூறப்படுகிறது.

வடபோச்சே Definition
ஏதாவது ஒரு முக்கிய விடயத்தை செய்துகொண்டிருக்கும் போது கிட்டத்தட்ட 80 தொடக்கம் 90 சதவீதம் குறிப்பிட்ட விடயம் பூர்த்தியடைந்த பின்னர் தீடீரென ஏற்படும் ஒரு அசாதாரண நிலை காரணமாக அந்தக் குறிப்பட்ட விடயத்தை செய்து முடிக்க முடியாமல் போகும் அந்தக் கணப் பொழுதில் சொல்லப்படுவது "வட போச்சே" என்று அழைக்கப்படும்.

உதாரணமாகச் சச்சின் ஓய்வு பெறவே மாட்டார் என்று சச்சின் ரசிகர்கள் நண்பர்களிடம் சவால் விட்டுவிட்டு வந்து பார்த்தால் அவர் ODIயிலிருந்து ஓய்வு பெற்றிருப்பார் உடனே பலரும் சொன்ன வார்த்தை "வடபோச்சே!".



வட போச்சே! பல்வேறு வயதுப்பிரிவினரிடையே பல்வேறு நிலைகளில் சொல்லப்படுகிறது.

குழந்தைகளிடையே அவர்கள் வடை முதல் பிஸ்கட் வரை எதையாவது சாப்பிடும் பொழுது அது கீழே விழுந்துவிட்டால். உடனே அவர்கள் கூறும் வார்த்தை "வட போச்சே!".

இளைஞர்களிடையே அதாவது யூத்துக்களிடையே, கம்பஸ் அல்லது  படிக்கும் இடங்களில் ஒரு பொண்ணு வந்து நன்றாகக் கதைத்துவிட்டு, கடைசியில் "Bye அண்ணா" என்று சொல்லும் போது அவர்கள் மனதுக்குள் சொல்லிக்கொள்ளும் வார்த்தை "வட போச்சே!".

அடுத்து குடும்பஸ்தர்களிடையே, நாளை பெற்றோல் அடிக்கலாம், நாளை குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு என்று செய்தி வரும் போது அவர்கள் சொல்லும் வார்த்தை "வட போச்சே!".

வயது முதிர்ந்தவர்களிடையே, அவர்கள் ஆசையாக மற்றவர்களுக்கத் தெரியாமல் ஆட்டையப் போட்டு ஒரு இனிப்புப் பண்டத்தை சாப்பிட ஆரம்பிக்கும் போது அதை பேரன் அடித்த பந்து தட்டி விடல் அல்லது சாப்பிடுவதை வீட்டில் மற்றவர்கள் பார்ப்பதால் சாப்பிட முடியாமல் போதல் போன்ற நேரங்களில் அவர்களால் சொல்லப்படுவது "வட போச்சே!".

கன்னம் ஸ்டைல் நடனத்தை என்னதான் PSY ஆடியிருந்தாலும் அதை பிரபலப்படுத்தியது கிறிஸ் கெயில் தான். அதே மாதிரி இந்த வடபோச்சே என்ற வார்த்தையை வடைசுட்ட பாட்டி சொல்லியிருந்தாலும் அதை பிரபலப்படுத்தியது என்னமோ வடிவேலுதான். ஆனால் அவரையும் நிஜவாழ்க்கையில் அரசியல் மேடையில் பேசியபின்னர் சுமார் ஒரு வருட காலமாக வீட்டிலேயே உக்கார்ந்திருக்கும் போது தினமும் சொல்ல வைத்துவிட்டது இந்த "வட போச்சே!".

இப்போது நீங்களும் ஏதோ informative ஆக இருக்கும் என்று நினைத்து படிக்க வந்துவிட்டு இம்புட்டு மொக்கைப் பதிவா இருக்கே என்று நீங்களும் இப்போது சொல்லுவீர்கள் "வட போச்சே!" =P


எனக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு சந்தேகம் உழுந்து வடையில் ஓட்டை இருக்கு ஆனால் பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் என்று? அதுக்குக் காரணம் என்ன என்று மல்லாக்கப்படுத்துகிட்டு விட்டத்தைப் பார்த்தபடி யோசிக்க ஆரம்பிச்சு அப்பிடியே தூங்கிப்போனேன். அப்போ கனவிலே விருந்தூர் மன்னர் சோத்துச்சக்கரவர்த்தியின்அமைச்சர் பருப்பு தோன்றி அதன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.

"முன்னொரு காலத்தில விருந்தூர் என்ற நாட்டை சோத்துச்சக்கரவர்த்தி என்ற ராஜா ஆட்சி செய்து வந்தார். அவரின் ஆட்சியின் கீழ் உழுந்தூர், பருப்பூர் என்று இரண்டு ஊர்கள் இருந்திச்சாம். அந்த ரெண்டு ஊர்க்காரர்களும் பாயாசூர், கடலையூர்க்காரர்கள் எல்லாரும் மூக்குமேல விரலை வைக்கிற அளவுக்கு ஒற்றுமையா, ரொம்ப சந்தோஷமா மற்ற இருந்து வந்தாங்களாம். தங்களுக்குள்ள போட்டி பொறாமையே வரக்கூடாது எண்டதுக்காக எந்தப்போட்டியா இருந்தாலும் இரண்டு ஊரும் சமமாவே மார்க் வாங்கிறதெண்டு முடிவெடுத்து, அதையே கடைப்பிடிச்சு வந்தாங்களாம்.

ஒருநாள் விருந்தூர் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு போட்டி ஒன்று வைக்கப்பொவதாக அறிவிச்சாங்களாம். அதாவது மன்னரின் பிறந்தநாளுக்குயார் சிறந்த தின்பண்டம் செய்து கொண்டு வந்து தாறாங்களோ, அவங்களுக்கு "ஆண்டின் சிறந்த தின்பண்டி" என்ற பட்டம் குடுப்பதாக சொன்னாங்களாம்.

போட்டிதினத்தன்று அனைவரும் மைதானத்தில் கூடியிருந்தாங்களாம். அப்ப போட்டி ஆரம்பிச்சது. உழுந்தூர்க்காரர்களும், பருப்பூர்க்காரர்களும் மும்முரமாப் போட்டியில் கலந்து தங்கள் தின்பண்டங்களைச் தயாரிக்க ஆரம்பிச்சாங்களாம். முதலில் செய்து முடிக்கிறவங்களுக்கு போனஸ் பொயின்ஸ் கிடைக்கும் என்று தீடீரென மன்னர் அறிவிக்க, உடனடியா உழுந்தூர்க்காரர்கள், "எனக்குத்தான்.. எனக்குத்தான்.. இந்தாங்க உழுந்து வடை" என்று சத்தமாச் சொல்லிட்டு உழுந்துவடையை எடுத்திட்டு மன்னரிடம் போனாங்களாம்.

உடனே சாக்கான பருப்பூர்க்காரனுகள், என்னடா இது என்று பார்க்க, வழக்கம்போல ஒரே மாதிரி வடை சுட்டு இரண்டு பேரும் பரிசைப் பகிர்ந்துக்கலாம் என்ற கொள்ளையை மீறி உழுந்தார்க்காரனுகள் கிரியேட்டிவிட்டியாக யோசிச்சு உழுந்து வடையில் ஓட்டை போட்டு அதன் தொடு மேற்பரப்பைக் கூட்டி சீக்கிரமா வடையைப் பொரிய வச்சு ஜெயித்து தூரோகம் செய்ததால், அன்றிலிருந்து உழுந்தூர்க்காரனுகளை எதிர்க்கும் நோக்கில் பருப்புவடையில் ஓட்டை போடுவதில்லையாம்"

என்று அமைச்சர் பருப்பு சொல்லிமுடிக்க, எங்கேயோ கருகிற வாசனை வர திடுக்கிட்டு எழுந்து பார்த்தா அடுப்பில் ஆசைஆசையாய் உழுந்து வடை சுட்டுச் சாப்பிடலாம் என்ற எனது நினைப்பில் பாழாய்ப்போன அடுப்பு அதிகமாய் எரிந்து வடையை கருக்கி எனது வயிற்றில் மண்ணைப் போட்டிருந்தது.

"ஐயோ வடபோச்சே...."

ஐயோ வட போச்சே...

பதிவிட்டவர் Bavan | நேரம் 5:13 PM | 12 பின்னூட்டங்கள்


ஆயிரம் வடை சுட்டு அண்டாவிலே போட்டாலும்
அதிலொன்றைக் கருங்காகம் கவ்விக்கொண்டு போனதுமே
தன்னால் முடிந்தவரை சினத்தோடு வசைபாடி
தளர்ந்துபோய்க் கிழவி சொன்னாள் ஐயோ வட போச்சே


திருடிய வடைதனையே தின்ன முடிவெடுக்க
பாட்டுப்பாடு குயில் குரலா என்று நரி சொல்ல
பாட்டுப்பாட எத்தனித்த காக்கையின் வாய்தப்பி 
நரி வாயில் குடிகொள்ள
ஆறாத வடையிழந்த கோபம் கொதிக்கும் கருங்காகம்
கடுமையாய் கரைந்ததுவே ஐயோ வட போச்சே


பாட்டுப்பாட நரி சொல்ல பாதத்திலே வடையை வைத்து
திறமையான திருட்டுக்காக்கை கடுமையான தன்குரலில்
முகாரியில் பா கரைய காதுக்குப் பூட்டுப்போட்டு
துயரொலியில் குள்ளநரி ஐயோ வட போச்சே


நிலாவில் ஒரு பாட்டி நித்தம் வடை சுடுவா
சாப்பிடடா என்மகனே என்று ஒரு தாய் சோறூட்ட
நிலாப்பிளவை வடையென்று வாய் பிளந்து இவன் பார்க்க
சொக்கத்தங்கம் என்று சொல்லி சோறூட்டி முடித்திடுவாள் 
அமாவாசை நாளன்று பாலகன் வடைகேட்க
விடையின்றி இவள் சொன்னாள் ஐயோ வட போச்சே


ஐந்நூறு ருபாய்க்கு அழகாய் நிரலிட்டு
வடையுள்ள கடைதேடி வாஞ்சையுடன் உள்நுழைந்து
ஆளுக்கு ரெண்டு வடை மட்டும் அளவிட்டு
அப்புறம் பி்ல் பார்த்தா 400 உம் தாண்டலயே
வடையொன்று எடுப்பதற்கு இச்சையுடன் அதை நோக்க
எதிரிலே இருந்த வடைத்தட்டில் வெங்காயங்கூட இல்லை 
அதைப்பார்த்து நான் சொன்னேன் ஐயோ வடபோச்சே





Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்