Related Posts with Thumbnails
எனக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு சந்தேகம் உழுந்து வடையில் ஓட்டை இருக்கு ஆனால் பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் என்று? அதுக்குக் காரணம் என்ன என்று மல்லாக்கப்படுத்துகிட்டு விட்டத்தைப் பார்த்தபடி யோசிக்க ஆரம்பிச்சு அப்பிடியே தூங்கிப்போனேன். அப்போ கனவிலே விருந்தூர் மன்னர் சோத்துச்சக்கரவர்த்தியின்அமைச்சர் பருப்பு தோன்றி அதன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.

"முன்னொரு காலத்தில விருந்தூர் என்ற நாட்டை சோத்துச்சக்கரவர்த்தி என்ற ராஜா ஆட்சி செய்து வந்தார். அவரின் ஆட்சியின் கீழ் உழுந்தூர், பருப்பூர் என்று இரண்டு ஊர்கள் இருந்திச்சாம். அந்த ரெண்டு ஊர்க்காரர்களும் பாயாசூர், கடலையூர்க்காரர்கள் எல்லாரும் மூக்குமேல விரலை வைக்கிற அளவுக்கு ஒற்றுமையா, ரொம்ப சந்தோஷமா மற்ற இருந்து வந்தாங்களாம். தங்களுக்குள்ள போட்டி பொறாமையே வரக்கூடாது எண்டதுக்காக எந்தப்போட்டியா இருந்தாலும் இரண்டு ஊரும் சமமாவே மார்க் வாங்கிறதெண்டு முடிவெடுத்து, அதையே கடைப்பிடிச்சு வந்தாங்களாம்.

ஒருநாள் விருந்தூர் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு போட்டி ஒன்று வைக்கப்பொவதாக அறிவிச்சாங்களாம். அதாவது மன்னரின் பிறந்தநாளுக்குயார் சிறந்த தின்பண்டம் செய்து கொண்டு வந்து தாறாங்களோ, அவங்களுக்கு "ஆண்டின் சிறந்த தின்பண்டி" என்ற பட்டம் குடுப்பதாக சொன்னாங்களாம்.

போட்டிதினத்தன்று அனைவரும் மைதானத்தில் கூடியிருந்தாங்களாம். அப்ப போட்டி ஆரம்பிச்சது. உழுந்தூர்க்காரர்களும், பருப்பூர்க்காரர்களும் மும்முரமாப் போட்டியில் கலந்து தங்கள் தின்பண்டங்களைச் தயாரிக்க ஆரம்பிச்சாங்களாம். முதலில் செய்து முடிக்கிறவங்களுக்கு போனஸ் பொயின்ஸ் கிடைக்கும் என்று தீடீரென மன்னர் அறிவிக்க, உடனடியா உழுந்தூர்க்காரர்கள், "எனக்குத்தான்.. எனக்குத்தான்.. இந்தாங்க உழுந்து வடை" என்று சத்தமாச் சொல்லிட்டு உழுந்துவடையை எடுத்திட்டு மன்னரிடம் போனாங்களாம்.

உடனே சாக்கான பருப்பூர்க்காரனுகள், என்னடா இது என்று பார்க்க, வழக்கம்போல ஒரே மாதிரி வடை சுட்டு இரண்டு பேரும் பரிசைப் பகிர்ந்துக்கலாம் என்ற கொள்ளையை மீறி உழுந்தார்க்காரனுகள் கிரியேட்டிவிட்டியாக யோசிச்சு உழுந்து வடையில் ஓட்டை போட்டு அதன் தொடு மேற்பரப்பைக் கூட்டி சீக்கிரமா வடையைப் பொரிய வச்சு ஜெயித்து தூரோகம் செய்ததால், அன்றிலிருந்து உழுந்தூர்க்காரனுகளை எதிர்க்கும் நோக்கில் பருப்புவடையில் ஓட்டை போடுவதில்லையாம்"

என்று அமைச்சர் பருப்பு சொல்லிமுடிக்க, எங்கேயோ கருகிற வாசனை வர திடுக்கிட்டு எழுந்து பார்த்தா அடுப்பில் ஆசைஆசையாய் உழுந்து வடை சுட்டுச் சாப்பிடலாம் என்ற எனது நினைப்பில் பாழாய்ப்போன அடுப்பு அதிகமாய் எரிந்து வடையை கருக்கி எனது வயிற்றில் மண்ணைப் போட்டிருந்தது.

"ஐயோ வடபோச்சே...."

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. சுடுசோடு!
    சூப்பர் கிரியேட்டிவிட்டி பதிவு

  1. Follow up comments

  1. Unknown Says:

    //தொடு மேற்பரப்பைக் கூட்டி சீக்கிரமா வடையைப் பொரிய வச்சு //
    பௌதிகவியல் அண்ணா நல்லா படிச்சுருக்காரு
    அருமயான சிந்தனை பதிவு

  1. ஐயோ எனக்கு வடையும் இல்ல இட்டலியும் இல்ல!!!

  1. /////"ஐயோ வடபோச்சே...."/////

    அடடா குஞ்சுத் தெய்வத் திருமகன் சொன்ன கதையா சூசூசூப்பர்..

  1. ஃஃஃஃவதீஸ்-Vathees said...
    சுடுசோடு!
    ஃஃஃஃஃ

    அண்ணரே சுடு சோறு திண்டு எம்புட்டு நாளாச்சு....

  1. ஃஃஃஃஃதொடு மேற்பரப்பைக் கூட்டி ஃஃஃஃ

    இது தான் பரப்பு கூட கூட தாக்க வீதம் கூடும் என படிச்சதோ அடடா இது நகைச்சுவைப் பதிவில்லையே... அறிவியல் பதிவல்லவா..

  1. Unknown Says:

    ம்ம்...வட கதை அருமை...!! பருப்பு வடையும் உழுந்து வடையும் சாப்பிட்ட மாதிரி ஒரு பீலிங்...!!

  1. sinmajan Says:

    ஆஹா..அருமை..அபாரம்.. கிறியேட்டிவிட்டியின் உச்சம் ;-)

  1. //"ஐயோ வடபோச்சே...."//

    அய்ய, வட சுடுகிற நேரத்தில "மல்லாக்கப்படுத்துகிட்டு விட்டத்தைப் பார்த்தபடி யோசிக்க ஆரம்பிச்சு அப்பிடியே தூங்கிப்" போயிட்டு அப்புறம் விழிச்சி "வடபோச்சே" இனு ஆற்றாமை வேறா? - ளொள்

  1. தொடு மேற்பரப்பும் ஒரு காரணம். cohesiveness(ஒட்டும் தன்மை)ம் ஒரு காரணம். பருப்பு வடையில் ஓட்டை போட்டால் உதிர்ந்து விடும். உங்களது நியூட்டனின் முதல் விதி. என்னுடையது இரண்டாவது விதி.

  1. ஆஹா ஆஹா அருமையான பயனுள்ள தகவல்
    தொடருங்கள் ........

  1. ஆஹா ஆஹா அருமையான பயனுள்ள தகவல்
    தொடருங்கள் ........

  1. என் வருகையைப் பதிவு செய்கின்றேன்.

    பவன் வாடா நானும் நீயும் மாறிமாறிப் பின்னூட்டம் இட்டு சதமடிப்போம்

  1. ஹஹா...என்ன ஒரு யோசனை...again கலக்கல்..:D

  1. Bavan Says:

    வதீஸ் அண்ணே

    ஆ.. இதுதான் அதுவா.. நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்.:-)

    ***

    அனு,

    :-)

    ***

    M.Shanmugan,

    நான் படித்தேன் எண்டு சொல்லுறது அவமானப்படுத்திறமாதிரி..:P

    நன்றி சண்முகா வருகைக்கும் கருத்துக்கும்..:-)

    ***

    கார்த்தி,

    ஐயோ பாவம்..:P

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.:-)

    ***

    ம.தி.சுதா அண்ணே,

    ஹா.. அதுதானே சுடுசோறு வேணும்ணே நமக்கு..:P

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:-)

  1. Bavan Says:

    லோகேஸ் அண்ணே,

    ஆங்.. நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்.:-)

    ***

    sinmajan,

    ஓ.. அப்ப இதுதான் கிரியேட்டிவிட்டியா?..:P

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:-)

    ***

    சேது ஐயா,

    ஹீ ஹீ.. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துக்கும்..:-)

    ***

    ramalingam,

    ஓஹோ.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:-)

    ***

    அக்கப்போரு,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:-)

    ***

    வந்தியண்ணா,

    அதுக்கென்ன மாம்ஸ், அடிப்போம்..ஹிஹி

    நன்றி மாம்ஸ் வருகைக்கும் கருத்துக்கும்..:-)

    ***

    அபிவர்ஷா,

    நன்றி அக்கா வருகைக்கும் கருத்துக்கும்..:-)

  1. அய்... சுடுவடை... நல்லாருக்கு...

  1. :)

    //பவன் வாடா நானும் நீயும் மாறிமாறிப் பின்னூட்டம் இட்டு சதமடிப்போம்
    //
    இது நல்ல ஐடியாவே இருக்கே ;)

  1. சூப்பர் கிரியேட்டிவிட்டி பதிவு

  1. ராமலிங்கம் சார் சொன்னதும் கரெக்டான காரணம் தான்!(வடை சுட்டிருக்கார் போல!)அத்துடன் வேகும் வேகம் ஓட்டையில்லாத வடைக்கு அதிகம்!(நானும் சுட்டிருக்கனாக்கும்!)

  1. :-)))

  1. :-)))))))))))))))))

  1. ஓட்டை வடை உழுந்துப் பருப்பில் சுடப்படுகிறது!பருப்பு வடை கடலைப் பருப்பில் சுடப்படுகிறது!ஓட்டை வடைக்கு பருப்பை நன்றாக நைசாக வரும் வரை அரைக்க வேண்டும்!அப்போது தான்"ஓட்டை"போட முடியும்!பருப்பு வடைக்கு கடலைப்பருப்பை அரைப் பதமாக அரைத்தால் போதுமானது!முக்கியமாக இரு வகை வடைகளையும் சுடுவதற்கு எண்ணெய் மற்றும் அடுப்பு முக்கியம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!போதுமா டீட்டெயிலு??????????????

  1. =))))

  1. மன்னிக்கணும்,முக்கியமான ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்:உழுந்து வடை பெரிதாக செய்தால் "ஓட்டை" போட சுலபமாக இருக்கும்!சின்ன சைஸ் என்றால் கஷ்டம்!

  1. Bavan Says:

    @அஷ்வின் - நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:-))

    ***

    @லோஷன் அண்ணா - :D நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:-))

    ***

    @சதீஷ் அண்ணா - வாவ் சூப்பர் கிரியேட்டிவிட்டி பின்னூட்டம்..:P

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:-))

    ***

    @Yoga.s.FR - அப்பப்பா.. நீங்க வடை சுடுவதில் டிகிரி முடிச்சிருப்பீங்க போல இருக்கே..:P

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:-))

    ***

    @கன்கொன் - :-))

    ***

    @துளசிகோபால் - :-))

    ***

    @வானம்பாடிகள் சார் - :-))

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்