Related Posts with Thumbnails
அண்மைக்காலமாக வெளிவரும், வெளிவரப்போகும் சூப்பர்ரான திரைப்படங்களிலிருந்து மக்களையும், தியட்டரையும் பாதுகாக்க சில வழிகள்.....ஹீ.....ஹீ....ஹீ....


 படம் ஆரம்பிக்க முதல் இப்படி அறிவித்தல் போடலாம்.........






தியட்டர் போகும் வழியில் இப்படி எச்சரிக்கை போர்டுகளை வைக்கலாம்......




ஏற்கனவே படம் பார்த்தவர்களின் நிலை பற்றி எச்சரிக்கை போர்டுகளை தியட்டரின் வாசலில் போடலாம்.........



படம் பார்த்து ஆம்புலன்ஸ் முலம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டோர் பற்றிய விபரத்தை இப்படி chart போட்டு காட்டலாம் .....





படம் பார்க்க வருவோரின் கைகளை கட்டி உள்ளே அனுப்பலாம்(தியட்டேர் சேதமாவதை தடுக்க.....)





 படம் பார்க்க கூட்டம் வர முன்னரே House Full board வைக்கலாம்




படம் பார்க்க வந்தவர்களின் ஆதி முதல் அந்தம் வரையான reactionsகளை மக்கள் பார்க்கும் படியாக வைக்கலாம் ....



தியட்டருக்குள் பாதணிகளுடன் செல்ல தடை விதிக்கலாம் (இதுவும் தியட்டரின் பாதுகாப்புக்கு)......


*******************************************************************************


மேலும் சில போட்டோ காமண்டுகள் உங்களுக்காக................









தென்பாண்டி சீமையில..... தேரோடும் வீதியிலே மான் போல வந்தவனே யார் அடிச்சாரோ....யார் அடிச்சாரோ....






இது எப்புடி ???

பதிவிட்டவர் Bavan | நேரம் 12:19 AM | 15 பின்னூட்டங்கள்































நன்றாக கூர்ந்து பாருங்கள் ................
























 இந்தியாவின் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து படம் ஆரம்பிக்கிறது, அதன் பின்னர் NCC campingஇற்காக வரும் கல்லூரி பெண்களின் காலாட்டாவுடன் படத்தின் கதை இனிதே தொடங்குகிறது. ஆரம்பத்தில் மிகவும் கலகலப்பாக ஆரம்பித்த படம் போகப்போக விறுவிறுப்பை எட்டுகிறது.


துருவன்(ஜெயம் ரவி), பழங்குடி இனத்தை சேர்ந்தவர், அப்பழங்குடி இனத்தில் இருந்தும் படித்து Forest officer ஆனவர்.வரும் மாணவிகளுக்கு Trainer ஆக நியமிக்கப்படுகிறார், மிகவும் கண்டிப்பான ஒரு Trainer காணப்படும் துருவன், மாணவிகளுக்கு ஆரம்பம் முதலே அவர் வழங்கும் தண்டனைகள் மற்றும் அவரின் இனம் காரணமாக அவர்களால் வெறுக்கப்படுகிறார்.


திரு.கணபதிராம், ஜெயம்ரவியின் உயர்அதிகாரி, இவர் நல்லவர் போல காட்டப்பட்டாலும் துருவனை(ஜெயம் ரவி) அவரின் இனத்தை காரணம் காட்டி அவமானப்படுத்துவதை ஆங்காகே காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.



இடைஇடையே வரும் வடிவேலு வழக்கம் போல தன் கடமையை சிறப்பாக செய்து கைதட்டல் பெறுகிறார்.


Training வந்த மாணவிகளில் காட்டுக்குள் செல்வதக்கு 5 மாணவிகள் தெரிவு செய்யப்படுகின்றனர், அவர்களின் காட்டுப்பயணத்தில்தான் கதை சூடு பிடிக்கிறது.

மாணவிகளின் குளறுபடியால் காட்டிலிருந்து திரும்பி வரமுடியாமல் ஒரு நாள் இரவை காட்டுக்குள் கழிக்க நேரிடும் இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும், நாட்டுக்கு வரும் பிரச்சனைகளை அவர்கள் எவ்வாறு எதிர்நோக்கி வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் கதை. இயக்குனர் logicஇற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளது பாராட்டத்தக்கது.
காட்டுக்குள் நடக்கும் சம்பவங்களை விமர்சனத்தில் வாசிப்பதை விட படத்தில் பார்ப்பது சிறப்பாக இருக்கும். மற்றபடி குறை என்று இப்படத்தில் ஒன்றும் கூற முடியாது. அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு சிறந்த படம்.











ஹர்பஜன் சிங் மீது சில குற்றங்கள் சுமத்தப்படுகின்றன, அப்போது அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு பராஷக்தி சிவாஜி கணேஷன் மாதிரி பதிலளித்திருந்தால் எப்படி என்று ஒரு சின்ன கற்பனை...........



நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக அடி வாங்கும் பவுலர்களில் நானும் ஒருவன்.. 50 ஓவர் போட்டியில் அதிக ரன் குடுத்தேன்.. எதிர் அணி வீரரை பார்த்து குரங்கு என்று சொன்னேன்.. எனது அணி வீரருக்கே கன்னத்தில் அறைந்தேன்.. குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்..  


ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை... 


50 ஓவர் போட்டியில் அதிக ரன் குடுத்தேன்.. ஏன்??? நமது அணி தோற்று போக வேண்டும் என்ற இல்லை.. துடுப்பாட்ட வீரர்களை குறை சொல்லும் இந்த இந்த சமுதாயம், பந்துவீச்சாளர்களையும் குறை சொல்ல வேண்டும் என்பதக்காக..


எதிர் அணி வீரரை பார்த்து குரங்கு என்று சொன்னேன்.. ஏன்..?? அவன் என்னை விட வடிவாக இருக்கிறான் என்றா இல்லை.. அவன் ஸ்டைல் என்ற பெயரில் அவன் மண்டையில் போட்டு இருக்கும் கொண்டையை கழட்டுவதக்காக...


எனது அணி வீரருக்கே கன்னத்தில் அறைந்தேன்..ஏன்??? அவன் என்னை விட நன்றாக பந்து வீசுகிறான் என்பதக்காகவா....இல்லை அவன் நன்றாக பௌலிங் செய்கிறான் என்று மக்கள் அவன் மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கை வீணாகக்கூடாது என்பதக்காக....


உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..


நானே அடி வாங்கினேன், நேரடியாக அடி வாங்கினேன், எனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது,என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...


நான் ஒரு maiden ஓவர் கூட செய்ததில்லை ஆனால் ஆறு பந்துகளுக்கு ஆறு sixerகள் குடுத்திருக்கிறேன்..
நான் ஒரு விக்கெட் கூட எடுத்ததில்லை, ஆனால் போட்டி முடிந்ததும் விக்கெட் ஐ ஆட்டையை போட்டு வந்திருக்கிறேன்..


கேளுங்கள் என் கதையை, என்னை அணியை விட்டு தூக்குவதக்கு முன் தயவு செய்து கேளுங்கள்..
இந்தியாவிலே பஞ்சாபிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், கிரிக்கெட் வீரர்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா???
ஜலந்தர் இல் பிறந்த நான், முதல் போட்டியில் விளையாட பெங்களூருக்கு ஒடோடிவந்தேன்,
பந்து என்னை போடவென்று என்றது...
சுழட்டி சுழட்டி நான் போட்ட பந்து பறந்து பறந்து வெளியே போய் விழுந்தது


என் பெயரோ ஹர்பஜன் சிங், கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.
ஆனால் என் பந்துக்கு அடிக்காத வீரர்களே கிடையாது
நான் மட்டும் நினைத்து இருந்தால் கிரிக்கெட்டே விளையாட வராமல் இருந்திருக்கலாம், ஏதாவது ஒரு மட்டமான படத்தில் நடித்து ஹீரோ ஆகி இருக்கலாம், விளம்பரம், மாடலிங் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.
ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த கிரிக்கெட் உலகம்,


50 ஓவர் போட்டியில் அடி அடியென அடித்தார்கள்.... ஓடினேன்...
ஆஸ்திரேலியாகாரன் ஒருவன் என்னை பார்த்து குரங்கு என்றான்.... ஓடினேன்
நேற்று வந்த சின்ன பொடியன் என் பந்து வீச்சுக்கு வேட்டு வைத்தான்...... ஓடினேன்
ஓடினேன் ஓடினேன்....


அவுஸ்திரேலியாவில் ஓடினேன் நியூசிலாந்திலும் ஓடினேன் தென்னாபிரிக்கவிலும் ஓடினேன்
ஏன் மேற்கிந்தியாவிலும் ஓடினேன்...


ஓடினேன் ஓடினேன்...... எல்லா நாட்டிலும் Boundary எல்லை வரை ஓடினேன்...
பந்தை தடுக்க முடியாததால் திரும்பி வந்து விட்டேன்.


என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும், வாட்டத்தை போக்கி இருக்க வேண்டும், என்னை அணியில் இருந்து தூக்கி இருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.


செய்தார்களா பௌலிங் செய்ய விட்டார்களா இந்த ஹர்பஜன்சிங்ஐ, எனது பந்துக்கு போடப்போட அடித்து யார் குற்றம்?? பந்தின் குற்றாமா? பந்தை ஒழுங்காய் அடிதுப்பின்னிய Batsman குற்றமா??


எதிரணி வீரர்களை குரங்கு என்று சொல்ல விட்டு வேடிக்கை பார்த்து யார் குற்றம்?? குரங்கு போல மேக்கப் போட்டு வரும் வீரர்களின் குற்றமா? ஸ்டைல் என்ற பெயரில் மேக்கப் போடும் குரங்கர்களை குற்றமா?


எனது அணி வீரருக்கே கன்னத்தில் அறைந்தது யார் குற்றம், என்னை போலவே கேவலமாக பந்து வீசும் அவனின் குற்றமா? இல்லை அவனின் பந்துகளையும் அடித்து நொறுக்கும் எதிரணியின் குற்றமா??


இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில், என்னை போன்ற ஹர்பஜன்சிங்க்குகள், அடிவாங்கும் பவுலர்களாகத்தான் உருவாகிக்கொண்டுதான் இருப்பார்கள்.




















































Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்