இந்தியாவின் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து படம் ஆரம்பிக்கிறது, அதன் பின்னர் NCC campingஇற்காக வரும் கல்லூரி பெண்களின் காலாட்டாவுடன் படத்தின் கதை இனிதே தொடங்குகிறது. ஆரம்பத்தில் மிகவும் கலகலப்பாக ஆரம்பித்த படம் போகப்போக விறுவிறுப்பை எட்டுகிறது.
துருவன்(ஜெயம் ரவி), பழங்குடி இனத்தை சேர்ந்தவர், அப்பழங்குடி இனத்தில் இருந்தும் படித்து Forest officer ஆனவர்.வரும் மாணவிகளுக்கு Trainer ஆக நியமிக்கப்படுகிறார், மிகவும் கண்டிப்பான ஒரு Trainer காணப்படும் துருவன், மாணவிகளுக்கு ஆரம்பம் முதலே அவர் வழங்கும் தண்டனைகள் மற்றும் அவரின் இனம் காரணமாக அவர்களால் வெறுக்கப்படுகிறார்.
திரு.கணபதிராம், ஜெயம்ரவியின் உயர்அதிகாரி, இவர் நல்லவர் போல காட்டப்பட்டாலும் துருவனை(ஜெயம் ரவி) அவரின் இனத்தை காரணம் காட்டி அவமானப்படுத்துவதை ஆங்காகே காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பார்தாச்சுங்க!!!!!!!!! நல்ல படமுங்க!!!!!!!!!!!