அன்று 11 மணி இருக்கும் இடைவேளை நேரம், அனேகமாக எங்கள் பாடசாலையில் வாரம் ஒருமுறையாவது இடைவேளை நேரம் ஆசிரியர் கூட்டம் நடைபெறும், சில நேரங்களில் அக்கூட்டம் இடைவேளையின் பின்னர் வரும் 2,3 பாடவேளைகளையும் தின்றுவிடுவதுண்டு.
அன்றும் அப்படிதான் திடீரென ஒரு செய்தி "நம்ம பொடியங்களுக்கு அடிசுட்டானுங்கடா" 2010 ம் ஆண்டு மாணவர்களால் (நாங்கள் 2009 batch) எமது மாணவர்களில் ஒருவன் தாக்கப்பட்டு இருந்தான். அவன் யார் என்று கூட எங்களுக்கு சரியாக தெரியாது.
3வது மாடியில் இருக்கும் அவர்களின் வகுப்பறைக்கு விரைந்தோம், எங்களுக்கு முதலே எங்கள் படை அங்கெ நின்றிருந்தது
. அங்கே சமரசம் இடம்பெற்றுக்கொண்டு இருந்தது. காரியத்தை கெடுத்துவிடககூடாதென்று அமைதியாக நின்றோம். திடீரென கதைத்துக்கொண்டு இருந்த இடத்தில அறை விழும் ஓசை, அவர்களின் மாணவர் படையும் திரண்டது, நாங்கள் அவர்களை அடிஅடியென அடித்து பின்னிவிட்டு ஆசிரியர் கூட்டம் முடிந்துவிடுமோ என்ற பயத்தில் வேகமாக வகுப்புக்கு திரும்பினோம்.
அங்கு வந்ததும் நமது 3 வகுப்புகளும் இணைந்து ஒரு கூட்டம் போட்டோம். அவ்வளவு சீக்கரமாக எதிர் தாக்குதல் வரும் என்று நாங்கள் நினைக்கவில்லை, அவர்களுக்கும் எங்களுக்கும் மீண்டும் ஒரு சண்டை........ என்ன அடி... உதை... குத்து.....
நாம் யாருக்கு அடித்தோம் என்றே கூற முடியாது.
நாங்கள் அடித்த அடியில் அவர்கள் தாக்கு பிடிக்க
முடியாமல் ஓடி விட்டார்கள். (உண்மையில் ஆசிரியர்
கூட்டம் முடிந்திருக்கும் என்று நினைத்து ஓடி இருப்பார்கள்
போலும்)நாங்கள் அப்படி கூறி பெருமைபட்டுக்கொண்டோம்.
போலும்)நாங்கள் அப்படி கூறி பெருமைபட்டுக்கொண்டோம்.
ஆசிரியர் கூட்டம் முடிந்தது, எங்களுக்கு தெரியும்
விசாரணை கமிசன் வரும் என்று.. ஆசிரியர்கள் கேட்டால்
என்ன சொல்வது என்று கூட பேசி வைத்துவிட்டோம் .
ஆசிரியர் வந்தார் அவருக்கே உரித்தான ஆஸ்தான
இருக்கையில்அமர்துகொண்டார், "உங்களை நல்ல வகுப்பு
எண்டு நினைச்சன்இப்படிபண்ணிடீங்கலீடா ... ச்சா....
ஆசிரியர் வந்தார் அவருக்கே உரித்தான ஆஸ்தான
இருக்கையில்அமர்துகொண்டார், "உங்களை நல்ல வகுப்பு
எண்டு நினைச்சன்இப்படிபண்ணிடீங்கலீடா ... ச்சா....
யார்யார் அடிச்சது ??"
என்று கேட்டார். நாங்கள் அனைவருமே எழுந்து நின்றோம்.
என்று கேட்டார். நாங்கள் அனைவருமே எழுந்து நின்றோம்.
இங்கு இப்படியாக விசாரணை நடந்துகொண்டு இருந்தபோது
விசியம் அதிபரின் காதுக்கு எட்டி விட்டது. ஒலிவாங்கியில்
ஒரு அறிவிப்பு "12 ம்13 ம் தர மாணவர்கள் பாடசாலை முடிய
அதிபரை சந்தித்து விட்டு செல்லவும்." இது நாங்கள்
எதிர்பார்த்ததுதான்.
விசியம் அதிபரின் காதுக்கு எட்டி விட்டது. ஒலிவாங்கியில்
ஒரு அறிவிப்பு "12 ம்13 ம் தர மாணவர்கள் பாடசாலை முடிய
அதிபரை சந்தித்து விட்டு செல்லவும்." இது நாங்கள்
எதிர்பார்த்ததுதான்.
பிறகென்ன பாடசாலை முடிந்ததும் அதிபர் தனது
வழமையான அறிவுரைகளை கூறி விட்டு பிரச்சனையில்
சம்பந்தப்பட்டவர்களை ஒருவாறு கண்டு பிடித்துவிட்டு
எங்களை வீடுக்கு போக சொன்னார்.
வழமையான அறிவுரைகளை கூறி விட்டு பிரச்சனையில்
சம்பந்தப்பட்டவர்களை ஒருவாறு கண்டு பிடித்துவிட்டு
எங்களை வீடுக்கு போக சொன்னார்.
பின்குறிப்பு : என்னதான் அவர் எங்களை மன்னித்திருந்தாலும்
பாடசாலைக்கு வெளியே மீண்டும் எங்கள் அடிக்கும்
கடமையைசெய்துவிட்டு
வீட்டுக்கு escape ஆனோம். ஹா.... ஹா.....
பாடசாலைக்கு வெளியே மீண்டும் எங்கள் அடிக்கும்
கடமையைசெய்துவிட்டு
வீட்டுக்கு escape ஆனோம். ஹா.... ஹா.....
machan sanda ean vanthuthu endu solama vidudijeda...........
adicha nama pasanga, adipada avanga pasanga pathi enum soli irukalam
namavithyapaty,niroshan,shangarda metavi thanm pathi sola ilaye,,,,,,,,,