நான் கொழும்பில் படித்துக்கொண்டு இருந்தா நேரம், நாங்கள் படித்துக்கொண்டு இருந்த தனியார் கல்வி நிலையத்தால் சீகிரியாவிக்கு ஒரு சுற்றுலா ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. காலையில் 5 மணிக்கும் 2 busகளில் ஒரு 100பேர் புறப்பட்டோம்
காலை 10.30, 11.00 மணி இருக்கும் சீகிரியாவை அடைந்து விட்டோம். பகல் உணவுக்கு அங்கு இருந்த ஒரு பிரபலமான Hotelலில் 100பேருக்கு பகல் உணவு வேண்டும் என்று orderசெய்து விட்டு சீகிரியாவை நோக்கி விரைந்தோம்.
அன்று மழை நாள் வேறு ஒருவாறு சீகிரியாவை சுற்றி பார்த்து விட்டு busஇற்கு திரும்பினோம் எங்களுக்கோ மழை ஏறிய களைப்புடன் சரியான பசி வேறு, அடுத்த கட்டம் Hotelஇற்கு விரைந்தோம்.
ஆனால் அங்கு சென்று சாப்பிட சென்றால் எங்களில் 15,20 பேரிக்கு சாப்பாடு இல்லை.Hotel முகாமையாளரை கேட்ட போதுஅவர் பட்டும் படாமல் பதிலளித்தார். எமக்கோ செம கடுப்பு......
எங்களிக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் எல்லாரும் Univercityஇல் படித்துக்கொண்டு எங்களிக்கு கற்பிப்பவர்கள், அவர்களுடன் நாங்கள் ஒரு நண்பன் போலதான் பழகுவது வழக்கம், சாப்பாடு இல்லாத நாங்கள் எல்லாரும் Hotel வாயிலில் cricket விளையாடிக்கொண்டு இருந்தோம்.
சற்று களைபுற்றவுடன் கூடி கதைத்துக்கொண்டு இருந்தவேளை, Hotel வாயிலில் அடுக்கி வைக்கபட்டிருந்த Soda களை கண்டோம், எமது நரி புத்தி வேலை செய்ய தொடங்கியது.
ம்ம் ஆரம்பிதோம் ஆட்டையை போட ஒவ்வொரு sodaகளும் எமது busஇற்குள் வந்து சேர்ந்தது.(ஆசிரியர்களில் துணையும் கூட)
ஒருவாறு ஏழு 1.5 l sodaகளை கொண்டு வந்து சேர்த்தோம்.அதன் பின்பு அனைவரும் சாப்பிட்டு முடிந்து Busஇல் ஏறினார்கள், hotel ல் கூட்டம் குறைந்தவுடன் hotelகாரர்கள் கண்டு பிடித்து விட்டார்கள், ஆனால் எமக்கு அவர்கள் முழுமையாக சாப்பாடு தராததால் நாங்களும் ஒருவாறு வாதாடி Escape ஆகிவிட்டோம்.
ஆனால் எங்களுக்கு ஒரேஒரு கவலை.........
நாங்கள் ஆட்டையை போட்ட ஏழு sodaக்களில் இரண்டு soda expiry date முடிந்து இருந்தது. ஹா..ஹா...
Tweet
நல்லா இருங்கப்பு. வேற என்னத்தைச் சொல்ல?