Related Posts with Thumbnails
நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு கட்டத்தில் நகைச்சுவையாக "உன்னைக் காலில் விழ வைக்கிறன் பாருடா" என்று சொன்னார். அந்த நேரத்தில் மனிதர்கள் சாதி வித்தியாசம் பார்ப்பதை அவர்களால் திடீரென ஏன் விட்டுவிட முடியாமல் இருக்கிறது? என்ன காரணம்? என்று ஒரு விடயம் மனதில் தோன்றியது.

அதாவது பிறக்கும் போது கடவுள் என்றோ, மூடநம்பிக்கைகளுடனோ, சாதி வெறியுடனோ ஒரு குழந்தையும் பிறப்பதில்லை. பிறந்த பின்னர் அது வளரும் சூழல்தான் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதை ஒரு கட்டத்துக்கு மேல் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்த பின்னரும் ஒரு மனிதனால் மாற்றவோ விட்டுக் கொடுக்கவோ முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம்?

ஒரு மனிதனின் உடலை 3 பகுதிகளை எடுத்துக் கொள்ளுவோம். கால், கை மற்றும் தலை. இந்த 3 பகுதிகளிடம் நாம் காட்டும் பாகுபாடுதான் இன்றைய சாதிக் கட்டமைப்பின் அடிப்படையாக விளங்குகிறது.

இதைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்த்தால், கால்தான் உடலின் மற்றப்பகுதிகளையும் சேர்த்து ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்கிறது. கைகள்தான் பொருட்களைத் தூக்குதல் எழுதுதல் போன்ற செயற்பாடுகளுக்கு உதவுகிறது. தலை(மூளை) அனைத்துப் பகுதிகளுக்கும் கட்டளை வழங்கிவிட்டுப் பேசாமலிருக்கிறது. உதாரணமாகப் பார்த்தால் தெரியாமல் யார்மீதாவது கால் பட்டுவிட்டால் உடனே மன்னிப்புக் கேட்கிறோம், ஆனால் கை பட்டால் கேட்பதில்லை.

அதாவது உயர்ந்த தரமாக இருந்தால் அவருக்குக் கீழ்ப்படிந்து மற்றவர்கள் நடக்க வேண்டும், மத்திய தரமாக இருந்தால் உயர் தரத்துக்குக் மட்டும் கீழ்ப்படிய வேண்டும், தாழ்ந்தவர் உயர்ந்த, மத்திய தரங்களைத் மதிக்க வேண்டும், கீழ்ப்படிய வேண்டும். ஆக சாதிப்பிரிவினை மனிதர்களிடையே மட்டுமல்ல ஒவ்வொரு தனி மனிதனின் உறுப்புகளுக்கிடையே கூடக் காணப்படுகிறது அல்லது அப்படி நம்மையறியாமலே சிறுவயதிலிருந்து பிழையான வழிகாட்டலில் வளர்ந்துவிட்டோம்.

ஆனால் மனிதர்களுக்கு சில விடயங்கள் புரிவதில்லை,உடல் முழுவதும் ஓடும் குருதி, நரம்புகள், எலும்புகள் அனைத்தும் ஒவ்வொரு உறுப்புக்கும் தேவைக்கேற்றாற் போல பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சாதி சாதி என்று கையையோ காலையோ வெட்டிவிட்டாலும் உயிருடன் வாழலாம் ஆனால் காலையும் கையையும் வெட்டி வைத்துவிட்டு தலையை மட்டும் வெட்டிக் விட்டால் உடல் செத்துப் போய்விடும்.

அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது உடல் இயங்குவதற்காக வேலைகளைச் செய்யும் கையும் காலும் ஒதுக்கி வைக்கப்படுகிறது, ஆனால் கையோ காலோ சரி நாங்கள் உன்னுடன் வரவில்லை என்று தலையை வெட்டிவிட்டால் உடல் சாக வேண்டியதுதான். உடல் சாகக் கூடாது என்பதற்காக கையும் காலும் அமைதியாக இருக்கிறதே தவிர தலைக்குப் பயந்து இல்லை என்பதை உணர்வதில்லை.

தலையே போகிற விடயமென்றாலும் சாதிதான் முக்கியம் என்பார்கள், ஒருநாள் தலையை வெட்டி எறிந்து பாருங்கள்!

பாலைவனப் புயல்!

பதிவிட்டவர் Bavan | நேரம் 10:40 PM | 9 பின்னூட்டங்கள்




திடீரெனத் தரித்து நிற்கிறேன்
காலச்சக்கரம் வேகமாக ஓடிவருகிறது
பாலைவனங்களுக்குள் பழரசத்தைக் கண்டது மாதிரி
மனதுக்குள் ஒரு பூகம்பம்

திடீரெனப் பெய்த மழையால்
மனது குளிர்ந்து
பிரவாகம் கண்களை முட்டி
வெளியேறத் துடிக்கிறது

அதே நான்கு கண்கள்
அதே பழைய இடம்
ஏக்கமும் தவிப்பும்
பதற்றமும் கொஞ்சம் புதுமையாய்

பள்ளத்தில் வழிந்தோடிய
வருடங்களை துரத்திக் கொண்டு - நாம்
வேகமாக ஓடிச் சேர்ந்த இடத்தில்
மௌனங்கள் மட்டும் துளிர்விட்ட
அழகிய வரலாறு
இன்னும் பசுமையாகவே இருக்கிறது

மௌனங்கள் மட்டும் பேசிக்கொள்ளட்டும்
நீ நினைப்பதைக் காற்று மொழிபெயர்க்கட்டும்
தென்றலோ புயலோ எதுவாயிருப்பினும்
என்னை நேரடியாகத் தாக்கட்டும்

என் மீசைக்கும்
உன் முகப்பரு வந்த வடுவிற்கும்
நாங்கள் பேசிக்கொள்ளும்
மௌன வரலாற்றுக்கும் ஒரே வயது
என்பது உனக்குத் தெரியுமா?

தென்றலால் மேகங்களை திசைமாற்ற முடியாது
திடீரென அடித்த புயல்தான் சூத்திரதாரி
பிரிந்த பிறகு ஊமையாகிப் போனவர்கள்
புன்னகையை மட்டும் முகமூடியாக்கக்
கற்றுக் கொண்ட பின்னர் சந்திக்கிறோம்

ஒவ்வொரு புன்னகையின் பின்னரும்
ஒரு நீண்ட பெரூமூச்சு
ஒவ்வொரு பெருமூச்சின் பின்னரும்
ஆழ் மனதை அடைக்கும் ஒரு கனம்

இன்னும் 
உலகப்போரையும் நிறுத்திவிடக்கூடிய
அதே புன்னகையுடன்தான் இருக்கிறாய்  - ஆனால்
அழகியிலிருந்து தேவதையாகப்
பதவி உயர்த்தப்பட்டிருக்கிறாய்

வ‌லமொன்றும் இடமொன்றுமாய்
முந்தானை பிடித்த‍படி - உன்னைப்
பற்றி நிற்கும் பட்டாம் பூச்சிகள்
முன் முடியில் எட்டிப்பார்க்கும்
வெள்ளைக் கிரீடம் 
ஆம், தேவதைகளின் தேவதை நீ

புதிதாய்ப் பூசிக்கொண்ட புன்னகையுடன்
கண்கள் நான்கும் சந்தித்த‍தில்
என் கண்ணீரை திரைபோட விட்டுக்
கடந்து போகிறாய் நீ

தொட்டுப் பார்க்கும் கனதியில்
ந‌மக்குள் இருக்கும் அதே மௌனம்
என் இதயத் துடிப்பின் ஓசையில்
முதன்முறையாகக் கரைந்து போகின்றது
தென்றலை விடவும் புயல் வேகமானது
புயல்களை நம்பியபடி
புரிந்து கொண்டு பிரிகிறேன்
பாலைவனப் பூகம்பங்கள் 
பசுமையை ஏற்படுத்திவிடுவதில்லை
அங்கேயும்
வலிகளும் வடுக்க‍ளும்தான்!







Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்