கிறிக்கட் அனலிஸ்ட், குட்டி கிறிக்கின்ஃபோ, பீப்பீ, தொழிநுட்பப்புலி என்றெல்லாம் பல பெயர்களுக்கு சொந்தக்காரர் தான் இந்த கோபிகிருஷ்ணா. ஆனால் அண்மைக்காலமாக இவரின் பீப்பீ என்ற பெயர் இவரின் நட்பு வட்டாரத்திற்கு பரலாக அனைவருக்கும் பிடித்துப்போனதுக்கு ஏதோ ஒரு சம்பவம் தான் காரணமாம். அதை நாமறியோம்.
இவருக்கும் உருவத்திற்கும் சம்பந்தமே இல்லாதவாறு நேற்றுவரை சொனி எரிக்ஷன் கையடக்கத் தொலைபேசி ஒன்றைப் பாவித்து வந்தவர். இன்றிலிருந்து சம்சாங் கலக்சி வை க்கு மாறியிருப்பதோடு மட்டுமல்லாது சந்திரனையும் இனித்தெளிவாகத் தூரத்திலிருந்தே ஜீம் பண்ணிப் படமெடுப்பேன்டா என்று மயக்கமென்ன கார்த்திக் சுவாமிநாதன் ரேஞ்சுக்கு பில்டப் குடுக்கிறாராம் எங்கள் பீப்பீ.
நகரத்து வாழ்க்கை பிடிக்காமல் போனதால் இவர் விரைவில் கரவெட்டியில் குடியேறப்போவதாகவும் லண்டனிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலமாக ராமராஜன் படங்கள் அதிகம் பார்த்து அந்த ஸ்டைலிலேயே அதிகம் டி-சர்ட்டுகள் அணிந்து திரிகிறாராம். என்ன மாயமோ யார் செய்த காயமோ...
கிறிக்கட் இவரின் இரத்தத்திலேயே ஊறிப்போனது அனைவரும் அறிந்ததே. எனவே இவரின் பிறந்தநாளுக்காக இன்று நடைபெற விருக்கும் கிறிக்கட் போட்டியில் தனது 100வது சதத்தை பெற்றுக்கொள்வார் என்று இவரின் ரசிகர் சங்கத்தின் ஜெயமான நண்பர் கல்லில் கற்பூரம் ஏற்றி வேண்டிக் கொண்டாராம்.
முன்பெல்லாம் மிகவும் கூலாக அம்பி போல் இருந்தவர் இப்போது அந்நியனாக, ரெமோவாக எல்லாம் பல்வேறுபட்ட அவதாரங்கள் எடுக்கிறாராம். திரைப்படம் பார்ப்பதில் நாட்டமே இல்லாத பீப்பீ தற்போது அந்நியன் படத்தை மட்டும் அறுபது தடவைகளுக்கு மேல் பார்த்திருப்பது மட்டுமன்றி சதாசர்வ காலமும் அதைப்பற்றியே பேசித்திரிகிறாராம் என்று இவருடன் அடிக்கடி ருவிட்டரில் ஆங்கிலத்தில் பீட்டர் விடும் விக்கி நண்பர் தெரிவிக்கிறார்.
இத்தனை பெருமைகளும் புகழ்களும் நிறைந்த எங்கள் அருமைப் பீப்பீ, கறுப்புத்தங்கம் கன்கொன் (எ) கோபிகிருஷ்ணா என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறோம்.
பதிவுலக மாமா, சிரட்டை சிங்கம், சொந்த செலிவில் சூனியத்துக்கு சொந்தக்ககாரர், பச்சிளம் பாலகர் சங்கத்தின் நீண்டகால உறுப்பினர் மற்றும் வந்தியானந்தா குருபீடத்தின் தலைமை குரு என்று பல்வேறுபட்ட விடயங்களில் சகலகலா வல்லவனாகத் திகளும் லண்டன் வந்தி அண்ணன் அண்மையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டுள்ளார். இவரின்றி அனுவும் அசையாது, அவரின் பிறந்தநாள் பரிசாக இந்தப்பதிவை இடாவிட்டால் எம் மனமும் சாந்தி அடையாது.
லண்டனில் இருந்து வந்திறங்கியவுடனேயே இட்ஸ் வெர்றி ஹாட்.. சூர்யன் இஸ் கொள்திங்.. என்று அதிகாலை 3 மணிக்கே பீட்டர் விட ஆரம்பித்து. அவரின் பீட்டரில் எங்கள் நடமாடும் கூகிளையே திக்குமுக்காடச் செய்தவர் எங்கள் மாமா.
வெளிநாட சென்று வந்தவர்களில் சிரட்டை மாலை போட்டு வரவேற்கப்பட்ட முதலாவது நபர் என்ற பெருமையைப் பெற்றவர் எங்கள் வந்தி(லண்டன் :P).
லண்டன் ரோட்டுகளுக்கும் எம்நாட்டு ரோட்டுகளுக்கும் இடையிலான வேறுபாட்டை தன் சிஷ்யனுக்கு மிகவும் அழகாக விளக்கி வரலாற்றுப்புத்தகத்திலும், கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்தவர் எங்கள் பச்சிளம் பாலகன்.
எவ்வளவுதான் அடிச்சாலும் தாங்கும் திறன் படைத்த எங்கள் சிங்கத்துக்கு இனிய 16வது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இன்று போல் என்றும் 16வயதுடன் இளமையாக, பச்சிளம் பாலகனாக, சொந்த செலவில் சூனியங்கள் பல வைத்து பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம். :-))
கடந்த 16ம் திகதி யாழ்ப்பாணம் புற்றளை விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற "மறுபடியும் பாரதி" என்ற தலைப்பில் இடம்பெற்ற கவியரங்கில் பங்குபற்றும் ஓர் வாய்ப்புக் கிடைத்தது. எனது கன்னிக் கவியரங்கை யாழில் அரங்கேற்ற வாய்ப்பளித்த தனஞ்சயன்(பதிவர் பால்குடி), ஆதிரை அண்ணா மற்றும் சக பதிவர்கள் லோஷன் அண்ணா, மாலவன் அண்ணா, சுபாங்கன் அண்ணா அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
அன்றைய தினம் நான் படித்த கவிதையை பகிரலாமென இருக்கிறேன்.
கவியரங்கத் தலைவர் லோஷன் அண்ணாவின் ஆரம்பத்தையும், அறிமுகத்தையும் தொடர்ந்து எனது கவிதை அரங்கேறியது.
லோஷன் அண்ணாவின் ஆரம்பக் கவிதையைப் படிக்க இங்கேசொடுக்குங்கள்.
வல்லமை தாராயோ!
(வல்லமை தாராயோ ஒலிவடிவம்)
தாழ் திறந்து தாளெத்து
தோள் சுமந்த பாழ் கழைந்து
கவியெனும் வாள் எடுத்து
வீழ்த்த வழி கொடுத்த
புற்றளை நாயகன் விநாயகனுக்கு
என் சிரந்தாள் வணக்கம்
மிடுக்கு மீசைக்கு
பயங்கலந்த சிறு வணக்கம்
துடுக்கு நடைக்கு
துவளாத பெரு வணக்கம்
தலை காக்கும் பாகைக்கு
தலைதாழ் குரு வணக்கம்
கறுப்பு ஆடைக்கு
கரங்குவிந்த தமிழ் வணக்கம்
பாத்தலைவன் பாரதிக்கு
பண்புடன் ஓர் பா வணக்கம்
முத்தமிழ் மன்னனே - என்
மூத்த அண்ணனே
கவிதையின் கண்ணனே
வெற்றியின் விண்ணனே
விக்கலுக்கும் உனக்கும் நெருங்கிய தொடர்புண்டு
விக்கல் நிற்பதில்லை தண்ணீர் குடிக்கும்வரை
உன் முயற்சி தளர்வதில்லை வெற்றி கிடைக்கும்வரை
முயற்சியில் தளரா விக்கிரமாதித்தா
தளரா மனதுடன் உனக்கும் தமிழ் வணக்கம்
மேடையில் வீற்றிருக்கும் முதுபெரும் கவிகளுக்கும்
இளவலின் தனி வணக்கம்.
கவிமழையில் நனைய வந்து சபையில் இங்கு
உள்ளவர்க்கும் பொது வணக்கம்
என் மனமெங்கும் நிறைந்த
கனங்களைக் கழைய
மடல் ஒன்று வரைய
மை தீட்டிக் கொண்டேன்
எப்படித் தொடங்க?
உணர்ச்சியே இல்லா உறைந்த மனதால்
எப்படிச் சொல்வேன்
"பாரதி பாரதி
மழையில் நனைந்த தீப்பெட்டி போல
சுடர்விட மறந்து ஈரமாய்க் கிடக்கும்
மனதை கந்தக பூமியில் வைத்து
உலர்த்தி உலர்த்தி உயிர் பெறவைத்து
சுடர் பெறவேண்டி தொடர்கிறேன் சும்மா
பிறக்கும் வரைக்கும்
மகிழ்வாய் இருக்கும்
பிறந்த பின்னே மகி்ழ்வே போகும்
வளரும் வரைக்கும்
வரையரை இருக்கும்
வளர்ந்த பின்னே வாழ்வே போகும்
இறக்கும் வரைக்கும்
ஆசைகளிருக்கும்
இறந்த பின்னே மக்கிக்போகும்
இப்பெரு உடலில்
எங்கோ எதிலோ
ஒட்டி வாழும் சிறுமனதோரம்
பெருகிய குமிறல்கள்
கொட்டி தீர்த்திட கொதிக்கும்
ஒரு மடல் வரைகிறேன்
சுரண்டல்களின்றி பதுக்கல்களின்றி
தணிக்கைகளின்றி தாமதமின்றி
தயக்கங்களின்றி தடைகளுமின்றி
மடலொன்று வரைய - அது
மாற்றங்களின்றி உனை வந்தடைய
மரித்த மனத்தான் எனக்கு வல்லமை தாராயோ
நினைவுக் கொசுக்கள் கனவைக் கலைக்க
கண்திறந்து இருளைப் பருகும் வேளை
காண முனைந்து தோற்றுப்போன முந்தைய இரவின்
இறுதிக் கனவை ரசித்து ருசித்து உருக்கி எடுத்து
உணர்வை அளித்து உணர்ந்து முடிக்க
உருகிக் கேட்கிறேன் எனக்கு வல்லமை தாராயோ
புணர்ச்சி கறுமங்கள் கண்ணைக் கருக்க
உணர்ச்சி உறுமல்கள் மனதைத் துளைக்க
அவனும் அவளும், அவளும் அவனும்
காலையும் மாலையும், மாலையும் காலையும்
அடங்கி மடங்கி ஒடுங்கி கிடக்கும்
அமைதியான கடற்கரையோரம்
மதுவைக் கண்டால் குருடாய்ப் போகும்
காட்சிப்பெட்டித் திரைகள் போல
காட்சியைக் காணா கண்கள் கொள்ள
கதறிக்கேட்கிறேன் கடிதினில் எனக்கொரு
வல்லமை தாராயோ
கோபம் கொண்டு கோபம் கொண்டு
கொதித்துக் கொதித்து குமுறிய வரியை
காதல் கொண்டு காதல் கொண்டு
கனிந்து உருகிப் பருகிய வரியை
சோகம் கொண்டு சோகம் கொண்டு
கண்ணீர்த்துளியால் கோர்த்த வரியை
காமம் கொண்டு காமம் கொண்டு
கலவி முடித்து குலவிய வரியை
நட்புக் கொண்டு நட்புக் கொண்டு
நன்றிக் கடனாய் செதுக்கிய வரியை
ரசித்து ரசித்து ருசித்து ருசித்து
சிகப்புக் கோடால் அடிக்கோடிட்டு
அழுத்திப் படித்த அழகிய வரியை
கத்தி முனையில் நிறுத்தி்க் கேட்டும்
கரவொலி மறுத்த கரசேவையரின்
மனதைக் கவரும் மாயம் அறியும்
கலைந்து குறையாத கூட்டங்கட்டும்
மந்திரந்தெரிந்தெனக்கு வல்லமை தாராயோ
நானிலத்தவரின் நன்மையை நினைத்து
நாளும் பொழுதும் நன்மையே செய்து
பாரதியவனின் பாக்கள் புரிந்து
பாரதியவனின் பாங்கினில் வாழ்ந்து
நாவடக்கி நான் அடக்கி
நாங்கள் என்ற ஒற்றைச்சொல்லில்
சிலராய்ப் பலராய்ச் சேர்ந்தே இருந்து
நங்கூரப் பிடியாய் நகராமல் வாழ
வல்லமை தாராயோ
மற்றைய கவியரங்கக் கவிரங்கக்கவிகளையும் தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்குங்கள்.
நமது பதிவர்கள் அதிகாரமையத்தலைவர் பதவிக்கு தேர்தல் ஒன்று இடம் பெறுகிறது. அவர்கள் போட்டியிட்டிருந்தால் எப்படி பிரசாரம் செய்திருப்பார்கள் ஒரு சின்னக்கற்பனை..:P
முதலாவதாக மிஸ்டர் பூமி
தினந்தோறும் லட்சங்களில் புரளும் அன்புப்பிச்சைக்காரலட்சாதிபதிகளே, என்னில் ஏறிவிளையாடி என்னை உருட்டியெடுக்கும் எனதருமைப் பாசப்பசுங்கிளிகளே, எனக்குப் பெரிய பெரிய கான்களில் தண்ணீர் தந்து எனது தாகத்தை அடக்கும் தண்ணிலாறிகளே! பிள்ளைகளே, குட்டிகளே, கீரைப்புட்டுச் சட்டிகளே! அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
இதுவரை காலமும் எனது ஆட்சியில் பசுமையாக இருந்த அனைவரையும் எதிர்க்கட்சித்தலைமை தன்பக்கம் ஈர்க்க முற்படுவது கேவலமான செயலாகும். எனது ஆட்சிக்காலத்தில்தான் பதிவர்கள் காத்திரமான , தொக்கையான ச்சா.. மொக்கையான, அழகான பதிவுகளை எழுதிவந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே உங்கள் பொன்னான வாக்குகளை பூமிச்சின்னத்தில் குத்தி எதிர்க்கட்சியின் கனவுக் கோட்டையை தகர்த்தெறியுங்கள்.
"எங்க தல பூமி, வேற ஆளிருந்தாக் காமி" என்ற கோசத்துடன் பூமி உருண்டோடுகிறது.
வந்தி மாமா
ஆ... இஆ... ஆ... பேசணும்னு நினைக்கும்போது வார்த்தை அருவியா கொட்டுது.. ஆனா.. இந்த மைக்கு முன்னாடி வந்து நின்னதும் அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல தொண்டைவரைக்கும் வந்த வார்த்தை எல்லாம் அப்பிடியே காணாமப்போயிருது..ஆ...இஆ...
யோவ் அந்த மைக்கை எடுங்கையா பேசிட்டு போகட்டும்(கீழிருந்து ஒரு குரல்) மைக் அகற்றப்பட்டதும்.
அலைகடலென திரண்டிருக்கும் வாக்காளப்பெருமக்களே, எதிர்கட்சிக்காரர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள்?
முன்னபின்ன சொந்த செலவில சூனியம் வைத்திருக்கிறார்களா?
எவ்வளவு அடித்தாலும் தனியா நின்று வாங்கிக் கொள்ளும் தாங்குதிறன் அவர்களுக்கு இருக்கிறதா?
அல்லது ஹாட் அண்ட் சவர் சூப்பில் படம்தான் போட்டிருக்கிறார்களா? எனவே உங்கள் வாக்குகளைக் வேறு யாருக்கும் போடமுதல் ஒன்றைச் சொல்லி விடைபெறுகிறேன்
அதாவது சாமத்தில் என்றால் இரவில கூட தானம் செய்ய பேதம் பார்க்கும் தண்டங்களுக்கு வாக்குப் போடாம இரவில் தகிடதத்தோம் எண்டு இளையராஜா பாட்டுக் கேட்கும் என் போன்ற நல்லுள்ளங்களுக்கு வாக்குகளைப் போடவும். நன்றி..
உலகநாயகனே.. கண்டங்கள் கண்டு வியக்கும், இனி ஐ.நாவே உன்னை அழைக்கும் என்று பாடல் ஒலிக்க மாமா கோயிங்கு.
அடுத்து நம்ம லோசன் அண்ணே
அனைத்து நெஞ்சங்களுக்கும் இனிய காலை வணக்கங்கள், மலர்ந்திருக்கும் இந்த நாள் சிறப்பான நாளாக அமையட்டும். சரி நாங்கள் விடயத்துக்க வருவோம். இதுவரை நடந்த தேர்தல்களில் நாம் 3181 தடவைகள் வாக்களித்திருக்கிறோம், ஆனால் அதில் 698 நல்லவோட்டு, 1291 செல்லாத வோட்டு, மிகுதி வாக்குகளுக்க என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இதெல்லாம் எதிர்கட்சியின் சதி, அவர்கள் தேர்தல் ஆணையாளருக்கு சூப் வைத்துக் குடுத்து அவர்கள் சாக் கான நேரத்தில் வாக்குகளை சோக்காக அள்ளிவிட்டார்கள். எனவே உங்கள் வாக்குகளை எஸ்.எம்.எஸ் ஊடாகவோ, தொலைபேசியூடாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அளிக்கலாம் என்பதை தெரிவித்துக் கொண்டு, விடைபெறும் முன்னர் தேர்தலுக்கு அனுசரணை வழங்கும் அனுசரணையாளர்களையும் ஒரு தடவை ஞாகப்படுத்திக் கொள்கிறேன். என்று எஸ்கேப்பாகிறார்.
அடுத்து எங்கள் தன்மானச்சிங்கம், கறுப்பு நமீதா, பிரச்சார சூறாவளி, கன்கோன் கோபி அவர்கள் மேடை ஏறுகிறார்,
எனதருமை வாக்காள ருவிட்டர்களே...ச்சீ... பெருமக்களே.. உங்கள் வாக்குகளை எனக்கு அளிப்பது மட்டுமல்லாது மற்றவர்கள் போடும் வாக்குகளையும் எனக்கு ரீ-ருவிட் செய்யுங்கள். நான் உங்களுக்க இலவசமாக ருவிட்டர் காலனியில் குடியிருக்கும் வசதியை அளிக்கிறேன். இதுவரை 21121 ருவிட்டுகளை கடந்திருக்கும் என்னைத்தவிர வேறு யாரையும் நீங்கள் தெரிவு செய்யவோ, ஏன் அப்படி நினைக்கக்கூட முடியாது, இறுதியாக ஒன்று கூறி விடை பெறுகிறேன், அனைவரும் கூட்டம் முடிந்ததும் கட்சி அலுவலகத்தில் வந்து லெமன்பப்பை வாங்கிக்கொள்ளவும். #விடைபெறல்#நன்றி#வணக்கம்#பிரச்சாரம்#அதிகாரமையம்
அடுத்து புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...... என்று ஒரு சத்தம் கேட்க எல்லோரும் அலேர்ட் ஆகிறார்கள். கார்க்கண்ணாடி அளவு கூலிங் கிளாசுடன் (PAYMENTல் வாங்கியது) கையில் கமராவோடு ஒருத்தர் வருகிறார். சனக்கூட்டமே இல்லாத மேடையில் பின்வரிசையில் உட்கார்ந்திருந்த சில சல்வார் போட்ட பாட்டிகளுக்கு ஸ்டைல் காட்டப்போய் கால் தடக்கிவிழுந்தவர், படக்கென எழும்பி ஒன்றுமே நடக்காதது போல கோட்டுப்போட்ட ஓட்டாண்டிகளுக்கும், பாட்டுப்போட்ட பரதேசிகளுக்கும், வேட்டு வைக்க வந்துட்டாண்டா இந்த சுப்பு...இஹாஹாஹாஹா... தரங்கம் சுப்பு என்று பஞ்ச் டயலாகைப் பேசி கண்ணா, வீ மீட்டு, யு வோட்டு, ஐ நோட்டு, நவ் அப்பீட்டு என்று விடைபெறுகிறார்.
அடுத்து மிஸ்டர்.ஹாட்
அடேய் அடேய் என்னடா நடக்குதிங்க என்னடா நடக்குதிங்க.. டேய் டேய் டேய்.. உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள் அதிகாரமையத்தலைமை மாற்றத்தை நீங்கள் எல்லோரும் எதிர்பார்ப்பது மிகவும் ஆனந்தமாகக இருக்கின்றது ஆனால் இங்கு வாக்குக் கேட்டவர்கள் தங்களின் வாக்குறுதிகளை நடாத்த முன்வரவில்லை, எனவே எனக்கு வோட்டுப்போட்டு என்னுடன் இணைந்து சூடாட பதிவுலகைப் பேணுவதற்கு யாரும் முன்வராத பட்சத்தில் என்னால் மட்டும் தனியே வோட்டுப் போட்டு தல ஆகமுடியாது எனவே யாரெல்லாம் என்னோடு இணைந்து எனக்கு வோட்டுப்போட்டு என்னைத் தலயாக்க முன்வருகிறீர்கள் என்று சொன்னால் அவர்களுடன் இணைந்து அடுத்த கட்டத்திற்கு நாங்கள் நகரலாம் என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
"ஐ ஆம் ஆல்வேய்ஸ் ஒன்லைன், Using 24 hours mobile internet But எவனாச்சும் Disturb பண்ணினிங்க பிச்சுப்புடுவன்... நான் பிஸி with Cricket" என்று சொல்லிச் சூடு பறக்கிறது.
இந்தப்பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் யாரும் கற்பனையே, யார் மனதையும் புண்படுத்தும் நோக்குடன் எழுதப்பட்டதல்ல. வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே...
ஸ்ஸ்ஸ்சப்பா...
இப்பிடியே போய்க்கிட்டிருந்தா இதுக்கொடு முடிவே கிடையாதா? எனவே இலங்கைப்பதிவர் சங்கத்துக்கு ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன் வழங்கப்பட்டிருக்கு.
நான்காவது, யாராவது ஈகோ, இலையான்கோ, கரப்பான்பூச்சிகோ, சிலந்திகோ, பாம்புகோ, பல்லிகோ எண்டு எதையாவது வச்சிருந்தீங்க உங்களை GO எண்டு சொல்ல வேண்டி வரும்..:P
ஐந்தாவது, உங்களுக்குப் பிடிக்குதோ பிடிக்கேலயோ அது உங்கட பிரச்சினை ஆனால் எல்லாப் பதிவையும் வரிக்கு வரி வாசிச்சே ஆகணும். ஒவ்வொரு மாதக் கடைசியிலும் பரீட்டை நடாத்தப்படும். அதற்கான கேள்விகள் அதிலிருந்தே போடப்படும். ஒசாமா செத்ததில இருந்து தமன்னாட நாய்க்குட்டி செத்தது வரைக்கும் பிங்கர் டிப்சில வச்சுப் பதில் சொல்லத்தயாரா இருக்கோணும்.
கொடுந்தமிழ்ல பதிவெழுதுவது தடைசெய்யப்பட்டள்ளது. உதாரணத்துக்கு "ஓமகசீயா ஓ.. மகசியா நாக்குமுக்குநாக்கா ஓ சக்கலாக்கா ஓ ரண்டக்கா" போன்ற இலகுவான மொழி நடையில் மட்டுமே பதிவெழுதவேண்டும்.
கடைசியா முக்கிய ரூல்ஸ் கிரியேட்டிவிட்டி இல்லாம யாராவது பதிவெழுதினீங்க, தொலைச்சுப்புடுவன் தொலைச்சு.எல்லாருக்கும் கிரியேட்டிவிட்டி கிலோ 75 ருபாக்கு விற்கப்படும், தேவையான அளவு வாங்கிக்கலாம்.
அன்புள்ள சுபாங்கா,
இதுவரை உனக்கு நான்
எந்தCALLலும் எடுத்ததில்லை.
MISSED CALL மட்டுந்தான்
MISSED CALL என்பது செல்லில் காசில்லாதவனின் தன்னை அழைக்கச்சொல்லிக் கொடுக்கும் சிக்னல்
உன் காதுகள் என்
செல்பேசி தொடும்
தூரத்தில்தான் இருக்கிறது.
என்ன செய்வது.
போன்பில் கட்ட முடியவில்லை
அதனால்தான்
பொதுவாக வாழ்த்துக்கள்
அதிகாலையில்தான்
சொல்லப்பட்டிருக்குமே தவிர
இப்படி காரிரவில் இல்லை
பரிசு மழைகளால்
களித்துக் களைத்த உனக்கு
நிம்மதியான காரிருள் சூள் நள்ளிரவில் இவ் வாழ்த்து மடல்
உணர்ச்சியின் உறுமல்களும்
கீழே கொஞ்சம் காதலும் நிறைந்த
உன் சிறுகதைகள் எங்கே?
உன் கவிதைகள்
அழகானாவை! ஆழமானவை!
அதனால் ஆபத்தானவை! உன் ஆபத்துக்கள் எங்கே?
வடிவேலுவுடன் சேர்ந்த பார்த்தீபன் போல் கவுண்டருடன் சேர்ந்த செந்தில் போல் மரணச்சிரிப்புக்குரிய உன் மொக்கைகள் எங்கே?
காதலின் எடை என்ன
என்பதை மில்லிகிராம் சுத்தமாய்ச்
சொல்லிவிடும் காதல் மன்னன் நீயாம் சாவகச்சேரி சாட்சி சொல்கிறது
பரீட்சைக்குப் படித்திருப்பாயோ தெரியாது ஆனால் சுஜாதாவின் கதைகளை பாடமாக்கி வைத்திருக்கும் நடமாடும் லைபிரரி நீ பயன்படுத்தாத வானம்
பயன்படுத்தாத சூரியன்
பயன்படுத்தாத நட்சத்திரம்
பயன்படுத்தாத பூமி போல்உன் பயன்படுத்தான மணிப்பர்சு மனிதகுலத்துக்குப் பாக்கியிருக்கிறது
ஆமர்வீதி சந்தியை
விட்டுவெளியே வா.
உன் ATM கார்ட்டை
வெளியேற்று
உன் பார்ட்டிக்காக காத்துக்கிடக்கும் எமக்கு பிட்சாவை ஓடர் செய்
அனைவருக்கும் வணக்கம், இது எனது இந்த ஆண்டின் கடைசிப்பதிவு. எனவே எல்லாருக்கும் விருது கொடுத்து டாட்டா சொல்லிக்கொள்கிறேன்.
ம.தி.சுதா – சுடுசோறு போட்ட சொக்கத்தங்கம் விருது
பதிவர் வந்தியண்ணா – மிஸ்டர் கலைஞர் விருது
லோஷன் அண்ணா – ஒக்டாபஸ்சானந்தா விருது
கன்கொன் – கூகிள் வேட்டைக்காரன் விருது
ஆதிரை (எ) சிறீகரன் அண்ணா– பாஸ்வேர்ட் பறிகொடுத்த பாண்டியன் விருது
சதீஷ் – அலகிய டமில்க் காவலன் விருது (எழுத்துப்பிழை இல்லை)
மதுயிசம் மது அண்ணா– தீராத விளையாட்டுப்பிள்ளை விருது
சுபாங்கன் அண்ணா – சிறுகதை சொல்லும் சின்னமாமா விருது
புல்லட் அண்ணே – லீவைத் தாண்டி வருவாயா விருது
ஜனா அண்ணா – மாத்தியோசி விருது
தலைவர் நிரூஜா – அதிகாரமையத் தலைவர் விருது
வதீஸ் அண்ணே – எதையும் தாங்கும் இதயம் விருது
கூல்போய் கிருத்திகன் அண்ணே – மொக்கை மன்னன் விருது
யோ அண்ணே – 2010ம் ஆண்டின் சாதனையாளர் விருது (இவருக்கு இவ்விருது கொடுக்கப்படக் காரணம் பதிவர் அனுதினனுக்கு 4 சிக்ஸ் அடித்ததுதான் என்று நீங்கள் கருதினால் அதுக்கு சங்கம் பொறுப்பேற்காது..:P )
அனுதினன் – 205க்கு ஒருவன் விருது (205 விடயத்தை பின்னூட்டத்தில் யாரும் சொல்ல வேண்டாம்)
டாக்டர் பாலவாசகன் அண்ணே – ஊசி போடு உசிர எடு விருது
சிதறல்கள் றமேஸ் சேர் – வாத்தியார் விருது
டிஸ்கி - வழக்கம் போல இதுவும் நகைச்சுவைக்காக மட்டும் எழுதப்பட்ட பதிவு எனவே சீரியஸாக எடுக்க வேண்டாம். மீறி சீரியசாக எடுத்தால் சீரியஸ் சிங்கமுத்து விருது வழங்கப்படும்..:P
நேற்றைய தினம் நத்தார் பண்டிகையை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடியிருப்பீர்கள். எனவே அனைவருக்கும் என் மனமார்ந்த, உளம்நிறைந்த நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள். இந்த நத்தாரும் மலரப்போகும் 2011ம் உங்கள் வாழ்வில் அமைதியையும் சந்தோஷத்தையும் தரட்டும்.
சுனாமி
கடல் வருதாம், ஊருக்குள்ள தண்ணி வருகுதாம், ஓடுங்கோ பனை உயரத்துக்கு அலை வருதாம், இவைதான் இந்த வருடத்தல் 26ம் திகதி மக்களின் மகுடவாசகமாக இருந்தது. அதன்பின்னர் எத்தனை சோகக்கதைகள் கேள்விப்பட்டிருப்போம். சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு 6 வருடங்கள் ஆகிறது. 6 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற விடயங்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
சுனாமியில் உயிர்நீத்த இலட்சக்கணக்கான உயிர்களுக்கு எனது அஞ்சலிகள்.
பதிவர் சந்திப்பு – 03
கடந்த 18ம் திகதி பதிவர்கள் கிறிக்கட் மற்றும் பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற்றது. நான் கலந்து கொண்ட முதலாவது பதிவர் சந்திப்பு அது. அனைத்துப் பதிவர்களையும் சந்தித்தது விளையாடியது என அந்த இரண்டு நாட்களும் மகிழ்வான நாட்களாகக் கழிந்தது. அன்னாசிப்பானம் சில பின்விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் கூட இந்தப் பதிவர் சந்திப்பை மறக்க முடியாமல் இருக்க அது ஒரு வழியாக அமைந்திருக்குமோ..:P
சுஜாதா
நேற்றும் நேற்று முன்தினமும் சுஜாதாவின் “ஜேகே” மற்றும் “மறுபடியும் கணேஷ்” ஆகிய இரு புத்தகங்களும் வாசித்து முடித்தேன். ஜேகே ஒரு பைலட்டின் கதை படிக்கப் படிக்க விறுவிறுப்பு அதிகமாகிக்கொண்டே போகிறது. விமானத்தை வைத்து சுஜாதா எழுதிய மற்றுமொரு அருமயான கதை. கடைசிவரை எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே சென்று கடைசியில் லாவகமாக எதிர்பார்க்காத விதத்தில் கூறுவதில் சுஜாதாக்கு நிகர் சுஜாதாதான்.
மறுபடியும் கணேஷின் கடைசி வரியைப் படித்துவிட்டு “அடிங்கொய்யால” என்று சொல்லிக்கொண்டேன். சுஜாதாவின் கணேஸ் – வசந்த் வரும் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. அதிலும் இது சுஜாதாவின் சிறந்த ஒரு துப்பறியும் கதை. “குருப்பிரசாத்தின் கடைசி தினம்” என்ற நாவல் இன்னும் மிஞ்சியுள்ளது. படிக்கவேண்டும். வேறு சுஜாதாவின் புத்தகங்கள் ஏதாவது எனக்கு பரிந்துரை செய்யுங்களேன்.
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்..:P
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது என்றும் சொல்லலாம். ஆவுஸ்திரேலியா இன்று ஆரம்பித்த போட்டியில் இந்தப்பதிவை இட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் 9 விக்கெட்டுகள இழந்து தடுமாறிக்கொண்டிருக்கிறது.
அன்டர்சன் 4 விக்கெட்டுகள், ட்ரம்லெட் 3, மற்றும் பிரஸ்னன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்கள். ஆனால் அவுஸ்ரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் Mr.Cricketடும், ஹடினும் ஆட்டமிழ்நதது அவுஸ்ரேலியாக்கு கவலைக்குரிய விடயம்.
மறுபடியும் பொன்டிங்க்குக்கு ஆப்பா? விக்கிரமாதித்தன் எங்கபோய்ட்டாரோ..:P
நெஞ்சில் நெஞ்சில்
அண்மைக்காலமாக தினமும் என் காதுகளில் தொடர்ந்து ஒலிக்கும் பாடல் இது. எங்கேயும் காதல் படத்தில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில், ஹரிஸ் ராவேந்திரா – சின்மயி ஆகியோரின் இனிமையான குரல்களில், மதன் கார்க்கியின் அற்புதமான வரிகளில் காதுவழியாக உடலுக்குள் சென்று ஏதோ செய்கிறது.