Related Posts with Thumbnails

பீப்பீ (கன்கொன்) :P

பதிவிட்டவர் Bavan Sunday, December 4, 2011 6 பின்னூட்டங்கள்
கிறிக்கட் அனலிஸ்ட், குட்டி கிறிக்கின்ஃபோ, பீப்பீ, தொழிநுட்பப்புலி என்றெல்லாம் பல பெயர்களுக்கு சொந்தக்காரர் தான் இந்த கோபிகிருஷ்ணா. ஆனால் அண்மைக்காலமாக இவரின் பீப்பீ என்ற பெயர் இவரின் நட்பு வட்டாரத்திற்கு பரலாக அனைவருக்கும் பிடித்துப்போனதுக்கு ஏதோ ஒரு சம்பவம் தான் காரணமாம். அதை நாமறியோம்.

இவருக்கும் உருவத்திற்கும் சம்பந்தமே இல்லாதவாறு நேற்றுவரை சொனி எரிக்ஷன் கையடக்கத் தொலைபேசி ஒன்றைப் பாவித்து வந்தவர். இன்றிலிருந்து சம்சாங் கலக்சி வை க்கு மாறியிருப்பதோடு மட்டுமல்லாது சந்திரனையும் இனித்தெளிவாகத் தூரத்திலிருந்தே ஜீம் பண்ணிப் படமெடுப்பேன்டா என்று மயக்கமென்ன கார்த்திக் சுவாமிநாதன் ரேஞ்சுக்கு பில்டப் குடுக்கிறாராம் எங்கள் பீப்பீ.

நகரத்து வாழ்க்கை பிடிக்காமல் போனதால் இவர் விரைவில் கரவெட்டியில் குடியேறப்போவதாகவும் லண்டனிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக ராமராஜன் படங்கள் அதிகம் பார்த்து அந்த ஸ்டைலிலேயே அதிகம் டி-சர்ட்டுகள் அணிந்து திரிகிறாராம். என்ன மாயமோ யார் செய்த காயமோ...

கிறிக்கட் இவரின் இரத்தத்திலேயே ஊறிப்போனது அனைவரும் அறிந்ததே. எனவே இவரின் பிறந்தநாளுக்காக இன்று நடைபெற விருக்கும் கிறிக்கட் போட்டியில் தனது 100வது சதத்தை பெற்றுக்கொள்வார் என்று இவரின் ரசிகர் சங்கத்தின் ஜெயமான நண்பர் கல்லில் கற்பூரம் ஏற்றி வேண்டிக் கொண்டாராம்.

முன்பெல்லாம் மிகவும் கூலாக அம்பி போல் இருந்தவர் இப்போது அந்நியனாக, ரெமோவாக எல்லாம் பல்வேறுபட்ட அவதாரங்கள் எடுக்கிறாராம். திரைப்படம் பார்ப்பதில் நாட்டமே இல்லாத பீப்பீ தற்போது அந்நியன் படத்தை மட்டும் அறுபது தடவைகளுக்கு மேல் பார்த்திருப்பது மட்டுமன்றி சதாசர்வ காலமும் அதைப்பற்றியே பேசித்திரிகிறாராம் என்று இவருடன் அடிக்கடி ருவிட்டரில் ஆங்கிலத்தில் பீட்டர் விடும் விக்கி நண்பர் தெரிவிக்கிறார்.

இத்தனை பெருமைகளும் புகழ்களும் நிறைந்த எங்கள் அருமைப் பீப்பீ, கறுப்புத்தங்கம் கன்கொன் (எ) கோபிகிருஷ்ணா என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறோம்.

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. Subankan Says:

    //சந்திரனையும் இனித்தெளிவாகத் தூரத்திலிருந்தே ஜீம் பண்ணிப் படமெடுப்பேன்டா என்று //

    அட்றா.. அட்றா..

    //நகரத்து வாழ்க்கை பிடிக்காமல் போனதால் இவர் விரைவில் கரவெட்டியில் குடியேறப்போவதாகவும் லண்டனிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.//

    எனக்குப் புரிஞ்சுபோச்சு.. எனக்குப் புரிஞ்சுபோச்சு.. :p

    //இன்று நடைபெற விருக்கும் கிறிக்கட் போட்டியில் தனது 100வது சதத்தை பெற்றுக்கொள்வார் என்று இவரின் ரசிகர் சங்கத்தின் ஜெயமான நண்பர் கல்லில் கற்பூரம் ஏற்றி வேண்டிக் கொண்டாராம்.//

    அதன்பின் இன்றிரவு ஸ்பெஷல் பார்ட்டி என்றும் தகவல் ;-)

    அந்நியன் + அம்பி + ரெமோ + சதா புகழ் கங்குவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :-)

  1. //திரைப்படம் பார்ப்பதில் நாட்டமே இல்லாத பீப்பீ தற்போது அந்நியன் படத்தை மட்டும் அறுபது தடவைகளுக்கு மேல் பார்த்திருப்பது மட்டுமன்றி சதாசர்வ காலமும் அதைப்பற்றியே பேசித்திரிகிறாராம்..//

    பிம்பிளிபி பிளாப்பி ,மாமா பிசுகோது...:P

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :)

  1. LOSHAN Says:

    //அண்மைக்காலமாக இவரின் பீப்பீ என்ற பெயர் இவரின் நட்பு வட்டாரத்திற்கு பரலாக அனைவருக்கும் பிடித்துப்போனதுக்கு ஏதோ ஒரு சம்பவம் தான் காரணமாம்.//
    இது தெரியாது? மது இசம் புகழ் மதுவின் அடுத்த பதிவில் இந்தக் கதை தான் ஹை லைட்டாம் ;)


    //
    சம்சாங் கலக்சி வை க்கு மாறியிருப்பதோடு //
    மீண்டும் வை ;) ????
    விடாது ;)


    //
    கரவெட்டியில் குடியேறப்போவதாகவும்//

    அட அப்போ நம்ம சித்தூவுக்கு தூரத்து சொந்தக் காரரோ? நல்லது :)
    வாழ்த்துக்கள் கங்கோன்

    //
    இவரின் பிறந்தநாளுக்காக இன்று நடைபெற விருக்கும் கிறிக்கட் போட்டியில் தனது 100வது சதத்தை பெற்றுக்கொள்வார் //
    பிர்ர்ரர்ர்ர்..
    பிம்பிலிக்கா பியப்பீஈ

    அட முக்கியமான விஷயம் மறந்துபோச்சே...

    அந்நியன் அண்டர்வேயார் சாரி.. அன்டிரொயிட் கன்கோனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  1. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி. அடுத்த முறை உங்கள் பிள்ளை உங்களுக்கு வாழ்த்து சொல்லட்டும்

  1. :)

இதுதான் நான்

My Photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (2) 42 (1) 800 (1) Airtel (1) FOOTBALL (1) Friend (1) Google (1) GoogleDoodle (1) IPL (4) LesPaul (1) Love (1) Noball (3) SMS (1) T20 (3) tweets (10) twitter (10) WhyThisKolaiveriDi (1) ஃபிகர் (2) அக்டோபர் (1) அக்தர் (1) அஜித் (1) அஞ்சலி (1) அனுபவம் (46) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (3) அறிவித்தல் (5) அவுஸ்திரேலியா (6) ஆச்சரியம் (6) ஆதிரை (4) இசை (5) இதயம் (1) இலங்கை (19) உண்மை (13) உலகக்கிண்ணம் (5) எதிர்காலம் (5) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) கதை (26) கன்கொன் (6) கன்கொன் (3) கலைஞர் (1) கல்கி (5) கவிதை (25) கவியரங்கம் (1) காதல் (10) காமடிகள் (104) காம்பீர் (1) கிரிக்கெட் (57) குடி (1) குடும்பசாமியார் (2) கும்மி (16) கோபம் (4) கோயில் (1) சகுனம் (1) சங்கக்கார (5) சச்சின் (2) சந்திப்பு (2) சந்தியா (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (20) சுஜாதா (1) சுறா (5) சூதாட்டம் (3) சேவாக் (4) டில்ஷான் (1) தனுஸ் (2) தினக்குரல் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தெய்வத்திருமகள் (1) தொழிநுட்பம் (2) தேர் (1) தேர்தல் (4) தொடர்பதிவு (5) நட்பு (2) நன்றி (3) நித்தியானந்தா (6) நினைவு (9) நினைவுகள் (9) நிலா (1) நூறு (1) நெஹ்ரா (3) நோய் (1) பஞ்சாப் (2) பதிவுலகம் (38) பப்புமுத்து (3) பயம் (2) பயிற்சி (1) பரீ்ட்சை (4) பாகிஸ்தான் (6) பாட்டு (6) புத்தர் (1) போஃபியா (1) பொது (16) போட்டி (1) போட்டோ காமண்டு (53) போலி (8) போலிச்சாமியார் (11) மரம் (2) மழை (1) மாநாடு (2) மின்சாரசபை (1) முரளி (2) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (88) யாழ்தேவி (2) யூசுப் (1) ரஜனி (1) ரன்திவ் (1) லோஷன் (1) வடை (2) வந்தியண்ணா (5) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்த்து (18) விக்கற் (2) விஜய் (4) விமர்சனம் (8) விலங்கு (4) விளம்பரம் (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்