-01-
சோகமாக இருப்பவர்களை மகிழ்ச்சியாகப் பார்ப்பதை விட மகிழ்ச்சியாக இருப்பவர்களை சோகமாகப்பார்ப்பதே பிறருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது
-02-
"உனக்கு என்ன வரலாறு? உண்மை சொன்னாத் தகராறு"யாருக்கோ! :P#damnTrue#Annamalai
-03-
வாழ்க்கையில் தனக்குக் கவலை or பிரச்சினை வரும் போது அதை சமூகவலைத்தளங்களில் எவன் உளறாமல் இருக்கிறானோ அவன் பாதிபக்குவப்பட்ட மனிதன் ஆகிறான்
-04-
"கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே" Wake up with niz song ;-)) || Maybe situation song 4 this month :P
-05-
அதிகாலை 5 மணிக்கு எழும்பும்போதுதான் தெரியுது, உலகத்தை விட நாம எவ்வளவு பின்னால இருந்திருக்கிறோம் என்று.. #ஞானோதயம் :P
-06-
"இது போல் வரும் லிங்கை கிளிக் பண்ண வேண்டாம்" எண்டு போட்டு தெரிஞ்சே Timelineஐ spam பண்றாய்ங்களே.. அவ்வ்வ். #கடுப்பேத்திறார்மைலாட்
-07-
அறிவுகெட்ட Computer! D Driveல space இல்லைன்னா E,F எதுலயாச்சும் போடவேண்டியதுதானே.. இரவு போட்டுட்டு தூங்கப் போன download எல்லாம்#fail :@
-08-
-09-
மழை கொஞ்சம் அதிகமாப் பெய்தால் சுனாமி எண்டு வதந்தியக் கிளப்பிறாங்களே.. #திருகோணமலை(எ)வதந்திஊர் :P
-10-
நான் இப்பிடித்தான் என்று 100% தெரியாது. ஆனால் ஓரளவு தெரியும் சி(ப)ல விடயங்களில் விரும்பியது நடக்காவிட்டாலும் இசைவாகிப்போகத் தெரியும்,ஆனால் ஒரு சில விடயங்களை நான் எதற்காகவும் விட்டுக்கொடுப்பதில்லஉன்னைப் பற்றி நீ எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறாய் என்று வெற்றிFMமில் கேட்கப்பட்ட கேள்விக்கு கூறிய பதில்.
-11-
"Life இது உன்னோட காரு இஷ்டப்படி நீ ஓட்டிப்பாரு.."
-12-
மச்சி + மாமு + சித்தப்பு + தலைவா=நண்பேன்டா :D
-13-
Self Confidence கொஞ்சம் (நிறையவே) அதிகரிச்சிருக்கு, எவ்வளவு அடிச்சாலும் தாங்குற ஒரு சக்தி வந்திருக்கு :P2011ம் ஆண்டு பற்றி கேட்டதுக்கு எனது பதில்
-14-
"மழை கேட்கிறேன், எனை எரிக்கிறாய் ஒளி கேட்கிறேன், விழிகளை பறிக்கிறாய்"||@madhankarky யின் பாடல் வரிகள் மிகவும் பிடிச்சுப்போச்சு:-))#Nanban
-15-
பகையைக் கண்டு பைய நகர்ந்தேன்,பயந்து விட்டான் பாவம் என்றது;மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்,விளங்கி விட்டதா மிருகம் என்றது by@vairamuthu
2011ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் விடைபெறப் போகிறது. இந்த வருடம் பலருக்கும் பல வித்தியாசமான அனுபவங்களையும் கவலைகள், மகிழ்ச்சிகளையும் தந்திருக்கும். இந்த வருடம் எனக்குப் பல புதிய விடயங்களை, நண்பர்களை, அனுபவங்களை தந்திருக்கிறது. முக்கியமாக 2009ல் பாடசாலைக் காலத்துக்குப் பிறகு வேலைவெட்டியில்லாம் எதிர்காலம் பற்றி சிந்தித்து சிந்தித்து சோர்ந்து போன 2010ஐ ஊதித்தள்ளிவிட்டு புதிய பாதையைக் காட்டிய ஆண்டு 2011.
இந்த ஆண்டு எனக்கு தன்னம்பிக்கையை அதிகம் தந்திருக்கிறது. சில பிடிக்காத விடயங்களுக்கு இசைவாகிப் போகவும், கிடைக்கும் என நினைத்து கிடைக்காமல் போன விடயங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கையும் தந்த ஒரு ஆண்டு.
கூடுதலாக இதுதான் எனது இந்த ஆண்டின் கடைசிப் பதிவாக இருக்கும், எனவே எனவே அடுத்த மலரப் போகும் 2012 இதை விட சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்ற நம்பிக்கையை மனதில் நிறுத்தி அனைவருக்கும் முற்கூட்டிய சிசுபாலனின் பிறந்த தின மற்றும் புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி மீண்டும் அடுத்த ஆண்டு சந்திப்போம்!
// உனக்கு என்ன வரலாறு? உண்மை சொன்னாத் தகராறு" #damnTrue #Annamalai
யாருக்கோ! :P
//
உண்மையாவா மச்சான்! உனக்கும் எனது புது வருட வாழ்த்துக்கள்