Related Posts with Thumbnails
Showing posts with label சிந்தனை. Show all posts


நாம் வாழ்க்கையை எப்படி எதிர்நோக்குகிறோமோ, அப்படித்தான் வாழ்க்கை இருக்கும் என்று சொல்லுவார்கள். என்னதான் ஒரு மனிதன் வெளியே சிரித்துக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள்ளே ஏதாவது ஒரு குறை அல்லது கவலை குடிகொண்டுஇருக்கும். அண்மையில் வாசித்த ஒரு உளவியல் பதிவில் ஒரு கேள்வி கேட்டிருந்தார்கள்.

"நீங்கள் தனியாக கடற்கரையில், அலைகள் வந்து வந்து போவதைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறீர்கள். உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?"

இக்கேள்விக்கு விடையை சொல்லிவிட்டு மேலே படியுங்கள். அதாவது நீங்கள் இந்தக்கேள்விக்கு என்ன விடை சொல்லியிருந்தீர்களோ, அப்படித்தான் நீங்கள் வாழ்க்கையை எதிர் நோக்குகிறீர்கள் என்று அர்த்தம். இதே கேள்வியை நான் நண்பர்கள் சிலரிடமும் கேட்டுப் பார்த்தேன், சோகம், மகிழ்ச்சி, விடாமுயற்சி போன்று பல்வேறு விடைகள் சொன்னார்கள்.உண்மையில் பலருக்கு இது சரியாகவே அமைந்தது.

கிறிக்கட் போட்டி ஒன்றில் விளையாட முதல் கிறிக்கற் வீரர்கள் உஷ்ணப்படுத்தும் அப்பியாசங்களை செய்துகொள்வார்கள். அதற்குக்காரணம், திடீரென உடல் ஒரு செயலில் ஈடுபடும் போது தசைப்பிடிப்போ அல்லது வேறு உபாதைகளோ ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். எனவே அதற்கு உடலை இசைவாக்கிக் கொள்ள அவர்கள் உடற்பயிற்சிகளை செய்வர்கள்.


அது போலதான் இதுவரை மந்தமாக அல்லது ஒரு சுவாரஸ்யமற்று சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென ஏற்பட்ட மகிழ்ச்சிகரமான சூழல், நட்புவட்டம் அல்லது ஒரு குறிப்பிட்ட நட்பினால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் திளைத்தவர்களுக்கு ஒரு பிரச்சினை வரும் போது அதை ஏற்றுக் கொள்ளமுடிவதில்லை, அதன் காரணமாக நண்பர்களாகி ஒரு மாதங்கூடக் கடக்காத நிலையில் பலர் இன்று நட்பை முறித்துக் கொண்டு முகங்கொடுத்தும் பேசமுடியாமல் திரிவதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

அதற்குக் காரணம் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பலருக்கு இருப்பதில்லை. இவர்கள் சூழலில் எது நடந்தாலும் அது தமக்கு நடப்பதாக தம்மை அதற்குள் உள்வாங்கி யோசிப்பார்கள், விட்டுக் கொடுக்க மாட்டார்கள், நடக்கும் சம்பவங்களை தமக்காகவே நடப்பதாக உணர்த்த முற்படுவார்கள், எனவே தேவையற்ற சூழ்நிலைகளை உருவாக்கிக்கொண்டும் தேவையில்லாத விடயங்களை தமக்கே நடைபெறுவது போல உள்வாங்கிக்கொண்டும் உங்களைக்குழப்பிக்கொள்ளாதீர்கள் வாழ்க்கை சூனியமாகிவிடும்.

நண்பர்களிடையே பிரச்சினைகள் வரும் போது முடிந்தளவு அதிகம் கோபமாக பேசாதீர்கள் அல்லது பேசாமலே இருங்கள். பேச்சுக்களில் ஆரம்பித்து முறிந்த கைகள் ஏராளம். இரண்டு நாட்களின் பின்னர் பேசும் போது கோபங்கள் ஆறிப்போயிருக்கும். நியாயம் யார்பக்கம் இருந்தாலும் தவறைச் சுட்டிக்காட்டுங்கள்.முக்கியமாக எதையுமே ஊகித்து முடிவெடுக்காதீர்கள். எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேரே சொல்லிவிடுவது நலம்.

முகத்துக்கு நேரே சில விடயங்களை சொல்லிவிடுவது இரு விடயங்களுக்கு நல்லது. 
-1-மனதில் எந்தப் பாரமும் இல்லை.
-2-நாம் முட்டாள்கள் இல்லை என்பது மற்றவருக்கு உணர்த்தப்படும்
-லோஷன்

கட்டாயம் சிலரை நண்பர்களாக வைத்திருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதற்காக அவர்களுடன் கதைக்காமல் விடவேண்டும் என்றும் கட்டாயம் இல்லை. ஒரே விருப்பு வெறுப்புக்கள், ஒரே மாதிரியாக ஆர்வங்கள் உள்ளவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். எனவே ஒரே அலைவரிசையில் உள்ளவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். முக்கியமாக உங்களை சூழலுக்கேற்றவாறு இசைவாக்கப் பழகுங்கள்.


டிஸ்கி: கண்ணுக்கு முன்னால் நடக்கும் சில விடயங்களுக்கு பார்வையாளனாக இருந்து பார்த்ததால் எழுதப்பட்ட பதிவு இது. வேற எதுவுமில்லைங்கோ..:-)

என்றாய்...

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:29 AM | 15 பின்னூட்டங்கள்


பிறக்கும் போது BORN என்றாய்
பெற்ற தாயை MOM என்றாய்
அப்பாவைப்பார்த்து DAD என்றாய்
விளையாட்டைப் PLAY என்றாய்


புத்தகத்தை BOOK என்றாய்
எழுதுகோலை PEN என்றாய்
பாடசாலை SCHOOL என்றாய்
பேரூந்தை பஸ் என்றாய்


ஆசானை சேர் என்றாய்
சந்தியை JUNCTION என்றாய்
பாட்டை SONG என்றாய்
வீட்டை HOME என்றாய்


படத்தை FILM என்றாய்
குடத்தை POT என்றாய்
படுக்கையை BED என்றாய்
நித்திரையை SLEEP என்றாய்


இருமலைக் COUGH என்றாய்
காய்ச்சலை FEVER என்றாய்
கதைப்பதை CHAT என்றாய்
குளிப்பதை BATH என்றாய்


மழையை RAIN என்றாய்
காற்றை WIND என்றாய்
கடிதத்தை LETTER என்றாய்
எழுத்துக்களை LETTERS என்றாய்


பெண்ணை GIRL என்றாய்
ஆணை BOY என்றாய்
காதலை LOVE என்றாய்
கல்யாணத்தை MARRIAGE என்றாய்


நண்பனை FRIEND என்றாய்
பணத்தை MONEY என்றாய்
மகிழ்ச்சியை HAPPY என்றாய்
சோகத்தை SAD என்றாய்


சொர்க்கத்தை HEAVEN என்றாய்
நரகத்தை HELL என்றாய்
சாவை DEATH என்றாய்
பெயரைக்கேட்டேன் ட(த)மிலரசு என்றாய்

மு.கு - இணையத்தில் படித்த கதை ஒன்றின் தமிழ் வடிவம், நல்ல கருத்துள்ள கதை என்பதால் பகிர்கிறேன். கதையின் சுட்டியைப்பகிர்ந்த கன்கொனுக்கு நன்றிகள்

ஒருநாள் புத்தர் தனது சீடர்களுடன் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பயணித்துக்கொண்டிருந்தார். வழியில் ஒரு ஆற்றைக்கடக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. நீண்ட தூரம் நடந்து களைத்துப் போயிருந்த புத்தரும் சீடர்களும் ஆற்றங்கரையில் அமர்ந்தனர். புத்தர் தனக்கு தாகமாக இருப்பதாகவும் ஆற்றில் தண்ணீர் எடுத்துவரும்படியும் ஒரு சீடரைப்பணித்தார்.

உடனே ஆற்றைநோக்கிவிரைந்த சீடர் தண்ணீர் எடுக்க முயற்சித்த தருணத்தில்தான் கவனித்தார், ஒரு எருமை மாட்டு வண்டி ஆற்றைக்கடந்துகொண்டிருந்தது. அதன் விளைவாக ஆற்று நீர் கலங்கி அழுக்காகிப்போயிருந்தது. அந்த அழுக்கு நீரை எப்படி குருவுக்கு எடுத்துச்செல்வது என்று யோசித்த சீடர் மீண்டும் புத்தரிடம் வந்து அந்த நீர் குடிப்பதற்கு உகந்தல்ல அழுக்காக இருக்கிறது என்றார்.

மீண்டும் அரைமணிநேரத்தில் அதே சீடரை தண்ணீர் எடுத்துவரும்படி பணித்தார் புத்தர். மீண்டும் ஆற்றைநோக்கி விரைந்தார் சீடர் ஆனால் ஆறு அப்போதும் அழுக்காகத்தான் இருந்தது. மீண்டும் புத்தரிடம் திரும்பிவந்த சீடர் ஆறு இன்னும் கலங்கலாகத்தான் இருக்கிறது என்றார்.

இன்னும் அரை மணிநேரம் கழித்துச் மீண்டும் அதே சீடனை அனுப்பினார் புத்தர். இந்தத்தடவை தண்ணீர் தெளிவாக இருந்தது. சீடன் தண்ணீரை எடுத்துக்கொண்டு புத்தரிடம் திரும்பினார்.

புத்தர் சொன்னார் இது போலதான் உங்கள் மனமும். உங்கள் மனமானது குழப்பத்திலிருக்கும் போது அதை அதன் போக்கிலேயே விடுங்கள், சிறிது நேரம் பொறுமையாக இருங்கள், மனதை அமைதிப்படுத்த எந்த ஒரு விடயத்தையும் கஷ்டப்பட்டு செய்ய வேண்டியதில்லை. அதுதானாக அமைதியடையும்.
தான்தான் அவதாரம் என்று கூறிக்கொள்ளும் கல்கிபகவான் சாரயச்சாமியாரின் அம்பலங்கள் நேற்று சன் டிவியில் நிஜம் நிகழ்ச்சியில் வெளியாகியுள்ளன. இது பற்றி எத்தனையோ பதிவுகள் எழுதிவிட்டோம்.

ஏற்கனவே தெலுங்கு டிவி ஒன்றில் இவரது மன்னிக்கவும் இவனது அட்டூளியங்கள் வெளியானது, ஆனால் தமிழ் ஊடகங்கள் ஒன்றிலும் அவை வெளியாகவில்லை. ஆனால் தற்போது சன்டிவியில் இதுபற்றி நிகழ்ச்சி நடாத்தப்பட்டது பராட்டத்தக்கது. எனவே இதுபற்றி மேலும் கருத்துக்கூற விரும்பவில்லை. ஆனால் மின்னஞ்சலில் வந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறேன். "மனம் திடமாக இருந்தால் மட்டும் பாருங்கள்."







போலிச்சாமிகளின் பற்றிய பல பதிவுகள் செய்திகள் வந்து அவர்களின் பெயர்கள் நாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் சன் டிவியில் வீடியோவை அரைமணிக்கொருமுறை காட்டி எத்தனைபேர் திருந்தினார்கள்? அது அவர்கள் இருவரும் கிருஷ்ணனும் ராதையும் போல விளையாடினார்கள் அப்படி இப்படி பல கதைகள் அதை மக்களும் நம்பி நித்தியானந்தா நல்லவர் தெய்வம் என்று இன்றுவரை நம்பும்கூட்டம் இருக்கத்தானே செய்கிறது.


போலிகள் பிழைத்துக்கொள்வதற்கான காரணம்?
இந்தப்போலிச்சாமிகளுக்குப்பின்னால் ஒவ்வொரு ஊடகம் இருப்பது போல தோன்றுகிறது. அண்மையில் போதை கொடுத்து மாட்டிய கல்கிபகவான், நித்தியானந்தா உட்பட இருவர் ஒரே தினத்தில் மாட்டுப்பட்டனர். ஆனால் நித்தியானந்தாவின் வீடியோவை மட்டும் அரைமணிக்கொருதடவை போட்டுக்காட்டிய ஊடகங்கள், அதைவிடப்பாரதூரமான விடயத்தில் மாட்டிய கல்கி பகவானின் வீடியோவை ஏன் காட்டவில்லை? 


வீட்டில் பல குழந்தைகள் இருக்கும் என்பதை உணராமல் முன்னறிவித்தலின்றி இருவரும்கட்டிப் பிடித்துக்கொள்ளும் காட்சிகளை காட்டிய ஊடகம் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு போதை கொடுத்து அவர்களை வெறியாட்டம் ஆடவிட்டு ரசித்த பகவானை ஏன் காட்டவில்லை. மாறாக அவருக்கு அண்மையில் வேறொரு தனியார் தொலைக்காட்சியில் அவருக்கு விளம்பரம் போய்க்கொண்டிருந்தது. அதன்பிறகு மாலை நித்தியானந்தா செய்தது என்ன என்று ஆராயும் நிகழ்ச்சி. பத்திரிகைகளில் கூட அவர்கள் மாட்டுப்படும் வரை முழுப்பக்கத்தில் வந்த விளம்பரங்கள் மாட்டிய பின்னர் அவர் கெட்டவர் என்ற செய்தி அரைப்பக்கம் கூட பிடிக்கவில்லை.


மக்கள் ஏமாறக்காரணம்?
பிரச்சினைகள் இல்லாத யாரும் உலகத்தில் இருக்கமுடியாது. பிரச்சினை ஏற்படும் சமயத்தில் இப்படியானவர்களை நம்பாதவனுக்குக்கூட போய்ப்பார்த்தால் என்ன? என்ற எண்ணம் மனதில் உதிக்கும் உடனே அங்கு போகிறவன் அவர்களின் மாடமாளிகைகள், அமைதியான சூழல் ஆகியவற்றைப் பார்த்து சுருக்கமாகச் சொன்னால் மூழளச்சலவை (BRAIN WASH) பண்ணப்படுகிறான். புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகியவனிடம் சென்று உடனே அதை விடு என்றால் விடமாட்டான். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விடவைக்க வேண்டும். அது போலதான் மக்களையும் மாற்ற வேண்டும். 


வலைப்பதிவெழுதுவதால் என்ன செய்ய முடியும்?
தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை போன்ற ஊடகங்கள் செய்ய முடியாத எதையும் நாம் பெரிதாக சாதித்துவிடப் போவதில்லை ஆனால் நண்பனை விட எதிரி எம்மை அவதானித்துக்கொண்டிருப்பான், எனவே நமது வலைப்பதிவை நித்தியானந்தாவையோ, பகவானையோ பின்பற்றும் ஒருவன் படித்துத் திருந்தத்தேவையில்லை, படித்தால் மட்டும் போதும் அதுவே அவன் மனதில் மக்கள் நமக்கு எதிரிகளாகிவிட்டனர் என்று ஒரு பயத்தை உருவாக்கும்.


ஆனால் ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த சாமியார் என்ற பெயரில் ஏமாற்றிப்பிழைப்பவர்களுக்காக விளம்பரம் செய்யாதீர்கள். காசு கிடைக்கிறது என்பதற்காக போதைச்சாமியாரிடமும் வன்புணர்வு கொண்ட சாமியாரிடமும் மக்களை மாட்டிவிடாதீர்கள். 


ஒரு சிறுவன் அம்மா அங்கே சுனாமியடித்து 1000 பேர் பலியாம் என்கிறான், அதற்கு அம்மா போடா பொய் சொல்லாதே, இல்லை அம்மா பேப்பரில் போட்டிருக்கிறார்கள் என்கிறான். பத்திரிகை மக்களிடையே பிரபல்யம் அடைந்த அளவுக்கு வலைப்பதிவு இன்னும் பிரபல்யம் அடையவில்லை. தொலைக்காட்சியில் அழுகை நாடகங்களையும் குடும்பநாடகங்களையும் போடும் நாடகங்கள்தொலைக்காட்சி சேவைகள் இவர்கள் பற்றிஆராய்ந்து ஒரு நிகழ்ச்சியையோ? ஏன் ஒரு நாடகத்தையோ ஒளிபரப்பினால் மக்களை மாற்றமுடியும்.


நினைத்தவுடம் மாறு என்றால் மாறமாட்டார்கள் கொஞ்சம் கோஞ்சமாக மாற்ற வேண்டும், அதற்கு ஊடகங்கள் அனைத்தும் உதவவேண்டும். 
போலி போலி போலி எங்கும் போலி எதிலும் போலி, எங்கே கொண்டு போய்த் தலையை முட்டிக் கொள்வது. நேற்றிரவு 8.30 சன் செய்தி ஏற்படுத்திய பரபரப்பு அனைவருக்கும் தெரிந்திருக்கும். யாருமே பெரிதும் எதிர்பார்க்காத சாமியார் ஒருத்தர் மாட்டுப்பட்டார். நித்தியமும் ஆனந்தமாக இருக்க வேண்டும், கதவைத்திறவுங்கள் காற்று வரட்டும் என்றவருக்கு கதவைத்திறந்தால் ஊடகங்களின் கமராவும் வரும் என்று தெரியவில்லைப்போலும்.


இப்படி இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களை யார் கண்டுபிடிப்பது? கண்டுபிடித்தால் அதுக்குப்பிறகு மக்கள் இப்படியானவர்களை நம்பாமல் இருப்பார்களா? 


கட்டாயம் இல்லை, இன்று கதவைத்திற காற்று வரட்டும் என்பான், இன்னொருத்தன் நான்தான் அவதாரம் என்று சொல்லுவான், இன்னொருத்தன் மஜிக் பண்ணுவான். மக்கள் அதை நம்புகிறார்கள், காசை வாரி இறைப்பார்கள். அவன் ஏன் கதவைத்திறக்கச் சொல்லுறான் உங்களிடமிருந்து அப்பதானே கொள்ளையடிக்கலாம். இவர்களை மக்கள் நம்பக்காரணம் ஒன்றே ஒன்று இவர்களின் பேச்சு, "வாயுள்ள பிள்ளை பிழைக்கும்" என்பது எவ்வளவு உண்மை பாருங்கள். ஆனந்தம் என்பான், வாழ்க்கைத் தத்துவம் என்பான், அன்பு செலுத்துங்கள் என்பான் இதைத்தானே பத்தாம் ஆண்டு சமயப்புத்தகத்திலும் சொல்லியிருக்கிறார்கள்.


புத்தர், யுசு, நபிகள் இப்படியும் மகான்கள் இருந்தர்கள். ஆனால் இவர்கள் மாளிகைகள் கட்டவில்லை,மாலைபோடும் நிகழ்வு நடத்தவில்லை, ஏன் தாங்கள் அவதாரம் என்றோ கூறவோ மஜிக்கோ ஒன்றுமே செய்யவில்லை. மக்களோடு வாழ்ந்தார்கள். இறைவனை மட்டும் வணங்கினார்கள்.


அவர்களின் வழியில் வருகிறேன், நான் சாமி என்று கூறுபவர்களை நம்பி பணத்தை வாரியிறைக்கும் சமூகம் எப்போது திருந்தப்போகிறது. இப்படி எத்தனையோ பதிவுகள் வந்துவிட்டன. ஆனால் போலிகளை நம்பி ஏமாறும் கூட்டம் இருக்கத்தானே செய்கிறது. போலிச்சாமிகளை சனம் போகத்தானே செய்யுது. அரசாங்கம் இருக்குத்தானே போலீஸ் இருக்குத்தானே அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களை சொல்லிக்குற்றமில்லை, அவர்கள் போலிகளைக் கைது பண்ணவோ ஏன் விசாரணைகூட செய்யமுடியாத படி மேலிடத்து அதிகாரிகள் போலீசின் கைகளை கட்டிப்போடுகிறார்கள், அப்படி அதிகாரம் கிடைத்தாலும் ஏதாவது தவறுதலாக நடந்துவிட்டால் மதக்கலவரம் வந்துவிடும் என்ற பயம்.


இவற்றுக் கெல்லாம் ஒரே தீர்வுதான் இருக்கிறது. மக்கள் திருந்தணும் அல்லது போலிகள் திருந்தணும். போலிச்சாமிகள் திருந்துவது சாத்தியமல்ல, மக்களே தயவு செய்து இனி பிள்ளையார் முருகன் என்று கோயிலில் இருக்கிற சாமிகளை கும்பிடுங்கள். மனிதனை வணங்குவதென்றால் தாய் தந்தையை வணங்குங்கள். கண்ட கண்ட கேவலங்களை அல்ல...



ஓரே இருள், எங்கே இருக்கிறேன்? ஒன்றுமே புரியவில்லை. எழலாம் என்று எத்தனிக்கிறேன் முடியவில்லை. ஏதொ ஒரு பாரம், முதுகுப்பக்கத்தில் நரம்புகளுக்கு கைவிலங்கிட்டது போல இருக்கிறது. ஆ.... முடியவில்லை வலிக்கிறது எழும்ப முடியவில்லை. ம்... கட்டாயம் எழுந்தே ஆக வேண்டும், ஆம் இதோ இப்போது எழும்பிவிடுவேன், ம்ம்... ஆஹ்.... ஆ.... ஐயோ என்ன வலி முதுகு உடைந்து விட்டதா... வலியை பொறுத்துக்கொண்டு கற்குவியலுக்குள்ளிருந்து எழுந்து விட்டேன், அப்பாடா. 

கண்கள் கூசுகிறது, சற்று குளிர்வது போல உணர்கிறேன்.கண்களைத்திறந்து பார்க்கிறேன், கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை. கட்டடங்கள் கூட இல்லை. என்ன நடந்தது கொஞ்சநேரத்துக்கு முதல் ஆம் ஹாஹாஹா.... நான் பிழைத்துவிட்டேனா? பூமியைத்தாக்கிய விண்கல் என்னைத்தாக்கவில்லை, எல்லோரும் இறந்து விட்டனரா, நான் மட்டும் பிழைத்துவிட்டேனா? இனம்புரியாத மகிழ்ச்சி. 2012ஆம் ஆண்டு உலக அழிவிலிருந்து தப்பிவிட்டேன், நான் மட்டும்தான் தப்பியவனா? இந்த உலகிற்கே நான்தான் இப்போது சொந்தக்காரனா? 

"அடச்சீ என்ன மனிதனடா நீ உலகத்தில் உள்ள அனைவருமே அழிந்து விட்டனர், நீ பிழைத்தது உனக்கு மகிழ்ச்சியா?" மனச்சாட்சி எனக்குள் குமுறுகிறது. சரி முடிந்தது முடிந்து விட்டது.  கணனிக்கு முன் உட்கார்ந்து கார்பிளாக்ஸ் சாப்பிட்ட எனக்கு இன்று பழங்குடியினர் போல மரங்களில் உள்ள பழங்கள், இலைகளைச் சாப்பிட்டு பசியாற்ற வேண்டிய நிலை. சிலநாட்கள் இப்படியே கடந்தது. முதுகு வலியும் சற்றுக்குறைய எழுந்து நடக்கத்தொடங்கினேன். கால்போன போக்கில் போய்க்கொண்டிருக்கிறேன் வழியெங்கும் பிணங்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் கடக்கும் வாகனங்கள் செத்துப்போன கரப்பான் பூச்சிபோல கவிழ்ந்து கிடக்கிறது. 

யாரது? அவரா அது? அவனுக்கென்ன மரியாதை அது அவனா? அங்கே கொட்டில் அமைத்து என்னசெய்கிறான்? அட இங்கு குட்டிக் குட்டி உருவங்கள் வேறு இருக்கின்றனவே? ஆம் அந்தக் குட்டி உருவங்கள் இதுவரை செய்திகளிலும் படங்களிலும் பார்த்த ஏலியன்கள்தான், அவை எப்படி இவனுடன், அட யாரிந்த இவன் என்கிறீர்களா? காவி உடை, கையில் கமண்டலம் ஆம் இவன் அந்தப்போலிச்சாமியே தான். ஏலியன்களுடன் என்ன செய்கிறான், சற்றுகிட்டப்போய்ப்பார்க்கலாம் என்று போகிறேன், மனம் படபடக்கிறது.ஏதோ மந்திரம் சொல்கிறான், அவையும் (ஏலியன்களும்) சொல்கின்றன, அவனின் காலில் விழுந்து வணங்குகின்றன. 

திடீரென டிஜிட்டல் பதாகைகளுடன் மைக் போட்டுக் கத்தியபடி ஒரு ஏலியன்கள் கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. நடுவில் ஒருத்தர் மட்டும் வித்தியாசமாகக் காணப்படுகிறார், ஆம் அந்த அரசியல்வாதிதான், இவனும் பிழைத்துக் கொண்டானா? என்ன கொடுமை இது, நல்லவர்கள் யாருமே பிழைக்கவில்லையா? மீண்டும் மனச்சாட்சி குமுறுகிறது, கவலை தொற்றிக்கொள்கிறது. மீண்டும் இப்படியொரு சமூகத்தில் வாழவேண்டுமா? 

நீண்ட நேர நடைப்பயணம், கால்கள் கடுக்கிறது நிலத்தில் அமர்ந்து விட்டேன், களைப்பு மிகுதியால் கையை நில்த்தில் ஊன்றுகிறேன், அங்கே கையில் தட்டுப்பட்டது ஒரு மடிக்கணனி எடுத்துப்பார்க்கிறேன் வேலை செய்கிறது, அட வயர்லஸ் இன்டர் நெட் கூட வேலை செய்கிறது. அட உடனடியாக மடிக்கணனியில் அந்தப்போலிச்சாமி, அரசியல் போன்ற விடயங்களைப்பதிவிடவேண்டும் ஆனால் அந்த ஏலியன்களுக்கு எந்தமொழி தெரியுமோ? உடனடியாக யோசனை தோன்றுகிறது அவர்கள் பற்றிய வீடியோககளை பதிவிடுகிறேன், ஆம் என்னதான் உலகம் அழிவு ஏற்பட்டாலும் இப்படி ஒருசிலர் தப்பித்துக்கொண்டால் மனிதனென்ன எந்த உயிரினமும்,ஏலியன்களும் கூட அடிமையாகும் அவர்களுக்கு.

பி.கு - உலகம் அழியுதோ இல்லையோ அழிக்கப்பட வேண்டிய மூட நம்பிக்கையை அழிப்போம்.
யாரையாவது பன்னி என்று அல்லது நாயே என்று திட்டுயிருக்கிறீர்களா? அல்லது திட்டு வாங்கியிருக்கிறீர்களா? அப்படி திட்டு வாங்கியவர்கள் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் திட்டியவர்கள் வயது போனவனே என்று அழைப்பதற்குப்பதில் அவ்வாறு அழைத்திருக்கிறார்கள். என்னடா இவன் கதைக்கிறான் என்று விளங்கவில்லையா? அதாவது நான் கூறவந்த விடயம் என்னவென்றால் நான் இப்போதெல்லாம் விலங்குகளின் பெயரைச்சொல்லி என்னை யாராவது திட்டினால் அவர்களுக்கு நன்றி சொல்கின்றேன். என்னைப்பார்த்து அவர்கள் ரொம்ப நல்லவன் என்று சொல்லும்போது நானெப்படி பேசாமலிருப்பது. இந்த பதிவை எழுதத்தூண்டியது நான் அண்மையில் படித்த வைரமுத்துவின் கவிதைதான்.

மனிதனாக இருக்கும் நாங்கள் குரங்கு வந்தால் வெடி போடுகின்றோம், நாய் வந்தால் "அடிக்..." என்று கலைக்கின்றோம், மாட்டை"போ.. போ.." என விரட்டுகின்றோம். அட இதிலென்ன ஆச்சரியம் இதுதான் இன்று முதியவர்களின் நிலையும் பெற்றவள் நம் அம்மா, நாம் வளர்ந்ததும் அவள் சும்மா என்றுதானே இருக்கின்றது நம் இளைய நாகரிக சமுதாயம். அந்தக்கவிதையில் வைரமுத்து "மனிதா!! நீ விலங்கை வணங்கு குறிப்பாக குரங்கை கும்பிடு" என்று கூறியிருப்பார், அட நமது மூதாதையர்தானே குரங்கு.
இந்தப்படத்தைப்பாருங்கள் கடைசியில் கம்பீரமாக நடக்கும் நீங்கள் ஆரம்பத்தில் எப்படி இருந்தீர்கள் என்று. ஆனால் இப்போது உங்களுக்கும், உங்களுக்கும்(குரங்கு) கண்ணுக்குத்தெரிந்த வித்தியாசம் அந்த வால் மட்டும்தான்.
அந்தக்குரங்கு எவரிடமும் கையேந்தி நிற்பதில்லை, யாருக்கும் அடிமை வாழ்க்கை வாழ்வதில்லை, யாருக்கும் பயப்படுவதில்லை, எவரையும் நீ அந்த மதம், நான் இந்த மதம் என்று கூறி கழித்து வைப்பதில்லை, ஏன் மக்களை ஏமாற்றி போலிச்சாமி, போலி பொருட்கள், கலப்படம் என்று எதுவும் செய்வதில்லை. ஏன் தனது சகாவைப்பார்த்து பொறாமைகூடப்பட்டதில்லை. அதற்கு பசித்தால் உண்ணத்தெரியும், நித்திரை செய்யும், மனிதரைப்போல் பணம் சேர்த்து வைத்துவிட்டு நித்திரை கொள்ளமுடியாமல் தவிக்காது. அதற்கு பதவி, பட்டம், பணம் என்றால் என்ன என்றே தெரியாது. 

இன்று சுதந்திரம் சுதந்திரம் என்றும், நாங்கள் வல்லரசு என்றும் சொல்லிக்கொள்ளும் நாடுகளுக்கு உண்மையில் சுதந்திரம் உண்டா? இந்த விலங்குகளுக்கு உண்டு, ஆனால் வானமே அவற்றுக்கு கூரை, மண் அல்லது புல் தரையே அவற்றின் நிலம், இலைகுழைகளே அவற்றின் உணவு. 

அடுத்து ZOO என்ற பெயரில்அவற்றை அடைத்து வைத்திருக்கிறீர்கள், சுதந்திரம் சுதந்திரம் என்று வாய்கிழியப்பேசிவிட்டு அவற்றுக்கு மட்டும் ஏன் சுதந்திரம் இல்லை. ஒரு உண்மை தெரியுமா உங்களுக்கு? நீங்கள் வசிப்பது யாரின் இடம் தெரியுமா? அந்த விலங்கு மகான்களின் இடம்தான். அவர்களின் இடத்தை அழித்துத்தானே வீடு அமைத்தீர்கள்? அவற்றின் இடத்தில் புகுந்து கொண்டு நீங்கள் அவர்களையே துரத்துகிறீர்கள், அடிமைப்படுத்துகிறீர்கள்.அந்த விலங்குகள் உங்கள் பெயரில் வழக்குப்போட்டால் என்ன செய்வீர்கள்? (உங்களைவிட அவர்களுக்குத்தான் உரிமை அதிகம்) எனவே விலங்குகளை பற்றிய கீழ்த்தரமான எண்ணத்தைக்கைவிடுங்கள், உங்களுக்கு இருக்க இடம் கொடுத்த தெய்வங்கள் அவை

இனியாவது சிந்திதத்து செயற்படுங்கள் எருமை என்று யாரையும் திட்டும் முன் யோசியுங்கள் அவன் நான்தான் உன் மூதாதையன் உன் வீட்டைக்காலி பண்ணு என்று சொல்லிவிடப்போகிறான்.

வைரமுத்துவின் விலங்கு கவிதையை படிக்க இங்கே சொடுக்குங்கள்.

நீங்கள் ரொம்ப நல்லவராக இருந்தால் உலகம் உங்களை விரும்புமா?
பின்வரும் விடயங்களை படித்துவிட்டு நீங்களே கூறுங்கள்


இருகுழந்தைகள் 



ஒன்று குழப்படியே செய்வதில்லை. மிக அமைதியாக இருக்கிறது. யாருடனும் விளையாடவில்லை. தானும் தன்பாடும் என்று இருக்கிறது. பசி என்று அழுவதோ இல்லை தாயை போட்டு ஏதேனும் விடயத்துக்காகப் பிச்சுப்பிடுங்குவதோஇல்லை.


மற்றைய குழந்தை. இது குழப்படி என்றால் அப்படி ஒரு குழப்படி, என்னை மழலை மொழியால் அழைக்கிறது. "அண்ணா இங்கே பாங்கோ", நானும் ஓடிச்சென்று என்ன என்று கேட்க எனது கையைப்பிடித்து வீட்டுக்கு வெளியே அழைத்துச்செல்கிறது. ஒரு இடத்தில் நின்று தனது காற்சட்டைப்பையை இழுத்துப்பிடிக்கச்சொல்கிறது. சரியென நானும் பிடிக்க உடனடியாக நிலத்திலிருந்து மண்ணை அள்ளி தனது காற்சட்டைப்பைக்குள் போடுகிறது.


இரண்டு ஆறு, ஏழு வயது நிரம்பிய பிள்ளைகள்.



முதலாவது பிள்ளை மிக அமைதியான பிள்ளை. பாடசாலையிலும் சரி, வீட்டிலும் சரி ஆசிரியர் அல்லது அம்மா சொல்வதைத்தவிர வேறு எதையும் கேட்பதில்லை. வீட்டில் செய்யும் ஒவ்வொரு வேலைகளுக்கும் "அம்மா இதைச் செய்யவா? , அம்மா அதைச்செய்யவா?" என்று அனுமதி கேட்கிறது.


அடுத்த பிள்ளை, மிகவும் சுட்டித்தனமான பிள்ளை. பாடசாலையில் ஆசிரியருக்கே பல கதைகள் சொல்லும், வீட்டில் குளிரூட்டியில் வைத்திருக்கும் ஐஸ் கிறீமை அம்மா திட்டுவாரெனத் தெரிந்தும் லாவகமாக அதை அம்மாக்குத் தெரியாமல் எடுத்து உண்ணும், எனக்கும் தந்து.


இரண்டு பாடசாலை மாணவர்கள்



முதலாமவன் நன்றாகப் படிக்கக்கூடியவன். மிகுந்த புத்திசாலி. வகுப்பில் புத்தகப்புழு, யாருடனும் பெரிதாக சண்டையோ, வகுப்புக்குள் விளையாடுவதோ இல்லை. மனதுக்குள் விளையாட ஆசையிருந்தாலும் ஆசிரியர்களிடம் தனக்கிருக்கும் நல்ல பெயர் கெட்டு விடுமோ என்ற பயத்தின் காரணமாக விளையாடுவதில்லை. ஆசிரியர் யார் வகுப்பில் விளையாடியது என்று கேட்டால் மாட்டிக்கூட விடுவான்.


இரண்டாமவன் ஓரளவு நன்றாகவே படிப்பான், ஆனால் அடிக்கடி வகுப்பு நேரத்தில் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று ஏதாவது வாங்கி வந்து வகுப்பிற்கே தானம் சென்து தானும் சாப்பிடுவான். வகுப்பில் ஆசிரியர் வராத நேரங்களில் அடிக்கடி வகுப்புக்குள் கிரிக்கெட் போட்டிகள் ஒழுங்கு செய்வான். அடிக்கடி ஆசிரியரிடம் அகப்பட்டாலும் தனது சகாக்களை ஒருநாளும் காட்டிக்கொடுக்கமாட்டான். பாடசாலை முடிந்ததும் அருகாமையில் உள்ள பெண்களை வீட்டுக்கு கொண்டு போய் பத்திரமாக சேர்த்துவிட்டுத்தான் வீடு செல்வான்


இரு குடும்பஸ்தர்கள்



முதலாமவர் தனது கல்வி மூலம் உயர்ந்தவர். மிகுந்த அறிவாளி. தானுண்டு தன் குடும்பமுண்டு என்று இருப்பவர். எந்தக்காரியத்திலும் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கமாட்டார். வீதியில் ஒருவன் விபத்துக்குள்ளாகி கிடந்தாலும் எல்லாம் அவனின் விதி என்று கூறிவிட்டு தனக்கேன் வம்பு என்று நழுவி விடுவார்.(உதவி செய்ய ஆசையிருந்தும்)


இரண்டாமவர் ஓரளவுக்குகல்வி கற்றிருந்தாலும், யாராவது உதவி என்று கேட்டால் உடனடியாக எதையும் எதிர்பாராது செய்பவர்கள், யாருக்கு பிரச்சினை என்றாலும் தேடிப்போய் உதவுபவர். ஆனால் என்ன சற்று குடிப்பழக்கமுடையவர். 


மேலே குறிப்பிடப்பட்ட எட்டு நபர்களுக்குள் உங்களுக்கு மிகவும் பிடித்த நபர்கள் யார்யார்? நான்கு பிரிவிலும் முதலாமவரா? அல்லது இரண்டாமவரா? மிகுந்த படித்தவனாக இருந்தாலோ அல்லது நல்லவனாக இருந்தாலோ அனைவருக்கும் அவர்களைப் பிடிப்பதில்லை.


கூடுதலாக முதலாமவன் சமூகத்தில் உயர்ந்தவன் என்று பெயர் வாங்கியிருப்பான், ஆனால் அவர்களில் மனதுக்குள் செய்யவேண்டும் என நினைக்கும் பல காரியங்களை தன்னைப்பற்றி தப்பாக கருதிவிடுவார்களோ என்று அவர்கள் ஒரு காரியத்தையும் செய்வதில்லை. இப்படிப்போலி வாழ்க்கை வாழ்வதது சரியா? குழப்படிகள் செய்யாதவர்கள் அனைவரும் நல்லவர்களும் இல்லை, குழப்படிகள் செய்பவர்கள் அனைவரும் கெட்டவர்களும் இல்லை. 


எனவேதான் குழப்படிகளும் செய்ய வேண்டும், அளவோடு. சிறுவயதில் செய்யும் குழப்படிகள் எமக்கு எதிர்காலத்தில் சிறந்த நினைவுகள் மட்டுமல்ல, சிறந்த அனுபவங்களும் கூட. நாம் எம் மனம் சொன்னபடி வாழவேண்டுமே தவிர நல்ல பெயருக்காகவோ அல்லது பிறர் ஏதும் சொல்வார்கனோ எனப்பயந்து வாழ்ந்தால் எத்தனையோ விடயங்களை இழந்து விடுவீர்கள். 


********************************************************************************************************

எருமை தெரியுமா?
முன்பு ஒருநாள் தொலைக்காட்சியில் நடந்த "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு" நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் பேசிக்கொண்டிருந்தது காதில் கேட்டது அடடா என்ன ஒரு அருமையான விடயம் அது...



ஒரு நாட்டுப்புற ஊருக்குச் சென்ற ஒருவர் மக்களைச் சில விடயங்கள் கேட்டார், 

அவர் -மனிதன் மாதிரி ரோபோ இருக்கு தெரியுமா?
மக்கள் -தெரியாது
அவர் -computerல கடிதம் அனுப்பலாம் தெரியுமா?
மக்கள் - தெரியாது
அவர் -பாங்கில லொக்கர் இருக்கு தெரியுமா?
மக்கள் - தெரியாது
அவர் - பெரிய பெரிய ரோட்டெல்லாம் இருக்கு தெரியுமா?
மக்கள் -தெரியாது
அவர் பொறுமையிழந்து எதிரே ஒரு எருமைக்கடா வர, அதைப்பார்த்துவிட்டு
எருமை தெரியுமா? எனக்கேட்க......

மக்கள் - ஓ... தெரியுமே.... எமனின் வாகனம் என்றனர்.

கண்ணுக்குத்தெரிபவற்றை தெரியாது..தெரியாது என்று கூறும் மக்கள் கண்ணுக்குத்தெரியாத எமனையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்ன கொடுமை இது, இப்படித்தான் போலிச்சாமிகளையும் சனம் நம்புகிறது, என்று தீரும் இந்த மூடநம்பிக்கை...ஹிம்ம்
************************************************************************************
வைத்தியசாலைகள் வாழ்க

திருகோணமலை தனியார் வைத்தியசாலையில் நடந்தது இது, அங்கு BLOOD SUGER செக் பண்ணச் சென்ற எனது பாட்டிக்கு மிக அதிகமாக இருக்கிறது என்று கூறிவிட்டார்கள் (இதுக்கு அவர் வீட்டில் இனிப்பே சாப்பிடுவதில்லை). சரி அந்த வைத்தியசாலையிலுள்ள வைத்தியரிடம் மருந்து எடுக்கலாம் என்று பார்த்தால் வைத்தியர் வரவில்லை(நல்லகாலம்).


உடனே வெளியே எங்களுக்கு தெரிந்த ஒரு வைத்தியரிடம் ஒருவரிடம் சென்று நாங்கள் எடுத்த BLOOD SUGERக்கான ரிப்போட்டைக்காட்ட முற்பட்ட போது "எங்கே அந்த (வைத்தியசாலையின் பெயரைக்குறிப்பிட்டு) வைத்தியசாலையிலா எடுத்தீர்கள்?" அதை எனக்குக்காட்ட வேண்டாம் அது முற்றிலும் பிழையாகத்தான் இருக்கும், என்றுவிட்டு அவர் தான் செக் பண்ணியபோது NORMAL ஆக இருந்தது.


என்ன கொடுமை இது, அங்க தொட்டு இங்க தொட்டு வைத்தியசாலைவரை வந்துவிட்டது. வைத்திசாலையில் பிழையான ரிப்போட் வழங்கப்படுவது அறிந்து வைத்தியரை ஒரு நடவடிக்கை எடுக்க முற்படாதது கவலைக்குரிய விடயம்.(அந்த ரிப்போட்டைப் பார்க்காததைத்தவிர)




************************************************************************************
வாழ்த்துக்கள்









நேற்று முன்தினம் பிறந்தநாளைக்கொண்டாடிய யோ அண்ணாவுக்கும் இன்று பிறந்தநாளைக்கெண்டாடும் கடலேறி ஆதிரை அண்ணா மற்றும் பங்குச்சந்தை அச்சு அண்ணாவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.



தமிழ்மணம் போட்டியில் வெற்றி பெற்ற எமது பதிவர்கள் வந்தி அண்ணா, லோசன் அண்ணா மற்றும் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பிலும் சளைக்காது போட்டி போட்ட பதிவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


************************************************************************************

திரிசாவுக்கு கல்யாணம்

இவருக்கு வரன் பார்க்கிறார்களாம் முடிந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்..ஹீஹீ



தலைப்பைப்பார்த்தவுடன் யாரையோ திட்டி எழுதியிருக்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். இது சாதாரணமாக கோபப்படுபவர்களுக்கான பதிவு. யாருக்குத்தான் கோபம் வருவதில்லை, 


ஏன் கோபம் வருகிறது?


எமக்குப்பிடிக்காத ஒரு விடயம் நடக்கின்றபோது, நாம் சொல்வதை ஒருவர் கேட்காதபோது, ஏன் ஒருவர் நாம் சொல்வதை ஒழுங்காக விளங்கிக்கொள்ளாத போது கோபம் வருகிறது. 


அதுவும் நாம் யாரிடத்தில் கோபத்தைக்காட்டுகின்றோம்? 
சின்னக்குழந்தை தன் அம்மாவிடம் கோபத்தைக்காட்டும், சிறுவன் ஒருவன் தனது விளையாட்டுப்பொருட்களிடம், இளைஞன் நண்பர்களிடம், ஏன் குடும்பஸ்தர்கள் தமது குடும்பத்திடம், முதியவர்கள் தமக்குத்தாமே(அவர்களால் வேறு என்ன செய்ய முடியும் முணுமுணுத்துக்கொள்வார்கள்).


இப்படி உங்கள் கோபத்தை பிறரிடம் காட்டுவதால் கிடைப்பது என்ன?
எமக்கு மன அழுத்தம், மன அழுத்தம் அதிகரிக்க கவலை அதிகரிக்கும் கவலை அதிகரிக்க குடும்ப அமைதி குலையும் குடும்ப அமைதி குலைய பிறகு...? இதுதான் கோபத்தால் உங்களுக்குக்கிடைப்பது.


கோபம் வரும்போது என்ன செய்யலாம்?
கோபம் வரும்போது ஒரு நிமிடம் யோசியுங்கள் நான் கோபப்பட்டு என்ன பயன் என்று? ஒன்றுமே இருக்காது? சரி உதாரணத்துக்கு கோபப்பட்டு ஒருவனுக்கு நீங்கள் அடிக்கிறீர்கள் அத்துடன் உங்கள் கோபம் தீர்ந்து விட்டதா? அல்லது அடிவாங்கியவன்தான் தன் தவறை உணர்ந்து திருந்திட்டானா? ஒன்று திருப்பி நீங்களும் அடிவாங்குவீர்கள் அல்லது அது கைகலப்பாக மாறும். ஆகவே கோபம் எல்லோருக்கம் வருவதுதான் அதைக்கட்டுப்படுத்த சில வழிகள்.

  1. கோபம் வரும்போது உங்கள் முகத்தைக்கண்ணாடியில் பாருங்கள் எவ்வளவு கேவலமாக இருக்கும் என்று.
  2. அடுத்து கோபம் வரும்போது ABCDஐ தலைகீழாகச்சொல்ல முயலுங்கள்.
  3. சரி ஒருவர் உங்களை விடாமல் திட்டுகிறார் கோபம்கோபமாக வருகிறது என்னசெய்யலாம் போசாமல் இருங்கள் முடியவில்லையா விரும்பிய பாடலை மனதுக்குள் பாடுங்கள்.
  4. அல்லது திட்டுபவரின் முகத்தைப்பாருங்கள் அவர் ரொம்ப கஷ்டப்பட்டுத்திட்டிக்கொண்டிருப்பார், ஆனால் அவரது முகத்தை உற்றுப்பாருங்கள்(முறைத்து அல்ல) நகைச்சுவையாக இருக்கும்.
  5. கோபத்தை எமன் என்று நினைத்துக்கொள்ளுங்கள், 
எனவே கோபத்தை அடக்குவதால் ஆயுள் அதிகரிக்கும், அதாவது மனஅழுத்தம் குறையும் எனவே கோபத்தைக்குறைத்து கோடிகாலம் வாழ்வோம்.



அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள், கோபம் அழிந்து மகிழ்ச்சி பொங்கட்டும்



முன்னொரு காலத்திலே ஒரு அப்பிள் மரம் இருந்தது, அந்த மரத்துடன் ஒரு சிறுவன் விளையாடுவது வழக்கம், அந்த மரத்திற்கும் இந்தச்சிறுவனை மிகவும் பிடிக்கும். அந்தச்சிறுவன் அம்மரத்தைச்சுற்றி ஓடி விளையாடுவான், மரத்தில் ஏறி அப்பிள் பழங்களை உண்ணுவான், பின் அந்த மரத்தடியிலேயே படுத்து உறங்குவான்.


சிலகாலங்களுக்குப்பிறகு அந்தச்சிறுவன் சற்று வளர்ந்தவனாய் மரத்திடம் வர, அந்த மரம் வந்து என்னுடன் விளையாடு என்றது, எனக்கு உன்னுடன் மட்டும் விளையாடமுடியாது எனக்கு விளையாட்டுப்பொருட்கள் வேண்டும் என்று சிறுவன் கேட்டான்.


அதற்கு அந்த மரம் என்னிடம் பணமில்லை நீ வேண்டுமானால் என் பழங்களை விற்று, அதில் வரும் காசில் விளையாட்டுப்பொருட்கள் வாங்கிக்கொள் என்றது. உடனே சிறுவனும் மகிழ்ச்சியுடன் அனைத்துப் பழங்களையும் பறித்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.


அதன்பின்னர் அவன் அந்தப்பக்கம் வரவே இல்லை, வருடங்கள் உருண்டோடின, வாலிபனாக வளர்ந்திருந்த அந்தச்சிறுவன் மரத்திடம் வந்தான். உடனே வா வந்து என்னுடன் விளையாடு என்றது மரம். உன்னுடன் விளையாட எனக்கு நேரமில்லை நான் எனது குடும்பத்தைக்காப்பாற்றவேண்டும் அதற்கு உழைத்து பணம் திரட்ட வேண்டும் என்றான். நானும் என் குடும்பமும் பாதுகாப்பாக இருக்க ஒரு இடம் வேண்டும் நீ எனக்கு உதவி செய்வாயா? என்று கேட்டான்.


என்னிடம்இருப்பிடம் ஏதும் இல்லை நீ என் கிளைகளை வெட்டி வீடு அமைத்துக்கொள் என்றது மரம். உடனே அவனும் அனைத்துக்கிளைகளையும் வெட்டியெடுத்துக்கொண்டு போய்விட்டான்.


மீண்டும் சிலவருடங்களுக்குப்பிறகு மீண்டும் அவன் வந்தான், இப்போது முதியவனாக, மரமும் வழக்கம்போல வந்து என்னுடன் விளையாடு என்றது, எனக்குவயதாகிவிட்டது, உன்னுடன் விளையாட முடியாது, நான் எனது முதுமைகாலத்தில் ஓய்வெடுக்க ஒரு படகு வேண்டும் என்றான்.


என்னிடம் ஏது படகு இதோ என் உடலைவெட்டி படகு செய்துகொள் என்றது மரம். அவனும் மரத்தைத்தறித்து படகு செய்து கொண்டான்.


மேலும் சிலகாலங்கள் உருண்டோடின மரக்குற்றிக்கருகில் ஒரு தள்ளாடித்தள்ளாடி (அந்தச்சிறுவன்தான்) முதியவர் வந்தார், உடனே அந்த மரம் தம்பி மன்னித்துவிடு என்னிடம் இப்போது தருவதற்கு எதுவுமில்லை என்றது மரம். அதற்கு அவன் எனக்கு நடந்து வந்தது மிகவும் களைப்பாக இருக்கிறது, ஓய்வெடுக்க இடம்வேண்டும் என்று அந்த மரக்குற்றியில் அமர்ந்துகொண்டான்



பின்குறிப்பு:மின்னஞசலில் வந்த கதை, மொழிபெயர்ப்புடன் பகிர்கிறேன் 

2009ல் இலங்கைப்பதிவுலகம்
  • வந்தி அண்ணா, புல்லட் அண்ணா, லோசன் அண்ணா, ஆதிரை அ்ண்ணா ஆகியோரின் ஏற்பாட்டில் முதலாவது பதிவர் சந்திப்புகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
  • முதலாவது சந்திப்பின் பின்னர் இலங்கையில் பதிவு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
  • முதலாவது சந்திப்பின் பின்னர் பதிவர்களுக்கிடையில் நல்ல நட்பு உருவானது, இதற்கு சிறந்த உதாரணமாக சில நாட்களுக்கு முன்னர் பலரின் வலைகளில் வைரஸ் புகுந்தது கங்கோனின் உதவியுடன் அவற்றைப் பலர் நீக்கிவிட்டார்கள்.
  • இலங்கைப் பதிவர்களுக்காக கிடுகு திரட்டியின் வருகை
  • லோசன் அண்ணா, வந்தி அண்ணா ஆகியோரின் பதிவுகளுக்கு சில கறுப்பாடுகளால் யாழ்தேவி திரட்டியில் மைனஸ் வோட்டுக்கள் குத்தப்பட்டன.
  • அதன் பின் இடம்பெற்ற இருக்கிறம் அச்சுவலைச்சந்திப்பு பதிவர்களுக்கு பயனுள்ளதாக அமையாததால் பதிவர்களின் மனம்குமுறல் பதிவுகளாக வெடித்தது.
  • இவ்வாறு கவலையடைந்த பதிவர்களை சுபாங்கன் அண்ணா படப்பதிவு போட்டு மகிழ்ச்சியடையச் செய்தார்.
  • சுபாங்கன் அண்ணா 400க்கு அதிகமாக பின்னூட்டமிட்டுப் பந்தாடப்பட்டார்.
  • புல்லட் அண்ணா பதிவர்களை கும்மு கும்மென்று கும்மி ஒரு கும்மல் பதிவு போட்டார்.
  • கனககோபி அண்ணா, சுபாங்கன் அண்ணா ஆகியோர் போலிச்சரியார்களின் முகத்திரையைக்கிழிக்கும் பதிவுகளை வெளியிட்டனர். 
  • கூகிள் குழுமத்தில் பதிவர்கள் கலந்துரையாடவும், பதிவுகளைப்பகிரவும் இலங்கை தமிழ்ப்பதிவர் குழுமம் ஆரம்பிக்கப்பட்டது.
  • கனககோபி அண்ணாவுக்கு பின்னூட்டமிடுவது பற்றி அனானி ஒருவர் மிரட்டி விட்டுப்போனார்.
  • கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு மயூரன் ஆகியோரின் ஏற்பாட்டில் இரண்டாவது பதிவர் சந்திப்பு இனிதே நடந்தது.
கிரிக்கெட்
  • சனத்ஜெயசூர்யா மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இந்த வருடத்தில் தமது 20வது ஆண்டு கிரிக்கெட்வாழ்க்கையைக் கடந்தனர்.
  • இந்த ஆண்டு அதிக ஓட்டங்களைப்பெற்ற அணிகளின் விபரம்
டெஸ்ட்
  1. பாகிஸ்தான் அணி- 765 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(21.02.2009ல் கராச்சி மைதானத்தில்)
  2. இலங்கை அணி- 760 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணிக்கு எதிராகப்பெற்றது.(16.09.2009ல் அஹமதாபாத் மைதானத்தில்)
  3. மேற்கிந்திய தீவுகள் அணி- 749 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராகப்பெற்றது.(26.02.2009ல் ராஜ்கோட் மைதானத்தில்)
ஓருநாள்
  1. இந்தியா அணி- 414 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(15.12.2009ல் ராஜ்கோட் மைதானத்தில்)
  2. இலங்கை அணி- 411 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணிக்கு எதிராகப்பெற்றது.(15.12.2009ல் ராஜ்கோட் மைதானத்தில்)
  3. இந்தியஅணி- 392ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, நியூசிலாந்துஅணிக்கு எதிராகப்பெற்றது.(08.03.2009 கிரிஸ்ட்சேர்ச் மைதானத்தில்)
ருவென்ரி-20
  1. தென்னாபிரிக்க அணி- 241ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(15.11.2009ல் சென்சூரியன் மைதானத்தில்)
  2. இலங்கைஅணி- 215ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணிக்கு எதிராகப்பெற்றது.(09.12.2009ல் நாக்பூர் மைதானத்தில்)
  3. இந்தியா அணி- 211 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(12.12.2009ல் மொஹாலி மைதானத்தில்)
  • இந்த ஆண்டு குறைந்த ஓட்டங்களைப்பெற்ற அணிகளின் விபரம்
டெஸ்ட்
  1.  இங்கிலாந்து அணி- 51 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, மேற்கிந்தியதீவுகள் அணிக்கு எதிராகப்பெற்றது.(04.02.2009ல் கிங்ஸ்டன் மைதானத்தில்)
  2. பாகிஸ்தான்  அணி- 90 ஓட்டங்களுக்கு சகல  விக்கெட்டுகளையும் இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(12.07.2009ல் கொ/பிரேமதாச மைதானத்தில்)
  3. நியூசிலாந்து அணி- 91 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, பாகிஸ்த்தான்அணிக்கு எதிராகப்பெற்றது.(09.12.2009ல் வெலிங்டன் மைதானத்தில்)
ஓருநாள்
  1. சிம்பாபேஅணி- 44 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, பங்களாதேஸ்அணிக்கு எதிராகப்பெற்றது.(03.11.2009ல் சிட்டகாங் மைதானத்தில்)
  2. பாகிஸ்தான் அணி- 75 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(24.01.2009ல் லாகூர் மைதானத்தில்)
  3. சிம்பாபேஅணி- 80ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(12.01.2009 டாக்கா மைதானத்தில்)
ருவென்ரி-20
  1. ஸ்கொட்லாந்து அணி- 81ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, தென்னாபிரிக்க அணிக்கு எதிராகப்பெற்றது.(07.06.2009ல் ஓவல் மைதானத்தில்)
  2. நெதர்லாந்து அணி- 93ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, பாகிஸ்தான் அணிக்கு எதிராகப்பெற்றது.(09.06.2009ல் லோட்ஸ் மைதானத்தில்)
  3. நியூசிலாந்து அணி- 99ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, பாகிஸ்தான் அணிக்கு எதிராகப்பெற்றது.(13.06.2009ல் ஓவல்  மைதானத்தில்)
  • துடுப்பாட்டத்தில் சூறாவளி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டில்சானும், இலங்கையின் ஆஸ்த்தான தொடக்க வீரராக இதுவரை இருந்து வந்த சனத் தற்போது அணியில் நிலையில்லாமல் இருக்கிறார், இந்த நிலையில் இவர்களுக்கு இரவு விடுதி, களியாட்டம் இதெல்லாம் தேவையா?
  • இந்த ஆண்டின் கடைசி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மோசமான ஆடுகளம் காரணமாக கைவிட்ப்பட்டது.
  • இலங்கை அணியின் டில்சான், சனத், மெத்தியூஸ், வெலிகெதர, முரளிதரன் ஆகிய வீரர்கள் இந்தியாவில் கடைசியாக நடந்த தொடரில் காயமடைந்தனர்.
  • வட்சன், சைமன் கட்டிச் ஆகியோர் நகைச்சுவையாக ஒரு ஆட்டமிழப்பு நிகழ்ந்தது.
  • அந்தப்போட்டியில் இருவருமே சதத்தை அண்மித்து ஆட்டமிழந்தது கவலைக்குரிய விடயம்(வட்சன்-93,சைமன் கட்டிச்-98)
******************************************************************************************************************
கடைசிவரை நடக்காது
புதுவருடம் பிறக்கப்போகிறது. 2010ம் ஆண்டும் வரப்போகிறது. வழக்கமாக புதுவருடமென்றால் நாம் அனைவரும் எங்களிடமுள்ள ஏதாவது தீயகுணங்களைச் செய்வதில்லை, சில நல்ல விடயங்களைச் செய்வது என்று முடிவெடுப்பதுண்டு. அதைக்கடைப்பிடிக்கிறோமா இல்லையா என்பது வேறு விடயம்.



அந்த வகையில் இவர்கள் இப்படி முடிவெடுத்தால் எப்படியிருக்கும்.
  • டில்சான்- இனிநான் கிரிக்கெட் விளையாடுவதில்லை.
  • சேவாக்- இனி சிக்சரே அடிப்பதில்லை.
  • ரஜனி- பஞ்ச் டயலாக் சொல்வதில்லை.
  • கஞ்சாகருப்பு- ஹீரோவாக நடிக்கப்போகிறேன்.
  • நமீதா- குடும்பப்பாங்கான பாத்திரங்கிளில்மட்டுமே நடிப்பேன்.
  • கோப்பிப்பதிவர்- இனிச்சிரிப்பதில்லை, ருவிட்டுவதில்லை.
  • டுமீல் பதிவர்- இனி மொக்கைப்பதிவு எழுதுவதில்லை.
  • அனானிகள்- இனி அனானியாக பின்னூட்டமிடுவதில்லை.
  • உளறும் பதிவர்- ஹாட் அண்ட் சவர் சூப்பில் படம் போடுவதில்லை.
  • விஜய்- இனி கெட்டப் மாத்திப்படம் (நல்ல) நடிப்பேன்.
  • தொலைக்காட்சி சேவைகள்- இனி நிகழ்ச்சிகளுக்கு நடுவே விளம்பரமே போடுவதில்லை.
  • சீரியல் பார்த்து அழுவோர்- இனி சீரியலே பார்ப்பதில்லை.
  • 155 பஸ்- 15 நிமிடத்தில் வெள்ளவத்தைக்குப் போவேன்.
  • பெட்டிப்பதிவர்- இனி சிகையலஙங்காரம் செய்ய சலூனுக்கு அடிக்கடி செல்வேன்.
  • போலிச்சாமியார்கள்- இனி மக்களை ஏமாற்றுவதில்லை.
  • அரசியல்வாதிகள்நாட்டுக்க நல்லது செய்யப்போகிறேன்
முடிந்தால் 2010இலிருந்து நீங்கள் கடைப்பிடிக்கப்போகும் நல்ல பழக்கம், கைவிடப்போகும் தீயபழக்கம் என்பவற்றை சொல்லிட்டுப் போங்க.. 
****************************************************************************************************************
வாழ்த்துக்கள்-2010
இந்த ஆண்டின் கடைசிப்பதிவு இது என்பதால் அனைத்துப்பதிவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.











சரி நண்பர்களே 2010ல சந்திக்கலாம்.....




    இணைப்பாவனையாளர்கள் யாருமே இந்தப் பேஸ்புக்கை பாவிக்காமல் இருந்திருக்கமுடியாது. ஒரு சமுக தளமாகக்காணப்படும் இது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை இங்கே சிறியவர்முதல் பெரியவர் கட்டுண்டு கிடக்கின்றனர். FARM VILLA, BARN BUDDY, CAFE WORLD போன்ற எக்கச்சக்க விளையாட்டுக்கள், அதுமட்டுமன்றி இலவசமாக செலவில்லாமல் பரிசு கூட வழங்கலாம். இப்படியான வசதிகள் பல காணப்படுவதாலேதான். இது அதிகமாக எல்லோராலும் விரும்பப்படுகிறதோ என்னாவொ 



    ஆனால் பேஸ்புக் இப்போது பேஃக் புக்(FAKE) ஆகிக்கொண்டு செல்கிறது என்றுகூறினால் பிழையில்லை. ஹக்கிங் செய்வதும் மிக இலகுவாக்கப்பட்டிருக்கிறது. பலர் எப்படி ஹக் பண்ணுவது என்று விளக்கம் கொடுத்து வீடியோ கூட வெளியிட்டுள்ளனர். 


    எமது STATUS UPDATEகளுக்கு இரகசியத்தன்மை(privacy) வழங்கும் பேஸ்புக் இதற்கும் ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நல்லது. அதுமட்டுமன்றி பாவனையாளர்களுக்கே APPLICATIONனளை உருவாக்கும் வசதியை இது வழங்குவதால் பேஸ்புக் வைரஸ் பரப்புவது இலகுவாகிவிட்டது. தற்போது புதிதாக பேஸ்புக்கில் காணப்படும் வீடியோ அரட்டை(VIDEO CHATTING) முலம் வைரஸ் பரப்பப்படுவதாக பாதிக்கப்பட்ட நண்பர்கள் கூறினார்கள்.



    நேரடியாகக்கண்ட பேஸ்புக் வைரஸ்
    நான் எனது நண்பர்கள் சிலரை ஒரு லிஸ்ட்டில் வைத்திருக்கிறேன். வழமையாக முஞ்சிப்புத்தக அரட்டையில் உள்ளோரின் பகுதியில் அந்த லிஸ்ட்டில் உள்ளோர் வேறாகவும் மற்ற நண்பர்கள் வேறாகவும் காட்டப்படும். ஆனால் அன்று இரண்டு இடங்களிலும் ஒரே நண்பரின் பெயரைக்காட்டியது. நான்கூட ஒருமுறை பேஸ்புக்கால் அறிவுறுத்தப்பட்டேன். 


    ஆனால் பேஸ்புக் அறிவுறுத்தல் என்ற பெயரில் சில வேளைகளில் வைரசும் தாக்கலாம். எனவே பேஸ்புக் பாவனையாளர்கள் தேவையற்ற குழுமங்களில் சேருவதையோ, தெரியாத நபர்களை நண்பர்குழுமத்தில் இணைப்பதையோ தவிர்த்துக்கொண்டால் உங்கள் பேஸ்புக்கை ஓரளவு காப்பாற்றிக்கொள்ளலாமே தவிர இதுவரை எந்தத் தீர்வையும் எடுக்காத பேஸ்புக் நிர்வாகம் இதற்கு இனியும் எந்தவித தீர்வையும் எடுக்கப்போவதில்லை.

    பேய் இருக்கிறதா

    பதிவிட்டவர் Bavan | நேரம் 1:11 PM | 9 பின்னூட்டங்கள்
    நேற்று முன்தினம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. ஒரு சாமியாரும் (பேயோட்டி என்றும் சொல்லலாம்) அவரது குழுவும், மறுபக்கம் பேய் இல்லை என்று கூறி ஒரு குழு.

    • நடந்தது என்ன?
    அந்தப்பேய் இல்லை என்று வாதிடும் குழுவில் ஒருவர் பேயோட்டி சாமியாருக்கு 30நாட்கள் கெடு கொடுத்து முடிந்தால் எனக்கு பேய்பிடிக்க வைத்துக்காட்டுங்கள் என்று கூறியிருந்தார். ஆனால் அந்த பேய் சாமியாரால் அவருக்க பேய் பிடிக்க வைக்க முடியவில்லை. 
    • அதற்கு அந்த சாமியின் பதி்ல்
    நான் எனது தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் ஆனால் பேய் இல்லை என்பதை என்னால் ஏற்க முடியாது என்கிறார்.


    என்னதான் இருந்தாலும் பேய் என்று ஒன்று இருந்தால்தானே அவர் அதை ஏவி விடுவதற்கு. இப்படியான நிகழ்ச்சிகள் வரவேற்கத்தக்கன. வீடுகளில் பல தசாப்தங்களாக நடைபெறும் தொடர் நாடகங்களைப்பார்த்து கண்ணீர் விடுவோர் இந்த நிகழச்சிகளையும் பார்த்தால் நல்லது.


    அங்கு கூறப்பட்ட இன்னொரு கருத்து காய்ச்சல் , தலைவலி என்றால் நாம் மருத்துவரிடம் சென்று எனக்க காய்ச்சல், தரைவலி என்று கூறி மருந்து கேட்கலாம் ஆனால் மனஅழுத்தம் மற்றும் மனோவியல் சம்பந்தமான நோய்களுக்கு நாம் யாருமே வைத்தியரிடம் சென்று எனக்கு மனநிலை சரியில்லை என்று கூறி வைத்தியம் பெறுவதில்லை. 



    எனவே அதை சாதகமாகப்பயன்படுத்தம் இந்த சாமியார் வேடம் பூண்ட போலிச்சாமிகள் உங்கள் பிரச்சினையை நாம் தீர்க்கிறோம் என்ற பெயரில் அந்தப்பூசை இந்தப்பூசை, செய்வினை பணியாரம் என்று ஏதேதோ பெயரையெல்லாம் பயன்படுத்தி போலிச்சாமிகள் எமது காசையும் கறந்துகொள்கிறார்கள்.


    எத்தனை நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெரிய தலைகளின் தலையீடுகள் இருப்பதால் இன்னும் ஏமாற்றி வாழும் சாமிகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். எப்போது மூடநம்பிக்கையும் ஒழிக்கப்படுகிறதோ அன்றுதான் மக்களுக்கும் அவர்களின் பணத்திற்தும் விடிவு.

    Bavan || Photography


    இதுதான் நான்

    My photo
    I'm a cool guy who Living the life like there is no tomorrow...

    துரத்திறாங்க

    சுவடி வகைகள்

    2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

    வாங்கிய பரிசு

    வாங்கிய பரிசு
    2010 blog rank 83
    Tamil Top Blogs
    Tamilmanam Tamil blogs Traffic Rank

    நண்பர்களின் பக்கம்