தலைப்பைப்பார்த்தவுடன் யாரையோ திட்டி எழுதியிருக்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். இது சாதாரணமாக கோபப்படுபவர்களுக்கான பதிவு. யாருக்குத்தான் கோபம் வருவதில்லை,
ஏன் கோபம் வருகிறது?
எமக்குப்பிடிக்காத ஒரு விடயம் நடக்கின்றபோது, நாம் சொல்வதை ஒருவர் கேட்காதபோது, ஏன் ஒருவர் நாம் சொல்வதை ஒழுங்காக விளங்கிக்கொள்ளாத போது கோபம் வருகிறது.
அதுவும் நாம் யாரிடத்தில் கோபத்தைக்காட்டுகின்றோம்?
சின்னக்குழந்தை தன் அம்மாவிடம் கோபத்தைக்காட்டும், சிறுவன் ஒருவன் தனது விளையாட்டுப்பொருட்களிடம், இளைஞன் நண்பர்களிடம், ஏன் குடும்பஸ்தர்கள் தமது குடும்பத்திடம், முதியவர்கள் தமக்குத்தாமே(அவர்களால் வேறு என்ன செய்ய முடியும் முணுமுணுத்துக்கொள்வார்கள்).
இப்படி உங்கள் கோபத்தை பிறரிடம் காட்டுவதால் கிடைப்பது என்ன?
எமக்கு மன அழுத்தம், மன அழுத்தம் அதிகரிக்க கவலை அதிகரிக்கும் கவலை அதிகரிக்க குடும்ப அமைதி குலையும் குடும்ப அமைதி குலைய பிறகு...? இதுதான் கோபத்தால் உங்களுக்குக்கிடைப்பது.
கோபம் வரும்போது என்ன செய்யலாம்?
கோபம் வரும்போது ஒரு நிமிடம் யோசியுங்கள் நான் கோபப்பட்டு என்ன பயன் என்று? ஒன்றுமே இருக்காது? சரி உதாரணத்துக்கு கோபப்பட்டு ஒருவனுக்கு நீங்கள் அடிக்கிறீர்கள் அத்துடன் உங்கள் கோபம் தீர்ந்து விட்டதா? அல்லது அடிவாங்கியவன்தான் தன் தவறை உணர்ந்து திருந்திட்டானா? ஒன்று திருப்பி நீங்களும் அடிவாங்குவீர்கள் அல்லது அது கைகலப்பாக மாறும். ஆகவே கோபம் எல்லோருக்கம் வருவதுதான் அதைக்கட்டுப்படுத்த சில வழிகள்.
- கோபம் வரும்போது உங்கள் முகத்தைக்கண்ணாடியில் பாருங்கள் எவ்வளவு கேவலமாக இருக்கும் என்று.
- அடுத்து கோபம் வரும்போது ABCDஐ தலைகீழாகச்சொல்ல முயலுங்கள்.
- சரி ஒருவர் உங்களை விடாமல் திட்டுகிறார் கோபம்கோபமாக வருகிறது என்னசெய்யலாம் போசாமல் இருங்கள் முடியவில்லையா விரும்பிய பாடலை மனதுக்குள் பாடுங்கள்.
- அல்லது திட்டுபவரின் முகத்தைப்பாருங்கள் அவர் ரொம்ப கஷ்டப்பட்டுத்திட்டிக்கொண்டிருப்பார், ஆனால் அவரது முகத்தை உற்றுப்பாருங்கள்(முறைத்து அல்ல) நகைச்சுவையாக இருக்கும்.
- கோபத்தை எமன் என்று நினைத்துக்கொள்ளுங்கள்,
அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள், கோபம் அழிந்து மகிழ்ச்சி பொங்கட்டும் Tweet
'அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்'
thanks and same to you