அவளைப்பற்றி இன்னும் கூறிமுடிக்கவில்லை. அன்று ஒருநாள் அவளை என் கைகளால் தூக்கிக்கொண்டு நடந்து வருகிறேன். கால்கள் லேசாகத்தடக்க என் கையிலிருந்து விடுபட்ட அவள் காலணிகள் கழன்றுவிழ கீழே விழுந்துவிட்டாள். ஐயோ நான் பயந்துவிட்டேன், அவள் ஒன்றுமே நடக்காதது போல சிரித்தபடி மீண்டும் என்கைகளுக்குள் ஏறிக்கொண்டாள். இப்படி எத்தனையோ தடவைகள் விழுந்திருப்போம் ஆனால் அவள் ஒருநாளும் அழுததில்லை, என்னுடன் கோபித்ததும் இல்லை.
தினமும் என்னுடன்தான் வருவாள்.என்னுடன் விடாமல் கதைபேசுவாள், சைகை மொழியிலும் உரையாடுவாள், வகுப்பில் நானிருக்கும் போது கூட மெளன மொழியில் குசுகுசுப்பாள். அவளுடன் வாழ்ந்த நாட்கள் அது ஒரு பொற்காலம். மூன்று வருடங்கள் என்னை தனக்குள் கட்டிப்போட்டவள் அவள். என்ன தேவையென்றாலும் உடனே எனக்காக அனைத்தையும் செய்து முடிக்கும் கெட்டிக்காரி. அவளுக்கு ஓய்வே இருந்ததில்லை, எனக்கும்தான்.
அவள் நான் யாருடன் கதைத்தாலும் கண்டுபிடித்து விடுவாள், சிலவேளைகளில் கோபிப்பாள், யாருடனும் கதைக்கக்கூட விடமாட்டாள். கடைக்கு கூட்டிக்கொண்டு போய் அவள் விரும்பியதை வாங்கிக்கொடுத்தால்தான் அவள் கோபம் அடங்கும். இதெல்லாம் ஒரு அன்பில்தானே செய்கிறாள்.
திடீரென்று ஒருநாள் என்ன நடந்ததோ தெரியவில்லை. என்னுடன் பேசமறுத்தாள், ஏன் கண்களைக்கூடத்திறக்கவில்லை. ஐயோ பதறிப்போனேன் நான், உடனடியாக வைத்தியரிடம் சென்றேன், அவரும் பரிசோதித்து விட்டு உடனே அட்மிட் செய்யுங்கள் என்றார். அவள் உயிர் பிழைத்தால் போதுமென்று உடனடியாக அட்மிட் செய்தேன். ஒரு வாரம், பத்துநாள், ஒரு மாதம்.. ஆம் அவளுக்கு குணமானது.வைத்தியருக்கு நன்றி சொல்லி அழைத்து வந்தேன் அவளை. ஆனால் அவள் அதன் பின்னர் ஒரு ஆண்டுமட்டுமே என்னுடன் வாழ்ந்தாள். அதன் பின் இறந்துவிட்டாள். இன்றுடன் அவள் என்னிடம் வந்து நான்கு ஆண்டுகளாகிறது.
எத்தனை நாட்கள், மணித்தியாலங்கள் என்னை உங்களுடன் கதைக்க வைத்திருப்பாள், என் அழகிய சொனி எரிக்சன் K310i.
மூன்றாண்டுகள் என்னுடன் என்னைவிட்டுப்பிரியாமல் வாழ்ந்த அவள் இன்று உயிருடன் இல்லை அவளை மறக்க முடியுமா.....ஹீஹீ
Tweet
lol....
தலைப்பைப் பார்த்ததும் நினைச்சன்...
உனக்கு தைரியமில்லடா நீ உண்மையா வாழ்ந்ததுகள சொல்றதுக்கு..... :P
ஹி ஹி....
#பின்னூட்டத்தில் வந்து ஆப்படிப்போர் சங்கம்....