அடுத்து அன்று முதல் இன்றுவரை எனது பதிவுகளுக்கு முதலாவது ஆளாக பின்னூட்டமளித்து ஊக்கமளித்து வருபவர் கனககோபி அண்ணா, தலைவரின் பின்னூட்டங்கள் அவரைப்போலவே மகிழ்ச்சியாக இருக்கும்.
வந்தி அண்ணா: இவரை உண்மையில் எனக்கு முதலில் ருவிட்டரில்தான் தெரியும் (ருவிட்டரில் அவரின் படத்தைப்பார்த்து என்னுடன் படித்த ஒரு பொடியன் என்று நினைத்துத்தான் பின்தொடர்ந்தேன்) அதுக்குப்பிறகுதான் தெரியும் அவர் நான் நினைத்த ஆள் இல்லை என்று ஆனால் வந்தி என்று அழைக்கப்படும் மூத்த பதிவர் இவரென்பது பிறகுதான் தெரியும்.
லோசன் அண்ணா: இவர் இந்துக்கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருக்கும்போது பிரதம விருந்தினராக ஒருநிகழ்ச்சிக்கு வந்திருந்தார் அப்போது அங்கே கைதட்டிய கூட்டத்தில் நானும் ஒருவன், இவரைப்பார்த்து நான் பாடசாலை அறிவிப்பாளர் மன்றத்திலெல்லாம் சேர்ந்து இருக்கிறேன். முதலில் லோசன் அண்ணாவின் பின்னூட்டம் கிடைத்தபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.
முதலில் எனது வரலாற்றுடன் சற்று சீரியஸாக பதிவெழுதத்தொடங்கிய நான் பின்பு போட்டோ கொமெண்ஸ் போட ஆரம்பித்தேன் அது எனக்கு கொஞ்சம் வெற்றியளித்தது என்றுதான் சொல்லவேண்டும், அதன்பிறகு எத்தனைகாலம்தான் படத்தையே போடுவது என்று சற்று எழுத ஆரம்பித்தேன், (சீரியஸாக அல்ல அது நமக்கு அவ்வளவு சரிவராது), ஆரம்பத்தை விட இப்போது எனது எழுத்து நடை சற்று மாறியிருக்கிறது, பலபதிவுகள் வாசிக்கிறேன்.
அதுமட்டுமின்றி யோ வாய்ஸ் யோகா அண்ணா, பங்குச்சந்தை அச்சு அண்ணா, ஆதிரை அண்ணா, பாலவாசகன் அண்ணா, சிதறல்கள் ரமேஸ் அண்ணா, கீர்த்தி அக்கா, தாஷாயினி அக்கா, தங்கமுகுந்தன் அண்ணா, சந்ரு அண்ணா, சஞசீவண் அண்ணா, சதீஸ் அண்ணா,கெளபாய் மது அண்ணா, புல்லட் அண்ணா ஆகிய பலரின் நட்புக்கிடைத்தது.
இவர்கள் அனைவரும் கொடுத்த ஊக்கம் தான் என்னை 50வது பதிவுவரை அழைத்து வந்திருக்கிறது, எனவே அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைக்கூறக்கடமைப்பட்டிருக்கிறேன்.
பின்குறிப்பு: இங்கே யாருடைய பெயராவது குறிப்பிட மறந்திருந்தால் தயவுகூர்ந்து மன்னித்தருளவும். Tweet
அடுத்து அன்று முதல் இன்றுவரை எனது பதிவுகளுக்கு முதலாவது ஆளாக பின்னூட்டமளித்து ஊக்கமளித்து வருபவர் கனககோபி அண்ணா
அப்படியா...
இப்ப யாரு...
வாழ்த்துக்கள் பவன் ...