எருமை தெரியுமா?
முன்பு ஒருநாள் தொலைக்காட்சியில் நடந்த "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு" நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் பேசிக்கொண்டிருந்தது காதில் கேட்டது அடடா என்ன ஒரு அருமையான விடயம் அது...
ஒரு நாட்டுப்புற ஊருக்குச் சென்ற ஒருவர் மக்களைச் சில விடயங்கள் கேட்டார்,
அவர் -மனிதன் மாதிரி ரோபோ இருக்கு தெரியுமா?
மக்கள் -தெரியாது
அவர் -computerல கடிதம் அனுப்பலாம் தெரியுமா?
மக்கள் - தெரியாது
அவர் -பாங்கில லொக்கர் இருக்கு தெரியுமா?
மக்கள் - தெரியாது
அவர் - பெரிய பெரிய ரோட்டெல்லாம் இருக்கு தெரியுமா?
மக்கள் -தெரியாது
அவர் பொறுமையிழந்து எதிரே ஒரு எருமைக்கடா வர, அதைப்பார்த்துவிட்டு
எருமை தெரியுமா? எனக்கேட்க......
மக்கள் - ஓ... தெரியுமே.... எமனின் வாகனம் என்றனர்.
கண்ணுக்குத்தெரிபவற்றை தெரியாது..தெரியாது என்று கூறும் மக்கள் கண்ணுக்குத்தெரியாத எமனையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்ன கொடுமை இது, இப்படித்தான் போலிச்சாமிகளையும் சனம் நம்புகிறது, என்று தீரும் இந்த மூடநம்பிக்கை...ஹிம்ம்
************************************************************************************
திருகோணமலை தனியார் வைத்தியசாலையில் நடந்தது இது, அங்கு BLOOD SUGER செக் பண்ணச் சென்ற எனது பாட்டிக்கு மிக அதிகமாக இருக்கிறது என்று கூறிவிட்டார்கள் (இதுக்கு அவர் வீட்டில் இனிப்பே சாப்பிடுவதில்லை). சரி அந்த வைத்தியசாலையிலுள்ள வைத்தியரிடம் மருந்து எடுக்கலாம் என்று பார்த்தால் வைத்தியர் வரவில்லை(நல்லகாலம்).
உடனே வெளியே எங்களுக்கு தெரிந்த ஒரு வைத்தியரிடம் ஒருவரிடம் சென்று நாங்கள் எடுத்த BLOOD SUGERக்கான ரிப்போட்டைக்காட்ட முற்பட்ட போது "எங்கே அந்த (வைத்தியசாலையின் பெயரைக்குறிப்பிட்டு) வைத்தியசாலையிலா எடுத்தீர்கள்?" அதை எனக்குக்காட்ட வேண்டாம் அது முற்றிலும் பிழையாகத்தான் இருக்கும், என்றுவிட்டு அவர் தான் செக் பண்ணியபோது NORMAL ஆக இருந்தது.
என்ன கொடுமை இது, அங்க தொட்டு இங்க தொட்டு வைத்தியசாலைவரை வந்துவிட்டது. வைத்திசாலையில் பிழையான ரிப்போட் வழங்கப்படுவது அறிந்து வைத்தியரை ஒரு நடவடிக்கை எடுக்க முற்படாதது கவலைக்குரிய விடயம்.(அந்த ரிப்போட்டைப் பார்க்காததைத்தவிர)
************************************************************************************
வாழ்த்துக்கள்
நேற்று முன்தினம் பிறந்தநாளைக்கொண்டாடிய யோ அண்ணாவுக்கும் இன்று பிறந்தநாளைக்கெண்டாடும் கடலேறி ஆதிரை அண்ணா மற்றும் பங்குச்சந்தை அச்சு அண்ணாவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தமிழ்மணம் போட்டியில் வெற்றி பெற்ற எமது பதிவர்கள் வந்தி அண்ணா, லோசன் அண்ணா மற்றும் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பிலும் சளைக்காது போட்டி போட்ட பதிவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
************************************************************************************
திரிசாவுக்கு கல்யாணம்
இவருக்கு வரன் பார்க்கிறார்களாம் முடிந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்..ஹீஹீ
முதலாவது அருமையான கருத்து...
என் கருத்தும் அதுவே....
உயிர்களைக் காக்கும் வைத்தியர்கள் பொறுப்புடன் செயற்படுவது அவசியமானது....
உரியவர்கள் கருத்தில் கொள்வார்களா பார்ப்போம்?
(நாங்கள் தப்பிக் கொள்ள 'உரியவர்கள் கருத்தில் கொள்வார்களா பார்ப்போம்' என்று தானே சொல்லிப் பழகிவிட்டோம்...
பிறந்தநாளைக் கொண்டாடிய யோ வொய்ஸ் அண்ணாவிற்கும்,
இன்று கொண்டாடும் ஆதிரை அண்ணாவிற்கும், பங்குச் சந்தை அச்சு அண்ணாவிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
(கடலேரி இல்லை பவன், கடலேறி)
உனக்கும் த்ரிஷா பைத்தியம் பிடிச்சிற்றா?
என்ன கொடுமை பவன் இது....