பின்வரும் விடயங்களை படித்துவிட்டு நீங்களே கூறுங்கள்
இருகுழந்தைகள்
ஒன்று குழப்படியே செய்வதில்லை. மிக அமைதியாக இருக்கிறது. யாருடனும் விளையாடவில்லை. தானும் தன்பாடும் என்று இருக்கிறது. பசி என்று அழுவதோ இல்லை தாயை போட்டு ஏதேனும் விடயத்துக்காகப் பிச்சுப்பிடுங்குவதோஇல்லை.
மற்றைய குழந்தை. இது குழப்படி என்றால் அப்படி ஒரு குழப்படி, என்னை மழலை மொழியால் அழைக்கிறது. "அண்ணா இங்கே பாங்கோ", நானும் ஓடிச்சென்று என்ன என்று கேட்க எனது கையைப்பிடித்து வீட்டுக்கு வெளியே அழைத்துச்செல்கிறது. ஒரு இடத்தில் நின்று தனது காற்சட்டைப்பையை இழுத்துப்பிடிக்கச்சொல்கிறது. சரியென நானும் பிடிக்க உடனடியாக நிலத்திலிருந்து மண்ணை அள்ளி தனது காற்சட்டைப்பைக்குள் போடுகிறது.
இரண்டு ஆறு, ஏழு வயது நிரம்பிய பிள்ளைகள்.
முதலாவது பிள்ளை மிக அமைதியான பிள்ளை. பாடசாலையிலும் சரி, வீட்டிலும் சரி ஆசிரியர் அல்லது அம்மா சொல்வதைத்தவிர வேறு எதையும் கேட்பதில்லை. வீட்டில் செய்யும் ஒவ்வொரு வேலைகளுக்கும் "அம்மா இதைச் செய்யவா? , அம்மா அதைச்செய்யவா?" என்று அனுமதி கேட்கிறது.
அடுத்த பிள்ளை, மிகவும் சுட்டித்தனமான பிள்ளை. பாடசாலையில் ஆசிரியருக்கே பல கதைகள் சொல்லும், வீட்டில் குளிரூட்டியில் வைத்திருக்கும் ஐஸ் கிறீமை அம்மா திட்டுவாரெனத் தெரிந்தும் லாவகமாக அதை அம்மாக்குத் தெரியாமல் எடுத்து உண்ணும், எனக்கும் தந்து.
இரண்டு பாடசாலை மாணவர்கள்
முதலாமவன் நன்றாகப் படிக்கக்கூடியவன். மிகுந்த புத்திசாலி. வகுப்பில் புத்தகப்புழு, யாருடனும் பெரிதாக சண்டையோ, வகுப்புக்குள் விளையாடுவதோ இல்லை. மனதுக்குள் விளையாட ஆசையிருந்தாலும் ஆசிரியர்களிடம் தனக்கிருக்கும் நல்ல பெயர் கெட்டு விடுமோ என்ற பயத்தின் காரணமாக விளையாடுவதில்லை. ஆசிரியர் யார் வகுப்பில் விளையாடியது என்று கேட்டால் மாட்டிக்கூட விடுவான்.
இரண்டாமவன் ஓரளவு நன்றாகவே படிப்பான், ஆனால் அடிக்கடி வகுப்பு நேரத்தில் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று ஏதாவது வாங்கி வந்து வகுப்பிற்கே தானம் சென்து தானும் சாப்பிடுவான். வகுப்பில் ஆசிரியர் வராத நேரங்களில் அடிக்கடி வகுப்புக்குள் கிரிக்கெட் போட்டிகள் ஒழுங்கு செய்வான். அடிக்கடி ஆசிரியரிடம் அகப்பட்டாலும் தனது சகாக்களை ஒருநாளும் காட்டிக்கொடுக்கமாட்டான். பாடசாலை முடிந்ததும் அருகாமையில் உள்ள பெண்களை வீட்டுக்கு கொண்டு போய் பத்திரமாக சேர்த்துவிட்டுத்தான் வீடு செல்வான்
இரு குடும்பஸ்தர்கள்
முதலாமவர் தனது கல்வி மூலம் உயர்ந்தவர். மிகுந்த அறிவாளி. தானுண்டு தன் குடும்பமுண்டு என்று இருப்பவர். எந்தக்காரியத்திலும் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கமாட்டார். வீதியில் ஒருவன் விபத்துக்குள்ளாகி கிடந்தாலும் எல்லாம் அவனின் விதி என்று கூறிவிட்டு தனக்கேன் வம்பு என்று நழுவி விடுவார்.(உதவி செய்ய ஆசையிருந்தும்)
இரண்டாமவர் ஓரளவுக்குகல்வி கற்றிருந்தாலும், யாராவது உதவி என்று கேட்டால் உடனடியாக எதையும் எதிர்பாராது செய்பவர்கள், யாருக்கு பிரச்சினை என்றாலும் தேடிப்போய் உதவுபவர். ஆனால் என்ன சற்று குடிப்பழக்கமுடையவர்.
மேலே குறிப்பிடப்பட்ட எட்டு நபர்களுக்குள் உங்களுக்கு மிகவும் பிடித்த நபர்கள் யார்யார்? நான்கு பிரிவிலும் முதலாமவரா? அல்லது இரண்டாமவரா? மிகுந்த படித்தவனாக இருந்தாலோ அல்லது நல்லவனாக இருந்தாலோ அனைவருக்கும் அவர்களைப் பிடிப்பதில்லை.
கூடுதலாக முதலாமவன் சமூகத்தில் உயர்ந்தவன் என்று பெயர் வாங்கியிருப்பான், ஆனால் அவர்களில் மனதுக்குள் செய்யவேண்டும் என நினைக்கும் பல காரியங்களை தன்னைப்பற்றி தப்பாக கருதிவிடுவார்களோ என்று அவர்கள் ஒரு காரியத்தையும் செய்வதில்லை. இப்படிப்போலி வாழ்க்கை வாழ்வதது சரியா? குழப்படிகள் செய்யாதவர்கள் அனைவரும் நல்லவர்களும் இல்லை, குழப்படிகள் செய்பவர்கள் அனைவரும் கெட்டவர்களும் இல்லை.
எனவேதான் குழப்படிகளும் செய்ய வேண்டும், அளவோடு. சிறுவயதில் செய்யும் குழப்படிகள் எமக்கு எதிர்காலத்தில் சிறந்த நினைவுகள் மட்டுமல்ல, சிறந்த அனுபவங்களும் கூட. நாம் எம் மனம் சொன்னபடி வாழவேண்டுமே தவிர நல்ல பெயருக்காகவோ அல்லது பிறர் ஏதும் சொல்வார்கனோ எனப்பயந்து வாழ்ந்தால் எத்தனையோ விடயங்களை இழந்து விடுவீர்கள்.
******************************************************************************************************** Tweet
//நீங்கள் ரொம்ப நல்லவராக இருந்தால் உலகம் உங்களை விரும்புமா? //
நிச்சயமாக இல்லை...
//இருகுழந்தைகள் //
நிச்சயமாக 2ம் குழந்தை தான்...
//இரண்டு ஆறு, ஏழு வயது நிரம்பிய பிள்ளைகள். //
நிச்சயமாக 2ம் குழந்தை தான்...
நாங்கள் குழந்தைகளை அமைதியாக இருக்க எதிர்பார்ப்பதில்லை.... சுட்டித்தனமான பிள்ளைகளையே எதிர்பார்க்கிறோம்...
//இரண்டு பாடசாலை மாணவர்கள் //
இங்கு தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது பவன்...
நல்லவன் என்றால் என்ன என்ற குழப்பம் ஆரம்பிக்கிறது...
//இரு குடும்பஸ்தர்கள்//
இதில் பயங்கர குழப்பம் பவன்...
வீதியில் விபத்தில் அகப்பட்டவனை காப்பாற்றாமல் செல்வதை நல்லவன் என்று அழைப்பது சரியா என்று தெரியவில்லை...
இதை சூழ்நிலைக்கேற்ப மாறுதல், சுயநலவாதம் என்று அழைப்பது சிறப்பானது....
ஆகவே இவரை நல்லவன் என்ற கோணத்தில் அழைப்பது சரியா தெரியவில்லை....
மற்றும்படி நீங்கள் சொல்லவந்த அந்தக் கருத்து உண்மையானது...
ஆனால் எனக்கு சில வடய்ஙகளில் உடன்பாடும் இல்லை....
நான் முன்பு ஒருமுறை சொன்னது மாதிரி சமூகத்தில் நல்ல விடயங்கள் சிலவேளை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
ஆகவே இது பயங்கரக் குழப்பனமான நிலை....
சமூகமா, உன் மனச்சாட்சியா என்று வரும்...
குழப்பத்தை நீ தீர்த்தால் நீ தான் ஞானி....