முன்னொரு காலத்திலே ஒரு அப்பிள் மரம் இருந்தது, அந்த மரத்துடன் ஒரு சிறுவன் விளையாடுவது வழக்கம், அந்த மரத்திற்கும் இந்தச்சிறுவனை மிகவும் பிடிக்கும். அந்தச்சிறுவன் அம்மரத்தைச்சுற்றி ஓடி விளையாடுவான், மரத்தில் ஏறி அப்பிள் பழங்களை உண்ணுவான், பின் அந்த மரத்தடியிலேயே படுத்து உறங்குவான்.
சிலகாலங்களுக்குப்பிறகு அந்தச்சிறுவன் சற்று வளர்ந்தவனாய் மரத்திடம் வர, அந்த மரம் வந்து என்னுடன் விளையாடு என்றது, எனக்கு உன்னுடன் மட்டும் விளையாடமுடியாது எனக்கு விளையாட்டுப்பொருட்கள் வேண்டும் என்று சிறுவன் கேட்டான்.
அதற்கு அந்த மரம் என்னிடம் பணமில்லை நீ வேண்டுமானால் என் பழங்களை விற்று, அதில் வரும் காசில் விளையாட்டுப்பொருட்கள் வாங்கிக்கொள் என்றது. உடனே சிறுவனும் மகிழ்ச்சியுடன் அனைத்துப் பழங்களையும் பறித்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
அதன்பின்னர் அவன் அந்தப்பக்கம் வரவே இல்லை, வருடங்கள் உருண்டோடின, வாலிபனாக வளர்ந்திருந்த அந்தச்சிறுவன் மரத்திடம் வந்தான். உடனே வா வந்து என்னுடன் விளையாடு என்றது மரம். உன்னுடன் விளையாட எனக்கு நேரமில்லை நான் எனது குடும்பத்தைக்காப்பாற்றவேண்டும் அதற்கு உழைத்து பணம் திரட்ட வேண்டும் என்றான். நானும் என் குடும்பமும் பாதுகாப்பாக இருக்க ஒரு இடம் வேண்டும் நீ எனக்கு உதவி செய்வாயா? என்று கேட்டான்.
என்னிடம்இருப்பிடம் ஏதும் இல்லை நீ என் கிளைகளை வெட்டி வீடு அமைத்துக்கொள் என்றது மரம். உடனே அவனும் அனைத்துக்கிளைகளையும் வெட்டியெடுத்துக்கொண்டு போய்விட்டான்.
மீண்டும் சிலவருடங்களுக்குப்பிறகு மீண்டும் அவன் வந்தான், இப்போது முதியவனாக, மரமும் வழக்கம்போல வந்து என்னுடன் விளையாடு என்றது, எனக்குவயதாகிவிட்டது, உன்னுடன் விளையாட முடியாது, நான் எனது முதுமைகாலத்தில் ஓய்வெடுக்க ஒரு படகு வேண்டும் என்றான்.
என்னிடம் ஏது படகு இதோ என் உடலைவெட்டி படகு செய்துகொள் என்றது மரம். அவனும் மரத்தைத்தறித்து படகு செய்து கொண்டான்.
மேலும் சிலகாலங்கள் உருண்டோடின மரக்குற்றிக்கருகில் ஒரு தள்ளாடித்தள்ளாடி (அந்தச்சிறுவன்தான்) முதியவர் வந்தார், உடனே அந்த மரம் தம்பி மன்னித்துவிடு என்னிடம் இப்போது தருவதற்கு எதுவுமில்லை என்றது மரம். அதற்கு அவன் எனக்கு நடந்து வந்தது மிகவும் களைப்பாக இருக்கிறது, ஓய்வெடுக்க இடம்வேண்டும் என்று அந்த மரக்குற்றியில் அமர்ந்துகொண்டான்
நல்லாருக்கு