நீங்கள் போட்டுத்தாக்கியது
-
பவன் சூப்பர்டா எப்புடிடா இப்பூடி பொருத்தமா உனக்கு படம் கிடைக்குது ஐயோ ... தாங்கஸ்டா... அத்தனையும் கலக்கல்
-
தலைவா............................
கலக்கீற்றீங்க தலைவா....
ஒண்டு மட்டும் நிச்சயம், இத மடடும் செவாக் பாத்து அவனுக்கு தமிழ் விளங்கினா நேர தூக்கு தான்.... (தற்கொலை எண்டு சொல்ல வந்தனப்பா...)
அதுவும் NO COMMENTS எண்டது அருமை...
அவ்வ்வ்வ்வ்வ்வ்.......
-
தம்பி பவன், கமெண்ட்ஸ் எல்லாம் நல்லா இருக்கு. இந்தியா மேல உனக்கென்ன கோபம்?
//ஒண்டு மட்டும் நிச்சயம், இத மடடும் செவாக் பாத்து அவனுக்கு தமிழ் விளங்கினா நேர தூக்கு தான்.... (தற்கொலை எண்டு சொல்ல வந்தனப்பா...)
//
அதோட இன்னும் மேட்ச் முடியலை. மேட்ச்ல தோத்தப்புறம் எழுதலாம்.
ஆமா, இலங்கை இந்தியாக்கிட்ட வாங்கிக்கிட்ட ஆப்பப் பத்தியோ (2-0 டெஸ்ட் 3-1 ஒன் டே தொடர்) இல்லை பாகிஸ்தான் லேட்டஸ்டா ஆஸ்திரேலியாக்கிட்ட வாங்கின ஆப்பப் பத்தியோ (3-0 டெஸ்ட்) ஏன் எழுதலை?
நான் பல இலங்கை ரசிகர்களிடம் (அது சிங்களவராய் இருந்தாலும் சரி, ஈழத்தமிழராய் இருந்தாலும் சரி) பார்த்தது, இந்தியாவின் மேல் ஒரு வயிற்றெரிச்சல். அதை இந்திய அணி தோற்கும்போதோ இல்லை மோசமாக விளையாடும்போதோ விகாரமாக வெளிக்காட்டி விடுகிறீர்கள். அதற்கு பவனும் விலக்கல்ல. (என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் டிசில்வாவும் இதே கேள்வியை - 10 விக்கெட் எடுத்துட்டாங்க போல இன்னும் 10 தானா - கேட்டான்).
-
//அதோட இன்னும் மேட்ச் முடியலை. மேட்ச்ல தோத்தப்புறம் எழுதலாம். //
போட்டியில் வெல்வது தோற்பது பற்றி யாரும் இங்கு கதைக்கேல...
பங்களாதேஷ் இந்தியாவை வெல்லப் போகுது எண்டும் யாரும் சொல்லேல...
செவாக் தேவையில்லாமல் வாயைக் கொடுத்ததுக்குத்தான் இவ்வளவும்....
பொதுவாக அவரவர் வலைத்தளத்தில் அவரவருக்குப் பிடித்ததைப் பற்றித்தான் பதிவிடுவார்கள்.
அகவே பவன் தனக்கு எது விருப்பமாகவுள்ளதோ அதைப் பற்றித்தான் பதிவிடுவார்.
இந்தியாவில் உள்ள கிறிக்கற் forum களில் இலங்கையைப் போட்டுத் துவைத்து எடுப்பதை நீங்கள் பார்க்கவில்லை போலும்...
எனினும் இந்தச் சுட்டிகளுக்கு ஒரு முறை விஜயம் செய்யவும்...
http://nbavan7.blogspot.com/2010/01/blog-post_15.html
http://nbavan7.blogspot.com/2009/12/blog-post_27.html
http://nbavan7.blogspot.com/2009/12/blog-post_07.html
//நான் பல இலங்கை ரசிகர்களிடம் (அது சிங்களவராய் இருந்தாலும் சரி, ஈழத்தமிழராய் இருந்தாலும் சரி) பார்த்தது, இந்தியாவின் மேல் ஒரு வயிற்றெரிச்சல். //
இந்திய இரசிகர்கள் எம்மை விட மோசமானவர்கள் சகோதரா....
நான் நிறைய இடங்களில் அனுபவித்திருக்கிறேன்.
இந்தியா மேல் வயிற்றெரிச்சல் எல்லாம் கிடையாது, இந்திய வீரர்கள் சிலரின் நடத்தைகள் பிடிப்பதில்லை, அதுதான் அந்த வெறுப்பு.
ஸ்ரீசாந், செவாக் போன்றவர்கள் இருக்கும்போது இந்தியாவை நாம் ஆதரிக்க வேண்டுமென்று எதிர்பார்க்க முடியாது....
பொதுவாக இந்திய இரசிகர்களிடம் உள்ள பிரச்சினை என்னவென்றால் பிழைகளை ஒத்துக் கொள்வதில்லை.
செவாக் சொன்னது பிழை என்றால் அது பிழை தான்....
-
அத்தொடு சகோதரா,
இந்தியா மேல் பொதுவாக எவருக்கும் கோபம் இல்லை.
நாங்களெல்லாம் சச்சின், ட்ராவிட், கும்ப்ளே இரசிகர்கள் தான்....
செவாக் 200 அடித்தால் அதை ஏற்றுக் கொண்டு செவாக் நன்றாக விளையாடினார் என்று ஏற்றுக் கொள்வோம்....
Sambit Bal போல 'How good is Samaraweera?' என்றெல்லாம் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதில்லை....
நகைச்சுவைகளை நகைச்சுவையாக ஏறறுக் கொள்ளுங்கள்.... :)
-
விளக்கங்களுக்கு நன்றி கனககோபி.
என் சார்பு விளக்கங்களையும் வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
1. நான் இங்கு வெளியிடப்பட்ட காமெடியை ரசிக்கவே செய்தேன். பவனின் ஐம்பதாவது பதிவில் நான் வைத்த அதே கேள்வியை இங்கே திரும்ப வைத்தேன். காமெடியாக எழுத வேண்டுமென்றால் உலக கிரிக்கெட்டில் எவ்வளவோ நடக்கிறது அதைப் பற்றியும் எழுதலாமே? ஏன் இந்தியா மட்டும் என்பதே என் கேள்வி.
2. எனக்கும் சேவாக் பேசியதில் உடன்பாடு இல்லை. அதை கிண்டல் செய்வதையும் வரவேற்கிறேன். ஆனால் இதே போல ஏன் மற்றவர்களையும் செய்வதில்லை என்பதே என் கேள்வி.
3. Sambit Bal பிழைப்பால் ஒரு ஸ்போர்ட்ஸ் ரைட்டர். அவர் சமரவீரவை மட்டுமல்ல பல நாட்டு விளையாட்டு வீரர்களைப் பற்றியும் எழுதியுள்ளார். அதையும் படியுங்கள்.
4. இந்திய ரசிகர்கள் எந்த விதத்தில் மோசமானவர்கள் என்பதையும் சொன்னால் கேட்டுக் கொள்வேன்.
5. இந்தியா இலங்கையில் முதல் டெஸ்ட் தோற்ற போது அர்ஜூன ரணதுங்க தன் திருவாயைத் திறந்து - இந்திய அணி ஐ.பி.எல் விளையாடி டெஸ்ட் விளையாட மறந்து விட்டது என்று சொன்னார். அடுத்த போட்டியில் இதே சேவாக் தன் பேட்டின் மூலம் பதில் சொன்னார். (அதற்கடுத்த டெஸ்ட் தோற்றுவிட்டது இந்திய அணி என்பது வேறு விஷயம்). அதைப் பற்றியும் நீங்கள் பேசலாமே?
6. http://nbavan7.blogspot.com/2010/01/blog-post_15.html இந்தச் சுட்டியில் வெளியாகியுள்ள ஐந்து ஸ்போர்ட்ஸ் கிண்டல்களில் இரண்டு இந்தியா, பங்களாதேஷ், ஆஸ்திரேலியா தலா ஒன்று.
http://nbavan7.blogspot.com/2009/12/blog-post_27.html - மூன்று இந்தியா , ஒரு ஆஸ்திரேலியா
இதிலிருந்தே தெரியவில்லையா?
இந்தியாவைப் பற்றி எழுத பவனுக்கு உரிமையில்லை என்று சொல்ல வரவில்லை. இந்தியாவைப் பற்றியே மிகுதியாக எழுதுவதால் அது “வயிற்றெரிச்சல்” என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதே என் கருத்து.
-
எழுத்தாளர் என்றால் நடுநிலை வகிக்க வேண்டும். ஒரு அணியையே பெரும்பாலும் கிண்டல் செய்து கொண்டிருந்தால் அது கண்டிப்பாக தப்பாகத் தான் எடுத்துக் கொள்ளப்படும். நான் வெளிப்படையாகச் சொல்லிவிட்டேன். சொல்லாமல் இருக்கக்கூடியவர்கள் பலர் இருப்பார்கள்.
உங்கள் நாட்டைப் பற்றிய விமர்சனத்தை நீங்கள் வைப்பதற்கும், நான் வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?
இதே பவன் நான் புகைப்பட கமெண்ட் போட்ட இந்த பதிவில் போட்ட - இலங்கையின் மேல் என்ன கோபம் - என்ற பின்னூட்டத்தையும் படித்துவிட்டு சண்டை போடுங்கள் நண்பா.
-
nallaa irukkunga.
-
விளக்கங்கள்....
1. உலக அரங்கில் நிறைய நடக்கிறது தான்...
ஆனால் இந்தியாவுக்கு எப்படி பாகிஸ்தான் போல, இலங்கைக்கு இந்தியா தான்....
இலங்கைக்கு எதிரி நாடு என்று எதுவும் இல்லாததால் இந்தியப் போட்டிகளைத்தான் பாகிஸ்தான் அளவுக்கு இரசிக்கிறோம்.
ஆகவே அந்த போட்டி உணர்வு எம்மமை இந்தியாவை சற்று அதிகமாகவே எதிர்க்கச் செய்யும்.
2. ஏன் மற்றவர்களைக் கிண்டல் செய்வதில்லை என்றால் யாரும் இப்படிக் கதைப்பதில்லை....
3. சம்பிற் பால் மற்றைய வீரர்களைப் பற்றியும் எழுதினாலும் சமரவீர ஓட்ஙட்களைக் குவித்துக் கொண்டிருந்தபோது 'How good Samaraweera is?' என்று எழுதினார்...
மற்றைய வீரர்கள் யாரையும் அப்படி எழுதவில்லை....
http://blogs.cricinfo.com/fromeditor/
4. எனக்கு இந்தியத் தளங்களை மேயும் பழக்கம் கிடையாது.
எனினும் கிறிக்கற் பற்றி இணைய நண்பர்களோடு கதைக்கும்போது நிறைய சுட்டிகளில் வாசித்திருக்கிறேன்.
எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை...
இப்போதைக்கு http://www.indiancricketfans.com இதை வைத்திருங்கள்...
5. ஹரி ஹேர்ஸஸ்ரனும் இதே மாதிரி ஒன்றை இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தோல்விக்குப் பின்னர் சொன்னார் ஞாபகம் இருக்கிறதா?
நீங்கள் சொன்ன 2ம் போட்டியில் செவாக்கைத்தவிர வேறு யாரும் பிரகாசிக்காதது ரணதுங்கவின் கூற்றைப் பிரதிபலிக்கிறதே?
நான் 3 சுட்டி தந்திருந்தேன்...
அதில் அனைத்து அணிகளையும் பவன் நக்கல் செய்திருக்கிறார் என்று காட்டத்தான் தந்தேன்...
அத்தோடு பவன் எழுத்தாளனல்ல...
பவன் ஒரு பதிவர்... பதிவருக்கும் விமர்சகன், எழுத்தாளனுக்கும் வித்தியாசம் உள்ளது....
-
//உலக அரங்கில் நிறைய நடக்கிறது தான்...
ஆனால் இந்தியாவுக்கு எப்படி பாகிஸ்தான் போல, இலங்கைக்கு இந்தியா தான்....
இலங்கைக்கு எதிரி நாடு என்று எதுவும் இல்லாததால் இந்தியப் போட்டிகளைத்தான் பாகிஸ்தான் அளவுக்கு இரசிக்கிறோம்.
ஆகவே அந்த போட்டி உணர்வு எம்மமை இந்தியாவை சற்று அதிகமாகவே எதிர்க்கச் செய்யும்.//
பூனையை வெளியே கொண்டுவந்ததற்கு நன்றி. இதைத்தான் போட்டி நாட்டுக்காரனாய் நான் வயிற்றெரிச்சல் என்று சொன்னேன்.. :)))
//அத்தோடு பவன் எழுத்தாளனல்ல...
பவன் ஒரு பதிவர்... பதிவருக்கும் விமர்சகன், எழுத்தாளனுக்கும் வித்தியாசம் உள்ளது....
//
படைப்பாளி என்று சொல்லியிருக்க வேண்டுமோ??
மன்னித்துவிடுங்கள். நான் எதிர்பார்த்தது வேறு, இங்கே இந்திய அணித் துவேசம் கிடைக்கும் என்று போர்டு மாட்டியிருக்கும் என்று எதிர் பார்க்கவில்லை. இனி, பவனின் (இந்திய அணியை கேலி செய்யும்) ஃபோட்டோ கமெண்டுகளுக்கு நான் ரசிகன் இல்லை..
-
சொல்ல மறந்துவிட்டேன் - விமர்சனமும் செய்ய மாட்டேன் - நீங்களே சொல்லிவிட்டதால்.
பவன் - கனககோபியின் கருத்துகளுக்கு உங்களுக்கு உடன்பாடில்லையேல் தெரிவியுங்கள்.. உடன்பாடுதான் என்றாலும் புரிந்து கொள்வேன்.
-
கனககோபி, ஒன்று விட்டுவிட்டேன்.
www.indiancricketfans.com பார்த்தேன். சிறீலங்கா துவேசம் அதில் ஏதும் காணக்கிடைக்கவில்லை. குறிப்பிட்ட சுட்டி இருந்தால் தெரிவியுங்கள். ஒரு புதிய தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..
அந்த டெஸ்ட் தொடரைப் பற்றி. அந்தத் தொடரில் இலங்கை வெற்றி பெற முழுக் காரணம் - மெண்டிஸ் மற்றும் முரளீ தான். பேட்டிங் இரண்டு பக்கமுமே (இலங்கையின் முதல் டெஸ்ட், முதல் இன்னிங்க்ஸ் தவிர) மோசம்தான். மெண்டிஸை விளையாடிப் பழக்கம் இல்லாதவர்களுக்கு இன்றும் அவர் சிம்ம சொப்பனம் தான்.
-
good good.
No comments pic-க்கு "எவ்வளவோ பண்ணீட்டோம், இத பண்ண மாட்டோமா?" -ன்னு போட்டிருக்கலாம். :P
-
சுப்பர்.........
நுனலும் தன் வாயால் கெடும்...
எப்பவோ சொன்னது ... இதுக்கு...
-
//பூனையை வெளியே கொண்டுவந்ததற்கு நன்றி. இதைத்தான் போட்டி நாட்டுக்காரனாய் நான் வயிற்றெரிச்சல் என்று சொன்னேன்.. :)))//
திரும்பவும் சொல்கிறேன், அது வயிற்றெரிச்சல் அல்ல...
நீங்கள் அவ்வாறு தான் விளங்கிக் கொள்வீர்கள் என்றால் நாம் ஒன்றும் செய்ய முடியாது.
அது ஒரு போட்டி... அந்த உணர்வு வித்தியாசமானது.
புரிந்து கொள்ள மாட்டேன் என்று அடம்பிடித்தால் ஒன்றும் செய்ய முடியாது.
//படைப்பாளி என்று சொல்லியிருக்க வேண்டுமோ?? //
படைப்பாளி என்பதும் சிறிது வித்தியாசமானது.
படைப்பாளி தனது சொந்த விருப்பு வெறுப்புக்களை வெளியிடக் கூடாது.
பதிவர்கள் பதிவர்களாகவே இருக்கட்டுமே? எதற்குப் புதிய பெயர்கள் எல்லாம்?
//மன்னித்துவிடுங்கள். நான் எதிர்பார்த்தது வேறு, இங்கே இந்திய அணித் துவேசம் கிடைக்கும் என்று போர்டு மாட்டியிருக்கும் என்று எதிர் பார்க்கவில்லை. //
திரும்பவும் சொல்கிறேன், இது துவேசம் அல்ல...
நீங்கள் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்.
இலங்கையைப் பற்றி துவேசமில்லாத கருத்துரைகளை, நகைச்சுவைக்காக மடடும் இட்டால் இரசிக்க நான் தயார்.
என்னைப் பொறுத்தவரை பவனின் கருத்துரைகளில் துவேசம் எங்கும் இருந்ததில்லை, வெறுமனே நகைச்சுவை மடடும் தான் இருந்தது.
//இனி, பவனின் (இந்திய அணியை கேலி செய்யும்) ஃபோட்டோ கமெண்டுகளுக்கு நான் ரசிகன் இல்லை.. //
மன்னிக்க வேண்டும்.
பவனின் விளக்கத்தை நீங்கள் எதிர்பார்ப்பது சிறந்தது.
எனது பின்னூட்டத்தை நீங்கள் மேற்கோள்காட்டி கருத்து வெளியிட்டதாலேயே நான் உங்களுக்கு பதிலளித்தேன்.
பவனின் கருத்துக்களை நீங்கள் பெறுவது சிறந்தது.
-
http://www.indiancricketfans.com/showthread.php?t=203504
indian cricket fans இல் இலங்கைத் துவேசமென்று நான் தனித்துக் கூறவில்லை....
பொதுவாக அப்படி என்றும் எனக்கு சுட்டிகள் கையில் இல்லை என்பதால் இப்போதைக்கு இதை வைத்திருங்கள் என்றேன்.
மேலே உள்ள சுட்டியில் பாகிஸ்தான் கிறிக்கற்றை ஏற்றுக் கொள்ள முடியாத, அவர்களது திறமையை ஏற்றுக் கொள்ள முடியாத இந்திய இரசிகர்கள் உங்களுக்கு சமர்ப்பணம்....
சங்கக்கார கிங்க்ஸ் 11 பஞ்சாப்பின் தலைவராக நியமிக்கப்பட்ட செய்தியில்
//But it wud be awkward if sanga banga leads Punjab //
என்றொரு கருத்துரை இருக்கிறது.
அதைப்போல சங்கக்காரவிற்கு எதிராக சில கருத்தக்கள் இருக்கின்றன...
http://www.indiancricketfans.com/showthread.php?t=197015
http://www.indiancricketfans.com/showthread.php?t=202389
இதில்
/i wud like to see dilshan scoring a big fat fkin zero..
overhyping at its best.. //
//Dilshan is overrated player, i think the real tester for him will be to score in Tests on bouncier tracks. //
//Dang. Overrated bastid.
But the Dilscoops' here to stay //
இப்படி நான் இன்னொருவரின் தளத்தில் ஒவ்வொன்றாக எடுத்தக் காட்டுவது உண்மையாக பிழையானது.
தயவுசெய்து கண்களை விரித்து வாசிக்க முயற்சிக்கவும்.
//அந்த டெஸ்ட் தொடரைப் பற்றி. அந்தத் தொடரில் இலங்கை வெற்றி பெற முழுக் காரணம் - மெண்டிஸ் மற்றும் முரளீ தான். பேட்டிங் இரண்டு பக்கமுமே (இலங்கையின் முதல் டெஸ்ட், முதல் இன்னிங்க்ஸ் தவிர) மோசம்தான். மெண்டிஸை விளையாடிப் பழக்கம் இல்லாதவர்களுக்கு இன்றும் அவர் சிம்ம சொப்பனம் தான். //
மென்டிஸை சுப்பர் ஸ்ரார் ஆக்கியது யார்?
ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் தான் மென்டிஸ் தனது அறிமுகத்தை மேற்கொண்டாரா?
அதற்கு முதல் விளையாடவே இல்லையா?
அதற்கு முதல் விளையாடிய அணிகள் எல்லாம் 13 ஓட்டங்களுக்கு 6 விக்கற்றுக்களைக் கொடுத்தனவா?
அந்தத் தொடரில் முதற்போட்டியில் இலங்கை 600 ஓட்டங்களைப் பெற்றது.
இந்தியா 223 மற்றும் 138...
2ம் போட்டியில் இந்தியா 329 மற்றும் 269; இலங்கை 292 மற்றும் 136...
(தோல்வி...)
3ம் போட்டியில் இந்தியா 249 மற்றும் 268; இலங்கை 396 மற்றும் 123/2...
சமமென்கிறீர்களா?
தொடர் முழுதும்...
இலங்கை 1547 ஓட்டங்கள் 38 இலக்குகளை இழந்து.... (5 இனிங்க்ஸ்கள்...)
இந்தியா 1115 ஓட்டங்கள் 50 இலக்குகளை இழந்து... (6 இனிங்ஸ்கள்....)
சமமென்கிறீர்கள்?
அப்படியானால் சரி.... உங்கள் விருப்பம்...
-
@யோ அண்ணா
@பாலா அண்ணா
@மயிகண்டன்
@srithanya
@இலங்கன்
@வால்பையன்
@கோபி அண்ணா
@முகிலன்
அனைவருக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..;)
-
முகிலனுக்கு,
வணக்கம், சற்று ஆணிகள் காரணமாக இப்போது தான் உங்கள் பின்னுட்டங்களைப்பார்த்தேன்
நான் இந்திய அணியின் எதிரியாகப் பார்ப்பதில்லை, இந்திய அணியைப்பற்றி அதிகம் கமெண்டுகள் போடுகிறேன் என்கிறீர்கள்...
எனது திருப்திக்காகவே நான் வலைத்தளத்தை இயக்குகிறேன் தவிர, போட்டோ கொமெண்ட்ஸ் போடுவது எனது மனத்திருப்திக்காக மட்டுமே..
நான் மட்டுமல்ல கூடுதலாக அனைவரும் விரும்பிப்பார்க்கும் போட்டிகளில் முதலிடம் பிடிப்பவை இந்திய, இலங்கை போட்டிகள், இவற்றில் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருப்பதில்லை.எனவேதான் நான் அந்த அணிகளைப்பற்றி அதிகம் கொமெண்டுகள் இடுவதற்குக்காரணம்.
அதுமட்டுமில்லை இந்திய இலங்கை அணிகள் தவிர்ந்த அணிகளை நான் அவ்வளவு விரும்பிப்பார்ப்பதுமில்லை, அங்கு பெரிதாக கூறும்படியான சுவாரஸ்யமான விடயங்கள் இடம்பெறுவதுமில்லை.
அப்படி இடம்பெற்றால் அதையும் என் பதிவுகளில் இணைக்கத்தவறுவதில்லை.
நான் இலங்கை அணி தோற்றபோது சங்கக்கார பற்றிக்கூட ஒரு தனிப்பதிவிட்டிருந்தேன், நீங்கள் பார்த்தீர்களோ தெரியாது.(http://nbavan7.blogspot.com/2009/12/blog-post_07.html#comments)
கோபி அண்ணா சொன்னது போல எங்களுக்கு இந்கியாவை பிடிக்காது என்று கூறவில்லை,
சச்சின், கும்ளே, தினேஸ்கார்த்திக், ஏன் டோனி, சேவாக்கைக்கூட எனக்குப்பிடிக்கும்,
அதுதவிர இந்தியாஅணி என்றால் சர்ச்சை என்றுதானே இருக்கிறது,
1-சிறீசாந் இவர் பற்றி கூறத்தேவையில்லை என்று நினைக்கிறேன் உங்களுக்கே தெரிந்திருக்கும்
2-ஹர்பஜன் -சைமன்சை குரங்கு என்று ஒரு சர்ச்சை, சிறீசாந்தை நடு மைதானத்தில் வைத்து அறைந்தது, இன்னொன்று
3-சேவாக்- இன்று இவர் கூறியது,
மற்ற அணிகளை ஏன் ஒன்றும் செய்வதில்லை என்றீர்கள், சங்கக்கார ஒருநாளாவது இ்ப்படி அது ஒரு சின்ன அணி என்று கூறியிருக்கிறாரா?
எந்த அணியாக இருந்தாலும் போராடுவோம் என்பார், வேறு எந்த அணித்தலைவர்களும் இப்படி அது ஒரு ஓடினரி டீம் நாங்கள் இலகுவாக வெல்வோம் என்றெல்லாம் கூறியிருக்கவில்லை, கூறியிருந்து சேவாக் போல ஆப்பு வாங்கியிருந்தால் நிச்சயம் பதிவிட்டிருப்பேன்..
இந்த மாதிரியான எதிர்ப்புக்கள் நான் எதிர்பார்த்ததுதான், இந்த எதிர்ப்புக்களுக்காக நான் இனி கிரிக்கெட் கொமென்ட்ஸ் போடாமல் இருக்கப்போவதில்லை,
//இனி, பவனின் (இந்திய அணியை கேலி செய்யும்) ஃபோட்டோ கமெண்டுகளுக்கு நான் ரசிகன் இல்லை//
பரவாயில்லை அண்ணா, இதற்காக என்னை நான் மாற்றிக்கொள்ள முடியாது, நிச்சயம் கிரிக்டிகட் பதிவுகள்(இந்தியா உட்பட) இனியும் வரும்.
போட்டியில் பங்களாதேஸ் தோற்கிறதோ வெல்கிறதோ, அதைப்பற்றியும் எனக்குக்கவலையில்லை,ஆனால் 20 விக்கெட்டுகள் எடுக்க முடியாது என்று சேவாக் கூறியதற்கு பங்களாதேஸ் 15 விக்கெட்டுகள் எடுத்தாலே சேவாக்கிற்கு அது அவமானத்தின் உச்சக்கட்டம் எனலாம்.
இலங்கை ரசிகர்கள் ஏன் இந்தியாவின் மீது வயிற்றெரிச்சல் பட வேண்டும்? இந்திய வீரர்களின் (குறிப்பிட்ட சில வீரர்களின்) நடத்தைகளே எமக்குப்பிடிக்கவில்லை.
இந்த விடயம் இவ்வளவு சீரியசா எடுப்பீர்களென நான் எதிர்பார்க்கவில்லை, ஆனால் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் நான் எழுத்தாளனுமில்லை, ஊடகவியலாளனுமில்லை, சாதாரண பதிவர்.
எனக்கப்பிடித்தவற்றை பதிவிட நான் யாருக்கும் பயப்படத்தேவையில்லை, பதிவிடாமல் இருக்கப்போவதுமில்லை.
உங்கள் பின்னூட்டத்தில் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ எதையும் தெரிவிக்கலாம் பதிலிடத்தயாராக இருக்கிறேன்.
-
//அதுதவிர இந்தியாஅணி என்றால் சர்ச்சை என்றுதானே இருக்கிறது,//
இதில் கூற மறந்த இன்னொரு விடயம் இரவு விடுதி, களியாட்டம் போன்ற பிரச்சினைகளில் அதிகம் மாட்டியது யார்?
ஆனால் இலங்கையின் இரு வீரர்கள் அதில் மாட்டியபோது நான் அதையும் பதிவிடத்தவறவில்லை...
-
@வால்பையன்
நன்றி வருகைககும் கருத்துக்கும்...;)
-
No comments..:)
-
Karthik
ஹாஹா... நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
-
பவன்,
விளக்கங்களுக்கு நன்றி..
நான் இலங்கை வீரர்களோ, இல்லை சங்கக்கராவோ சர்ச்சை ஏற்படுத்தும் வண்ணம் பேசுகிறார்கள் என்று சொல்லவில்லை.
//இலங்கை ரசிகர்கள் ஏன் இந்தியாவின் மீது வயிற்றெரிச்சல் பட வேண்டும்? இந்திய வீரர்களின் (குறிப்பிட்ட சில வீரர்களின்) நடத்தைகளே எமக்குப்பிடிக்கவில்லை
//
அதைத்தான் நானும் கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு இந்திய வீரர்களின் நடத்தை மட்டுமே தெரிகிறதே ஏன் என்று?
ஆஸ்திரேலிய அணியை விட சர்ச்சை ஏற்படுத்தும் வண்ணம் பேசுபவர்கள் இருக்கிறார்களா என்ன?
அதே ஹர்பஜன் சம்பவத்தில் மங்கியோ/ மா-கி யோ சொன்னது ஹர்பஜன் தவறென்றாலும், அதற்குத் தூண்டியது சிமண்ட்ஸின் தவறல்லவா?
சக்கர் என்று முரளியை மொத்த ஆஸ்திரேலிய நாடே தூற்றுகிறதே அது எல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியாதா?
அப்படி அழைத்த போது மைதானத்தை விட்டு வெளியேறி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தார்களே இலங்கை அணி, அதை ஆஸ்திரேலியனாக இருந்து பார்த்தால் குறையாகத் தானே தெரியும்.
மேத்யூ ஹைடன் ஆஸ்திரேலிய ரேடியோவில் இஷாந்த் சர்மாவை மிமிக்ரி செய்து கேலி செய்தாரே அது உங்களுக்கு சர்ச்சையாகத் தெரியவில்லையா?
இப்போது சமீபத்தில் கூட மேற்கிந்திய அணி வீரர் பென்னை வம்புக்கிழுத்து அவரை சஸ்பெண்ட் ஆக வைத்தனரே ஆஸ்திரேலிய வீரர்கள் ஹாட்டினும் ஜாக்சனும், அது உங்கள் கண்ணில் படவில்லையா?
//இதில் கூற மறந்த இன்னொரு விடயம் இரவு விடுதி, களியாட்டம் போன்ற பிரச்சினைகளில் அதிகம் மாட்டியது யார்//
வரலாறு தெரியாமல் பேசாதீர்கள் பவன். குடித்துவிட்டு ப்ராக்டிசுக்கு வந்ததற்காக சஸ்பெண்ட் ஆனது யார்? குடித்துவிட்டு பாத்ரூம் கதவை குத்தியதால் கையில் காயம் ஏற்பட்டு விளையாட முடியாமல் போனது யார்?
நான் உங்களை இந்தியாவைக் கேலி செய்யதீர்கள் என்று சொல்லவே இல்லை. ஏன் இந்தியாவை மட்டும்? என்பது தான் என் கேள்வி.
அதற்கு கோபி அவர்கள் சரியான பதில் சொல்லிவிட்டார். நான் புரிந்து கொண்டேன். உங்கள் விளக்கங்களும் மறைமுகமாக அதையே சொல்கிறது.
நான் இந்திய அணியின் தீவிர ரசிகன். அதனால் எனக்கு பாகிஸ்தானைப் பிடிக்காது. பாகிஸ்தான் தோற்றால் சந்தோசப்படுவேன். ஜெயித்தால் வயிற்றெரிச்சல் படுவேன். ஐ.பி.எல் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ஓரம் கட்டப்பட்டதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். - நான் வெளிப்படையாகச் சொல்லிவிட்டேன். நீங்கள் சொல்லவில்லை. அவ்வளவுதான்.
//போட்டியில் பங்களாதேஸ் தோற்கிறதோ வெல்கிறதோ, அதைப்பற்றியும் எனக்குக்கவலையில்லை,ஆனால் 20 விக்கெட்டுகள் எடுக்க முடியாது என்று சேவாக் கூறியதற்கு பங்களாதேஸ் 15 விக்கெட்டுகள் எடுத்தாலே சேவாக்கிற்கு அது அவமானத்தின் உச்சக்கட்டம் எனலாம்.
//
:)))))
-
//அதைத்தான் நானும் கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு இந்திய வீரர்களின் நடத்தை மட்டுமே தெரிகிறதே ஏன் என்று?//
முதலாவது விடயம் இந்தியாவுக்கு அண்மையில் இந்தியா இருப்பது...
அல்லது உங்கள் பாசையில் இந்தியாவுக்கு அருகில் தான் நாங்கள் வாழும் இலங்கை உள்ளது. :P
//ஆஸ்திரேலிய அணியை விட சர்ச்சை ஏற்படுத்தும் வண்ணம் பேசுபவர்கள் இருக்கிறார்களா என்ன?//
முன்பை விட அவர்கள் இப்போது எவ்வளவோ பரவாயில்லை....
மற்றையது அவர்கள் எப்போதுமே அணிக்குள் உள்ள வீரரை கன்னத்தில் அறைந்து சர்ச்சைகளை ஏற்படுத்துவதில்லை, எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு அணியை 'ordinary team' என வர்ணித்ததாக நான் அறியேன்...
உங்கள் பார்வையில் அவுஸ்ரேலியா மோசமான அணி என்றால் அவர்கள் செய்யாத செயல்களையெல்லாம் செய்த இந்தியா அதைவிட மோசமானது....
//அதே ஹர்பஜன் சம்பவத்தில் மங்கியோ/ மா-கி யோ சொன்னது ஹர்பஜன் தவறென்றாலும், அதற்குத் தூண்டியது சிமண்ட்ஸின் தவறல்லவா?//
தூண்டுதல் என்றால்?
விளையாட்டில் கருத்துப் பரிமாற்றங்களை வேண்டாம் என்கிறீர்களா?
என்னைப் பொறுத்தவரை கருத்துப் பரிமாற்றங்களை வரவேற்கிறேன்....
அதை எல்லை மீறிப் போகக் கூடாது...
சைமன்ட்ஸ் செய்ததை நாங்கள் சரியென்று சொல்லவில்லை, ஆனால் சைமன்ஸ் விளையாடும் படங்கள் தேவையே?
அத்தோடு அவுஸ்ரேலியர்களை இந்தியர்களோடு ஒப்பிடாதீர்கள்..
அவர்கள் பழம் தின்று கொட்டை போட்ட பின்னர் தான் உந்த வாய்ச் சண்டைகளுக்குப் போவார்கள்.
இங்கு நேற்று வந்த பச்சாக்கள் எல்லாம் சண்டைக்குப் போகின்றன...
நாங்கள் கேலி செய்வதற்கு மத்தியூ ஹெய்டனும், சைமன்ட்ஸ்ம் இப்போது விளையாடுவதில்லை....
//சக்கர் என்று முரளியை மொத்த ஆஸ்திரேலிய நாடே தூற்றுகிறதே அது எல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியாதா?//
முழு நாடுமு் இல்லை... பலர் இப்போது ஏற்கு் கொண்டுவிட்டார்கள்...
முரளிக்காக கவலைப்படுகிறார்கள்..
இந்தியாவில் நவ்ஜோத் சிங் சிது முரளியை சக்கர் என்று சொல்ல இந்தி கிறிக்கற் சபை பக்கத்து நாடு என்பதற்காக சிதுவிடம் அப்படிச் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதா?
//மேத்யூ ஹைடன் ஆஸ்திரேலிய ரேடியோவில் இஷாந்த் சர்மாவை மிமிக்ரி செய்து கேலி செய்தாரே அது உங்களுக்கு சர்ச்சையாகத் தெரியவில்லையா?//
lol...
அந்தளவு பெரிய கிறிக்கற் வீரர் வேண்டுமென்று இஷாந் சர்மாவிடம் சண்டைக்குப் போனாரா?
தன்னை விட எவ்வளவோ மூத்த வீரரான ஹெய்டனோடு ஏன் இஷாந் சர்மா வம்புக்குப் போனார்...
இவர் போவாராம் சண்டைக்கு, ஆனா அவர் அடிச்சாத் தான் பிழையாம்... பொனது பிழையில்லயாம்...
//இப்போது சமீபத்தில் கூட மேற்கிந்திய அணி வீரர் பென்னை வம்புக்கிழுத்து அவரை சஸ்பெண்ட் ஆக வைத்தனரே ஆஸ்திரேலிய வீரர்கள் ஹாட்டினும் ஜாக்சனும், அது உங்கள் கண்ணில் படவில்லையா?//
அப்போ போட்டி மத்தியஸ்தர் பிழை செய்துவிட்டார் என்கிறீர்களா?
அதாவது பெரிய பிழை செய்தவரை இடைநிறுத்தம் செய்யாமல், சிறிய பிழை செய்ய பென்னை இடைநிறுத்தி ஒருபக்கமாகச் செயற்பட்டார் என்கிறீர்கள்?
அதுசரி, இப்போதெல்லாம் போட்டி மத்தியஸ்தர்கள் அப்படித்தானே...
செவாக் பந்துவீச்சாளர் மீது அடிப்பேன் என்று துடுப்பைக் காட்டலாம், அதற்குக் கேள்விகள், விசாரணைகள் கிடையாது.... எல்லாம்.... :(
//வரலாறு தெரியாமல் பேசாதீர்கள் பவன். குடித்துவிட்டு ப்ராக்டிசுக்கு வந்ததற்காக சஸ்பெண்ட் ஆனது யார்? குடித்துவிட்டு பாத்ரூம் கதவை குத்தியதால் கையில் காயம் ஏற்பட்டு விளையாட முடியாமல் போனது யார்?//
யாரு யாரு....
இன்னொன்று மேலைத்தேய வீரர்களை இந்த விடயத்தில் இழுக்காதீர்கள்... அவர்களின் வாழ்க்கை முறை வேறு.
கீழைத்தேய வீரர்களில் இந்திய வீரர்கள் தான் அதிகமாக இப்படியான பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டது...
//நான் இந்திய அணியின் தீவிர ரசிகன். அதனால் எனக்கு பாகிஸ்தானைப் பிடிக்காது. பாகிஸ்தான் தோற்றால் சந்தோசப்படுவேன். ஜெயித்தால் வயிற்றெரிச்சல் படுவேன். ஐ.பி.எல் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ஓரம் கட்டப்பட்டதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். - நான் வெளிப்படையாகச் சொல்லிவிட்டேன். நீங்கள் சொல்லவில்லை. அவ்வளவுதான்.//
இங்கு தான் உங்களுக்கும் எங்களுக்குமான விடயம்....
நாங்கள் போட்டியில் இலங்கை அணி வெல்ல வேண்டும் என நினைக்கிறோம்.
நீங்கள் ஓர் அணியை ஓரம் கட்டப் பார்க்கிறீர்கள்.
நாங்கள் இப்போதும் சொல்கிறோம் இந்திய அணி மீதான போட்டியை வயிற்றெரிச்சல் என்று உங்கள் இந்திய அணி மீதான பக்தி காட்டுகிறது....
-
முகிலன்,
சகோதரரே நீங்கள் நாம் கூறும் கருத்துக்களைச்சரியாக புரிந்து கொள்ளவில்லை, இதற்கு மேல் உங்களுக்கு எப்படி விளக்குவது என்று என் அறிவுக்கு எட்டவில்லை.
அத்தோடு நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு கோபி அண்ணாவின் பதில்களையே எனது பதிலாக ஏற்றுக்கொள்ளலாம்.
//அதைத்தான் நானும் கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு இந்திய வீரர்களின் நடத்தை மட்டுமே தெரிகிறதே ஏன் என்று?//
டில்சான், சனத் ஆகியோர் அப்படி ஒரு சம்பவத்தில் மாட்டிக்கொண்டபோது அதையும் நான் பதிவிட்டிருந்தேன்.
தவிர ஹெய்டன் எனும் ஒரு மிகச்சிறந்த வீரர் அவர் ஏன் இசாந் சர்மாவுடன் தேவையில்லாம் கேலி செய்யப்போகிறார்,
இதைத்தவிர கோபி அண்ணாவின் பதில்களை என்பதிலாக ஏற்கலாம்.
////நாங்கள் போட்டியில் இலங்கை அணி வெல்ல வேண்டும் என நினைக்கிறோம்.
நீங்கள் ஓர் அணியை ஓரம் கட்டப் பார்க்கிறீர்கள்.////
அதே.. இதிலிருந்து தெரிகிறதுதானே எது வயிற்றெரிச்சல் என்று.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..;)
கலக்கலோ கலக்கல் பவன்.. சேவாக் சொ.செ.சூ வைத்துகொண்டு விட்டார்