Related Posts with Thumbnails

கிருஷ்ணா..
அவலாஞ்சி..
அங்க.. சாக்லட் ஃபாக்டரி இல்ல.. அங்க
கே(G)ற்று பக்கத்துல மாடு மாடுல்ல.....


ஒரு படத்தை விமர்சனங்கள் வர ஆரம்பிக்கும் முன்னமே பார்த்து விட வேண்டும், இல்லையேல் படத்தைப் பற்றிய விமர்சனங்கள் எம் காதுகளுக்கு வந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிடும். வழக்கமாக எந்தத்திரைப்படமாக இருந்தாலும் முதல் வாரத்துக்குள் பார்த்துவிடுவேன். ஆனால் வர முதலே பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகளை மனதில் கிளறிவிட்டபடி வெளிவந்த படம்தான் தெய்வத்திருமகள். இதைப் பார்ப்பதற்கு இத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளக் காரணமாக இருந்து எனக்கு வகுப்பு வைத்தவர்களுக்குக் கண்டனங்கள்.

எனது ஞாபகசக்திக்குத் தெரிந்து 10 வயதில் கரண்டில் விளையாடி வீட்டில் அடிவாங்கி அழுததுக்குப் பிறகு அழுததாக ஞாபமில்லை எனக்கு. எந்த விதமான கவலையாக இருந்தாலும் மனம் விட்டு அழுது பழக்கமில்லை. ஏன் மரண வீட்டில் மற்றவர்கள் அழுவதைப் பார்த்தால் கண்கலங்கும் என்பார்கள் எனக்கு அப்படிக்கூடு நடந்ததில்லை. கிட்டத்தட்ட ஒரு சிட்டி ரோபோ மாதிரி இருப்பவன் நான். "நீ இந்தப் படத்தைப் பார்த்தால் கட்டாயம் அழுவாடா" என்று நண்பர்கள் முதல் பலர் சொல்லியிருந்தார்கள். நானும் சவாலாகப் " அதையும் பார்க்கலாம்டா" என்று சொல்லியிருந்தேன்.


ஊட்டியில் சொக்லெட் ஃபக்டரியில் வேலை செய்யும் மன வளர்ச்சி குறைந்த தந்தையும், அவரின் 5 வயது சுட்டிப் பொண்ணு நிலாவையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதைதான் தெய்வ்திருமகள். படத்தில் ஆரம்பம் முதலே மனதை உறைய வைத்து கண்களில் நீர்கட்டவும் வைத்து அடுத்த கணமே கண்ணீருடன் சிரிக்கவும் வைத்து படம் கடைசிவரை கண்ணீர், சிரிப்பு, புன்னகை,மெளனம், சோகம், தவிப்பு என அனைத்து உணர்ச்சிகளையும் மாறிமாறி காட்டியிருப்பது அருமை.

குறிப்பாக குழந்தை அழுதுகொண்டிருக்கும் போது அதைப் பார்த்தபடி விக்ரம் பேசாமல் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருப்பார். அப்போது ஒரு பெண், "குழந்தை அழுதுகிட்டிருக்கு ஒண்ணும் பண்ணாம சும்மா இருக்க" என்றதுக்கு அப்பாவியாக "என்ன பண்ணணும்" என்று கேட்ட காட்சியில் மனதில் சம்மட்டியால் ஓங்கி அடித்தது போல கனம்.

அது தவிர மேலே பார்த்து சொல்லு என்று அவ்வப்போது வரும் சிரிப்பை உண்டாக்கும் காட்சிகள், சந்தானத்தின் இயல்பான கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரம் ஆகியன எனது மனதைக் கவர்ந்தன.

அனைவருக்கும் போல அந்தக் கடைசி கோர்ட்டில் இடம் பெறும் பாசப்போராட்டம் என் மனதையும் உடைத்து கண்களில் கண்ணீரை வரவைத்த காட்சி.
"சிட்டி ரோபோ கெட்டப் பையன் நானே அழுதிட்டேன்னா பாருங்களேன்."


I AM SAM படத்தின் தழுவல் அது இது என சொல்லுபவர்களின் கவனத்திற்கு, என்னதான் தழுவலாக இருந்தால் என்ன? இப்படிப்பட்ட அருமையாக படத்தை தமிழில் தந்தமைக்கு கோடான கோடி நன்றிகளைச் சொல்லிக் கொள்வோம்.

கடை சியாக ஒரு முக்கியமான கேள்வி,

.

.

.

.

.

.


.

"நிலா எப்ப வரும்?"

ருவீட்ஸ் || Tweets #007

பதிவிட்டவர் Bavan | நேரம் 8:23 PM | 9 பின்னூட்டங்கள்
 
 -1-
காலம் கடந்த ஞானத்தை maturity என்று சொல்லலாமா? #டவுட்டு
-2-
ஆங்கிலப்பரீட்சையில் நாம் எழுதும் பதில்கள் புதுக்கவிதை மாதிரி, இலக்கணப் பிழைகளை கருத்தில் கொள்ளாதீங்க #பின்குறிப்புINஎக்ஸாம்PAPER
-3-
கண்ணை முடு, மூக்கைப்பார், இப்போ கண்ணைத்திற... எழுந்து நில் கைகளைத்தூக்கு, இப்போ 2கால்களையும் தூக்கு..:P #நித்தியிசம்:P
-4-
ஒருவரை கோபப்படுத்த 2வழிகள்,1-அவரின் சுயகௌரவத்தை சீண்டிப்பார்க்கலாம் 2-அவர் ஆழ்ந்தஉறக்கத்திலிருக்கும் போது தட்டிஎழுப்பி gdn8சொல்லலாம்
-5-
காதலிக்குறவங்க எல்லாரும் அரசியல்வாதிகள் மாதிரி, எந்த நேரத்தில என்ன செய்வாங்க,அதை எதுக்கு செய்யுறாங்கன்னே யாருக்குமே தெரியாது...:P
-6-
அபிராமி,கண்ணம்மா,சந்தியா,ரோஜா,அஞ்சலை,மல்லிகா,சிந்து,மாலினி,ரசிகா,நகுமா,ஊர்வசி,நிலா,செண்பகம்,தாமரை ஆகிய பெயர்களிளைக்காதலியின் பெயராகக் கொண்டவர்களுக்கு RINGTONE போடுவதில் எந்தச் சிக்கலும் இருந்திருக்காது..:P #ஆராய்ச்சி_முடிவு
-7-
ஒரே பாட்டில் பணக்காரனாகவும், ஒரே பாட்டில் அனைத்துப் பணத்தையும் செலவழிக்கவும் ரஜனியால் மட்டுமே முடியும். #சூப்பர்ஸ்டார்டா..!
-8-
தவறு செய்தவர்களே அது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்காக கவலைப்படும் போது எந்தத்தவறுமே செய்யாத நான் என் மீது போலியாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை எண்ணி கவலைப்படுவதிலோ, கோபப்படுவதிலோ எந்தத்தவறும் இல்லை
-9-
ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் 7 காதல் வருமாம், அது இதுதானா?1-அம்மா 2-அப்பா 3-சகோதரம் 4-நட்பு 5-காதலி 6-மனைவி 7-பிள்ளை #டவுட்டு

-10-
5நிமிடம்தான் என்று ஆரம்பிக்கும் விளையாட்டுக்கள் 5மணிநேரமானாலும் முடிவதில்லை.அட்லீஸ்ட் 1/2 மணிநேரமாவது என்று ஆரம்பிக்கும் படிக்கும் முயற்சிகள் 5 நிமிடம் கூட தொடர்வதில்லை.

-11-
இணையம்,மொபைல்,உறவினர்கள்,வீடு,வாகனம்,தூசு,பஸ்,கவலை, எதுவுமில்லாமல் ஒருநாளாவது எங்காவது ஒரு அமைதியான இடத்தில் போய் இருக்கவேண்டும் #பேராசை

-12-
சோகமான தருணங்களை உணரவைக்க பல வார்த்தைகள் உண்டு, இன்பமான தருணங்களைச் உணரவைக்க ஒரே வழி அதை அனுபவித்து அறிவதுதான் #அனுபவம்

-13-
சொன்னதை செய்யணுமாம், சொல்லாததையும் செய்யணுமாம், bt சொன்ன சிலதைசெய்யவும் கூடாதாம், சொல்லாத சிலதையும் செய்யக்கூடாதாம் #போங்கடாஇந்தஅரசியல்புரியவேஇல்ல

-14-
யாரிலாவது கோபமிருப்பின்அவர்களை நினைத்து வெறுமனே பல்லை கடிப்பதை விட,வாயில் ஏதாவது உணவைப் போட்டுவிட்டுக் கடிக்கலாம். உடம்புக்கும் நல்லது :P

-15-
'முதன்முதலாக' என்ற வார்த்தைக்குள் தான் அதிக மகிழ்ச்சிகளும், சோகங்களும குடியிருக்கின்றன.

-16-
மானம் என்பதன் எதிர்ச்சொல் அவமானம் என்றால் டேய் என்பதன் எதிர்ச்சொல் ஏன் அடேய் என்று இருக்கக்கூடாது. #டவுட்டு..:P

-17-
பழையபாடல்களின்BGMகுதிரைவண்டியில் போவதுபோலவும், புதியபாடல்கள் விமானத்தில் போவதுபோலவும் எண்ணத்தையும்கொடுக்கிறது#அவதானிப்பு

-18-
தூக்கமில்லா இரவுகளில்தான் தத்துவங்கள் பிறக்கின்றன, உடனே அதை பக்கத்திலிருப்பவனுக்கு சொல்ல முற்படும்போது உதைகளும் பிறக்கின்றன..:P

-19-
தத்துவம் என்பதில் தத்=சிங்களத்தில் பல் என்று பொருள். து=துப்பு என்பதை குறிக்கிறது. வ(அ)ம்=மழலை மொழியில் சாப்பாடு என்று பொருள். ஆகவே 'பல்லு விளக்கிட்டு சாப்பிடு என்று பொருள் #தத்துவம்பற்றியதத்துவம் :P

-20-
"புதியது" என்ற ஆண்டாண்டு காலமாய் பயன்படுத்தப்படும் பழைய சொல் மட்டும் பழையதாக இருந்தாலும் புதியவற்றைக் குறிப்பிடப் பயன்படுகிறது.

-21-
உயர் அதிகாரி குடிகாரனாக இருந்தால்,அவனிடம் திட்டு வாங்குவதை விட அவனை அறைந்து விட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறிவிடுங்கள் குடிகாரர்களுக்கு நீங்கள் அறைந்தது ஞாபகமிருக்கப்போவதில்லை..:P

-22-
மழை+ குளிர்+ பஸ்+ ஜன்னலோரசீட்+ இதமானகாற்று=சொர்க்கம் #அனுபவம்

-23-
தேவையானவற்றுடன் பிடிக்காத ஒன்றுசேரும்போது அதுநமக்கு தேவைப்படுவதில்லை,தேவையில்லாத ஒன்றுடன் தேவையான ஒன்றுசேரும்போது அதுநமக்கு தேவைப்படுகிறது
-RT-
:Facebook - வில்லங்கம் தானா தேடி வாற இடம் Twitter - நாங்களே வில்லங்கத்திட்ட போய் மாட்டுற இடம் :P
அண்மையில் பிரபல கமரா+டான்ஸ் புகழ் சாமியார் நித்தியானந்தா அவர்கள் குண்டலினி சக்தியைக் கண்டுபிடித்து, புவியீர்ப்பு விசைக்கு எதிராக எங்கள் எல்லாரையும் அந்தரத்தில் பறக்க விட்டிருக்கிறார். இவரின் இந்த திறமையான விடயத்தை எப்படி இவரால் மட்டும் செய்ய முடிந்தது என்று நாம் நேரடியாகச் சென்று கேட்டிருந்தோம், அதற்கு அவர் திருவிளையாடல் தனுஷ் ரேஞ்சுக்கு லெந்தா ஒரு டயலாக் பேசினார். அதை எடிட்டிங் பண்ணாம அப்பிடியே போட்டிருக்கிறோம்..:P



"காலைல மூணு, நாலு மணிக்கு அலாரம் வச்சு அலாரம் அடிக்கிறதுக்கு முன்னாடி எந்திரிச்சு, அடிக்கிற அலாரம் பக்தகோடிகளுக்கு கேக்காம நிறுத்திட்டு, அமுதம்னு சொல்லி கமண்டலத்துல ஊத்தி வச்சு நேத்து நான் குடுத்த பியரை அடிச்சிட்டு குப்புறப்படுத்துக்கிடக்கிறவன் பாக்கட்ல அஞ்சு பத்துன்னு ஆட்டையப் போட்டுகிட்டு, பிளைட் புடிச்சுகிட்டு போனா பிளைட்டு டிலேன்று வரும்...

சரி ரெஸ்ட் எடுக்கலாமேன்னு பக்கத்துல உள்ள லாட்ஜீக்குப் போயி அரை மணிநேரத்துக்கு ரூம் வேணும் சார்னா அவன் நம்மளை ஏலியன் மாதிரிப்பாப்பான், அந்த அசிங்கத்தையெல்லாம் தாங்கிட்டு ரூமைப்போட்டு உள்ளபோயி உக்காந்தா, நாம அங்க போனதைத் தெரிஞ்சுகிட்டு நமக்கு முன்னாடியே எவனாச்சும் ரூம் வாசல்ல வந்து நிப்பான்.

அப்பிடியே பக்குன்னு இருக்கும் நெஞ்சுக்குள்ள...

அவனையெல்லாம் சமாளிச்சு ஆசிங்கிற பேர்ல ஏதோ நாலு புரியாத பிட்டப்போட்டு அனுப்பி வச்சா, அப்பறம் ஒரு பொண்ணு டான்ஸ் கத்துக்க வாறேன்னு அடம்புடிக்கும். சரி வாம்மான்னு சொல்லிட்டு கதவைத்திற காற்று வரட்டும், காலைப்புடி, கையப்புடி, கட்டிப்புடி, பல்ட்டி அடின்னு டீ.ஆர் ரேஞ்சுக்கு வசனம் பேசினா பின்னாடியிருந்து ஒருத்தன் கமரா வைச்சிருப்பான், அதுகூடத் தெரியாம டான்ஸ் கத்துக்குடுத்திட்டு, திரும்பிப்பாத்தா போலீசு கேட்டா போலிச்சாமி டீசிங்கும்பான்...

அந்த கேஸ் எல்லாம் பேஸ் பண்ணி அதுக்கப்பறமும் கதவே இல்லாத ரூமாப் பாத்து, ஏணிலயெல்லாம் ஏறி இறங்கி பறக்குற டான்ஸ் கத்துக் குடுக்கறேன்னு நாலு ஃபிகரைக் கரக்ட் பண்ண ட்ரை பண்ணினா,


அங்க ஒரு ரிப்போர்ட்டர்,
"சீ பொறுக்கி ராஸ்கல், நாயே நீயேல்லாம் திருந்தே மாட்டியா,சோறு திங்கிறியா வேற ஏதும் திங்கிறியா, உனக்கு வெக்கமே கிடையாதா...!#$@%^$^&**(()&(_&%, "

அப்பிடீன்னு கெட்ட கெட்ட வார்த்தைல என்னை மட்டுமில்லாம என் போலிச்சாமியார் கும்பலயே சேத்துத்திட்டுவான். அதெல்லாம் கொஞ்சங்கூட காதுல வாங்கிக்காம கொஞ்சங்கோஞ்சமா அடுத்த கட்டமா நாலு ஃபிகரைக் கரக்ட் பண்ணி, காசு காசாக் கொள்ளையடிச்சு, நாம எத்தனை தடவை மாட்டிகிட்டாலும் நம்மளையே நம்புற மடைப்பயலுகளை வச்சு தப்பிச்சு...

சாமி நீதான் என் உயிரு, மத்தவங்கெல்லாம் _____ன்னு சொல்ல வைக்கிறதுக்குள்ள நாங்க படுறபாடு இருக்கே கேட்டா சேத்துப் பன்னி கூட குரவளையக் கடிச்சுத்துப்பும்.

வல்லமை தாராயோ!

பதிவிட்டவர் Bavan | நேரம் 10:41 AM | 10 பின்னூட்டங்கள்
கடந்த 16ம் திகதி யாழ்ப்பாணம் புற்றளை விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற "மறுபடியும் பாரதி" என்ற தலைப்பில் இடம்பெற்ற கவியரங்கில் பங்குபற்றும் ஓர் வாய்ப்புக் கிடைத்தது. எனது கன்னிக் கவியரங்கை யாழில் அரங்கேற்ற வாய்ப்பளித்த தனஞ்சயன்(பதிவர் பால்குடி), ஆதிரை அண்ணா மற்றும் சக பதிவர்கள் லோஷன் அண்ணா, மாலவன் அண்ணா, சுபாங்கன் அண்ணா அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.




அன்றைய தினம் நான் படித்த கவிதையை பகிரலாமென இருக்கிறேன்.


கவியரங்கத் தலைவர் லோஷன் அண்ணாவின் ஆரம்பத்தையும், அறிமுகத்தையும் தொடர்ந்து எனது கவிதை அரங்கேறியது.


லோஷன் அண்ணாவின் ஆரம்பக் கவிதையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.



வல்லமை தாராயோ!

(வல்லமை தாராயோ ஒலிவடிவம்)























தாழ் திறந்து தாளெத்து
தோள் சுமந்த பாழ் கழைந்து
கவியெனும் வாள் எடுத்து
வீழ்த்த வழி கொடுத்த
புற்றளை நாயகன் விநாயகனுக்கு
என் சிரந்தாள் வணக்கம்

மிடுக்கு மீசைக்கு
பயங்கலந்த சிறு வணக்கம்
துடுக்கு நடைக்கு
துவளாத பெரு வணக்கம்
தலை காக்கும் பாகைக்கு
தலைதாழ் குரு வணக்கம்
கறுப்பு ஆடைக்கு
கரங்குவிந்த தமிழ் வணக்கம்
பாத்தலைவன் பாரதிக்கு
பண்புடன் ஓர் பா வணக்கம்

முத்தமிழ் மன்னனே - என்
மூத்த அண்ணனே
கவிதையின் கண்ணனே
வெற்றியின் விண்ணனே
விக்கலுக்கும் உனக்கும் நெருங்கிய தொடர்புண்டு
விக்கல் நிற்பதில்லை தண்ணீர் குடிக்கும்வரை
உன் முயற்சி தளர்வதில்லை வெற்றி கிடைக்கும்வரை
முயற்சியில் தளரா விக்கிரமாதித்தா
தளரா மனதுடன் உனக்கும் தமிழ் வணக்கம்

மேடையில் வீற்றிருக்கும் முதுபெரும் கவிகளுக்கும்
இளவலின் தனி வணக்கம்.
கவிமழையில் நனைய வந்து சபையில் இங்கு
உள்ளவர்க்கும் பொது வணக்கம்


என் மனமெங்கும் நிறைந்த
கனங்களைக் கழைய
மடல் ஒன்று வரைய
மை தீட்டிக் கொண்டேன்
எப்படித் தொடங்க?

அன்பே இல்லா மரத்த மனதால்
எப்படிச் சொல்வேன்
"அன்புள்ள பாரதி"

பாசமே இல்லா பயந்த நெஞ்சுடன்
எப்படிச் சொல்வேன்
"பாசமிகு பாரதி"

பண்பே இல்லா பாழ்பட்ட மனதுடன்
எப்படிச் சொல்வேன்
"பண்புள்ள பாரதி"

உணர்ச்சியே இல்லா உறைந்த மனதால்
எப்படிச் சொல்வேன்
"பாரதி பாரதி

மழையில் நனைந்த தீப்பெட்டி போல
சுடர்விட மறந்து ஈரமாய்க் கிடக்கும்
மனதை கந்தக பூமியில் வைத்து
உலர்த்தி உலர்த்தி உயிர் பெறவைத்து
சுடர் பெறவேண்டி தொடர்கிறேன் சும்மா

பிறக்கும் வரைக்கும்
மகிழ்வாய் இருக்கும்
பிறந்த பின்னே மகி்ழ்வே போகும்

வளரும் வரைக்கும்
வரையரை இருக்கும்
வளர்ந்த பின்னே வாழ்வே போகும்

இறக்கும் வரைக்கும்
ஆசைகளிருக்கும்
இறந்த பின்னே மக்கிக்போகும்

இப்பெரு உடலில்
எங்கோ எதிலோ
ஒட்டி வாழும் சிறுமனதோரம்
பெருகிய குமிறல்கள்
கொட்டி தீர்த்திட கொதிக்கும்
ஒரு மடல் வரைகிறேன்

சுரண்டல்களின்றி பதுக்கல்களின்றி
தணிக்கைகளின்றி தாமதமின்றி
தயக்கங்களின்றி தடைகளுமின்றி
மடலொன்று வரைய - அது
மாற்றங்களின்றி உனை வந்தடைய
மரித்த மனத்தான் எனக்கு வல்லமை தாராயோ

நினைவுக் கொசுக்கள் கனவைக் கலைக்க
கண்திறந்து இருளைப் பருகும் வேளை
காண முனைந்து தோற்றுப்போன முந்தைய இரவின்
இறுதிக் கனவை ரசித்து ருசித்து உருக்கி எடுத்து
உணர்வை அளித்து உணர்ந்து முடிக்க
உருகிக் கேட்கிறேன் எனக்கு வல்லமை தாராயோ

புணர்ச்சி கறுமங்கள் கண்ணைக் கருக்க
உணர்ச்சி உறுமல்கள் மனதைத் துளைக்க
அவனும் அவளும், அவளும் அவனும்
காலையும் மாலையும், மாலையும் காலையும்
அடங்கி மடங்கி ஒடுங்கி கிடக்கும்
அமைதியான கடற்கரையோரம்
மதுவைக் கண்டால் குருடாய்ப் போகும்
காட்சிப்பெட்டித் திரைகள் போல
காட்சியைக் காணா கண்கள் கொள்ள
கதறிக்கேட்கிறேன் கடிதினில் எனக்கொரு
வல்லமை தாராயோ

கோபம் கொண்டு கோபம் கொண்டு
கொதித்துக் கொதித்து குமுறிய வரியை
காதல் கொண்டு காதல் கொண்டு
கனிந்து உருகிப் பருகிய வரியை
சோகம் கொண்டு சோகம் கொண்டு
கண்ணீர்த்துளியால் கோர்த்த வரியை
காமம் கொண்டு காமம் கொண்டு
கலவி முடித்து குலவிய வரியை
நட்புக் கொண்டு நட்புக் கொண்டு
நன்றிக் கடனாய் செதுக்கிய வரியை
ரசித்து ரசித்து ருசித்து ருசித்து
சிகப்புக் கோடால் அடிக்கோடிட்டு
அழுத்திப் படித்த அழகிய வரியை
கத்தி முனையில் நிறுத்தி்க் கேட்டும்
கரவொலி மறுத்த கரசேவையரின்
மனதைக் கவரும் மாயம் அறியும்
கலைந்து குறையாத கூட்டங்கட்டும்
மந்திரந்தெரிந்தெனக்கு வல்லமை தாராயோ

நானிலத்தவரின் நன்மையை நினைத்து
நாளும் பொழுதும் நன்மையே செய்து
பாரதியவனின் பாக்கள் புரிந்து
பாரதியவனின் பாங்கினில் வாழ்ந்து
நாவடக்கி நான் அடக்கி
நாங்கள் என்ற ஒற்றைச்சொல்லில்
சிலராய்ப் பலராய்ச் சேர்ந்தே இருந்து
நங்கூரப் பிடியாய் நகராமல் வாழ
வல்லமை தாராயோ

மற்றைய கவியரங்கக் கவிரங்கக்கவிகளையும் தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்குங்கள்.

ருவீட்ஸ் || Tweets #006

பதிவிட்டவர் Bavan | நேரம் 10:40 PM | 3 பின்னூட்டங்கள்
 
 
 -1-
பஸ்கண்டக்டர் 2நாள்பழகிய பின் 3வது நாளிலிருந்து 12RSக்கு பதில்10RSதான் எடுக்கிறான் bt TICKETபோடுவதில்லைங்கிறது கூடுதல்தகவல் #கணக்குலவராதகாசு
-2-
எனக்கு மட்டும் ஏன் எதுவுமே நடக்கல? & எனக்கு மட்டும் ஏன் இப்பிடியெல்லாம் நடக்குது?, இரண்டுமே விரக்தியின் உச்சத்தில் கேட்கப்படும் கேள்விகள் 
-3-
காதல் எங்கிறது call மாதிரி answer பண்ணாட்டி missedcall ஆகிடும். BT நட்பு எங்கிறது SMS மாதிரி நாமளா அழிக்குற வரைக்கும் நம்மை விட்டு போகாது
-4-
காதல் என்பது சிகரட் புகை மாதிரி புகை பிடிக்கிறவனோட சேர்த்து பக்கத்துல இருக்கிறவனையும் பாதிக்கும்..:P
-5-
நேற்றுமுன்தினம் தாத்தா ரசித்தார்,நேற்று அப்பாரசித்தார்,இன்று நான்ரசிக்கிறேன்,நாளை மகன்ரசிப்பான்,நாளைமறுதினம் பேரனும் ரசிப்பான்
-6-
தனிமையில் இருக்கும் போது எறும்பைக்கூட இரசிக்க முடிகிறது #அனுபவம்
-7-
காதல் எங்கிறது குத்து song மாதிரி வந்த உடனே சூப்பரா இருக்கும் but மனசுல நிலைக்காது, ஆனால் நட்புங்கிறது இளையராஜாட melody மாதிரி என்றும் கூடுவே இருக்கும் #Evergreen 
-8-
தமது சுயத்தை சுத்தமானதாகக் காட்டிக்கொள்ள சொல்லப்படும் "எனக்கு சுயநலமில்லை" என்றவார்த்தையில்தான் சுயநலம் அதிகம்பொதிந்திருக்கிறது. #சுயநலம்
-9-
இளையராஜாவின் பாடல்களின் பின்னணிஇசையை மட்டும்கூட கேட்டுக்கொண்டே இருக்கலாம்.பாடலின் ரசனை குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கவே செய்கிறது

-10-
தத்துவம்=செமபஞ்ச், ஆங்கிலம்=பீட்டரு, சீரியஸ்=செமகாமடி, ஃபீலிங்ஸ்=பிலிம்காட்டுதல் காதல்=டைம்பாஸ், நண்பர்கள்=உலகம் #பெயர்மாற்றம்

-11-
வாழும்போது நமக்கு சாவுண்டு ஆனால் சாகும்போது நமக்கு வாழ்வில்லை. #என்னங்கடா_நியாயம்_இது

-12-
தேவையானவை தேவையானபோது தேவைக்கதிகமாகக் கிடைக்கும் போது தேவைப்பட்ட தேவையானவை கூட தேவையில்லாமல் போகின்றன. #தேவையா :P

-13-
ஒருவிடயத்தை எந்தவித எதிர்பார்ப்புமின்றிஇழப்புக்களை பற்றி கவலைப்படாமல் செய்கிறோமோ அதான் நம்ம Passionனாம்,அப்ப எனது passion என்ன நித்திரையா?

-14-
தனக்குப்பிடித்ததை மட்டுமே செய்யும், வெளிப்படையாக இருப்பவர்களுக்கு பெயர் சுயநலவாதி என்றால், நானும் சுயநலவாதிதான்.

-15-
யாராவது என்னைக்கோபப்படுத்திவிட்டோமென்று மன்னிப்புக்கேட்டால்,நம்மளையும் கோபமெல்லாம வரும் ஆள் என்று நினைச்சிட்டாங்களே என்ற கவலைமேலிடுகிறது

-16-
ஒண்ணுமே இல்லாத விடயத்தை ஒண்ணுமே இல்லை என்று 100 Comment+150Likes போட்டபிறகு, சொல்லும் இடம் =FACEBOOK

-17-
யாருக்காகவும் தன்னிலை மாறாதிருத்தல் நல்லகொள்கைதான் ஆனால் எனது நடவடிக்கைகளால் ஒரு ஊரே பாதிக்கப்படும்போது மாறுவதில் தவறில்லை.

-18-
நான் நானாகத்தான் இருப்பேன் என்பதன் கருத்து நான் அனைத்திற்கும் முரண்பாடானவனென்பதல்ல

-19-
குற்றம் குற்றமெனஉணரப்படும்வரை குற்றம்குற்றமாகத் தெரிவதில்லைஆனால் குற்றத்தைகுற்றமெனஉணர்ந்தபின் குற்றத்தை குற்றமெனஉணராததுபோல்நடிப்பது குற்றமே

-20-
மேசையில் இருக்கும் பென்ட்ரைவை எடுத்து USBபோர்ட்டில் அடிக்க அரைமணிநேரத்துக்கு மேல் எடுத்துக் கொள்பவனே உண்மையான சோம்பேறி. (உ+ம் - நான்:P)

-21-
உயிர் மீது ஆசை இருப்பவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை 'என்னை நம்பி எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா?'

-22-
முட்டாள்களின் முதல் ஆயுதமாகவும், அறிவாளிகளின் கடைசி ஆயுதமாகவும் இருக்கிறது கோபம் #படித்ததில்பிடித்தது

-23-
அறுகம்புல் போல நாம் வளர்த்த காதலை, எடுமைமாடு போல் உங்கப்பன் மேய்ந்துவிட்டுப் போனானே..:P #கேட்டதில்_பிடித்தது

-24-
தலையிலிருந்து அடிக்கடி முடி கொட்டிறத்துக்கு காரணம் என்னனு தெரியுமா? தலையிலே முடி இருக்கிறதுதான் #தத்துவம்

-25-
நண்பன் ஒருவனின் வீட்டு வாசலில் பெரிய சைசில் சாய்பாபா படம் மாட்டியிருக்கிறார்கள், திருஷ்டிக்காகவா? #சந்தேகம்

-26-
எதிர்காலத்தை எண்ணி அஞ்சாதவனே நிகழ்காலத்தை நுகரலாம். இறப்பிற்கு அஞ்சுபவன் வாழ்வதில்லை.- சைரஸ்

-27-
சில முக்கியமான விடயங்கள் நடந்தேறிய பின்னர் நாம் சொல்லும் டயலொக் -WHATEVER HAPPENS LIFE HAVE TO MOVE ON-

-28-
“இருள் இருள்” என்று சொல்லிக் கொண்டு சும்மாயிருப்பதைவிட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்ற முயற்சிசெய் - கன்பூஷியஸ்-

-29-
நாங்கெல்லாம் கவனமாப்பாத்தா காதல் வரும் கடுப்பாப்பாத்தா கவிதை வரும் எப்புடி பஞ்ச்?..:p


-30-
கோபம் வந்தால் கண்ணாடியப்பாருங்க காமடியா இருக்கும்#அட்வைஸ்

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்