கிருஷ்ணா..
அவலாஞ்சி..
அங்க.. சாக்லட் ஃபாக்டரி இல்ல.. அங்க
கே(G)ற்று பக்கத்துல மாடு மாடுல்ல.....
ஒரு படத்தை விமர்சனங்கள் வர ஆரம்பிக்கும் முன்னமே பார்த்து விட வேண்டும், இல்லையேல் படத்தைப் பற்றிய விமர்சனங்கள் எம் காதுகளுக்கு வந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிடும். வழக்கமாக எந்தத்திரைப்படமாக இருந்தாலும் முதல் வாரத்துக்குள் பார்த்துவிடுவேன். ஆனால் வர முதலே பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகளை மனதில் கிளறிவிட்டபடி வெளிவந்த படம்தான் தெய்வத்திருமகள். இதைப் பார்ப்பதற்கு இத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளக் காரணமாக இருந்து எனக்கு வகுப்பு வைத்தவர்களுக்குக் கண்டனங்கள்.
எனது ஞாபகசக்திக்குத் தெரிந்து 10 வயதில் கரண்டில் விளையாடி வீட்டில் அடிவாங்கி அழுததுக்குப் பிறகு அழுததாக ஞாபமில்லை எனக்கு. எந்த விதமான கவலையாக இருந்தாலும் மனம் விட்டு அழுது பழக்கமில்லை. ஏன் மரண வீட்டில் மற்றவர்கள் அழுவதைப் பார்த்தால் கண்கலங்கும் என்பார்கள் எனக்கு அப்படிக்கூடு நடந்ததில்லை. கிட்டத்தட்ட ஒரு சிட்டி ரோபோ மாதிரி இருப்பவன் நான். "நீ இந்தப் படத்தைப் பார்த்தால் கட்டாயம் அழுவாடா" என்று நண்பர்கள் முதல் பலர் சொல்லியிருந்தார்கள். நானும் சவாலாகப் " அதையும் பார்க்கலாம்டா" என்று சொல்லியிருந்தேன்.
ஊட்டியில் சொக்லெட் ஃபக்டரியில் வேலை செய்யும் மன வளர்ச்சி குறைந்த தந்தையும், அவரின் 5 வயது சுட்டிப் பொண்ணு நிலாவையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதைதான் தெய்வ்திருமகள். படத்தில் ஆரம்பம் முதலே மனதை உறைய வைத்து கண்களில் நீர்கட்டவும் வைத்து அடுத்த கணமே கண்ணீருடன் சிரிக்கவும் வைத்து படம் கடைசிவரை கண்ணீர், சிரிப்பு, புன்னகை,மெளனம், சோகம், தவிப்பு என அனைத்து உணர்ச்சிகளையும் மாறிமாறி காட்டியிருப்பது அருமை.
குறிப்பாக குழந்தை அழுதுகொண்டிருக்கும் போது அதைப் பார்த்தபடி விக்ரம் பேசாமல் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருப்பார். அப்போது ஒரு பெண், "குழந்தை அழுதுகிட்டிருக்கு ஒண்ணும் பண்ணாம சும்மா இருக்க" என்றதுக்கு அப்பாவியாக "என்ன பண்ணணும்" என்று கேட்ட காட்சியில் மனதில் சம்மட்டியால் ஓங்கி அடித்தது போல கனம்.
அது தவிர மேலே பார்த்து சொல்லு என்று அவ்வப்போது வரும் சிரிப்பை உண்டாக்கும் காட்சிகள், சந்தானத்தின் இயல்பான கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரம் ஆகியன எனது மனதைக் கவர்ந்தன.
அனைவருக்கும் போல அந்தக் கடைசி கோர்ட்டில் இடம் பெறும் பாசப்போராட்டம் என் மனதையும் உடைத்து கண்களில் கண்ணீரை வரவைத்த காட்சி.
"சிட்டி ரோபோ கெட்டப் பையன் நானே அழுதிட்டேன்னா பாருங்களேன்."
I AM SAM படத்தின் தழுவல் அது இது என சொல்லுபவர்களின் கவனத்திற்கு, என்னதான் தழுவலாக இருந்தால் என்ன? இப்படிப்பட்ட அருமையாக படத்தை தமிழில் தந்தமைக்கு கோடான கோடி நன்றிகளைச் சொல்லிக் கொள்வோம்.
கடை சியாக ஒரு முக்கியமான கேள்வி,
.
.
.
.
.
.
.
"நிலா எப்ப வரும்?"
same tear bavan