-1-
காலம் கடந்த ஞானத்தை maturity என்று சொல்லலாமா? #டவுட்டு
-2-
ஆங்கிலப்பரீட்சையில் நாம் எழுதும் பதில்கள் புதுக்கவிதை மாதிரி, இலக்கணப் பிழைகளை கருத்தில் கொள்ளாதீங்க #பின்குறிப்புINஎக்ஸாம்PAPER
-3-
கண்ணை முடு, மூக்கைப்பார், இப்போ கண்ணைத்திற... எழுந்து நில் கைகளைத்தூக்கு, இப்போ 2கால்களையும் தூக்கு..:P #நித்தியிசம்:P
-4-
ஒருவரை கோபப்படுத்த 2வழிகள்,1-அவரின் சுயகௌரவத்தை சீண்டிப்பார்க்கலாம் 2-அவர் ஆழ்ந்தஉறக்கத்திலிருக்கும் போது தட்டிஎழுப்பி gdn8சொல்லலாம்
-5-
காதலிக்குறவங்க எல்லாரும் அரசியல்வாதிகள் மாதிரி, எந்த நேரத்தில என்ன செய்வாங்க,அதை எதுக்கு செய்யுறாங்கன்னே யாருக்குமே தெரியாது...:P
-6-
அபிராமி,கண்ணம்மா,சந்தியா,ரோஜா,அஞ்சலை,மல்லிகா,சிந்து,மாலினி,ரசிகா,நகுமா,ஊர்வசி,நிலா,செண்பகம்,தாமரை ஆகிய பெயர்களிளைக்காதலியின் பெயராகக் கொண்டவர்களுக்கு RINGTONE போடுவதில் எந்தச் சிக்கலும் இருந்திருக்காது..:P #ஆராய்ச்சி_முடிவு
ஒரே பாட்டில் பணக்காரனாகவும், ஒரே பாட்டில் அனைத்துப் பணத்தையும் செலவழிக்கவும் ரஜனியால் மட்டுமே முடியும். #சூப்பர்ஸ்டார்டா..!
-8-
தவறு செய்தவர்களே அது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்காக கவலைப்படும் போது எந்தத்தவறுமே செய்யாத நான் என் மீது போலியாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை எண்ணி கவலைப்படுவதிலோ, கோபப்படுவதிலோ எந்தத்தவறும் இல்லை #JustSaying
ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் 7 காதல் வருமாம், அது இதுதானா?1-அம்மா 2-அப்பா 3-சகோதரம் 4-நட்பு 5-காதலி 6-மனைவி 7-பிள்ளை #டவுட்டு
5நிமிடம்தான் என்று ஆரம்பிக்கும் விளையாட்டுக்கள் 5மணிநேரமானாலும் முடிவதில்லை.அட்லீஸ்ட் 1/2 மணிநேரமாவது என்று ஆரம்பிக்கும் படிக்கும் முயற்சிகள் 5 நிமிடம் கூட தொடர்வதில்லை.
இணையம்,மொபைல்,உறவினர்கள்,வீடு,வாகனம்,தூசு,பஸ்,கவலை, எதுவுமில்லாமல் ஒருநாளாவது எங்காவது ஒரு அமைதியான இடத்தில் போய் இருக்கவேண்டும் #பேராசை
சோகமான தருணங்களை உணரவைக்க பல வார்த்தைகள் உண்டு, இன்பமான தருணங்களைச் உணரவைக்க ஒரே வழி அதை அனுபவித்து அறிவதுதான் #அனுபவம்
சொன்னதை செய்யணுமாம், சொல்லாததையும் செய்யணுமாம், bt சொன்ன சிலதைசெய்யவும் கூடாதாம், சொல்லாத சிலதையும் செய்யக்கூடாதாம் #போங்கடாஇந்தஅரசியல்புரியவேஇல்ல
யாரிலாவது கோபமிருப்பின்அவர்களை நினைத்து வெறுமனே பல்லை கடிப்பதை விட,வாயில் ஏதாவது உணவைப் போட்டுவிட்டுக் கடிக்கலாம். உடம்புக்கும் நல்லது :P
'முதன்முதலாக' என்ற வார்த்தைக்குள் தான் அதிக மகிழ்ச்சிகளும், சோகங்களும குடியிருக்கின்றன.
மானம் என்பதன் எதிர்ச்சொல் அவமானம் என்றால் டேய் என்பதன் எதிர்ச்சொல் ஏன் அடேய் என்று இருக்கக்கூடாது. #டவுட்டு..:P
பழையபாடல்களின்BGMகுதிரைவண்டியில் போவதுபோலவும், புதியபாடல்கள் விமானத்தில் போவதுபோலவும் எண்ணத்தையும்கொடுக்கிறது#அவதானிப்பு #ChangeOfTrend
தூக்கமில்லா இரவுகளில்தான் தத்துவங்கள் பிறக்கின்றன, உடனே அதை பக்கத்திலிருப்பவனுக்கு சொல்ல முற்படும்போது உதைகளும் பிறக்கின்றன..:P
தத்துவம் என்பதில் தத்=சிங்களத்தில் பல் என்று பொருள். து=துப்பு என்பதை குறிக்கிறது. வ(அ)ம்=மழலை மொழியில் சாப்பாடு என்று பொருள். ஆகவே 'பல்லு விளக்கிட்டு சாப்பிடு என்று பொருள் #தத்துவம்பற்றியதத்துவம் :P
"புதியது" என்ற ஆண்டாண்டு காலமாய் பயன்படுத்தப்படும் பழைய சொல் மட்டும் பழையதாக இருந்தாலும் புதியவற்றைக் குறிப்பிடப் பயன்படுகிறது.
உயர் அதிகாரி குடிகாரனாக இருந்தால்,அவனிடம் திட்டு வாங்குவதை விட அவனை அறைந்து விட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறிவிடுங்கள் குடிகாரர்களுக்கு நீங்கள் அறைந்தது ஞாபகமிருக்கப்போவதில்லை..:P
மழை+ குளிர்+ பஸ்+ ஜன்னலோரசீட்+ இதமானகாற்று=சொர்க்கம் #அனுபவம்
தேவையானவற்றுடன் பிடிக்காத ஒன்றுசேரும்போது அதுநமக்கு தேவைப்படுவதில்லை,தேவையில்லாத ஒன்றுடன் தேவையான ஒன்றுசேரும்போது அதுநமக்கு தேவைப்படுகிறது
RT: @vathees :Facebook - வில்லங்கம் தானா தேடி வாற இடம் Twitter - நாங்களே வில்லங்கத்திட்ட போய் மாட்டுற இடம் :P
///அவர் ஆழ்ந்தஉறக்கத்திலிருக்கும் போது தட்டிஎழுப்பி gdn8சொல்லலாம்///
நல்லா வாங்கியிருக்கீங்க போல...