Related Posts with Thumbnails
Showing posts with label அனுபவம். Show all posts

வீரம்

பதிவிட்டவர் Bavan | நேரம் 8:49 PM | 0 பின்னூட்டங்கள்

சிரமத்தை தானமும் செய் - சில
கலோரிகள் பொசுங்கிட வை
பல நோய்களை வருமுன்னே கா
உன் உடலின் வியர்வை களை

சேற்றாடும் மூடரினம்
வம்புக்கு உனை அழைத்தால்
உன் ஆடை கறைபட முன்
அதை விட்டு விலகியே செல்

அறிவினை வளர்த்திடவே
ஆயிரம் வழியிருந்தும்
புத்தியை கூர்விக்கும்
சொல்லாயுதம் துணை இருந்தும்

மூளையை மூத்திரமாய்
எங்கோ பெய்தொழித்த மூடரிடம்
வேடிக்கை வசைகளும் கேள்
வெக்கமின்றி சிரித்தும் வை!

வசை கொட்டி வம்பிழுத்து - உன்
தன்மானந்தனை உசுப்பி
வீரனின் நிலை உயர - அது
அக்கோழை செய்யும் இழிவு நிலை!

அமைதியாய் இருப்பதுவும்
ஆத்திரம் மறைப்பதுவும்
கோழையின் குணங்களில்லை
அது வீரனின் விவேக நிலை!

அதனுடன் கறைபுரண்டால்
ஆடையில் கறை படிந்தால்
ஆனந்தமே அதற்கு மட்டும்
ஆகவே உன் நிலையறிந்து
வீரனாய் அமைதியை பேண்!
-Bavananthan

பிழை

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:11 AM | 4 பின்னூட்டங்கள்


சொல்லதெல்லாம் உண்மை என்பார் - தான்
செய்வதெல்லாம் நன்மை என்பார்
பெயர் புகழெல்லாம் எனக்கு
பிடிக்காத விடயமென்பார்

செயற்கரிய செயல்கள் செய்வார்
சாட்டையாலே எமை அறைவார்
தழும்புடன் ஓடி வந்து வலியுடன்
நாம் நிற்கையிலே
ஐயையோ என்னாச்சு என்று
அழகாய் மெல்ல நடிப்பார்

குமட்டுக்குள்ளே சிரிப்பார்
கழுத்திலே கத்தி வைப்பார்
வஞ்சனைகள் பல செய்வார்
வாயை மூடித்தான் இருப்பார்

மனதினிலே நஞ்சை வைத்து
நீ செய்தது எல்லாம் தவறு என்பார்
இடம் பொருள் ஏவலின்றி
வார்த்தைகளை உமிந்து வைப்பார்
நா தசை நரம்பின்றி
எண்ணங்களை விதைப்பார்
கடைசியிலே கெட்டவன் நீ
சேராதே என்றுரைப்பார்

வார்த்தைகள் பிழை என்றால்
வாழ்க்கையே பிழை தானே
எண்ணங்கள் பிழை என்றால்
எல்லாமே பிழைதானே

-Bavan
Before Reading This Post

கேப்பைமாரித்தனம்
முன்னொரு காலத்தில் மாரி என்று ஒருவன் இருந்தான், அவன் இருக்கும் ஊரில் என்ன பிரச்சினை வந்தாலும் அதற்கு அவன்தான் காரணமாக இருக்கும். சின்னப் பிரச்சியையும் ஊதிப்பெரிதாக்கும் வல்லமை படைத்தவன். ஆனால் பிரச்சினைக்குக் காரணம் மாரிதான் என்று கண்டுபிடிக்கும் போது அவன் அந்த இடத்தில் இருக்க மாட்டான். சின்ன இடைவெளியில் எப்படியாவது தப்பி விடுவான்.

அதற்குப் பிறகு அவனைப்போல யாராவது பிரச்சினையை உண்டாக்கிவிட்டு இடையில் தப்பி ஓடிவிட்டார்கள் என்றால் அதை அந்த ஊர் மக்கள் Gapல்மா(றி)ரித்தனம் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அதுவே மருகி காலப்போகில் கேப்(பை)மாரித்தனம் என்று ஆகிவிட்டது.

மொள்ளைமாரித்தனம்
மேற்குறிப்பிட்ட அதே மாரி தனது சொந்த ஊரில் வழக்கம்போல பிரச்சினையை ஏற்படுத்திவிட்டு தப்பியோடி பக்கத்து ஊருக்குள் தஞ்சம் புகுந்தான். அங்கேயும் தனது தப்பியோடும் விளையாட்டுக்களை ஆரம்பித்த மாரி காலப்போக்கில் அங்கேயும் பிரபலமாகிவிட்டான். அங்கும் இதே போல பிரச்சினைகளை ஏற்படுத்தி விட்டு புலி போல் பதுங்கிப் பதுங்கி யார் கண்ணிலும் சிக்காமல் தப்பி விடுவான்.

எனவே அந்த ஊர் மக்களும்அதற்குப் பிறகு நமது மாரியைப் போல பிரச்சினை ஏற்படுத்திவிட்டு மெதுவாகத் தப்புபவர்களுக்கு மெல்ல(மாறி)மாரித்தனம் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதுவே காலப்போக்கில் மருகி மொள்ளமாரித்தனம் என்று அழைக்கப்படுகிறது.

After Reading This Post





பி.கு: ஒரு பதிவு எழுதணும்னா என்ன கேப்மாரித்தம் OR மொள்ளமாரித்தனமும் பண்ணலாம் தப்பில்ல =P

JUST...

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:08 PM | 1 பின்னூட்டங்கள்
ஒரு மனிதனின் வாழ்க்கையில் பாடசாலை அல்லது கல்லூரி என்ற காலகட்டத்துக்குப் பிறகு வாழ்க்கை கிட்டத்தட்ட இயந்திரமயமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாகவோ என்னமோ எத்தனையோ சின்னச்சின்ன சந்தோஷங்களை அல்லது எம்மை அறியாமலேயே பிறருக்குச் செய்த உதவிகளை அதனால் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை என்று எவையுமே ஞாபகத்தில் நிற்பதில்லை.

அதே நேரத்தில் படிக்கும் போது ஆசிரியர்கள் எம்மை திட்டியும் அதிக பட்சமாக அடித்தும் யார் எம்மை எவ்வளவு கேவலமாகப் பேசினாலும் அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு சிரித்துவிட்டு மறந்துபோகும் மனநிலையும் கொஞ்சம் கொஞ்சமாக மாறத்தொடங்குகிறது.

ஏன் திடீரென்று இப்படி ஒரு மாற்றம் ஏற்படுகிறது? இதைத்தான் முதிர்ச்சி என்று சொல்லுகின்றோமா? என்று இரவு நேரத்தில் நித்திரை வருவதற்கு முன் சில மணித்துளிகளில் பின்னோக்கி கட்டம் கட்டடமாக யோசித்துப் பார்த்ததில் சில விடயங்கள் தோன்றியது.

நட்பு வட்டம்
முதல் கட்டமாக ஒரு மனிதனின் வாழ்க்கையை பாடசாலையில் சேர்ந்த ஆரம்பத்திலிருந்து ஒரு 10 வயதுவரை பார்த்தோம்என்றால் பெற்றோரின் கட்டுப்பாடுதான் அதிகமாகக் காணப்படும். உதாரணமாக நண்பன் தொடக்கம் ஆசிரியர் வரை யாரும் ஏதாவது கேட்டால் அம்மாவிடம் கேட்டு வந்து சொல்கிறேன் என்று சொல்லும் மனநிலையில்தான் இருப்போம். ஆக இந்த வயதில் நிறைய பாடசாலையில் நண்பர்கள் இருப்பார்கள் ஆனால் அம்மா அப்பாதான் Best Friends என்று சொல்லும் அளவுக்கு இருப்பார்கள்.

இரண்டாவது கட்டமாக ஒரு மனிதனின் வாழ்க்கை 13வது வயதிலிருந்து அதற்குப் பிறகு வரும் ஒவ்வொரு படிகளும் மிகவும் முக்கியமானவை. நட்பு என்ற ஒரு விடயத்துக்கு மிகவும் அதிஉயர் முக்கியத்துவம் வழங்கும் ஒரு காலகட்டம் இங்கு ஆரம்பிக்கிறது. அதாவது இதுவரை வீட்டில் பெற்றோரிடம் Request பண்ணிக்கொண்டிருந்தவர்கள் Informationஐ மட்டும் வழங்கிவிட்டுப் போகும் மனநிலைக்கு மாறிவிடுகிறோம்.

நண்பனுக்காக எந்தவொரு நடவடிக்கையையும் பயமின்றிச் செய்யும் ஒரு மனநிலையும் யாராவது உங்கள் மீது வீண்பழிகளைச் சுமத்தினால் உடனே எதிர்த்துப் பேசும் அல்லது மறுக்கும் மனநிலையும் அதையும் மீறி உங்கள் மீது தண்டனைகளைப் வழங்கும் போது அதை எதிர்க்கும் மனநிலையும் அதிகமாக இருப்பது இக்காலகட்டத்தில்தான். அதாவது கிட்டத்தட்ட ஒரு தன்மானமுள்ள மனிதனாக நாம் உணரும் காலகட்டமாக இதைச் சொல்லலாம். காதலில் தொடங்கி பலவிடயங்களை முதல்முதலாக முயற்சித்துப் பார்க்கும் ஒரு கட்டம் இது. இக்காலகட்டத்தில் இருக்கும் நண்பர்கள் கூட்டத்தின் எண்ணிக்கையைப் போல் இருக்கும் ஒற்றுமையைப் போல் வேறெங்கும் இருப்பதில்லை.

தன்மானமுள்ள தைரியமுள்ள ஒற்றுமையான ஒரு மனநிலையுடன் பாடசாலையை விட்டு வெளியேறிய பின்னர் ஒரு மனிதன் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் அவனது வாழ்க்கையில் முக்கியமானவர்களாகிப் போகிறார்கள். இந்த இடத்தில்தான் ஒற்றுமையில் பிளவு ஏற்படுகிறது. கிட்டத்தட்ட மனிதன் தனது அடுத்தகட்ட வாழ்க்கையை தீர்மானிக்கும் கல்வி அல்லது வேலை என்ற பிரிவுக்குள் செல்கிறான்.

உயர்அதிகாரி கட்டளையிடுகிறார், இவர் அது சரியாக வராது என்கிறான், இல்லை அப்படிச் செய் என்கிறார், அவர் அப்படியே செய்கிறார், அது பிழையாகிறது. அதே அதிகாரியால் இவன் தண்டிக்கப்படுகிறார். ஆனால் எதிர்த்துப் பேசினால் வேலை போய்விடும் என்ற பயத்தால் எதிர்த்துப் பேசவில்லை. இங்கு தன்மானம் என்பது கருவறுக்கப்பட்டு சகிப்புத்தன்னை பூட்டப்படுகிறது. ஆனால் அந்த சகிப்புத்தன்மை கோபமாக மாறி திருமணமானவர்களுக்கு மனைவியிடமும் ஆகாதவர்களுக்கு பேஸ்புக்கிடமும் வந்து வெடிக்கிறது.

இப்போது நான் சகிப்புத்தன்மைக் காலகட்டத்தின் ஆரம்பத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். இந்த இடத்திலிருந்து யோசித்துப் பார்த்த போது எனக்கு இருக்கும் நண்பர்களின் எண்ணிக்கையை விட தெரிந்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் தன்மானக் கட்டத்திலிருந்து சகிப்புத்தன்மைக்குப் பயணிக்க இப்போதுதான் ஆரம்பித்திருப்பதால் அவ்வப்போது கொஞ்சம் தன்மானம் எட்டிப்பார்க்கவும் செய்கிறது.

இதைத்தான் முதிர்ச்சி என்று அழைக்கிறோமா? என்ற விடையில்லாக் கேள்வியுடன் நண்பர்கள், எதிரிகள், தெரிந்தவர்கள் என்று என்னைச்சுற்றிப் இருக்கும் பாரிய வட்டத்தில் மையத்தை அண்மித்திருப்பவர்களை இழக்கத் தயாராக இல்லை. இருந்தபோதிலும் வாழ்க்கை இன்னும் எப்படியெல்லாம் மாற்றும் என்ற மாற்றங்களுக்காக காத்திருக்கத்தான் வேண்டும். ஆனால் எத்தனை கட்டங்கள் வந்து முதிர்ச்சி என்ற பெயரில் எப்படியெல்லாம் மாற்றினாலும் கடைசியில் பெற்றதும் இழந்ததும் மனிதர்களைத்தான்..

நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு கட்டத்தில் நகைச்சுவையாக "உன்னைக் காலில் விழ வைக்கிறன் பாருடா" என்று சொன்னார். அந்த நேரத்தில் மனிதர்கள் சாதி வித்தியாசம் பார்ப்பதை அவர்களால் திடீரென ஏன் விட்டுவிட முடியாமல் இருக்கிறது? என்ன காரணம்? என்று ஒரு விடயம் மனதில் தோன்றியது.

அதாவது பிறக்கும் போது கடவுள் என்றோ, மூடநம்பிக்கைகளுடனோ, சாதி வெறியுடனோ ஒரு குழந்தையும் பிறப்பதில்லை. பிறந்த பின்னர் அது வளரும் சூழல்தான் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதை ஒரு கட்டத்துக்கு மேல் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்த பின்னரும் ஒரு மனிதனால் மாற்றவோ விட்டுக் கொடுக்கவோ முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம்?

ஒரு மனிதனின் உடலை 3 பகுதிகளை எடுத்துக் கொள்ளுவோம். கால், கை மற்றும் தலை. இந்த 3 பகுதிகளிடம் நாம் காட்டும் பாகுபாடுதான் இன்றைய சாதிக் கட்டமைப்பின் அடிப்படையாக விளங்குகிறது.

இதைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்த்தால், கால்தான் உடலின் மற்றப்பகுதிகளையும் சேர்த்து ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்கிறது. கைகள்தான் பொருட்களைத் தூக்குதல் எழுதுதல் போன்ற செயற்பாடுகளுக்கு உதவுகிறது. தலை(மூளை) அனைத்துப் பகுதிகளுக்கும் கட்டளை வழங்கிவிட்டுப் பேசாமலிருக்கிறது. உதாரணமாகப் பார்த்தால் தெரியாமல் யார்மீதாவது கால் பட்டுவிட்டால் உடனே மன்னிப்புக் கேட்கிறோம், ஆனால் கை பட்டால் கேட்பதில்லை.

அதாவது உயர்ந்த தரமாக இருந்தால் அவருக்குக் கீழ்ப்படிந்து மற்றவர்கள் நடக்க வேண்டும், மத்திய தரமாக இருந்தால் உயர் தரத்துக்குக் மட்டும் கீழ்ப்படிய வேண்டும், தாழ்ந்தவர் உயர்ந்த, மத்திய தரங்களைத் மதிக்க வேண்டும், கீழ்ப்படிய வேண்டும். ஆக சாதிப்பிரிவினை மனிதர்களிடையே மட்டுமல்ல ஒவ்வொரு தனி மனிதனின் உறுப்புகளுக்கிடையே கூடக் காணப்படுகிறது அல்லது அப்படி நம்மையறியாமலே சிறுவயதிலிருந்து பிழையான வழிகாட்டலில் வளர்ந்துவிட்டோம்.

ஆனால் மனிதர்களுக்கு சில விடயங்கள் புரிவதில்லை,உடல் முழுவதும் ஓடும் குருதி, நரம்புகள், எலும்புகள் அனைத்தும் ஒவ்வொரு உறுப்புக்கும் தேவைக்கேற்றாற் போல பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சாதி சாதி என்று கையையோ காலையோ வெட்டிவிட்டாலும் உயிருடன் வாழலாம் ஆனால் காலையும் கையையும் வெட்டி வைத்துவிட்டு தலையை மட்டும் வெட்டிக் விட்டால் உடல் செத்துப் போய்விடும்.

அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது உடல் இயங்குவதற்காக வேலைகளைச் செய்யும் கையும் காலும் ஒதுக்கி வைக்கப்படுகிறது, ஆனால் கையோ காலோ சரி நாங்கள் உன்னுடன் வரவில்லை என்று தலையை வெட்டிவிட்டால் உடல் சாக வேண்டியதுதான். உடல் சாகக் கூடாது என்பதற்காக கையும் காலும் அமைதியாக இருக்கிறதே தவிர தலைக்குப் பயந்து இல்லை என்பதை உணர்வதில்லை.

தலையே போகிற விடயமென்றாலும் சாதிதான் முக்கியம் என்பார்கள், ஒருநாள் தலையை வெட்டி எறிந்து பாருங்கள்!

பாலைவனப் புயல்!

பதிவிட்டவர் Bavan | நேரம் 10:40 PM | 9 பின்னூட்டங்கள்




திடீரெனத் தரித்து நிற்கிறேன்
காலச்சக்கரம் வேகமாக ஓடிவருகிறது
பாலைவனங்களுக்குள் பழரசத்தைக் கண்டது மாதிரி
மனதுக்குள் ஒரு பூகம்பம்

திடீரெனப் பெய்த மழையால்
மனது குளிர்ந்து
பிரவாகம் கண்களை முட்டி
வெளியேறத் துடிக்கிறது

அதே நான்கு கண்கள்
அதே பழைய இடம்
ஏக்கமும் தவிப்பும்
பதற்றமும் கொஞ்சம் புதுமையாய்

பள்ளத்தில் வழிந்தோடிய
வருடங்களை துரத்திக் கொண்டு - நாம்
வேகமாக ஓடிச் சேர்ந்த இடத்தில்
மௌனங்கள் மட்டும் துளிர்விட்ட
அழகிய வரலாறு
இன்னும் பசுமையாகவே இருக்கிறது

மௌனங்கள் மட்டும் பேசிக்கொள்ளட்டும்
நீ நினைப்பதைக் காற்று மொழிபெயர்க்கட்டும்
தென்றலோ புயலோ எதுவாயிருப்பினும்
என்னை நேரடியாகத் தாக்கட்டும்

என் மீசைக்கும்
உன் முகப்பரு வந்த வடுவிற்கும்
நாங்கள் பேசிக்கொள்ளும்
மௌன வரலாற்றுக்கும் ஒரே வயது
என்பது உனக்குத் தெரியுமா?

தென்றலால் மேகங்களை திசைமாற்ற முடியாது
திடீரென அடித்த புயல்தான் சூத்திரதாரி
பிரிந்த பிறகு ஊமையாகிப் போனவர்கள்
புன்னகையை மட்டும் முகமூடியாக்கக்
கற்றுக் கொண்ட பின்னர் சந்திக்கிறோம்

ஒவ்வொரு புன்னகையின் பின்னரும்
ஒரு நீண்ட பெரூமூச்சு
ஒவ்வொரு பெருமூச்சின் பின்னரும்
ஆழ் மனதை அடைக்கும் ஒரு கனம்

இன்னும் 
உலகப்போரையும் நிறுத்திவிடக்கூடிய
அதே புன்னகையுடன்தான் இருக்கிறாய்  - ஆனால்
அழகியிலிருந்து தேவதையாகப்
பதவி உயர்த்தப்பட்டிருக்கிறாய்

வ‌லமொன்றும் இடமொன்றுமாய்
முந்தானை பிடித்த‍படி - உன்னைப்
பற்றி நிற்கும் பட்டாம் பூச்சிகள்
முன் முடியில் எட்டிப்பார்க்கும்
வெள்ளைக் கிரீடம் 
ஆம், தேவதைகளின் தேவதை நீ

புதிதாய்ப் பூசிக்கொண்ட புன்னகையுடன்
கண்கள் நான்கும் சந்தித்த‍தில்
என் கண்ணீரை திரைபோட விட்டுக்
கடந்து போகிறாய் நீ

தொட்டுப் பார்க்கும் கனதியில்
ந‌மக்குள் இருக்கும் அதே மௌனம்
என் இதயத் துடிப்பின் ஓசையில்
முதன்முறையாகக் கரைந்து போகின்றது
தென்றலை விடவும் புயல் வேகமானது
புயல்களை நம்பியபடி
புரிந்து கொண்டு பிரிகிறேன்
பாலைவனப் பூகம்பங்கள் 
பசுமையை ஏற்படுத்திவிடுவதில்லை
அங்கேயும்
வலிகளும் வடுக்க‍ளும்தான்!

கனவே கனவே ♥

பதிவிட்டவர் Bavan | நேரம் 12:32 PM | 0 பின்னூட்டங்கள்
சில பாடல்கள் முதல் தடவை கேட்ட உடனேயே தொண்டைக்குள் ஏதோ ஒரு அடைப்பு ஏற்பட்டு, இதயத்தில் ஏதோ பாரம் ஒன்று உருவாகி, கண்கள் எம்மை அறியாமலேயே மூடி, தலை இசைக்கேற்றபடி தலையாட்டி மனதுக்குள் அப்படியே ஒட்டிக் கொண்டு விடும்.


அதற்குப் பிறகு அப்பாடலை எத்தனை தடவை கேட்டாலும் ஏதோ ஒரு புதுமை இருப்பது போலவே இருக்கும். கூடுதலாக இன்றைய இளைஞர்கள் கூட்டத்தில் அப்படி ஒட்டிக் கொண்ட பாடல்களில் பல யுவனின் பாடல்களாகவே இருந்திருக்கின்றன.

முதன்முறையாக யுவனிற்குப் பிறகு அனிருத்தின் சில பாடல்கள் அப்படியான ரகங்களாக உருவாகிக் கொண்டிருக்கின்றன.
டேவிட் படத்தில் "கனவே கனவே" என்ற பாட்டு எத்தனை தடவை கேட்டிருப்பேனோ தெரியவில்லை, ஆனால் கட்டாயம் 1000 தடவைகளைக் கடந்திருப்பேன். எம்மை அப்படியே ஏதோ ஒரு கனவு உலகத்திற்கே அழைத்துப் போய்விடுகிறது இந்தப்பாடல்.


கோரமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதே
உயரமான கனவு இன்று அலையில் வீழ்ந்து போனதே
இசையும் போனது திமிரும் போனது
தனிமை தீயிலே வாடினேன்
நிழலும் போனது நிஜமும் போனது
எனக்குள் எனையே தேடினேன்

கனவே கனவே கலைவதேனோ
கரங்கள் ரணமாய் கரைவதேனோ
 அனிருத்தின் இசையமைப்பில் வெளிவந்த "போ நீ போ"க்குப் பிறகு கிட்டத்தட்ட எனது உயிரைக்கொண்டு/கொன்று போன பாடல் இது. புல்லாங்குழலும் வயலினும் இணைந்து வரும் இடங்களில் அப்படி ஒரு கவலை, சோகம், கோபம், வேகம் திடீரென்று அமைதி அந்தப் பிண்ணனி இசை ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.

கண்கள் ரெண்டும் நீரிலே
மீனை போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா
சில பாடல்கள் வரிகள் நன்றாக இருந்தால் இசையும் பிடித்துப் போகும். ஆனால் இந்தப் பாடலின் இசையால் வரிகளும் பிடித்துப் போகிறது. வரிகளில் உள்ள வலியை மேலும் மேலும் அதிகமாக உணரவைக்கிறார் அனிருத்.

நானும் இங்கே வலியிலே
நீயும் அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசி போன வார்த்தையை

இது நியாயமா மனம் தாங்குமா
என் ஆசைகள் அது பாவமா

கனவே கனவே...
கரங்கள் ரணமாய்...
நினைவே நினைவே கலைவதேனோ
எனது உலகம் உரைவதேனோ
 படத்தில் பாடல் படமாக்கப்பட்ட விதமும் பாடல் படத்தில் வந்த இடமும் இரண்டு காலகட்டங்களில் நடக்கும் போராட்டமும், இழப்பும், வலியும், கோபமும், சோகமும், ரணமும் வயலின், புல்லாங்குழல், சித்தாருடன், அனிருத்தின் குரலும் இதமாக வருடுவதுமாதிரி இருந்தாலும் இதயத்தில் ஆழமான முள்ளினால் குத்தப்பட்ட ஒரு வலியை உணர்த்திப் போகின்றது.

காதல்!

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:45 PM | 2 பின்னூட்டங்கள்




அது ஒரு பிரபஞ்சம்
அண்டப் பெருவெளியில் - மனம்
அலைக்களிப்படும் உணர்வு

எங்கோ அடைக்கலமின்றி
அடைபட்ட பயம்

கவலைகள் ஏதுமற்ற
குழந்தையின் மகிழ்ச்சி

கந்தகபூமியில் நெருப்பு மூட்டி
இதயத்தைக் கொழுத்திய கோபம்

சிறுகதை படித்த பின்னர்
சிலாகித்து வரும் ஆச்சர்யம்


அது ஒரு தியானம்
கண்களும் உள்ளுணர்வும் சங்கமமாகி
 நரம்புகளுக்கு நாணேற்றி

நொடிப் பொழுதில்
திண்ம திரவ வாயு நிலைகளை
மாற்றி மாற்றி உருவாக்கும்

வார்த்தைகளில் அடக்க முடியாத
ஒரு வசீகரமான உணர்வு

Everything Happens For A Reason!

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:53 AM | 4 பின்னூட்டங்கள்
 ரொம்பவே போரடிக்கும் பதிவு, சில நேரங்களில் சில மனிதர்களை சில அரசியல்களைப் பயன்படுத்தின்தான் டீல் பண்ண வேண்டும். அந்த சிலருக்கு மட்டும் =))

சில நேரங்களில் நாம் தினமும் காணுகின்ற சின்னச்சின்னப் பொருட்கள் கூட சில நேரத்தில் பெரிய தத்துவங்களை விளக்கிவிட்டுப் போய்விடும். அது நிறைய நாட்களாகவே அப்படித்தான் இருந்திருக்கும் ஆனால் சில அனுபவங்கள் கிடைக்கும் போது அது நமக்கு போதி மரமாகக்கூட மாறிவிடும்.

எங்கள் வகுப்பிலே சுவிட்ச் பெட்டி இருக்கிறது. எல்லா வகுப்பிலும் இருக்கிறதுதானே? அதுக்கென்ன இப்ப என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அதில் இருக்கிற முக்கிய விடயம் என்னவென்றால் அதில் இரண்டு சுவிட்ச்சுகளைப் போடக்கூடாது மீறிப் போட்டால் அந்தக் கட்டடத்துக்கே மின்சாரம் போய் விடும். இது நாங்கள் படிக்கப் ஆரம்பித்த காலத்திலிருந்து இப்படித்தான் இருக்கிறது. இடையில் திருத்துவதற்கு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு திருத்தப்பட்டாலும் சில நாட்களிலேயே பழைய நிலைமைக்குத் திரும்பிவிடுகிறது. இது புதிதாக இருக்கும் போது இப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை, ஏதோ இடையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத்தான் இப்படி மாறியிருக்க வேண்டும்.

இது அப்படி என்ன விடயத்தை விளக்கப் போகிறது?
இந்த சுவிட்சுகளை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.

ஒன்று: நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கும் காலத்தில் சிலரை நண்பர்களாக ஏற்றுக் கொண்டிருப்பிர்கள், அல்லது மிகவும் கவலையாக இருந்த காலத்தில் சிலரை நண்பர்களாக ஏற்றுக் கொண்டிருப்பீர்கள். ஆனால் இதில் கவலையான நேரத்தில் நண்பர்களாக ஏற்றுக் கொண்டவர்கள் கடைசிவரை எந்த விதமான திருத்தம் வந்தாலும் தங்கள் நிலையிலிருந்து மாறாமல் அப்படியேதான் இருப்பார்கள். அதாவது அந்த பழுதாய்ப் போன சுவிட்டகளைப் போல.

இதையே இன்னொரு விதமாகப் பார்த்தால்,
உங்களுக்கு சிலர் சந்தோஷமான கால கட்டத்தில் நல்ல நண்பர்களாகியிருப்பார்கள். ஆனால் நில காலங்களின் பின்னர் அவரின் செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும், வேண்டுமென்றே நடிப்பார்கள், என்ன பிரச்சினை என்று கேட்டாலும் சொல்லமாட்டார்கள், பின்னாலே போய் ஒரு சிலரிடம் அல்லது அவர்களின் மாற்றத்துக்குக் காரணமானவர்களிடம் எம்மைப்பற்றியே அவதூறாகப் பேசுவார்கள்.

உங்கள் அபரிமிதமான நட்பின் புனிதம் கெட்டுவிடக் கூடாது என்பதற்கான நீங்களும் ஏன்? எதற்கு? என்று எல்லாம் கேட்க மாட்டீர்கள். ஆனால் அவர்களை விட்டு விலகிவிட அல்லது அவர்களுடன் சற்று முன்னெச்சரிக்கையாக இருக்க முடிவெடுப்பீர்கள். இதுதான் நாங்கள் எங்கள் வகுப்பில் இருக்கும் அந்த பழுதாய்ப் போன சுவிட்சுகளுக்கும் செய்தது. அந்த சுவிட்சுகளில் X அடையாளமிட்டு அதை இனி உபயோகிக்கக் கூடாது என்று முடிவெடுத்தோம். அவர் கவலைப்படுவார் அல்லது அவர் என்ன நினைப்பார் அபரிமிதமான நட்புக் கெட்டுவிடுமே என்றெல்லாம் யோசிக்கத்தேவையில்லை.
ஒரு சுவிட்சு ஒரு கட்டடத்தின் நடவடிக்கைகளையே சீர்குலைக்கின்றது என்றால் அதை பாவிப்பதை நிறுத்திவிடுங்கள், அல்லது அதை நீங்கிவிட்டு புதிய சுவிட்ச் ஒன்றைப் பொருத்தி விடுங்கள்.
அந்த பாவிக்காமல் விட்ட சுவிட்ச் நினைக்கலாம் நீங்கள் தன்னை ஏமாற்றிவிட்டீர்கள் என்று, ஆனால் தன்னைத்தானே சுயமதிப்பீடு செய்துகொண்டால் அந்த சுவிட்சுக்குத் தெரியும் தனது மாற்றங்களும் தான் செய்த அரசியலால்தான் இப்போது உபயோகிக்கப்படாமல் இருக்கிறோம் என்பதும்.

படங்களைக் கிளிக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும்.










"எக்ஸாமைக் கண்டுபிடிச்சவன் மட்டும் கைல கிடைச்சான் செத்தான்டா"
இதுதான் ரஜனிகாந்த், வடிவேலுவின் பஞ்ச் டயலாக்குகளுக்குப் பிறகு அன்று தொட்டு இன்றுவரை சலித்துப்போகாத ஒரு பஞ்ச் டயலாக்.

நாம் பாடசாலையில் படிக்கும் போது ஏன் படிக்கிறாய்? என்ற கேள்வி வந்தால் கம்பஸ் போகணும் படிக்கிறோம் என்று சொல்லுவோம். கம்பஸ் போன பிறகு ஏன் படிக்கிறாய்? என்று கேட்டால், நல்லவேலைக்குப் போகணும் என்று சொல்லுவோம்.

ஆனால் வேலைக்குப் போகிறவர்களைக் கேட்டால் "நான் படிச்சதுக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை" என்று சொல்லுவார்கள். அப்படியென்றால் தேவையில்லாதவற்றை ஏன் படிக்கிறோம் என்ற கேள்வி மனதில் எழுகிறது.
க.பொ.த சாதாரண தரம் வரை நாம் பாடசாலையில் எல்லாப் பாடத்தையும் படிக்கிறோம். அதாவது இத்தனை துறைகள் இருக்கிறது என்று எங்களுக்கு டெமோ காட்டுகிறார்கள். அதன் பிறகு பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கம்பஸ்/உயர் கல்விக்குச் செல்கிறோம்.

எனக்கு இருக்கிற முக்கிய சந்தேகம் என்னவென்றால் என்னதான் பாடங்கள் பல இருக்கு என்று டெமோ காட்டப்படும்போதும் சரி, அதன் பிறகு பிரிக்கப்படும் போதும் சரி, உயர்கல்விக்குப் போகும் போதும் சரி சில விடயங்கள் அப்பிடியே எல்லா இடத்திலும் வந்து தொலைக்கிறது. அதாவது
  • What are the advantages of bla bla bla?
  • What are the disadvantages of bla bla?
  • Briefly explain the following?
  • Definitions
இந்த மாதிரியாக கேள்விகள் எல்லா இடத்திலும் வந்து உயிரை எடுக்கிறது. பாடமாக்கி எழுதினால் மட்டுமே இதுமாதிரியான எல்லாக் கேள்விக்கும் பதிலளிக்க முடியும். விளங்கிக் கொண்டு அதை வைத்து எழுதலாம் என்றால் பாடத்தில் எத்தனை chapterகள் இருக்கோ அத்தனைக்கும் இந்தக் கேள்விகள் இருக்கிறது.


புரியாத மொழிப் படத்தை தியெட்டரில பார்க்கும் போது எல்லாரும் கைதட்டும் போது நாங்களும் கை தட்டுகிற மாதிரி Examல Definition, Advantage,Disadvantage எல்லாம் எதுக்குக் கேக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது, ஆனாக்கேக்கிறார்கள். Examக்குப் பிறகு அதை நாங்க ஞாபகம் வைத்துக்கொள்ளப் போவதே இல்லை என்றும் அவர்களுக்குத் தெரியும்.
 வேலைக்குப் போய் Definitionஐ பாக்காம எழுதி சம்பளம் வாங்குற யாரையும் நான் இதுவரைக்கும் பாத்ததில்ல. Google பண்ணினா 2 செக்கன்ல வாற விசயத்தை அரைமணிநேரம் பாடமாக்கி எழுதணுமா? 
ப்படிக்கு 
ப்பாவி மாணவர்களுள் ஒருவன் =)

WHATEVER HAPPENS LIFE GOES ON...

பதிவிட்டவர் Bavan | நேரம் 12:26 PM | 0 பின்னூட்டங்கள்
பஸ்ஸில் தனிமையில் பயணிக்கும் போது, இரவு நேரத்தில் Laptop, Mobile எல்லாத்தையும் தூக்கி துரப் போட்டுவிட்டு கண்ணை மூடாமல் கண்ணை மூடியது போல உணரும் போது மனதில் தோன்றிய விடயங்கள் அடங்கிய பதிவு. சுவாரஸ்யமாக எதுவும் இருக்காது. சுய புலம்பல் மட்டுமே!

***

திடீரென ஒருநாள் விழித்துப் பார்க்கும் போது கண்டது எல்லாம் கனவாகிப் போய் நாம் இன்னும் சின்னப்பிள்ளையாகவே இருந்தால் எப்படி இருக்கும்?

வாழ்க்கையில் நாம் கடந்து வந்த பாதைகள் அத்தனையுமே மீள நினைத்துப் பார்க்கும் போது அப்படித்தான் இருக்கும். வாழ்க்கை என்பது ஒரு நேரான பாதையில் ஓடுவதைப் போன்றது. பலர் கூட ஓடி வருவார்கள் சிலர் இடையிடையே வரும் திருப்பங்களில் திரும்பிவிடுவார்கள். சிலர் இன்னுமொரு திருப்பத்தில் மீண்டும் வந்து சேர்ந்து கொள்வார்கள். சிலர் இடையில் புதிதாக இணைந்து கொள்வார்கள். ஒரு சிலர் கடைசி வரை எம்முடனேயே ஓடி வருவார்கள். கடைசி வரை வருவார்கள் என்று நினைத்தவர்கள் கடைசிவரை வருவதுமில்லை. இடையிலேயே திரும்பிவிடுவார்கள் என்று நினைத்தவர்கள் எல்லாரும் இடையிலே விலகிவிடுவதுமில்லை.

இங்கு வாழ்க்கைப் பாதை பிரியும் இடங்கள் அவரவர் நிலைகளைப் பொறுத்து வேறுபடும். பாடசாலைக் காலம், கல்லூரிக் காலம், வேலைக்குச் செல்லும் காலம், திருமணம் நடக்கும் காலம் என்று பொதுவாக வரையறுக்கலாம். பாடசாலை அல்லது கல்லூரியில் படிக்கும் காலங்களில் வரும் பிரிவுகள்தான் மிகுந்த கவலையை தருகிறது. ஏன் என்று அதை உற்று நோக்கிப் பார்த்தால் பாடசாலை அல்லது கல்லூரிக் காலங்களில் எமக்குக் கிடைத்தது அதிகம் அதனால் அந்தக் காலத்தை இழக்கும் போது இழப்பதும் அதிகம். அதற்குப் பிறகு கொஞ்சம் இயல்பிலிருந்து விலகி நடிக்கவேண்டியிருக்கிறது. கொஞ்சம் வயதானவர்கள் போல் உணருகிறோம்.

என்னைப் பொறுத்தவரையில் 11 வருடங்கள் படித்த பாடசாலையிலிருந்து திடீரென விலகிய போது நண்பர்கள், எமது பாடசாலை இசைக்குழுவில் இருந்த எனக்கான இடம், இன்றும் மெதுவாகச் செல்லும் 155 பஸ், பிறந்து வளர்ந்த இடம் இன்னும் சில விடயங்கள் என்று அனைத்தையும் இழக்கவேண்டியிருந்தது. அதன் பிறகு மீண்டும் ஒரு புதிய பாடசாலை, புதிய நண்பர்கள் புதிய இடம் என்று இன்னுமொரு பாதையில் ஓடவேண்டியிருந்தது. அதாவது கஷ்டப்பட்டு ஒரு மலையில் ஏறி வந்து உச்சியை எட்டும் போது யாரோ கீழே பிடித்துத் தள்ளிவிட்டு திரும்ப ஏறி வா என்று சொன்னது மாதிரியான ஒரு உணர்வு. ஆனால் தள்ளிவிட்டது நல்லதுக்குத்தான் என்று அன்றுதான் அறிந்து கொண்டேன். இரண்டாவது முறை ஏறும் போதுதான் எத்தனை விடயங்களை பார்க்க, அனுபவிக்கத் தவறிவிட்டோம் என்று அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

ஒவ்வொரு முறையும் பாதையை தேர்ந்தெடுக்கும் போதும் "அடுத்தது என்ன?" என்ற ஒரு கேள்வி மனதில் மிகப்பெரிய கேள்விக்குறிடன் விடைக்காகக் காத்திருக்கும். ஒவ்வொரு முறை எதையாவது எதிர்பார்த்து ஏதாவது முடிவுகளை எடுக்கும் போதும் அது "நீ யார்டா முடிவெடுக்க என்று" கைகொட்டிச் சிரிக்கும்.

ஆனால் இதுவரை கிடைத்த அனுபவங்கள் சகிப்புத்தன்னையை வளர்த்துக் கொள்வது எப்படி?, எதிர்பார்ப்புக்களை குறைப்பது எப்படி?, விமர்சனங்களுக்கு முகம் கொடுப்பது எப்படி? என்று கற்றுக் கொடுத்திருக்கிறது. தவிர பல நண்பர்களையும், எதிரிகளையும், சில மனிதர்களையும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.

இன்னும் சம்பாதித்துக் கொடுக்கப் போகும் மனிதர்கள், நண்பர்கள், எதிரிகளுக்காகவும், அனுபவங்களுக்காகவும், அடுத்தது என்ன என்ற கேள்வியுடனும் காத்திருக்கிறேன்.
WHATEVER HAPPENS LIFE GOES ON... =)

ALT+3

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:34 PM | 0 பின்னூட்டங்கள்
பரீட்சைக்குப் படிக்க ஆரம்பிக்கும் நாட்களில் புத்தகத்தைத் திறந்து 10வது நிமிடத்தில் தோன்றிய கவிதை(அப்படியும் சொல்லலாம் =P) இவை.இவற்றை உங்கள் காதலன்/காதலிக்குக் கொடுத்து உங்கள் காதல் FAIL ஆனால் அதுக்கு சங்கம் பொறுப்பாகாது.


பரீட்சைக்குப் படிக்கும் போது
எங்கிருந்தோ ஓடி வந்து
கண்ணுக்குகள் புகுந்துகொள்ளும்
அதிவேக தூக்கத்தின்
வேகத்தையும் முறையடித்து
கண்களுக்குள் புகுந்து
கனவாக வந்துவிடுகிறாய் நீ

உன்னிடம் காதலை சொல்ல -
நான் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும்
இறுதிப் போட்டியில் தோற்கும்
இலங்கை அணி போல் ஆகிறதே
என்ன காரணம்?

தூக்கமும் பேஸ்புக்கும் போல
இருக்கும் நம் காதல்
எக்‌ஸாமும் தூக்கமும் போல்
சேர்வது எப்போது?

Crack file கிடைக்காத Software ஆக
தினம் தினம் தேய்ந்துகொண்டிருக்கிறேன்
Crack ஆக வருவாயா? இல்லை
Uninstall செய்துவிட்டுப் போவாயா?
வாய மூடி சும்மா இருடா!
ஒரு பாடல் மனதுக்குப் பிடித்துப் போய்விட்டால் அதை சலிக்கும் வரை திரும்பத் திரும்பக் கேட்க ஆரம்பித்துவிடுவேன். அந்த வகையில் சமீபகாலமாக கேட்கும் பாடல் முகமூடி படத்தின் "வாய மூடி சும்மா இருடா..."

வாய மூடி சும்மா இருடா என்று ஆரம்பிக்க இது ஏதோ வை திஸ் கொலைவெறி மாதிரிப் பாடல் என்று நினைத்துக் கேட்க ஆரம்பித்தேன். ஆனால் அதற்குப்பிறகு ஆலாப் ராஜுவின் குரவில் வரும் மதன் கார்க்கியின் வரிகள் ஒவ்வொன்றும் மனதை கொள்ளை கொண்டு அப்பிடியே கண்ணை மூடி வேறு உலகத்துக்குத் தூக்கிப் போய்விடுகிறது.

"கடிகாரம் தலைகீழாய் ஓடும்  - இவன்
வரலாறு எதுவென்று தேடும்!
அடிவானில் பணியாது போகும் - இவன்
கடிவாளம் அணியாத மேகம்!"
 என்பதில் தொடங்கி நேற்று இன்று நாளை என்று காதலைப் பற்றிய வரிகள் ஒவ்வொன்றும் அற்புதம். அதுவும் ஆலாப் ராஜுவின் குரலில் கோர்வையாக வந்து விழும் வரிகள் மனதுக்க இதம்.

"என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ?

நீ வாழவென்று
என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ?

ஓயாமலே
பெய்கின்றதே
என் வானில்
ஏனிந்தக் காதல்?"

என்னமோ ஏதோவிலிருந்து மதன் கார்க்கியின் வரிகளுக்கு ரசிகனாகிப் போனேன். இன்னும் புதிதுபுதிதாய் ரசிக்க வைக்கிறார். இந்தப் பாடலில் மிகவும் பிடித்த வரிகள்
"கன்னம் சுருங்கிட நீயும்,
மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ?

கண் மூடிடும்
அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!"
தலைவா யு ஆர் கிரேட்!!!

*************
விதி (குறும்படம்)


எனது நண்பர்களின் முயற்சியில் உருவான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறுந்திரைப்படம். பார்த்து உங்கள் கருத்துங்களை அவர்களுப்பு வழங்குங்கள்.

No Comments =P



சின்ன வயதில் நாம் அனைவரும் SEESAW, ஊஞ்சல், சறுக்கு(SLIDE)ஆகிய மூன்று விளையாட்டுக்களை கட்டாயம் விளையாடியிரும்போம். ஆனால் காலாகாலமாக இந்த விளையாட்டுக்களை விளையாடி வந்தாலும் இதற்குள் ஒளிந்து கிடக்கும் உலகமகா வரலாற்றுத் தத்துவங்களை அறிந்துகொள்ள மறந்தவிட்டோம். அதை நேற்று இரவு தூக்கம் வராமல் சீலிங் ஃபான் கழன்று மண்டையில் விழுமா விழாதா என்று பயந்துகொண்டிருந்த வேளையில் என் சிந்தையில் உதயமானது இது.

  • ஊஞ்சல்



முதலாவதாக ஊஞ்சலுக்கு வருவோம். ஊஞ்சலில் ஆடும் போது காலால் நிலத்தில் விசையைப் பிரயோகித்து எவ்வளவு தூரம் பின்னால் போகிறோமோ அதே அளவு மேலே போக முடியும். விசையை தொடர்ந்து பிரயோகித்துக் கொண்டிருந்தாதல்தான் மேலே போக முடியும் அல்லது கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் குறைந்து ஊஞ்சல் ஓய்ந்து விடும், ஆட்டம் நின்றுவிடும்.

இதிலிருந்து விளையாட்டைக் கண்டுபிடித்தவர்கள் சொல்லவருவது என்ன என்றால் வாழ்க்கையில் எதையும் முயற்சித்தால் தான் கிடைக்கும். ஒரு விடயத்தை தொடந்து முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும் அதாவது உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். களைப்பாய் இருக்கிறது என்று விட்டால் ஆட்டம் நின்று ஓய்வெடுக்கவேண்டியதுதான் என்ற உலகமகா தத்துவத்தை சொல்லவருகிறார்கள்.

  • சறுக்கு/சறுக்குமரம்

அடுத்ததாக சறுக்குமரம் (SLIDE) பார்த்தோமென்றால் அதில் ஒரு பக்கம் ஏணி இருக்கும், அதில் ஏறி சறுக்கிக் கொண்டு வந்து கீழே விழவேண்டும். அதாவது இதிலிருந்து அந்த விளையாட்டைக் கண்டுபிடித்தவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் வாழ்க்கையில் உயரத்துக்கு வருவது, சாதிப்பது, நல்லபெயர் எடுப்பது மிகவும் கஷ்டமான காரியம். இது அந்த ஏணியில் ஏறுவதைப் போன்றது. ஆனால் கெட்டபெயர் எடுப்பது, வாழ்க்கையில் அடிமட்டத்துக்க வருவது மிகவும் இலகுவானது. அது சறுக்கிக் கீழே வருவதைக் குறிக்கிறது.

எனவே இங்கு அவர்கள் சொல்ல வருவது என்னவென்றால் வாழ்க்கையில் உயரத்துக்குச் செல்வது பெரிய விடையமல்ல, ஆனால் வாழ்க்கையில் உயரத்துக்குப் போன பின்னர் சந்திக்கும் சரிவுகளை சறுக்குமரம் விளையாடும் போது சறுக்கிவிழுந்தவுடன் மறுபடியும் சளைக்காமல் ஏணியால் ஏறுவதைப் போல் மீண்டும் மீண்டும் மேலெ செல்ல முயற்சிக்க வேண்டும்.

  • SEESAW
கடைசியாக SEESAWவைப் பார்த்தோமென்றால் இது வாழ்க்கையின் சமநிலை, எமது பலம் என்ன என்பவற்றைச் கருத்தில் கொண்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அதாவது எம் பலத்தை விட அதிகமாக எதையாவது செய்ய முயற்சித்தால் மேலேயே போய் இருக்க வேண்டியதுதான் கீழே வரமுடியாமல் சிக்கிக்கொண்டு தவிக்க வேண்டியிருக்கும். அதுவே எமது பலத்துக்கு குறைவாக எந்த முடிவுகளை எடுத்தாலும் கீழேயே இருக்க வேண்டியதுதான். வாழ்க்கையை சமநிலையாகப் பேணவேண்டுமாயின் நமது பலம் பலவீனத்தை அறிந்து எம்மால் செய்ய முடிந்தவற்றை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.
அப்போதுதான் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள் சந்தத்திற்கேற்ப அழகாக இருக்கும்.


அந்தக்காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கும் குரு அதை தனது முதன்மைச்சீடனுக்கு மட்டும் சில புதிர்கள் அல்லது குறிப்புகளாக விட்டுவிட்டுப் போவார்களாம். அதை எதிர்கால சந்ததியினர் கண்டுபிடித்தால் பயனுள்ளதாக இருக்குமாம். இதுவும் அதுபோலதானோ என்னமோ! =P


பி.கு - சறுக்கீஸ் என்று நாமெல்லாம் குத்து மதிப்பா ஒரு பெயர் வைத்து விளையாடிய Sliding விளையாட்டுக்கு சறுக்கு மரம் என்று தமிழாக்கம் வழங்கிய கா.சேது ஐயாவுக்கு நன்றிகள் =))



|#001|
அதிகாலை 5 மணிக்கு எழும்பும்போதுதான் தெரியுது, உலகத்தை விட நாம எவ்வளவு பின்னால இருந்திருக்கிறோம் என்று.. #ஞானோதயம் :P

|#002|
"ஏறும்போது எரிகின்றான்,இறங்கும்போது சிரிக்கின்றான் வாழும் நேரத்தில் வருகின்றான்,வறுமை வந்தால் பிரிகின்றான்" #கண்ணதாசன் #ஒருவன்மனதுஒன்பதடா

|#003|
எல்லா ஊரிலயும் பூனை 'மியாவ்' என்றுதான் கத்துது :p #கண்டுபிடிப்பு

|#004|
என்னதான் பேய்களில் நம்பிக்கையில்லாவிட்டாலும் பேய் படங்கள் பார்க்கும்போது கரண்ட்டி கட்டாகிபோனால் பயமாத்தான் இருக்கு :-O #அவ்வ #காஞ்சனா

|#005|
"இருளை மறைக்கும் ஒளியால் நிழலை மறைக்க முடிவதில்லை"

|#006|
"பாணின் ஓரத்துண்டுகள் போலிருக்கிறது நம்காதல், எப்போது வெட்டப்படுவோம் குப்பையிலாவது ஒன்று சேர" :P #கவிதைமாதிரி

|#007|
கடைவாயில் கடைசிப்பல்லு முளைக்கும் போது ஏற்படும் வலி காதல் தோல்வியின் போது ஏற்படும் வலியை விடக்கொடியது :P #ஐயோஅம்மா :'(

|#008|
செய்த தவறை ஏற்றுக்கொள்ள ஒரு தைரியம் வேண்டும், ஆனால் செய்யாத தவறை செய்ததாக ஏற்றுக்கொள்ள அதைவிட தைரியம் வேண்டும்.

|#009|
LOVE எங்கிறது ALARAM இருக்கிற மணிக்கூடு மாதிரி, அதுவும் தூங்காது, தூங்குறவனையும் தூங்கவிடாது

|#010|
ஒரு நாளில் அதிகம் நித்திரை செய்வதால் ஏற்படும் ஒரே ஒரு பிரச்சினை. சில விடயங்களை கனவா நனவா என்று கணிப்பிட முடியாமல் ஏற்படும் குழப்பம் தான் :P

|#011|
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல அம்மா பற்றிய பாடல்கள் மட்டும் எந்தக் காலகட்டத்தில் வந்திருந்தாலும் சரி மனதுக்குப் பிடித்துப்போகிறது.

|#012|
"அலையே சிற்றலையே கரை வந்துவந்து போகும் அலையே, என்னைத் தொடுவாய் மெதுவாய் படர்வாய் என்றால், நுரையாய் கரையும் அலையே"- ||#ரசனை

|#013|
ExamResults வரும்போது அடுத்த முறை நல்லாப் படிக்கணும் என்று எடுக்கப்படும் முடிவுகள்,அன்று இரவு வரும் நித்திரையுடனேயே கைவிடப்படுகின்றன :P
|#014|
பொதுவாக, காதலிப்பவர்கள் சுறுசுறுப்பானவர்களாகவும், காதலிக்காதவர்கள் சோம்பேறிகளாகவும், காதலில் தோற்றவர்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் :P
 
|#RT| 
கோபப்படுபவரிடம் தொடர்ந்து தன்மையாக கதைத்துப்பாருங்கள் . அந்த நாள் முழுதும் அவர் கோபப்பட்டதற்கு வருத்தப்படுவார் !


என் முந்நாள் என்னவளே!


காதல் தீவிரவாதம்
அதில் இடைநழுவல்களுக்கு இடமில்லை
உன் மூச்சுத்தான் என் சுவாசம் 
அதில் இளந்தென்றலுக்கு இடமில்லை
உன் பேச்சுத்தான் என் கீதம்
அதில் வேறு இசைகளுக்கு இடமில்லை
உன் நிழல்தான் என் நிஜம் 
அதில் என் உருவத்துக்கு இடமில்லை
உன் தடம் தான் என் பாதை
அதில் வேறு பாதைகளுக்கு இடமில்லை


என் மனதுக்குள் எனக்கே 
கல்லறை எழுப்பி
இதயத்தை துண்டு துண்டாய் 
வெட்டி வீழ்த்தி
இரத்தம் சொட்டச் சொட்ட 
ஓடிப்போகச் சொல்கிறாயே


கரைகடந்து போன பின்னர் 
வெந்நுரையைத் எடுத்துவரச் சொல்லி
கடலில் தள்ளிவிடுகிறாயே
குளிர் பனித்துளியாய் இருந்த உன்னை
கடுஞ்சூரியனாய் மாற்றியது யார்?

முதலாவது என்பதிலுள்ள
சுகங்களை நீ அறிவாயா?
முதலாவது என்பதிலுள்ள
வலிகளை நீ அறிவாயா?


காட்டு யானையின் கால் பட்டு 
உடைந்தகண்ணாடித் துகள்களாய்- காதலை
சில்லுசில்லாய் நொறுக்கிவிட்டாய்
வாரணம் கனக்கும் மனதுடன் நான்
ஓடிய பாதையெங்கும் - உன்
பெயரை உச்சரித்து இரத்தம் 
உறைந்து போவதை நீ அறிவாயா


யதார்த்தம் என்ற பெயரில் சில
நிஜங்கள் பேசி - என்
உயிர் ஊசி பிடுங்கிவிட்டாய்
பதிலுக்கு நிஜம் பேசி உன்
உயிரைப் புசிக்கமாட்டேன்
தயவு செய்து போய்விடு!



-01-
சோகமாக இருப்பவர்களை மகிழ்ச்சியாகப் பார்ப்பதை விட மகிழ்ச்சியாக இருப்பவர்களை சோகமாகப்பார்ப்பதே பிறருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது

-02-
"உனக்கு என்ன வரலாறு? உண்மை சொன்னாத் தகராறு"
யாருக்கோ! :P

-03-
வாழ்க்கையில் தனக்குக் கவலை or பிரச்சினை வரும் போது அதை சமூகவலைத்தளங்களில் எவன் உளறாமல் இருக்கிறானோ அவன் பாதிபக்குவப்பட்ட மனிதன் ஆகிறான்

-04-
"கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே" Wake up with niz song ;-)) || Maybe situation song 4 this month :P

-05-
அதிகாலை 5 மணிக்கு எழும்பும்போதுதான் தெரியுது, உலகத்தை விட நாம எவ்வளவு பின்னால இருந்திருக்கிறோம் என்று.. #ஞானோதயம் :P

-06-
"இது போல் வரும் லிங்கை கிளிக் பண்ண வேண்டாம்" எண்டு போட்டு தெரிஞ்சே Timelineஐ spam பண்றாய்ங்களே.. அவ்வ்வ். #கடுப்பேத்திறார்மைலாட்

-07-
அறிவுகெட்ட Computer! D Driveல space இல்லைன்னா E,F எதுலயாச்சும் போடவேண்டியதுதானே.. இரவு போட்டுட்டு தூங்கப் போன download எல்லாம் :@

-08-
வரப்போகும் 2012ம் ஆண்டு 2006ம் ஆண்டு மாதிரி அமைய வேண்டும் :-)) #எதிர்பார்ப்பு 

-09-
மழை கொஞ்சம் அதிகமாப் பெய்தால் சுனாமி எண்டு வதந்தியக் கிளப்பிறாங்களே.. #திருகோணமலை(எ)வதந்திஊர் :P

-10-
நான் இப்பிடித்தான் என்று 100% தெரியாது. ஆனால் ஓரளவு தெரியும் சி(ப)ல விடயங்களில் விரும்பியது நடக்காவிட்டாலும் இசைவாகிப்போகத் தெரியும்,ஆனால் ஒரு சில விடயங்களை நான் எதற்காகவும் விட்டுக்கொடுப்பதில்ல
உன்னைப் பற்றி நீ எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறாய் என்று வெற்றிFMமில் கேட்கப்பட்ட கேள்விக்கு கூறிய பதில்.

-11-
"Life இது உன்னோட காரு இஷ்டப்படி நீ ஓட்டிப்பாரு.." 

-12-
மச்சி + மாமு + சித்தப்பு + தலைவா=நண்பேன்டா :D

-13-
Self Confidence கொஞ்சம் (நிறையவே) அதிகரிச்சிருக்கு, எவ்வளவு அடிச்சாலும் தாங்குற ஒரு சக்தி வந்திருக்கு :P
2011ம் ஆண்டு பற்றி கேட்டதுக்கு எனது பதில்

-14-
"மழை கேட்கிறேன், எனை எரிக்கிறாய் ஒளி கேட்கிறேன், விழிகளை பறிக்கிறாய்"|| யின் பாடல் வரிகள் மிகவும் பிடிச்சுப்போச்சு:-))
-15-
பகையைக் கண்டு பைய நகர்ந்தேன்,பயந்து விட்டான் பாவம் என்றது;மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்,விளங்கி விட்டதா மிருகம் என்றது by

2011ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் விடைபெறப் போகிறது. இந்த வருடம் பலருக்கும் பல வித்தியாசமான அனுபவங்களையும் கவலைகள், மகிழ்ச்சிகளையும் தந்திருக்கும். இந்த வருடம் எனக்குப் பல புதிய விடயங்களை, நண்பர்களை, அனுபவங்களை தந்திருக்கிறது. முக்கியமாக 2009ல் பாடசாலைக் காலத்துக்குப் பிறகு வேலைவெட்டியில்லாம் எதிர்காலம் பற்றி சிந்தித்து சிந்தித்து சோர்ந்து போன 2010ஐ ஊதித்தள்ளிவிட்டு புதிய பாதையைக் காட்டிய ஆண்டு 2011.

இந்த ஆண்டு எனக்கு தன்னம்பிக்கையை அதிகம் தந்திருக்கிறது. சில பிடிக்காத விடயங்களுக்கு இசைவாகிப் போகவும், கிடைக்கும் என நினைத்து கிடைக்காமல் போன விடயங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கையும் தந்த ஒரு ஆண்டு.


கூடுதலாக இதுதான் எனது இந்த ஆண்டின் கடைசிப் பதிவாக இருக்கும், எனவே எனவே அடுத்த மலரப் போகும் 2012 இதை விட சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்ற நம்பிக்கையை மனதில் நிறுத்தி அனைவருக்கும் முற்கூட்டிய சிசுபாலனின் பிறந்த தின மற்றும் புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி மீண்டும் அடுத்த ஆண்டு சந்திப்போம்!




12ம் மாசம்

12மணிக்கு

தன்னோட வூட்டுல பல்பு எரியலைன்னு

ஆவுடையப்பன் ஏற(சாக் அடிச்சு கீழ விழ)

அப்ப ஒரு நாய் அண்ணன் சொன்னாரு,

அவ இனி ஆவுடையப்பன் இல்ல ஆவியடிச்ச அப்பன்

அதே மாசம், அதே நாளு கரக்டா 6.33க்கு

Bavan தன் பேர சுருக்க(call me Mr.B)

7.34க்கு மிஸ்டர் Bயும் மிஸ்டர் ஆவியடிச்சப்பனும் கையகுலுக்க

8.15க்கு எக்ஸாமே இல்லாத cow கஸ்தூரி பாவம் பிட்டுப் பேப்பரை பொசுக்க

8.16க்கு எக்ஸாம் பேப்பர் சுடச்சுட ஹாலுக்கு வந்து சேர


8.17க்கு சுர்ர்ன்னு ஏறி MR.B டவுட்டு கேக்க

8.18க்கு புல்லாப் படிச்சிட்டு வந்த பில்லா காண்டாகி கடுப்புல கத்த ஆரம்பிக்க

8.19க்கு பில்லாக்குப் பயந்து MR.B எஸ்கேப்பாகி ஓட

8.20க்கு எக்ஸாம் ஹால் வாசல்ல வச்சு சூப்பர்வைசர் MR.B யப் புடிக்க

8.30க்கு எக்ஸாம் ஸ்டார்ட் ஆக

8.31க்கு MR.B க்கு தூக்கம் ஸ்டார்ட் ஆக..



8.33க்கு மூணு தபா பெயிலான சரோ அவங்க அம்மாகிட்ட உதை வாங்கி எக்ஸாமுக்கு ரெடியாகி அவசரமா ஓடி வர..

இப்போ இதைப் படிக்கிற நீங்க என்னடா நடந்திச்சு இவனுக்குன்னு என்னை கேவலமா நோக்க.. 

வேற ஒண்ணுமில்லைங்கோ எக்ஸாம். பீவர்தான்னு நான் சமாளிச்சிட்டு, ஏண்டா இந்தப் போஸ்டப் போட்டமுன்னு நான் யோசிக்க ஆரம்பிக்க....

ருவீட்ஸ் || Tweets #009

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:45 PM | 2 பின்னூட்டங்கள்

-01-
நம்பிக்கைதுரோகம் மறக்கமுடியாததாம், SO பாடங்களையும் ஏதும் நம்பிக்கை துரோகம் பண்ணிவிட்டா கஷ்டப்பட்டு படிக்கவேண்டியதில்லை :P

-02-
7ம் அறிவு பார்த்ததிலிருந்து ரோட்டில் எந்த நாயைப்பார்த்தாலும் பயமாயிருக்கு :P  

-03-
Exam முதல்நாள் படிக்க புத்தகத்தை திறப்பது, பிறந்தநாளுக்கு அடுத்தநாள் facebookஐ பார்ப்பது மாதிரி :P

-04-
மலை போல நம்பியிருக்கேன் நம்பியிருக்கேன்கிறாங்களே.. மண்சரிவு வந்தா என்ன பண்ணுவாங்க.. #டவுட்டு

-05-
ஒரு விடயத்தை ஞாபகம் வைத்திருப்பதற்கு சிறந்த வழி ஒரு தடவை அதை மறப்பதுதான் #என்னாஅடி #அனுபவம்

-06-
WMPக்கு கூட நக்கல்ஸ் கூடிட்டு, நாளைய Assignment JAVA Codingகுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் போது "மயக்கமா கலக்கமா" பாட்ட போடுது :'(

-07-
"ஒரு முட்டையை வெளியில் இருந்து உடைத்தால், அது மரணம். அது உள்ளிருந்து உடைக்கப்பட்டால், ஜனனம்" #படித்ததில்_பிடித்தது

-08-
The hardest thing ever in this world is answering to the childern's questions. How fast they asking questions.

-09-
"உன் வாழ்க்கை உன் கையில்" - "கையில்லாதவர்களுக்கும் வாழ்க்கை உண்டு" #முரண்பாடு

-10-
வாழ்க்கையின் தத்துவத்தை ஒளிந்து பிடித்து விளையாடும் போது அதிகம் அறிந்துகொள்ளலாம். #அனுபவம்

-11-
இன்செப்சன் படம் பாத்ததிலயிருந்து நடக்கிறதெல்லாம் கனவா நனவான்னே டவுட்டாக்கீதுபா..:-O #இன்செப்சனோபோஃபியா

-12-
என்னதான் ஜப்பான்காரன் கமராவைக் கண்டுபிடிச்சாலும், ZOOM button வேலை செய்யாட்டி அதுக்கு டிப்பெக்ஸ வச்சு வேலை செய்யவைக்கலாம்னு கண்டுபிடிச்சவன் தமிழன்டா

-13-
காலைக்கடன் முடிக்கப் போனாலும் பேஸ்புக்ல status போடுறாய்ங்கடா.. விட்டா சாவுறதுக்கு முதல் "I'm leaving this world" எண்டு போட்டாலும் போடுவாய்ங்க, வழக்கம்போல நாமளும் like பண்ணி ":P"ன்னுதான் comment அடிப்போம்


-RT-

:எல்லாத் துறைகளிலும் நின்று நிலைக்க முடியாதவர்கள் தான் அறிவுரை என்ற பெயரில் விமர்சனம் செய்து மற்றவரை மட்டம் தட்ட எண்ணுகிறார்கள். #அவதானிப்பு

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்