Related Posts with Thumbnails
Showing posts with label எரிந்தும் எரியாமலும். Show all posts

சித்ரா மகள் மரணம்




பாடகி சித்ராவின் 8 வயது மகள் நந்தனா துபாயில் நீச்சல் தடாகத்தில் தவறி விழுந்து இயற்கையெய்திய செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். எமக்கு ஏதாவது ஒரு வகையில் பிடித்த ஒருவருக்கு வரும் துன்பம் அல்லது இழப்பு எம்மையும் அதிர்ச்சியில் உறைய வைத்துவிடுகிறது. எம்மை எத்தனையோ பாடல்கள் பாடி மகிழ்வித்த பாடகி சித்ராவின் மகள் நந்தனாவின் இழப்பால் துயருரும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



***

சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்


எனது அனைத்துப் நட்புக்களுக்கும் எனது மனமார்ந்த சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருமலையில் அனலடிக்கும் வெயிலுக்கு மத்தியில் சித்திரைப்புத்தாண்டு இனிதே கொண்டாடப்பட்டது. சித்திரைக்குப் பின்னால் வெயில் அதிகரிக்குமாம், ங்கொய்யால இப்பவே வெயில் தாங்க முடியல..:-o

***

சார்ளி சாப்ளின்

நகைச்சுவை என்றால் உடனே எமக்கு ஞாபகம் வரும் பெயர்களில் சார்ளி சாப்ளினும் ஒருவர். அண்மையில் இவரது வாழ்க்கை வரலாறு படித்தேன், எல்லாரையும் சிரிக்க வைப்பவர்களின் வாழ்க்கை எவ்வளவு சோகமானது என்று அதைப் படித்த பின்னர் புரிந்து கொள்ள முடிந்தது. எத்தனை சோதனைகள் வந்த போதும் அதையும் தாண்டி சாதனைகள் படைந்த சாதனை நாயகன் சார்ளி சாப்ளினுக்கு நாளை 122வது பிறந்த நாள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலிவா..



சிரிப்பு இல்லாத நாள், வாழ்நாளில் வீணாகக்கப்பட்ட நாளாகும் என்று சார்ளி சாப்ளின் சொல்லியிருக்கிறார், எனவே கீழே உள்ள வீடியோவைப் பார்த்து சிரிங்க..:P





***

DamnItsTrue


அண்மையில் TWITTERரின் கண்ணில் பட்ட @DamnItsTrue  என்ற ருவிட்டர் கணக்குக்கில் TWEET செய்யப்படும் விடயங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. “Facts that are relevant to your daily life” என்று தன்னைப் பற்றி கூறியிருக்கும் இத்தளம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சில விடங்களை tweet செய்யும் போது அது எமது எண்ணங்களோடு ஒத்துப்போகும் போது ஏற்படும் மகிழ்ச்சியை தவிர்க்க முடியவில்லை.

http://twitter.com/DamnItsTrue


***

CJ7



அண்மையில் CJ7 என்ற ஒரு சீனத்திரைப்படம் ஒன்று பார்த்தேன். வறுமையான குடும்பத்தில் பிறந்த தாயில்லாத ஒரு சிறுவனை படிக்க வைக்கப் போராடி கடுமையாக உழைக்கும் கட்டிட நிர்மாணப் பணி செய்யும் அவனது தந்தை ஆகியோரை மையமாக் கொண்டு கதை நகர்கிறது. இவர்களுக்கு குப்பைத் தொட்டியிலிருந்து கிடைக்கும் ஒரு ஏலியன் நாய்க்குட்டியின் சாகசங்களும் பின்னர் அந்த CJ7 இவர்களுக்குச் செய்யும் உதவிகளும்தான் கதை. கதை சலிப்புத்தட்டாமல் அருமையாக நகர்கிறது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.



***

இரசித்த குறும்படம் - 5ருபா

குளிர், மழை, வெள்ளம்

163740_1804971489108_1384525971_2985937_2400337_n

தற்போது இலங்கையில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மக்கள் பலத்த சேதங்களையும் அழிவையும் சந்தித்து தற்போது பாடசாலைகளையும் முகாம்களையும் தஞ்சமடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எம்மாலான உதவிகளைச் செய்யவேண்டியது எமது கடமை. எனவே எம்மால் இயன்ற உதவிகளை முடிந்தளவு துரிதமாகச் செய்வோம். மீண்டும் காலநிலை பழைய நிலைக்குத் திரும்பும் என்று நம்பிக்கை வைப்போம்.

 

பொங்கலோ பொங்கல்

f23dadb6-1f22-47bb-bad0-9041d706fac5_S_secvpf.gif

அனைவருக்கும் எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். மலரப்போகும் பொங்கல் தினத்திலாவது சூரியன் எட்டிப்பார்க்குமா?

 

சிறுத்தை

siruthai-movie-stills-029

இன்று சிறுத்தை முதற்காட்சி பார்க்கப் போயிருந்தேன். குடுத்த காசுக்கு திருப்தியாக படம் பார்த்துவிட்டு வெளியே வந்த கார்த்தியின் மற்றுமொரு படம். கார்த்தி இரட்டை வேடம் ஏற்று நடித்திருக்கும் படம். ஆரம்பத்தில் கலகலப்பாக நகைச்சுவையாக ஆரம்பிக்கும் படத்தில் முதற்பாதியின் இறுதியில் ஆரம்பிக்கும் விறுவிறுப்பை அப்படியே இரண்டாம்பாதியின் முதல் அரைவாசி வரை கூட்டிச்சென்று கடைசிப் பாதியை கார்த்திக்கே உரிய குறும்பு, நகைச்சுவையுடன் அழகாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

சந்தானமும் வழக்கம் போல கலக்கியிருக்கிறார். தமன்னா இடுப்பு படத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்த்தாலும் குஷி ஜோதிகாவுடன் போட்டிபோடும் அளவுக்கு இல்லை..:P

இவை தவிர படத்தில் திவ்யா என்ற பெயரில் வரும் பேபி ரக்சனா கலக்கியிருக்கிறார். கார்த்தி கோபமாக நடந்து கொள்ளும் ஒரு காட்சியில் குழந்தையின் மழலை மனதை உருகவைத்தது. மொத்தத்தில் சிறுத்தை சீரியஸ் பதிவில் கும்மியது போன்ற கலகலப்பான உணர்வைத்தந்தது.

படத்தின் கிளைமாக்ஸ் எம்மை அந்தக்கால படங்களுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. மற்றும்படி சிறுத்தை  -  சிரித்தபடி பொழுதுபோக்க விரும்புபவர்களுக்கு மட்டும்

மனிதாபிமானம்

167560170_4bc4e59e0d

போன வாரம் ஒரு வெள்ளிக்கிழமை குடி குடியைக் கெடுக்கும் என்பதை முதன்முதலாகக் கண்கூடாகப் பார்த்தேன். அன்று நாங்கள் வகுப்பு முடிந்து பஸ் ஏறுவதற்காக வழக்கமாக பஸ் ஏறும் தரிப்பிடத்திற்கு வந்தோம். அங்கே இரண்டு நாய்க்குட்டிகள் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. நாங்கள் உள்ளே வருவதைக் கண்டதும் பயந்து பயந்து ஒரு ஓரத்தில் ஒதுங்கி ஒளிந்து கொள்ள முற்பட்டது.

 

அவதானித்துப் பார்த்ததில் ஒரு நாய்க்குட்டியின் கண்ணுக்கு சற்று மேலே காயம் வந்து குருதி வழிந்திருந்தது. பஸ்தரிப்பிடத்துக்குள் உடைந்த போத்தல்த்துண்டுகள் கிடந்தது. முதல்நாள் யாரோ பஸ் தரிப்பிடத்துக்குள் இருந்து மது அருந்திவிட்டு போதையில் கண்மண் தெரியாமல் நாய்க்குட்டிகளுக்கு அருகில் போத்தலை உடைத்திருக்கவேண்டும் அதன் காரணமாக தலையில் அடிபட்டிருக்கலாம் என்று ஊகிக்கமுடிந்தது. அருகில் உள்ள கடையில் கார்ட் போர்ட் பெட்டி வாங்கி நாய்க் குட்டிகளை உள்ளே பத்திரமாக வைத்து மழை சாரல் படாமல் பஸ் தரிப்பிடத்துக்குள் வைத்துவிட்டு வந்தோம்.

அடுத்த இரண்டு நாட்கள் எமக்கு வகுப்பு இல்லை திங்கட்கிழமை சென்று பார்த்த போது பெட்டி கிழித்து எறியப்பட்டிருந்தது. ஒரு நாய் தரிப்பிடத்துக்குள்ளும், மற்றது தரிப்பிடத்துக்கு வெளியில் மழையில் நனைந்தபடி இறந்துகிடந்தது..:(

 

Lolita

4950153006_3be5cd804e

லோலிட்டா இந்தப்பாடலைக் கேட்டதிலிருந்து திரும்பத் திரும்பக் கேட்கவேண்டும் போன்ற உணர்வு ஏற்படுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. எனது ரிங்டோன்கூட அந்தப்பாட்டுத்தான் போட்டிருக்கிறேன், யாரும் அழைப்பெடுத்தாலும் சற்றுத்தாமதமாகத்தான் அழைப்புக்கு பதிலளிக்கிறேன் (சிலர் நான் நித்திரை என்று நினைத்துப் பொறுமையிழந்து அழைப்பை அரைவாசியில் துண்டித்தும் விடுகிறார்கள்..:P) அந்த அளவுக்கு இப்பாடல் எனக்குப் பிடித்துவிட்டது. முதலாவது ஹரிஸ் ஜெயராஜின் இசை + கார்த்திக்கின் குரல் என்றால் அடுத்து தாமரையின் அழகான வரிகள்.

 

நான் நாற்பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா

யார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா

நான் அலை தூர அடை காக்கும் கடல் அல்லவா

என் ஆகாயமதில்கூட பல வெண்ணிலா..

 

NO COMMENTS

real_meaning_words_Funzug.org_08

நத்தார் பண்டிகை வாழ்த்து

merry-christmas
நேற்றைய தினம் நத்தார் பண்டிகையை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடியிருப்பீர்கள். எனவே அனைவருக்கும் என் மனமார்ந்த, உளம்நிறைந்த நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள். இந்த நத்தாரும் மலரப்போகும் 2011ம் உங்கள் வாழ்வில் அமைதியையும் சந்தோஷத்தையும் தரட்டும்.

சுனாமி

tsunami
கடல் வருதாம், ஊருக்குள்ள தண்ணி வருகுதாம், ஓடுங்கோ பனை உயரத்துக்கு அலை வருதாம், இவைதான் இந்த வருடத்தல் 26ம் திகதி மக்களின் மகுடவாசகமாக இருந்தது. அதன்பின்னர் எத்தனை சோகக்கதைகள் கேள்விப்பட்டிருப்போம். சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு 6 வருடங்கள் ஆகிறது. 6 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற விடயங்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

சுனாமியில் உயிர்நீத்த இலட்சக்கணக்கான உயிர்களுக்கு எனது அஞ்சலிகள்.

பதிவர் சந்திப்பு – 03

156341_10150354003040368_844450367_16276236_6724509_n
கடந்த 18ம் திகதி பதிவர்கள் கிறிக்கட் மற்றும் பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற்றது. நான் கலந்து கொண்ட முதலாவது பதிவர் சந்திப்பு அது. அனைத்துப் பதிவர்களையும் சந்தித்தது விளையாடியது என அந்த இரண்டு நாட்களும் மகிழ்வான நாட்களாகக் கழிந்தது. அன்னாசிப்பானம் சில பின்விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் கூட இந்தப் பதிவர் சந்திப்பை மறக்க முடியாமல் இருக்க அது ஒரு வழியாக அமைந்திருக்குமோ..:P

சுஜாதா

sujatha
நேற்றும் நேற்று முன்தினமும் சுஜாதாவின் “ஜேகே” மற்றும் “மறுபடியும் கணேஷ்” ஆகிய இரு புத்தகங்களும் வாசித்து முடித்தேன். ஜேகே ஒரு பைலட்டின் கதை படிக்கப் படிக்க விறுவிறுப்பு அதிகமாகிக்கொண்டே போகிறது. விமானத்தை வைத்து சுஜாதா எழுதிய மற்றுமொரு அருமயான கதை. கடைசிவரை எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே சென்று கடைசியில் லாவகமாக எதிர்பார்க்காத விதத்தில் கூறுவதில் சுஜாதாக்கு நிகர் சுஜாதாதான்.

மறுபடியும் கணேஷின் கடைசி வரியைப் படித்துவிட்டு “அடிங்கொய்யால” என்று சொல்லிக்கொண்டேன். சுஜாதாவின் கணேஸ் – வசந்த் வரும் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. அதிலும் இது  சுஜாதாவின் சிறந்த ஒரு துப்பறியும் கதை. “குருப்பிரசாத்தின் கடைசி தினம்” என்ற நாவல் இன்னும் மிஞ்சியுள்ளது. படிக்கவேண்டும். வேறு சுஜாதாவின் புத்தகங்கள் ஏதாவது எனக்கு பரிந்துரை செய்யுங்களேன்.

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்..:P

(null)
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது என்றும் சொல்லலாம். ஆவுஸ்திரேலியா இன்று ஆரம்பித்த போட்டியில் இந்தப்பதிவை இட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் 9 விக்கெட்டுகள இழந்து தடுமாறிக்கொண்டிருக்கிறது.
அன்டர்சன் 4 விக்கெட்டுகள், ட்ரம்லெட் 3, மற்றும் பிரஸ்னன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்கள். ஆனால் அவுஸ்ரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் Mr.Cricketடும், ஹடினும் ஆட்டமிழ்நதது அவுஸ்ரேலியாக்கு கவலைக்குரிய விடயம்.
மறுபடியும் பொன்டிங்க்குக்கு ஆப்பா? விக்கிரமாதித்தன் எங்கபோய்ட்டாரோ..:P

நெஞ்சில் நெஞ்சில்

அண்மைக்காலமாக தினமும் என் காதுகளில் தொடர்ந்து ஒலிக்கும் பாடல் இது. எங்கேயும் காதல் படத்தில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில், ஹரிஸ் ராவேந்திரா – சின்மயி ஆகியோரின் இனிமையான குரல்களில், மதன் கார்க்கியின் அற்புதமான வரிகளில் காதுவழியாக உடலுக்குள் சென்று ஏதோ செய்கிறது.

no comments

126228
we miss you murali
ஒரு மனிதனுக்குவாழ்க்கையில் சோதனை வரலாம் ஆனா சோதனையே வாழ்க்கையா அமைந்துவிட்டால்? நாம் ஒரு விடயத்தைச் செய்கிறோம், அது பிழைத்துவிடுகிறது அல்லது பிறரால் அது பிழை எனக்கருதப்படுகிறது. அதற்காக நாம் செய்வது பிழை என்று ஆகிவிடுமா? அதுதான் முரளிதரன் என்ற மாமனிதனுக்கும் நடந்தது. அவர் இன்று ஒரு சிறந்த வீரர் என்பதோடு மட்டுமல்லாது சிறந்த மனிதராக திகழ்கிறார். நேற்றைக்கு வந்த பந்துவீச்சாளர்களெல்லாம் ஒரு போட்டியில் 4 ஓவர் பந்து வீசி 2விக்கெற் எடுத்தாலே ஏதோ தாங்கள் பெரிய பந்துவீச்சாளர் என்று பெருமையில் துடுப்பாட்ட வீரருடன் வாய்த்தர்க்கங்களில் ஈடுபடுவதும், ஒழுங்கமின்றி நடந்து கொள்வதும் அனைவரும் அறிந்ததே.


அதிக விடயம் தெரிந்தவன் அமைதியாகத்தான் இருப்பான் என்பார்கள் அதற்கு சிறந்த உதாரணம் முரளிதரன். இதுவரை சர்வதேச கிறிக்கற் போட்டிகளில் மாத்திரம் 61928 பந்துகளை சுழற்றி வீசி 1320 விக்கற்டுகளையும் சாய்த்திருக்கும் சிங்கத்துக்கு ஓய்வு என்பது தேவையான ஒன்றுதான். ஆனால் இலங்கை அணி என்றால் முரளி விளையாடுகிறார் என்றால் எதிரணிக்கு பீதி போகும் எமக்கும் இலங்கை கட்டாயம் வெல்லும் என்று ஒரு நம்பிக்கை பிறக்கும். 


முரளி பந்தை எறியவில்லை என்பதற்கான ஆதாரம் காட்டும் வீடியோ - ஒரு நினைவுக்காக

we miss you murali







சின்னத் தொழிலாளி
மாலைவேளைகளில் நண்பர்களுடன் கடற்கரைக்கு காற்று வாங்கச்செல்வது எனது நாளாந்தக்கடமைகளில் ஒன்று. அன்றும் அப்படித்தான் நானும் இன்னொரு நண்பனும் மற்ற நண்பர்கள் வரமுதலே கடற்கரைக்கு சென்றுவிட்டோம். ஒரு சிறுவன் கடலை விற்றுக்கொண்டு வந்தான். ஒரு 6 அல்லது 7 வயதுதான் இருக்கும். பாடசாலைச் சீருடை அரைக்காற்சட்டை அணித்திருந்தான். பாடசாலையில் படிப்பவன்தான் என்று முடிவு பண்ணிவிட்டோம். கடற்கரையில் நமக்கும் பொழுது போகாததால் அவனிடம் விசாரித்தோம்.
நாம் - எந்த ஸ்கூல்
சிறுவன் - சென்சேவியர்
நாம் - எத்தனையாம் வகுப்பு?
சி- 3ம் வகுப்பு
நா - வீடு எங்கே? அப்பா அம்மா?
சி - அப்பாவுக்கு சுகமில்லை, அம்மா வீடடில்.
நா - சகோதரர்கள்?
சி - 2 அண்ணா
பிறகு அவனிடம் கடலை வாங்கிவி்ட்டு காசைக்கொடுக்க அவன் போய்விட்டான். அதன் பிறகுதான் கவனித்தோம் கடலை விற்றுக்கொண்டிருந்தவர்களில் பலர் பாடசாலைச்சீருடைக் (நீல)காற்சட்டைதான் அணிந்திருந்தர்கள்.

இப்படி இன்னும் எத்தனை சிறுவர்கள் குடும்பப்பிரச்சினைக்காக இப்படி பாடசாலை முடிந்ததும் அப்படி ஒரு வேளைக்கஞ்சிக்காக உழைக்கிறார்கள். இவ்வாறான சிறுவர்கள் கூடுதலாக 9வது வகுப்புடன் படிப்பை நிறுத்திவிடுவதும் நான் கண்கூடாக்கண்ட உண்மை. 


EXAM








80 நிமிடம், தனி அறை, உங்களுடன் சேர்த்து 8 தேர்வாளர்கள், ஒரு காவலாளி, உங்களுக்கு மேசை,கதிரை வழங்கப்பட்டிருக்கிறது. மேசையில் ஒரு வினாத்தாள், தாளைப்பார்க்கிறீர்கள் வெறுமையாக இருக்கிறது. கேள்வியைக்கண்டுபிடித்து விடையளிக்க வேண்டும் என்ன செய்வீர்கள்? அதுதான் இந்தப்படம் - EXAM.



லொக்கேசன் மாற்றம் இல்லை, பாட்டு இல்லை,பஞ்ச் டயலாக் இல்லை,ரொமான்டிக் சீன் இல்லை பத்தடி உயரத்தில் பறந்து அடிக்கும் அக்சன் சீன் இல்லை ஆனால் ஒன்று மட்டும் இருக்கிறது. விறுவிறுப்பு. கட்டாயம் அனைவருமே பார்க்கவேண்டிய படம். உங்கள்முளைக்குத்தீனி போடும் சிறந்த படம். படம் முடிவடையும் போது நீங்கள் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று நினைத்த அத்தனையும் தவிடுபொடியாகியிருக்கும். கட்டாயம் அனைவரும் ஒருமுறை பார்த்துத்தான் பாருங்களேன். படம் டவுன்லோடிங் லிங்கைப்பெற இங்கே சொடுக்குங்கள்.


ஆத்திரம், அன்பு
ஒரு மனிதர் தனது காரை திருத்திக்கொண்டிருந்தார். அவரது நான்கு வயது மகன் காரில் கல் ஒன்றினால் காரில் ஏதையோ வரைந்து கொண்டிருந்தான்.அதைக்கண்டு ஆத்திரமடைந்த அவர் மகனது கையைப்பிடித்து அடிஅடியென்று அடித்துவிட்டார். ஆனால் ஆத்திர மிகுதியால் கையில் திருத்தும் கருவி இருந்ததைக் கவனிக்கவில்லை.


மறுநாள் வைத்தியசாலையில் பையன் அருகில் கவலையுடன் அமர்ந்திருந்த அப்பாவிடம் "என் கைவிரல்கள் எப்ப வளரும்?" என்று கேட்டான்.


உடனே தான் செய்த செயலை எண்ணிக் கவலையும் ஆத்திரமும் அடைந்த அவர் தனது கார் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்துக்குச்சென்று காரை தன் ஆத்திர மிகுதியால் போட்டு அடிஅடியென அடித்தார். பிறகு சிறுவன் கிறுக்கிய இடத்தைப்பார்த்தார்.அங்கே



என அச்சிறுவன் எழுதியிருந்தான்.



ஆத்திரம் என்பது கொடிய அரக்கன் அதை, அன்பு என்பது இனிய அரக்கன், அன்பை வாரி வழங்கலாம், ஆனால் ஆத்திரத்தை அடியோடு அழிக்க வேண்டும்.


NO COMMENTS
பி.கு - இது தரம் 2 பயிற்சிப்புத்தகத்தில் காணப்பட்ட படம்
பாபாவால் புள்ளி பெற்ற மாணவன்
கடந்தமுறை யாழ் போயிருந்தபோது ஒரு சுவாரஸ்யமான மனிதரை சந்தித்தேன். சந்தித்த நேரம் தொலைக்காட்சியில் நித்தியானந்தா சுவாமியின் கமராமேன் லெனினின் பேட்டி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. உடனே அவர் தானும் இந்த சாமியாரால் இல்லை இல்லை சாமியாரின் ஒரு தீவிர பக்தரால் தானும் பாதிக்கப்பட்டதாக சொன்னார். அட என்ன என்று அவரின் பக்கம் திரும்பி உட்கார்ந்தோம். 


தான் 10 ஆம் தரத்தில் படித்துக் கொண்டிருந்த சமயம் தான் படித்த ஆசிரியர் ஒரு சாய் பாபா பக்தராம். தினமும் அவரது பாடவேளைக்கு முன்னர் பாபாவை மனதில் தியானம் செய்யவேண்டும் என்பது அவரின் ஆசானின் கட்டளை. எனவே அன்றும் இடைவேளைக்கு முதல் பாடவேளை அவருடையதாம். எனவே அனைவரும் தியானம் செய்வதற்காக கண்ணை மூட (ஆசிரியர் உட்பட) இவரைத்தவிர அனைத்து மாணவர்களும் ஓடிவிட்டார்களாம். அன்று முதல் தனது பாசத்துக்குரிய சீடனாக இவரை ஆக்கிக்கொண்டாராம் அந்த ஆசிரியர். அதன் பின்னர் சாய்பாபா பஜனைக்கு வா, அங்கே அந்த பூசை நடக்கிறது வா என்று சரியான தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தாராம் ஆசிரியர். இவரும் சரியென்று போக இவருக்கு அவரது பாடத்தில் புள்ளிகள் உயர்ந்து கொண்டே சென்றதாம்.


அதன் பிறகு O/L பரீட்சைகள் நெருங்கும் சமயத்தில்கூட பிரத்தியேக வகுப்புகளுக்கு போக விடாமல் அவர் பஜனை, பூசை என்று இவரை அழைத்திருக்கிறார். பொறுத்துப் பொறுத்து களைத்துப்போன இவரது பெற்றோர்கள் பாடசாலை அதிபரிடம் இது பற்றி முறையிட்ட பின்னர் அந்தப்பிரச்சினை குறைந்தாலும் அதன் பின்னர் அவரின் பாடத்தில் அந்த நண்பருக்கு 40ஐத் தாண்டவில்லையாம்.


*************************************************


எல்லா இடத்திலயும் தேடிட்டேன் கிடைக்கவேயில்ல


சமீபகாலமாக இலங்கையின் பல பதிவர்கள் எழுதுவது தடாலடியாகக் குறைந்து விட்டது. ஒரு சில பதிவர்களை அவ்வப்போது பதிவிட்டுக்கொண்டிருந்தாலும், பழைய போர்மில் யாரையும் காணமுடியவில்லை. அண்மையில் யோ அண்ணா குறிப்பிட்டது போல பதிவர் சந்திப்பு நடப்பதற்கு முதலும் அதற்குப்பிறகும்தான் பதிவர்களின் பதிவுகளை அடிக்கடி காணமுடிகிறது. எனவே இந்த வருடத்தில் உத்தியோக பூர்வ சந்திப்புகள் ஒன்று கூட இதுவரை நடைபெறாத நிலையில் காணாமல் போன பதிவர்களை கண்டுபிடிக்க நாம் ஏன் மீண்டும் சந்திக்கக்கூடாது?


*************************************************
யாரந்தத் திருடன்

அண்மைக்காலமாக யாரோ ஒருவர் வலைப்பதிவர்களை அதுவும் இலங்கை வலைப்பதிவர்களின் ஈ-மெயில், மூஞ்சிப்புத்தகம் என அனைத்துயும் ஹக் பண்ணிவருகின்றார். அவர் என்ன நோக்கோடு இதைச் செய்கிறார் என்று தெரியவில்லை. அண்மையில் ஆடுகளம் என்ற பெயரில் தனது வலைப்பூவை இயக்கிவந்த அனுதினனின் இரண்டு வலைப்பூக்கள், நேற்று யோ வொய்ஸ் யோகா அண்ணாவினுடையது. நாளை யாரோ? இதற்கு யாராவது ஒரு தீர்வை பெற்றுக் கொடுத்தால் சிறந்தது என்று நம்புகிறேன்.

*************************************************
வயசு கூட.. வயசு குறைய..

தற்போது T20 உலகக்கிண்ண காலம். IPLலில் இருந்து தொடர்ந்து நடைபெறும் T20 போட்டிகள் சலிப்பை ஏற்படுத்தியிருந்தாலும். ஒரு சுவாரஸ்யமான விடயம் இம்முறை T20யில் விளையாடும் வயது மூத்த வீரர் இலங்கையின் முன்னாள் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூர்ய 40 வருடங்கள் 274 நாட்களைப் பூர்த்தி செய்திருக்கிறார். இவருக்கு பெரிதாக போட்யில்லாத நிலையில். வயது குறைந்த வீரர்கள் இருவர் காணப்படுகிறார்கள். ஒருவர் பாகிஸ்தானின் மொஹமட் அமீர்(18 வருடங்கள் 5 நாட்கள்), மற்றையவர் ஆஃப்கானிஸ்தானின் மொஹமட் சஹ்சாட்(18 வருடங்கள் 260 நாட்கள்), ஆனால் நாட்கள் அடிப்படையில் மொஹமம் அமீர் இந்த போட்டித்தொடரின் வயது குறைந்த வீரராகக் காணப்படுகிறார். 

போட்டோ கமண்ட்ஸ்






COPY, PASTE


எனது நீதிமன்றத்தில் நித்தியானந்தா மற்றும் மரத்தைத் தாண்டி வருவாயா ஆகிய பதிவுகளை மூஞ்சிப்புத்தகம் (ஒரு நண்பர் மட்டும் தனது குழுமத்தில் போட அனுமதி கேட்டார்), தங்களது சொந்த வலைப்பூ என அனைத்து இடங்களிலும் COPY PASTE செய்து பிரபலப்படுத்தியமைக்கு நன்றி. நானும் நல்லா எழுதிறேன் என்று முதன்முறையாக எனக்கு உணர்த்திய உங்களுக்கு மிக்க நன்றி.:p


ஆரம்பத்தில் இந்தவிடயம் மனதுக்கு கோபத்தை உண்டுபண்ணினாலும் நாம எழுதிறதும் நல்லா இருக்குப்போல அதுதானே COPY PASTE பதிவு போடுறாங்க என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். சும்மா சொல்லக்கூடாது நல்லாவே COPY அடிக்கிறாங்க தலைப்பைக்கூட மாத்தாம அதுவும் GOOGLEல போய் தலைப்பைக் கொடுத்து SEARCH பண்ணினா COPY அடிக்கப்பட்ட பதிவுகள் 4 பக்கத்துக்கு வருகிறது. இன்றிலிருந்து நானும் பெருமையாகச் சொல்லிக்கொள்வேன் நானும் ரைளடிதான்.
******************************************************
இனிய சந்திப்பு
மொக்கை போட்டவர்கள்..:p


அன்று மாலை காலிமுகத்திடலில் பதிவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியளித்தது. கடந்த பல சந்திப்புகளில் கலந்துகொள்ள முடியாமலிருந்த எனது ஏக்கம் பூர்த்தியாக்கப்பட்டது. இனியதொரு சந்திப்பாக அமைந்தது. ப்ப்பிளீஸ் புல்லட் அண்ணா, சின்ன வந்தி கோபி, ஓஃப்லைன் அச்சு அண்ணா, ஏழுமணி சதீஸ் அண்ணா, காமப்பதிவர் வரோ, மது அண்ணா, ஆதிரை அண்ணா, லோசன் அண்ணா பெட்டி சுபா அண்ணா ஆகியோருடன் மொக்கை போட்டபடி இனிய மாலைப்பொழுதாக அமைந்தது.
******************************************************


ஏன் திருத்தமுடியாது
அம்மா பகவான் அழுக்கைக்கழுவும் பேஸ்புக் குழுமத்துக்கு நன்றி
அண்மையில் மூஞ்சிப்புத்தகத்தில் ஒரு நண்பர் அம்மா பகவானின் படத்தை ஒரு நடிகை போல EDIT பண்ணிப்போட்டிருந்தார். அதற்குள் நாங்கள் எதிர்பார்த்தபடி ஒரு அம்மா பகவான் பக்தர் வந்து சராயச்சாமிக்கு சார்பாக கருத்துரைகளை வழங்கிக்கொண்டிருந்தார். நாங்கள் எவ்வளவு எடுத்துக்கூறியும் இல்லை என்று பிடிவாதமாக இருந்தார்.

இவர் ஒருவரை நாம் ஒரு நான்கைந்து பேர் சேர்ந்தே திருத்தமுடியவில்லை பிறகு எப்படி லட்சக்கணக்கான பக்தர்களைத்திருத்துவது. இதுதவிர இதுபற்றி கலந்துரையாடிய போது நண்பரொருவர் கூறியது கல்கி பகவானும் பக்கா பிசினஸ்மான்தானாம் இப்படி அனைவருக்கும் பாதம் அசையுது, பகவான் தெரியுது என்று மட்டும் பித்தலாட்டம் செய்யாமல் அவர்களுக்கு அம்மா பகவான் டீ-சேட் கான்ராக்ட், வித்யா மாலை கொன்ராக்ட் என கொடுத்திருப்பிறாராம். பிறகு அவர்கள் எப்படி பகவானை எதிர்ப்பார்கள்.

இதிலிருந்து பார்க்கும் போது ஒன்று மட்டும் தெரிகிறது. மனிதாபிமானம் செத்துவிட்ட சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தனது தொழிலுக்காக கஞ்சா சாமியாருக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் இருக்கும்வரை போதைக்கு அடிமையாகி சீரழியும் மக்களை காப்பாற்றமுடியாது.

******************************************************
பக்தி,சிறுவன், அங்கப்பிரதட்சணம்

திருகோணமலையில் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. வழக்கமாக இக்காலகட்டத்தில் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்வார்கள், ஆனால் பக்தி என்ற பெயரில் 6 வயதுச் சிறுவன் ஒருவனை அழஅழ போட்டு உருட்டிக்கொண்டிருந்தார் ஒரு தாயார். என்னதான் பக்தியாக இருந்தாலும் ஒரு 6 வயதுச்சிறுவனைப் அங்கப்பிரதட்சணம் செய்விப்பது. தப்புத்தானே??
உங்கள் குழந்தைக்காக என்றால் நீங்களே செய்யலாம்தானே எதற்கு அந்தக் குழந்தையைப் போட்டு வதைக்கிறீர்கள்.

******************************************************
சுறா 

நேற்று சுறா பாடல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. பாடல்களை வைத்துப்பார்த்தால் வழக்கம்போல விஜயின் அதிரடி பஞ்ச்சுடன்தான் இந்தப்படமும் வெளிவரும் போல இருக்கிறது, விண்ணைத்தாண்டி வருவாயா இசையைக் கேட்டுப்பழகிவிட்டு இப்போது இந்தப்பாடலைக் கேட்டால் சிரிப்புத்தான் வருகிறது. அதுவும் சுறா பாடல் வரிகள், அதுவும் அந்தக்காதல் பாட்டு சான்சே இல்ல..:p, அதுகாதல்ப்பாட்டுத்தான் என்று கண்டுபிடிக்க பாட்டைநான்குதரம் கேட்க வேண்டுமென்றால் பாருங்களேன்

******************************************************

மறதி - குட்டிக்கதை
ஒரு 65 வயது மூதாட்டிக்கு அனைத்து புதிய தொழிநுட்பங்களையும் பயன்படுத்தி வைத்தியர்கள் ஆராய்ச்சி செய்து குழந்தை ஒன்றைப்பிறக்கச்செய்தனர். சிலநாட்களில் அவரும் தனது குழந்தையுடன் வீடு திரும்பினார்.


அவரின் குழந்தையை பார்க்க சில விருந்தாளிகள் வந்திருந்தனர். உடன அவர்களை வரவேற்று உபசரித்தார், சிறிது நேரத்தில்விருந்தாளிகள் "நாங்கள் குழந்தையைப்பார்க்கலாமா?
"இல்லை, தேனீர் இருந்திவிட்டுப்பார்க்கலாம் என்று அனைவருக்கும் தேனீர் கொடுத்தார். தேனீர் குடித்து முடித்த பின்னர் மீண்டும் விருந்தாளிகள் "நாங்கள் குழந்தையைப்பார்க்கலாமா?
இல்லை சிற்றுண்டி உண்ணுங்கள் பிறகு பார்க்கலாம், என்றார். சரியென சிற்றுண்டி உண்டுவிட்டு கொஞ்ச நேரத்தில் அவர்கள் மீண்டும் "நாங்கள் குழந்தையைப்பார்க்கலாமா?
மீண்டும் மூதாட்டியும் இல்லை கொஞ்சம் கொறுங்கள் பார்க்கலாம் என்றார்.


ஏன் உங்கள் குழந்தையை நாங்கள் பார்க்கக்கூடாதா? அதன் வளர்ச்சி அவ்வளவு முக்கியமா? நாங்கள் பார்த்தால் அது வளராதா? என்று சற்று கோபத்துடன் கேட்க, இல்லை குழந்தையை நீங்கள் பார்க்க வேண்டுமானால் அது அழவேண்டும் என்றார்.


உங்களை மாதிரியே விருந்தாளிகளும் குழப்பத்துடன் பார்க்க..


குழந்தையை எங்கேயோ வைத்துவிட்டேன், அது அழுதால்தான் கண்டு பிடிக்கலாம் என்றார்.


*********************************************

IPLலும் இலங்கை வீரர்களும்


3வது IPL போட்டிகள் ஆரம்பமாகியிருக்கின்றன. என்னைப்பொறுத்தவரை போட்டிகள் மிகுந்த விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நான் டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு ஆதரவளித்து வருகிறேன். ஆனால் இலங்கை வீரர்கள் பிரகாசித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதிலும் இலங்கையின் சகலதுறை வீரர் அஞ்சலோ மத்தியுஸ், பந்துவீச்சாளர்கள் மலிங்க மற்றும் சமிந்த வாஸ் ஆகியோர் அபாரமாக பந்து வீசி வருகின்றனர்.


நேற்றைய சென்னையுடனான போட்டியின் வெற்றிக்கு முதல் மூன்று ஓவர்களிலேயே மூன்று விக்கட்டுகளைச்சாய்த்து சமிந்தவாஸ் டெக்கன் சார்ஜசின் வெற்றிக்கு வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கது.


தவிர முரளிதரனும் சிறப்பாக பந்து வீசினார். ஆனால் இலங்கை அணியில் மத்தியூசைத் தவிர மற்ற ஒருவரும் அண்மைய போட்டிகளில் இலங்கை சார்பில் பங்குபற்றாமை குறிப்பிடத்தக்கது. இனியாவது இலங்கை கிறிக்கற் இவர்கள் பக்கம் பார்வையைத் திருப்புமா? பார்க்கலாம்.



*********************************************



விண்ணைத்தாண்டி வருவாயா



மூன்று முறை பார்த்துவிட்டேன். A.R.ரஹ்மானை எப்பிடிப்பாராட்டுறதோ தெரியவில்லை. அப்பப்பா என்ன ஒரு இசை, படத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு சின்னச்சின்ன விடயங்களையும் ஆராய்ந்து இசையமைத்திருக்கிறார்கள்.

உண்மையில் இதை தியட்டரில் DTSசுடன் பார்க்காதவர்கள் வாழ்க்கையின் பாதியை இழந்துவிட்டார்கள் என்றுதான் செல்லுவேன். அதுதவிர பக்கா காதல் கதை. படமாக்கப்பட்ட விதம், சலிப்புத்தட்டாத கதையோட்டம், அடிக்கடி பேசப்படும் ஆங்கில வார்த்தை என அனைத்தும் அற்புதம். இடைவேளை விடாமல் படத்தை போட்டிருக்கலாம். அடுத்தகெளதம் மேனன் படத்துக்கு நான் முதல் SHOWக்கு போவதென்று முடிவுபண்ணிவிட்டேன்

சிம்புவைக்கு அடுத்து எனக்கு படத்தில் பிடித்த கதாபாத்திரம் காக்க காக்க காமராமேன் என்று சிம்புவுன் கூடவே வரும் கணேஷ். தலைவர் சிரிக்காம சாதாரணமா கதைச்சாலே சிரிப்புத்தான் வருகிறது. அதுவும் அவர் "உஸ்ஸ்...." என்று விடும் பெருமூச்சைப்பார்த்து சிரிச்சு சிரிச்சு வயிற்றுவலி வந்ததுதான் மிச்சம்.

இன்னும் எத்தனை தடவையும் படத்தைப்பார்க்க நான் தயார், யாராவது போகிறீர்களா? போனா சொல்லுங்க அடியேனும் வருகிறேன்.



*********************************************
சாமியார் சிரிப்பு சாமியார்


அண்மையில் வெளியான சர்ச்சைக்குரிய வீடியோவையடுத்து ஆசாமி நித்தியானந்தா தலைமறைவாகி இருப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அண்மையில் அவரின் சீடர்களால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் ஆசாமி நித்தியின் வலதுகை பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு "I CAN'T SPECULATE ANYTHING" என்று கூறிக்கொண்டிருந்தார். பிறகு ஏன் அவர்கள் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தினார்களோ. 45 நிமிட நேரம்தான் மாநாடு என்று கூறியவர்கள், மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை தெரிவித்துக்கொண்டிருந்தமையும், வீடியோ போடுகிறேன் என்று கூறி 5 நிமிடங்களை வீணடித்து கடைசிவரை வீடியோ போடாமல் விட்டும் அவர்கள் தாங்கள் நல்லவர்கள் என காட்டிக்கொள்ள முயற்சியெடுத்தததும் 45 நிமிடம் முடிய ஆள விடுங்கடா சாமி என்று எஸ்கேப் ஆகியதும் சிரிப்பை வரவழைத்தது.


இதுதான் இப்படியென்றால் நேற்று ஆசாமி நித்தியானந்தா தான் ரஞ்சிதாவுடன் வெளியான வீடியோவில் பாலியல் தொடர்பாக ஆராய்ச்சி செய்தாராம். ஐயோ இது உலக நடிப்புடா சாமி...





*********************************************
NO COMMENTS



மின்சார சபையும் தொழிநுட்ப முன்னேற்றமும்
நாங்கள் புதிய வீட்டுக்கு மாறி ஒருமாதம்தான் ஆகிறது. ஆனால் மாறிய முதல் தினமே வீட்டுக்காரர் அந்த வீட்டில் அதுவரை கட்டாமல் இருந்த மின்சார பில்லை கட்டி பில்லைக்கூட எங்களிடம் தந்திருந்தார். எனவே நாங்கள் வீடு மாறிய அந்த தினமே மின்சார சேவை வீட்டுக்கு வழங்கப்பட்டது.


மீண்டும் நேற்றைய தினம் திடீரென கரண்ட் போகவே ஏதோ திருத்துகிறார்கள் என்று நாங்கள் நினைத்திருக்க, வீட்டுக்கதவைத் தட்டிய மினடசார சபை ஊழியர். எங்கள் வீட்டு முகவரியை சரி பார்த்துவிட்டு உங்கள் முகவரியில் மின்சார பில் கட்டவில்லை என்பதால் மின் இணைப்பை துண்டித்து விட்டோம் என்றார். நாங்கள் எவ்வளவோ கூறியும் கேட்காத அந்த மனிதர் வீட்டுகாரரை எமது எஞ்ஜினியருடன் வந்து கதைக்க சொல்லுங்கள் என்றார்.


மின் துண்டிப்பவர் ஒருவர், மின் இணைப்பு வழங்குபவர் என்று இருப்பது வேலைப்பகிர்வுதான், ஆனால் இந்த இரண்டு பேருக்கும் ஒரு தொடாடபாடல் வசதிகூட இல்லையா அதுவும் ஒருமாதத்துக்குப்பிறகு.


****************************************************************************************


சரித்திரத்தின் சாதனை
நேற்றைய தினம் கிறிக்கற் போட்டி பார்க்காதவர்கள் கூட பார்த்திருப்பார்கள், அப்படி ஒரு ஆட்டம், நிதானம், பொறுமை, அதேவேளை அதிரடி, என்ன ஒரு ஆட்டம். நேறடறைய ஆட்டத்தின் அந்த 200வது ஓட்டத்தைக்கடந்த கணம் இன்னமும் கண்முன்னால் நிற்கிறது.


அதுமட்டுமின்றி, ஒருநாள் போட்டிகளில் தனிமனிதன் ஒருவர் பெற்ற அதிகஓட்டம், ஒரு மனிதன் பெற்ற அதிக பவுண்டரி(25) எனப்பலசாதனைகளை தன்வசப்படுத்தினார் சச்சின். இன்னும் ஒரு பதினாறு வயது ஒரு இளைஞன் போல விளையாடும் சச்சின் இன்னும்பத்து வருடங்கள் விளையாடினால் முன்னூறு அடித்தாலும் அடிப்பார். சரித்திரவீரர் சச்சினுக்கு தலைவணங்குகிறேன்.



****************************************************************************************


ஆங்கிலப்படம்
நேற்று முன்தினம் NATIONAL TREASURE BOOK OF SECRETS பார்த்தேன், ஏற்கனவே ஒரு முறை ஆரம்பம் மட்டும் பார்த்திருந்தேன், ஆனால் படத்தின் பெயரை மறந்து விட்டதால் கஷ்டப்பட்டு பெயரைக் கண்டு பிடி்த்துப்பார்த்தேன். என்ன ஒரு படம். தமிழ்ப்படங்கள் பக்கத்தில் நிற்க முடியாது.


தேசியபொக்கிஷங்களை தனக்குக் கிடைக்கும் தடயங்களை வைத்து அவற்றைக் கண்டுபிடித்து அது எதிரிகள் கையில் கிடைப்பதைத் தடுப்பதுதான் கதை.கச்சிதமாக படமாகடகியிருக்கிறார்கள். இடையிடையே புன்னகைக்க வைக்கும் நகைச்சுவைகளும் வந்து போகின்றன.மொத்தத்தில் படம் கலக்கல்.


தமிழில் வழக்கமான காதல், கத்தரிக்காய் என்று படக்கதைகளை அதைச்சுற்றிச் சுற்றி எடுக்காமல் சற்று வித்தியாசமான இவ்வாறான படங்களையும் எடுத்தால் நல்லாயிருக்கும்.


****************************************************************************************
கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா அண்ணாவுக்கு அஞ்சலி

இலங்கையின் கலையுலகை தூக்கி நிறுத்திய கலைஞர்
  ஸ்ரீதர் அண்ணாவின் இழப்பு இலங்கை கலையுலகால் ஈடு செய்யமுடியாதது. தனக்குள் இசை, நடிப்பு போன்ற பல கலைகளை கொண்ட கலைஞர். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

*************************************************************************
அஜித்=மனிதன்

அஜித் கலைரின் விழாவில் பேசிய பேச்சுக்குப்பிறகு ஜகுவார்தங்கம் அஜித் மீது பாய்ந்ததும், அஜித் இனி நடிக்கமுடியாது என்று செய்திகள் பரவியதும், அனைவரும் அறிந்ததே. இதற்கிடையில் அஜித் தமிழனா என்று கேட்டிருக்கிறார்களாம். இனி தான் இந்த விடயத்தில் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்போவதில்லை, மீண்டும் மீண்டும்கதைத்தால்தானே விடயம் பூதாகாரமாகும் எனவே தான் இது பற்றிக் கதைக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளார் அஜித். மீண்டும் தலைவணங்குகிறேன் அஜித் வாழ்க.

*************************************************************************

NO COMMENTS

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்