கடந்தமுறை யாழ் போயிருந்தபோது ஒரு சுவாரஸ்யமான மனிதரை சந்தித்தேன். சந்தித்த நேரம் தொலைக்காட்சியில் நித்தியானந்தா சுவாமியின் கமராமேன் லெனினின் பேட்டி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. உடனே அவர் தானும் இந்த சாமியாரால் இல்லை இல்லை சாமியாரின் ஒரு தீவிர பக்தரால் தானும் பாதிக்கப்பட்டதாக சொன்னார். அட என்ன என்று அவரின் பக்கம் திரும்பி உட்கார்ந்தோம்.
தான் 10 ஆம் தரத்தில் படித்துக் கொண்டிருந்த சமயம் தான் படித்த ஆசிரியர் ஒரு சாய் பாபா பக்தராம். தினமும் அவரது பாடவேளைக்கு முன்னர் பாபாவை மனதில் தியானம் செய்யவேண்டும் என்பது அவரின் ஆசானின் கட்டளை. எனவே அன்றும் இடைவேளைக்கு முதல் பாடவேளை அவருடையதாம். எனவே அனைவரும் தியானம் செய்வதற்காக கண்ணை மூட (ஆசிரியர் உட்பட) இவரைத்தவிர அனைத்து மாணவர்களும் ஓடிவிட்டார்களாம். அன்று முதல் தனது பாசத்துக்குரிய சீடனாக இவரை ஆக்கிக்கொண்டாராம் அந்த ஆசிரியர். அதன் பின்னர் சாய்பாபா பஜனைக்கு வா, அங்கே அந்த பூசை நடக்கிறது வா என்று சரியான தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தாராம் ஆசிரியர். இவரும் சரியென்று போக இவருக்கு அவரது பாடத்தில் புள்ளிகள் உயர்ந்து கொண்டே சென்றதாம்.
அதன் பிறகு O/L பரீட்சைகள் நெருங்கும் சமயத்தில்கூட பிரத்தியேக வகுப்புகளுக்கு போக விடாமல் அவர் பஜனை, பூசை என்று இவரை அழைத்திருக்கிறார். பொறுத்துப் பொறுத்து களைத்துப்போன இவரது பெற்றோர்கள் பாடசாலை அதிபரிடம் இது பற்றி முறையிட்ட பின்னர் அந்தப்பிரச்சினை குறைந்தாலும் அதன் பின்னர் அவரின் பாடத்தில் அந்த நண்பருக்கு 40ஐத் தாண்டவில்லையாம்.
எல்லா இடத்திலயும் தேடிட்டேன் கிடைக்கவேயில்ல
சமீபகாலமாக இலங்கையின் பல பதிவர்கள் எழுதுவது தடாலடியாகக் குறைந்து விட்டது. ஒரு சில பதிவர்களை அவ்வப்போது பதிவிட்டுக்கொண்டிருந்தாலும், பழைய போர்மில் யாரையும் காணமுடியவில்லை. அண்மையில் யோ அண்ணா குறிப்பிட்டது போல பதிவர் சந்திப்பு நடப்பதற்கு முதலும் அதற்குப்பிறகும்தான் பதிவர்களின் பதிவுகளை அடிக்கடி காணமுடிகிறது. எனவே இந்த வருடத்தில் உத்தியோக பூர்வ சந்திப்புகள் ஒன்று கூட இதுவரை நடைபெறாத நிலையில் காணாமல் போன பதிவர்களை கண்டுபிடிக்க நாம் ஏன் மீண்டும் சந்திக்கக்கூடாது?
சாய்பாபா -
எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாங்களே... அவ்வ்வ்...
முடியல பவன் நம்மட ஆக்களின்ர தொல்லைகள்.
பதிவர்கள் -
எல்லாமே எந்த நேரத்திலும் முழுமையாக இருக்காது.
ஓர் தொய்வு ஏற்பட்டு பின்னர் அந்தத் தொய்வான சூழ்நிலையே உச்சத்திற்குக் கொண்டுசெல்லும்.
உதாரணத்திற்கு பல கிறிக்கற் வீரர்கள் ஒழுங்காக விளையாடாததால் அணியிலிருந்து நீக்கப்பட்டு அதன்பின்னர் அந்த நீக்கமே அவர்களுக்கு பெரிதாக உதவியாக அமைந்தது வரலாறு.
உ+ம்: சமரவீர, டில்ஷான், செவாக்
ஆகவே பதிவர்களும் இனி கலக்கலாக மீண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்.
ஹக்கிங் இற்கு ஒன்றும் செய்ய முடியாது என்று நம்புகிறேன்.
நாம் கவனமாக இருப்பது தான் சிறப்பான, இலகுவான் வழி.
சனத்:
ஹி ஹி...
முன்கதவால வீட்டுக்குள்ள போ எண்டு சும்மாவா சொல்லுறது? ;)
படக் கேலிகள் அருமை, வழமையைப் போலவே.
வாழ்த்துக்கள் பவன்...