சென்றமுறை சதீஸ் அண்ணா தனது சினிமாத்தாகத்துக்கு தீனிபோடும் விதமாக திரையுலக கலைஞர்களுக்கு விருது வழங்கும்முயற்சியில் ஈடுபட்டு அது அனைவரதும் நல்லாதரவைப்பெற்றதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இம்முறை ஒரு குழுவாக செயற்பட்டு நாம் இம்முறையும் திரையுலகுக்கு விருது வழங்கும் விழாவை சிறப்பாக நடாத்த எண்ணியே இப்பதிவு சதீஸ் அண்ணாவின் கில்லி ஸ்டைலில்......
வணக்கம் மக்கள்ஸ்,
மீண்டும் ஒரு தடவை ஒரு பிரமாண்டமான அறிவிப்புடன் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. கடந்த வருடம் என்(SSHATHIESH in பார்வை) வலைப்பூவில் தனியாக சினிமா கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக உங்கள் வாக்குகள் மூலம் அபிமானம் பெற்றவர்களை தெரிவு செய்து மகிழ்ந்தேன். நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து தங்கள் அபிமானிகளை தெரிவு செய்தனர். அதன் பின் அண்மையில் தான் அதை தமிலிஷில் பிரசுரிக்க உங்கள் அமோக ஆதரவுடன் பிரபல இடுகையாகியது. விளையாட்டாக நான் ஆரம்பித்த ஒரு விடயம் உங்கள் பலரின் அபிமானம் பெற இம்முறை அதை கொஞ்சம் விரிவாக்கி சிலர் சேர்ந்து செய்யலாமா என்ற எண்ணம் தோன்றவே சில பதிவர்களுடன் இதை கலந்துரையாடினேன்.
இங்கே எங்கள் குழுவில் சேராது வெளியில் இருந்து ஆதரவு தர சில பதிவர்கள் தயாராக இருக்கும் நிலையில் ஒரு சில திரட்டிகளும் இதற்கு நல்ல சமிக்கை காட்டியுள்ளன. எனவே திரட்டிகளின் பங்கும் இங்கே மிகப்பெரிய பங்காக இருக்கும் என நம்புகின்றோம். எனவே அவர்களுக்கும் இந்த இடத்தில் நன்றியை தெரிவிப்பதோடு சக பதிவர்கள், வாசகர்கள் எல்லோரிடமும் இதற்கு ஆதரவு கேட்கின்றோம். பதிவுலகம் இன்று மிகப்பெரிய சக்தியாக மாறி உள்ளது. பல நிறுவனங்கள்,அமைப்புக்கள் திரை உலகிற்கு விருது வழங்கி வரும் நிலையில் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பதிவுலகில் வரும் காலத்தில் பிரமாண்ட விழாக்களுடன் இந்த விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை. எனவே பூனைக்கு மணியைக் கட்டுவது யார்? நாங்கள் கட்டி இருக்கின்றோம்.
இந்த விருதுகளை நாம் வழங்க யார் என கேட்கலாம். சாதாரண ரசிகர்கள் தான் நாங்கள். ஆனால் பதிவர்கள் என்னும் மிகப்பெரிய சக்திகள். இது ஒரு குறிபிட்ட பிரதேசத்துக்கோ அல்லது குறிப்பிட்ட நாட்டுக்கோ அல்லது கண்டத்துக்கோ உரியதல்ல. நம் பதிவர்கள் எல்லோரும் இதன் பங்காளிகள். எனவே எங்களுக்குள் போட்டியாளர்களுக்காக தெரிவுகளுக்கான விவாதம்(நலன் விரும்பிகளும் பங்கு பெறுகின்றனர்) நடை பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் நீங்களும் எங்களுடன் தாராளமாக கை கோர்க்கலாம். இடம் காலம் மறந்து பதிவர்கள் என்ற ஒரு குடையின் கீழ ஒன்றாவோம். சாதிப்போம்.
எனவே நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில் கலந்து எமது திரையுலகக் கலைஞர்களுக்கு உங்கள் வாக்குகளை போட்டு சிறந்த தெரிவுக்கு வித்திடுவீர்களாக...
வாக்குக் குத்த ரெடியா??
என்னத்தைக் கிளப்புறது? என்னத்தைக் குத்துறது? பதிவைப் படிச்சப்புறம் தான் எல்லாமே புரியுது?