Related Posts with Thumbnails

மு.கு - இணையத்தில் படித்த கதை ஒன்றின் தமிழ் வடிவம், நல்ல கருத்துள்ள கதை என்பதால் பகிர்கிறேன். கதையின் சுட்டியைப்பகிர்ந்த கன்கொனுக்கு நன்றிகள்

ஒருநாள் புத்தர் தனது சீடர்களுடன் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பயணித்துக்கொண்டிருந்தார். வழியில் ஒரு ஆற்றைக்கடக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. நீண்ட தூரம் நடந்து களைத்துப் போயிருந்த புத்தரும் சீடர்களும் ஆற்றங்கரையில் அமர்ந்தனர். புத்தர் தனக்கு தாகமாக இருப்பதாகவும் ஆற்றில் தண்ணீர் எடுத்துவரும்படியும் ஒரு சீடரைப்பணித்தார்.

உடனே ஆற்றைநோக்கிவிரைந்த சீடர் தண்ணீர் எடுக்க முயற்சித்த தருணத்தில்தான் கவனித்தார், ஒரு எருமை மாட்டு வண்டி ஆற்றைக்கடந்துகொண்டிருந்தது. அதன் விளைவாக ஆற்று நீர் கலங்கி அழுக்காகிப்போயிருந்தது. அந்த அழுக்கு நீரை எப்படி குருவுக்கு எடுத்துச்செல்வது என்று யோசித்த சீடர் மீண்டும் புத்தரிடம் வந்து அந்த நீர் குடிப்பதற்கு உகந்தல்ல அழுக்காக இருக்கிறது என்றார்.

மீண்டும் அரைமணிநேரத்தில் அதே சீடரை தண்ணீர் எடுத்துவரும்படி பணித்தார் புத்தர். மீண்டும் ஆற்றைநோக்கி விரைந்தார் சீடர் ஆனால் ஆறு அப்போதும் அழுக்காகத்தான் இருந்தது. மீண்டும் புத்தரிடம் திரும்பிவந்த சீடர் ஆறு இன்னும் கலங்கலாகத்தான் இருக்கிறது என்றார்.

இன்னும் அரை மணிநேரம் கழித்துச் மீண்டும் அதே சீடனை அனுப்பினார் புத்தர். இந்தத்தடவை தண்ணீர் தெளிவாக இருந்தது. சீடன் தண்ணீரை எடுத்துக்கொண்டு புத்தரிடம் திரும்பினார்.

புத்தர் சொன்னார் இது போலதான் உங்கள் மனமும். உங்கள் மனமானது குழப்பத்திலிருக்கும் போது அதை அதன் போக்கிலேயே விடுங்கள், சிறிது நேரம் பொறுமையாக இருங்கள், மனதை அமைதிப்படுத்த எந்த ஒரு விடயத்தையும் கஷ்டப்பட்டு செய்ய வேண்டியதில்லை. அதுதானாக அமைதியடையும்.

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. :)))

    நல்ல கதை....
    என்னைப் போன்றவர்களால் இதைக் கடைப்பிடிக்க முடியுமோ தெரியவில்லை...

    பகிர்விற்கு நன்றி பவன்....

  1. movithan Says:

    புத்தர் பகவான் எல்லாம் அழகாத்தான் சொன்னார், ஆனால் .....

  1. நோ சீரியஸ் ரிலாக்ஸ் பிளீஸ்

  1. அப்பிடியா சேதி சிலவேளை மனசு நல்லா குழம்பிட்டுது எண்டால் தண்ணிய மாதிரி இல்ல தெளியாது ... தெளிய வைக்க முடியாத படி குழம்பிரும் ..

  1. // Balavasakan said...

    அப்பிடியா சேதி சிலவேளை மனசு நல்லா குழம்பிட்டுது எண்டால் தண்ணிய மாதிரி இல்ல தெளியாது ... தெளிய வைக்க முடியாத படி குழம்பிரும் .. //

    ஆகக்கூட குழம்பினா தண்ணியில வெறுப்பு வந்திடும்... ;)

  1. அருமையான சிந்தனைகள் நிறைந்த விடயம். அட பவனின்ரை நகைச்சுவை பதிவுகளைப் போல தத்துவப் பதிவுகளையும் ரசிக்கலாம் போல இருக்கு.
    குழப்பம் தெளிவடைய தண்ணியடிக்கலாம் என்றும் சொல்லுகிறார்கள் உண்மையோ?

  1. பவன் இந்த கதை போல வாழ்வது கொஞ்சம் கஷ்டம்தான் முயற்சி செய்யலாம் என்று இருக்கிறேன்!

    //நல்ல பதிவு//

  1. அட அட அட.. நம்ப முடியலையே..
    நீ எப்படி எப்போ திருந்தினாய்??? :)

    நல்லா இருந்தது கதை..

  1. // அட அட அட.. நம்ப முடியலையே..
    நீ எப்படி எப்போ திருந்தினாய்??? :) //

    பசுவோடு திரியும் பன்றியும் புல் தின்னும்....

    ( நான் பசு, பவன் பன்றி :P )

  1. Bavan Says:

    கன்கொன்,

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    malgudi,

    ம்...

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ***

    சதீஸ் அண்ணா,

    ஹீஹீ.. ஓகே நோ சீரியஸ்..:P

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    பாலா அண்ணா,

    நீங்களும் ஏதோ தெளிவாக்குழப்பிறமாதிரிக்கிடக்கு... கொஞ்சம் லேட்டா பாப்பம், விளங்குதா என்று..:P

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    கமல் அண்ணா,

    ஆம் தண்ணி அடிக்ககூடாது குடிக்கலாம்..:P

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    அனுதினன்,

    நன்றி அண்ணா(:P) வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    லோசன் அண்ணா,

    ஹீஹீ... நான் மிகவும் நல்லவன்... (கன்கொனுடன் சேருவதில்லை)..:P

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

  1. Anonymous Says:

    nalla kathai

  1. Anonymous Says:

    good story

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்