Related Posts with Thumbnails
வைகைப்புயல் வடிவேலுவின் சிறப்பான நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் "சுறா" படத்தை இன்றுதான் பார்க்க நேரம் கிடைத்தது. ஆரம்பத்திலேயே கடலுக்குள்ளிருந்து கையைக்கூப்பிய படியே ஒருவர் வெளியே வருவதும், நாம் அவர் ஹீரோ வடிவேலுதான் என்று நினைத்துப்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் ஒருவரும் எதிர்பாராத விதமாக ஹீரோ வடிவேலுவின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜயை காட்டி புதிதாக ஒரு முயற்சியை எடுத்திருக்கும் இயக்குனரை எப்படிப்பாராட்டுவதென்று தெரியவில்லை. 

அதன் பின்னர் படகுப்போட்டிக்கு இல்லாத மீசையை முறுக்கியபடி கிளம்பும் வடிவேலுவை ஊரே சேர்ந்து வாழ்த்தி அழைத்துக்கொண்டு செல்வதும் அவர்களுக்கு வடிவேலு தனது மீன்பிடி வலையை விற்று ஆளுக்கு 50 ருபா கொடுப்பதும் அவரின் இரக்க குணத்தைப்பறைசாற்றும் காட்சிகளாக அமைந்துள்ளன. ஆனால் வழக்கமாக தனது படங்களில் மீசையை வரைந்து வரும் வடிவேலு இந்தப்படத்தில் கெட்டப் சேஞ்ச் பண்ணி மீசை வரையாமல் வருகிறார். அதன் பின்னர் நாய்க்குட்டி இறந்தமைக்காக தற்கொலை செய்ய கடலுக்கு வரும் தமன்னா மீது வடிவேலு காதல் கொள்வதும் ஆனால் தமன்னா விஜயைத்தான் காதலிக்கிறார் என்று தெரிந்து வடிவேலு தனது காதலை மனதுக்குள்ளேயே போட்டு பூட்டுப்போட்டுப் பூட்டி சாவியைக்கடலுக்குள் எறிந்திருப்பதும் தியாகத்துக்கு அச்சாணி போடும் காட்சிகளாக அமைந்திருக்கிறது. 

அடுத்ததாக தான் காதலித்த காதலி தன்னிடமே வந்து விஜயைத் தான் காதலிப்பாதாகவும் அதற்கு உதவுமாறும் கேட்டபோது, நட்புக்காக தனது UMBRELLA என்ற பெயருக்கு ஏற்றாற் போல் மனதைக் குடையாக விரித்து உதவுவது குறிப்பிடத்தக்கது. விஜய்க்காக ஏணி தூக்கிக் கொண்டு போவதும், அதன் பின்னர் அவரைத் தேடி வரும் ஒரு கொலைக் கைதிக்குகூட டீ(TEA), சிகரட் என எல்லாம் வாங்கிக்கொடுப்பதும் அவரது இளகிய மனதைக் காட்டுவதாக உள்ளன.

கடைசியில் தனது நண்பனைக்காப்பாற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் கஞ்சா கொண்டு போய் வைப்பது அவரது புத்திசாலித்தனத்தை பறைசாற்றியுள்ளது. ஆனால் தமிழ்சினிமா வரலாற்றிலேயே இப்படியான ஒரு படம் இனி வருமா என்பது சந்தேகம்தான், ஏனெனில் இந்தளவுக்கு நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தை இதுவரை நான் பார்த்ததே இல்லை. படத்தின் தலைப்பைக்கூட அம்பிரல்லா என்று வைக்காமல் சுறா என்று ஹீரோவின் நண்பர் கதாபாத்திரத்தின் பெயரைவைத்து அது நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்பதை காட்டியிருக்கிறார் இயக்குனர்.

அதுதவிர ஹீரோவுக்கு ஒரு பாட்டுக்கூட இல்லாமல் படம் எடுக்கப்பட்டிருப்பது, இன்னுமொரு வித்தியாசமான விடயம். அதுவும் அந்த துணை நடிகர் வரும் அந்த டூயட் பாட்டு கர்னாடக சங்கீதத்தையும், வெஸ்டேர்னையும் கலந்து அப்பிடியே கானாவுக்குள் தொட்டுத் தொட்டு வரும் இடங்கள் அற்புதம். ஒரு தடவை அந்த "நான் நடந்தால் அதிரடி" பாடலைக் கேட்டுத்தான் பாருங்களேன்.

சுறா = நட்பு +தியாகம்+புதுமை+இரக்கம்+அம்பிரல்லா +:P

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. Subankan Says:

    நான்தான் முதலாவது
    (கன்கொன் எனக்குப் பிறகுதான் :p

  1. Subankan Says:

    சுர்ர்ர்றா பாத்தாச்சா? ரைட்டு வுடு

  1. அவனா நீயு?

  1. // Subankan said...

    நான்தான் முதலாவது
    (கன்கொன் எனக்குப் பிறகுதான் :p //

    பரவாயில்ல... :(

  1. Anonymous Says:

    பவன், படத்தை பார்த்த போது புரியாத பல விடயங்களை ரொம்ப அற்புதமாக விளக்கும் வகையில் சொல்லியிருக்கிறாய்.
    வாழ்த்துக்கள்

  1. நான் சுறா பாத்திற்று வந்து சொல்லுறன்...

    (வருவன்டா... நம்புங்கடா... )

  1. Jhona Says:

    Vadivel Roockzzzzzzz

  1. STS Says:
    This comment has been removed by the author.
  1. STS Says:

    மற்றப் பதிவர்களும் Hero வை விட்டிட்டு துணை நடிகரை பற்றி comment அடிப்பதற்க்கு ஆழ்ந்த கண்டனங்கள் :P

  1. superuuuuuuuuuuuuu

  1. சூப்பர்!!!!!!!!!!!!
    மாத்தி யோசிச்சுட்டீங்களா? :-)

  1. Marana kalaai...!Super vaathyaare. :)

  1. Sukumar Says:

    வாவ்.. கலக்கல் பவன்.. வெகுவாக ரசித்தேன்..

  1. ஐயோ ....ஐயோ....ஐயோ.....முடியலை...முடியலை......முடியலை.....எப்படிப்பா...இப்படி எல்லாம் யோசிக்க தோணுது...இருந்தாலும் இது ரொம்ப ஓவரப்பா....நீங்க படத்தை எவ்வளவு ரசித்து பார்த்து எருப்பிங்கனு தெரியுது....இருந்தாலும் இந்த விமர்சனத்தை 'இளைய தளபதி', 'வருங்கால முதல்வர்', 'வருங்கால பிரதமர்', 'வருங்கால ஐநா ' பொது செயலாளர் 'விஜய்' அவர்கள் பார்க்க வேண்டும்....

  1. ஆனால் தமிழ்சினிமா வரலாற்றிலேயே இப்படியான ஒரு படம் இனி வருமா என்பது சந்தேகம்தான்//


    இப்ப யாழ்ப்பாணத்திலை விஜயின் சுறா கட் அவுட்டுக்குப் பாலுற்றூற்றிய ரசிகர்கள் தங்களைத் தேடி வருவதாக தகவல்:)))

    மற்றும் படி விமர்சனம் படு சூப்பரோ சூப்பர்.. ஆங்காங்கே சொந்தச் செலவில் சூனியம் வைத்து நொந்து போன அனுபவமும் தெரிகிறது.

  1. Anonymous Says:

    pooda puluthi

  1. Anonymous Says:

    i laughed out forgetting i'm in office, great thinking

  1. ha..haa.haa..

  1. வித்தியாசமான சிந்தனை! விஜயின் சுறா படம் இன்னும் எத்தனை கற்பனைகளை பதிவர்களிடம் இருந்து கொண்டு வரப்போகிறதோ? (நம்ம கடையவும் பாருங்க, விஜயோட பரபரப்புப் பேட்டி வந்திருக்கு)

  1. Bavan Says:

    சுபா அண்ணா,


    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    கன்கொன்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    NIRUSHAN,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    Jhona,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    கல்பனா,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    ரமேஷ்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    Deivasuganthi,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    Veliyoorkaran,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    Sukumar Swaminathan,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    பாலச்சந்தர்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    கமல் அண்ணா,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    Cable Sangar,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    பனங்காட்டான்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

  1. இதையே நான் தங்கத் தலைவி தமன்னா வ வச்சி எழுத நெனச்சு ட்ராப்ட் ல போட்டு விட்டுட்டேன்..நீங்க எழுதிடீங்க நல்லா இருந்தது

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்