Related Posts with Thumbnails
Showing posts with label வாழ்த்து. Show all posts
 
எம் இனிய உலகமே
இன்றுடன் முடிந்தது உன்
மாயன் கலண்டர் கலகமே!

கவியரங்க மேடையிலோ
நீதான் கனல் கண்ணன்
இன்று முதல் நீயோ
வடிவேலுவின் அண்ணன்

பஸ் வண்டி கார் வண்டி
நீயொரு புகை வண்டி
இன்று முதல் நீயோ
வெறும் காய்கறி மண்டி

கிரிக்கெட்டில் நீயோ
சிங்கிள் ரன் சிங்கக்குட்டி
எனதருமை அர்ஜீன ரணதுங்கவே!

பீப்பீ ஊதி பீப்பீ ஊதி
பட்டம் பெற்றாய் பீப்பீமாமா
அடுப்பு ஊதி அடுப்பு ஊதி
கற்றுக்கொள் போட காப்பி மாமா

பார்ட்டி என்று வந்துவிட்டால்
நீதான் அதி(ல்)விஷேடம்
நிரூஜாவைக் கரம் பிடித்தாய்
அதுதான் உனக்கு இனி விஷேடம்

அதிகாரமையமே
ஆட்டம் கண்டதுவே!
உன் இதயத்தில் புதிதாக
அம்பொன்று துளைத்ததுவே!

நேற்றுவரை உன் வாழ்க்கையிலே கவிதை இருந்தது
இன்று முதல் உன் வாழ்க்கையே கவிதையாகிறது!

வாழ்த்துக்கள் மாலவன் அண்ணா, நிரூஜா அண்ணி

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் பதிவர், அறிப்பாளர் மற்றும் விசயகாந், விக்கிரமாதித்தன் என்றெல்லாம் செல்லாமான அழைக்கப்படும் லோஷன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அவருக்காக அவரின் ரசிகர்கள்/ரசிகைகள் ருவிட்ரில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர்கள் சார்பில் எங்கள் விசயகாந் (எ) லோஷன் அண்ணனுக்காக சில பஞ்ச் டயலாக்குகளை வழங்கியிருக்கிறேன்..=P


 
#பஞ்ச் 001
வானத்தில போறது பிளைட்டு, அண்ணன் நமக்கு பார்ட்டி தரப்போறது இன்டியன் டிலைட்டு

#பஞ்ச் 002
சிம்பு நடிச்ச படம் குத்து, எங்க அண்ணன் எங்கள் சொத்து.. சொத்து சொத்து.. =P

#பஞ்ச் 003
கொலைவெறி பாடினது தனுசு, எங்க அண்ணன் கிட்ட வச்சுக்கிட்டா நீ பினிசு

#பஞ்ச் 004
TR வச்சிருக்கிறது தாடி, எங்க லோஷன் அண்ணன்கிட்ட மோதினா நீ டெட்பாடி =P

#பஞ்ச் 005
உங்கள் பெயரில் லோ(low) ஷன்(sun) இருப்பதாலதான் sun lowவாக இருக்கும்போது விடியல் நிகழ்ச்சி செய்யிறீங்களோ =P

#பஞ்ச் 006
சிக்சுக்கு அப்பறம் செவன்டா.. நம்ம லோஷன்ணணுக்கு அப்பறம் எவன்டா??

#பஞ்ச் 007
மண்ணெண்ணை விளக்கெண்ணை தேங்காண்ணை.. நம்ம லோஷண்ண பாத்தா நீ கோமாண்ணே =P

#பஞ்ச் 008
கேக்கிறவன் கேனயனா இருந்தா நம்ம லோஷன்ணன் சப்போர்ட் பண்ணி அந்த டீம் வின் பண்ணிச்சுன்னு சொல்லுவீங்களே =P

#பஞ்ச் 009
"இவரை சும்மா பாத்தா லோஷன், கோபமாப் பாத்தா எதிரிக்குப் போகும் லூஸ் மோஷன்" #பஞ்ச்

#பஞ்ச் 010
ஐ நம்புறவங்களுக்கு அவர் ஒரு நம்பிக்கை, அவரை எதிர்க்கிறவங்களுக்கு அவர் ஒரு எச்சரிக்கை =P #விசயகாந்த்_பஞ்ச்

 RT#பஞ்ச்
பவர் ஸ்டார் படத்தை ஓட்டினாதான் வெற்றி, ஆனா அண்ணன் வேலை செய்றதே வெற்றி

கிறிக்கட் அனலிஸ்ட், குட்டி கிறிக்கின்ஃபோ, பீப்பீ, தொழிநுட்பப்புலி என்றெல்லாம் பல பெயர்களுக்கு சொந்தக்காரர் தான் இந்த கோபிகிருஷ்ணா. ஆனால் அண்மைக்காலமாக இவரின் பீப்பீ என்ற பெயர் இவரின் நட்பு வட்டாரத்திற்கு பரலாக அனைவருக்கும் பிடித்துப்போனதுக்கு ஏதோ ஒரு சம்பவம் தான் காரணமாம். அதை நாமறியோம்.

இவருக்கும் உருவத்திற்கும் சம்பந்தமே இல்லாதவாறு நேற்றுவரை சொனி எரிக்ஷன் கையடக்கத் தொலைபேசி ஒன்றைப் பாவித்து வந்தவர். இன்றிலிருந்து சம்சாங் கலக்சி வை க்கு மாறியிருப்பதோடு மட்டுமல்லாது சந்திரனையும் இனித்தெளிவாகத் தூரத்திலிருந்தே ஜீம் பண்ணிப் படமெடுப்பேன்டா என்று மயக்கமென்ன கார்த்திக் சுவாமிநாதன் ரேஞ்சுக்கு பில்டப் குடுக்கிறாராம் எங்கள் பீப்பீ.

நகரத்து வாழ்க்கை பிடிக்காமல் போனதால் இவர் விரைவில் கரவெட்டியில் குடியேறப்போவதாகவும் லண்டனிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக ராமராஜன் படங்கள் அதிகம் பார்த்து அந்த ஸ்டைலிலேயே அதிகம் டி-சர்ட்டுகள் அணிந்து திரிகிறாராம். என்ன மாயமோ யார் செய்த காயமோ...

கிறிக்கட் இவரின் இரத்தத்திலேயே ஊறிப்போனது அனைவரும் அறிந்ததே. எனவே இவரின் பிறந்தநாளுக்காக இன்று நடைபெற விருக்கும் கிறிக்கட் போட்டியில் தனது 100வது சதத்தை பெற்றுக்கொள்வார் என்று இவரின் ரசிகர் சங்கத்தின் ஜெயமான நண்பர் கல்லில் கற்பூரம் ஏற்றி வேண்டிக் கொண்டாராம்.

முன்பெல்லாம் மிகவும் கூலாக அம்பி போல் இருந்தவர் இப்போது அந்நியனாக, ரெமோவாக எல்லாம் பல்வேறுபட்ட அவதாரங்கள் எடுக்கிறாராம். திரைப்படம் பார்ப்பதில் நாட்டமே இல்லாத பீப்பீ தற்போது அந்நியன் படத்தை மட்டும் அறுபது தடவைகளுக்கு மேல் பார்த்திருப்பது மட்டுமன்றி சதாசர்வ காலமும் அதைப்பற்றியே பேசித்திரிகிறாராம் என்று இவருடன் அடிக்கடி ருவிட்டரில் ஆங்கிலத்தில் பீட்டர் விடும் விக்கி நண்பர் தெரிவிக்கிறார்.

இத்தனை பெருமைகளும் புகழ்களும் நிறைந்த எங்கள் அருமைப் பீப்பீ, கறுப்புத்தங்கம் கன்கொன் (எ) கோபிகிருஷ்ணா என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறோம்.

பதிவுலக மாமா, சிரட்டை சிங்கம், சொந்த செலிவில் சூனியத்துக்கு சொந்தக்ககாரர், பச்சிளம் பாலகர் சங்கத்தின் நீண்டகால உறுப்பினர் மற்றும் வந்தியானந்தா குருபீடத்தின் தலைமை குரு என்று பல்வேறுபட்ட விடயங்களில் சகலகலா வல்லவனாகத் திகளும் லண்டன் வந்தி அண்ணன் அண்மையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டுள்ளார். இவரின்றி அனுவும் அசையாது, அவரின் பிறந்தநாள் பரிசாக இந்தப்பதிவை இடாவிட்டால் எம் மனமும் சாந்தி அடையாது.

லண்டனில் இருந்து வந்திறங்கியவுடனேயே இட்ஸ் வெர்றி ஹாட்.. சூர்யன் இஸ் கொள்திங்.. என்று அதிகாலை 3 மணிக்கே பீட்டர் விட ஆரம்பித்து. அவரின் பீட்டரில் எங்கள் நடமாடும் கூகிளையே திக்குமுக்காடச் செய்தவர் எங்கள் மாமா. 

 வெளிநாட சென்று வந்தவர்களில் சிரட்டை மாலை போட்டு வரவேற்கப்பட்ட முதலாவது நபர் என்ற பெருமையைப் பெற்றவர் எங்கள் வந்தி(லண்டன் :P).
 

 லண்டன் ரோட்டுகளுக்கும் எம்நாட்டு ரோட்டுகளுக்கும் இடையிலான வேறுபாட்டை தன் சிஷ்யனுக்கு மிகவும் அழகாக விளக்கி வரலாற்றுப்புத்தகத்திலும், கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்தவர் எங்கள் பச்சிளம் பாலகன்.


எவ்வளவுதான் அடிச்சாலும் தாங்கும் திறன் படைத்த எங்கள் சிங்கத்துக்கு இனிய 16வது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இன்று போல் என்றும் 16வயதுடன் இளமையாக, பச்சிளம் பாலகனாக, சொந்த செலவில் சூனியங்கள் பல வைத்து பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம். :-))


சின்னமாமா..!

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:43 PM | 9 பின்னூட்டங்கள்

அன்புள்ள சுபாங்கா,
இதுவரை உனக்கு நான்
எந்தCALLலும் எடுத்ததில்லை.
MISSED CALL மட்டுந்தான்


MISSED CALL என்பது

செல்லில் காசில்லாதவனின்
தன்னை அழைக்கச்சொல்லிக்
கொடுக்கும் சிக்னல்

உன் காதுகள் என்
செல்பேசி தொடும்
தூரத்தில்தான் இருக்கிறது.

என்ன செய்வது.
போன்பில் கட்ட முடியவில்லை
அதனால்தான்



பொதுவாக வாழ்த்துக்கள்
அதிகாலையில்தான்
சொல்லப்பட்டிருக்குமே தவிர
இப்படி காரிரவில் இல்லை


பரிசு மழைகளால்
களித்துக் களைத்த உனக்கு
நிம்மதியான காரிருள் சூள்

நள்ளிரவில் இவ் வாழ்த்து மடல்

உணர்ச்சியின் உறுமல்களும்
கீழே கொஞ்சம் காதலும் நிறைந்த
உன் சிறுகதைகள் எங்கே?

உன் கவிதைகள்
அழகானாவை! ஆழமானவை!
அதனால் ஆபத்தானவை!

உன் ஆபத்துக்கள் எங்கே?

வடிவேலுவுடன் சேர்ந்த

பார்த்தீபன் போல்
கவுண்டருடன் சேர்ந்த
செந்தில் போல் 
மரணச்சிரிப்புக்குரிய 
உன் மொக்கைகள் எங்கே?

காதலின் எடை என்ன
என்பதை மில்லிகிராம் சுத்தமாய்ச்
சொல்லிவிடும் காதல் மன்னன் நீயாம்

சாவகச்சேரி சாட்சி சொல்கிறது

பரீட்சைக்குப் படித்திருப்பாயோ 

தெரியாது ஆனால் 
சுஜாதாவின் கதைகளை பாடமாக்கி 
வைத்திருக்கும் நடமாடும் லைபிரரி நீ

பயன்படுத்தாத வானம்
பயன்படுத்தாத சூரியன்
பயன்படுத்தாத நட்சத்திரம்
பயன்படுத்தாத பூமி 

போல்உன் பயன்படுத்தான மணிப்பர்சு
மனிதகுலத்துக்குப் பாக்கியிருக்கிறது

ஆமர்வீதி சந்தியை
விட்டுவெளியே வா.
உன் ATM கார்ட்டை
வெளியேற்று
உன் பார்ட்டிக்காக காத்துக்கிடக்கும்

எமக்கு பிட்சாவை ஓடர் செய்

வழக்கம் போல் இதுக்கும்

சிமைலி போட்டு ஏமாற்றி விடாதே
பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 
சின்னமாமா..!


-பப்புமுத்து



சித்ரா மகள் மரணம்




பாடகி சித்ராவின் 8 வயது மகள் நந்தனா துபாயில் நீச்சல் தடாகத்தில் தவறி விழுந்து இயற்கையெய்திய செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். எமக்கு ஏதாவது ஒரு வகையில் பிடித்த ஒருவருக்கு வரும் துன்பம் அல்லது இழப்பு எம்மையும் அதிர்ச்சியில் உறைய வைத்துவிடுகிறது. எம்மை எத்தனையோ பாடல்கள் பாடி மகிழ்வித்த பாடகி சித்ராவின் மகள் நந்தனாவின் இழப்பால் துயருரும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



***

சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்


எனது அனைத்துப் நட்புக்களுக்கும் எனது மனமார்ந்த சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருமலையில் அனலடிக்கும் வெயிலுக்கு மத்தியில் சித்திரைப்புத்தாண்டு இனிதே கொண்டாடப்பட்டது. சித்திரைக்குப் பின்னால் வெயில் அதிகரிக்குமாம், ங்கொய்யால இப்பவே வெயில் தாங்க முடியல..:-o

***

சார்ளி சாப்ளின்

நகைச்சுவை என்றால் உடனே எமக்கு ஞாபகம் வரும் பெயர்களில் சார்ளி சாப்ளினும் ஒருவர். அண்மையில் இவரது வாழ்க்கை வரலாறு படித்தேன், எல்லாரையும் சிரிக்க வைப்பவர்களின் வாழ்க்கை எவ்வளவு சோகமானது என்று அதைப் படித்த பின்னர் புரிந்து கொள்ள முடிந்தது. எத்தனை சோதனைகள் வந்த போதும் அதையும் தாண்டி சாதனைகள் படைந்த சாதனை நாயகன் சார்ளி சாப்ளினுக்கு நாளை 122வது பிறந்த நாள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலிவா..



சிரிப்பு இல்லாத நாள், வாழ்நாளில் வீணாகக்கப்பட்ட நாளாகும் என்று சார்ளி சாப்ளின் சொல்லியிருக்கிறார், எனவே கீழே உள்ள வீடியோவைப் பார்த்து சிரிங்க..:P





***

DamnItsTrue


அண்மையில் TWITTERரின் கண்ணில் பட்ட @DamnItsTrue  என்ற ருவிட்டர் கணக்குக்கில் TWEET செய்யப்படும் விடயங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. “Facts that are relevant to your daily life” என்று தன்னைப் பற்றி கூறியிருக்கும் இத்தளம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சில விடங்களை tweet செய்யும் போது அது எமது எண்ணங்களோடு ஒத்துப்போகும் போது ஏற்படும் மகிழ்ச்சியை தவிர்க்க முடியவில்லை.

http://twitter.com/DamnItsTrue


***

CJ7



அண்மையில் CJ7 என்ற ஒரு சீனத்திரைப்படம் ஒன்று பார்த்தேன். வறுமையான குடும்பத்தில் பிறந்த தாயில்லாத ஒரு சிறுவனை படிக்க வைக்கப் போராடி கடுமையாக உழைக்கும் கட்டிட நிர்மாணப் பணி செய்யும் அவனது தந்தை ஆகியோரை மையமாக் கொண்டு கதை நகர்கிறது. இவர்களுக்கு குப்பைத் தொட்டியிலிருந்து கிடைக்கும் ஒரு ஏலியன் நாய்க்குட்டியின் சாகசங்களும் பின்னர் அந்த CJ7 இவர்களுக்குச் செய்யும் உதவிகளும்தான் கதை. கதை சலிப்புத்தட்டாமல் அருமையாக நகர்கிறது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.



***

இரசித்த குறும்படம் - 5ருபா

குளிர், மழை, வெள்ளம்

163740_1804971489108_1384525971_2985937_2400337_n

தற்போது இலங்கையில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மக்கள் பலத்த சேதங்களையும் அழிவையும் சந்தித்து தற்போது பாடசாலைகளையும் முகாம்களையும் தஞ்சமடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எம்மாலான உதவிகளைச் செய்யவேண்டியது எமது கடமை. எனவே எம்மால் இயன்ற உதவிகளை முடிந்தளவு துரிதமாகச் செய்வோம். மீண்டும் காலநிலை பழைய நிலைக்குத் திரும்பும் என்று நம்பிக்கை வைப்போம்.

 

பொங்கலோ பொங்கல்

f23dadb6-1f22-47bb-bad0-9041d706fac5_S_secvpf.gif

அனைவருக்கும் எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். மலரப்போகும் பொங்கல் தினத்திலாவது சூரியன் எட்டிப்பார்க்குமா?

 

சிறுத்தை

siruthai-movie-stills-029

இன்று சிறுத்தை முதற்காட்சி பார்க்கப் போயிருந்தேன். குடுத்த காசுக்கு திருப்தியாக படம் பார்த்துவிட்டு வெளியே வந்த கார்த்தியின் மற்றுமொரு படம். கார்த்தி இரட்டை வேடம் ஏற்று நடித்திருக்கும் படம். ஆரம்பத்தில் கலகலப்பாக நகைச்சுவையாக ஆரம்பிக்கும் படத்தில் முதற்பாதியின் இறுதியில் ஆரம்பிக்கும் விறுவிறுப்பை அப்படியே இரண்டாம்பாதியின் முதல் அரைவாசி வரை கூட்டிச்சென்று கடைசிப் பாதியை கார்த்திக்கே உரிய குறும்பு, நகைச்சுவையுடன் அழகாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

சந்தானமும் வழக்கம் போல கலக்கியிருக்கிறார். தமன்னா இடுப்பு படத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்த்தாலும் குஷி ஜோதிகாவுடன் போட்டிபோடும் அளவுக்கு இல்லை..:P

இவை தவிர படத்தில் திவ்யா என்ற பெயரில் வரும் பேபி ரக்சனா கலக்கியிருக்கிறார். கார்த்தி கோபமாக நடந்து கொள்ளும் ஒரு காட்சியில் குழந்தையின் மழலை மனதை உருகவைத்தது. மொத்தத்தில் சிறுத்தை சீரியஸ் பதிவில் கும்மியது போன்ற கலகலப்பான உணர்வைத்தந்தது.

படத்தின் கிளைமாக்ஸ் எம்மை அந்தக்கால படங்களுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. மற்றும்படி சிறுத்தை  -  சிரித்தபடி பொழுதுபோக்க விரும்புபவர்களுக்கு மட்டும்

மனிதாபிமானம்

167560170_4bc4e59e0d

போன வாரம் ஒரு வெள்ளிக்கிழமை குடி குடியைக் கெடுக்கும் என்பதை முதன்முதலாகக் கண்கூடாகப் பார்த்தேன். அன்று நாங்கள் வகுப்பு முடிந்து பஸ் ஏறுவதற்காக வழக்கமாக பஸ் ஏறும் தரிப்பிடத்திற்கு வந்தோம். அங்கே இரண்டு நாய்க்குட்டிகள் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. நாங்கள் உள்ளே வருவதைக் கண்டதும் பயந்து பயந்து ஒரு ஓரத்தில் ஒதுங்கி ஒளிந்து கொள்ள முற்பட்டது.

 

அவதானித்துப் பார்த்ததில் ஒரு நாய்க்குட்டியின் கண்ணுக்கு சற்று மேலே காயம் வந்து குருதி வழிந்திருந்தது. பஸ்தரிப்பிடத்துக்குள் உடைந்த போத்தல்த்துண்டுகள் கிடந்தது. முதல்நாள் யாரோ பஸ் தரிப்பிடத்துக்குள் இருந்து மது அருந்திவிட்டு போதையில் கண்மண் தெரியாமல் நாய்க்குட்டிகளுக்கு அருகில் போத்தலை உடைத்திருக்கவேண்டும் அதன் காரணமாக தலையில் அடிபட்டிருக்கலாம் என்று ஊகிக்கமுடிந்தது. அருகில் உள்ள கடையில் கார்ட் போர்ட் பெட்டி வாங்கி நாய்க் குட்டிகளை உள்ளே பத்திரமாக வைத்து மழை சாரல் படாமல் பஸ் தரிப்பிடத்துக்குள் வைத்துவிட்டு வந்தோம்.

அடுத்த இரண்டு நாட்கள் எமக்கு வகுப்பு இல்லை திங்கட்கிழமை சென்று பார்த்த போது பெட்டி கிழித்து எறியப்பட்டிருந்தது. ஒரு நாய் தரிப்பிடத்துக்குள்ளும், மற்றது தரிப்பிடத்துக்கு வெளியில் மழையில் நனைந்தபடி இறந்துகிடந்தது..:(

 

Lolita

4950153006_3be5cd804e

லோலிட்டா இந்தப்பாடலைக் கேட்டதிலிருந்து திரும்பத் திரும்பக் கேட்கவேண்டும் போன்ற உணர்வு ஏற்படுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. எனது ரிங்டோன்கூட அந்தப்பாட்டுத்தான் போட்டிருக்கிறேன், யாரும் அழைப்பெடுத்தாலும் சற்றுத்தாமதமாகத்தான் அழைப்புக்கு பதிலளிக்கிறேன் (சிலர் நான் நித்திரை என்று நினைத்துப் பொறுமையிழந்து அழைப்பை அரைவாசியில் துண்டித்தும் விடுகிறார்கள்..:P) அந்த அளவுக்கு இப்பாடல் எனக்குப் பிடித்துவிட்டது. முதலாவது ஹரிஸ் ஜெயராஜின் இசை + கார்த்திக்கின் குரல் என்றால் அடுத்து தாமரையின் அழகான வரிகள்.

 

நான் நாற்பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா

யார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா

நான் அலை தூர அடை காக்கும் கடல் அல்லவா

என் ஆகாயமதில்கூட பல வெண்ணிலா..

 

NO COMMENTS

real_meaning_words_Funzug.org_08

நத்தார் பண்டிகை வாழ்த்து

merry-christmas
நேற்றைய தினம் நத்தார் பண்டிகையை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடியிருப்பீர்கள். எனவே அனைவருக்கும் என் மனமார்ந்த, உளம்நிறைந்த நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள். இந்த நத்தாரும் மலரப்போகும் 2011ம் உங்கள் வாழ்வில் அமைதியையும் சந்தோஷத்தையும் தரட்டும்.

சுனாமி

tsunami
கடல் வருதாம், ஊருக்குள்ள தண்ணி வருகுதாம், ஓடுங்கோ பனை உயரத்துக்கு அலை வருதாம், இவைதான் இந்த வருடத்தல் 26ம் திகதி மக்களின் மகுடவாசகமாக இருந்தது. அதன்பின்னர் எத்தனை சோகக்கதைகள் கேள்விப்பட்டிருப்போம். சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு 6 வருடங்கள் ஆகிறது. 6 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற விடயங்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

சுனாமியில் உயிர்நீத்த இலட்சக்கணக்கான உயிர்களுக்கு எனது அஞ்சலிகள்.

பதிவர் சந்திப்பு – 03

156341_10150354003040368_844450367_16276236_6724509_n
கடந்த 18ம் திகதி பதிவர்கள் கிறிக்கட் மற்றும் பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற்றது. நான் கலந்து கொண்ட முதலாவது பதிவர் சந்திப்பு அது. அனைத்துப் பதிவர்களையும் சந்தித்தது விளையாடியது என அந்த இரண்டு நாட்களும் மகிழ்வான நாட்களாகக் கழிந்தது. அன்னாசிப்பானம் சில பின்விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் கூட இந்தப் பதிவர் சந்திப்பை மறக்க முடியாமல் இருக்க அது ஒரு வழியாக அமைந்திருக்குமோ..:P

சுஜாதா

sujatha
நேற்றும் நேற்று முன்தினமும் சுஜாதாவின் “ஜேகே” மற்றும் “மறுபடியும் கணேஷ்” ஆகிய இரு புத்தகங்களும் வாசித்து முடித்தேன். ஜேகே ஒரு பைலட்டின் கதை படிக்கப் படிக்க விறுவிறுப்பு அதிகமாகிக்கொண்டே போகிறது. விமானத்தை வைத்து சுஜாதா எழுதிய மற்றுமொரு அருமயான கதை. கடைசிவரை எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே சென்று கடைசியில் லாவகமாக எதிர்பார்க்காத விதத்தில் கூறுவதில் சுஜாதாக்கு நிகர் சுஜாதாதான்.

மறுபடியும் கணேஷின் கடைசி வரியைப் படித்துவிட்டு “அடிங்கொய்யால” என்று சொல்லிக்கொண்டேன். சுஜாதாவின் கணேஸ் – வசந்த் வரும் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. அதிலும் இது  சுஜாதாவின் சிறந்த ஒரு துப்பறியும் கதை. “குருப்பிரசாத்தின் கடைசி தினம்” என்ற நாவல் இன்னும் மிஞ்சியுள்ளது. படிக்கவேண்டும். வேறு சுஜாதாவின் புத்தகங்கள் ஏதாவது எனக்கு பரிந்துரை செய்யுங்களேன்.

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்..:P

(null)
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது என்றும் சொல்லலாம். ஆவுஸ்திரேலியா இன்று ஆரம்பித்த போட்டியில் இந்தப்பதிவை இட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் 9 விக்கெட்டுகள இழந்து தடுமாறிக்கொண்டிருக்கிறது.
அன்டர்சன் 4 விக்கெட்டுகள், ட்ரம்லெட் 3, மற்றும் பிரஸ்னன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்கள். ஆனால் அவுஸ்ரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் Mr.Cricketடும், ஹடினும் ஆட்டமிழ்நதது அவுஸ்ரேலியாக்கு கவலைக்குரிய விடயம்.
மறுபடியும் பொன்டிங்க்குக்கு ஆப்பா? விக்கிரமாதித்தன் எங்கபோய்ட்டாரோ..:P

நெஞ்சில் நெஞ்சில்

அண்மைக்காலமாக தினமும் என் காதுகளில் தொடர்ந்து ஒலிக்கும் பாடல் இது. எங்கேயும் காதல் படத்தில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில், ஹரிஸ் ராவேந்திரா – சின்மயி ஆகியோரின் இனிமையான குரல்களில், மதன் கார்க்கியின் அற்புதமான வரிகளில் காதுவழியாக உடலுக்குள் சென்று ஏதோ செய்கிறது.

no comments

126228

கன்கொன்…:P

பதிவிட்டவர் Bavan | நேரம் 1:22 PM | 15 பின்னூட்டங்கள்
33742_1651852541346_1387999334_1740020_1536489_n
கூகிள் பிழிந்து தேடுவான்
தேடிய முடிவெடுத்து
வினாவுக்கு விடையூட்டுவான்
கண்ணில் தூக்கம் சொக்கும் போதெல்லாம்
கதிரையிலேயே தூங்கிப்போவான்;
கனவிலும் கிறிக்கட்டே பரிசாய்ப் பெறுவான்.
உலகமே கிறிக்கட் என்பான் அதில்
கிரவுண்டே கோயில் என்பான்
டெஸ்ட் கிறிக்கட் பார்ப்பது
புண்ணியம் என்பான்
டெஸ்ட் கிறிக்கட் நின்றுவிடின்
கிறிக்கட் எப்படி வாழுமினியென வியப்பான்
பொடியனிடம் பந்து தொலைத்த
கோமாளி என்றது கூட்டம்
அவுஸ்ரேலியா வெல்லாது
என்றது மறு கூட்டம்
கிறிக்கட் என்றாலே சூதாட்டம்
என்றது ஒரு கூட்டம்
கிறிக்கட்டையும் பொன்டிங்கையும்
வெறுக்கும் கூட்டத்திடையே
அடங்கிப்போனது அவன் குரல்
பொறுத்த கிரிஷ் ஒருநாள்
பொறுமை துறந்தான் 
தன் ஆதாரங்களை
பதிவில் கொட்டி
பதிலடி கொடுத்தான்
Stats பாடிக் களைத்தான்
களைத்து மீண்டும் எழுந்தான்
திகதி டிசம்பர் 4ஐக் காட்டியது
உலகமே இவனைப் பாராட்டியது,
பீப்பீ எனப் புகழ்பெற்றான்
கிறிக்இன்போ இவன் வரவுக்காக காத்திருந்தது
கேக் வெட்டிக் கொண்டாட
நாங்களும்தான்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கன்கொன்.

அனைவருக்கும் வணக்கம்,

இது உண்மையில் நேற்று பதிவேற்ற வேண்டும் என்று திட்டமிடப்பட்ட பதிவு, ஆனால் அவசர ஆணிகள் காரணமாக இன்று பதிவிடும்படி ஆகிவிட்டது. நேற்று செப்டெம்பர் 26ம் திகதி 2010 உடன் எரியாத சுவடிகள் தனது 1வது வயதைப் பூர்த்தி செய்துள்ளது. அது மட்டுமன்றி இது இந்த வருடத்தின் 100வது பதிவாகும்..:P

bday

இதுவரை காலமும் எனது பதிவுகளை வாசித்து ஊக்கமளி்த்த, கொலைவெறியைத்தாங்கிக்கொண்ட, மொக்கையை சகித்துக்கொண்ட, சில நேரங்களில் விவாதங்களிலும் ஈடுபட்ட, தவறுகளைச்சுட்டிக்காட்டிய, பலவேளைகளில் பல உதவிகள் புரிந்த, அனைத்து நண்பர்கள், சக பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இதுவரை காலமும் எனது பதிவுகள் யாருடைய மனம் நோகும்படி இருந்திருந்தால் என்னைத் தயவுகூர்ந்து மன்னிக்கும்படியும் சிரம்தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன்.

 

இந்த ஒரு வருடத்தில் பல புதிக நண்பர்கள், பல சந்தோஷங்கள், சண்டைகள், சலசலப்புகள், மற்றும் பல விடயங்களை மாறிமாறிக் காண்பித்துள்ளது. அது மட்டுமன்றி ஆரம்ப காலத்தில் ஆனந்த விகடன், குமுதம் போன்ற புத்தகங்களிலிருந்தும் வெளிவரும் ஜோக்குகளை, மொக்கைகளை படித்து உக்காந்து யோசிப்பாய்ங்களோ என்று யோசித்ததுண்டு. நமக்கும் அப்படியெல்லாம் முடியாது என்றும் மனச்சாட்சி அங்கலாய்த்ததுண்டு. ஆனால் இன்று பாரபட்சமின்றி எனக்கும் மொக்கை வரும் என்று கற்றுக்கொடுத்திருக்கிறது.

 

மீண்டும் மீண்டும் எனக்கு ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் மனமதார்ந்த நன்றிகள்.

 

அனைவருக்கும் ஒரு முக்கிய செய்தி – எரியாத சுவடிகளின் 1வது பிறந்த தினத்தின் ட்ரீட் வேண்டியவர்கள் பக்கத்தில் உள்ள ஹோட்டலில் எனது பெயரைச் சொல்லிச் சாப்பிடலாம்..:P

 

பி.கு - ஸ்ஸப்பா.. ரொம்ப கஷ்டப்பட்டு எழுதிய பதிவு இது..:P

இதை ஒரு பதிவென்பதை விட ஒரு வாழ்த்துமடல் என்று சொல்லலாம். அல்லது பாராட்டுப்பதிவு என்று சொல்லலாம். அந்த பாராட்டுக்களுக்குரியவர்கள் பதிவர்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய மேலும் விடயம்.அந்தவகையில் அப்பதிவில் 3 பேரைக்கட்டாயம் வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

முதலாவதாக லோஷன் அண்ணா கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் வழங்கும் இந்த வருடத்துக்கான சிறந்த பதிவர் என்ற விருதை பெற்றுள்ளார். அனைத்து நெஞ்சங்களையும் கொள்ளைகொண்ட அறிவிப்பாளர் என்பதையும் தாண்டி பதிவுலகில் அவரின் பதிவுகளைப்பார்தது தானும் பதிவெழுத வேண்டும் என்று வந்த பதிவெழுத வந்தவர்கள் பலர். எனவே சிறந்த பதிவர் என்ற வெயருக்கு பொருத்தமாக அது லோஷன் அண்ணாவுக்கு கிடைத்தையிட்டு நானும் ஒரு சிறுபதிவர் என்ற முறையில பெருமைப்படுவதோடு அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

***

அடுத்து 
இவர் நின்னா மலை
நடந்தா எரிமலை
இவர் கதைச்சா பூகம்பம் 
சிரிச்சா சுனாமி
இவர் பதுங்கினா புலி
பாய்ஞ்சா சுனாமி
மொத்தத்தில இவரு கில்லி கில்லி மாதிரி, ஒரு தடவை முடிவு பண்ணிட்டா இவர் பேர இவரே கேட்க மாட்டாரு, எதை செய்தாலும் ஒரு தடவைக்கு 100 தடவை யோசிச்சிட்டுத்தான் பண்ணுவார்.

அட இன்னும் புரியலயா? எங்கள் தன்மானச்சிங்கம் பேஸ்புக் அழகிய தமிழ்மகன் சதீஸ் அவர்களுக்கு பேஸ்புக்கில் விசிறிப்பக்கம் (FAN PAGE) தொடங்கியிருக்கிறார்கள் அவரது ரசிக ரசிகைகள். எனவே அவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...:)

***

கடைசியா எங்க போனாலும் இவர்தான் பர்ஸ்ட்டு,
இவருக்கு நிகரு யாரு இருக்கா நெக்ஸ்ட்டு?
அண்மைக்காலமான அவுட் ஓஃப் போர்மில் திணறிக்கொண்டிருந்த கன்கொன் கிறிக்கற் அனலிஸ்ட் ஆகிய பிறகு அதாவது TEST மட்சுக்குப்பிகு சில வீரர்கள் போர்மாகுவது போல பதிவுலகில் மீண்டும் போர்முக்குத்திரும்பியுள்ளார். தனது பதிவுகளை சிங்கிளாக மட்டுமே அடித்து வந்த இவர் நேற்று ஒரு டபிள் அதாவது இரண்டு பதிவுகள் போட்டு சாதனை படைத்திருக்கிறார்..:P
எனவே அவரின் இந்த போர்ம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..:)


அண்ணனுக்காக...(:P)

பதிவிட்டவர் Bavan | நேரம் 10:54 AM | 27 பின்னூட்டங்கள்
vijay-wallpaper
நடிப்போ அக்டிங்கோ
தெரியாத விஜய் பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமாப் போனேனோ?


சந்திரசேகரன் பெத்த
அண்ணே! தமிழ்மகனே!
அழகாய் டான்ஸ் ஆட
இடுப்புல்வலி பொறுத்தவனே!


கில்லிவிஜய் பிறப்பான்னு
கனவிலயும் நீ நினைச்சதில்ல
விளையாட்டாய் நடிச்ச ஒண்ணு
கில்லிவிஜய் ஆயிருச்சு


கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒருபிண்டம்
காமடி பண்ணும்போது
எப்பிடியெப்பிடி சிரிச்சிருப்பேன்?


கத்தி நடிப்பவனோ
சூப்பர் ஸ்டாராகப் பிறந்தவனோ?
தரணி படத்தில் நடிக்க வந்த
காமடி ஹீரோ இவந்தானோ?


இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
காமடிப்படத்தையும் ரசிச்சு நடிச்ச ஒன்ன
நெனச்சா அழுகவரும்


கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
குனிஞ்சு நிமிந்து ஆடுவியே
குத்தாட்டம் போடுவியே

மண்டையில கிர்ர்ரெங்கும் 
கால்விரல்கள் கதிகலங்கும்
உன்னைப்போல் ஆடப்போயி
கால் சுழுக்கி நிக்குதுங்ணா

கைவிரலை மடிச்சு முறுக்கி
நரம்ப பொடைக்க வச்சு
எள்ளும் கொள்ளும் ஒண்ணா
வெடிக்கவைக்கும் உன்னழகு 


பாத்தாலே பயம் வருமே
பச்சைத்தண்ணி பத்திக்குமே
அம்மி போல் நீ அடிச்சா
அடுத்ததெரு போய் விழுவான்


பாய்ஞ்சு பாய்ஞ்சு அடிச்சாலும்
பாதத்தாலே அடிச்சாலும்
உன் மனதில் நெய்வடியும்
அன்பில் தேனொழுகும்

பி.கு - வைரமுத்து ஐயா ப்பிளீஸ் மன்னிக்கவும்
கிறிக்கற். பல விசித்திரமான விடயங்களை உள்ளடக்கியது. கிறிக்கற் அதன் நுணுக்கங்களை அலசி ஆராய்ந்து அவற்றை உரிய கணத்தில் கக்க கிறிக்கற் ஆய்வாளர்களாலேயே முடியும்.அந்தவகையில் கிறிக்கற் பார்க்கும் போது வர்ணனை என்பது என்னுடன் சேர்த்துப்பலரால் விரும்பிக்கேட்கப்படும் விடயம். கிறிக்கற் பார்க்கும் போது ருவிற்றரையும் பாவிப்பவர்களுக்கு அதன் சுவாரஸ்யமும், கலகலப்பும் அதன் நுணுக்கங்களும் வெகுவாகக் கவரக்கூடிய வகையில் இருக்கும்.

சிலவேளை சில கிறிக்கற் போட்டிகளைப்பார்த்தால் நித்திரை வரும். அவ்வளவு மோசமாக ஆடுவார்கள். ஆனால் அந்த நேரத்தில் நேர்முக வர்ணனை மற்றும் போட்டியைப்பார்த்தபடி சிலர் செய்யும் கமண்டுகள் அந்தப்போட்டியின் சுவாரஸ்யத்தைக் கூட்டி என்னமா யோசிக்கிறாங்கப்பா? என்று சிந்திக்க வைக்கும்.

பலதடவை நாம் சப்போர்ட் பண்ணிய அணி தோற்றதும் பாடசாலையில் போய் பல நண்பர்களிடம் மொக்கை ஆகி சொல்லுவதற்கே விடயமின்றி அவமானப்பட்டு வீடு திரும்பியிருப்போம். ஆனால் ருவிற்றர் சிங்கம், கிறிக் இன்போவில் குடியிருக்கம் தெய்வம் என்றெல்லாம் எம்மால் புகழப்படும் கன்கொன் என்ற பிரபல ருவிற்றர்(14,781ருவிற்றுகள் இன்று அதிகாலை 1.23வரை) என்பவருக்கு இந்தப்பிரச்சினை இருந்திருக்காது. ஏனெனில் எந்தப்போட்டி நடந்தாலும் அந்த நேரத்தில் ருவிற்றரில் போட்டி பற்றி மொக்கை போடத்தவறமாட்டார். ஆனால் அதன் பிறகு அந்தப்போட்டியைப் பற்றி எங்கெங்கே போய் ஆய்வு செய்கிறாரோ தெரியவில்லை. ஆனால் கிறிக்கற் பற்றி எந்த விடயத்தைக் கேட்டாலும் 15 செக்கனில் விடயம் கைக்கு வரும். அந்தளவு வேகம்.

அவரின் இந்தத்திறமையை கிறிக் இன்போவும் நேற்றுக்கண்டு கொண்டிக்கிறது. வழக்கமாக நாம் கிறிக்கற் பற்றிய தகவல்களுக்கு நாம் கிறிக் இன்போவை நாடுவோம். ஆனால் நேற்று கிறிக் இன்போ இவரை நாடியிருக்கிறது. நேற்று சிம்பாபே எதிர் இலங்கை போட்டியில் கிறிக்கற் SUMMARY பகுதியில் இவரது ருவிட் வெளியாகியிருக்கிறது.

ஒருவரது திறமையை பாராட்ட வேண்டும். அதுதான் மனித இயல்பு அதுவும் ஒரு சக நண்பரின் பெயர்  Cricinfoவில் வரும் போது சும்மா இருக்க முடியுமா.

CRICINFOவில் வெளியான கன்கொனின் ருவிட்...
Actually Sri Lanka hate playing against Zimbabwe on 7th. They've lost in 7th Nov 1998, 7th April 2003 and today, 7th Jun 2010.

கிறிக் இன்போவில் வெளியானதைப்பார்க்க இங்கே கிளிக்குங்கள்.


 பதினோரு பேரு ஆட்டம்
அதைப்பார்க்க ரசிகர் கூட்டம்
சிறீலங்கா ஜெயிச்சதால ஆடறன் புலியாட்டம்

காப்டன் இருவருக்கும் டாசுதான்டா முதலிலே
கோச்சர் சொன்னபடி தேர்வு செய்யணும் நொடியிலே
அரங்கமே அதிர வேணும் நீ அடிக்கும் அடியிலே
அம்பயர் அவுட்டுத்தந்தா வந்திடணும் வெளியிலே

ஜெயவர்தன ஆடி வரும் ஆட்டத்தையும் பார்ரா

டெஸ்டிலும் சிக்ஸர்களை அடிப்பார் இனி பெரேரா
பொறுமையா ஆடுவது சங்காவோட திறமை
ஜெயிச்சா அவருக்கில்ல சிறீலங்காவுக்கே பெருமை

ஓப்பினிங் ஆட்டத்திலே டில்லானு கிங்கு

பினிசிங்கில வைப்பாரு கப்புகெதர சங்கு
மலிங்க மத்தியூஸ் மென்டிஸ் ஆடும் தீவு
இவங்கெல்லாம் பொறந்தது எங்க இலங்கைத்தீவு

சிலிங்கா மலிங்காவின் பந்தைத்தடுப்பதாரு?

முரளி ஸ்பின்னில் அடிக்க முடியாதடா 4ரு
வயது வித்தியாசமின்றி ஆடும் அழகைப்பாரு
யாரு கப்டன்னாலும் நாங்கதான் இனி கிங்கு

அன்புடன்
உல்டாக்கவி
பவன்


போட்டி

**********************************************************
சுறாவை வெற்றிபெறச்செய்த திமிங்கிலத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து

அவர் இளைய தளபதி, இவர் இளைய வலைப்பதி..

அவர் திருப்பாச்சி, இவர் புள்ளப்பூச்சி..

அவர் பாடுறதில குருவி, இவர் அறிவில அருவி..

அவர் ஆதி, இவர் அவரில பாதி

அவர் பிரியமுடன், இவர் அவரை பிரிச்சு மேய்வதுடன்

அவர் சுறா, இவர் சுபா..

BIRTHDAYக்கு TREAT கேட்டா அவர் ஆயிடுவார் போக்கிரி, 
ஆனா இவர் கூட்டிகிட்டுப்போவார் பேக்கரி... பேக்கரி... பேக்கரி..



எருமை தெரியுமா?
முன்பு ஒருநாள் தொலைக்காட்சியில் நடந்த "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு" நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் பேசிக்கொண்டிருந்தது காதில் கேட்டது அடடா என்ன ஒரு அருமையான விடயம் அது...



ஒரு நாட்டுப்புற ஊருக்குச் சென்ற ஒருவர் மக்களைச் சில விடயங்கள் கேட்டார், 

அவர் -மனிதன் மாதிரி ரோபோ இருக்கு தெரியுமா?
மக்கள் -தெரியாது
அவர் -computerல கடிதம் அனுப்பலாம் தெரியுமா?
மக்கள் - தெரியாது
அவர் -பாங்கில லொக்கர் இருக்கு தெரியுமா?
மக்கள் - தெரியாது
அவர் - பெரிய பெரிய ரோட்டெல்லாம் இருக்கு தெரியுமா?
மக்கள் -தெரியாது
அவர் பொறுமையிழந்து எதிரே ஒரு எருமைக்கடா வர, அதைப்பார்த்துவிட்டு
எருமை தெரியுமா? எனக்கேட்க......

மக்கள் - ஓ... தெரியுமே.... எமனின் வாகனம் என்றனர்.

கண்ணுக்குத்தெரிபவற்றை தெரியாது..தெரியாது என்று கூறும் மக்கள் கண்ணுக்குத்தெரியாத எமனையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்ன கொடுமை இது, இப்படித்தான் போலிச்சாமிகளையும் சனம் நம்புகிறது, என்று தீரும் இந்த மூடநம்பிக்கை...ஹிம்ம்
************************************************************************************
வைத்தியசாலைகள் வாழ்க

திருகோணமலை தனியார் வைத்தியசாலையில் நடந்தது இது, அங்கு BLOOD SUGER செக் பண்ணச் சென்ற எனது பாட்டிக்கு மிக அதிகமாக இருக்கிறது என்று கூறிவிட்டார்கள் (இதுக்கு அவர் வீட்டில் இனிப்பே சாப்பிடுவதில்லை). சரி அந்த வைத்தியசாலையிலுள்ள வைத்தியரிடம் மருந்து எடுக்கலாம் என்று பார்த்தால் வைத்தியர் வரவில்லை(நல்லகாலம்).


உடனே வெளியே எங்களுக்கு தெரிந்த ஒரு வைத்தியரிடம் ஒருவரிடம் சென்று நாங்கள் எடுத்த BLOOD SUGERக்கான ரிப்போட்டைக்காட்ட முற்பட்ட போது "எங்கே அந்த (வைத்தியசாலையின் பெயரைக்குறிப்பிட்டு) வைத்தியசாலையிலா எடுத்தீர்கள்?" அதை எனக்குக்காட்ட வேண்டாம் அது முற்றிலும் பிழையாகத்தான் இருக்கும், என்றுவிட்டு அவர் தான் செக் பண்ணியபோது NORMAL ஆக இருந்தது.


என்ன கொடுமை இது, அங்க தொட்டு இங்க தொட்டு வைத்தியசாலைவரை வந்துவிட்டது. வைத்திசாலையில் பிழையான ரிப்போட் வழங்கப்படுவது அறிந்து வைத்தியரை ஒரு நடவடிக்கை எடுக்க முற்படாதது கவலைக்குரிய விடயம்.(அந்த ரிப்போட்டைப் பார்க்காததைத்தவிர)




************************************************************************************
வாழ்த்துக்கள்









நேற்று முன்தினம் பிறந்தநாளைக்கொண்டாடிய யோ அண்ணாவுக்கும் இன்று பிறந்தநாளைக்கெண்டாடும் கடலேறி ஆதிரை அண்ணா மற்றும் பங்குச்சந்தை அச்சு அண்ணாவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.



தமிழ்மணம் போட்டியில் வெற்றி பெற்ற எமது பதிவர்கள் வந்தி அண்ணா, லோசன் அண்ணா மற்றும் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பிலும் சளைக்காது போட்டி போட்ட பதிவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


************************************************************************************

திரிசாவுக்கு கல்யாணம்

இவருக்கு வரன் பார்க்கிறார்களாம் முடிந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்..ஹீஹீ
இலங்கை கலக்கல் ஆரம்பம்



இந்தியா, இலங்கை, பங்களாதேஸ் ஆகியஅணிகளுக்கிடையே இடம்பெற்றுவரும் முக்கோண தொடரும் இந்தவருடத்தின் முதலாவமு போட்டித்தொடருமாகும். 

  • 2010ம் ஆண்டில் இலங்கையின் முதல்ஒருநாள் சர்சதேசபோட்டி
  1. டில்சான் இந்த வருடமும் தனது அதிரடியால் தனது வருடத்தின் முதலாவது சதத்தை பூர்த்தி செய்துகொண்டார்.(104ஓட்டங்கள்12பவுண்டரிகள் அடங்கலாக)
  2. சங்கக்கார தனது இந்தவருடத்தின் முதலாவது அரைச்சதம்.(74ஓட்டங்கள் 10பவுண்டரிகள் அடங்கலாக)
  • இந்தியாவுடனான போட்டி
  1. சமரவீர இந்த வருடத்தின் முதலாவது சதம்(105ஓட்டங்கள் 11புவுண்டரிகள் அடங்கலாக,அவருக்கு இரண்டாவது சதமும்கூட)
  2. சங்கக்கார மீண்டும் வருடத்தின் தனது இரண்டாவது போட்டியில் ஒரு அரைச்சதம்.(60 ஓட்டங்கள் 4பவுண்டரிகள் அடங்கலாக).
  3. POWER PLAY PLAYER என்று அழைக்கும் அளவுக்கு ஒரு அதிரடி மன்னன் கிடைத்து விட்டார்,அட அவர்தாங்க திஸ்ஸார பெரேரா. (இவ்வளவு நாளும் எங்கய்யா இருந்த?)
இவருக்கு எல்லா பந்துமே FREE HITதான் என்னா அடி?

********************************************************************************************************************
இசைப்புயலுக்கு வாழ்த்துக்கள்

1966ம் ஆண்டு திலீப்குமார் என்ற பெயருடன் சென்னையில் பிறந்த இசைப்புயலுக்கு இன்று பிறந்தநாள். இசைப்புயல் மேலும் மேலும் அடிக்க வாழ்த்துக்கள்.

******************************************************************************************************************************
இசைப்புயலுக்காக ஒரு பாட்டு
நத்தார் பண்டிகை வாழ்த்தும் பரிசுகளும்(25.12.2009)

நத்தார் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது பதிவுலக நண்பர்களுக்கும் மனமார்ந்த நத்தார் பண்டிகை நல்வாழ்த்துக்கள். மலர்ந்திருக்கும் இந்தநத்தார் பண்டிகை அனைவருக்கும் நன்மையையும் மகிழ்ச்சியையும் வழங்கவேண்டும் என்று இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.

எல்லாரும் சண்டைபிடிக்காம ஆளுக்கு ஒன்று எடுக்கொள்ளுங்கள்...
**************************************************************************************************************
சுனாமி(TSUNAMI-26.12.2009)

சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். அன்று அதை நாம் கண்கூடாகக்கண்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒன்றா இரண்டா எத்தனை இலட்சம் உயிர்கள், ஒரு அலையில் எல்லாம் முடிந்துவிட்டது.


அதுபற்றிய ஓர் மீள்பார்வைக்காக சில தகவல்கள் உங்களுக்காக

  • நேரம்: 00.58.53 UTC
  • காவுகொண்ட மக்கள்: 11 நாடுகளைச்சேர்ந்த 230000 மக்கள் இறந்தனர்.
  • உணரப்பட்ட நிலநடுக்கம்: 9.1-9.3க்குள்
*****************************************************************************************************************
27.12.2009
அட 27ம் திகதி என்ன நடந்தது என்று யோசிக்கிறீங்களா...
--




--




--




--




--




--








--




--




--




--




27.12.2009- இந்தநாள் இந்த வருடத்தின் 361வது நாள்....
ஹிஹிஹி

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்