நத்தார் பண்டிகை வாழ்த்து
நேற்றைய தினம் நத்தார் பண்டிகையை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடியிருப்பீர்கள். எனவே அனைவருக்கும் என் மனமார்ந்த, உளம்நிறைந்த நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள். இந்த நத்தாரும் மலரப்போகும் 2011ம் உங்கள் வாழ்வில் அமைதியையும் சந்தோஷத்தையும் தரட்டும்.
சுனாமி
கடல் வருதாம், ஊருக்குள்ள தண்ணி வருகுதாம், ஓடுங்கோ பனை உயரத்துக்கு அலை வருதாம், இவைதான் இந்த வருடத்தல் 26ம் திகதி மக்களின் மகுடவாசகமாக இருந்தது. அதன்பின்னர் எத்தனை சோகக்கதைகள் கேள்விப்பட்டிருப்போம். சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு 6 வருடங்கள் ஆகிறது. 6 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற விடயங்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
சுனாமியில் உயிர்நீத்த இலட்சக்கணக்கான உயிர்களுக்கு எனது அஞ்சலிகள்.
பதிவர் சந்திப்பு – 03
கடந்த 18ம் திகதி பதிவர்கள் கிறிக்கட் மற்றும் பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற்றது. நான் கலந்து கொண்ட முதலாவது பதிவர் சந்திப்பு அது. அனைத்துப் பதிவர்களையும் சந்தித்தது விளையாடியது என அந்த இரண்டு நாட்களும் மகிழ்வான நாட்களாகக் கழிந்தது. அன்னாசிப்பானம் சில பின்விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் கூட இந்தப் பதிவர் சந்திப்பை மறக்க முடியாமல் இருக்க அது ஒரு வழியாக அமைந்திருக்குமோ..:P
சுஜாதா

நேற்றும் நேற்று முன்தினமும் சுஜாதாவின் “ஜேகே” மற்றும் “மறுபடியும் கணேஷ்” ஆகிய இரு புத்தகங்களும் வாசித்து முடித்தேன். ஜேகே ஒரு பைலட்டின் கதை படிக்கப் படிக்க விறுவிறுப்பு அதிகமாகிக்கொண்டே போகிறது. விமானத்தை வைத்து சுஜாதா எழுதிய மற்றுமொரு அருமயான கதை. கடைசிவரை எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே சென்று கடைசியில் லாவகமாக எதிர்பார்க்காத விதத்தில் கூறுவதில் சுஜாதாக்கு நிகர் சுஜாதாதான்.
மறுபடியும் கணேஷின் கடைசி வரியைப் படித்துவிட்டு “அடிங்கொய்யால” என்று சொல்லிக்கொண்டேன். சுஜாதாவின் கணேஸ் – வசந்த் வரும் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. அதிலும் இது சுஜாதாவின் சிறந்த ஒரு துப்பறியும் கதை. “குருப்பிரசாத்தின் கடைசி தினம்” என்ற நாவல் இன்னும் மிஞ்சியுள்ளது. படிக்கவேண்டும். வேறு சுஜாதாவின் புத்தகங்கள் ஏதாவது எனக்கு பரிந்துரை செய்யுங்களேன்.
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்..:P
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது என்றும் சொல்லலாம். ஆவுஸ்திரேலியா இன்று ஆரம்பித்த போட்டியில் இந்தப்பதிவை இட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் 9 விக்கெட்டுகள இழந்து தடுமாறிக்கொண்டிருக்கிறது.
அன்டர்சன் 4 விக்கெட்டுகள், ட்ரம்லெட் 3, மற்றும் பிரஸ்னன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்கள். ஆனால் அவுஸ்ரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் Mr.Cricketடும், ஹடினும் ஆட்டமிழ்நதது அவுஸ்ரேலியாக்கு கவலைக்குரிய விடயம்.
மறுபடியும் பொன்டிங்க்குக்கு ஆப்பா? விக்கிரமாதித்தன் எங்கபோய்ட்டாரோ..:P
பதிவு அருமை...
சுஜாதாவின் நாவல்கள் எனக்கும் பிடித்தன..
அவுஸ்திரேலியா-ஹிஹிஹி