Related Posts with Thumbnails

கொலைக்காற்று - 2

பதிவிட்டவர் Bavan Tuesday, December 7, 2010 20 பின்னூட்டங்கள்
பதிவுலக நண்பர்கள் சிலர் இணைந்து அஞ்சலோட்டமாக எழுதப்படும் கதை. பதிவர் சுபாங்கன் அண்ணாவின் முதல் பகுதிணைப் படிக்காதவர்கள் படித்துவிட்டுத் தொடரவும் – கொலைக்காற்று  பகுதி– 1


கெளதம் ஓடிக்கொண்டிருந்த FORD கார் மாவனெல்லவை அண்மித்துக் கொண்டிருந்தது. கருமுகில்களில் கதிரவனைக் கடூளியச்சிறைவைத்து குளிர்மையை பரப்பிக்கொண்டிருந்த இதமான குளிர் காலநிலைக்கு மயங்கி முன்சீட்டைச் சரித்துவிட்டபடி இரண்டுகைகளாலும் வயிற்றைக் கட்டிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தாள் வர்ஷா. பாதி திறந்திருந்த கார்க்கண்ணாடிக்குள்ளிலிருந்து வந்து கொண்டிருந்த மெல்லிய காற்று அவளின் தலைமுடியை தொட்டு குளிர்காய்ந்துகொண்டிருந்தது. அப்போதுதான் தூற ஆரம்பித்திருந்த மழையும் காற்றோடு போட்டி போட்டு அவள் கன்னத்தில் முத்தமிட ஆரம்பிக்க, சிணுங்கிக்கொண்டே எழும்பியவளின் பார்வையைப் புரிந்து கொண்ட கெளதம் கார்க்கண்ணாடியை முழுவதுமாக மூடிவிட்டு, மழைகுளிரின் பிடியில் அகப்பட்டுத் தூங்கிவிடாமல் இருக்க வீதியில் கவனத்தைச் செலுத்திய படி இடது கையால் ரேடியோவைப் போட்டான் கெளதம்,
 Ford_Fusion_10FusionHybrid_01
“சன்சைன் அப்பார்ட்மண்டில் ஒரு பெண் கொடுரமாகக் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார், கொட்டாஞ்சேனைப் போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டிருப்பதாகவும், கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் ஜெனி, வயது 26 எனவும் அறியவந்துள்ளது……..”
என இரைந்துகொண்டிருந்த வானொலிச் செய்தியைக் கேட்டதும் கீரீச்ச்ச்… என்ற சத்தத்துடன் அண்மையிலேயே சர்வீஸ் செய்யப்பட்டிருந்த காரை நிறுத்தியவனுக்கு வியர்க்கத் தொடங்கியிருந்தது. திடீரென அடிக்கப்பட்ட பிரேக்கில் தூங்கிக்கொண்டிருந்த வர்ஷா முன்னாலிருந்த டாஸ்போர்டில் முட்டிய தலையை தடவிக்கொண்டு உடனடியாக எழுந்தாள். தூங்கிச்சோர்ந்த கண்களுக்குள் ஒரு பதற்றம் குடிகொண்டிருந்தது. கெளதமின் இவ்வாறான கலவரக்கண்களைக் இதுவரை அவள் பார்த்ததில்லை.
“என்னங்க ஆச்சு?
கேள்விக்கு பதிலின்றி வாகனத்தை மீண்டும் ஓட்டத்தொடங்கினான். வீடுவரும்வரை fordடின் என்ஜின் மட்டுமே உறுமிக்கொண்டிருந்தது.

காலிவீதியின் Seaவியூவில் அமைந்திருந்த அழகிய கல்யாணப்பரிசாகக் கிடைத்த மாடி வீட்டின் பிரம்மாண்டமான கறுப்புக் கதவு திறக்க, Ford கொஞ்சம் அதிகரித்த உறுமலுடன் உள்ளே சென்று ஓய்வடைந்தது. வர்ஷா களைப்பு மிகுதியில் வீட்டுக்குச் சென்றதும் போய்ப் படுத்துக்கொண்டாள். கொஞ்சம் பரபரப்பாகவே காணப்பட்ட கெளதம் கைப்பேசி பட்டன்களை விரல்புதைத்துக்கொண்டிருந்தான்.
*************
பச்சைக்கம்பளம் விரிக்கப்பட்ட மேசையில் பேனாமூடி, ஹெயார்கிளிப், தலைமுடி, கைப்பேசி, ஜெனியின் போட்டோ, சம்பவ இடத்திலிருந்த இரத்தத்துளிகளின் போட்டோக்கள், சிகரட் துண்டு, G என்று பென்டன் இடப்பட்ட செயின். அனைத்தையும் வைத்து யோசித்துக் கொண்டிருந்தார் இன்பெக்டர்.
“மே ஐ கம் இன் சேர், கான்ஸ்டபிளின் சத்தம் கேட்டு சுய நினைவுக்கு வந்தவர், வாய்யா  போன் நம்பர் விசியம் என்னாச்சு?
“நேத்து ஈவினிங் 5 மணிக்குப் பிறகு அந்த போன்லயிருந்து ஒரே நம்பருக்கு 3 அவுட்கோயிங் மட்டும் போயிருக்கு சார், அது ஒரு தடவை ஆன்சர் ஆகியிருக்கு கடைசி ரெண்டு தடவையும் நோ ஆன்சர்னு வந்திருக்கு. கோல் ஆன்சரான நம்பர் சேகர் எங்கிற பேர்ல ரெஜிஸ்டர் ஆகியிருக்கு சார். என்று சொல்லிமுடிக்க தொலைபேசி அலறியது.
“ஹலோ Kotahena Polic station,
“சார் நான் கான்டபிள் கதிர்வேலு பேசிறன், பீச்ல ஒரு மேடர் சார்.
“ஓகே நீ அங்கயே இரு உடனே வாறன்.

பீச்சில் இறந்து கிடந்தவனின் கழுத்தில் K.Segar, Software developer. என்று எழுதப்பட்ட அடையாள அட்டை குருதிக்கறையுடன் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது.

எனக்குப்பிறகு இக்கதையை பதிவர் சதீஷ் தொடருவார்

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. போலி ஆறின சோறு Says:

    சுடசோறு எனக்கு.

  1. Subankan Says:

    ஆகா, கதை டாப் கியரில ஏறுதே? சதீஷ் - உங்கள் பகுதிக்காக இப்போதே வெயிட்டிங்

  1. Anonymous Says:

    கும்மியை அங்கேயே நிறுத்துவோம். பதிவை திசை திருப்ப வேண்டாம்.

  1. :) கதையில் தொய்வில்லை. நல்லாத்தான் போகுது. எத்தினை கொலை விழப்போகுதோ தெரியவில்லை.

  1. ஆகா அருமையான கதை. :-)))

    சதீஷ் அண்ணாவின் கதைக்குக் காத்திருக்கிறோம்.

  1. Jana Says:

    ம்ம்ம்...இதுக்குள் சேகர் என்றவரும் வந்துவிட்டாரா? பீச்சில் கொலை- கொட்டேனா பொலிஸ_க்கு கோல்!!! கொட்டஹேனாவில் பீச் இல்லையே பவன். அங்காலை கோல்பேஸ், கொள்ளுப்பிட்டி பொலிஸ், மற்றப்பக்கம் மட்டக்குளி பீச்..அது மோதர பொலிஸ்????
    கதைதானே..விட்டுப்பிடிப்போம்.

    கதையை அசத்தலாக நகர்த்திவிட்டீர்கள் பவன்
    ..பாராட்டுக்கள்.

  1. Bavan Says:

    சுபா அண்ணா,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    மது அண்ணா,

    கொலைக்காற்று எண்டு பேரை வச்சிட்டு நாலு பேரைப் போட்டுத்தள்ளாட்டி எப்பிடி..:P

    நன்றி வருகைக்கும் கருத்துக்கம்..:)

    ***

    கன்கொன்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கம்..:)

    ***

    ஜனா அண்ணா,

    அவ்வ்வ்.. அவர் Special police from crime branch எண்டு கருதுங்கோ..ஹிஹி

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

  1. Unknown Says:

    “என்னங்க ஆச்சு? //
    அவ்வ்வ்வவ்வ்வ்வ்

  1. சுபாங்கனின் தொடர் ஒரு சின்னத் தொய்வுமில்லமால் டொப் கியரில் போகிறதே.. அடுத்தவற்றிற்கு வெயிட்டிங்...

  1. எனது வாழ்த்துக்கள் பவன்...

    புறொபைல் இல்லாதவரின் கருத்துக்கள் கணக்கில் எடுக்கப்படமாட்டது... சுபா உங்களுக்குத் தான் வெற்றி...

  1. அருமை.. விறுவிறுப்பாகவே போகிறது.
    ஆனால் இரண்டு அங்கமுமே விரைவாக சிறிதாக முடிந்ததாக ஒரு உணர்வு.
    இன்னும் கொஞ்சம் நீட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ?

    பாத்திரங்கள் குறைவாக இருத்தல் திசை திரும்பாமல் இருக்க உதவும் :)

    பவன் உங்கள் பங்கும் சிறப்பு.

  1. பவன் கதையின் விறுவிறுப்பை அப்படியே அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியமைக்கு பாராட்டுகள்!!!

    சதிஸ் அண்ணாவுக்கு காத்திருப்பு

  1. ஷப்பா இன்னொரு கொலையா? கடைசியாக எழுதுபவர் பாவம் எல்லாக் கொலையாளிகளையும் பிடித்து முடிச்சுகளையும் அவிழ்க்கவேண்டும். நல்ல எழுத்துநடை சில லொஜிக் மீறல்களைத் தவிர்த்திருக்கலாம். தமிழில் கான்ஸ்டபில் பெயர், கோல்பேஸ் கொலைக்கு கொட்டாஞ்சேனைப் போலிஸ்.

    சதீசின் கதை எப்படி வருமோ

  1. wel done bavan, now it's sathis's turn...

  1. கொஞ்சம் லேட ஆகிவிட்டேன். கதை ம்ம்ம்ம்ம்ம் நல்ல திருப்பம். இன்னும் பல திருப்பங்களுடன் என் கதை வரும். வாழ்த்துக்கள் பவன்.

  1. சூப்பரப்பு!

    நல்ல தொடர்ச்சி!

    கதா பாத்திரங்கள் அதிகமாவது இடியப்ப சிக்கலை உருவாக்கும்!

    "காரில் வரும்போது செய்தியில் ஜெனி?!"-நான் நினைக்கவே இல்லை!

    அடுத்த தொடரிற்கு எதிர்பார்ப்புடன்!

  1. அருமை

  1. அருமை

  1. Bavan Says:

    மைந்தன் சிவா,

    ஜெஸ்ட் 2 murders..:P

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    ம.தி.சுதா,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    லோஷன் அண்ணா,

    பழகப்பழக சரிவரும் என்று நம்புகிறேன்..;)

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    அனு,

    நன்றிடா வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    வந்தியண்ணா,

    ம்.. திருத்திக்கெள்கிறேன் இனி..:)
    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    யோ அண்ணா,

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    சதீஷ் அண்ணா,

    உங்களின் திருப்பங்களுக்காக வெயிட்டிங்..:)
    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    S.M.S.ரமேஷ் அண்ணா,

    LOL அதுதான் உருவாக்கிய கதாபாத்திரத்தை உடனயே போட்டுத்தள்ளியாச்சு..:P

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    ஆதிரை அண்ணா,

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

  1. பவன் ஆதிரை இரு தடவை பின்னூட்டியுள்ளார் ஆனால் நீங்கள் ஒரு தடவை தான் நன்றி சொல்லி இருக்கின்றீர்கள் ஹிஹிஹி. ஆதிரை ஏன் இரு தடவை பின்னூட்டினார் என்ற உண்மை எனக்குத் தெரியும்.

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்